💟28
வளைகாப்பு நிகழும் ஒன்பதாம் மாதமும் வந்து நின்றன. ப்ரஜன் பார்க்க முடியாத இந்த கோலம் எதுக்கு? வேண்டாம் என்று மறுத்தாலும் அவன் புகைப்படத்திலாவது காண வைப்பதற்கு என்று ஒருவாறாக அவளை தேற்றி வளைகாப்பிற்கு நாள் குறித்தார்கள்.
அதையும் ப்ரஜனுக்கு மெயிலில் அனுப்பினாள். ‘ப்ரஜன் நீ பார்க்க ஆசைப்பட்ட கோலம். எனக்கு வளைக்காப்பு டா’ என அனுப்பி இருந்தாள். நாள் நேரம் கூட அதில் குறிப்பிட்டு இருந்தாள். எப்பொழுதும் அவளுக்கு பதில் மெயில் வருவதில்லை இம்முறையும் அவளுக்கு வரவில்லை. ஏமாற்றம் தான் பதிலாக இருந்தது.
நாளை வளைக்காப்பு இன்று இரவு வரை லத்திகா முகம் மலர்வில் இல்லை. அவள் மனம் முழுதும் ப்ரஜன் ப்ரஜன் என வட்டமிட்டு இருந்தன. திட்டிட்டே இருந்த என்னை எப்படிடா உன்னயே நினைக்க வச்சிட்ட..’ என புலம்பினாள்.
அதிகாலை எழுந்ததும் ப்ரஜன் புகைப்படத்தை ஏந்தி ‘ஹாய் டா குட் மார்னிங்’ என்று அவனின் புகைப்படத்தில் முத்தம் பதித்தாள்.
‘உன்கூட எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருந்தேன். அப்போ எல்லாம் இவ்வளவும் காதல் உன் மேல இருக்கும் என்று நான் நினைச்சதே இல்லை… ஆனா நீ இல்லாமல் இருக்கற இந்த தனிமை சொல்லுது டா உன்னை எவ்ளோ விரும்பறேன்னு, எனக்கே எனக்கு புரிய வச்சிடுச்சு…. காலையில் எழுந்துக்கறேன் நல்லா சாப்பிடறேன், தூங்கறேன் அத்தை மாமா கவலை படக்கூடாது என்று முகம் மகிழ்ச்சியா பார்த்துக்கறேன்… ஆனாலும் முடியலை டா ஒவ்வொரு நிமிஷமும் நீ என்ன பண்றியோனு மனசு துடிக்குது.
இன்னிக்கு எல்லோரும் சந்தானம் பூசி வளையல் போட்டாலும் எனக்கு நீ போட்டு பூசி விடுறது மாதிரி இருக்குமா டா..? உன் லத்திகா வயிறு குண்டா இருக்கா நீ தான் பார்க்கலை…… சேலை உடுத்தினா பதாம் கிட்ட சேலை தூக்கி தான் இருக்கு… கால் எல்லாம் வீங்கி இருக்கு தெரியுமா…? இன்னும் கொஞ்ச நேரம் அப்பறம் வீட்டில் விழாவுக்கு ஆட்கள் வந்துடுவாங்க… அதுக்குள்ள நான் ரெடி ஆகணும்…… நீ வராமல் நான் ரெடி ஆகணுமாம் போடா சலிப்பா இருக்கு’ என்றே எழுந்து நிதானமாக குளித்து கீழே வந்து உணவும் முடிக்க அதே நேரத்தில் பார்லர் பெண்மணிகள் வந்து நின்றார்கள். தலைக்கு ஜடை பின்னி அழகாக அதற்கு பூக்களால் அலங்கரித்தனர்.
சகுந்தலா பவானி கூட லத்திகாவையே விழி விரிய பார்த்து கொண்டு இருக்க, பின்னர் முகம் அலங்கரிக்க செய்தார்கள். உதட்டுசாயம் வைத்து, கண்களில் ஐலைனர் தீட்டி சற்று நேரம் மூடி இருக்க பின்னர் கண்களை மெல்ல திறக்க சொன்னார்கள்.
லத்திகா மெல்ல கண்களை திறக்க அவள் கண்கள் தாய் அத்தை இருவரை தாண்டி வாசலை நோக்கி இருந்தது. வேகமாக ஓடி செல்லும் லத்திகாவை, சோபாவில் இருந்த அவர் தந்தை மற்றும் மாடியில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ராஜன் இருவருமே மெல்ல…
”ஓடாதே விழுந்துடுவ ம்மா… என கூறிக்கொண்டு இருப்பதை அறியாமல் அவள் யாரை தேடி ஓடுவதை கண்டு, வாசலை பார்க்க, அங்கே சற்று முட்புதர் போல தாடியுடன் முதுகு பையுடன் கையில் ஏதோ மஞ்சள் ஆரேஞ்சு கலவை நிற பூக்களை கையில் வைத்து நின்றது.
லத்திகாவின் ப்ரஜன் தான்.
லத்திகா வயிறு பெரிதாக இருப்பதை மறந்து அவனை இறுக அணைக்க ”ஏய் வயிற்றில் குழந்தை இருக்கு டி” என்ற ப்ரஜன் குரலில் அவனை விட்டு விலகி பயந்தவளை மெல்ல அணைத்து, ”லவ் யூ லத்திகா” என அவன் காதலை அள்ளி தெளித்தான்.
அவள் அதற்கு வாயே திறக்கவில்லை அவனை அடித்தபடி அழுது முடித்தாள்.
”நான் தான் சொன்னேன்ல நீ எதிர்பார்த்த நாளுக்கு கண்டிப்பா, உன் முன்ன வந்து நிற்பேன் என்று” கண்கள் அவளின் கண்களோடு கலந்து சொன்னான்.
”வாங்க மாப்பிள்ளை….” என சகுந்தலா-ஜீவானந்தம் கூற,
பவானியோ அவனின் கையை பற்றி கண்ணீரில் பேச்சிழந்து அழுது கலந்தாள். மாடியில் இருந்து வேகமாக வந்த ராஜனும்
”டேய் கண்ணா என்ன டா கோலம்? இதுக்கு தான் அனுப்ப யோசிச்சேன். எப்படி இருக்க டா” என்றனர்.
”நல்லா இருக்கேன் டாட்”
”அம்மாடி அகிலா சாப்பிட அந்த பொங்கல் சாம்பார் எடுத்துக்கிட்டு வா” என பவானி கூற, அவளும் வேகமாக எடுத்து வந்து கொடுக்க,
”அம்மா எனக்கு பசிக்கவே இல்லை” என்று சொன்னாலும் விடாது தாயின் கையில் ஊட்டி விட்டார் பவானி.
”எப்போ டா சென்னை வந்த? எங்க டா போன? உனக்கு இப்போ திருப்தியா போச்ச? ஏன் டா எங்களை எல்லாம் தவிக்க விட்ட? இனி ரிசர்ச் அது இது என்று சொல்லிட்டு எங்கயும் போக கூடாது” என ராஜன் சொல்லி முடிக்க,
”லத்திகாவை பாரு டா. குழந்தை உன்னை நினைச்சு எப்படி கிடந்தாள் தெரியுமா? நல்லா சாப்பிட்டியா டா உனக்கு எதுவும் ஆபத்து இல்லையே? எங்க போன ஏதாவது போன் பண்ணி இருக்கலாமே?” என்று பவானி ஒரு பக்கம் கேட்க,
”மாப்பிள்ளை இனி என் மகளை விட்டுட்டு எங்கயும் போக வேண்டாம் எதுவா இருந்தாலும் இனி இங்கயே பாருங்க” என்று ஜீவாவும்,
”ஆமாம் மாப்பிள்ளை. நீங்களே கொஞ்சம் இளச்சி போயிட்டிங்க” என்று சகுந்தலாவும் பேச, லத்திகா எதுவும் பேசாமல் அவனின் கை வளவில் அழுத வண்ணம் இருந்தாள்.
”கூல் கூல் என்ன இது? இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க? ஒன்னு ஒன்னுனா கேளுங்க…. ஓகே நானே ஒவ்வொன்றுக்கு பதில் சொல்றேன். இனி எங்கயும் போக மாட்டேன் ஓகே வா
பஸ்ட் நான் இவ்ளோ நாளா எங்க இருந்தேன் என்று சொல்ல கூடாது இது எங்க ரூல். பட் ஒரு தீவு தான் அங்க நோ நெட்ஒர்க். சோ உங்களை காண்டாக்ட் பண்ண முடியலை. தென் நெட்ஒர்க் வந்த உடனே உங்கள் மெசேஜ் எல்லாம் பார்த்தேன். நேற்றே இன்னிக்கு தான் வளைக்காப்பு என்று தெரிச்சுக்கிட்டேன் அதனால தான் என் கூட வேலை செய்யறவங்களை விட்டுட்டு நான் மட்டும் தனியா இங்க வேகமா வந்துட்டேன். போன ரிசர்ச் ஒர்க் வெற்றி. எனக்கு முழு திருப்தி.
நீங்க நினைக்கற மாதிரி நான் அப்படி ஒன்னும் கஷ்டப்படலை எனக்கு சாப்பிட டெய்லி பழங்கள், காய்கறிகள் அப்பறம் மீன், நண்டு அது இது என்று கிடைச்சது. ஆனா என்ன எல்லாம் கொஞ்சம் ஆப் வேக்காடு தான்.
ஆல்ரெடி டென்ட் சூப்பரா காட்டுவேன் சோ எனக்கு படுக்க துங்கா எல்லாம் வசதியா தான் இருந்துச்சு. என்ன அடிக்கடி இந்த ஷேவ் பண்ண முடியலை. அதான் லிட்டில் தாடி” என்றான் லத்திகாவை பார்த்தபடி
அப்பறம் விழாவுக்கு இந்த கெட்டப் ஓகே வா இல்லை பிருத்வியா ரெடி ஆகணுமா?” என்றே எல்லோரையும் பார்த்து கேட்டான்.
பவானி முன் வந்து “லத்திகா நீ போய் அவனுக்கு என்ன வேண்டுமோ எடுத்து கொடு” என்று அவளையும் அனுப்பி வைத்தார். கொஞ்ச நேரம் அவனோடு நேரம் செலவழிக்க அனுப்பினார்.
அறைக்குள் வந்த அடுத்த நொடி லத்திகாவை அணைத்து அவளின் கழுத்தில் வாசம் பிடிக்க, அவளோ அவனின் நெஞ்சில் முத்தங்களை வாரி இறைத்தாள்.
”உன் வாசம் இல்லாமல் எப்படி இருந்தேனே தெரிலை டி ராட்சஷி…. இந்த முத்தத்தை நீ வாசலிலே தருவியோ என்று நினைச்சேன் ராட்சஷி” என்றான்
”நீ கூட தான் அங்கயே தந்துடுவியோ என்று பயந்தேன் டா” என்றதும் அவளின் இதழில் முத்தம் கொடுத்தான் நேரம் கூட கூட மூச்சு முட்டி அவனாகவே விடுவித்தான்.
”என்னால அங்க உன் நினைவை மறந்து இருக்க முடியலை எப்பவும் உன் நினைப்பு தான். உன்னை இந்த கோலத்தில் பார்க்கணும் என்று உடனே பிளைட் புடிச்சு ஓடி வந்தேன். அதனால தான் என்னை கூட நீட் பண்ண முடியலை. அழுக்கா தான் இருக்கேன்” அவன் பேசிக்கொண்டே போக லத்திகாவோ
ப்ரஜன் கைகளை எடுத்து அடிவயிற்றில் வைத்தாள். அதில் பயந்து
”ஏய் ராட்ஸசி பயமா இருக்கு வி…வி.. விடு” என்ற போதே வயிற்றில் ஏதோ உருளுவதும் நெளிவதும் உணர்ந்தான்.
”ல…ல..த்திகா… இது நம்ம… குழந்தை அசைவா?” என்றான் ஆனந்த அதிர்ச்சியோடும் சந்தோஷத்தோடும்.
”ஹ்ம்ம் எங்க இதை நீ உணராமல் நான் குழந்தை பெற்று கொள்வேனோனு பயந்தேன் டா” என்றே அவனின் சட்டையில் சாய அவளின் கண்ணீர் கோடுகள் அவனின் நெஞ்சை சுட்டது.
”அதான் வருவேன்னு சொன்னேன்ல டி.. லத்திகா என்ன டி டெய்லி இங்க என்ன புட் பால் மேட்சா இவ்ளோண்டு வயிறு எப்படி டி” என்றான் நம்ப முடியாமல்… லத்திகா வயிற்றில் அசைந்த உணர்வு அந்த இடம் போதுமா உருள்வதற்கு?!
”நீ வரும் வரை எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? போடா” என் அவனை விட்டு பிரியாமல் நிற்க
”இந்த மொத்த நாளுக்கும் சேர்த்து இந்த நிமிஷம் உணரறேன்” என்றே அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டான்.
”இந்த உணர்வு அனுபவிக்காமல் போயிருந்தா நிஜமாவே நான் அன் லக்கி தான் பட் உணர்வை அனுபவிச்சுட்டேன் டி… இந்த உலகத்தில இந்த நிமிஷம் நான் தான் லக்கி மேன். சரி ஒழுங்கா சாப்பிட்டியா குழந்தை ஆரோக்கியமா இருக்கா? டேப்லெட் ஒழுங்கா சாப்பிட்டியா?” என்றான் அடுக்கடுக்கான கேள்வியோடு
”அத்தை மாமா நல்லாவே பார்த்துக்கிட்டாங்க” என்றாள்.
”எனக்கே நெய் முந்திரி என்று இருக்கும் நீ பாப்பா வேற வச்சி இருக்க விடுவார்களா? வாரிசு ஆச்சே” என்றான்.
”சரி இனி நோ ரிசர்ச் ஓகே வா? என்னால இனி உன்னை பிரிய முடியாது” அழுதபடி நெஞ்சில் சாய்ந்தாள்.
”சரி டி அழாதே… ஐலைனர் கலைஞ்சு கன்னம் எல்லாம் கருப்பா ஆகிடுச்சு”
”பரவாயில்லை மறுபடியும் மேக் அப் பண்ணிடறேன். நீங்க குளிச்சு பிரெஷ் ஆகுங்க” என்றாள்.
”நீ குளிப்பாட்டி விடு” என்றான்.
”ப்ரஜன்…. பட்டு சேலை டா” என்றாள்.
”என்னவிட பட்டு சேலை ரொம்ப முக்கியமா உனக்கு?” என்றான் பழைய ப்ரஜனாக.
”ஹலோ கிழே 11 மணிக்கு விழா…. அப்பறம் லேட்டா ஆகும் பரவாயில்லை யா?”
”ராட்ஸசி போ உனக்கு அப்பறம் இருக்கு….ஏய் மறுபடியும் முகத்துக்கு மேக் அப் பண்ணு டி”
”ஹ்ம்ம்” என்றே புன்முறுவலுடன் கீழே சென்றாள்.
அவளின் அழுது வடிந்த கண்கள் இருந்தும் கண்கள் நட்சத்திரம் போல மின்ன மீண்டும் முகம் அலம்பி மேக் அப் ஆரம்பமானது.
அங்கு பிருத்வியோ சேவ் செய்து குளித்து முடித்து வெளியே வந்தவன் ஆடையை எடுக்க செல்ல, அவனுக்கு வேலை வைக்காமல் லத்திகா அவனுக்கு ஆடையை எடுத்து கட்டிலில் வைத்து இருந்தாள்.
”ராட்ஸசி இதெல்லாம் சரியா செய்துடுவா” என கோட் அணிந்து தலையை வாரி கீழே இறங்கினான்.
Wow super super. Cute romance. Intresting
👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕
Semma