ரி-ஷி-வா-9
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஷிவாலி சென்றப்பின் அவளை வைத்து நண்பர்கள் “யார் டா மச்சான் அந்த பொண்ணு? லவ்ஸா டா?” என்று ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்டு விட்டனர்.
பெண் தோழிகளோ, “பிரப்போஸ் பண்ணலாம்னு இருந்தேன். இப்படி ஏமாத்திட்டியே ரிஷி” என்று கேட்டு அவனை நெளிய வைத்தாலும் அவன் அமைதியாய் புன்னகைத்து நழுவி விட்டான்.
ஆனால் அதன் பின் பணிகள் ஓடவில்லை. அவனுக்கு அவளின் நிலையிலிருந்து பாவம் பார்த்தான்.
ஐந்து வருட இடைவெளியே கவிதா அக்காவுக்கும் குமார் மாமாவுக்கும். ஆனாலும் கவிதா திருமணத்தன்று அப்படி அழுதாள்.
சரிகாவுக்கு அதனால் தான் தன்னை விட வயது குறைவான ஹரிஷினை பார்த்தான்.
இன்று ஒன்பது வயது வித்தியாசம் என்று ஷிவாலி கூறும் போது, தன் மீதே அருவருப்பு வந்தது.
அவள் கூறியது போல திருமணத்தை நாகரீகமாக நிறுத்த என்ன வழியென்று ஆராயவே அலுவலகம் முடித்து மாலை வந்ததும் வீட்டின் மாடியில் வந்து அமர்ந்தான்.
ஒரு யோசனையும் வாய்க்கவில்லை. மாறாக இரவு வந்து சேர்ந்தது.
முழுநிலவு கண்டதும் ஷிவாலி முகம் தானாக நினைவு வந்தது.
“எப்படி கல்யாணத்தை நிறுத்த?
இந்த முறை எந்த ஜாதக தடையும் வராது, அதுயிதுனு செலக்ட் ஆகி வந்து நின்று சந்தியாவை பொண்ணு பார்க்க போனா, அவ அழ நான் ஏன்னு கேட்க அவ காதலை சொல்ல, சரி ரொம்ப நல்லவனா அதை அவங்க வீட்டுக்கு புரிய வச்சி இந்த முறையும் மேரேஜ் டிராப்பானா கூட ஒரு லவ்வை சேர்த்து வச்சாச்சுனு மைண்டை சரிப்பண்ணி இருந்தா, அவங்களா சின்ன பொண்ணை கட்டி வைக்கிறேனு ஆசைக்காட்டி இப்ப அவளுக்கும் எனக்கும் 90’s 2k போர் வரும் போலயே.
நான் வேற ரொம்ப திட்டிட்டேன். கொஞ்சம் கூட சாப்டா பேசலை. பாவம் என்னயிருந்தாலும் சின்ன பொண்ணு. டிராவல்ஸ்ல லோகேஷன் போட்டா யார் வேண்டாலும் தூரமாயிருந்தாலும் இடத்துக்கு வந்திடுவாங்க. அப்படியேனாலும் அவளுக்காக அவ தேடி வந்து பேசறது என்ன தப்பு.
அய்யோ.. நான் வேற சூசைட் பண்ணிக்கோனு திட்டிட்டிடேன். ஏதாவது மடத்தனம் பண்ணிட்டா? என்றவன் சட்டென எழுந்தான்.
அவளை எப்படி கான்டெக் பண்ண? அவர் அப்பா நம்பர்ல இருக்கு? என்றவனுக்கு காலையில் அவள் பேசிய போது உங்க அப்பா தான் போன் எடுத்தார் என்ற வார்த்தை நினைவு வர, படிகளில் இரண்டு இரண்டாக தாவி கீழே வீட்டில் தந்தையின் போனை எடுத்தான்.
“என் போன் எதுக்கு டா?” என்று டிவியில் நிகழ்ச்சி பார்த்தபடி கேட்டார்.
“ரகசியம் பா” என்றவன் அவள் வந்த நேரம் கணக்கிட்டு காலையில் ரிஸீவ் ஆனா போன் எண்ணை பார்த்தான். பெரும்பாலும் எண்கள் பெயர் பதிவோடு இருக்க, எண்ணாக இருந்த அழைப்பு பதிவை கண்டான். ஒரே ஒரு எண் மட்டும் நம்பராகவே இருக்க அதை தன் போனிற்கு வாட்சப்பில் அனுப்பி விட்டு தந்தையிடம் இருந்த எண்ணை அழித்தான்.
மாடிக்கு ஓட, “டேய் ரிஷி சாப்பிட்டு போ” என்றதும் போனை கையில் வைத்து தாய் கூறியதும் வேறுவழியின்றி சாப்பிட அமர்ந்தான்.
ஒன்றும் பாதியுமாக சாப்பிட்டு மாடிக்கு சென்றான்.
ட்ரூ காலரில் அவள் பெயரை காண, ‘ஷிவாலி’ என்றிருந்நது.
வேற யாராவது எடுத்துட்டா என்ன பண்ண? என்று கோமாளி படத்தில் வரும் ஜெயம்ரவி போல அஞ்சினான்.
சூசைட் அட்டன் பண்ணிட்டிருந்நா என்ன பண்ணுவ? என்ற குரல் அதிர மனசாட்சி கேட்டதும் தானாக டயல் செய்திருந்தான்.
ரிங் போக இதயத்தில் கை வைத்து காத்திருந்தான்.
“ஹ..லோ..” என்று கொட்டாவி விட்டபடி ஷிவாலி குரல் வரவும் நிம்மதி அடைந்தான்.
“என்ன கல்யாணத்தை நிறுத்திட்டியா?” என்றதும் எழுந்து அமர்ந்தாள்.
சந்தியாவோ “எருமை மாடே விசுக்குனு போர்வையோட எழுந்துக்குற பயந்துட்டேன்.” என்று கத்தவும் போனை மூடி மாடிக்கு ஓடினாள்.
“அடிப்பாவி நீ சூசைட் பண்ணிப்பியோனு பயந்து நான் இங்க சாகறேன். நீ என்னடானா தூங்கிட்டு இருக்க?” என்று கத்தவும், “டேய்… நான் ஏன்டா சூசைட் பண்ணணும். கல்யாணம் ஆனா உன்னை மர்டர் பண்ணறேன். நீ செத்து போ” என்று கூறினாள்.
‘அது சரி இந்த அம்மி கல்லு ஆட்டுகல்லு இதெல்லாம் தெரியாது போல, இல்லை அம்மிகல்லை தலையில போட்டு சாவடிப்பேன்னு சொல்லிருப்பா’ என்று முனங்கியவன் போனில், “உன்னை கல்யாணம் பண்ணினாலே நான் டெத்து தான். இதுல தனியா வேற மர்டரா? ஆமா சாப்பிட்டியா? இல்லை என் நினைப்புல பட்டினியா இருக்கியா” என்று கேட்டு மாடியிலிருந்த ரோஜாவை பறிக்காது நுகர்ந்தான்.
“சாப்பிடாம இருந்தா உனக்காக என்று ஆகிடாது. இப்ப தான் முட்டை தோசை இரண்டு சாப்பிட்டேன்.” என்று பறைச்சாற்றினாள்.
“ம்ம்.. ஒழுங்கா சாப்பிட்டு கல்யாணத்தை நிறுத்த பாரு. இல்லை என்னிடம் சிக்கிட்டு அல்லல்படுவ” என்றதும், “ஸ்ஆ..” என்று கத்தல் ஷிவாலியிடமிருந்து வந்தது.
“ஏய் என்னாச்சு?” என்று இங்கு அவன் பதறினான்.
“செடியோட முள் குத்திடுச்சு” என்று குழந்தை போல சிணுங்கினாள்.
“ஆமா… எல்லாம் முட்செடியா வச்சா… ஏதாவது அழகா கண்ணுக்கு குளிர்ச்சியா ரோஜா… மல்லி… முல்லை… இப்படி வைக்கணும்” என்று ராகத்தோடு பேசினான்.
அவன் பேசும் போதே அங்கிருந்த செடியில் மலர்ந்த பூக்களின் வாசம் பிடித்தான்.
“அதுக்கு பேரு cactus. அதுவும் வெரட்டியா பூக்கும்” என்றாள். தான் இல்லாத காலத்திலும் வீட்டில் வளர்க்க பார்த்து பார்த்து வாங்கினாள். துணி காயப்போடும் நேரம் ஒரு மக் அளவு நீரை எடுத்து வந்து ஊற்றினாளே போதுமென அன்னையிடம் கூறினாள்.
“cactus னா முட்செடி தான முட்டாளே. அதெல்லாம் வளர்ப்பாங்களா?” என்று கேட்டான்.
“நான் எது வளர்க்கணும் வளர்க்க கூடாதுனு நீ சொல்ல கூடாது.” என்று காரமாக மொழிந்தாள். பேச்சு வாக்கில் முட்டாளென்றானே.
“நான் சொல்ல மாட்டேன். கையை கீறி ரத்தம் வரட்டும்.
நான் கூட கல்யாணத்தை நிறுத்த மாடில இருந்து ஜம் பண்ண ரெடியாகி இடிச்சிக்கிட்டியோனு நினைச்சேன்.” என்று சிரித்தான் ரிஷிவேந்தன்.
உன்னை தான் டா பிடிச்சி தள்ளணும்’ என்று முணங்கியவள் யாரோ வரும் அரவம் கேட்க, “அச்சோ அப்பானு நினைக்கேன்” என்று படக்கென்று கத்தரித்து விட்டாள்.
ஆனால் வந்தது சந்தியா என்றதும் ‘அச்சோ கட் பண்ணிட்டேனே’ என்பது போல போனை கவனித்தாள்.
“யார் கூட டி அரை மணி நேரமா பேசிட்டு இருக்க, தூக்கத்துல இருந்து எழுந்து ஓடினியேனு நானும் பயந்துட்டு அங்கயே இருக்கேன். நீ இப்ப வருவ அப்ப வருவனு நான் முழிச்சிட்டு இருந்தா அரைமணி நேரம்… போன்ல யாரு?” என்று கேட்டாள்.
“என் பிரெண்ட்” என்று பதில் தந்து கீழே இறங்கினாள்.
அக்கா தூங்கும் நேரம் பார்க்க நேரலாமென அவள் பாத்ரூம் அறைக்கதவை பார்த்தவாறு பெயரை பதிய வைத்தாள்.
அதுவோ ‘Rishi’ என்ற சொல் டைப் செய்யும் நேரம் போன் ஸ்லீப்பிங் மோட் போக லாக் எடுத்து விட்டு ‘Vendhan’ என்று பதிவு செய்தாள்.
அச்சோ ரிஷி கட்டாகிடுச்சு?’ என்று எண்ண அவள் அக்கா டாய்லெட் ப்ளஸ் செய்யும் ஓசை கேட்டதும் ரிசீவ்டு கால் அழைப்பில் டெலிட் செய்து முடித்தாள்.
லாக் போட்டு வைத்து விட்டு உறங்கினாலும் ஷிவாலி பேயுக்கு இதுவொரு பழக்கம். கதவு திறக்கும் நேரம் உறங்குவதாக நடித்தாள்.
சந்தியா அருகே வந்து படுத்து போர்த்தி கொள்ளவும், ஸப்பா… என்று எண்ணி படுத்துக் கொண்டாள்.
ரிஷியோ தனியாக அவளிடம் பேசியதை அதுவும் அரைமணி நேரம் பேசியதை எண்ணி வியந்து போனை தூக்கி போட்டு பிடித்தான்.
அதன் பிறகு கீழிறங்கி வர அன்னை தந்தை இருவரும் உறங்க சென்றதை அறிந்தான்.
தனியாக சத்தமின்றி உள்ளே வந்து படுத்து கொண்டான்.
பச்.. சந்தியா போட்டோ வீட்ல இருக்கு. அவ போட்டோ இல்லையே” என்று சோஷியல் மீடியாவில் ஒர் அலசு அலசினான். எங்கும் அவளின் புகைப்படம் சிக்கவில்லை.
சோர்வாக அவளின் கல்லூரி பெயரை போட்டு அந்த கல்லூரியின் வெப்சைட்டுக்குள் சென்றான். அதில் ஒவ்வொன்றாய் பார்வையிட்டான்.
அவனுக்கு அதிகம் சிரமம் தராமல் பேஸ்கட்பால் வென்ற டீமில் அவளின் புகைப்படம் இருந்தது.
அதை அப்படியே டவுண்லோட் செய்து போனில் க்ராப்(crop) செய்தான். அவள் மட்டும் தெரிந்ததும், “பார்த்தியா… போட்டோ எடுத்துட்டேன்” என்று கெத்தாக கூறிக் கொண்டான்.
-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super both are tom and jerry couples. Intresting sis.
inum unga alaparai start agala athukullave ippadi start panathuku apram ena la panuvinglo
Super