Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-24

உன்னில் தொலைந்தேன்-24

💟24
                                       அழகாக நாட்கள் வானவில்லாக மலர்ந்தது.
                               குளிக்க செல்ல எழுந்தவனுக்கு அவளே டவலை நீட்டி முன் வந்தாள். மெல்ல அவளையே பார்த்து கொண்டே குளிக்க சென்றவன் திரும்பி வந்த போது, அவன் உடுத்த சட்டையை எடுத்து ரெடியாக வைத்து இருந்தாள்.


       தனக்கு அவள் திடீர் பணிவிடை செய்வது புரிந்தாலும் அமைதியாக அதை ஏற்று கொண்டான்.
         அவனுக்காக பருப்பு பாயசம் சுவையாக செய்து குடிக்க கொடுக்க வாங்கி பருகியவன் அதன் சுவையில் அவளை அப்படியே பார்த்தபடி குடித்தும் முடித்தான். ‘ராட்ஷசி இவ்ளோ ருசியா பாயசம் பண்ணி இருக்கா, வேண்டும் என்றே இத்தனை நாள் பழி வாங்கி இருக்காளே’ என எண்ணி முடிக்க,
     ”இன்னிக்கு சீக்கரம் வர முடியுமாங்க” என மரியாதையுடன் முடித்து கேள்வி கேட்க, சட்டென புருவம் உயர்த்தியவன் அவளின் மரியாதையை கண்டு உள்ளூர சிரித்தாலும் காட்டி கொள்ளாமல் ”ட்ரை பண்றேன்” என நகர்ந்தான்.


                                              அவனுக்கு இன்னும் ஏதேனும் நல்லது செய்யவேண்டும் என துடிக்க என்ன செய்ய என்ன செய்ய என யோசிக்க துவங்கினாள்.
                               அப்பொழுது தான் அவனின் கனவு ஒரு முறையேனும் பாரஸ்ட் சென்று வில்லியமிடம் பணிப்புரிய வேண்டும் என்ற கனவு நினைவு வந்தது அதற்கு தானாக ஒரு ரெசியும் பார்ம் ரெடி செய்து வில்லியமிற்கு போஸ்ட் செய்தாள்.


                           அதற்கு அழைப்பு வந்தால் மட்டுமே ப்ரஜனிடம் தெரிவிக்கலாம் என எண்ணினாள். இல்லை என்றால் விட்டு விடலாம் என முடிவு செய்தாள். அவனுக்கு ஏமாற்றம் இருக்காது என்று.
               அன்று இரவு அவனுக்காக பார்த்து பார்த்து உணவு தயாரித்து அவளே பரிமாறினாள். பவானியும் ராஜனும் எலியும் பூனையுமா இருந்த ஜோடி லவ் பேர்ட்ஸ் ஆகா இருப்பதை எண்ணி மனதில் சந்தோஷத்துடன் பூரித்து போனார்கள். அவர்கள் எண்ணியதும் அது தானே.


                                                                 அதிகாலை வேளையில் எழுந்தவனுக்கு அவன் இன்று என்ன ஆடை உடைத்த என்று யோசித்து எடுத்து பார்க்கும் போதெல்லாம் அவளை அள்ளி கொள்ள துடித்தான்.
                           என்ன இவள் எனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்கின்றாள். அவள் அப்பா அம்மாவை அன்பை காட்டுவதில் இருந்து என்னை விரும்புகின்றாளா சே சே அவ என்னை போலவே முதலில் இருந்தே விரும்பி இருக்கலாம் என்று மனச்சாட்சி எடுத்துரைக்க… இப்ப என்ன நினைச்சேன் என்னை போலவே வா? அப்படி என்றால் எனக்கும் அவள் மீது பார்த்த நொடி முதலாகவா…?!


                        அப்படி தான் இருக்கும் இல்லை என்றால் அவள் அழகில் மெய் மறந்து இருக்க மாட்டேன் அவளுக்கு காதலன் இருக்கின்றானா என ஆராய்ந்து இருக்க மாட்டேன். ஆம் நானும் அவளை ரசிக்க இது தான் காரணம் என்றே ஏதோ கண்டு பிடித்த மகிழ்வில் திளைத்தான்.
                  இப்பவே போய் சொல்லிவிடலாமா வேண்டாம் வேண்டாம் ஆபீஸ் போய் ஏதாவது யோசிச்சு வாங்கிட்டு வருவோம் என சென்றான்.


           அலுவலகத்தில் என்ன வாங்க என யோசித்தவனின் மண்டையில் நகை உடை என்று தோன்றினாலும் உடை நம்ம கடையிலே இருக்கு… நகை..? அவளுக்கு தான் நகை இன்ட்ரெஸ்ட் எதுவுமே இல்லை… என கடுப்படிந்தவன் யோசிக்க யோசிக்க யோசனை உதித்தது. போன் செய்து வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல டிக்கெட் வாங்கினான். அப்படியே வீட்டுக்கு புறப்பட்டான்.


                                                      கைகளில் பெரிய பூங்கோத்துடன் நுழைந்தவன் தன் தாய் பவானி உறங்குவதை கண்டு மெல்ல மெல்ல மாடிக்கு ஏறி தனது அறைக்கு சென்று பார்க்க அவனை வெற்று அறையே வரவேற்றன.
                        மாடியில் மற்ற அறையிலும் தேடிப் பார்க்க காலியாக இருந்ததே தவிர லத்திகா இல்லை.
                     ஆசையோடு வந்தவனுக்கு அவள் இல்லை என்ற கடுப்பே வந்தது. எங்க போய் இருப்பா? என யோசித்தவன் பணி ஆட்களிடம் கேட்கவும் ‘தெரியவில்லை’ என்ற பதில் கிட்டியது.
               அவளின் போனிற்கு கால் செய்ய, அதுவோ ‘சுவிட்ச் ஆப்’ என வந்தது.


              பவானி எழுந்து வந்து ”என்ன பிருத்வி” என்று கேட்க ”லத்திகா எங்கே ம்மா” என கேட்டான்.
          அவர்களுக்கும் தெரியவில்லை என்று சொன்னதும் லத்திகா அம்மாவீட்டிற்கு போன் செய்தான். அங்கும் அவளை பற்றி நலன் விசாரிக்க அவள் அங்கு செல்லவில்லை என அறிந்தவன் வேறு எதுவும் கேட்காமல் போனை வைக்க சென்றான் ஆனால் அது கட் ஆகாமல் இருக்க
        ”எங்க தான் போனால் சொல்லாமல்” என்று சோபாவில் வீசி ஏறிய அது பாட்டரி தனியாக வந்து விழுந்தது.


               ஆசை ஆசையாக வந்தவனுக்கு அவள் இல்லை என்ற எரிச்சல் ஏற்பட்டது.
                                      அந்த நேரம் பார்த்து தான் காலிங்பெல் ஓசை கேட்டது. அவளாக இருக்கும் என கதவை திறந்தவனுக்கு அவன் பெயரை தாங்கிய லெட்டர் மட்டுமே வந்தது.
                  வாங்கி பார்த்தவனுக்கு ஆச்சரியம் இதுக்கு தான் விண்ணப்பமே போடவில்லையே எப்படி வில்லியமிடமிருந்து கடிதம் அதுவும் வேலையில் சேர்ந்து விட்டதாக என யோசிக்க அவன் வசம் அவனே இல்லாது இருக்க, கையில்இனிப்பு பெட்டியோடு லத்திகா ஆட்டோவில் இருந்து இறங்கினாள்.


             சோபாவில் அமர்ந்து இருந்தவன் எழுந்து அவளிடம் அதை நீட்ட,
     ”ஓ வந்துடுச்சா” என ஆவலாக கேட்டாள்.
     ”நீ தான் அனுப்பினியா? ” என்றான். 
     ”ம்… ஆமாம் உங்க அம்….. ”
     ”சே… போடி” என முகத்தில் விட்டறிந்து மாடிக்கு சென்றான்.


                    ஓரளவு பவானி ஏதோ சண்டை என புரிந்த காரணத்தால் ”ஏன் லத்திகா எங்க போன? போ போய் முதலில் சமாதானம் பண்ணு” என சொல்லவும், மாடிக்கு விரைந்தாள் லத்திகா.

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *