அத்தியாயம் – 79
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ரியோட்டோ அப்படி கேட்கவும் அமைதியானவள் அவனை பார்த்தாள்.
ஏனெனில் அவனுக்கு அவளது தவிப்பும் தெரியும் அவனது தவிர்ப்பும் தெரியுமே அதனாலதான் அவள் இது தெரிந்து கஷ்டப்படுவது பிடிக்காமல் ஆரம்பத்திலேயே அவளை அதிலிருந்து காக்க எண்ணியே இதை கேட்டான்
மறுக்கப்பட்ட காதலின் வலி அறிந்தவன் அல்லவா?
அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவள்.
“எல்லாருக்கும் அவரை வசதியானவராதான் தெரியும் ஆனா எனக்கு அவரோட கஷ்டகாலம்ல இருந்து தெரியும்.
அவரோட வெற்றி தான் என்னோட வெற்றினு இருக்கேன் இதுக்கு காதல்னு ஒரு பேர் வெச்சு நான் அதை தரம் குறைக்க விரும்பல ரியோமா.
குழந்தை நெஞ்சில எட்டி உதைச்சதுக்காகஅம்மா என்ன அந்த குழந்தையை வெறுத்துடுறாங்களா? அப்படிப்பட்டது தான் என் நேசமும் அது என்னைக்கும் மாறாது.
அவர் என்னை ஏத்துக்கிட்டாலும் சரி ஏத்துக்கலைனாலும் சரி என்னோட மனசுல அவரை பத்தின எண்ணமும் ஆசையும் பாசமும் எப்பவுமே மாறாது. அவரோட சேர்ந்து சந்தோஷமா வாழ முடியலனா என்ன அவரை நினைச்சுக்கிட்டே சந்தோஷமா வாழ்ந்திடுவேன்.
காலத்துக்கும் என்னோட காதல் மட்டும் போதும்.
ஒன் சைட் லவ் ஈஸ் ஆல்வேய்ஸ் பெஸ்ட் அண்ட் எவர் நெவர் ஃபெயில்” என்று சிரித்த முகத்துடன் கூறி முடிக்க அவளை பார்த்து அதிசயித்த ரியோட்டோ
“சின்ன பொண்ணுனு நினைச்சேன் ஆனா நீ ரொம்ப பெரிய பிள்ளையா இருக்க பேபி. ஒருவேளை அவன் இன்டியா வந்தா கண்டிப்பா உன்னை தேடுவான்னு தோணுது” என்று கூற
“அவர் இன்டியா வந்தா கண்டிப்பா நான் அவர் கூடவே இருந்து அவருக்கு தேவையான எல்லாம் செஞ்சு அவரை பத்திரமா பார்த்துப்பேன்” என்று கூற சிரித்த ரியோட்டோ
“சும்மாலாம் சொல்லாதே பேபி நீ யாருனே தெரியாம எப்படி அவனுக்கு ஹெல்ப் பண்ண உன்னை அலோவ் பண்ணுவாங்க?” என்று கேட்க
அவனை முறைத்தபடி இடுப்பில் கை வைத்து எழுந்து நின்றவள்
“நான் ஏதாவது செஞ்சு அவருக்கு இன்டியால நான்தான் ஹெல்ப்பா இருப்பேன் இது ப்ராமிஸ்” என்றவள் புசுபுசுவென மூச்சு விட அவளது தோரணை அவனுக்கு சிரிப்பை வரவைக்க
“சரிங்க பெரிய வி.ஐ.பி உங்கள நான் நம்புறேன். வாங்க அதுக்கு இப்படிலாம் போஸ் கொடுக்க வேணாம் வந்து உட்காரு” என்று கூறி சிரித்தபடி அவளது கையை பிடித்து இழுத்து அவனது அருகில் அமரவைத்தவன் பேச்சு மாற்றி அவளிடம் நிறைய பேசி அனுப்பி வைத்தான். அதுதான் அவனும் அவளை கடைசியாக பார்த்தது.
அடுத்த வாரத்தில் அவளை சந்திக்க வந்த ரியோட்டோவை பார்க்க வந்தது என்னவோ அந்த மனநலம் சரியில்லாத பையனின் தாயும் அவனும் அவர்களுடன் வந்த ஜிம்மியும்தான்.
அவனுக்கு அருகில் வந்தவர் அவனிடம் பேச வர யாரோ ஃபேன் என்று யாருக்கும் தெரியக்கூடாது என எழப்போனவன்
“சர் மீரா” என்று இழுக்க சட்டென நின்றவன் “அவளுக்கு என்ன ஆச்சு?” என்று பதறியபடி கேட்க
“அவளுக்கு ஒன்னும் இல்ல சர். அவங்க வீட்ல பக்கத்து ஃபோர்ஷன்ல குடி இருக்கோம் அவங்க ஏதோ எமர்ஜென்சினு இங்க மொத்தமா காலி பண்ணிட்டு போய்ட்டாங்க உங்ககிட்ட இந்த லெட்டர கொடுக்க சொன்னாங்க” என்று அவர் ஒரு கடிதத்தை நீட்ட அதை அவசரமாக வாங்கி பிரித்து படித்தான்.
அவனுக்கு புரியவேண்டும் என ஜாப்பனீஸிலேயே எழுதி இருந்தாள்.
“சாரி ரியோமா.
இந்த வீக் உங்களை பார்க்க வரமுடியாததுக்கு மன்னிக்கவும் இத்தனை மாசமா நான் தேடிட்டு இருந்த ஒருத்தர் ரொம்ப மோசமா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்காங்க நான் அவங்க கூடவே இருக்கவேண்டிய கட்டாயம் அதனால தான் நான் ஊரை காலி பண்ணிட்டு போறேன்.
நான் ஒரு இடமா இருக்க முடியாது அதனால உங்களுக்கு எங்கேனு உறுதியா சொல்லமுடியலை. இப்போதைக்கு நான் ஆஸ்திரேலியா போறேன் எங்கே போனாலும் உங்களை மறக்கமாட்டேன் எனக்கு கிடைச்ச குட் ப்ரண்ட் அண்ட் வெல்விஷர் நீங்க. நீங்களும் என்னை மறக்க மாட்டீங்கனு நம்புறேன்.
நீங்க எவ்ளோ தூரம் இருந்தாலும் என் குடும்பத்தில ஒருத்தரா தான் நான் நினைக்கிறேன்
நீங்க என்னை பத்தியோ என் லவ்வ பத்தியோ ஆராஷிகிட்ட எதுவும் சொல்லக்கூடாது அவருக்கா என் லவ் புரிஞ்சு அவர் என்னை தேடினா நான் அவர்முன்ன வந்து நிப்பேன்.
வந்து உரிமையா உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்கபோறேன்.
என்னால அங்க ஹாஸ்பிடல்ல ஜிம்மியை தங்க வைக்க அல்லோவ்ட் இல்ல சோ எனக்காக நீங்க ஜிம்மியை ஒரு நல்ல கேர் டேக்கர் சென்டர்ல சேர்த்து விட முடியுமா? என் ப்ரண்ட்டும் அங்க இல்ல அதனால் தான் உங்ககிட்ட கேட்கிறேன்.
உங்ககிட்ட லெட்டர் கொடுத்தவங்களால அவங்க குழந்தையும் பார்த்துட்டு ஜிம்மியையும் மெயின்டெயின் பண்ண முடியாது. அதனால தான் உங்ககிட்ட இந்த ஹெல்ப் கேட்கிறேன்.
நீங்க அவங்கள கேர்டேக்கிங்ல சேர்த்துட்டு அவங்க கிட்ட டீடெயில்ஸும் கொடுத்திட்டா என் ப்ரண்ட் அவளை மெயின்டெயின் பன்ற சார்ஜஸ் அனுப்பிடுவான்.
இது மட்டும் எனக்காக செய்ங்க.
உங்களுக்கும் ஆராஷிக்கும் மேலும் மேலும் நிறைய ப்ராஜெக்ட் செஞ்சு பேரும் புகழும் பெற என்னோட வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
உங்கள் மீரா.
என்று இருக்க அதை படித்தவனுக்கு மனதே பாரமாகி போனது. இதுவரை அவளது நம்பரை கூட வாங்கவில்லையே என்று யோசித்தவனுக்கு வருத்தமாகி போனது.
ஜிம்மியை பார்த்தவன் அவளை அழைக்க அவனிடம் வந்தாள் அவள்.
“நானே ஜிம்மியை பார்த்துக்கிறேன் அவளோட ப்ரண்ட்கிட்ட சொல்லிடுங்க. எனக்கு அவங்க ப்ரண்ட் நம்பர் தர்றீங்களா?” என்று கேட்டான்.
ஏனோ அவரிடம் மேதாவின் நம்பரை கேட்க அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“எனக்கும் தெரியாது சர் அவங்க பெரிய பணக்காரங்கனு மட்டும் தான் தெரியும் மத்தபடி நானும் அவங்ககிட்ட பேசினது இல்லீங்க சர் அவங்க பையன் மீராவோட ப்ரண்ட் அந்த பையன்தான் எப்பவாச்சும் பார்த்தா பேசுவான் அவ்ளோதான் சர் எங்களுக்கு பழக்கம். நீங்க வேணா மீராக்கு ட்ரை பண்ணி பாருங்களேன்” என்று கூற
‘ம்க்கும் அவ நம்பரே வாங்கலைனு நான் எப்படி இந்தம்மாக்கு புரிய வைக்க. அவதான் உங்ககிட்ட சொல்ல சொல்லி இருக்காளே அதுலேயே தெரியவேணாமா எங்கள பத்தி’ என்று யோசித்தவன் அவரிடம் மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு ஜிம்மியோடு கிளம்பினான்.
அவன் வீட்டிற்கு வந்ததை பார்த்த ஆரா அவனது கையில் நாயோடு வர அவனை கேள்வியாய் பார்த்தவனை பார்த்த ரியோட்டோ
“இனிமேல் இவ என்னோட பொறுப்பு நான்தான் இவள வளர்க்க போறேன்” என்று கூற
“அதோட ஓனர்தானே அதை வளர்த்துட்டு இருந்தா அந்த மாஸ்க் போட்ட பொண்ணு அவளை பார்க்கத்தானே போனீங்க? இப்போ என்ன நாயோட வர்றீங்க?” என்று கேட்டான் ஆராஷி. இவன் ஏன் அவளை பத்தி இவ்ளோ கேட்கிறான் என்று யோசித்த ரியோ.
“இனிமேல் அவளை எப்போ பார்ப்பேனோ? ஒருவேளை பார்க்கவே மாட்டேனோ என்னவோ?” என்று அவன் பீடிகை போட்டு கூற அவனை புரியாமல் பார்த்தவன்
“ஏதாவது புரியுற மாதிரி பேசுறீங்களா? அப்படி எங்க போனா உங்க அருமை ப்ரண்ட்?” என்று அவன் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான்.
இதுவரை அவளை பற்றி எதையும் அவன் ரியோவிடம் கேட்டது இல்லை ஏனெனில் அவனே அவளை நேரில் பார்க்கும்போது எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆனாலும் வாய் ஓயாமல் அவளுடன் பேசியது அனைத்தும் அதும் அவனை பற்றி பேசியதை தவிர்த்து அனைத்தும் சொல்லிவிடுவான்.
ஆர்வமே இல்லாதவன் போல அவனுக்கு காட்டிக்கொண்டு சிறு புன்னகையோடு கேட்டுக்கொள்வான்.
ரியோட்டோ அவள் யாருக்கோ
மெடிக்கல் எமர்ஜென்சி என்றும் அவள் வேறு நாட்டிற்கு சென்று விட்டதாகவும் அதனால் இந்த நாயை கேர்டேக்கிங்ல சேர்க்க சொன்னதாகவும் அவனுக்கு மனம் வராததால் அவனே அதை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கூற அதிர்ந்து எழுந்து நின்றான் ஆராஷி.
“ஹவ் தேர் ஷி கோ வித்அவுட் இன்ஃபார்ம் வித் மீ” என்று கத்த ஆரம்பித்து விட்டான் ஆராஷி.
அவனை ஒரு மாதிரியாக பார்த்த ரியோட்டோ.
“அவ போனா உன்கிட்ட எதுக்கு சொல்லனும்?” என்று கேட்க
“ஏன்னா நான் அவள” என்று ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்தி ரியோவை பார்க்க அவனும் ஆராவைத்தான் பார்த்தான்.
“நீ அவளை?” என்று அவனை கேள்வியாய் கேட்டான் ரியோ.
அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டான் அவன்.
“நான் சொல்லவா? ஏன்னா நீ அவளை லவ் பண்ண முன்ன ஆனா எப்போ நீ டெபியூட் ஆகி பெரிய ஆளா வளர ஆரம்பிச்சியோ அப்போவே நீ அவள மறந்துட்ட” என்று அவனை ஆழம் பார்த்தான் ரியோ.
“நான் ஒன்னும் அவளை மறக்கலை” என்று கத்தியவன் வலியோடு அவனை பார்த்து.
“அவ என்னை காப்பாத்தினவ, எனக்காக துடிச்சவ, எனக்கு எனக்கு இரத்தம் கொடுத்து காப்பாத்தினவ, என்னை விரும்பினவ அவளை நான் எப்படி மறப்பேன்?” என்று கூறியவனுக்கு கண்களில் நீர் துளிர்த்தது.
“அது வெறும் நன்றிக்கடன். ஆனா நீ அந்த நன்றிக்கடனை கூட அவளுக்கு செலுத்தல.
ஈவன் நீ அவ உன் உயிரை காப்பாத்தினதுக்கு ஒரு தேங்கஸ்கூட சொல்லல?
அப்படிப்பட்ட உன்கிட்ட அவ எதுக்காக சொல்லிட்டு போகனும்?” என்று அவன் கோபமாய் கேட்க.
“நீங்க என்னை புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன் அண்ணா ஆனா நீங்க கூட என்னை புரிஞ்சுக்கலையா?” என்றவனை கேள்வியாய் பார்த்தான்.
“நான் மயக்கத்துக்கு போகும்போது கூட அவளோட அழுத கண்ணும் அவ பேசின வார்த்தைகளும்தான் என் காதுல ஒலிச்சுட்டே இருந்தது.
அந்த வைராக்கியத்துல தான் உயிர் பிழைச்சு வந்து கஷ்டப்பட்டு டிரைனிங் எடுத்து பெரிய ஆளான அப்புறம்தான் அவளை பார்க்கனும்னு இருந்தேன். அதுதான் அவளுக்கு நான் செய்யுற ரெஸ்பெக்ட்டா இருக்கும்னு நினைச்சேன் அதுவரைக்கும் அவளை பார்க்க கூடாது அப்போதான் அவளை சீக்கிரம் பார்க்கனும்னு வெறியோடு வேலை செய்யனும்னு தோணும்னு அவளை பார்க்காம கஷ்டப்பட்டு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன்.
ஆனா அவ?” என்று உடைந்துபோய் பேசியவனை அணைத்துக்கொண்டான் ரியோட்டோ.
“ஆரா ஐயம் சாரிடா. நீ இப்படி ஒரு ஐடியால இருப்பனு எனக்கு நிஜமா தெரியாதுடா.
என்னை மன்னிச்சிடு ஆரா.
உன்னோட நல்ல மனசுக்கு அவ நிச்சயம் உன்னை தேடி வருவாடா? நீ இன்னும் பெரிய ஆளாகி அவளை தேடினா அவ கண்டிப்பா வருவாடா. அவ சொல்றது அடிக்கடி இந்த விஷயம் தான் எப்பவுமே உன்னை ஒருத்தர் கவனிச்சுட்டே இருக்காங்கனு யோசித்து உழைக்கனும்னு சொல்லுவா.
நீ அவ உன்னை கவனிக்கிறதா நினைச்சு உழைக்கனும்டா அதுதான் அவளுக்கும் பெருமை சேர்க்கும்டா.
சீக்கிரமே அவளை கண்டுபிடிக்கலாம் கஷ்டப்படாதே ஆரா” என்று அவனுக்கு ஆறுதல் கூற
சட்டென சுதாரித்தவன்
“அவ எந்த ஊருக்கு போய் இருக்கா அவளோட நம்பர் கொடுங்க அண்ணா நாம அவளை கண்டுபிடிக்கலாம்” என்று கேட்க
“அதுதான் பிரச்சினை ஆரா. என்கிட்ட அந்த பொண்ணு நம்பரும் இல்ல அவ எந்த ஊருக்கு போறேன்னு உறுதியா சொல்லவும் இல்ல அங்க இங்கனு போய்கிட்டே இருப்பேன் அதனால என்னை தேடாதீங்கனு சொன்னா ஆனா அப்போதைக்கு அவ ஆஸ்திரேலியா போறதா எழுதி இருந்தா” என்று கூற சிறிது குழம்பியவன் சட்டென ஏர்போர்ட்டில் வேலைசெய்யும் தன் நண்பனுக்கு ஃபோன் செய்தான்.
கடந்த வாரம் முதல் இன்று வரை ஆஸ்திரேலியா ப்ளைட்டில் மீரா என்னும் பெண் போனாளா என வினவினான்.
ஆனால் அவனுக்கு கிடைத்த பதிலோ அப்படி யாரும் செல்லவில்லை.
சரத்ஶ்ரீ
மட்டுமே தன் மகளுடன் நேற்று ஆஸ்திரேலியா சென்றதாக செய்தி வர அவருடைய மகளா? என்று வினவியவன் பெயர் என்ன என்று கேட்க.
ஶ்ரீ என்ற பெயர் மட்டுமே சொல்லப்பட்டது அவனுக்கு
Interesting😍
Thank you so much sis💜