ரி-ஷி-வா-37
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ரிஷி காலையில் எழுந்ததிலிருந்து குத்துக்கல் வைத்து அமர்ந்திருந்த ஷிவாலியை கண்டான்.
“என்னாச்சு…?” என்றான் ரிஷி.
“உனக்கென்ன… சந்தோஷமா இரு” என்றவள் நகம் கடிக்க ஆரம்பித்தாள்.
“உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். முக்கியமான விஷயம்.” என்றவன் சட்டையை மாட்டிக் கொண்டு பட்டனை போட்டான்.
“ஆமா நானும் முக்கியமான விஷயம் பேசணும். எனக்கு உன்னோட வாழ பிடிக்கலை.
என்னை இழக்கறேன். உன்கிட்ட நான் அடிக்ட் ஆகிட்டு இருக்கேன். எனக்கு உன்னை சார்ந்து இருக்க பிடிக்கலை. நான் டிவோர்ஸ் வாங்கிக்கறேன்.” என்றாள்.
கைப்பட்டனை போட்டவாறு, ”ம்… வாங்கிட்டு?” என்று பொறுமையாக கேட்டான்.
“வாங்கிட்டு நான் தனியா போறேன். எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. மாசம் மாசம் பணம் வரும். இல்லைனாலும் ஜீவனாம்சம் கொடு. நான் போறேன்” என்று கூறினாள்.
“அப்ப குழந்தை?” என்றான்.
“எ…எனக்கு வேண்டாம்.” என்று கூறவும் ரிஷி அவளை கைபற்றி இழுத்து போய் பல் விளக்கி ரெடியாகிட்டு வா. கலைச்சிடலாம்” என்று பாத்ரூம் கொண்டு போய் விட்டான்.
ஷிவாலி திடுக்கிட்டவளாய் நிற்க, “என்ன பல் விளக்கி விடணுமா… போய் ரெடியாகு.” என்று கூறவும் சென்றாள்.
குளித்து வந்தவளிடம் உடை எடுத்து நீட்டினான்.
அவளுக்கு பிடித்த கிழஞ்ச ஜீன்ஸ் என்றதும் வாங்க தயங்கினாள்.
“உனக்கு தான் பேவரைட் டிரஸ்ஸாச்சே. போடு… அப்படியே இருக்கற குப்பையை கொட்டிட்டு வந்துடுவோம். உனக்கு என் குழந்தை குப்பை தானே” என்று சொல்லி செல்லவும் உடைந்து அழுதாள்.
“ஏய்… இந்த டிராமாலாம் வேண்டாம். எந்திரி டி” என்று அழைத்து பைக்கில் புறப்பட்டான்.
“நான் சாப்பிடலை” என்று கூறினாள்.
“நானும் தான் சாப்பிடலை. மூடிட்டு வர்றியா” என்று கூறவும் அமைதியானாள்.
நேராக ஒரு வீட்டிற்கு வந்து நின்றான். அந்த வீட்டின் முன் அட்வகேட்.கே.சதிஷ்குமார் என்றிருக்க ஷிவாலி குழப்பமாய் வந்தாள்.
“இது அட்வகேட் வீடா?” என்று பயந்து கேட்டாள்.
“ஆமா… நீ தான் டிவோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னல” என்று சோபாவில் அமர்ந்து பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
“அதுக்கு… இப்.. இப்பவேவா” என்று கேட்டாள். கேட்டு முடிக்கும் வரை மூச்சு வாங்கியது.
“ஆமா கர்ப்பத்தை கலைக்கணும்னு இப்ப தானே சொன்ன. அதனால நமக்கான பந்தத்தையும் கலைச்சிடலாம்.” என்று வாசிப்பை தொடர்ந்தான்.
ஷிவாலிக்கு வேர்வை சுரந்தது. நாக்கு வறண்டது. மயக்கம் வராத குறை. லேசாக பார்வை மங்கலாக தோன்றியது. அங்கிருந்த வாட்டர் கேன் மேலே டம்ளர் இருக்க எடுத்து நீரை குடித்தாள்.
குடித்து முடித்ததும் ”ரிஷி நாம வெளியே போகலாம். நான் சும்மா தான் சொன்னேன். டிவோர்ஸெல்லாம் வேண்டாம் டா. வீட்டுக்கு போகலாம். இனி டிவோர்ஸ் என்று பேச மாட்டேன்.” என்று கூறவும் ரிஷி செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எதிர்வினை காட்டினான்.
“ரிஷி.. பேபி கூட பெத்து தர்றேன். உன்னை விட்டு போகலை. நான் பேசியது தப்பு” என்று அழவும், கையை கட்டி மற்றொரு கதவு வழியாக யாரின் வருகையோ எதிர்பார்த்தான்.
“ரிஷி நீ இப்ப வரப்போறியா இல்லையா… நான் போக போறேன்.” என்று கத்தவும், “போடி… முடிஞ்சா என்னை மீறி போ” என்று அழுத்தமாய் கூறினான்.
அவனருகே உடைந்து விடும் நிலையில் ஷிவாலி நின்றிருந்தாள்.
அந்த நேரம் கணவன் மனைவி என்று இருவர் வந்திருந்தனர்.
“உள்ள வாங்க ரிஷி. என்ன அட்வகேட்டை பார்க்க வந்த மாதிரி அங்க இருக்கிங்க. என்னோட க்ளினிக் இங்க இருக்கு.” என்று அழைத்து சென்றாள்.
ஷிவாலியை கைப்பிடித்து அழைத்து சென்றதும் பயந்தவளாய் வரமறுக்க, “பயப்படாதே ரோஜாக்கு ஆனது உன் லைப்ல வராது.” என்று கூற, ஷிவாலி திடுக்கிட்டவளாய் திரும்பினாள்.
“ம்ம்… நேத்து நீ ரொம்ப டிஸ்டபன்ஸா இருந்த, ரிஷி லவ் யூனு சொன்ன, அடுத்து ரோஜா மாதிரி ஆகிடுவேன் என் தைரியத்தை உன் அன்பால பலவீனப்படுத்தற” என்று முனங்கின. அதனால உன் பிரெண்ட் பிந்து என்ற பெயரை எடுத்து மொட்டை மாடில காலையில போய் ரோஜா பற்றி பேசினேன்.
நான் யாரு என்னனு கேட்டா. கல்யாணம் ஆனதை சொன்னேன். உன் நிலையை சொன்னேன்.
என்னை முதல்ல வேண்டாம்னு சொன்னவ. பிறகு மேரேஜ் பண்ணி அதிகமா விரும்பறா. ஆனா இப்ப இப்படி பேசறா சட்டுனு ரோஜா மாதிரி என்று உலறுறானு சொன்னதும் ரோஜா பத்தி ஏதோ சொன்னா.
அவளோட லைப் உனக்கு அபெக்ட் ஆனதுனு. என்னால நம்ப முடியலை. நம்பாம இருக்க முடியலை. என் ஷிவ் தைரியசாலி எதுக்கும் அசர மாட்டாளேனு. ஆனா அவளே தான் உடைந்து போய் அழுவறா. அதனால என்ன ஏதென நானே பார்த்துடலாம்னு இதோ டாக்டர் சகுந்தலா அம்மாவிடம் போன் பண்ணி பேசினேன். அவங்க தான் உன்னை அழைச்சிட்டு வரச்சொன்னாங்க.” என்று கூறினான்.
போ… மனம் விட்டு பேசு. ஏதாவது டவுட்னா கேளு. அப்பறம் பயப்படாதே நீ கன்சீவா எல்லாம் இல்லை. அது ஷிவாலினி மகேந்திரன்னு வேற பொண்ணோட ரிசல்ட். நீ ஷிவாலி டி. அது கூட நினைவு வரலையா.
உனக்கு வந்த மயக்கம் வேற காரணமா இருக்கலாம். அதுக்கும் என்னனு போய் பார்த்துடுவோம்.” என்று அனுப்பி வைத்தான்.
அவளோ என்ன? என்று விழிக்க தனியறைக்கு சென்றாள்.
இரண்டு மணி நேரமானது. ஷிவாலி வந்த போது சின்னதாய் தெளிவாய் மாறியிருந்தாள்.
பேசிட்டியா போகலாமா?” என்று கேட்டு வழிநடத்தினான்.
போனில் கேட்டுக் கொள்வதாக ரிஷி கூறவும் சகுந்தலா அனுப்பி வைத்தாள்.
ரெய்ன் போ மால் சென்று வண்டியை நிறுத்தினான். அங்கே காபிஃகேப் இடம் நோக்கி அழைத்து வந்தான்.
தனி தனி தடுப்பு கொண்டு மற்றவர் பார்க்காத வகையில் தனிமையை கொடுத்து அழகாய் காட்சியளித்தது.
“உட்காரு.” என்றவன் இரண்டு காபிசீனோ பீட்சா ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தான்.
அவனாக எதுவும் பேசாது அவளை ரசிக்க ஆரம்பித்தான்.
அவளாக கூறட்டும் இல்லையென்றால் டாக்டரிடம் கேட்டறிவோமென காலம் தாழ்த்தினான்.
“ரோஜா என்னோட பிளஸ் ஒன் அண்ட் பிளஸ் டூ கிளாஸ் மேட். ஆக்சுவலி அவங்க அம்மா இறந்துட்டாங்கனு தனியா வளர்க்க கஷ்டம்னு ஊட்டில படிக்க போனா.
அப்ப தான் அம்மா(ராஜலட்சுமி) படிக்க சென்னையில பெரிய காலேஜ் கோ-எஜிகேஷன்ல சேர்த்து விட கூடாதுனு சொன்னாங்க.
உனக்கு தான் தெரியுமே. நான் எதையும் எதிர்பதமா செய்வேன். அம்மா இந்த ஊர்ல கோ-எஜூகேஷன் படிக்க கூடாதுனு சொன்னாங்களா.. அப்ப தாத்தா பாட்டியிடம் கெஞ்சி ஐஸ் வச்சி ஊட்டில தனியா போய் கோ-எஜிகேஷன் படிக்கணும்னு சொன்னேன்.
தாத்தா பாட்டி கூட முதல்ல பயங்கர எதிர்ப்பு. நான் தான் ரோஜா அங்க தான் படிக்கிறா பயமில்லைனு சொல்லி சேர்ந்தேன்.
ரோஜாவுக்கு நான் வந்தது ரொம்ப சந்தோஷமா பீல் பண்ணினா. எப்பவும் என் கையை இறுக பிடிச்சிப்பா.
ரொம்ப என்னிடம் உரிமையா பழகுவா. நான் எப்பவும் போல பட்டும் படாமலும் பேசுவேன் பழகுவேன். ஆனாலும் ஒரே ஸ்கூல் இப்ப காலேஜ் என்றதும் இன்னும் ஹாப்பியா பிரெண்ட்ஸ்ஷிப் கிளோஸா பழகணும்.
அப்ப தான் ரிச்சர்ட் பழக்கம். லவ் பண்ணினான். என்ன தான் பழகினாலும் ரோஜாவிடம் என் தனி சுதந்திரத்துல தலையிட விடமாட்டேன். அவளும் தான்… ஒரு வருஷம் ஹாஸ்டல் லைப் ரொம்ப ஜாலியா இருந்தோம். நான் ரோஜா பிந்து.
இரண்டாவது வருஷம் லீவுக்கு போனவள் மேரேஜ் பண்ணிக்கிட்டா… எங்க யாருக்கும் தெரியாது. அப்பாவால பார்த்துக்க முடியலைனு கட்டி வச்சார்னு சொன்னா.
ஊட்டிக்கு தான் ஹனிமூன் வந்தா. கணவர் ரொம்ப நல்லா பார்த்துக்கறார் அதுயிதுனு சொன்னா. அன்பு மழை பொழிஞ்சானு சொன்னா.
அந்த நேரம் தான் ரிச்சார்ட் கூட என் கருத்து வேறுபாட்டுல பிரேக் அப் ஆச்சு. நான் தனியா பஸ்ல போனேன். அப்போ… மீண்டும் ரோஜாவை பார்த்தேன்.
அவளா பேசினா. ஆளே அவதானானு தேடற அளவுக்கு இருந்தா. அவளிடம் கேட்டேன் மேரேஜ் லைப் எப்படி போகுதுனு. என் சுதந்திரம், எனக்கு பிடிச்சது, எனக்கு பிடிச்ச டிரஸ், எனக்குண்டான கருத்து, எனக்குனு நான் வாழ்ந்த வாழ்க்கை எதையும் வாழ முடியலை. அவருக்கு பிடிச்ச டிரஸ் போடணும். அவருக்கு பிடிச்சதை சமைக்கணும், ஏதாவது நீயா நானா வாக்குவாதம், படம், டிவில வர்ற ஆக்டர் ஆக்டர்ஸ் என்று எந்த கருத்து சொன்னாலும் அதெல்லாம் பேசாதே இதெல்லாம் பேசாதே, பொண்ணுங்க இப்படி வாழணும் அப்படி வாழணும்னு என்னை தொலைக்க வச்சிட்டார்னு சொன்னா.
எனக்கு ஷாக்கிங் ஆச்சு. என்னிடம் ரிச்சார்ட் பத்தி கேட்டா பிரேக் அப் பண்ணிட்டேன்னு சொன்னேன்.
லைப்ல மேரேஜூம் இப்படி சத்தமில்லாம பிரேக்அப் பண்ணிட்டு அவங்க அவங்க வேலையை பார்த்தா நல்லாயிருக்கும்ல கேட்டா.
ஏன் இப்படி கேட்கறனு கேட்டதுக்கு ஒன்னும் சொல்லலை. பட் பிரகனன்டா இருக்கறதா சொன்னா. முதல்ல சந்தோஷமா இருந்தாலாம். இப்ப எல்லாம் குழந்தை மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது. குழந்தை மட்டும் இல்லாம இருந்தா, நான் செத்துட்டு இருப்பேன்னா.
காதலிச்சியானு கேட்டார். இல்லை க்ரஷ் மட்டும் இருந்தது அதுவும் அத்தை பையன் என்று சொல்லவும் குழந்தையை தவிர என் மேல எந்த பாசமும் இல்லை. அவரும் காதலிச்சார் ஆனா அதை பெரிசா எடுத்துக்கலை. என்னை மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டுனு புலம்பினா.
எதுவும் குழந்தை பிறந்தா சரியாகும்னு சொன்னேன். ஆனா குழந்தை பிறந்ததும் அவ இறந்துட்டதா கேள்விப்பட்டேன். அப்ப தான் பிந்து லவ்வரிடம் சொல்லி ஏதோ தண்ணி வாங்கிட்டு வந்து சரக்கு அடிச்சது.
பிந்துக்கு மூன்றாவது வருடம் இன்னும் ஆறுமாசம் முடியப்போகுதுனு வாங்க சொல்லிட்டா. பட் பிந்துக்கு தெரியும் நான் ரோஜா இறந்ததால அபெக்ட் ஆகி அப்செட் ஆகினேன்னு.
அடுத்த ஒரு வாரத்துல ரூபன் கூட லவ் பண்ணியது. அவனுக்கு நான் சரக்கு அடிச்சது தெரிந்தது.
நீ இப்படியா? அப்படியா? ரிச்சார்ட் கூட எங்க போன? என்ன பண்ணுவிங்கனு கேட்டான். எனக்கு சரியா ஆறு மாசம் கூட நிம்மதியில்லை.
பிந்து கூட அவ லவ்வரிடம் சண்டையிட்டு பிரிஞ்சிட்டதா சொன்னா.
என்னடா இது உலகம்? என்ன ஏதுனு உட்கார வச்சி எவனும் பேச மாட்டாங்களானு தோனுச்சு.
கல்யாணம் என்ற கோட்டை டச் பண்ணக் கூடாதுனு முடிவோட இருந்தேன்.
அக்கா மேரேஜ் என்றதும் கூட எதுவும் ஹாப்பி இல்லை. அதனால தான் ஒரு ரியாக்ஷனும் கொடுக்கலை.
ஆனா சட்டுனு உன்னை எனக்கு பேசிட்டு வந்ததும், கண் முன்ன கல்யாணமா என்று பிடிக்கலை. அதுவும் ஒன்பது வருஷ இடைவெளி எனக்குள்ள பயத்தை தந்துச்சு.
ஆனா நான் ரோஜா இல்லை. பீல் பண்ணிட்டு அழ, இரண்டு பிரேக் அப் பண்ணிருக்கேன் உன்னையும் உதாசினப்படுத்த என்னால முடியும்னு நினைச்சேன்.
நீ என்னடானா ஒவ்வொன்னுத்துக்கும் என்னம்மா ஆச்சு. ஏதுனு கொஞ்சிட்டு இருக்க. குழந்தை வேண்டாம்னு சொல்லியும் ஓகே அப்படின்னு முன்ன வந்து நிற்கற” என்று அழுதாள்.
ரிஷி அவளின் கையை பிடித்து ”பொடிடப்பி… பீட்சா மூஞ்சி அழாதே… சகிக்கலை. இங்க பாரு… எல்லாருக்கும் கணவன் மனைவி இப்படி இருப்பாங்க அப்படி இருப்பாங்கனு எதிர்பார்ப்பும் இருக்கும், அதே போல ஏமாற்றமும் இருக்கும்.
ஏன் உன் பிரெண்ட் ரோஜா போல வலி வேதனை மட்டும் கூட இருக்கலாம். அதெல்லாம் வச்சி கல்யாணம் என்றாலே இப்படி தான். ஆண்கள் என்றாலே அப்படி தான்னு விதிமுறைக்குள்ள தள்ளாதே.
இங்க பாரு… உனக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுது. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறானே ரொம்ப நல்லவனா இருக்கானேனு தோணுதா…” என்றதும் ஷிவாலி சிரிக்க, “தட்ஸ் குட் இப்படி தான் சிரிக்கணும்.” என்றான் ரிஷி வேந்தன்.
நான் நல்லவன்னு எல்லாம் சொல்லலை ஷிவ். நானும் சரக்கு அடிச்சிருக்கேன்.(இனிமே அடிக்க மாட்டான். அப்பறம் ஷிவாலி பங்கு கேட்டு ஆரம்பிச்சா. அதனால அவன் விடைக் கொடுத்துட்டான்.)
லவ் பண்ணியிருக்கேன். ஏன் இப்பவும் ரோட் கிராஸ் பண்ணினா என் கண்ணு அவ வீட்டு பக்கம் தானா திரும்பும். அது தப்பான கண்ணோட்டத்துல இல்லை. ஜஸ்ட் தெரிந்த பொண்ணு இங்க தானே இருக்கா. ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் ஜோள்ளு விட்டோம்ல என்ற மெம்மரி அவ்ளோ தான். அதை தாண்டி உன் ரிஷி மைண்ட்ல எதுவும் இருக்காது. அதே போல உன் மைண்ட் இருக்கும்னு தெரியும். அதை தவிர்த்து இந்த புரியாத புதிர் ரகுவரனா வாழ்க்கை தொலைக்க நான் தயாராயில்லை.
சண்டை போடலாம் ஆனா எப்பவும் சந்தேகப்பட மாட்டேன் உன்னை விட மற்றது பெரிசுனு ஓட மாட்டேன்.
நான் உன்னிடம் இதே அன்போட, ஏன் இதை விட அன்பா கூட பார்த்துப்பேன். எங்கப்பா எங்க அம்மாவை பார்த்துக்குற மாதிரி, அதை விட அன்பா காதலோட நான் எனக்கு வர்றவளை பார்த்துக்கணும்னு தான் எங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்தது.
என்ன பார்க்கற வானதிக்கு மேரேஜ் ஆகறப்ப நைட்டு செம தண்ணி ஒரே திட்டு, அம்மா வந்து ஒரு அறைவிட்டு, காதலிச்ச ஓகே இதென்னடா நல்லா வாழகூடாது அதுயிதுனு சாபம் தர்ற.
என் மகனை கட்டிக்க முடியலையேனு தான் ஒருத்தி பீல் பண்ணணும் தவிர இப்படி சாபம் கொடுக்கறானே இவனையா காதலிச்சோம்னு யாரும் பேசிடக்கூடாது.
நீ விரும்பினியா ஏதோவொரு புள்ளியில அவளுக்கு பிடிக்கலைனா விட்டுடு. இதே கல்யாணத்துக்கு பிறகு ஒருத்திக்கு அந்த எண்ணமே வராத அளவுக்கு நடந்து காட்டுனு சொன்னாங்க.
இவ்ளோ அட்வைஸ் பண்ணினவங்க காலையில என்னிடம் பேசலை. ஒரு வாரம் பேசலை. கேட்டதுக்கு ஒரு பொண்ணை வாய்க்கு வந்தபடி பேசினியே அப்படி வளர்த்துட்டேனேனு அவங்களுக்கு கொடுத்துக்குற தண்டனைனை சொன்னாங்க.
நீ பேசினப்ப கூட அறையணும்னு தோனுச்சு. எங்க அம்மாவுக்கு தெரிந்து அப்பறம் பேச மாட்டாங்களோனு பயந்தேன். வளர்த்ததுல தப்பாகிடுச்சுனு பீல் பண்ணுவாங்க.
இத்தனை வருஷம் வளர்த்துட்டு கடைசியா மருமகளான வரப்போற பொண்ணிடம் தோற்றுட்டோமேனு தலைகுனிந்திடுவாங்க.” என்று சோகமாய் கூறவும் ஷிவாலிக்கு ரிஷியை கன்னத்தில் முத்தமிட தோன்றியது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

Rishi you are so matured to handle this little girl shiv. Excellent Rishi. Shiv now you should decide. Fantastic narration sis. Today’s younger generations are like this only. Without thinking anything immediately they will say divorce. But in reality divorce is a very long process. Also after getting divorce how life will go? Without knowing anything simply youngster decide to get divorce. Awesome narration sis
Rishika nalla purithal erukku. Podidappi ennum valaranum
Super rishi una mari character kedaikirathu la romba kastam ipo 100 la 2 per tha irupanga oru matured ah yarume irukurathu illa shiv u r very lucky to have rishi