Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-32

ஐயங்காரு வீட்டு அழகே-32

அத்தியாயம்-32

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

ஒரிரு நாட்களாய், காருண்யா ராவணன் ஒரே வீட்டில் ஒரே மெத்தையில் படுத்துறங்கியும், அவர்கள் பேசும் வார்த்தை விரல் விட்டு எண்ணிடலாம்.

காருண்யா அவளாக பேச முனைந்து, “ப்ளீஸ் காரு… நீயா வந்து பேசாத‌. எனக்கென்னவோ நான் உன்னை கெஞ்ச விடறதா கில்டியா பீல் ஆகுது.
என்னால நீ பேசியதை ஒரு காமன் பெர்ஸனா ஈஸியா எடுத்துக்க முடியுது. ஆனா ஒரு கணவனா, அவசரப்பட்டு மனைவியை காதலில்லாம நாடியதா கஷ்டமாயிருக்கு. நாம அந்த ஹரனோட பெரிப்பா பேசினான் ஊர்ல பேசினாங்கன்னு சட்டுனு உனக்கு வேற வரன் அமையலைன்னு தேவையில்லாம நாம இணைந்துட்டோமோனு தப்பா தோணுது.

நமக்குள்ள இந்த உறவு ஒரு கட்டாயத்துல வாழ்வதா… எனக்கு தப்பு தப்பா தோணுது.
எனக்கு ஸ்பேஸ் தேவைப்படுது. ஆக்சுவலி நல்லா புரிஞ்சுண்ட பிறகு தான் நான் உன்னை தொட்டதா நினைச்சேன். அது அப்படியில்லை‌‌… ஆண்புத்தி இல்லையா… சபலம்‌. கட்டின பொண்டாட்டினு நெருங்கிட்டேன். எதுக்கும் கொஞ்சகாலம் நண்பர்களா வாழ்வோம். இல்லை… நண்பர்களா கூட வேண்டாம். நெய்பரா‌.” என்றவன் காருண்யாவின் விழிநீர் உடைப்பெடுத்திட, “ஹே.. நான் பிரெண்டாவே கொஞ்ச நாள் திரும்ப வாழ்வோம்னு சொல்ல வர்றேன்.” என்றான்.

காருண்யா என்ன நினைத்தாளோ, கன்னத்தில் இறங்கிய நீரை துடைத்து, “உங்க இஷ்டம் போல பண்ணுங்கோ. இந்த வீட்ல நான் காலடி எடுத்து வர்றச்ச, தோழியா கூட நினைச்சு வரலை‌. நானுமே கட்டாயத்துல, இப்படி அப்பா பாட்டி சிக்க வச்சிட்டாளேனு பெருமாளாண்ட என் பாரத்தை போட்டு வந்தேன். நீங்க எப்படி என்னை நடத்துவேள்னு பயந்து தான் வந்தது. பரவாயில்லை..‌. இத்தனை மாசம் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தேன். யார் கண்பட்டுச்சோ நம்ம வாழ்க்கை ஊசலாடுது. அந்த ஷாலினி… தப்பு தப்பு.‌.. மத்தவாலை சொல்லக்கூடாது நேக்கு மண்டையில் களிமண்ணா பிசைந்து வச்சா. என் ஆம்படையான் எப்படின்னு ஈருடல் ஒருயிரா வாழ்ந்த எனக்கு தெரிந்திருக்கணும்‌. அசடாட்டும் பேசிட்டு மன்னிப்பு கேட்டா.. யாருக்கு மன்னிக்க தோன்றும்‌. உங்க தரப்பில் நீங்க என்ன முடிவெடுத்தாலும் நேக்கு சம்மதம்.
அன்னிக்கு டி… னு ஆரம்பிச்சேள்‌. அந்த வார்த்தையோட மொத்தமும் உதிர்த்து என்னை கை கழுவணுமானாலும் நேக்கு சம்மதம். நீங்க சேமமா இருக்கணும். உங்க முகம் வரவர சிரிப்பை தொலைக்கறேள். எல்லாம் என்னால தான்‌. நேக்கு அது புரியுது. ஆனா நான் சமைச்சதை சாப்பிடுங்கோ… இல்லைன்னா நேக்கு தொண்டையில் இறங்காது. அதே போல என்னை உங்களோடவே ஆபிஸுக்கு கூட்டிட்டு போங்கோ. பார்க்கறவா என்னையும் உங்களையும் பார்த்து சண்டையா? இன்னுமா சண்டை முடிவுக்கட்டலைன்னு ரோஸ்லின் ஒருபக்கம் கேட்கறா. அந்த ஷாலினி அவபாட்டுக்கு போனப்பிறகும் நம்ம வாழ்க்கை அதே நட்டாத்துல நிற்கு. மத்தவாளுக்கு கேள்வி கேட்க உரிமை தர வேண்டாம்னு நினைக்கேன். பிறகு உங்க விருப்பம்.” என்று அகன்று இன்றோடு இரண்டு நாட்கள் ஆகின்றது.

ஷாலினி ட்ரீட் வைக்கும் பொழுது கூட ராவணன் பெரிதாக அசைவத்தை தவிர்த்தான். அவனுண்டு வேலையுண்டு என்று முகத்தை திருப்ப பாதியாளாக மாறினாள் காருண்யா.

உண்மையில் ராவணன் அவனிருக்குமிடம் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பான். சதா சர்வமும் அப்பா அம்மா என்று வாழ்ந்து விட்டதால் படிப்பு முடிய, வேலையும் சலிக்கும் வரை வெளி மாநிலம் தான் என்று பெற்றவர்களிடமே கூறியவன். அப்படியிருக்க, காதலித்து கல்யாணம் செய்வதாக இருந்த எண்ணத்திலும் இடி விழுந்திட, இந்த திருமண ஏற்பாடு, கணவன் மனைவி பந்தம், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற ரீதியில் கடந்தான்.‌

அலுவலகம் எல்லாம் காருண்யா சொன்னது போல ஒரே பைக்கில் வருவதும் போவதும் என்றாலும் சூரியன் சந்திரன் போல இருதுருவமாய் கடந்தார்கள்.

இதில் ஒரே உணவு என்றாலும், ராவணன் கடமைக்கு சாப்பிடும் விதமாக தோன்றியது. இங்கு வேலைக்கு வந்த முதல் நாள் ஜவஹர் அறிமுகப்படுத்திய பொழுது உற்சாகமாய் துள்ளலாய் இருந்த ராவணனே, இவன் அல்ல.

அதே போல அலுவலகம் என்றாலே இந்த நாள் இந்த உடை அணிதல், இந்த கோவிலுக்கு செல்லுதல், இத்தனை மணிக்கு எழுந்துக்கொள்ளுதல் போன்றவைகளை காருண்யா அடியோடு மறந்தாள்.

நள்ளிரவு ராவணன் கை தீண்டாமல், தூக்கம் நேரம் தாண்டி உறங்கினாள். உணவு ஏதோ செய்ததை சுவைத்தாள்‌. கோவிலுக்கு செல்வதை மறந்தாள். உடையெல்லாம் இந்த நாள் இந்த நிறமென்று அணிந்தவள் முந்தாநேற்று அணிந்த அதே உடையை மறுநாள் அணியும் அளவிற்கு தன்னை கவனிப்பதை மறந்துப்போனாள்.

இப்படியாக இருந்த தருணம் ராகவி, இந்துவிடம் பேசினாள்.

இந்து நலன் விசாரிப்போடு முடித்துக்கொண்டாள்.
ராகவி தான் “என்னலாம் மறந்தே போயிட்ட காருண்யா. இப்ப எல்லாம் உன்‌ சுப்ரபாதம் அலாரம் இல்லாம் ரொம்ப கஷ்டப்படுறேன்.” என்று பேச, அனைத்திற்கும் பதில் தந்து கொஞ்சம் போல இரண்டு மூன்று முறை பேசியது.

இன்று காலையில் எழுந்ததும், சமையலை முடித்து ராவணன் எழுவதற்காக காத்திருந்தாள்.
ஞாயிறு என்பதால் எழுவதற்கே யோசித்தான். எங்கே எழுந்தால் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும். ஏதேனும் பேசி தொலைக்க வேண்டும். அதற்கு உறங்குவது, சால சிறந்தது என்று ராவணன் முடிவெடுத்து கும்பர்கர்ணன் வேலையை சரியாக செய்தான். ராவணனுக்கு எளிதான வேலை. காருண்யாவுக்கு தான் இந்த ஞாயிறை, கடத்த பிரம்மபிராய்த்தம் கண்டாள்.

என்ன நினைத்தாளோ, ராவணனுக்கு பிடித்த விஷயம் செய்ய ஆசைக்கொண்டாள்‌.
அதன் பொருட்டு துப்பட்டாவை முகமெங்கும் மூடி, அவ்விடம் வந்து சேர்ந்தாள்.
காருண்யா வாழ்நாளில் வரவேண்டிய, அவசியமேயில்லாத இடம். மீன் மார்க்கெட்.

ராவணனுக்கு பிஷ் பிரியாணி செய்திடலாமென்று வந்து சேர்ந்தாள்.

அப்பொழுது தான் மீன்கள் இறக்குமதியாகியிருக்க வேண்டும். ஆனாலும் வாடை வயிற்றை புரட்டி பிரட்டியது. ராவணனுக்காக எதையும் சமாளி. யாரோ ஒருத்தி ஷாலினி அவளெல்லாம் சமைத்து கொண்டு வந்து நீட்டுகின்றாள்‌. நீ அவள் சரிபாதி‌. அவனுக்கு பிடித்ததை செய்தாளென்ன. ரோஸ்லின் சொன்னாளே. மீனை துண்டாக்கி வெட்டி கழுவி தந்துவிட ஆட்களுண்டு. வீட்டுக்கு வந்து க்ளவுஸ் அணிந்து, சமைத்து ஸ்னானம் செய்து கொள்ளலாமென முடிவெடுத்தாள்.

முன்ன பின்னே மார்க்கொட்டை கண்டிருந்தாளல் இங்கே வந்திருக்கவே மாட்டாள்‌. ஆர்வக்கோளாறில் வந்துவிட்டு, குமட்டலை சகித்து, ஆங்காங்கே மீன் கழிவுகளை மிதித்து, மற்றவர்கள் கண்டு குமட்டலை வேறு அடக்க பாடுபட்டாள். என்ன தான் முகத்தை துப்பட்டா கொண்டு கட்டி வாடையை விரட்ட போராடினாலும் அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

“அக்கா… எங்காத்துகாரர் பிஷ் ப்ரியாணி சாப்பிடுவார். இதுல எந்த மீன்ல அது செய்ய முடியுமோ, அதுக்கு வசதியோ நேக்கு மீன் கட் பண்ணி விரசா கொடுக்கறேளா. கொஞ்சம் சீக்கிரமா தர்றேளா” என அவசரப்படுத்தி கூற, மீன்காரம்மா காருண்யாவல ஏறயிறங்க பார்த்தார்.

குங்கமம், கோபுரம் பொட்டு, தேகத்தின் நிறம், இதில் அடிக்கடி துப்ட்டாவை மீறி முகத்திற்கு கை செல்கின்றதென்றதும் “ஐயர் பொண்ணா?” என்று கேட்க, சங்கடமாய் தலையை ஆட்டினாள்‌. அவளுக்கு மீனை எடைப்போட்டு ஆயவும் முன்னால் வந்த பெண்மணியோ, “ஏன்க்கா நான் தானே முத்லல வந்தேன்.” என்று நியாயம் பேசினார்.

“ஏ.. இருடி.. இந்தபுள்ள ஐயரு பொண்ணு. லவ் மேரேஜா இருக்கும்‌. பாவம் இங்க வந்து நிற்குது‌. முதல்ல அதுக்கு கொடுத்து விடறேன். வாடையை சகிக்க கஷ்டமாயிருக்கும்ல” என்று அதட்டினார். ஏற்கனவே வாடிக்கையாக வாங்கும் பெண் என்று பேச்சிலேயே புரிய குமட்டிக்கொண்டு பொறுத்துக் கொண்டிருந்தாள் காரண்யா.

மனதிலோ ‘அவா என்னடான்னா நமக்குள்ள காதலே வரலைன்றா. இவா என்னடான்னா ல்வ மேரேஜானு கேட்கறாள்‌. பகவானே… இந்த இடத்துல வந்தேன்னு ஆத்துல பாட்டிக்கு தெரிந்தது என்னை கொண்ணே போட்டுடுவா‌. இதுக்கு எத்தனை யாகம் நடத்தி தீட்டி கழிக்கணும்னு என்னை பிழிஞ்சி எடுப்பா.
எல்லாம நீ இந்த ராவணனால்..’ என்று எண்ணிட மீனின் கழுத்தை வெட்டி, அரியவும், அதிலிருந்து வந்த இரத்தமும் குடலும் அதிகமாக மயக்கத்தை தர, தள்ளாடினாள்.

“எக்கா… மயங்குதுக்கா இந்த பொண்ணு” என்று கையிலிருந்த பையை கீழே போட்டு காருண்யாவை பிடித்தார் அருகே இருந்த பெண்மணி.

அவ்விடம் பரபரப்பாக, “அந்தா அங்க உட்கார வை.” என்று சற்று தள்ளி அமர வைக்க, “ஏன்மா‌.. நீ ஏன் இங்க வந்த. வூட்ல புருஷனை அனுப்ப வேண்டியது தானே.” என்று கேட்க, காருண்யாவோ மயக்கத்தில் “நான் வீட்டுக்கு போகணும்” என்று அரை மயக்கத்தில் கூறினாள்.

“எப்படி போவ?” என்று கேட்க, இமை சொருகியது.

“போன்ல இங்க உங்க வீட்ல யாராவது இருந்தா வரச்சொல்லு.” என்று கூற, “போன் எடுத்து ராவணா இருக்கும்” என்று கூறி சோர்ந்து நின்றாள்.

அருகேயிருந்த பெண்ணோ போனை வாங்கி Ravanaa என்ற பெயரை தாங்கி அழைக்க, சலித்தபடி, அவனோ “என்ன?” என்று கேட்டான்.

“ஏம்பா… உன் பொண்டாட்டி இங்க மயங்கி விழுந்துட்டா. கொஞ்சம் வர்றியா.” என்ற குரலில், ‘எந்த தெரு எங்க?” என்று பதட்டமாய் மாறினான்.

இடத்தை கூறியதும் தலையிலடித்து, ‘இதோ வந்துடறேன்” என்று புறப்பட்டான்.
ஷார்ட்ஸ் ம்ட்டும் அணிந்தவன் கைக்கு எட்டிய டீஷர்ட் போட்டு பைக்கை எடுத்து புறப்பட்டான்.

‘இப்ப இவ எதுக்கு மீன் மார்க்கெட் போனா. கடவுளே அம்மாவுக்கு தெரிந்தது என்னை தான் திட்டுவாங்க’ என்று அரக்கபறக்க வந்து சேர்ந்தான்.

மீன் மார்க்கெட்டையே ஒரு வழி செய்து சூழ வைத்திருந்தாள் காருண்யா.

இவன் போனதும் ஒட்டு மொத்த ஆட்களும் அவன் வந்த திசையே பார்வையிட்டனர்.

“காரு..காரு” என்று கூப்பிட, “உனக்கு மீன் வாங்க தான் வந்துச்சா? என்ன லவ் மேரேஜா. ஏன்பா தனியா அனுப்பின. மீன் தலையை ஆயவும் மயங்கிடுச்சு. பாவம் ஐயர் பொண்ணு இங்க எல்லாம் வந்தா செட்டாகுமா? இத்த அனுப்பிட்டு வீட்ல நீ இன்ன பண்ணுற” என்று கேள்விகள் துளைத்தது.

“இவ இங்க வர்றானு எனக்கு தெரியாதுக்கா‌.” என்றவன் காருண்யா கன்னத்தை தட்ட, “வீட்ல யாருமில்லையா?” என்று கேட்டு காருண்யாவின் பர்ஸ் போன் நீட்ட, இல்லையென்று தலையாட்டினான்.

“எந்தூரு” என்று கேள்விகள் துளைக்க “அக்கா நான் இப்ப இவளை தூக்கிட்டு போறே தேங்க்ஸ்” என்று அலோக்காக தூக்கிட, ஆட்டோவை நிறுத்தி அவளை ஏற்றினான். நல்லவேளை பேரம் பேசாமல் அவளை ஆட்டோவில் கிடத்தினான்.

மீன்காரம்மாவோ “தம்பி மீன்” என்று கொடுக்க வெட்டிய துண்டை வேண்டாமென்று மறுக்க வழியின்றி வாங்கிவிட்டான்.

“தேங்க்ஸ் அக்கா” என்றவன் ஆட்டோகாரரிடம் ”அண்ணன் பைக்கை பாலோவ் பண்ணி வாங்க” என்று கூறிவிட்டு பைக்கை எடுத்தான்.

  'இவ ஏன் இங்க வந்தா? எனக்காகவா?' என்று அதிர்ச்சியாகி மூளை ஸ்தம்பித்தது. 

வீட்டுக்கு வந்ததும், பைக்கை நிறுத்திவிட்டு காருண்யாவை தூக்க ஓடினான்.
பணத்தை தந்துவிட்டு, காருண்யாவை தூக்கி வீட்டுக்கு வந்தான். கதவை திறக்கவேண்டுமே என்று விழிக்க, அவசரத்தில் கதவை பூட்டாமல் வந்ததை அப்பொழுது தான் கவனித்தான்.

‘சுத்தம்.” என்று முனங்கி, அவளை மெத்தையில் கொண்டு வந்து, படுக்க வைத்தான்.

“சாரி.” என்று அரை மயக்கத்தில் காருண்யா கூற, அவளது முகத்தில் அணிந்திருந்த துப்பட்டாவை நீக்கினான்.

சோர்ந்து போய், வாந்தியை அடக்க முயன்று மயக்கத்தில் இருப்பது புரிய முதலில் எலுமிச்சை ஜூஸ் தயாரிக்க விரைந்தான்.

உப்பும் சர்க்கரையும் சேர்த்து ஜூஸை கொண்டு வந்து புகட்ட, கண்ணீரை கட்டுப்படுத்தி பருகினாள்.

ராவணன் அவள் முகவாட்டத்தை கண்டு தவறிழைத்தவனாக, “கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று மெத்தையில் சாய்த்துவிட்டு ஹாலுக்கு வந்தான். அவளுக்குமே உறக்கம் தேவைப்பட்டது. கடந்த சில தினமாக உறக்கத்தை மறந்திருந்தாள்‌.

வெளியே காக்கா கூட்டம் அதிகமாக கத்துவதை உணர்ந்து, வெளியே வர பைக்கில் கவரை கொத்திக் கொண்டிருந்தது காக்கா கூட்டம்.

கவர் கிழிப்படாமல் ஒட்டை மட்டும் இருக்க, மீன் கவரை வேறு வீட்டிற்குள் கொண்டு வந்து கிச்சனில் வைத்தான்.
‘இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள், அன்னைக்கு முட்டையை குப்பை கூடையில் போட்டவ காருண்யா. இன்னிக்கு உனக்காக மீன் கடைக்கு போய் மீன் வாங்கியிருக்கா? இதுக்கு பெயர் என்ன ராவணா?’ என்று மனசாட்சி கேலி செய்து சிரிக்க, ராவணனோ கிண்ணத்தில் வைத்துவிட்டு சோபாவில் வந்து சாய்ந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

16 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-32”

  1. Dharshinipriya

    Super sis nice epi 👌😍❤️ eppdi erundha kaarunya va eppdi maathitiye pa raavana😂 unakaga ennalam pandra paaru eppovavudhu unaku love varuma parpom 🧐🤔

  2. ❤️❤️❤️💖💖💖 inemel Karunya Olunga irupa ava dan thappa pesiruka nu avaluku purichuruchu bt Ravana ne dan ungaluku ulla love ila nu thevai ilama yosichutu Iruka. Oruvela Apadi irukumo Karunya pregent ah irupalo

  3. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 32)

    அது சரி, அவனுக்கு பிடிக்கலைன்னா, பிடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியது தான்..
    அது சாப்பாடானாலும் மத்தது எதுவானாலும் சரி.

    அதே மாதிரி, ராவணனும் ந்ந்துக்க வேண்டாமா..? இப்ப இவன் என்ன செய்யப் போறான் அவளுக்காக..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Kalidevi

    Ava love panra athanala tha avlo possessive agura nu puriyalaya ravana unaku ipo enakaga va pona fish vanga pona nu yosikira , karu annaike pesalamnu kupta la utkarnthu pesina problem solve aga pothu ethuku intha ego

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *