ரி-ஷி-வா-13
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மூன்று நாட்களாக காதில் பஞ்சை அடைக்காத குறையாக ரிஷிவேந்தன் சுற்றிக் கொண்டிருந்தான்.
அன்று திருமண உடை வாங்கி காரில் ஏறியதிலிருந்து வீட்டுக்கு வந்தப்பின், தந்தையிடம், போனில் குமாரிடம் என்று பலமுறை கவிதா பிரசங்கம் பண்ணிவிட்டாள்.
‘கடைக்கு போனதும் வாங்க எப்படியிருக்கிங்கனு ஒரு விசாரிப்பு இல்லை, கல்யாணப் பொண்ணா லட்சணமா ஒரு சேலை வேண்டாம் வேண்டாம் சுடிதாராவது போட்டு வரலாம் அதுவும் இல்லை.
போதாதுக்கு தேமேனு போனை நோண்டிட்டு இருக்கு. கல்யாணப்புடவை எடுக்க கூட ஆர்வமா கலந்துக்கலை. யாருக்கோ கல்யாணம் என்று நிற்குது. இதுல இருபதாயிரத்துக்கு புடவை, அதை பிரிச்சாவது பார்த்தாளா?
சரி அதை விடு அம்மா பக்கத்துல போய் உட்கார்ந்தாங்களே வாய் நிறைய அத்த கித்தனு கூப்பிட்டாளா? ஒன்னுக்கு இரண்டு நாத்தனார் ஆனா எங்களிடம் பேசினாளா.
ஆனா பாரு ரிஷிகிட்ட மட்டும் என்ன ஒரு பேச்சு. எம்புட்டு நேரம்.’ என்றதை தான் ரிஷியால் தாங்கயிலவில்லை. அங்கு என்ன பேச்சு ஓடியதென்று அறிந்தால் கவிதா அக்கா வாயை திறக்க மாட்டாள்.
‘ஏன் காபி டீ குடிக்க மாட்டாளா? ஃபலூடா குடிக்க தனியா ரிஷியை தள்ளிட்டு போயிட்டா.’ என்ற பேச்சிற்கு சத்தமில்லாமல் சிரித்து விட்டான்.
ஃபலூடா கேட்டப்பின் தான் தனியாக சேர் அதற்கு என்று ஷிவாலி விழித்தாள். அங்கு போய் சின்னதாக சுமூகமான பேச்சாக இருந்திருக்கலாம். அப்படியொன்றும் காதல் பேத்தலை பேசிடவில்லை. எல்லாமே திருமணத்தை நிறுத்தேன் என்று மன்றாடலே. அவள் நிறுத்து என்றால இவன் முடியாதென்ற மன்றாடல் இரண்டும் அறிந்தால் திருமண உடையெடுக்க யாருமே வந்திருக்க மாட்டார்கள் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இங்கு எப்படி கவிதா ஷிவாலியை திட்டியபடி புலம்பினாளோ அங்கே மனோகரியும், ராமமூர்த்தியும் ரிஷியை மூன்று நாளாக புகழ்ந்து தள்ளினார்கள்.
என்னவொரு பண்பு, அக்கா தங்கையோட எண்ணத்துக்கு மதிப்பு தந்து புடவை பிடிச்சிருந்தா எடுக்கா. விலையை பார்க்காதே என்றான்.
வாசு வருண் இருவரையும் அழைத்து அவர்களுக்கு பிடித்தது போல எடுத்து வந்தானே. நேரமும் குறைவாக முடிவெடுத்து நல்ல உடையும் தேர்ந்தெடுத்து நடுவில் ஹரிகரனின் தங்கை குழந்தையையும் வாங்கி பிஸ்கேட் கொடுத்து தட்டி கொடுத்து உறங்க வைத்தான்.
ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டே வருண் வாசுவை ஒரமாக அமரவைத்து போனில் மூளைக்கு வேலை தரும் பஸில் கேமை இருவரும் சேர்ந்து விளையாட வைத்து கவனித்தான்.
நம்ம ஷிவாலிக்கு ஏற்ற சாய்ஸ்.” என்று புலம்பிக் கொண்டிருக்க, ஷிவாலியோ ரிஷியை போல யோசிக்கவில்லை. நிஜமாகவே பஞ்சை எடுத்து காதில் திணித்து கொண்டாள்.
ஆனால் உள்ளமோ போனில் அவன் தன்னை நூல் விடுகின்றானா என்றே பார்த்திருக்க, அவனோ அவன் பாட்டிற்கு இருந்ததை கண்டு, “பெரிய அப்பாடக்கரு தடிமாடு மேல வந்து மோதியதை யாரும் பார்க்கலையா. மோதின வேகத்தை பார்த்தா தெரிந்திருக்கும் இதே வேறயாராவது இருந்தா அடிதடி ரகளையாகியிருக்கும்.” என்று முணங்கினாள்.
மனசாட்சியோ ‘நீதானே போன்ல பார்த்துட்டே அவனை மோதின’ என்ற கேள்விக்கு ‘ஏன் நான் மோத வந்தா மோதிடுவானா. ஏன் விலகியிருக்க வேண்டியது தானே. இதே வேறயொருத்தி இப்படி வந்து மோதினா கூட அப்படி தான் நடந்திருக்குமா.? என்று அவனை குற்றம் சாட்ட காரணம் தேடினாள்.
இந்த இடைப்பட்ட நாளில் பத்திரிக்கை வந்துவிட அதனை சொந்த பந்தங்களுக்கு கொடுத்து திருமண அழைப்பை தொடுத்தனர்.
கண்ணபிரான் சரண்யா ஒருபக்கம் வீட்டை பூட்டி விட்டு முழு மூச்சாக பத்திரிக்கை வைக்க ஆட்டோ ஒன்றை பேசி ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பேசி பத்திரிக்கை வைக்க துவங்கினார்கள்.
ராமமூர்த்தியும் ராஜலட்சுமியும் அதே போல சுழன்றனர். நெருங்கிய உறவினர்களுக்கும் அதுவும் பயணம் குறைவாக இருப்பவரின் வீட்டிற்கு வேதாச்சலம் மனோகரி மகன் மருமகளோடு வைக்க சென்றார்கள்.
ஹரிகரனோ சந்தியாவை பார்க்க வந்தால் நந்தியாக ஷிவாலி இருப்பாள். சுஜாதா கயல்விழி ஊருக்கு சென்று அங்கே பத்திரிக்கை வைக்க ஆயத்தமானார்கள்.
சந்தியாவுக்கு மனதிற்குள் சிறுவருத்தம் இருந்தது. ரிஷிவேந்தனை போல தங்கள் வீட்டில் ஹரிகரனை பேசபடவில்லையென.
அது எதனாலென ஒரு நாள் கேட்டு விட்டாள்.
எதிர்ல இருக்கார் பொண்ணு பார்க்க உன்னை விட்டுட்டு மாடில நின்றது வேதாச்சலத்துக்கு உகந்தததாக தெரியவில்லை. ராமமூர்த்தி மறுத்தாலென்ன, இங்க வீடு தேடி வந்து ஓரெட்டு பேசியிருக்கலாம் என்பது ஒரு கோபம். அவர் மட்டும் அப்படி இருந்தால் ரிஷியை அழைத்திருக்காது தவிர்த்திருக்கலாம். கெட்டதிலும் ஒரு நல்லது ரிஷி சின்ன பேத்திக்கு அதிர்ஷ்டம் என்றார்.
இதுல சுஜாதாவோட பேச்சு மனசுக்கு உகந்ததா இல்லை. அவரோட கணவர் முத்துராமன் எதுக்கும் வாய் திறக்க மாட்டார் போல’ என்று பட்டியலை அடுக்கினார்கள்.
இதில் வீடு பார்க்க கூறினால் இங்கு போலவே பேச்சுலர் வீட்டை பிடித்து அட்வான்ஸ் தந்துவிட்டு பிறகு மனோகரி சென்று அட்வான்ஸை திரும்ப வாங்கி தனி வீடு ஒரு குடும்பம் தங்குற மாதிரி பாருங்க என்று ஆலோசனை தந்த பின்னே ஹரிகரன் மண்டையை ஆட்டியது.
தங்கை குழந்தையை தூக்காமல் யாரோ என்று கவனிப்பது. அழுதால் விட்டு விடுவோமா. இரண்டு முறை அழுது மூன்றாம் முறை பழகிட போகின்றாள் என்ற குற்றப்பத்திரிக்கை கேட்டு சந்தியாவிற்கே ஆட்டோ காசு கொடுக்காமல் உடையை எடுத்து வீட்டுக்கு சென்றானே இதுவேறு தெரிந்தால் இன்னும் பேசுவார்கள் என்று அமைதியானாள்.
நல்லவேளை ராமமூர்த்தி அவங்க அவங்க டேபிளை அவங்க அவங்க கொடுக்கட்டும். என்று ரிஷியிடம் கூறிட உணவு உண்ணும் நேரம் புது பிரச்சனை வரவில்லை என்றிருந்தது சந்தியாவிற்கு.
எப்படியும் படிப்பிலிருந்து மதிப்பு மரியாதை ரிஷிக்கு செல்வதை கண்டு வருத்தம் தான். ஹரிகரன் எல்லாம் தானாக அமைய அதற்கேற்றவாறு நடக்க வேண்டுமல்லவா? சுஜாதா கூறினார் என்று ராமமூர்த்தி வரும் நேரம் எல்லாம் தேனெனாவட்டாக அமர்ந்தவாறே இருக்க சொல்லிட சந்தியாவால் இதற்கு மேல் எதையும் வாதிட முடியவில்லை.
ஷிவாலி தான் “மனோ….கரி…” என்று பாகுபலி பாடலை போல இழுக்க, “என்ன டி பாட்டு வடிவுல கூப்பிடுற? என்ன காரியம் ஆகணும்” என்று கேட்டார்.
“தாத்தாவுக்கு தான் இப்ப உடம்பு பெட்டரா இருக்கே. என் கல்யாணம் அவசரமா?” என்று கேட்டாள்.
“அடியேய்… பத்திரிக்கை என்ன சந்தியாவோடது மட்டும் வைக்க போனானா உங்க அப்பன். உன்னோடதும் தான் எடுத்துட்டு போனான்.
இப்ப வந்து ஏதாவது பேசின. நான் அப்பறம் மனோகரியா இருக்க மாட்டேன். நம்ம குலதெய்வ தேவி பத்ரகாளி அம்மாவா மாறிடுவேன் பார்த்துக்கோ.” என்று செல்ல மிரட்டலை விடுத்தார்.
அதன்பின் ஷிவாலி மீண்டும் மௌவுனராகம் வாசித்தாள்.
ஹரிகரன் பால் காய்ச்சி வீடு மாறினான். ஹால் பெட்ரூம் பாத்ரூம் கிச்சன் என்று கணகச்சிதமாக இருந்தது.
இருவருக்கு தாராளம் என்றாலும் தாய் தந்தை தங்கை என்று வந்தால் சற்று கடினம் தான்.
அதற்கடுத்த ஒருவாரம் கழித்து ரிஷிவேந்தன் ஆல்ட்ரேஷன் செய்து வாங்கிய புது வீட்டில் பெயிண்ட் வேலை இத்யாதி அனைத்தும் முடிந்து பால் காய்ச்ச நாள் குறித்தார்கள்.
ஷிவாலியை தவிர மற்ற அனைவரும் ரிஷிவேந்தனின் புது இல்லத்திற்கு வந்தனர். ஹரிகரனையும் அழைத்திருந்தார்கள்.
“கீழே அம்மா அப்பா இருப்பாங்க தாத்தா. இரண்டு ரூம் அக்கா தங்கை வந்தா கூட சரியா இருக்கும். மேல நானும் ஷிவ்…ஷிவாலியும்” என்றான்.
கல்யாணத்தன்று ஓடிவிட்டால்? என்ற எண்ணம் அப்பொழுதும் மோதியது.
“ரொம்ப நல்லாயிருக்கு. கீழே ஒரு அறை அட்டாச் பாத்ரும் மற்றொரு அறை கவிதா சரிகா வந்தால் தங்க, ஹால் ஒரு பால்கனி மற்றொரு பாத்ரூம் என்று அடங்க கிச்சன் இருந்தது. அதே போல மேல அமைப்பு இருந்தது.
“லோன் எவ்ளோ வாங்கினிங்க? எவ்ளோ கடன்?” என்று ஹரி கேட்க, “இல்லை ஹரிகரன் லோன் மட்டும் தான் கடன் வாங்க அப்பா ப்ரிய படலை.” என்று கூறினான்.
மேலே அறைகள் காலியாக காட்சியளித்து. “ஷிவாலி எப்படி லைக் பண்ணுவான்னு தெரிந்தா அப்படி ரூமை அமைச்சிடலாம்னு எதுவும் வாங்கலை. அநேகமா அவ வருவதற்குள் வாங்கிடுவேன்” என்று கூற ராமமூர்த்தியோ கண்ணபிராணிடம் பேச சென்றிட வேதாச்சலத்திடம் ஷிவாலி எப்படி விரும்புவா தாத்தா? அவளும் நானும் செட்டாக மாட்டோம். நீங்க ஏன் என்னை கோர்த்து விடறிங்கனு தெரியலை.” என்று கேட்டு வந்தான்.
என்னைய விட மனோகரியிடம் கேளு. எந்நேரமும் அவளோட மடில தான் படுத்து போன்ல ஏதோ குதிச்சு குதிச்சு விளையாடுவா” என்று கூறவும் மனோகரி கூற கூற மனதிலேயே தன்னை கட்டிக்க மாட்டேன் என்பவளுக்கு என்ன வாங்க ஏது வாங்க என்ற பட்டியலை மனனம் செய்தான்.
கவிதா சரிகா தத்தமது கணவரிடம் பாருங்க என் தம்பியை” என்று பெருமை பட்டு கொண்டனர்.
ஹரிஷோ சற்று பொருமலாக மாறி எழுந்து சென்றான். சரிகாவோ எழுந்து சமாதானம் செய்ய ஓடினாள்.
ரிஷியோ வீட்டை போட்டோ எடுத்து ஷிவாலிக்கு அனுப்பினான்.
“யார்டா நீ.” என்று அனுப்ப, கமுக்கமாய் தனியாக வந்து போனை போட்டான். அவளோ தொடர்ச்சியாக கத்தரித்தாள்.
அடுத்த மாதம் திருமணம் இவ என்ன போனை அட்டன் பண்ண மாற்றா? ‘எனக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதா?’ என்பது போல விழித்து நின்றான் நாயகன் ரிஷிவேந்தன்.
-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Rishi really you are pavam. Intresting sis