Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-36

ஐயங்காரு வீட்டு அழகே-36

அத்தியாயம்-36

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

      “அம்மா.. எரியுது” என்று அலறாத குரலில் ராவணன் கூப்பாடு போட, “நன்னா சத்தமிடுங்கோ. பைக்கை பார்த்து ஓட்ட என்னவாம்?” என்று காருண்யா சிடுசிடுக்க, “உன்னை செக்கப்புக்கு கூட்டிட்டு வந்தா என்ன பண்ணற. எனக்கு ஹாஸ்பிடல்னாலே அலர்ஜி” என்று கடுகடுத்தான்.

  “ஆஹ்…. ரிப்போர்ட் வர நாழியாகும். நீங்களா இப்படி செல்ப் ட்ரீட்மெண்ட் எடுத்தா நன்னாயிடுமா? ” என்று அதட்டினாள்.

    “இந்த அதட்டலை கூட மிஸ் பண்ணினேன்டி” என்று பேச, “செத்த சும்மாயிருங்கோ நர்ஸ் நம்மளையே பாக்கா” என்றதும், நர்ஸை கண்டு வெட்கப்பட்டு மனைவியை பார்த்து ரசித்தான்.
   ஓரளவு காலில் பேண்டட் கட்டி முடித்தனர். மருந்து மாத்திரையை தரவும் பெற்றுக்கொண்டான்.
  அங்கிருந்த மருத்துவமனையில் இருவரும் காத்திருக்க, குழந்தைகள் புகைப்படங்கள் ஆசையை தூண்டியது.
  சிலரெல்லாம் குழந்தைக்காக ஏங்கி வந்திருப்பார்கள் போல முகம் வாட்டமாய் இருந்தது. வயதும் கூடுதலாக இருந்தது.

  “சப்போஸ் குழந்தை இல்லைன்னு வந்தா… அடுத்து இரண்டு மாதத்துல குழந்தைக்கு ட்ரை பண்ணணும். அதை விட்டு அழுது பீல் பண்ண கூடாது ஒகேவா” என்று ராவணன் கூற, ”இல்லைன்னா கூட சும்மாயிருபேளா. பீல் பண்ண மாட்டேன்” என்று கிசுகிசுத்தனர்.

  ரிஸப்ஷன் பெண் “காருண்யா யாரும்மா” என்று கூப்பிட, ராவணன் “என் ஓய்ஃப்” என்று எழுந்தான். “ரிப்போர்ட் டாக்டரிடம் போயிடுச்சு. நீங்க போங்க” என்று அனுப்ப, இருவர் கைகோர்த்து டாக்டர் அறைக்கு சென்றார்.

  “மேரேஜாகி எத்தனை வருஷமாகுது” என்று கேட்க, “வர்ற பிரதோஷம் வந்தா செவன் மந்த் டாக்டர்.” என்றாள் காருண்யா.

  “அசலா ரிலேட்டிவா?” என்று கேட்க, “அசல் டாக்டர்‌.” என்றான் ராவணன்

  “நீங்க லவ் மேரேஜா?” என்று கேட்க, இல்லை டாக்டர்… அரேஜ்டு மேரேஜ் தான்.” என்றாள்.
   “நீ வாம்மா” என்று அங்கிருந்த அறையிலேயே திரைக்கு மறைவாக அழைத்து சென்றார்.

  ராவணனோ, கூடவே போலாமா வேண்டாமா?’ என்று திணற, “பேபி மூவ் மெண்ட்ஸ் நல்லாயிருக்கு” என்றார்.

  “நான் கன்சீவா இருக்கேனா டாக்டர்” என்று காருண்யா கேட்க, “ஆமாம்மா” என்று கூற அகமகிழ்ந்தாள்.

   “பேபி க்ரோத் நல்லாயிருக்கு. நீங்க தான் ரொம்ப சோர்வாயிருக்கிங்க. நல்லா சாப்பிடுங்க. டேப்ளட் எழுதி தர்றேன்” என்று கூற, ராவணனுக்கு புரிந்தது. தன்னை அப்பாவென்று அழைக்க ஒரு ஜீவனை காருண்யா பெற்றெடுக்க போகின்றாள் என்ற ஆனந்தத்தில் திளைத்தான்.

  டாக்டரோ எதை சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டுமென்று தெளிவாக கூற, காருண்யா கவனமாய் கேட்டாளோ என்னவோ ராவணன் கேட்டுக்கொண்டான்.

ஹாஸ்பிடலிருந்து வெளியே வந்ததும், காருண்யா அமிர்தாவுக்கு போன் போட, ராவணனோ அவன் அம்மாவுக்கு அழைத்தான்.

    அமிர்தம்பாள் போனை எடுக்க நேரமாகவும், ரோகிணி போனை சிவராம் தான் எடுத்திருந்தார்.

“என்னடா.. அதிசயமா இருக்கு. நீயா போன் போடற.” என்று எடுத்ததும் வினவ, “ப்பா… அதிசயம் மட்டுமில்லை. ஆனந்தமும் அடைய போறிங்க. அம்மா இருக்காங்களா” என்று ஆரம்பித்தான்.

“ஆனந்தமா.. அப்போ வர்ற சனிக்கிழமை வீட்டுக்கு வர்றியா‌?” என்றார்.

  “எப்ப பாரு வீட்டுக்கு வா வான்னு டார்ச்சர்.  நீங்க சென்னை வாங்க.” என்றான்.

  “போடா…. அங்க வந்தும் நீயும் மருமகளும் வேலைக்கு போயிடுவிங்க. தனியா வீட்ல அடைக்காக்கணுமா? அதுக்கு சொந்த வீட்ல இருந்துப்பேன்” என்றார்.

“பச் வளவளன்னு பேசறேளே. பாட்டி வேற போன் எடுக்க மாட்டேங்குறா. விஷயத்தை முதல்ல சொல்லமுடியலையே” என்று காருண்யா பேசிவிட்டு மீண்டும் போனில் முயற்சித்தாள்.

  “அப்பா… நானும் காருவும் கல்யாணமாகி முதல் முறை சேர்ந்து சென்னை கிளம்பறப்ப கார்ல கேட்டிங்களே… என்னடா வாந்தி எடுக்க வச்சிடுவியானு. உங்க மருமக இன்னிக்கு வாந்தி எடுத்துட்டா. பேரனோ பேத்தியோ வெல்கம் பண்ண ரெடியாகுங்க‌ அதுக்கு தான் போன் போட்டேன். அம்மா இருக்காங்களா?” என்று பட்டென்று உரைத்தான்.‌

  “டேய்… நிஜமாவா? கங்கிராஜிலேஷன்டா இரு… போனை ஸ்பீக்கர்ல போடறேன். இன்னொரு முறை சொல்லு. உங்கம்மா கேட்கட்டும்.” என்றார்.

“அப்பா அம்மா… நீங்க பாட்டி தாத்தா ஆகப்போறிங்க. என் பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா.” என்றான்.
 
  “அச்சோ ஏன் கத்தறேள்‌ ரோட்ல போறவா வர்றவா திரும்பி பார்க்கறா. செத்த மெதுவா பேசுங்கோ” என்று அதட்டுவதையும் கேட்க முடிந்தது.
 
  “ராவணா.. சந்தோஷம்டா. கங்கிராஜிலேஷன். மருமககிட்ட கொடு” என்று கூற, போன் கைமாறியது.

“அம்மாடி… என்னடா பண்ணுது” என்று ரோகிணி கேட்க, ரத்தின சுருக்கமாய் தலைசுற்றல் மயக்கம் இருந்ததால் மருத்துவமனை வந்ததாகவும் கருவுற்று இருப்பதை டாக்டர் ஊர்ஜிதப்படுத்தியதையும் உரைத்தாள்.

அத்குபின் ரோகிணி அறிவுரை என்று ஆரம்பிக்க “அம்மா அம்மா… நேர்ல வந்து அறிவுரையை அள்ளி வழங்குங்க. வீட்டுக்கு போகணும்” என்று போனை வாங்கி உரைத்தான். 

   “மாமியார் மருமக பேசின உனக்கு மூக்கு வேர்த்துடுமே. ஜாக்கிரதையா வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நாங்க அமிர்தா மாமியோட சேர்ந்து வர்றோம்” என்று அணைத்தார்.

   பைக்கில் தோளில் கைவைத்து முதுகில் சாய்ந்திட, ராவணனோ, “எத்தனை நாள் ஆச்சுடி. நீ தோள்ல கைப்போட்டு” என்று அவளது கரத்திற்கு முத்தம் வழங்க, “அச்சோ ரோட்ல என்ன சேட்டை. இத்தனை நாள் நான் தோள்ல கை வைப்பேன்‌. நீங்க தான் தோளை குலுக்கி கையை தட்டிவிட வைப்பேள்‌. அப்ப பார்க்கறச்ச நிஜ அசுரனாட்டும் இருப்பேள்‌.” என்றாள்.

  ராவணன் கண்ணாடி வழியாக மனைவியை பார்த்து, “உங்க பாட்டிக்கிட்ட சொல்லிட்டியா?” என்றான்.

“போன் எடுக்கலை. ஆத்துல இருந்தா போன் எடுப்பா. ஒரு வேளை வெளியே எங்கயோ போயிருப்பா. மாமி வந்ததும் சொல்வா. அவாளே போன் பண்ணுவா பாருங்கோ‌” என்றுரைத்தாள்.

“அப்பாவுக்கு போன் போட்டேன். அவருமே எடுக்கலை” என்று குறைப்பட்டாள்.

  “ஆமா.. சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு ஏதோ ரிஷப்ஷன் இருந்ததாம் போவதாக சொன்னார்.” என்றான்.

“ஆமால்ல… எங்காத்துக்கு எப்பவும் வருவாளே அந்த மாமியோட பொண்ணுக்கு ரிஸப்ஷன்.” என்றவளை இறங்கு என்றான்.‌
 
   “எதுக்கு ஆத்துக்கு போகாம இங்க நிறுத்தறேள்” என்று கேட்க அங்கிருந்த பாட்டியிடம் மல்லிப்பூ வாங்கினான்.

  “இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.” என்று ஆனந்தமாய் வீட்டுக்கு சென்றார்கள்.

   அங்கே சாரதா அக்கா செய்து வைத்த மீன் குழம்பு இட்லி என்று சுவைத்தான்.
  ‘அந்தக்கா அவங்களிடம் போன் பண்ணி சொல்லு” என்று கூற, தக்காளி தொக்கு தொட்டு இட்லியை விழுங்கியவள் அதுப்படி செய்தாள்.

  சாரதா அக்கா மிகவும் சந்தோஷப்பட்டார். நாளை முதல் வேலைக்கு வருவதாகவும், மாலை ஆறு மணிக்கு கிளம்புவதாகவும் பேசிவைத்ததால் இனி வீட்டு வேலையிலிருந்து காருண்யா சுதந்திரம் அடைந்தாள்.

     நாளை அலுவலகம் சென்றதும் மற்றவர்களுக்கு இனிப்பு தர கடையில் வாங்கிவிட்டான் ராவணன்.

  காருண்யாவுக்கு அமிர்தமிடமிருந்து போன் வரவும், “பாட்டி” என்று ஆரம்பிக்க, “உன் மாமி வந்ததும் வராததும் வாசல்ல நிற்க வச்சி விஷத்தை சொன்னா. நேக்கு மனசு நிறைஞ்சிடுச்சிடிம்மா.” என்று கூற, “அப்பா இருக்காரா பாட்டி” என்று கேட்க, “உன் தோப்பனார் பக்கத்துல இருந்து கண்ணுல ஜலத்தை வச்சிண்டு நிற்கான். என் குழந்தைக்கு குழந்தை வரப்போகுதானு” என்று கொடுக்க, “அம்மாடி… சந்தோஷமா இருக்குடா. டாக்டரிடம் போனியா? இரண்டு நாள்ல குடும்பமா வர்றோம். மாப்பிள்ளையிடம் கொடு… வாழ்த்து சொல்லணும்” என்று கேட்க, “பக்கத்துல தான் இருக்கேன் மாமா.” என்று பேசினான்.

”வாழ்த்துகள் மாப்பிள்ளை‌. வீட்டுக்கு ஒரு ஜீவன் வரப்போகுது. ரொம்ப சந்தோஷம்” என்று பேச, “ஆமா மாமா‌” என்றான். 
 
  “குழந்தையை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. கூடமாட ஒத்தாசைக்கு அம்மாவை வேண்டுமின்னா அனுப்பறேன்” என்றான்.‌

“அச்சோ… வயசான காலத்துல எதுக்கு மாமா பாட்டிக்கு சிரமம். இங்க சாரதா அக்கானு காருண்யாவுக்கு தெரிந்தவங்க நாளையிலிருந்து வீட்டு வேலைக்கு வரச்சொல்லிட்டேன்.
  நீங்க கவலைப்படாதிங்க. காருண்யாவை கண்ணுக்குள்ள வச்சிப்பேன்.” என்று அவள் இமையில் முத்தமிட போக, மீன் வாடையில் குமட்டலுடன் சென்றாள்.

‘”மாமா காரு வாமிட் எடுக்கறா நான் அப்பறம் பேசறேன்” என்று அணைத்து பின்னால் வந்தான்.

“கொஞ்சம் ஸ்னானம் பண்ணிடறேளா? உங்களை ரொம்ப நாள் கழிச்சு கட்டிப்பிடிக்க ஆசைப்பட்டேன். இந்த மீன் வாடை அதை தடுக்குது” என்றாள் முகத்தை சுழித்து. பழைய சண்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டாள்.

ராவணனோ “டூ மினிட்ஸ் மேகி மாதிரி வர்றேன் பாரு.” என்று செல்ல, அதற்கு பிறகே காலில் அடிப்பட்டதை நினைவு வந்து கதவை தட்டி, “ஏண்ணா… கால்ல ஜலம் பட்டுட போகுது. படாம பார்த்துக்கோங்க.” என்று எச்சரிக்கை செய்ய, “ம்ம் ஓகே” என்றவன் கையில் மீன் வாடை வராமல் வாயுக்கு மௌத்வாஷ் என்று குளித்து முடித்து வெளியே வந்தான்.

  இத்தனை நாள் பிரிந்திருந்தவர்கள், இன்று தங்கள் இருவருக்கும் வரவாக குழந்தை வருவதை வேறு அறிந்தவர்கள், நிறைய நிறைய பேசினார்கள்.
  
  சிறுவயதில் அவளோடு விளையாடிய பொழுது தன்னவளாக மணக்கும் வாய்ப்பு இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இன்று காருண்யா தன்னவளாக தன் கைவளைவில்….

   அவளுமே ராவணனின் வெற்று மார்பில் தன் தாமரை முகம் பதித்து, நெஞ்சில் வளர்ந்த ரோமத்தில் கைகளால் விளையாடி கதையளந்தாள்.

  நாளைக்கு ஆபிஸ்ல போனதும் ரோஸ்லினுக்கு ஸ்வீட் கொடுக்கறச்ச, நான் கன்சீவ் ஆனதையும், உங்களுக்கு கால்ல அடிப்பட்டதை கேட்பா.
  சண்டை சண்டைன்னு சென்னேளே என்னடி இது நீ பிரகணெண்டானு கேலி செய்ய போறா.” என்று கூற, “அதுக்காக கீழே விழுந்து வாறியதுக்கு ஸ்வீட் தர்றேன்னா சொல்ல முடியும்?” என்று ராவணன் தன் இலகுவான பேச்சில் பிடிச்சதை செய்ததில் சந்தோஷமாகவே அவ்விரவு அமைந்தது.

   இருவரும் நீண்ட நாள் மெத்தையில் பிரிந்திருக்க இன்று ஒருவருக்கொருவர் அணைத்து அன்பை பகிர்நது நேசத்துடன் நிறைய கனவுகளோடு பேசினார்கள்‌.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
 

10 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-36”

  1. Dharshinipriya

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum romba naal kazhichu happy naangalum happy ☺️ endha baby vechi rendu veetukum sanda varama erundha sari🙄

  2. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 36)

    அதான் கன்சீவ்ன்னு அவங்களே கண்டு பிடிச்சிட்டாங்களே…

    அப்புறம் என்ன..? ஒருவேளை, பேபி ஷவர், டெலிவரி, குழந்தையை தொட்டில்ல போடறது, காது குத்து வரை இழுப்பாங்களோ..? அது கூட பரவாயில்லை, ஆனா எங்க மறுபடியும் நாளைக்கே இன்னொரு சண்டை போட்டு எதிரும் புதிருமா மாறிடுவாங்ளோன்னு பக்பக்குன்னு இருக்கு. ஏன்னா, அதுக்கு ஏத்த மாதிரி தானாே அமிர்தா பாட்டியும், ரோகிணியும் கிளம்பி வராங்க. எங்க சாரதாவை பார்த்துட்டு நம்மவாளை வீட்டு வேலைக்கு வைக்கலையான்னு அதுக்கொரு நொட்டு சொல்லி சண்டைக்கு இன்னொரு அஸ்திவாரம் போட்டுடுவாங்களோன்னு பயமாயிருக்கு. ஏன்னா, ஆல்ரெடி அவங்களுக்குள்ளேயே இனி அடிக்கடி சண்டை நடந்துக்கிட்டுத்தானே இருக்குது, இதுல குழந்தை வேற வரப்போகுது, இப்பத்துலயிருந்தே அதுக்கு பேரு வைக்குறதுல இருந்து அது சாப்பிடப்போற சதப்பாடு வரைக்கும் இன்னும் அடிக்கடி சண்டையை புடிச்சு மண்டையை உடைச்சுக்கத்தானே போறாங்க…இனிமே என்ன புதுசா இருக்கப்போகுது சொல்லுங்க.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *