Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-38

ஐயங்காரு வீட்டு அழகே-38

அத்தியாயம்-38

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

    அறுவஞைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர் போல குழந்தை பேறுகாலத்திற்கு தயாராக இருந்தாள் காருண்யா.

அதனால் மருத்துவ விடுமுறை கேட்டு வீட்டிலிருந்தபடி காருண்யா வேலை செய்தாள். ராவணன் மட்டும் அடிக்கடி அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கவும் அலுவலகம் வருவான். அந்த நேரம் எல்லாம் சாரதா அக்கா முழு நேரமும் கூடவேயிருந்தார்.
  அவர்கள் கூடவேயிருந்தாலும், காருண்யாவை, அலுவலகம் சென்றாலும் மானிட்டர் செய்வதற்காக, வீட்டில் சிசிடிவியை தற்காலிகமாக பொறுத்தினான். அது நேரலையாக போனில் அவனுக்கு காட்டிவிடும். அதனால் போனில் அடிக்கடி துணைவியை பார்த்துக்கொள்வான். அவன் ஆத்ம திருப்திக்காக.

  இடையில் ஏழாம் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது ஊரையே கூப்பிட்டு காஞ்சிபுரத்தில் விழா கொண்டாடினார்கள். யார் கண்பட்டதோ அமிர்தா பாட்டிக்கு உடல்சுகவீனம் அடைந்துவிட்டது. அதிலிருந்து அவரை பார்க்கவே ஒரு ஆள்தேவை ஏள்பட்டது.
  சீனிவாசன் தாயை பார்த்துக் கொண்டாலும், ஒரு பெண் துணை தேவைப்பட்டது.
  ராவணன் ரோகிணியிடம், இங்க காருவை பார்த்துக்க நான் இருக்கேன் சாரதா அக்கா இருக்காங்க. நீங்க அமிர்தம் பாட்டியை பார்த்துக்கோங்க‌. எப்படியும் அப்பாவை தினமும் வெளியே சாப்பிட சொன்னா அவருக்கும் ஒத்துக்காது. டூ இன் ஒன் நீங்க காஞ்சிபுரத்துல இருப்பதே பெஸ்ட்” என்றான்.

  “என்னடா இது முத வாரிசு. கூடயிருந்து கவனிக்க நான் வேண்டாமா?” என்றார்.

“அம்மா… அவ வீட்ல இருந்தா கூட ஒர்க் ப்ரம் ஹோம்னு வேலை பார்ப்பா. குழந்தை பிறந்தப்பிறகு என்னை கூட கேட்க வேண்டாம். குழந்தையும் அவளும் மூனு மாசம் உங்க கூடவே வச்சிக்கோங்க. போதுமா” என்று கூறிவிட்டான்.

  அந்த வார்த்தைக்காக சம்மதம் கொடுத்தார். அமிர்தமோ ஒன்பதாம் மாதம் மட்டும் ஆரம்பிக்க, வலுக்கட்டாயமாக நீங்களாச்சும் காருண்யா கூட இருங்க. நான் தனியா சமாளிச்சிப்பேன்” என்று அனுப்பி வைக்க ரோகிணி வந்தார்.

   தினமும் அம்மா கையால் சமையல் காருண்யாவை கொஞ்சிக்கொண்டு பொழுதை கழித்திட, ராவணன் காருண்யா எதிர்பார்த்த தருணம் நிகழ்ந்தது.

  நல்லவேளை ஞாயிறு அதுவும் இரவு பத்து மணி அளவில் ராவணன் கண் அசந்த நேரம், அவனை உலுக்கி, “நேக்கு வலிக்குதுண்ணா.. பிராணம் போகுது. பிரசவ வலினு நினைக்கேன்.” என்று அழுதபடி கூற, ராவணன் பதட்டமாய் எழுந்து ஷர்டை தேடி பிடித்து அணிந்தான்.

“அம்மா… காருக்கு வலிக்குதாம்” என்று அழைக்க, அவருமே ஏற்கனவே எடுத்து வைத்த உடைமையோடு தயாரானார்.
 
  “பாட்டிக்கு போன் செய்யவா?” என்று கேட்க, “வேண்டாம் மாமி.. குழந்தை பிறந்ததும் போன் போடுவோம். லேட் நைட் இல்லையோ… பாட்டி பதட்டப்படுவா, பயந்துடுவா‌. நொடிக்கொரு முறை கால் பண்ணி உங்க பிராணத்தை வாங்குவா. அதோட கூடயிருக்க முடியலையேனு புலம்புவா” என்று அந்த வலியிலும் உரைத்தாள்.

  “ம்ம் அதுவும் சரிதான்.” என்றார்.
  ராவணன் கேப் புக் செய்ய போராடினான். ஆனால் சென்னையில்  கேப் கிடைக்க தாமதமானாலும் இருந்தது.

  சாரதா அக்காவை வேண்டுமென்றால் போன் போட்டு விவரம் கூற நினைத்தார்கள்.
  அவர்கள் தயாராக இருந்தால் உதவிக்கு கூடவே வரசொல்லும் முடிவில்… சாரதாவும் போன் அடித்ததும் மறுக்காமல் வருவதாக உரைத்தார். அவர் மனதுக்கு நிறைவாக முன்பு வாங்கிய சம்பளத்தை காட்டிலும் அதிகமாக ராவணன் வழங்க, அவர் வாழ்வும் சுமூகமாக செல்கின்றதே. ராவணன் சாரதா அக்கா பெயரில் பேங்க் ஏற்பாடு செய்து மாத சம்பளம் அதில் போட்டுவிடுவான். தேவையென்றால் பணத்தை எடுத்துக்க கூறி ஏடிஎம் கார்டு வரை எடுத்து தந்தான்.

  ஓரளவு பணம் கையிருப்பில் இல்லாமல் சேமிப்பாக மாற்ற திட்டம் வகித்தான். அதோடு அவர் கணவரை போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்று மனதை மாற்ற ஏற்பாடும் நிகழ்த்தியிருந்தான். அதன் விசுவாசம் சாரதா வீட்டில் ஒருவராக மாறியிருந்தார்.
  மருத்துவமனை செல்லும் வழியில் சாரதாவையும் அழைத்துக் கொண்டு கார் விரைந்தது. வலி விட்டுவிட்டு வர, காருண்யாவுமே விட்டு விட்டு கதற துவங்கினாள்.

  ராவணன் முன்னிருக்கையில் இருக்க, திரும்பி திரும்பி பார்த்து துடித்தான். காருண்யா கைகளை ரோகிணி பிடித்து ஆறுதல் கொடுத்தனர். சாரதா தோளில் சாய்ந்து “முடியலை மாமி. வலிக்குது” என்று கத்தினாள்.

   மருத்துவமனை வந்ததும் காருண்யா லேபர் வார்டில் அனுமதிக்கப்பட்டாள். “ராவணா… நேக்கு வலி தாங்கலை‌” என்று கண்ணீர் விழியோடு அவன் சட்டையை பிடித்துக்கெள்ள, அவன் கண்ணில் கண்ணீர் தேங்கியிருந்தது.

    அவளை பார்த்தபடி, வெளியேறியிருந்தான்.
அவள் துடிப்பதை செவியில் கேட்டு அன்னையை காண முடியாமல் திரும்பினான்.

“டேய் ராவணா அழுவறியா?” என்றதும், “அவ அலறுறாம்மா வார்த்தையால ஆறுதல் கூற முடியலை. அழுகையா வருது‌” என்றான்.‌

  “ஒரு உயிர் உலகத்துக்கு வருவது சும்மாவாடா? இரத்தமும் சதையுமா உடம்பை கிழிச்சி வெளிவரும் போது அதை கர்ப்பகத்துல ஏந்தின பொண்ணோட வலி அலறலா இருக்காதா?” என்றார்.‌

  ராவணனோ ரோகிணி கூறவும் உடல் சிலிர்க்க தன்னவள் வலியோடு போராட இவன் மனதோடு போராடினான்.

  பதினொன்று பத்திற்கு வீல்லென்ற அழுகையோடு உலகிற்கு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் காருண்யா.

   சற்று நேரத்தில் குழந்தையை கொண்டு வந்து காட்ட, ரோஜா நிறத்தில் பெண் குழந்தையை ரோகிணி கையில் வாங்கினார்.

“அம்மா.. அம்மா.. அழகாயிருக்கா. இது என் குழந்தை.” என்று பிஞ்சு காலில் முத்தமிட, டாக்டரோ நர்ஸிடம் பேசியபடி வெளியேறினார்.

“உள்ள போய் அவளை பார்த்துட்டு வா‌. லேபர்ல இருந்தப்ப டாக்டர் கூப்பிட்டப்ப போகமாட்டேன்னு சொல்லிட்ட.  இப்பவாது போய் பாரு.” என்று அனுப்பினார்.‌

    குழந்தைக்கு மீண்டும் ஒரு முத்தம் வைத்து லேபர் அறைக்கு வந்தான்.

  அப்பொழுது தான் லேபர் வார்டில் இருந்த நர்ஸ் அங்கே வேறு வேலை பார்த்திருக்க திரைச்சீலையை அகற்றி அவளை காண வந்தான்.

   காருண்யா லேசான மயக்கத்தில் சென்றியிருக்க, அவளது இடுப்பிற்கு கீழே இரத்தங்கள் ஆறாக சென்றதை அங்கிருந்த மற்றொரு நர்ஸ் சுத்தம் செய்ய முனைந்தும் ரத்தம் இன்னமும் வழிவதை கண்டு கைகள் நடுங்கியது.

  “ராவணா.” என்று காருண்யா குரல் கேட்க, அவள் தலையருகே சென்று நெற்றியில் முத்தமிட்டான்.
  “ஐ அம் சாரி. நீ அலறும் போது, உன் பக்கத்துல இருந்தும், அந்த வலியை வாங்கிக்க முடியாத ஆளா இருக்கவும், இங்க இருக்க முடியலை. அதான் வெளியே ஓடிட்டேன். நீ கதறுவதை பார்க்க முடியலைடி.” என்றான்.

“குழந்தையை பார்த்தியா?” என்றாள்.

“ரோஸ் கலர்ல இருக்கா. செம கலரு. குழந்தையை அம்மா வச்சியிருக்காங்க. எனக்கு தூக்க ஆசை. ஆனா கை உதறுது. இங்க பாரு.” என்றான்.‌

  “ம்ம்ம்” என்றாள் அசதியில்.

“நீ ரெஸ்ட் எடு. நான் வெளியே இருக்கேன்.” என்று புறப்படவே இருந்தான். உண்மையில் ரத்தத்தில் திளைத்து மயக்கத்தில் இருப்பவளை இன்னமும் பார்வையிட தைரியமில்லை.

   லேபர் வார்டிலிருந்து வெளியே வந்தவன், குழந்தையை ஃபிளாஷ்லைட் இல்லாமல் போட்டோ எடுத்து தந்தைக்கும் மாமனாருக்கும் அனுப்பினான்.

  அடுத்து தந்தை சிவராமிற்கு போனில் அழைத்தான்.
  “தூக்க கலக்கத்தில் எழுந்தவர், “ராவணா… இந்த நேரம் போன் பண்ணிருக்க? குழந்தை பிறந்துடுச்சா? காருண்யா எப்படியிருக்கா? என்ன குழந்தைடா?” என்று கேட்டார்.

  “பெண் குழந்தைப்பா. நார்மல் டெலிவெரி தான்‌. காருண்யா இப்ப அசதியில இருக்கா. அப்பா… வாட்சப்ல போட்டோ அனுப்பியிருக்கேன். ரோஸ் கலர்ல இருக்கா பாருங்க” என்றான் ராவணன்.

தட்டுதடுமாறி சிவராம் கண்ணாடியை எடுத்து போனில் நெட்வசதியை இணைத்தார்.  “கங்கிராஸ்டா குழந்தை அழகாயிருக்கா. என்னடா போட்டோ எடுத்துட்ட. உங்கம்மா திட்டலை.” என்றார்.‌

“அப்பா..  முதல் க்ளிக். ஃபிளாஸஷ்லைட் எல்லாம் ஆஃப் பண்ணி தான் எடுத்தேன். டோண்ட் வொர்ரி.” என்றான்.

  “சீனிவாசனுக்கு கால் பண்ணினியா?” என்றார் சிவராமன்.

  “மாமா தூங்கிட்டா இருந்தா இந்த நேரம் டிஸ்டர்பா இருக்குமே” என்றான்.

  “சீனிவாசன் வெளி திண்ணையில்  தான் இருந்தார். சரி நான் பார்த்து சொல்லறேன். வாட்சப்ல அனுப்பியிருக்க தானே?” என்றதும் ஆமென்றான்.

   சிவராமன் லைட்டை எல்லாம் போட்டு சீனிவாசன் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார். அப்படியொன்றும் பூட்டு போட்டு பூட்டிவிட்டு படுத்துறங்கவில்லை.
  கேட்டை திறந்து உள்ளே வந்தார். வெளிதிண்ணையில் தான் யூகித்தபடி படுத்திருக்க, சீனிவாசன் ஆழ்ந்த நித்திரையின் பிடியில் இருக்க சிவராம் தோளை தீண்டி சீனிவாசன்.. சீனு.. சீனு” என்றழைக்க, தூக்கத்திலிருந்து “யாரு” என்று எழுந்தார்.

  “நான் தான் சிவராமன்.” என்று கூற, “என்ன சம்பந்தி?” என்று கண்களை கசக்க, “என் பையன் வாட்சப்ல உங்களுக்கு ஒரு போட்டோ அனுப்பினான் பாருங்க” என்று கூறினார்.‌

  தூக்கத்தில் எழுப்பி போனில் வாட்சப்பை பார்க்க சொல்கின்றாரே என்று போனை மாடத்தில் தேடி எடுத்தார்.

    நெட் ஆன் செய்து பார்வையிட குழந்தை புகைப்படம் என்றதும் கண்ணில் நீர்க்கோர்த்தது.

   “எப்ப… எப்ப குழந்தை பிறந்தது. பையனா பொண்ணா? காருண்யா எப்படியிருக்கா?” என்று விசாரித்தார்.
காருண்யாவுக்கு சுகப்பிரசவம். பதினொன்று பத்துக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. காருண்யா நல்லாயிருக்கா. இப்ப தான் போட்டோ அனுப்பிட்டு எனக்கு கால் பண்ணினான். அதான் இங்க வந்துட்டேன்.” என்று கூறினார்.

  “ரொம்ப சந்தோஷம். காருண்யாவுக்கு குழந்தை பிறக்கறப்ப அம்மா கூடயிருக்கணும்னு ஆசைப்பட்டா. ஆனா விதி பிரயாணம் பண்ண முடியாம உடம்பு சரியில்லை இருக்கா. பகவான் தங்கை ரூபத்துல ஒரு அம்மாவை அனுப்பிட்டா.” என்று நெகிழ்ந்தார்.

  ”அட அதெல்லாம் யோசிக்காதிங்க. ஐயங்காரு நீங்க… என் மகன் அசைவம் சாப்பிடுவான். அதெல்லாம் தெரிந்தும் கல்யாணம் செய்து வைத்தது உங்க குடும்பம் உங்க ஆளுங்களை எதிர்த்து செய்தது பெரிய விஷயம். ரோகிணி அவ மருமகளுக்காக போனா. இப்ப பேத்தியை கையில் வாங்கிட்டு நிற்கா” என்றார்.

  “சீனு… அங்க யாராண்ட பேசிண்டு இருக்க” என்று அமிர்தம் பேச்சு சத்தம் கேட்டு விழித்து கேட்க, சீனிவாசனும் சிவராமனும் வீட்டுக்குள் சென்று விவரம் கூறினார்.

  “பெருமாளே.” என்று சேவிக்க, சிவராமனோ போட்டோவை காட்டினார்.‌

  ”உங்க கொல்லு பேத்தியை பாருங்க” என்றதும் ஆசையாக பார்த்து ஆனந்தப்பட்டார்.

   “நாளைக்கு போகலாமா சீனு” என்று கேட்க, “நான் போயிட்டு வர்றேன்மா. பஸ் படியில் ஏறயிறங்க நீங்க கஷ்டப்படுவேள். இப்ப தானே கட்டு போட்டு சரியாகியிருக்கு.” என்றார்.‌
அமிர்தம் முகம் வாட, “அம்மா… காருண்யா டிஸ்சார்ஜ் ஆனதும் நேரா இங்க தான் வருவா‌. ரோகிணியை அழைச்சிட்டு வந்து மூனு மாசம் இங்க தான் இருக்க போறா. கண்குளிர பார்த்துக்கோங்க.” என்றதும் அமிர்தம் எப்ப டிஸ்சார்ஜ்?” என்று கேட்டார்.

“எப்படியும் மூன்று நாளாவது இருப்பாங்க. இருங்க ராவணனுக்கு  போன் பண்ணி தர்றேன்.” என்று அழைத்தார்.

  ராவணனிடம் போனில் சீனிவாசன் மகளையும் பேத்தியையும் விசாரித்து கொள்ள, “மாமா அவசரப்பட்டு நாளைக்கே வரவேண்டாம். பஸ்ஸுக்கு தான் செலவாகும். நார்மல் டெலிவெரி என்பதால் மூன்று நாள்ல டிஸ்சார்ஜ். நேரா காஞ்சிபுரம் கொண்டு வந்து நானே விடறேன்.” என்றான்‌.

  ரோகிணியிடம் அமிர்தம் பேசி முடித்து வைக்க மணி ஒன்றானது‌.

  காருண்யாவை நார்மல் வார்டிற்கு அழைத்து வந்திடவும், காருண்யா அருகே குழந்தையை கிடத்தினார்கள்.
  ராவணன் அக்குழந்தையின் கையை பிடித்து முத்தமிட்டு, காருண்யாவின்  தலைகோதினான்.‌

சிறுவயதில் காருண்யா வீட்டில் சிவப்பு பந்து விழ, அதை எடுக்க அன்னையோடு வந்தவன் பார்வையில், பூபோட்ட ஊதாநிற கவுனில், காருண்யா அணிந்திருக்க அவள் அமிர்தா பாட்டியின் பின்னால் மறைந்து, தன்னை எட்டி பார்த்தவளின் முகம் வந்து காட்சியாய் செல்ல, இன்று அவள் தன் ஆருயிராக எண்ணியவனின் உதட்டில் ஒரு புன்னகை பூத்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-38”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 38)

    அப்பாடா..! ஒருவழியா குழந்தையும் நல்லபடியா பிறந்தாச்சு, அதுவும் பெண்குழந்தை மகாலட்சுமியோட வரவாக்கும்.

    பேறு காலத்துல பொண்டாட்டி எத்தனை விதமா கஷ்டப்படுறாங்கிறதை ஆபரேஷன் ரூம்ல போய் பார்த்தால் தானே ஆம்படையானுக்கு ஒரு பொண்ணோட அவஸ்தை என்னன்னே புரியும். பேறுகாலத்துல மட்டுமில்லாம

    கர்ப்பகாலத்துலேயும், பிரவசிச்ச அப்புறமும் ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை அவஸ்தைங்கிறதை வாய் வழியா சொன்னா புரியாது, கண்ணால பார்த்து தெரிஞ்சிக்கணும் அதெல்லாம்.

    கை குழந்தையை கவனிக்கிறதுல இனிமே தூக்கமும் போயிடும். ம்.. இதெல்லாம் ஆம்பிளைகளுக்கு எங்க தெரியப் போகுது, எப்பபுரியப் போகுது..? குழந்தை தொபுக்கடிர்ன்னு கையில வந்து விழுந்தது தான் தெரியும் போல.

    இதெல்லாம் தெரிஞ்சாலே பொம்பிளை மேல அநாவசியமா கை நீட்டறது தானா குறைஞ்சிடும்… நல்ல மனுஷாளுக்கு.

    😀😀😀

    CRVS (or) CRVS 2797

  2. Dharshinipriya

    Super sis semma epi semmaiya pogudhu story 👍👌😍 girl baby ya super 😘❤️💞 renduperum happy ya erukanum♥️😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *