👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » உயிர் உருவியது யாரோ-13

உயிர் உருவியது யாரோ-13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

யாரோ-13

அதிகாலை நற்பவிக்கு தரண் சுவாச கோளாறால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வரவும் வேகமாக புறப்பட்டாள்.

அன்று பார்த்து ஸ்கூட்டி வண்டி சதிசெய்ய, டென்ஷன் ஆனாள்.

சைராவோ கத்தியபடி இருக்க, “சைரா ப்ளிஸ் டென்ஷன்ல இருக்கேன். உன்னை வந்து வாக் கூட்டிட்டு போறேன்.” என்றவள் சைராவை கட்டி விட்டு, மெக்கானிக் கடையருகே வந்தாள்.

ஸ்கூட்டி விடுத்து திரும்ப, மதிமாறன் பைக்கோடு வருவது தெரிந்தது.

“மாறன் ஒரு ஹெல்ப்… உங்க பைக் தரமுடியுமா?” என்று கேட்டாள்.

“இல்லைங்க வந்தாவாசி பக்கமா போகணும்.” என்று மறுக்க, “மச் பெட்டர் நானும் வந்தவாசி பக்கமா தான் ஒரு மருத்துவமனைக்கு போகணும். ஆன் தி வே-ல டிராப் பண்ணிட முடியுமா?” என்று கேட்டாள்.

மாறன் மைக்கானிக்கை பார்த்து “இவரிடம் வண்டி ப்ரீயா இருந்தா கேளுங்களேன்.” என்று பதில் தர நற்பவி சூடானாள்.

“மாறன் டிராப் பண்ணறதுனா சொல்லுங்க. இந்த மழுப்பல் வேண்டாம். அங்க தரண் உயிருக்கு போராடுறான். பார்க்க போகலாம்னு கேட்டேன். இங்க ஏற்கனவே மெக்கானிக்கிடம் கேட்டேன் வண்டி எதுவுமேயில்லை” என்று கை விரித்தாள்.

நிலைமை புரிந்தவனாக “சரி வாங்க ஏறுங்க” என்று கூறிவிட்டு மெக்கானிக் ரவியிடம் “இப்பவும் ரெண்டு பேர் சேர்ந்து போறோம். என்ன கதை கட்ட முடியுமோ கட்டிக்கோ” என்று கோபமாக மதிமாறன் கூற நற்பவி புரியாது விழித்தாள்.

“சாரி மாறா… அன்னிக்கு பேசியது தப்பு தான். அதான் அடிச்ச அன்னிக்கே சொன்னியே” என்றதும் நற்பவியோ மனதில் மீனா கூறியது போல மாறனிடம் இவன் ஏதேனும் பேச அடித்திருக்கின்றாரா என்ற எண்ணம் உதித்தது. ஆனால் மதிமாறன் காதில் வாங்காமல் மெக்கானிக் ரவியை அசட்டையாய் கடந்தான்.

“கொஞ்சம் வேகமா போறிங்களா” என்று கூற மதிமாறன் வேகமெடுத்தான்.

மருத்துவமனை பெயரை கேட்டு வேகமாக பயணித்தான்.

நற்பவியோ அவனின் வேகத்தில் தோளை பிடிக்க, மாறன் கண்கள் தன் விரலில் பட்டு ரோட்டை கடக்கவும் தயங்கியவளாக எடுக்க முனைந்தாள்.

ஆனால் ரோடு சற்றே அந்த ஊருக்கு போகும் குறுக்கு பகுதியில் கரடுமுரடாக தோன்ற கையை அவன் தோள் வளைவிலேயே அழுத்தமாய் பதிய வைத்தாள்.

“ஐந்து நிமிஷம் போனா மெயின்ரோட் வந்துடும் பிறவு ரோடு நல்லாயிருக்கும்.” என்றதும் சரியென்று கூறி “ம்ம்” என்றாள்.

மாறன் வண்டி ஓட்ட அவனை பற்றியே சிந்திக்க ஆரம்பித்தாள்.

அக்கா மாமாவின் வளர்ப்புல நல்லவரா இருக்காரே என்ற வியப்பு அவளுக்கு அவனை ரசிக்க தூண்டியது.

கண்ணாடியில் அவன் இறுக்கமான முகம் தீவிர சிந்தனையை வெளிப்படுத்த, “என்னாச்சு டென்ஷனா இருக்கிங்களா? கோபமா பேசிட்டேனு” என்று கேட்டாள்.

“இல்லை நற்பவி. அன்னிக்கு மெக்கானிக் ரவி ரொம்ப பேசிட்டான் அடிச்சிட்டேன். இப்ப சாரி கேட்டாலும் யாரிடமும் பேச பிடிக்கலை.” என்று கூற, “அட ஒவ்வொருத்தருக்கும் விளக்கம் கொடுங்களேன். வீடு வீடா போய்.” என்றாள் நக்கலாய் மாறன் கண்ணாடி வழியே முறைக்க செய்தான்.

     “நாம வாழகிற வாழ்க்கையில் ஒவ்வொருத்தரிடமும் விளக்கம் கொடுத்து வாழ்ந்தா அந்த வாழ்க்கை வாழறதே வேஸ்ட். நம்மளை புரிஞ்சுக்கிறவங்களுக்கு நாம விளக்கம் கொடுக்கவே தேவையில்லை. நம்மளை புரிந்துக்காதவங்களுக்கு விளக்கம் வீணானது.

இதே ஊர்ல வந்தப்ப, ஞானவேல் ஷ்யாம் இரண்டு பேரும் என்னிடம் எப்படி முகம் காட்டினாங்க தெரியுமா?
இப்ப ஞானவேல் மேடம்னு மரியாதையா விளிக்கிறார். நீங்க என்னோட இருந்த அன்னிக்கு மறுநாள் கூட புரிந்து பேசினார்.

இந்த ஷ்யாம் முதல்ல என்னை பார்த்தாலே எரிந்து விழுவார். இப்ப கல்யாணத்துக்கு சொல்வேன் வரணும் மேடம் என்றார். இதுல மாணிக்க விநாயகம் வீட்ல விருந்துக்கு கூப்பிடறார். எல்லாம் நாம நடந்துக்கிற செய்கையில புரிந்து நடந்து தானா வர்றது  மரியாதை.

மெக்கானிக் ரவினு இல்லை யாராயிருந்தாலும் போக போக புரிந்துப்பாங்க. அப்பவும் புரியலையா அதுங்க மனசு சாக்கடைனு போயிட்டே இருக்கணும்” என்றாள் நற்பவி.

மதிமாறன் இலகுவாக முகம் மாறியது.

மருத்துவமனையும் வந்து சேர தரணை பார்க்க வேகமெடுத்தாள்.

மாறன் அவளுக்கு பின்னால் மெதுவாக நடந்து வந்தான்.

அங்கு செவிலியரிடம் தரணின் சிகிச்சை அறையை கேட்டு சென்றாள். அங்கே காவலர்கள் இருக்க, அவர்களிடம் நிலவரத்தை கேட்டாள்.

“நேத்து இரவு ரவுண்ட்ஸ் போறப்ப மூச்சு திணறிட்டு இருந்தார் மேம் உடனடியா மருத்துவமனைக்கு அழைச்சிட்டு வந்துட்டோம்.” என்று காவலர் ஒருவர் கூறவும் சிகிச்சை அறையிலிருந்து டாக்டர் வெளிவரவும் நற்பவி அவரிடம் பேச சென்றாள்.

“அவருக்கு ரொம்ப நாளாவே மூச்சு பிரச்சனை இருந்திருக்கும். இன்ஹலர் யூஸ் பண்ணிருப்பாரு. அன்னிக்கு அதை உபயோகப்படுத்தலை. என்னதான் விரைவா கூட்டிட்டு வந்தாலும் இன்னமும் உடல்நிலை மோசமான கட்டத்துல இருந்து தாண்டலை. இப்பவே பல்ஸ் குறைஞ்சிட்டே வருது. நாங்களும் ஆக்சிஜன் சப்ளை எல்லாம் வச்சிட்டோம். உள்ள பெரிய டாக்டர் பேஷண்டோட போராடிட்டு இருக்கார். உயிர் பிழைக்கிறது கடவுளிடம் தான் இருக்கு.” என்று கூறினார்.

நற்பவி இடிந்து அமர்ந்தாள். மாறனை கண்டதும் “லாட்ஜில இருந்து நானே இழுத்துட்டு வந்துட்டேன். இப்படி ஒரு உடற்பிரச்சனை இருக்குனு தரண் சொல்லவேயில்லை.” என்று வருந்தினாள்.

“அவன் சொல்லாததுக்கு நீ என்ன பண்ண முடியும் நற்பவி. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.” என்று குளிர்ந்த நீரை பருக கொடுத்தான்.

“தேங்கஸ்” என்று பெற்று கொண்டு குடித்தாள்.

பெரிய டாக்டரோ “பேஷண்ட் இறந்துட்டார்.” என்று கூறி கடந்து செல்ல, நற்பவி வாட்டர் பாட்டிலை நழுவ விட்டாள்.

காவலர் இருவரும் மற்ற பணியை ஜெயிலரிடம் கூறி அதன் படி செயலை தூரிதப்படுத்தினர்.

நற்பவி பார்வையாளராய் சம்பவங்களை காண ஆரம்பித்தாள்.

அவளுக்குள் கொலை செய்தது யார் யார் என்ற கேள்வியும், தரணின் உயிர் இழப்பும் வெகுவாய் பாதித்தது. பணியில் சந்தித்த முதல் அனுபவம் அல்லவா.

ஊரும் காவல்துறையினரும் ஷண்முகத்தை கொலை செய்தவனை நற்பவி என்பவள் பிடித்து சட்டத்தில் நிறுத்திவிட்டாள். அதனால் முதல் பணியே வெற்றியாக பிம்பம் காட்டியது.

அந்த தரண் சுவாசப் பிரச்சனையில் இறந்துவிட, ஒரு குற்றவாளி இறந்துவிட்டானென கடக்க வேண்டியவளோ வேதனைப்பட்டாள்.

அனைத்து காரியமும் முடிந்தப் பின்னரே மதிமாறன் நற்பவி ஊர் திரும்பினார்கள்.

வழியெங்கும் அமைதியாக வந்தவளை கண்டு மாறன் வேதனைபட்டான்.

ஆவனியாபுரத்தின் பாலம் பக்கம் ஓரமாக நிறுத்தினான்.

நற்பவியும் மெதுவாக நடையிட்டு பாலம் கீழே சிறிதளவு ஆங்காங்கே தேங்கிய நீரை கவனித்தாள்.

“இங்க பாரு நற்பவி. நீ போலிஸ்… அதுவும் உனக்கு கிடைத்திருக்கிற முதல் கேஸ் இது. இதுக்கே இந்தளவு பாதிப்புல இருந்தா அடுத்தடுத்து வர்ற கேஸ்களை எப்படி கையாள்வ?

நீ நினைக்கிற மாதிரி தரண் கொலை செய்யாம வேற யாரோ ஒருத்தர் செய்தாலும் கொலையான ஷண்முகம் சாக வேண்டியவர் தானே. ஒரு நல்லவன் சாகலையே. கெட்டவன் தானே.” என்று சமாதானம் செய்தான்.

“தரண் நல்லவனா இருந்தா?” என்ற அடுத்த கேள்வி கேட்டாள் நற்பவி.

“இதுக்கு என்ன சொல்ல… கொலை செய்ய போனவர் தானே. மேபீ அந்த இடத்துல ஷண்முகம் கொலையாகாமா இருந்தா தரண் நிச்சயமா அவன் தங்கை தற்கொலை செய்ததுக்கு பழி வாங்கி குத்தியிருப்பார். அப்பவும் கைதாகி இருப்பார். இது தான் பேக்ட். அதிர்ஷ்ட வசமா கொலை பண்ணலை ஆனா மாட்டிக்கிட்டார்.

இறப்பு ஒன்றும் நாம முடிவுப் பண்ணறதில்லையே. அது கடவுளா பார்த்து பண்ணறது. யார் தலையில எப்ப வரை உயிர் வாழணும்னு எழுதியிருக்கோ அதுவரை தான் வாழ முடியும். அது நீயோ நானோ நினைச்சா கூட மாற்ற முடியாது.” என்றதும் நற்பவி மனம் ஆமோதித்தது.

நற்பவி தாய் அப்படி தானே நன்றாக நடமாடியவர் திடீரென கேன்சர் வந்து ஒரு வருடத்திலேயே இறந்துவிட்டார். அப்படியிருக்க பிறப்பு இறப்பு என்பது யார் கையில் என்று தெளிவானாள்.

“என்னனு தெரியலை தரணை பற்றி அழுத்திட்டு இருந்த என் கவலை இப்ப இலகுவாக இருக்கு. தேங்க்ஸ் மாறன் நான் இங்க வந்ததிலருந்து எனக்கு சப்போர்டா இருக்கிங்க” என்று நன்றி நவில்ந்தாள்.

மாறன் மென்னகை உதிர்த்து கையை வண்டி பக்கம் நீட்ட, இருவரும் வண்டியில் ஏறி திரும்ப அன்மருதை கிராமத்துக்கே வந்தனர்.

நற்பவியை அவள் வீட்டுக்கு விட்டு விட்டு சைராவை வருடி விட்டு சிட்டாய் பறந்தான்.

“முதல் நாள் மதிமாறனை பயப்பட வச்சி உட்கார வச்ச, இப்ப பாரு என்னை விட உன்னை ஓவரா கறி கொடுத்து கரெக்ட் பண்ணிட்டாரா” என்று மொழிந்து விட்டு கொஞ்சி சென்றாள்.

குளித்து முடித்து தலை துவட்டியபடி வந்து சோபாவில் அமர்ந்தாள்.

இன்று காவல் நிலையத்திற்கு போகாததால் திவாகரிடம் போன் பேசி நிலவரத்தை கேட்டறிந்தாள்.

பின்னர் ஷண்முக சுந்தரத்தின் கொலைக்கு அவள் சேகரித்த விஷயத்தை ஒவ்வொன்றாய் மொத்தமாய் முன் வைத்து பார்த்து கொண்டே வந்தாள்.

தானாக அலைச்சலில் உறங்கி போனாள்.

-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “உயிர் உருவியது யாரோ-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!