👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » 90’S பையன் 2K பொண்ணு-38

90’S பையன் 2K பொண்ணு-38

ரிஷிவா-38

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  “ரிஷி நம்ம வீட்டுக்கு போகலாமா. உன்னை அப்படியே அணைச்சி முத்தம் கொடுக்கணும்னு போல இருக்கு டா.” என்றதும் ரிஷி சுற்றும் முற்றும் பார்த்தான்.

      “நீ முதல்ல கைபட்டா கால்பட்டா குழந்தை உருவான நீ பீல் பண்ண மாட்டனு பிராமிஸ் பண்ணு. இனி டச் பண்ண அலோவ் பண்ணறேன். இல்லைனா இப்படியே நீ எப்ப ஓகே சொல்லறியோ அப்ப வரை ரிஷிவேந்தன் நித்யவேதானந்தா மாதிரி மடத்துல போய் உட்கார்ந்துக்கறேன்.” என்று கூறினான்.

     “அடப்பாவி… பெயரை பார்த்தியா.. நீ அந்த மாதிரி போவியா. மகனே உண்டில்லைனு ஆக்கிடுவேன்.” என்றவள் கையை நறுக்கென்று கிள்ளி கூறினாள்.

    “எங்கம்மா உன்னிடம் அடி, கடி, மிதி கிள்ளு வாங்கவே பெத்து விட்டு இருக்காங்க டி.” என்றவன் பீட்சாவை கடித்து இழுக்க அது அவன் பற்களோடு ஓட்டிக்கொண்டு இழுப்பட்டது.

    அங்கும் இங்கும் பார்த்து “எனக்கு இந்த பீட்சா வேண்டாம். கேப்பசீனோ மட்டும் போதும் என்று உறிந்து குடிக்க, “டேய் மெதுவா சாப்பிடு டா. பிடுங்கி திண்ண மாட்டேன்.
   
     அங்க பாரு ஒன்னை வாங்கி ஓரு மணி நேரமா அந்த லவ்வர்ஸ் கடலை வறுக்கறாங்க. நீ என்ன சட்டுனு இதை காலி பண்ணற.” என்று கேட்டாள்.

    “ஏம்மா… அடுத்த யாராவது வருவாங்களே. நாமளே உட்கார்ந்தா இந்த கடைக்காரன் திட்ட மாட்டான்.” என்று கூறினான்.

     “நீ என்ன இதை குடிக்க தான் மனுஷங்க வர்றாங்களா. அடேய் குழந்தை பயலே ஒரு மணி நேரம் கடலை வறுக்க தான் இந்த ஆறிபோன கூலிங் காபியை குடிக்க வர்றாங்க. எவ்ளோ நேரம் என்றாலும் பேசிட்டு போகலாம். எவன் கேட்பான்.” என்று பீட்சாவை மென்று இழுத்து சாப்பிட்டாள்.

      தான் உண்ணும் போது இழுப்பட்ட சீஸ் அவள் உண்ணும் போது அழகாக தெரிய, சிரித்து கொண்டான்.

     “கண்ணு வைக்காதே… பெப்ரோனிக் மினி பீட்சா காலையில சாப்பிடலை தெரியுமா”. என்று கவலையாய் சாப்பிடவும் ரிஷி வேடிக்கை பார்த்தான்.

     “இன்னிக்கு ஆபிஸ் லீவு போட்டுட்டியா” என்று கேட்டாள்.

     “நேத்து ரொம்ப அப்செட். அதனால காலையிலேயே சகுந்தலாம்மாவை பார்க்க அங்க வரணும் முடிவுப் பண்ணினேன். சாப்பிடமுடியலை… நீ வேற டிவோர்ஸ் என்று வயித்துல புளியை கரைச்சிட்ட” என்றான்.

     ஆமா அதென்ன சர்வசாதாரணமா இந்த வார்த்தை எங்க்ஸ்டர் வாயில வருது. ஏதாவது சொன்னா அகைன்ஸ்டா நடந்தா…,

நான் உன்னைனு சொல்லலை. பொதுவாவே இப்ப இருக்கற பொண்ணுங்க சட்டுனு இந்த வார்த்தையை விடறிங்க. மேபீ பசங்களும் தான்.

    கல்யாணம்னா பிடிச்சா வாழலாம் பிடிக்கலைனா போகலாம்னு ஆகிடுச்சுல.” என்று குறைப்பட்டான்.

     “ம்ம்… யா.. முன்ன அம்மா காலத்துல படிப்பு வேலை பணம் என்று பெண்கள் அடைய ரொம்ப கஷ்டம். அதனால தனியா போய் கஷ்டப்பட யோசித்து நல்லவனோ கெட்டவனோ குடிக்காரனோ, பொம்பளை பொறுக்கியோ, சந்தேகப்பிராணியோ, அடிச்சாலும் உதைச்சாலும் அவன் தான் பார்த்துக்கணும். வெளியே போனா பணத்தை திரட்ட குழந்தையை படிக்க வைக்க கஷ்டப்படணும். பணமும் குழந்தைங்களோட தேவைக்கு பூர்த்தி ஆகுமானு சந்தேகம். பொண்ணுக்கும் பாதுகாப்பு இருக்காது. இந்த மைண்ட்ல கல்லு மாதிரி கணவனா ஏதோ ஒருத்தன் இருந்தாலும் புல் மாதிரி வேஸ்ட் பெல்லோவா இருந்தாலும் பொண்ணுங்க அவனோடவே சாகற வரை நிம்மதியில்லாம செத்து போறாங்க.

    ஆனா இப்ப அப்படியில்லையே. படிப்பு இருக்கு, படிப்பு தகுந்த வேலை கிடைக்குது, நல்ல சம்பளம், தனிவீடோ, ஹாஸ்டலோ கேர்டேக்கர் வச்சி குழந்தையை தனியொருத்தியா சமாளிக்க முடிந்து வளர்க்க முடியுது. அதனால தனியா வாழ தயக்கம் வர மாட்டேங்குது.

   முன்ன தான் தனியா வாழ்ந்தா ஏதாவது பேசி காயப்படுத்துவாங்க. இப்ப அப்படியே காயப்படுத்தினாலும், உன் வேலையை பாரு நீ என்ன யோக்கியமானு கேட்க எங்களுக்கு வாய் இருக்குனு நிம்மதியா வாழறாங்க.

    அதுக்காக பணம் இல்லாத பொண்ணு அடங்கி வாழுணும் தப்பு கணக்கு போட்டுடாதே. தன்மானம் இருக்குறவள் சந்தேக பிராணியோடயோ, பிடிக்காத கணவனோட வாழ மாட்டா.” என்று ரிஷியின் மினி பீட்சாவை எடுத்து சாப்பிட போனாள்.

     “அது எச்சி டி” என்றான்.

    “நீ தானே… அதெல்லாம் பழகிடுச்சு.” என்று சாப்பிடுபவளை கன்னத்தில் கை வைத்து ரசித்தான்.

     பில் பே செய்து வீட்டுக்கு செல்ல, பாதி வழியில் “வண்டியை ஓரமா நிறுத்து” என்று கூறினாள்.

    ரிஷியும் நிறுத்திவிட்டு திரும்ப, சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து இருந்தாள்.

     “நினைச்சேன் இஷ்டத்துக்கு சீஸை திங்கறியேனு.” என்று தலையை பிடித்து நின்றான்.
   
     “நீ கண்ணு வச்சதால டைஜிஷன் ஆகலை டா பணியாரம். ஸ்பிரைட் வாங்கு.. இல்லை ஸெவன் அப் வாங்கு” என்று ஏவினாள்.

     “இரண்டுமே வேண்டாம். எது எது சாப்பிட கூடாதுனு எங்கம்மா சொல்லி வளர்த்தாங்களோ நீ அதையெல்லாம் திங்கற, அதுவும் விரும்பி திங்கற” என்றவன் எதிரே லெமன் சோடா கரும்பு ஜூஸ் என்று ரோட்டு கடையிருக்க, அவளை இங்கயே இருக்க கூறி ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தான்.

     கரும்பு ஜூஸ் இரண்டை வாங்கி கொண்டு திரும்பி வந்தவன், “இந்தா லெமன் இஞ்சி போட்டு கரும்பு ஜூஸ் வாமிட் எடுத்ததற்கு நல்லாயிருக்கும்” என்று கொடுத்தான்.

     “ரோட்டு கடையிலயா..” என்று முகம் சுழித்தவளிடம், “ஏய்… குடிடி.. கரும்பு மிஷினை அடுத்த தடவை பெரிய மால்ல ஒன்னு வைக்க சொல்லறேன். ஆளை பாரு. இதெல்லாம் ரோட்ல தான் கிடைக்கும் ஆனாலும் நல்லது தான்” என்று புகட்டினான்.

     முதலில் அருவருப்போடு குடிக்க ஆரம்பிக்க, சுவைப்பிடிக்கவும், மடமடவென குடித்தாள்.

    “ரிஷி அதுவும் வேண்டும்” என்று மற்றொரு கையில் இருப்பதை கேட்டாள்.

    “குடி உனக்கு தான் இரண்டும்” என்று கொடுக்க பருகினாள். கடைசி நாலைந்து மடக்கு முடியாமல் அவனிடம் திருப்பினாள்.

     அதனை குடித்தவன், “இப்ப ஓகே வா போகலாமா?” என்று கேட்டு வண்டியை எடுத்தான்.

   வீட்டுக்கு வந்த நேரம் வருண் வாசு ஓடி வந்து அணைத்தனர்.

     “மாமா லீவு விட்டாச்சே.” என்று அவனின் தோளில் தாவ இருவரையும் தோளில் வைத்து சுற்ற ஆரம்பித்தான்.

    “மாமா தீம் பார்க் போகணும்”
    ” மாமா ஷாப்பிங் போகணும்.” என்று இருவரும் எப்பொழுதும் போல லீவுக்கு வந்தால் மாமா அழைத்து செல்வார் என்று பட்டியலை கூறினார்கள்.

     “ஓகே ஓகே போகலாம்.” என்றவன் இறக்கி விட, “டேய் உங்க அத்தை கூட மாமா போகவே நேரம் இருக்கும். இங்க வா… சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன். ஆச்சி தாத்தா கூட வீட்ல இருக்கணும். மாமாவை தொல்லை பண்ண கூடாதுனு” என்று கவிதா அதட்டு போட்டார்.

     “ரிஷி தீம் பார்க் போகலாமா” என்று அவனை உரசியவள், “ஏன் அண்ணி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் போட்டு கூட்டிட்டு வர்றிங்க. நாம போலாம்.” என்று அவனிடம் கேட்காமல் முடிவெடுத்தாள்.

     “நான் ஆபிஸ் போகணுமா வேண்டாமா?” என்று காதை கடித்தான்.

     “நாளைக்கு சண்டே டா.” என்று கூறவும் “பேமிலியா போகலாம்” என்று முடிவானது.

     கவிதா சரண்யா அருகே வந்து, “ஏம்மா இவ தம்பியை வாடா போடானு பேசறா. கண்டுக்க மாட்டேங்குற. நாளைக்கு யாராவது கேட்டா என்ன பண்ணுவ. ரிஷியை விட ஒன்பது வயசு சின்னவள் தானே” என்று கேட்டு வைத்தாள்.

    “அவங்க புருஷன் பொண்டாட்டி இதுல நான் என்ன கேட்க, உன் தம்பிக்கு பிடிக்கலைனா அவனே கூப்பிடாதேனு சொல்லியிருப்பான். அவனுக்கு அவளை பிடிச்சிருக்கு. அது அவங்க லைப். நான் கேட்டு என் மூக்கு உடைக்கவா.
  
    நீ கூட தான் சில நேரத்துல வருண் அப்பா வாசு அப்பானு பேசுவ. சட்டுனு ‘அந்தாளு’ தியேட்டரே கதினு இருப்பார்மானு சொல்வ.

   நேரத்துக்கு தகுந்தாப்ல கூப்பிடறது தான்.” என்று கணவருக்காக டீயை கொதிக்க விட்டார்.

    கவிதா அமைதியாக சென்றதும் டீயை எடுத்து வடிக்கட்டி திரும்ப, “கொடுங்க அத்தை நான் மாமாவுக்கு கொடுக்கறேன்” என்று ஷிவாலி வாங்கி கொண்டாள்.

    “மாமா டீ” என்று கொடுக்கவும் “தேங்க்யூ மா.” என்று பெற்று கொண்டார்.

    சரிகா ஹரிஷ் வரவும் நாளை தீம்பார்க் போகலாமென கூறவும் “எங்கயும் ரயிட்ல ஏற முடியாது. நான் எப்படி வர?” என்று அலுத்து கொண்டாள் சரிகா.

   “நீ வேடிக்கை பாரு. நாங்க என்ஜாய் பண்ணறோம்.” என்று கவிதா கூற, “சரி எல்லாரும் ஒன்னா போய் ரொம்ப நாளாகுது வேடிக்கை பார்க்க வர்றேன்.” என்று ஹரிஷை பார்க்க, அவனோ போகலாம் என்று தலையாட்டினான்.


  
    இங்கு ஹரிகரன் சந்தியாவோ, ஊருக்கு சென்று திரும்பி வந்தாள்.

   கையில் அன்னையின் தங்கசங்கிலியை எடுத்து கொடுத்தாள்.

     ஹரிகரன் தீண்டவும், “பேசாதே” என்று திட்டினாள்.

      “அம்மா.. இந்தா… இதை பத்திரமா வை. இந்த நகையும் சேர்த்து பத்திரமா வை.” என்று திருமணத்திற்கு போட்ட நகைகளை திரும்ப கொண்டு வந்து நீட்டினாள்.

    “இதெல்லாம் உன்னோடது இதை இங்க எதுக்கு கொண்டு வர்ற. என்னோடதை மட்டும் கொடு.” என்று வாங்கினார்.

    நேற்றே சுஜாதா ராஜலட்சுமிக்கு போன் போட்டு, ‘நகை என்னோட வீட்டுக்காரன் தான் விற்று இருக்கார். போலிஸ் ஒரு திருடனை பிடிக்க  மார்வாடியை கை காட்டியிருக்கான். அங்க இருந்த நகையை யார் யார் கொடுத்தானு கேட்க ஹரிகரன் அப்பாவை கை காட்டியிருக்கார்.

    போலிஸ் அவரையும் திருடன்னு நினைச்சிட்டு கூட்டிட்டு போயிட்டாங்க. அவர் எங்க செயின்னு சொல்லியும் கேட்கலை. எந்த கடையில வாங்கினனு கேட்டு இருக்காங்க. அவருக்கு தெரியலை. குத்து மதிப்பா சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகைகடைனு சொல்லியிருக்கார். போலிஸ் அடி அடினு அடிச்சிட்டாங்க. அடி தாங்காம என் மருமக நகை திருடினேன்னு சொல்லி என்னை கூட்டிட்டு கேட்டாங்க.

   நான் ஹரிகரனிடம் கேட்டு ஆமா எந்த கடையில வாங்கினதுனு சொன்னா விட்டுடுவாங்களாம் டா  வந்து சொல்லி அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வானு சொன்னேன்.

     ஹரிகரனுக்கு இதை கேட்டதும் அவங்க அப்பாவை திட்டி தீர்த்துட்டான்.

   வெளியே கூட்டிட்டு வர சந்தியாவை கூப்பிட்டு வந்தான்.

   மருமக(?)சந்தியா வந்ததும் கோபமா அது என்னோடது தான் சார். எங்கம்மா ஜிஆர்டில வாங்கினாங்க. நகையில கூட சீல் இருக்கும் செக் பண்ணி பாருங்க என்று அடையாளம் சொல்லவும் அவரை விட்டுட்டார்.

     சந்தியா ஹரிகரன் எங்களை அடியோட உதாசினப்படுத்தி கிளம்பிட்டாங்க. நான் என்ன பண்ணுவேன் ஏதோ சூதாட்டத்துல பந்தயம் வைக்க இப்படி பண்ணியிருக்கார்.
  
    நாங்க எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டுட்டோம். பையனும் மருமகளும் கோவிச்சிக்கிட்டு பச்சை தண்ணி கூட பல்லுல படாம போயிட்டாங்க.

    சந்தியா உண்டாயிருக்கானு ஜூஸ் கொடுத்தா அதையும் தட்டிவிட்டுட்டு போயிட்டாங்க.

     புருஷன் செய்த தப்புக்கு நான் என்ன பண்ண சம்பந்தி’னு ஒரே புலம்பல் வடித்தது இன்றும் காதில் ஒலித்து கொண்டே இருந்தது.
 
    மகளுக்கு சாத்துகுடி பிழிந்து கொடுக்க வேண்டாமென மறுக்க, “நீ உண்டாயிருக்கனு உங்க அத்தை சொன்னாங்க. இந்த நேரத்துல சாப்பிடாம இருந்தா குழந்தைக்கு தான் பாதிக்கும்.

    இவரோட பேசாம இருந்து என்ன பண்ண போற. உன் நகையை நீயே எடுத்துட்டு போ. இங்க வைக்கிறேன்னு அவரையும் அவமானப்படுத்தாதே. வீட்ல உண்டாயிருக்கறதால வந்திருக்கனு சொல்லியிருக்கேன். முகத்தை தூக்காம சந்தோஷமா இரு.” என்றதும் ஹரிகரனோ தலைகுனிந்தவன் “அப்பாவை வச்சி என்னை மதிப்பிடறா அத்தை கஷ்டமா இருக்கு. நானா தான் சுயமா முன்னேறணும்னு இங்க வந்து படிச்ச படிப்புக்கு வேலையில்லைனு மொபைல் சர்வீஸ் பண்ணிட்டு இருக்கேன். இவ என்னை புரிஞ்சுக்காம திட்டறது கஷ்டமா இருக்கு.

லவ் பண்ணினதால எனக்கு இங்கயும் கெட்ட பெயர் எங்க வீட்லயும் இப்ப சப்போர்ட் இல்லை. அங்க ஆதரவா இருந்தாலும் இனி நான் போக போறதில்லை.” என்று பேசியவனிடம் ஆறுதல் அளிக்க இயலாது தவித்தார்.

      ராமமூர்த்தியோ “நாளைக்கு மாப்பிள்ளை தீம்பார்க் போறோம் வர்றிங்களா மாமானு கூப்பிடறார். போயிட்டு வருவோமா. அப்படியே சரிகாவுக்கு இனிப்பு செய்து கொடுக்கணும்னு சொன்னியே செய்திடு. அங்க அப்படியே கொடுத்துட்டு வந்திடுவோம்.” என்று பேசியவர் சந்தியா ஹரிகரனை கண்டு பேச்சை நிறுத்தினார்.

   “சந்தியா உண்டாகியிருக்கா.” என்றதும் ராமமூர்த்தி கால்கள் அப்படியே நின்றது.

     “சந்தோஷம் மா. நீங்களும் தீம்பார்க் கிளம்புங்க. எல்லாரும் ஒன்னா போயிட்டு வருவோம். ராஜி குழந்தைக்கு பிடிச்ச குலோப்ஜாமூன் முந்திரி போட்டு டைமன்ஸ்வீட் செய்துடு. நாளைக்கு அங்க போய் சந்தோஷத்தை பகிர்ந்துப்போம்” என்று மகிழ்ந்தார்.

      “சிலதை சொல்லாமல் மறைத்து வைக்கிறதால நிம்மதினா அதை சொல்ல கூடாது. உங்கப்பாவுக்கு இந்த நகை விஷயம் தெரிய வேண்டாம். போய் ரெஸ்ட் எடு நாளைக்கு போகலாம். உங்களுக்கும் மனசு சரியாகும்.” என்று ராஜலட்சுமி முடிவெடுத்து கூறி அகன்றார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’S பையன் 2K பொண்ணு-38”

  1. Kalidevi

    LOVERS LOVE PANUM POTHU THAN AVANGALUKULLA ELLAM IRUKU AANA ATHE MRG APRAM LOVE AH IRUKU IRUKU NU POIDRANGA YENU THERILA ANTHA MARI SANDHYA LOVE UM . EPPADI IRUPALO SHIVU LIFE NINACHAVANGAAVALA PATHI KAVALA PADALA . NICE GOING BUT SHIV ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!