Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-13

ராஜாளியின் ராட்சசி-13

அத்தியாயம்-13

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  அர்னவ் பாவனாவிடம் போனில் நறுக்கு தெரித்தாற் போல பேசிவிட்டு அணைக்க, எதிரே சந்தோஷ் வித்தியாசமாக பார்வையிட்டான்.‌

   அர்னவின் வீட்டிற்கு, சந்தோஷ் வந்திருந்தான்.‌ கைக்கு டிரஸிங் செய்ய ஒரு நர்ஸ் வந்திருக்க, அவர்கள் சென்றதும் நிதானமாக பார்த்து பேசி செல்ல வந்தான்.
 
  சந்தோஷ் வந்த நேரம் பாவனா அலைப்பேசியில் அழைக்க, நண்பன் இருப்பதை எல்லாம் கவனிக்காமல் பாவனாவிடம் எப்படி பேசிட எண்ணினானோ அதே டோனில் பேசி வைத்தான்.‌

‌ டிரஸிங் செய்த நர்ஸ் கட்டை பிரித்து துடைத்து, மருந்து வைத்து, பிறகு கட்டை கட்டிவிட்டு பஞ்சையும் பழைய கட்டையும் குப்பையில் போட்டு மருந்து ஏற்றிய குப்பியை எல்லாம் குப்பையில் போட்டாள்.

   அவள் பணத்தை வாங்கி விட்டு அறையிலிருந்து வெளியேற, “அர்னவ்… நீ நார்மலா இருக்கியா?” என்று சந்தேகத்துடன் சந்தோஷ் ஆரம்பித்தான்.

  ‘ஏன்… எனக்கென்ன? நார்மலா தான் இருக்கேன். கையை அசைக்க முடியுது. இந்த கட்டு பிரிச்சி சரியானதும் வானத்தை தேடி பறக்க வருவேன்.” என்றான்.

   ‘”பச்’ நான் அதை கேட்கலைடா” என்று சந்தோஷ் கூறியதும், நண்பன் அடுத்து எதைப் பற்றி கேட்க போகின்றான் என்று யூகித்தான். ஆனாலும் அவனாக வார்த்தை விடாமல் “பிறகு என்ன கேட்கணும்?” என்று தெரியாது போல கேட்டு வைத்தான்.

  “நீ அந்த பொண்ணிடம் மாலத்தீவுல மாட்டியப்பிறகு வேற மாதிரி தெரியற” என்று கேட்டதும், அர்னவ் ஒரு முறைப்பை பரிசாக தந்துவிட்டு, “என்ன மாதிரி?” என்றான்.

“தெரியலை… அதான் கேட்கறேன். அந்த பொண்ணுக்காக ஜீவனை அடிக்க போன.. அப்ப எதார்த்தமா இருந்தது.
ஆனா உன்னை அதுக்கு பிறகு சந்திக்கறப்ப, என்‌ அர்னவா இல்லை. நீ எப்பவும் ஸ்மைலிங் பேஸோட, ஜாலியா இருப்ப. இப்ப ஒரு மாதிரி டல்லா… சைலண்டா… ஏதோ சோகமா இருக்க” என்று கண்ணை பார்க்க, அர்னவ், அங்கிருந்த கண்ணாடியில் தன் உருவத்தை கவனித்தான்.

சந்தோஷ் சொன்னதில் அனைத்துமே அர்னவ் தன் முகத்தில் கண்டதில் சலித்துக் கொண்டான்.
இப்படியா அப்பட்டமாய் தென்படவும், சோபாவில் பேசாமல் விழுந்தான். காலை அங்கிருந்த டீப்பாய் டேபிளில் வைத்து, பஸில் க்யூப்பை திருப்பி வண்ணங்கள் ஒன்றிணைக்க முனைந்தான்.

சந்தோஷ் அர்னவின் தோளை தீண்டி, “அங்க என்னடா நடந்தது? உனக்கு பாவனாவை பிடிச்சிருக்கா?” என்று கேட்டிட, க்யூபை தவறவிட்டான்.

மீண்டும் அதனை எடுத்து, “நான் அவளை காதலிக்கறேன்னு நினைக்கிறேன். பட் சூயூரா தெரியலை.” என்றான் உள்ளுக்குள் சென்ற குரலில்…

“காதலிப்பதா நினைக்கறியா? சூயூரா தெரியலையா? அர்னவ்… நீ எதிலும் தெளிவா தானே ஆன்சர் பண்ணுவ? இதென்னடா… நினைக்கறேன்… தெரியலை…” என்று கேட்டு குழம்பினான்.‌

அர்னவ் சந்தோஷை கண்டு, ”அழகான பொண்ணுனு ரசிச்சேன் டா. ஆனா அவ மானத்துக்கு பங்கம் வந்தப்ப, அவ அக்சப்ட் பண்ணி ஜீவனோட குழைந்திருந்தா இந்த தாட்ஸ் வந்திருக்காது.
அவ மறுத்து ஜீவனிடமிருந்து அவளை காப்பாற்ற கேட்டப்ப, அவ கேரக்டர் பிடிச்சிருந்தது.
தீவுல தன்னந்தனியா நானும் அவளும் இருந்தப்ப, சம்டைம் அவ இன்னோசெண்டா பேசினப்ப லைக் பண்ணினேன்.
பட் அவளோட பேமிலி சிட்சுவேஷன் சொன்னப்ப, அவளுக்கு தேவை பணம். ஜீவனோட அவ இணங்கியிருந்தா அதெல்லாம் வாறி இறைச்சியிருப்பான். ஆனா அவ செய்யலை. வேலை போனாலும், அம்மா உயிர் போனாலும் செண்டிமெண்டா இடியட் ஆகாம, தனக்கு தன் மானம் முக்கியம்னு நினைச்சவளை கண்டு இம்பிரஸ் ஆகிட்டேன்.

என்னோட வாழ்க்கையை பத்தி நான் உலறினப்ப, அவ எனக்காக பீல் பண்ணியது பிடிச்சிருந்தது. முதல்ல என் மேல கோபமா.. அடுத்து சாரி கேட்டது. ஆக்சுவலி லைஃப்ல ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினா சண்டை சமாதானம் என்று கலந்து அவ என்னை ஈர்க்கணும்னு நினைச்சிருந்தேன்.
நான் பழகிய பெண்கள் பாதிக்கு மேல, நான் எது சொன்னாலும் ‘ஓகே டியர், நீ சரி தான், நீயே முடிவு பண்ணு’ இப்படி எனக்கு சாதகமா பேசி என்னை அவங்க பாய் பிரெண்டா தக்க வச்சிப்பதில் குறியா இருப்பாங்க. என்னை பத்தி முழு அலசலில் இல்லை. அது அவங்க முடிவெடுக்கற மெத்தட்ல தெரியும்.
பாவனா… ‘நீ தப்பு… உனக்கு இரக்கமில்லையா? நீ ஃபீல் பண்ணலையா? என்ன மனுஷன் நீ’னு என்னை திட்டி சண்டைப் போட்டா. பிறகு என் பாயிண்ட் ஆஃப் வியூல நியாயம் இருக்கும்னு யோசித்தா. என்னை பத்தி அனலைஸ்ல என் கேரக்டரை யூகிச்சிட்டா. அதுக்கு பிறகு சாரி கேட்டா.
எனக்கு அவளை பார்த்ததும் பிடிச்சது, பழகவும் பிடிச்சது, என்னோட தாட்ஸுக்கு, டேஸ்டுக்கு பெர்ஃபெக்டா இருப்பானு நினைக்கறேன்.‌” என்றான்.

சந்தோஷோ ஆனந்தமாய், “அப்பறம் என்னடா… லவ் பிரப்போஸ் பண்ணு. மேரேஜ் பண்ணு மேன். உனக்கு சொல்லியா தரணும். பேமிலி மேனா மாறு.” என்று குதூகலித்தான்.

அர்னவ் பெருமூச்சை வெளியிட்டு, “அவளோட அம்மாவுக்கு ட்ரிட்மெண்ட் பிளஸ் ஜாப் இரண்டுத்துக்கும் வழிவகை செய்து பேசினேன். அவ… ஜீவன்‌ மாதிரி என்னை நினைச்சி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம யாரும் உதவ மாட்டாங்க. எனக்கு யாரிடமும் உதவி வாங்க பயமாயிருக்கு என்பது போல பேசிட்டா.
நானும் என் லவ்வை சொல்லாம, கத்தி விட்டுட்டேன். ஆக்சுவலி நான் விரும்பறேன்னு கூட என்னால அப்ப வெளிப்படையா சொல்ல முடியலை.” என்று கூறினான்.‌

அர்னவின் முகவாட்டதை கண்ட சந்தோஷோ, “அந்த பொண்ணு என்ன முட்டாளாடா.‌‌ உன்னை ஜீவனோட இணைச்சி பேச, இப்ப கடைசியா என்ன தான் சொல்லிட்டு வந்த? இறங்கும் பொழுது ஏதோ பேசினியே” என்று கேட்டதற்கு, “அவ அம்மாவுக்கு ட்ரிட்மெண்ட் ஜாப் பத்தி தான் பேசினேன். அவ அதுல அவ அம்மாவுக்கு ட்ரிட்மெண்ட் மட்டும் பார்க்க போயிருக்கா. வேலைக்கு அப்பாவிடம் உதவி கேட்டு வரலை.” என்றான் அர்னவ்.

மருத்துவ செலவை மட்டும் காரியவாதியாக பயன்படுத்தும் பாவனைவின் செயலால், கோபம் கொண்ட சந்தோஷோ “என்னடா செல்பிஷ்ஷா நடந்திருக்கா?” என்று கேட்டு கத்த, “செல்ஃப்பிஷ்ஷா… நான் நினைக்கலை. அவ ஏன் என்னை தேடி வரலை? அவளுக்கு என்னை பிடிக்கலையானு வருத்தமாயிருக்கு.” என்றுரைத்தான்.

“முட்டாள் பொண்ணுடா.. டெர்ம்ஸ் ஆஃப் கண்டிஸஷனையே படிக்காம ஜீவன் மாதிரி ஆளோட பிரைவேட் விமானத்துல வந்த பொண்ணு. உண்மையான காதலை எப்படி உணர்வா. அந்த பொண்ணு முட்டாள், செல்ஃப்பிஷ். அவளுக்காக நீ குண்டு உரசி, கஷ்டப்படறது தான் நிஜம். விட்டு தொலை அர்னவ். உன் அழகுக்கு கேரக்டருக்கு வரிசையில் பொண்ணுங்க வருவாங்க. நீ அதுல செலக்ட் பண்ணாம… போயும் போயும் இந்த பொண்ணுக்காக ஏங்கிட்டு இருக்க.
என் பெயர்ல இருக்கற சந்தோஷம். என் பிரெண்ட் முகத்துல இருக்கணும்.
எனக்கு நீ ஆட்டிடியுட்டா இருக்கணும். இந்த உம்முனா மூஞ்சி அர்னவ் நல்லாயில்லைடா.” என்றான்.

“எனக்கென்ன ஆசையா… இப்படி இயல்பை தொலைச்சிட்டு நிற்க. என்னவோ மாதிரி பெயினா இருக்கு சந்தோஷ். சொல்ல தெரியலை… வலிக்குதுடா. இதுவரைக்கும் செண்டிமெண்டா எதையும் யோசித்ததில்லை. இப்ப… இவயில்லாம எப்படி திரும்ப நான் நானா மாறப்போறேன்னு நினைக்கவே, ஒரு மாதிரி பிளாங்கா இருக்கு” என்றான்.‌

அர்னவே சிறிது நேரத்தில், “கை மட்டும் சரியாகிட்டா… திரும்ப பிளைட் ஓட்ட வந்துடுவேன். அப்பறம் வானத்தை பார்த்துட்டா… எல்லாத்தையும் மறந்துடுவேன்.” என்று பதில் தந்தான்.

“என்னவோ போ… குயிக்கா சரியாகணும். நீ மாறணும். நீ ஆகாயத்தில் பறக்க பிறந்தவன். மேபீ.. நீ பிளைட் ஓட்ட அகைன் வரும் பொழுது பாவனாவை எல்லாம் மற்நதுடுவ” என்று ஆமோதித்தான் சந்தோஷ்.

அர்னவோ இருக்கலாமென்று மறுக்கவில்லை.

இங்கே.. பாவனாவோ ‘எனக்குள்ள என்னாச்சு? என்‌ மானத்தை காப்பாத்தினவன் என்பதால எனக்கு அர்னவ் மேல காதல் வருதா? அப்படி அந்த காதலை நான் அவரிடம் சொன்னா எப்படி எடுத்துப்பார்? அம்மாவுக்காக உதவியதால் நான் அதிக அட்வான்டேஜ் எடுத்துப்பதா நினைப்பாரா? அவரோட ஸ்டேடஸுக்கு நான் முதல்ல விரும்பலாமா?
இடத்தை கொடுத்த மடத்தை பிடிக்கற மாதிரி ஆகிடும்.
அர்னவ் சொன்ன இடத்துல வேலைக்கு போனா… அவரை அடிக்கடி பார்க்கவோ இல்லை, அவரை பத்தின எண்ணங்களோ வராம இருக்காது.
பிறகு அவரில்லாம என்னால வாழ முடியாதுன்ற அளவுக்கு பைத்தியமாயிடுவேன்.
அம்மாவை ஹாஸ்பிடல்ல அழைக்க கூட்டிட்டு போறது, ஒரு பக்கம் சுயநலமா இருந்தாலும், அவர் அம்மாவை பிழைக்க வைக்க முடியலை. ஒரு அம்மாவோட உயிர் பிழைச்சதுக்கு அவர் உதவியது, அவர்‌ மனசுல நிம்மதியை தரும். நான் அந்த நிம்மதியை அவருக்கு தரவிரும்பறேன். தவிர… காதல் கீதல்னு பேத்தலா பேசி காயப்படுத்திட கூடாது.
அப்பறம் அர்னவ் மனசுல, ‘இதுக்கு தான் இந்த மிடில் கிளாஸ் பீப்பிளுக்கு உதவவே கூடாது. உதவியை கூட காதல்னு சொல்லிட்டு நம்ம உசுரை வாங்குவாங்க’ன்னு, உதவ யோசிப்பார்.
அர்னவ் மனசுக்கு அவர் நிறைய பேருக்கு உதவணும்.’ என்று இவளாகவே முடிவெடுத்துக் கொண்டாள்.

இருவரின் பாதைகள் தனிதனியாக தான் மாறியது.

பாவனாவின் அன்னையை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அப்படி அழைத்து சொல்லும் நாட்களில், மருத்துவமனையில் ரிஸப்ஷனிஸ்ட் வேலை காலியாக இருக்க, அதற்கு அப்ளை செய்தாள். அவள் அதிர்ஷ்டம் வேலையும் கிடைத்தது.

கேன்ஸருக்கான மருத்துவ செலவு அர்னவ் அக்கவுண்டில் பதியப்பட்டாலும், பாவனா அழைத்து செல்லவும், வேறுவிதமாக தேவைக்கு பணத்தை செலவழிக்கவும் இந்த பணம் கைக்கு வரும், செல்லும், என்ற ரீதியில் இருந்தது.
ஏதோ கடவுள் அனுகிரகம் சொந்த வீட்டிலிருக்க, நிம்மதியாக வாழ்க்கை கழிந்தது. வினோத் பனிரெண்டாம் வகுப்பு என்றதால், அவன் கவனம் படிப்பில் இருந்தது.

அர்னவும், அவன் கை முற்றிலும் சரியாக, வானத்தில் பறக்க ஆரம்பித்தான். இம்முறை தனியார் விமானத்தில் அரசியல் பிரமுகரை ஏற்றி பறந்து திரிந்தான்.

அவனுக்கு பாவனா மீதான எண்ணங்கள் மனதை வதைக்க, பூமியில் கால் பதிக்க பிடிக்காதவனாய் பறப்பதில் குறியாய் இருந்தான்.

அர்னவ் தந்தை காசிநாத் சென்னையில் இருந்தவரோ, தாலி கட்டாமல் வாழும் கரோலினிடம், “அர்னவ் ஒரு பொண்ணை பற்றி பேசினானே. அந்த பொண்ணு விசாரிச்சியா கரோலின். வேலைக்கு வந்து சேர்ந்த மாதிரி தெரியலை. இரண்டு மூன்று முறை கேட்டப்பிறகு அர்னவும் ஒரு போன் கால்ஸும் பண்ணலா?” என்று கேட்டு நின்றார்.

கரொலினோ, “விசாரிச்சிட்டேங்க… அந்த பொண்ணோட அம்மாவுக்கு கேன்ஸர் ஸ்டார்டிங் ஸ்டேஜ். அம்மா செண்டிமெண்ட்ல உதவி செய்யறான். மத்தபடி அந்த பொண்ணோட போன் கால்ஸ் செக் பண்ணிட்டேன். அர்னவோடு அவ பேசினதா தெரியலை. சாதாரண உதவி தாங்க” என்று கூறினார்.

காசிநாத்தோ இமை மூடி, “அவனா ஒரு பெண்ணை பார்த்து பேசி உதவறானேனு பார்த்தேன். ஏமாற்றம் தானா? சந்தோஷிடம் இதை பத்தி பேசினியா?” என்று விவரம் கேட்க, “இல்லைங்க… அர்னவிடம் இதுக்கு முன்ன பேசின பெண்கள் எல்லாம் க்ளோஸா கூட பேசியிருக்காங்க. அப்ப எல்லாம் சந்தோஷிடம் கேட்டு விசாரிச்சதுக்கு, அதெல்லாம் அர்னவ் காதலிக்கலை ஆன்ட்டினு சொல்லியிருந்தான்.
ஆனா இந்த பொண்ணு பாவனா சாதாரணமா கூட போன்ல பேசிக்கலை. அப்படியிருக்க சந்தோஷிடம் என்னத்த கேட்பது?
எந்த பொண்ணுக்கூட பேசினாலும் அப்பா கண்காணிக்கறாரானு‌ உங்களை கோவிச்சுக்க கூடாதே. ஏற்கனவே அர்னவ் இங்க வருவது குறைவு.” என்று கூற, காசிநாத் ஆமோதிப்பாய் தலையாட்டினார்.

அடுத்து அர்னவை பற்றி மட்டும் கேட்டுவிட்டு துண்டிக்க முடியுமா? தனக்கும் கரோலினுக்கும் பிறந்த பெண் இருக்கின்றாளே. “லேகா எப்படியிருக்கா?” என்று கேட்டார்.

“அவளுக்கென்ன.. அப்பா வேலை விஷயமா அலைவதில் கூட பேசி சிரிக்க முடியலையே என்ற வருத்தம். நீங்க பாதி நாட்கள் தூத்துக்குடில இருக்கற உப்பு பிஸினஸை பார்க்க போயிடறிங்க. இல்லையா அமெரிக்கா பறந்துடறிங்க. கடைசி முறை லேகாவோட பள்ளி ஆண்டு விழா நடந்தது. நீங்க வரலையென்ற ஏக்கத்துல உங்க மேல கோபமாயிருக்கா.” என்றார்.

“உப்புக்கு பெயர் போன கம்பெனி முதலாளியிடம் டீலிங் இருந்தது. அவரும் சமீபத்தில் இறந்துட்டார். அப்படியிருக்க, நம்ம தொழிலை முனைப்பா கவனிக்கணுமே. லேகாவுக்கு புரியும்.” என்று கூறிவிட்டு எழுந்தார்.

கரோலினோ “அர்னவிடம் போன்ல ஒருமுறை பேசுங்க. பிரைவேட் விமானத்துல அந்த பொண்ணு பாவனாவை ஜீவன் என்றவன் தவறான நோக்கத்தில் பார்க்க, சண்டை அடிதடி என்று மாறி, மலையில் மோதி கிட்டதட்ட மறுபிறவி போல வந்திருக்கான்.” என்று கூறினார்.

காசிநாத்தே “நானா பேசமாட்டேன்னு இருக்கேன். அவனா தான் ஒதுங்கிட்டான். இரண்டாவதா கல்யாணம் பண்ணியதால் முதல் மனைவியோட உரிமை உறவு எல்லாம் உதறிடணும்னு அவன் தான் சொல்லறான்.” என்று கவலையாய் உரைத்தார்.

கரோலின் மனழுத்தத்தில் உள்ளோருக்கு வாழ்வு இனிமையானது என்று போதித்து ஆறுதல் அளித்து பேசி, சமூக சேவை செய்பவர். அப்படி தான் காசிநாத்தை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
மனைவி இழந்து, அர்னவ் குழந்தையோடு இருந்த பொழுது சந்தித்தார் கரோலின்.

ஒரே ஊர் என்ற‌ ரீதியில் பேச்சு சென்றது. பிறகு நட்பு பிறந்தது. நட்பு காதலாக கரோலின் உணர, காசிநாத்திடம் பகிர்ந்தார்.
காசிநாத் மனைவிக்கு துரோகம் செய்ய இயலாதென்று கல்யாணம் செய்யவில்லை. கரோலின் அதற்காக சோர்ந்திடவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் காசிநாத் கூடவே இருந்தார். மனதால் ஒன்றிணைந்து தம்பதியாக வாழவும் ஆரம்பித்தனர். இன்று வரை அப்படியே மேலே நாடு போல இவ்வுறவு கடக்கின்றது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ராஜாளியின் ராட்சசி-13”

  1. Aarnav enga love nu sollitu poi ninna jeevan mathiri nenachiduvalo nu yosikiran .bhavana avan status ku love nu poi ninna help pannathu ah vachi advantage eduthukita nu nenachipan nu ipadi aaluku oru pakkam irukagalae

  2. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 13)

    அச்சோ…! ரெண்டு பேருமே அவசரப்பட்டு வார்த்தையை விட்டு, இப்ப அவதிபடற மாதிரியாகிடுச்சே..!
    ம்.. சொல்லாத காதல் சொர்கத்துக்கே போனாலும் சபையேறாதுன்னு சொல்லுவாங்க… இப்படி தனித்தனி பாதையா போனா.. லவ்வை யார் தான் சொல்றது ?
    பூனைக்கு யார் தான் மணியை கட்டறது ?

    அதி சரி, இதுல பூனை யாரு, மணி யாரு ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Kalidevi

    Superb epi. Rendu perume ippadi ver vera vithama yosikiranga bhavana ninaikurathum crt thane etho help panna love panniduvinglanu ketuda poranu baya padura avan varthaiya vitatha purinjikittu kovama pesuran epo than intha love veliya vara potho therilaye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *