ரி-ஷி-வா-41
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஆளாளுக்கு விஷயம் பரவ, ஹாஸ்பிட்டல் நோக்கி படையெடுத்து வந்தனர்.
ஷிவாலியோ அறைக்குள் நுழைந்தவள் யாரையும் வரவேண்டாமென கூறி தனித்து அமர்ந்திருந்தாள். அருகே யார் சென்றாலும் வெளியே தள்ளி அனுப்பினாள்.
சரண்யாவோ அங்க பாருங்க அவன் துவண்டுட்டான். அந்த பிள்ளை அவனை பார்க்காம ஓடிடுச்சு. என்றதும் கண்ணபிரான் மகன் அருகே வந்து அமர்ந்தார்.
“அப்பா…. அவ இப்ப என்ன சொல்வா தெரியுமா. யாரையும் பார்க்க விடமாட்டா. யாரும் வேண்டாம்னு கத்துவா. என்னிடம் பேசமாட்டா பா.
நீங்க வேண்டுமின்னா பாருங்க என்னிடம் டிவோர்ஸ் வேண்டும்னு சண்டைக்கு நிற்பா. என்னை விட்டு டிவோர்ஸ் வாங்கிட்டு போயிட்டா, நான் எவ பின்னாடியாவது போய் கல்யாணம் பண்ணிப்பேன்னு லூசாட்டும் பேசுவா.” என்றவன் கண்கள் நீரை பொழிந்தது.
சரண்யா வந்து “அழாதே ரிஷி” என்று ஆறுதலாய் தீண்டினார்.
“ம்மா… இவ வானதி மாதிரி இல்லைம்மா… என்னை மொத்தமா அவ சேட்டையில திமிருல அடமானம் வச்சி மூழ்கடிச்சிட்டா நானும் மூழ்கிட்டேன். இப்ப என்னால என்னை மீட்டெடுக்க முடியாது மா. என் குழந்தை போனா போகுது மா. அவ வேண்டும். அவ மட்டும் போதும்” என்று அழுதான்.
சரண்யாவுக்கு என்ன கூறுவதென்று புரியாமல் தவித்தார்.
உள்ளே ஷிவாலி ஆர்ப்பாட்டம் செய்வதும் ராஜலட்சுமி சமாதானம் செய்வதை தான் கேட்க முடிந்தது.
“நான் செத்துடுவேனாமா…” என்று கேட்டுக்கொண்டு இருந்தவளின் குரலை கேட்டு ரிஷிக்கு கோபம் அதிகமானது.
வேகமாக வந்தவன் அடிக்க கை ஓங்கினான். ஆனால் ஏற்கனவே சோர்வாய் இருப்பவளை அடிக்கவும் மனமின்றி, அடிக்க சென்ற கைகளால் அவளை அணைத்து முடித்தான்.
நெஞ்சோடு இறுக அணைத்தவன், “ஏன்டி வார்த்தையால கொல்லற.. பொடிடப்பி… உன்னை அப்படியெல்லாம் தூக்கி கொடுக்க மாட்டேன். ட்ரீட்மெண்ட் பண்ணி க்யூர் பண்ணிடலாம்னு சொல்லிருக்காங்க” என்றான்.
“எனக்கு நம்பிக்கையில்லை ரிஷி. மோஸ்டா கேன்ஸர் வந்தா செத்துடுவாங்க.” என்று கூறிடவும், “ஷிவ்… அப்படியேதும் பேசாதே. நான் உயிரோட செத்து போற மாதிரி இருக்கு. ரொம்ப வலிக்குது… கண்டிப்பா குணப்படுத்திடுவேன். நீ என் உயிர்.” என்றான்.
“நீ என்னோட உயிர்… நீ என் இதயம்… நீ தான் என் வாழ்க்கை. இதெல்லாம் சினிமா வசனமா காதல் பேத்தலா தோன்றியது ரிஷி. ஆனா இப்ப இந்த நொடி நீ பேசறப்ப அந்த காதல் டயலாக், சினிமாட்டிக் என்றெல்லாம் எண்ணி சிரிப்பு வரலை. ஜஸ்ட் வார்த்தை அதுக்கு எத்தனை சக்தி இருக்குனு தோனுது.
என்னால எனக்கு ஒன்னுனா ‘போடா ஹேரு’ அப்படின்னு கடந்துடுவேன். பட் நீ ஆசைப்பட்ட பேபியை கலைக்க சொல்லறாங்களே டா.
ரிஷி… அதை தவிர்க்க முடியாதா?” என்று கேட்டாள்.
“முடியாது மா. ஈவினிங் உனக்கு கருகலைப்பு செய்ய டைம் கொடுத்திருக்காங்க. இங்க அது முடிந்ததும் வேற கேன்ஸர் ரெக்வர் ஹாஸ்பிடல்ல போகணும். இது குழந்தை பேறு மருத்துவமனை” என்று கூறினான்.
ஷிவாலி அமைதியாய் இருந்தாள், “ரிஷி நான் இல்லைனா நீ வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். நீ எனக்கு மட்டும் தான்.” என்று அணைத்ததும், “இது போதும் டி. நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். அதான் ஏற்கனவே ஒரு 2k கிட்டை கல்யாணம் பண்ணிட்டேனே.” என்று நெற்றியில் முட்டினான்.
“ஸ்டமக் கேன்சர் உன்னோட உணவு பழக்க வழக்கத்தால வந்திருக்கு…. ஷிவி நீ மூன்று வருஷம் சாப்பிட்ட புட் எல்லாமே ஸ்லோ பாய்சனா உனக்கு திரும்பியிருக்கு” என்றதும் திகைத்தாள்.
“டாக்டரிடம் கேட்டேன்…
இந்த இந்த காரணத்துக்காக ஸ்டமக் கேன்சர் வரும்னு சொன்னாங்க. பிந்துக்கு கால் செய்தப்ப அவ சொன்ன புட் மெனு எல்லாமே இந்த பாஸ்ட் புட் உலகங்கள் ரசித்து டேஸ்டா இருக்குனு சாப்பிடறது.
பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பரோட்டா, ப்ரைடு ரைஸ், லாலிபாப், லேஸ் குர்குரே, பாக்கெட் ஐயிட்டமா ஜாம் திண்றிருக்க, அதுவும் ஒரு பாக்கெட் ஐயிட்டம் இல்லாம எல்லாத்தையும் எல்லா பிளேவரிலும் சாப்பிடணும் டேஸ்ட் பார்க்கணும்னு…
இதுல கூல்ட்ரிங்கஸ் வேற மாத்தி மாத்தி கணக்கு வழக்கு இல்லாம.
போ ஷிவ்… நீ உன் காலேஜ் டேஸ்ல ஸ்டயிலா சாப்பிட்டு வாழ்ந்ததுக்கு எனக்கு தண்டனையா?” என்று வருந்தினான்.
“சாரி டா… உணவு முறையால இப்படி மாறும்னு நினைக்கலை.” என்று ஷிவாலி அவன் கையை தீண்டினாள்.
“டாக்டர் சொல்லும் போது உன்னை கொல்லணும்னு வெறியே வந்துடுச்சி டி. இப்படியா உடம்பை கெடுத்துப்ப. நாம சாப்பிடற உணவுல கொஞ்சமாவது கவனம் வைக்க மாட்டியா.?” என்று திட்டினான்.
“டேய்.. நானே காலேஜ் ஹாஸ்டல்ல உப்பு இல்லாம காரமில்லாம கல்லு இட்லி கல்லு சப்பாத்தி, உப்பு பசை இப்படி சாப்பிட்டு டேஸ்டா சாப்பிடணும்னு தான் டா ஈஸி குக், டேஸ்ட்டி புட்னு போனேன்.
ஆனா இப்படி எனக்கு சதி பண்ணும்னு யார் கண்டா.” என்றவள் வயிற்றை தடவி, “ஏன் ரிஷி இப்ப பேபி எந்த அளவு வளர்ந்திருக்கும். இப்ப அழிச்சா அதுக்கு வலிக்கும்ல.” என்றதும் ரிஷி திரும்பியவன் கண் கலங்கிவிட்டது.
“லூசே.. அது இன்னும் உருவம் வந்திருக்காது. ஜஸ்ட் ரவுண்டா பால் ஷேப்புல இருக்கலாம். அதை விடு… நீ கன்சீவ் ஆகலை. அப்படின்னு மைண்ட்ல எடுத்துக்கோ. இதை குடி” என்று பருக ஜூஸை தந்தான்.
மணி நான்காக, ஆப்ரேஷன் உடையணிந்து அவளை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லவும் ரிஷி மட்டும் இருந்தான்.
ராஜலட்சுமி-ராமமூர்த்தி, சரண்யா-கண்ணபிரான் என்று நால்வர் மட்டும் இருக்க, மத்தவங்க வரலையா… மனோகரி வந்திருக்குமே. வேதா எப்படி இங்க வராம இருக்கார்.” என்று கேட்டாள்.
“நான் தான் வரவேண்டாம்னு சொல்லிட்டேன். என் ஷிவ் எப்பவும் அழக்கூடாது. அழறவங்களை பார்க்க கூடாது.” என்றதும் ஷிவாலி அழைத்து சென்றவர்கள் அவனை அத்தோடு வரவேண்டாமென கூறிவிட்டார்கள்.
நேரம் நகர சில மணி துளியில் வெளியே அழைத்து வந்ததும், துவண்டு போயிருந்தாள்.
ரிஷிக்கோ அவள் கண் திறக்கும் வரை மீண்டும் அங்கே சரணடைந்து இருந்தான்.
அங்கிருந்து வீட்டிற்கு கூட போகாமல், நேராக கேன்சர் ட்ரீட்மெண்ட் மருத்துவமனைக்கு தான் சென்றார்கள்.
“வீட்டுக்கு போகலையா டா” என்று கேட்க, “நீ சோகமா என் வீட்ல அடியெடுத்து வைக்க கூடாது. இங்கிருந்து க்யூர் ஆனதும் தான் வீட்டுக்கு போறோம்” என்று கூறினான்.
கண்ணபிரான் அங்கு வந்ததும் ரிஷியின் லேப்டாப் முதல் உடைகளை எடுத்து வந்து கொடுத்தார்.
மருத்துவமனையில் தனியாக அவர்களுக்கு ஒரு அறையை கொடுத்து இருந்தனர்.
ஒரு வாரம் உடலை ஆராய்ந்து பலவித டெஸ்ட் எடுத்து, முடித்து சிகிச்சையை மேற்கொண்டனர்.
பெரும்பாலும் ரிஷி கூடவே இருந்தான். வீட்டிலிருந்தே வேலை பார்த்து தருவதாக தன் நிலையை கூறி அதற்கு பர்மிஷன் வாங்கியிருந்தான்.
கடவுள் அருளால் அலுவலகத்தில் அந்தளவு அவனுக்கு ஆதரவு வரவும் ஷிவ் கூடவே இருக்க நேர்ந்தது.
சில நேரம் மட்டும் ராஜலட்சுமி சரண்யா என்று மாறி மாறி தங்க வருவார்கள். அந்த நேரம் எல்லாம் ரிஷி வீட்டுக்கு சென்று வருவான். அது கூட காரணகாரியம் இருந்தது.
மற்றவர்கள் பார்க்க வேண்டாமென தெளிவாய் கூறி விரட்டினான்.
கவிதா சரிகா சந்தியா கூட போராடி பார்த்து ரிஷியின் பிடிவாதத்தால் பார்க்க இயலாது திரும்பி சென்றனர்.
“என் ஷிவ் க்யூராகிட்டு ஸ்டெயிலா வருவா அப்ப பாருங்க” என்று கடிந்து அனுப்பினான்.
வேதாச்சலம் மனோகரி இருவரும் எங்க உசுரு போறதுக்குள்ள எம் பேத்திய பார்க்கணும்யா.” என்று கேட்டதற்கும் “அவ திரும்ப வர்ற வரை உங்க உசிரையும் சேர்த்து பிடிச்சி வையுங்க. அவ வந்தப்பிறகு எந்த ஊருக்கும் போங்க” என்று கண்டிப்பாய் மொழிந்து விட்டான்.
அன்று காலையிலேயே சலூன் கடைக்கு சென்று தலை முடியை வழித்து விட்டு மேலே மறைக்க பெரிய கர்ச்சீப் துணியை கட்டி வந்து நின்றான்.
தரையையே பார்த்து ஷிவ் “இன்னிக்கு என் ஹேர் கட் பண்ணி பால்ட் ஹெட்டா மாத்த போறாங்க. ஆக்சுவலி எனக்கு பெரிய கூந்தல் எல்லாம் இல்லை. பட் இருக்கறதும் போகறப்ப” என்றவளின் பேச்சில் ரிஷி தன்னை அணைக்காமல் இருக்கின்றானே என்று நிமிர, அங்கே தன்னவன் கர்ச்சீப்பை எடுத்து கண்ணடித்து நின்றான்.
“கெட் ரெடி பால்ட் ஹெட் செல்பி.” என்று கேட்டதும் ஷிவாலி சிரித்து விட்டாள்.
“யா… ஐ அம் ரெடி டா. இடியட்…” என்று அவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்.
அதற்கு பின் வந்த நாட்கள் மருந்தும் மாத்திரையும் வலியும் வேதனையும் சரிபங்காய் பகிர்ந்து கொண்டனர்.
நாட்கள் வாரங்களாய்… வாரங்கள் மாதங்களாய்… மாதங்கள் வருடங்களாய் வந்து நின்றது.
“சரிகாவுக்கு பையன் பிறந்துயிருக்கு.” என்று கூறினான்.
ஷிவாலியோ மகிழ்ச்சி அடைந்தாள். போட்டோ காட்டு டா.” என்று கேட்க, நான் போட்டோ எடுக்கலை. நீ நேர்ல சந்திக்கறப்ப பாரு.” என்று மூக்கை நிமிட்டினான்.
“பச் என்னால வளைகாப்பு சிம்பிளா வைச்சிங்களா. பெயர் வைக்கிறதாவது கிராண்டா பண்ண சொல்லுடா.
இந்த சந்தியா அவளும் வளைகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டாளாம். எனக்கு தான் க்யூர் ஆகிட்டு இருக்குல. பிறகென்ன…” என்று அவன் தோளில் சாய்ந்து கேட்டாள்.
“அது அவங்க இஷ்டம். நான் எதுவும் தலையிடறதில்லை.
எல்லாரும் என் மேல கோபமா இருக்காங்க. யாரையும் பார்க்க விடலைனு.” என்று அவள் கை விரல்களினை ஒவ்வொன்றாய் பிரித்து பேசினான்.
“எனக்கும் எல்லாரையும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு ரிஷி.” என்று ஷிவாலி கூறவும் இன்னும் இரண்டு மாசம் போகட்டும்.” என்று கூறி கன்னம் தட்டி பணியை கவனிக்க சென்றான்.
எத்தனை மாசம்…. கேலண்டரே இங்க இல்லை… போனை பிடுங்கிட்ட… கண்ணாடி கூட இல்லை” என்று அழுதவளிடம் “நீ உங்க தாத்தா பாட்டி கூட வீடியோ கால்ல கண்ணீர் கடல்ல மிதக்கறிங்க.
இதுல போனை வச்சி ஸ்டமக் கேன்சரை பற்றி விடாம தேடற.. க்யூர் ஆகுமா ஆகாதா… அதுயிதுனு தேடற. அந்த இமேஜ் பிக்சர் எல்லாம் பார்த்துட்டு அழுவுற, என்னால அதெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க சொல்லறியா. போன் கட் பண்ணாம என்ன பண்ணுவாங்களாம். கொடுக்கற ஹெல்தி புட்ட, பழங்களை, மெடிசன் இதெல்லாம் சாப்பிட்டு என் கூட சண்டை போட வா.” என்று கூறினான்.
“ரிஷி…. நிஜமா எத்தனை மாதம் ஆச்சுனு தெரியலை. நர்ஸை ஒரு தடவை திட்டிட்டடனு அவங்க என்னிடம் பேச கூட யோசிக்கறாங்க.” என்று கரைந்தாள்.
“டாக்டரிடம் கேளு.” என்றான்.
“யாரு அந்த கமலநாதன் டாக்டரா… டேய் அவரு வானதியோட ஹஸ்பெண்ட் தானே.. நீ பேசி பிரெண்டாகி என்னிடம் எதை கேட்டா என்ன பதில் சொல்லணும்னு ஸ்கீரின் பிளே எழுதி கொடுத்தியா… அவர் பேசற டயலாக் நீ எழுதி வாசிக்கிற மாதிரியே பேசிட்டு போறார்.
போதாதுக்கு உன் முன்னால் காதலி ஓவரா தான் என்ன கவனிக்கறா. நேத்து ஏதோ ஹெல்த் ட்ரிங் என்று ஒன்னு கொடுத்தா… உவக்… கசப்பா இருக்கு. ஆலீவ்வேரா ஜூஸாம் டா. ஏன்டா படுத்தி எடுக்கறா..
ஓய்… சைக்கிள் கேப்ல சைட் அடிச்சியா..?” என்று கேட்டாள்.
“வாய்லயே போட்டேன்னா… அவ என்னை பார்த்துட்டு ஒரு நாள் பேசினா. கமலநாதன் என்ட்ரி கொடுக்கவும் பிரெண்ட் என்று அறிமுகப்படுத்தினா. பேசவேண்டிய நிர்பந்தமாச்சு. சைட் அடிக்கிறாங்களாம் சைட்டு.
உன்னை கவனிக்கவே முடியலை” என்று அலுத்து கொண்டான்.
“ஏன்டா வேலை இருக்கறப்பவும் என் பக்கத்துல தான் இருக்க. வேலை முடிச்சதும் என் பெட்ல வந்து உட்கார்ந்துக்குற என்னை நீ கவனிக்கலையா.. ஆமா எவ்ளோ செலவாச்சி… எப்படி மேனேஜ் பண்ணற. எப்படியும் பணம் தண்ணியா செலவாகியிருக்கும். என்ன பண்ணின? அப்பாவிடம் டவுரி வாங்கினியா… தாத்தாகிட்ட கூட சேவிங் இருக்கும். மனோகரி ரெட்டை வடை செயின் எனக்குனு சொல்வாங்க. அதை வாங்கிட்டியா…” என்றதும் “வாயை மூடு வாயாடி” என்று போனை எடுத்து கால் பேசிட்டு வர்றேன் என்று நழுவினான்.
தனியாக வந்தவன் பெருமூச்சை வெளியிட்டு முடித்தான். இந்த பதினொரு மாதம் எப்படி கழித்தான், பணத்தை புரட்டினான் என்று அவனுக்கே தெரியாது. கூடுமானளவு அவன் மெனக்கெட்டது என்னவோ ஷிவாலி முன் முன்பு உருவாடிய அதே முகபாவத்தோடு அவளை சிரிக்க வைத்து அவள் கவனம் எதிலும் வாடாது பார்த்து கொள்ள முயன்றது தான். அது தான் பணத்தை விட இமாலய சாதனையாய் இருந்தது.
இன்னும் ஒரு மாதம் ஷிவாலிக்கு முடி பாய்கட் அளவுக்கு வளர்ந்துவிட்டாள் உறவான உலகிற்கு அவளை மீண்டும் அழைத்து முன்னிருத்தி முடிப்பான். அதற்கான காலத்திற்காக அவனுமே காத்திருந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
இன்னும் ஒரு அத்தியாயத்துடன் நிறைவடையும்.டிசம்பர் 25 அன்று தளத்திலிருந்து கதையை எடுத்திடுவேன். யாராவது ரிவ்யூ போடணும்னா இப்ப போடுங்கப்பா. எடுக்கற நேரம் நோட்டு லிங்க் கேட்பாங்க. அதில்லைனாலும் அமேசான் பிரதிலிபில இருக்கு.

Rishi you are really great da. U too take off ur hair for your shiv. While reading it tears came in.my eyes sis. Really very emotional.episode sis. Cancer patients life is very painful. Shiv u r so.lucky to have Rishi as ur hubby. Really very painful and emotional episode sis. Fantastic narration sis.
Rishi mari oru husband iruntha evlo periya disease um sari aeidum avan pakurathulaye . intha mari time la ippadi oru support than thevai athu shiv ku kedachi iruku realy great shiv very lucky sari aeidum nee palaya mari thirumbi varuva
Sema da Rishi