👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-42 (Final)

90’s பையன் 2k பொண்ணு-42 (Final)

ரி-ஷி-வா-42

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     “ரிஷி… இப்பவாது கண்ணாடி காட்டுடா. என்னை பார்த்தே பல நாள் ஆகுது. அட்லிஸ்ட் போனை கொடு.” என்று அவனை தொல்லை செய்தாள்.

     “இரு டி” நானும் தலைவாறிட்டு இருக்கேன்.” என்றவன் சீப்பை பேண்ட் பேக்கெட்டில் வைத்து விட்டு, அவளை ஒருமுறை முழுமையாய் நோக்கினான்.

    அவளுக்கு பிடித்தது போல ஆங்காங்கே சின்னதாய் கிழிந்த சுவடோடு ஜீனும், லைட் பிங்க் கலர் ஸ்லீவ்லஸ் டாப், பாய் கட் ஹேர்ஸ்டைல், சின்ன பிந்தி, கையில் வாட்ச் மட்டும் கட்டியிருக்க, அவளின் மற்றொரு கையில் சரண்யா கட்டிவிட்ட கருப்பு கயிறு இருந்தது. கழுத்தில் தாலி மட்டும், கம்பள் ரிங் டைப்பில் அணிந்து எழிலோவியமாக நின்று இருந்தாள்.

    என்ன ஆள் மட்டும் சற்று மெலிந்த தேகமாக காட்சி அளித்தாள்.

    அவள் கைகளை நெடுநேரம் நீட்டவும் உணர்வு பெற்று போனை தந்தான்.

   முதலில் முன் பக்க கேமிராவை ஆன் செய்து தன்னை கண்டாள்.

     லேசாக தோற்றப்பொலிவு மாறுபட்டிருந்தாலும் பரவாயில்லை அழகாக தான் இருக்கின்றோமோ என்று தோன்றியது.

    “ஏன் ரிஷி… நான் நடுவுல இப்படி இல்லை தானே. அசிங்கமா இருந்தேனா?” என்று கேட்டு வைத்தாள்.

    “இதுக்கு தான் போனை கூட தரலை. லூசே… போட்டோல பார்த்த தானே. என்ன ஸ்டெயிலா இருக்க தெரியுமா?” என்று செல்பி எடுக்க ஆரம்பித்தான்.

     “ரிஷி… உன்னோட தொப்பை எங்கடா… என்னை கவனிக்கறதுல அதுவா காணாம போச்சா.?” என்று கேட்டாள்.

    “ஆமாடி பொடிடப்பி.” என்று விடைப்பெற கைப்பிடித்து அழைத்து சென்றான்.

    டாக்டர் நர்ஸ் என்று கண்கள் கலங்கி நன்றி கூறி கையெடுத்து கும்பிட்டான்.

     “காட் கிரேஸ் ரிஷி. உன்னோட ஓவர் லவ் தான் நோயை குணப்படுத்தியது.” என்று கமலநாதன் கட்டிப்பிடித்து வழியனுப்பினார்.

     “கொஞ்சம் நல்ல உணவுவகையா வாங்கி சாப்பிடுங்க.” என்று வானதி கூறவும் “ஓகே” என்று தலையாட்டினாள். ஆனால் மறுபக்கமோ வாய் கோணி ‘ரொம்ப தான் காதலன் மேல அக்கறை.’ என்று ரிஷியின் கையை இறுக்கி கொண்டாள்.

      “கார் இல்லையா டா? என்று ஷிவாலி கேட்க, “நோ பேபி. வர்றப்ப என் ஏஞ்சல் எப்படி வந்தாலோ அப்படி தான் போகணும். இந்த கார் வேண்டாம்.” என்று மறுத்தான்.

     நேராக வேறொரு வீட்டிற்கு வந்தான்.

     “நம்ம வீட்டுக்கு போகலையா?” என்று கேட்டு விழித்தாள்.

     “பொடிடப்பி… இது தான் நாம இனி தங்க போற வீடு. த்ரிபிள் பெட்ரூம்… வாடகைக்கு இருக்கோம்.” என்றான்.

    ஷிவாலி திகைத்தவளாய் “உன்னோட புது வீடு?” என்றதற்கு தோளைக் குலுக்கினான்.

      “ரிஷி அப்போ வீட்டை…?” என்று கூற இயலாது விழுங்கினாள்.

     “விற்றுட்டேன் ஷிவ். என்னால பணத்தை புரட்ட முடியலை. மெடிக்கல் செலவு ரொம்ப அதிகமா ஒவ்வொரு நாளும் இருக்க, ஒவ்வொரு தடவையும் கடன் கேட்க உன்னை விட்டு வர முடியுமா?

    அதனால வீட்டை வித்து பணத்தை பேங்க்ல போட்டு கூலா என் ஷிவ் கூடவே இருந்தேன்.

    என்னால உடனே விற்க முடியலை. ஆனாலும் என் பிரெண்ட் வாங்கிட்டான்.” என்று கூறினான்.

     ஷிவாலி கண்களிலிருந்து விழிநீர் வெளிவர, “ஏய் பொடிடப்பி அழாதே டி. என்னோட சேர்ந்து சிரிச்ச மாதிரி வா” என்று கூறவும் கவிதா ஆலம் கரைத்து வந்தனர்.
   
     இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார்கள்.

      “அத்த யூ லுக் கார்ஜியஸ்” என்று வாசுவும், அத்த உனக்கு இந்த ஹர்ஸ்டெயில் சூப்பரா இருக்கு” என்று வருணும் கூறினார்கள்.

   “தேங்க்யூ டியர்ஸ்.” என்று தலை கலைத்து விளையாடினாள்.

     வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் முன் வேதாச்சலம் மனோகரி என்று அணைத்து அழுதார்கள்.

    “தாத்தா… நீ கட்டி வச்ச மாப்பிள்ளை கெத்து தான். என்ன தாங்கு தாங்குனு தாங்கறார்.” என்று வேதாச்சலத்தை கட்டிக்கொண்டாள்.

    வேதாச்சலமோ ரிஷி பேரனை கையெடுத்து கும்பிட்டார்.
  
     மனோகரியோ கழுத்திலிருந்த இரட்டை வடை சங்கிலியை கழட்டி பேத்திக்கு போட்டு அழகு பார்த்து “நீ நூறு வருஷம் இருக்கணும்டா” என்று ஆரத்தழுவினார்.

    ராமமூர்த்தி ராஜலட்சுமியும் மகளை தட்டி “வேண்டாம் வேண்டாம்னு சொன்ன. மாப்பிள்ளை எப்ப டி எப்படில்லாம் பார்த்துக்கிட்டார் டி” என்று கேட்டதும், ஷிவாலி “ம்மா… ஏழு ஜென்மத்துக்கும் ரிஷி வேண்டும்மா. என்ன என்னால அவனுக்கு அவனோட குழந்தை போச்சு” என்று தரையில் அமர்ந்தாள்.

     “இப்ப எதுக்கு அழுவுற.. நல்லா சாப்பிட்டு தெம்பா மாறு. என் தம்பிக்கு குழந்தை பிறக்கும். போனதை பத்தி கவலைப்படாதே. வரும்… என் தம்பிக்கு வாரிசு வரும்” என்று கவிதா கூறவும் “அண்ணி.” என்று அணைத்து கொண்டாள்.

     சரிகாவோ குழந்தையை கையில் கொடுக்க, “இல்லை… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்றவளிடம் “பிடிங்க” என்று திணித்தாள்.

    “இல்லை உங்க அத்தை.?” என்று அவர்கள் திட்டுவார்களோ என்று அஞ்சினாள்.

    “எங்கம்மா பார்வதி தவறிட்டாங்க மா. மச்சானுக்கு சொன்னேன் ஆனா அவரால வரமுடியாதுனு சொல்லிட்டார். பரவாயில்லை… நீ வாங்கு. நான் என்ன சொல்லப் போறேன்” என்று கூறினார் ஹரிஷ்.

      ”சந்தியா ஹரிகரன் ஊர்ல இல்லை. அவர் மலேசியாவுக்கு வேலைக்கு போனார். சந்தியாவையும் அழைச்சிட்டு போனார். அடுத்த ஆறு மாதம் கழித்து தான் லீவு கிடைக்குமாம். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.” என்றதும் பிறகு வீடியோ காலில் பேசிக்கொள் என்று கூற சரியென்றாள்.

    கண்ணபிரானோ பழத்தை பிழிந்து கொடுத்து “இதை குடிம்மா. வந்ததும் குடிக்க யாரும் எதுவும் கொடுக்கலை” என்று நீடடவும் தேங்கஸ் மாமா.” என்று எடுத்து பருகினாள்.

     “அத்..அத்தை எங்க…?” என்று கேட்டு விழித்தாள்.

    அதுவொன்னுமில்லைமா. உங்க இரண்டு பேர்லயும் அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறேன்னு போனா  இதோ வந்துட்டாளே.” என்று கூறினார் கண்ணபிரான்.

    சரண்யாவோ, நேராக இருவர் நெற்றிலும் விபூதி குங்குமம் இட்டு முடித்தார்.

    ஷிவாலியை அணைத்து “என் பையனோட சிரிப்பை அப்படியே கொடுத்திட்ட” என்று கலங்கவும், “அத்த… ரிஷி பொறுமை யாருக்கும் வராது தெரியுமா. நான் என்னல்லாம் பேசியிருக்கேன் அப்படியிருந்தும் ஹீ இஸ் ஸ்வீட்” என்று அவனை பார்த்தாள்.

    “ஓகே ஓகே.. போய் ரெஸ்ட் எடும்மா.” என்று குமாரும் கூறவும் தனியறைக்குள் வந்தார்கள்.

      கதவை தாழிட்டு முடித்த கையோடு ரிஷியின் பின்புறம் வந்து அணைத்தவள் ரிஷி..” என்று உலற, “ஷிவ்… கொஞ்ச நாள் போகட்டும்.” என்று கூற, “வெயிட் பண்ண முடியலை டா. போன உயிரை திரும்ப கொண்டு வந்துடணும் டா” என்று அவள் வயிற்றில் இருந்து குருதியாய் அகற்றிய சிசுவை எண்ணி கூறினாள்.

     “கண்டிப்பா திரும்ப வரும்.” என்று அவளை முன்னே இழுத்து அணைத்து கொண்டான்.

-சுபம்.

  Epilogue….

  After 4 years....

      “அம்மா… பாப்பா… செம கியூட்டா இருக்கு” என்று வாசு கூறவும், “உங்க அத்தையை உறிச்சு வச்சியிருக்கா.. பின்ன அழகா இல்லாமலா.” என்று கவிதா கூறி இந்தா இது பாப்பாவுக்கு கொடுக்கணும் கிப்ட். கையில வச்சியிரு டா” என்று கொடுக்கவும் அதனை வருண் பிடுங்கினான்.

     “அம்மா… பாப்பாவுக்கு நான் தான் கொடுப்பேன்.” என்று வருண் பிடுங்கவும், கவிதா தலையில் கை வைத்து ஆரம்பிச்சிட்டிங்களா டா” என்று நொந்தாள்.

    “எங்க உங்கப்பா… கையில கிப்டை கொடுத்துட்டு போயிட்டார். நான் தானடா அத்தை. எத்தனை வேலையிருக்கு. இதுல உங்க பஞ்சாயத்து வேற” என்று கடுகடுத்தாள்.

    சரிகாவோ பட்டுடுத்தி கையில் ஆதித்யாவை ஏந்தி வந்தாள்.

   அவனுமே வந்ததும் பாப்பா என்று சரிகாவின் கன்னம் தொட்டு நிமிர்த்தி தேடிட, “இருடா… ம்மா.. குழந்தை எங்க?” என்று சரண்யாவிடம் கேட்டாள்.

      “இன்னும் கிளம்பலை. நல்லநேரத்துக்கு கிளம்பணும்னு வெயிட் பண்ணி இப்ப தான் கிளம்பனாங்களாம் வர இன்னும் இருபது நிமிடம் ஆகும்னு சம்பந்தி சொன்னாங்க” என்று கூறினார்.

     ரிஷியோ முழங்கை பட்டனை மாட்டி கொண்டு “எவ்ளோ நேரம் பொடிடப்பி. காலையிலயே வர என்னவாம்.” என்று காதில் போனை வைத்து பொரிந்து தள்ளினான்.

    “ரிஷி… பாட்டி தாத்தா கடைசியா கன்சீவா இருந்தப்ப பிளஸிங் பண்ணி அனுப்பினாங்க. இப்ப இரண்டு பேருமில்லை… நல்ல நேரம் பார்த்து கிளம்ப வேண்டாம்.” என்று கூறினாள்.

    “ஏய் ஷிவ் இது நீ தானாடி… நேரம் காலமெல்லாம் பார்க்கற” என்று கேட்க, “அங்க என்னடா மருமகளிடம் கேலி பண்ணிட்டு இருக்க” என்று கண்ணபிரான் அதட்டினார்.

     “ஒன்னுமில்லைப்பா… இன்னிக்கு டிரஸ் கோட் கேட்டேன்.” என்று சிரிக்க, சரண்யாவோ தோளில் தட்டினார்.

     கல்யாணப் பட்டுயுடுத்தி கையில் ரிஷி விரும்பிய பெண் குழந்தையோடு நடந்து வந்தாள் ஷிவாலி.

    தோள்வரை புரண்ட கூந்தலை ஒதுக்கி சேலையை கூட நளினமாய் உடுத்தி சின்ன சின்ன ப்ளீட்ஸ் வைத்து நடந்து வரவும், “ஷிவ்… நான் க்ளீன் போல்ட்” என்று காதில் கூறி மகளை வாங்கினான்.

    “ரிஷி எங்க வந்து என்ன பேசற” என்று கூடவே நடந்தாள்.

    பார்ட்டி ஹால் மேடை வரை சேர்ந்து வந்து மேடையில் அமர்ந்தனர்.

   கவிதா குழந்தையை வாங்கி அவள் வாங்கிய உடையை அணிந்து வசம்பு கயிறு கருப்பு வெள்ளை மணிகள் என்று கையில் கட்டி கைக்கு தங்க வளையல் அணிவிக்க  சரண்யா இடைக்கொடியை அணிவித்தார்.

    சரிகாவோ வெள்ளி கொலுசொலிகள் அணிவித்து முடித்திட, ராஜலட்சுமி தங்க செயின் போட்டு முடித்தார்.

     “எல்லாரும் ஆளாளுக்கு ஒன்னு போட்டு அழகு பார்த்தா என் செல்லத்துக்கு நான் என்ன போட்டு விட” என்று ரிஷி அங்கலாய்த்தான்.

      “ரிஷி பெயர் வை.” என்று கூற குழந்தையை கையில் வாங்கி ஷிவாலியோடு சேர்த்து, “ரிஷிவா… ரிஷிவா… ரிஷிவா…” என்று மும்முறை குரல் கொடுக்க பொக்கவாய் சிரிப்பில் மகிழ்ச்சியை ஆர்ப்பரித்தாள் ரிஷிவேந்தன்-ஷிவாலியின் தவப்புதல்வி ரிஷிவா.

    “மாமா இது என் கிப்ட்” என்று வருணும் “மாமா என்னோடதை பஸ்ட் வாங்குங்க” என்று வாசுவும் முன் வர இரண்டும் நடுவில் ரிஷிவா கையை தொட்டு பார்த்தான் ஆதித்யா.

    “இப்பவே என் பொண்ணுக்கு போட்டிய பார்த்தியா?” என்றதும் அறிவு கொழுந்தே… குட்டி குழந்தை என்ற கிரேஸ்ல ஆசையா பார்க்கறாங்க. நீ கண்டதையும் மனசுல ஏத்தாதே.” என்று தட்டினாள்.

    பெயரிட்ட பின் விழா முடியும் வரை ரிஷி கைகளிலேயே ரிஷிவா சமர்த்தாய் இருந்து கொண்டாள்.

     வீடு திரும்பியதும் மூன்று பெட்ரூமில் ஒன்றில் ரிஷி-ஷிவாலி ரிஷிவா இருக்க, மற்றவர்கள் அனைவருமே வீட்டில் இருந்தார்கள்.

   வருண் வாசு ஆதித்யா என்று மாறி மாறி அறைக்கு வந்து ஒரே வீட்டில் தொந்தரவாய் இருந்தனர்.

    ஷிவாலிக்கு தன்னால் வீட்டை இழந்து விட்டானே என்ற வருத்தம் இன்றளவு தாக்கியது.

      “ஏய் பொடிடப்பி என்ன தீவிரமா யோசித்துட்டு இருக்க, குழந்தை அழுது பாரு. பீட் பண்ணு” என்று உடை மாற்றியவன் கூற துவங்கினான்.
   
   அதன் பின்னே வருண் வாசு ஆதித்யா இல்லாமல் கதவு தாழிட்டதை கவனித்தாள்.

      “வீட்டை விற்றது இப்ப வரை கவலையா இருக்கு ரிஷி. என்னால தானே… திரும்ப வாங்க முடியாதா?” என்று கேட்டாள்.

     “நான் என்ன சூப்பர் ஹீரோவா மா. கடன் அடைய இன்னும் இரண்டு  வருஷம் ஆகும். உனக்கு மெடிக்கல் முடிஞ்சும் இரண்டு வருடம் மெடிசன் சாப்பிட்டதானே. அப்ப கூட திரும்ப வாங்கறது எல்லாம் முடியாத ஒன்னு.

   எல்லாரும் இருக்கறப்ப தான் இடப்பற்றாகுறை கண்ணுக்கு தெரியுது ஷிவ். அவங்க அவங்க வீட்டுக்கு போனதும் இந்த வீடு நமக்கு போதுமானது தான்.

  நீ ஏன் கவலைப்படுற.” என்றான்.

   “அதான் தெரியுமே.. இரண்டு வருஷம் வீட்டுக்கு வந்தப்பிறகும் மாத்திரையை கொடுத்து முழுங்கு முழுங்குனு டார்ச்சர் பண்ணினியே.

    இப்ப தான் பிஸிகலாவே என்னிடம் பழகற… எப்படி தான் மனசை கட்டுப்படுத்தி காதலிக்க முடியுதோ.” என்று அதிசயமாய் கண்டாள்.

    “சதை மட்டும் தேவைக்காக உன்னை கல்யாணம் பண்ணலை ஷிவ். கைப்பிடிக்கிற பொண்ணோட மனசை மகிழ்ச்சியா வச்சிக்கணும்.” என்றவன் வெளியேற துடிக்க,

    “ரிஷி… நீ இல்லைனா நான் செத்து போயிருப்பேன் டா. உன் அன்பு தான் கவனிப்பு தான் இந்த நிலைக்கு என்னை உயிரோட கொண்டு வந்திருக்கு.”என்று ஷிவாலி கூறினாள்.

    “நான் என் கடமையை செய்தேன் ஷிவ். நீ நினைக்கிற மாதிரி பெரிசா எதுவும் செய்யலை. என் வாழ்க்கை துணைவி நீ உனக்கு யோசித்து கவனிக்காம யாருக்கு செய்து யாரோட வாழ்வேன்.

    இங்க பாரு அக்கா தங்கையோட வளர்ந்ததால கொஞ்சம் கேர்ள்ஸை பொறுமையா ஹாண்டில் பண்ணறேன். அவ்ளோ தான்.” என்று இயல்பாய் நவில்ந்து சென்றான்.

     அவன் சென்றப் பின்னும் எனக்கு நீ சாதரணமா தெரியலை. என்னோட ஆண் தேவதை நீ ரிஷி என்றவள் அவனால் உதித்த குட்டி தேவதைக்கு முத்தமிட்டு கையை வருடி நின்றாள்.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

   ஹாய் பெரும்பாலும் நான் ஒரு கதை சீரியஸா ஒரு கதை ஜஸ்ட் லைக் தட் ஆ இப்படி தான் எழுதுவேன்.

   இந்த கதை காமெடி ட்ரை பண்ண தான் சத்தியமா எழுத ஆரம்பிச்சேன். 90s 2k சண்டையிட்டு தாட்ஸ் டிபரண்ட்ல அடிச்சிக்கிட்டு அழகா அதே சமயம் பொருந்தி போவதாக எழுத நினைச்சேன். எழுதிட்டேன்…

   என்ன கடைசியா ஒரு மெஸேஜ்… உனக்கு இப்ப கருத்து முக்கியமா அப்படின்னு கேட்காதிங்க.

    90′ வாழ்க்கை நிதானம் பொறுமை ரசித்து வாழ்ந்தோம். அடிபட்டு கீழே விழுந்தாலும் பிரெண்ட்ஸ் அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று தாங்க கைகள் வந்துச்சு.

   சின்னதா ஆரேஞ்சு மிட்டாய் என்றாலும் கடிச்சி பகிர்ந்தோம்.
   இளையராஜா முதல் ஏஆர் ரஹ்மான் வரை வரிகளை தாலாட்டி ரசிச்சோம் அதோட வாழ்ந்தோம். 

   பழைய சோறு என்றாலும் ரசித்து தான் ருசிச்சு சாப்பிட்டது.

  இப்படி நிறைய சொல்லலாம்….

   இப்ப இருக்கற 2k தப்பு சொல்ல வரலை. அவங்க லைப் இந்த சூழலுக்கு இப்படி தான் மாறும். அவசரகதி ஏனோ தானோனு சாப்பிட்டு டிரஸ் டிரண்டிங்னு லெக்கின்ஸ் போட்டு அதுக்கு ப்தது டாப் என்று மாறிடறாங்க. சத்தியமா ஸ்கின் கலர் லெக்கின்ஸ் எல்லாம் போட்டுட்டு வர்றப்ப நிஜமா சகிக்கலை. டிரஸ் போட்டுயிருக்காங்களா இல்லையா என்ற எண்ணம் தான் வருது. இது என் பார்வை தப்பு தான். ஆனா பாவமா இருக்கு. எது நாகரீகம் எது காலத்தை பண்பை அழிக்குதுனு தெரியாம ஓடறோம்.
  
   உனக்கு இன்னிக்கு எது சமைக்க என்று என் குழந்தைகளிடம் கேட்டா சட்டுனு நூடுல்ஸ் இதான் வாயில வரும்.

   எத்தனை வீட்ல தினசரி உணவு வகையில பழக்கமாகி உடல் கெடுதோனு கவலை.

    zomato msg அட்ராக்ஷனா வர்றப்ப எல்லாம் அடப்பாவிகளா நீங்க பூனை பிரியாணி நாய் பினியாணி போடறிங்களா.. என்ற கலக்கம் கொண்டு தான் இருக்கு.

   உடையில பண்புல காலமாற்றத்துல கல்சர்ல மாறிடறது தனிதனி மனிதரோட வாழ்க்கை அதுல தலையிட முடியாது.

   சொல்லப்போனா 2k கிட்ஸ் அறிவு நமக்கு இல்லை. எத்தனை விதமான டெக்னாலஜில புகுந்து விளையாடறாங்க. நாம எல்லாம் படிச்சி படிச்ச வேலைக்கு சம்பறம் வாங்க நாயா பேயா அலைஞ்சா. அவங்க அறிவை உபயோகப்படுத்தி எத்தனை ஆன்லைன் சம்பாத்தியம் பார்க்கறாங்க. படிக்கிறப்பவே பணம் ஈட்டும் லாவகம் தெரிந்து வச்சி சொந்த கால்ல நிற்கறாங்க.

   ஆனா உணவு முறை அடித்தளமே ஆட்டம் காணுமே. அதனால தான் அதை இதுல கருத்தா ஏற்றினேன். பேஸ்மேண்ட் ஸ்டாராங்கா இருந்தா தானே அடுத்த அடுத்த தலைமுறை செழிக்கும். உணவு முறையில விஷம் திண்ணு நாற்பது வயசு வரை சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்துட்டா அடுத்த தலைமுறை செழிக்குமா?

இது யார் மனதை புண்படுத்த எழுதின கதை இல்லை. காமெடிக்கு ட்ரை பண்ணி கடைசில ஒரு எபிக் தான் அழ வைக்கிறேன். அழுதிங்களா…😜 நான் அழலை பா.

     இந்த கான்சப்ட் முக்கியமா எழுத இன்னொரு காரணம் இதே போல ஸ்டமக் கேன்சர் வந்து ஒருத்தர் இறந்துட்டார்.

   இத்தனைக்கும் அவருக்கு குடி புகை மது என்ற எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஆனா மாலை ஆனதும் ரோட் சைட் காளான், காலிப்ளவர் ப்ரை, பஜ்ஜி, சமோசா,  என்று தினமும் மாலை வெரைட்டியா வெளி புட் வாங்கி சாப்பிடுவாராம். அதோட பாதிப்பு முத்திய நிலையில் தான் கேன்சர் தெரிய வந்தது. இத்தனைக்கும் ஓய்ப் நர்ஸ் வேற. லட்சங்களில் செலவழித்தும் பயன் தரவில்லை.

    உணவும் உயிரை பறிக்க காத்திருக்கு அதை தான் இந்த காலத்துல அழுத்தமா சொல்லறேன். நிறைய 2k கிட்ஸ் தோற்றம் கண்டு உணவை வெறுக்கறாங்க தெரியுமா. நான் என் மகளை வைத்து சொல்லறேன்  கேழ்வரகு அடை கருப்பா இருக்காம் பிடிக்கலையாம்.  வாயில திணித்து அதட்டி உருட்டி சாப்பிட வைத்த பிறகு பிடிக்குதுனு சொல்லறா. முதல்லயே கலர் பார்த்து மறுக்கறாங்க. சாப்பிட வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது. ரூட்ல்ஸ் வேண்டும்னு அழுச்சாட்டியம் பண்ணி ரீசண்டா கேழ்வரகு வரகு கம்பு நூடுல்ஸ் தேடி பிடிச்சி வாங்கி சமைச்சது எல்லாம் அப்படியாவது மற்ற நவ தானியங்களை சாப்பிட்டு பழகணுமேனு தவிப்பு வருது.

    சுவர் இருந்தால் தானே சித்திரம் பழக முடியும். உடல் இருந்தால் தானே உள்ளம் டாதல் அன்பு பாசம் நேசம் மனிதநேயம் பண்பாடு கலாச்சாரம் பக்தி எல்லாம்… கொண்டு வரமுடியும். ஜஸ்ட் லைக் தட்.

    அவ்ளோ தான் கதை 😉 பை அடுத்த கதையில சந்திப்போம் .

நன்றி
வணக்கம்.
பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-42 (Final)”

  1. Really very feel.good story sis. Comedy also.fantatistic. 90s kids are always awesome sis. U have rightly pointed it. Rishi such a great husband. Shiv you are really a gifted one. That’s why Rishi have given come back for you with lots of struggle. Fast food culture is now fashion. We need to avoid it. Nowadays kids except this only. As a parent we need to educate them. Fantastic story sis. Its a another diamond in your crown sis. Keep rocking sis.

  2. Kalidevi

    Rishi shiv epovum jolly comedy tha poitu irunthuchi but ithula nadula shiv ku ippadi aanathu rishi avala pathukira vitham tha ava noi kuda sari agi iruku oru sila perku tablets la vida love tha udamba sari pannum athu tha Inga nadanthuchi shiv . Ithe mari irukanum rendu perum ethana perku intha mari life kedaikum. Really superb story sisy I like very much
    Congratulations 🎉👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    Neenga sonna ipo iruka pasangala sapda vaikurathukulla pothum pothumnh tha iruku yarum sapadu nallatha pakurathu illa kannuku nalla irukanum tha pakuranga kannala tha sapduranga vaithuku illa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!