ரி-ஷி-வா-40
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இரண்டு மூன்று முறை போன் போட்டு ரிசப்ஷன் பெண்மணி எடுத்தாள்.
“சார் நீங்க தான் ஷிவாலி ரிஷிவேந்தனா… உங்களிடம் பேசணும்னு டாக்டர் சொன்னாங்க. என்ன சார் அப்படியே ஓடிட்டிங்க. டாக்டர் எங்களை பிடிச்சி திட்டினாங்க. இதுல ரிசல்ட் பைல் வேற மாறியிருக்கு எவ்ளோ திட்டு தெரியுமா.” என்று கூறினார்.
“ஏங்க… ஷிவாலி பிரகனென்டா இல்லையா மேம். அதை மட்டும் பார்த்து சொல்ல முடியாதா.” என்று அவசரப்பட்டான்.
“சார் டாக்டர் ஏதோ பேசணும்னு சொன்னாங்க. நீங்க ஈவெனிங் வந்து பாருங்களேன்.” என்றதும் ரிஷி மனோகரி பாட்டி மடியில் அயற்ச்சியாய் படுத்திருந்த ஷிவாலியை கண்டு, எதுக்கோ செக் பண்ணிட்டு வாமிட் நிறுத்த மருந்து வாங்கலாமென “வர்றேன் மேம் டோக்கன் நம்பர் ரிசர்வ் பண்ணிட்டு சொல்லுங்க.” என்றான்.
போன் பேசி முடித்து மனதிற்குள் அவள் கன்சீவ் என்றது மாறியிருந்தால் எத்தகைய ஆனந்தம் என்று பரவசம் கொண்டான்.
அதே சமயம் இத்தனை பேருக்கு தெரிந்தப்பின் குழந்தை வேண்டாமென்று மறுத்தால் அது கவலையையும் கோபம் குழப்பத்தை தரும். எதற்கோ ஷிவாலியிடம் அவள் முடிவை அறிந்து பதமாய் பேச முயன்று அவள் கையை சுரண்டினான்.
மனோகரி பாட்டி மடியிலிருந்து எழுந்தவள் ரிஷியின் மடியில் வெட்கம் கொள்ளாமல் உரிமையாய் படுத்து கொண்டாள்.
ரிஷிக்கு தான் வெட்கமானது. ஆனாலும் கர்வமாய் தோன்றியது. தன்னவளின் தலைகோதி விட, நாகரீகமாய் மற்றவர்கள் சற்று தள்ளி அமர்ந்தனர்.
“ஏன் ஷிவ்… சிம்டம் எல்லாம் பிரகனன்ஸி சீக்கா தெரியுதே. ஒருவேளை கன்சீவா இருந்தா அகைன் கலைக்க சொல்லுவியா?” என்று கேட்டான். அவன் கேட்பதற்குள் இதயம் துடித்ததை அவன் மட்டுமே அறிவான்.
ஷிவாலி மெதுவாய் எழுந்து அவன் முகம் நோக்கி, “உன் அன்புக்கு அடிபணியணும்னு தோனுது டா. உனக்காக ஒரு குழந்தை பெத்துக்க மாட்டேனா. என் பணியாரம், ரிஷி பையா… பெத்துக்கலாம்.
நம்ம வீட்ல ஏதாவது பங்ஷன் என்றால் மூன்று குட்டிஸ் ஒரே டைம்ல சுத்துவாங்க. பார்க்க நல்லாயிருக்கும்ல.” என்றதும், “என் பட்டு செல்லம்… லவ் யூ டி. எவ்ளோ பயந்தேன் தெரியுமா. இனி ரிசல்ட் எது வந்தாலும் நான் ஹாப்பி டி” என்றவன் அவள் கைகளை முத்தமிட்டான்.
அதன் பிறகு சற்று தெளிவாகவும் தண்ணீரில் ஆட்டம் போட சென்றனர். ஷிவாலி ஜாலியாக ஆட்டம் போட ராஜலட்சுமி அவளை தடுத்து ஒரிடமாக இருக்க கூறவும் ரிஷி வந்து அதெல்லாம் ஒன்னும் ஆகாது அத்தை. அவ விளையாடட்டும்” என்று அவள் கையை பற்றி இழுத்து அழைத்து சென்றான்.
நேரங்கள் ஓடவும் மாலை குளித்து முடித்து குட்டிஸும் ஆண்களும் ஆடை மாற்றினார்கள்.
திரும்புகையில் ராஜலட்சுமி கண்டிப்பாய் பைக் வேண்டாமென கூறி, காரில் அழைத்து வந்தார்.
அதற்கும் சோகமாய் ரிஷியை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.
வருண் வாசு கூட ஆடிய ஆட்டத்துக்கு உறங்குவார்கள் என்று காரில் வரவும், ரிஷி மட்டும் தனியாய் காரின் பின்னாலே ஷிவாலி சைட் அடித்து கொண்டே வந்தான்.
ஷிவாலியும் அவனை தான் கண்ணாடி வழியாய் இமைக்காமல் பார்த்து வந்தாள்.
கண்களில் துளியும் காமமின்றி காதல் வழிய அவளின் பார்வையில் பறந்தவனாக வந்தவன் அவள் வாந்தி எடுக்கவும் பதறியடித்து பைக்கை வேகமெடுத்து காரை வழிமறித்து நிறுத்தினான்.
“டேய் வாந்தி தானே எடுக்கறா. இப்படியா பைக்கை ஓட்டுவாங்க.” என்று சரண்யா கடிந்தார்.
அவளை தொட “ரிஷி..” என்றவள் மயங்கி சரிந்தாள்.
அவளின் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்.
இன்னும் அவர்கள் வீட்டிற்கு செல்லும் இடம் தொலைவாக ஹாஸ்பிடலுக்குமே அரை மணி நேரம் தொலைவு இருந்தது.
ரிஷிக்கு என்ன செய்வதென்று புரியாமல் அருகே இருக்கும் மருத்துவமனையே தேடினான். அதுவுமே ‘வரதன் மருத்துவமனை’க்கு பக்கமாய் தான் இருந்தது. அதனால நேராக நேற்று சென்ற இடத்தில் வண்டியை செலுத்த கூறினான்.
ரிஷி குடும்பத்தாரும் ஷிவாலி குடும்பத்தாரும் பயந்து போய் மருத்துவமனையை தேடி வந்தனர்.
நிஷாந்தினி எமர்ஜென்ஸி என்று அழைத்ததும் வந்திட, ஷிவாலி வந்ததும் சிகிச்சை துவங்கபட்டது.
சில பல நேரங்கள் விழுங்கியது. அதற்குள் ரிஷி மனதிற்குள் பூகம்ப அதிர்வை உண்டாக்கியது.
டெஸ்ட் எடுக்கப்பட்டு தூரிதமாக நேரங்கள் நகர, நிஷாந்தினி ரிஷியை அழைத்தார்.
கண்ணில் பயமும் தவிப்புமாய் ரிஷி நுழைந்தான்.
“சாரி சார்… லாஸ்ட் டைம் பைல் ரிசல்ட் நேம் இரண்டும் புதுசா வந்த நர்ஸ் மாற்றி குழப்பிட்டாங்க. நீங்க வெயிட் பண்ணியிருந்தா மேபீ அன்னைக்கே அவங்க கன்சீவா இருப்பது தெரிந்திருக்கும்.” என்றார்.
“ஷிவ் அப்ப கன்சீவா இருக்காள டாக்டர்.” என்று கேட்டான்.
“எஸ்… ஷீ இஸ் பிரகனெட்.” என்று கூறினார்.
“வாமிட் வந்தா ஓகே டாக்டர். லேசா பிளட் கலந்து எதுக்கு டாக்டர் எடுத்தா. பார்க்க பயமா இருந்தது. உயிரே போயிடுச்சு.” என்றவன் குரல் கமறியது. கண்கள் குளமாய் நீரை தேங்கி கன்னத்தில் வழிந்தது.
“அது தான் என்னனு டெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கோம். எப்படியும் ரிசல்ட் வர நேரமாகும். டூவென்டடி போர் ஹவர்ஸ் கூட ஆகலாம். நீங்க வேண்டுமின்னா ரெப்பிரஷ் ஆகிட்டு வாங்க. அவங்க இன்னிக்கு இங்க அட்மிட்ல இருக்கட்டும்” என்று கூறவும் நடுங்கினான்.
“ஏன் டாக்டர்… உடனே தெரியாதா” என்று பரிதவித்தான்.
“இது டெஸ்ட் ரிப்போர்ட் வரணும் ரிஷி. வெயிட் பண்ணுங்க. அடுத்த பேஷன்ட் வேற பார்க்கணும். உங்க வீட்டு மெம்பர்ஸ் போயிட்டு வரச்சொல்லுங்க.” என்று கூற மற்றொரு விபத்து கேஸ் வரவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க விரைந்தார் நிஷாந்தினி.
குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று தன் இரு தங்கை தங்கை கணவர் குழந்தையை அனுப்பி வைத்தான்.
“எதுவும் இல்லை கன்சீவா தான் இருக்கா. எதுக்கோ பிளட் வாமிட் எதுக்குனு ஒரு சின்ன டெஸ்ட் நீங்க போங்க” என்று சந்தியா ஹரிகரன் மற்றும் தன் ஷிவாலி குடும்பத்தையும் அனுப்ப முயன்றான்.
வேதாச்சலம் மனோகரி போக மறுக்க “அவளுக்கு ஒன்னுமில்லை கன்சீவா இருக்கா வீக்கா இருக்கா. அதனால தங்க சொல்லியிருக்காங்க” என்று சமாளித்தான்.
அந்த பொய்யை நம்பி சந்தியா ஹரிகரனோடு வேதாச்சலம் மனோகரி இருவரும் சென்றனர். மனோகரியோ வாசல் வரை ராஜலட்சுமியிடம் அவ கண் முழிச்சதும் பேச கூறி சென்றார்.
ராமமூர்த்தியையும் அனுப்பி விட்டான். ஹாஸ்பிட்டலில் இரண்டு பேர் தங்க வேண்டுமென்ற விதிமுறையால் ராஜலட்சுமி மட்டும் இருந்தார்.
கண்ணபிரான் கூட ஹரிஷோடு செல்ல நேர்ந்தது. சரண்யா எப்படியோ தங்க அனுமதி கேட்டு இருந்தார்.
ரிஷி பெற்றோரை சரண்யாவை தவிர்த்து அவன் வீட்டு ஆட்களும் சென்றனர்.
ரிஷி சரண்யா, ராஜலட்சுமி மூவரும் ஷிவ் கண் திறக்க இறைவனுக்கு வேண்டுதல் விடுத்தபடி அங்கேயே கண் விழித்தார்கள்.
ரிஷி ஷிவ் அருகே அமர்ந்து கையை பிடித்தவன் அப்படியே உறங்கினான். காலையில் ஷிவ் கண் திறக்க, ரிஷியின் முக வாட்டத்தை கண்டும், தனக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு ஒயர்கள் சொருகியிருக்க மெதுவாய் எழுந்தாள்.
“ஏய்… என்ன பண்ணுது” என்று ரிஷி முகம் துடைத்து எழுந்தான்.
“பாத்ரூம் போகணும் டா. நீ தூங்கு” என்று நடந்தாள்.
பாத்ரூம் சென்று முகமலம்பி வந்தவள் ரிஷியிடம் “எனக்கு என்னாச்சு ரிஷி. வாமிட்ல லேசா பிளட் கலந்து எடுத்தேன் தானே” என்று தனது உடையின்றி நோயாளி உடை அணிந்திருக்க கேட்டாள்.
“அது அழுக்கா இருக்குனு மாத்தியிருக்காங்க டா. நீ ரெஸ்ட் எடு. ஒரு ரிப்போர்ட் வந்ததும் வீட்டுக்கு போகலாம்.
உனக்கு ஒன்னு தெரியுமா. நீ பிரகனெட் டி. நீ அம்மாவாம். நான் அப்பாவாம். சிரிப்பா இருக்குல்ல… இப்ப வரை நாம அடிச்சிக்கிட்டு சீண்டி சண்டை போடறோம்” என்றவன் அவளிடம் பேசினான்.
“பிளட் வாமிட்டால பேபிக்கு எதுவும் ஆகாதே. ஏன் அப்படி வாந்தி வருது.” என்று கேட்டாள்.
“அதுக்கு தான் குரங்கே ஹாஸ்பிடல்ல இருக்கோம். சொல்லுவாங்க. போன முறை அப்படியே ஓடியதுக்கு டாக்டர் திட்டினாங்க தெரியுமா. அன்னிக்கே ரிப்போர்ட் கரெக்டா தெரிந்தா இந்நேரம் இந்த வாமிட்டை கன்ட்ரோல் பண்ண டேபிளெட் கொடுத்திருப்பாங்க.” என்று தலையில் தட்டினான்.
“போடா…. அன்னிக்கு நான் ப்ரிப்பரா இல்லை.” என்றாள்.
“இன்னிக்கு டி” என்றான் ஆசையாக.
“யா… பெத்துக்க தயார். உனக்கு உன் குழந்தையை பெத்து தர்றேன்..” என்று கூறி மகிழ, ராஜலட்சுமி சரண்யா வந்து காபி வாங்கவா என்று கேட்டு சென்றார்.
“அத்தை… சிரமம் பார்க்காம நீங்களே போங்க. நான் இவளோட இருக்கேன்” என்றான்.
ராஜலட்சுமியோ “அச்சோ சம்பந்திம்மா இருக்கட்டும் நான் போறேன்” என்று சென்றார்.
காபி குடித்த பிறகு, தெம்பு வரவும் ரிஷியும் ஷிவாலியும் வீட்டின் படுக்கையறையில் சண்டை பிடிப்பது போல வாக்கு வாதம் கொண்டு பேசி சிரித்தனர்.
ரிஷி அதற்கு பெரிதாய் நடித்தான். அவன் கண்கள் பயத்தில் தவிப்பது ஷிவாலி அறியாமல் இல்லை. அவளுக்குமே பயம் உடலெங்கும் பரவியிருந்தது. ரிஷியிடம் இப்படி பேசவும் பயத்தை தள்ளி நிறுத்தினாள்.
மணி எட்டுக்கு இட்லி சட்னி என்று எளிதாக ஜீரணமாகும் உணவை வாங்கி உண்டனர். பதினொன்றுக்கு ரிசல்ட் வந்துவிட்டதாகவும் டாக்டர் அழைத்ததாகவும் கூற, ரிஷி நெஞ்சில் படபடவோசையோடு உள்நுழைந்தான்.
“உட்காருங்க ரிஷிவேந்தன்.” என்று நிஷாந்தினி எதிரே இருந்த சேரை சுட்டிக் காட்டினார்.
ரிப்போர்ட்டை எடுத்து பார்த்து கண்ணாடியை கழட்டி, அவங்க கன்சீவா இருக்காங்க. அதோட அவங்க…. அவங்களுக்கு… ஸ்டமக் கேன்சர் வந்திருக்கு. சோ… குழந்தையை கருக்கலைப்பு செய்துட்டு, ஸ்டமக் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கணும். இது ஸ்டாட்டிங் ஸ்டேஜ் என்றதால க்யூர் பண்ணிடலாம்னு ஷிவாலியோட ரிப்போர்ட் பார்த்த டாக்டர் கமலநாதன் சொன்னார்.
பட் குழந்தை வளர்ச்சி இப்ப நல்லதுக்கு இல்லை. அவங்க உடல் அதுக்கு ஒத்துழைக்காது. உடனே அபார்ஷன் பண்ணிட்டு கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கணும்.” என்று கூறினார்.
“நீங்க மறுபடியும் அவ ரிப்போர்டை மாத்தி சொல்லறிங்கனு நினைக்கிறேன். அவளுக்கு ஒன்னுமில்லை. அவ அவளுக்கு ஒன்னுமில்லை.” என்றவன் மேஜையில் குலுங்கி அழுதான்.
“ரிஷிவேந்தன்… இங்க அப்படி எதுவும் நடக்காது. அன்னிக்கு நடந்தது கூட நீங்க பத்து நிமிஷம் இருந்தா க்ளியராகி அனுப்பியிருப்போம்.” என்றதும் அவன் அழுகை வெளியே கேட்க அறையில் அடங்கி அமராது வந்த ஷிவாலி காதில் விழுந்தது.
கதவை திறந்து வந்தவள் “குழந்தை கலைக்காம எதுவும் நடக்காதா? குழந்தை பெற்றுக் கொடுக்காம செத்துடுவேனா?” என்று ரிஷியின் ஆசையை மட்டுமாவது பெற்றெடுக்க ஆசைக்கொண்டது அந்த இளங்குருத்து.
தலையாட்டி மறுப்பு கூறி கண்டிப்பா கருக்கலைப்பு செய்துட்டு உனக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கணும்மா” என்று கறாராக கூறினார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Omg what is this? Unexpected very sad twist. Rishi pavam. Shiv also ready for baby. Very sad sis. Since from the first episode while reading this story it will be very comedy and entertaining but today’s episode is very sad. That too Rishi cant accept this situation. Very intresting sis.
Shiv manasu ipo konjam ellam yosichi mari vanthuchi athukulla intha twist vachitanga sisy pavam avalukume kolanthai mela oru aasai vanthuchi. ipo shiv ena pana pora pakanum