🍁1
சாய்வாக அமர்ந்து அந்த காரில் முகநூலில் வந்த மீமீஸ் கண்டு இதழ் விரிந்த அவனுக்கு நெடுநேரம் கார் புறபடாமல் அதே இடத்தில் இருப்பதை அறிந்து நிமிர்ந்தவன் ஓட்டுனரிடம் ”என்னாச்சு அண்ணா?” என்றான் அபிமன்யு.
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
”கொஞ்சம் டிராபிக் தம்பி…. இதோ 2 நிமிடதிலே கிளியர் ஆகிடும்” என்று ஒட்டுனர் கதிர் சொல்லி முடிக்க போனில் மூழ்கிய அவனோ எதனால் டிராபிக் ஆனதென்று கண்களை வெளியே துழாவிட, அங்கே சிவப்பு நிற கார் ஒன்று T வடிவம் கொண்ட அந்த சாலையில் திரும்ப செய்ய முனைந்தது.
அந்த சிவப்பு நிற காரில், சிவப்பு நிறம் ஆடை அணிந்த நங்கை தான் ரிவர்ஸ் கீர் போட்டு திரும்ப, அவளின் தோள் வரை இருந்த கூந்தல், புரண்டு கொண்டிருந்தன.
இங்கு கருப்பு நிற காரில் இருந்த அபிமன்யு-க்கு அப்பெண்ணின் கார் ஓட்டும் லாவகம் கண்டும், அவள் கூந்தல் இவனை அவளை பார்க்க விடாமல் செய்ய, அவளை காணும் ஆவல் அவனுள் அதிகமாக இருக்கவே, தனது கழுத்தை வலது இடது என்று அசைத்து பார்க்க ஆசை கொண்டான்.
ஆனால் அதற்குள் அவளோ காரினை எடுத்து திருப்பிட, அவள் முகம் ஒரு நொடியில் தான் கண்டான். அவளோ அதிவேகமாக சென்றிட அவன் முன்னால் பார்க்க அங்கே பைக் நின்றவர் சிலர் அப்படி தான் தன்னை போலவே பார்ப்பதை அறிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
‘நல்லா ஸ்டைலிஷ் ஆஹ் காரை ஒட்டினா… வாட் எ உமன்” என்று சொல்லி அவன் இறங்கும் இடம் வந்திட அவன் பணியை கவனித்தான்.
இங்கு கீர்த்தனா ஈரமான மெத்தையை எடுத்து மாடியில் காய போட சென்றாள். ஆம் அதே சிவப்பு நிற காரில் சிவப்பு நிற ஆடை அணிந்த அவளே… கீர்த்தனா தான். கருப்பு நிற ரப்பர் பாண்ட் அணிந்து அந்த மெத்தையினை காய போட்டவள். வெளியே போகும் சிறுவர் சிறுமிகளை பார்த்து கண்ணீர் உகுந்தாள்.
”இன்னும் என்ன செய்யற..? மணி ஒன்பது ஆகுது… சாப்பிட ஏதாவது செய்து வச்சியா இல்லையா?” என ராஜேஷ் குரல் ஈனஸ்வரத்தில் விழுந்தன. கீர்த்தனாவுக்கு கன்னங்களில் விழுந்த கண்ணீர் அழுத்தி துடைத்தவள். அழுதசுவடே தெரியாமல் முகத்தினை இறுக்கமாக வைத்து கீழே சென்றாள்.
”எங்க போன நாயி மாதிரி கத்திட்டு இருக்கேன்.. ஒரு குரல் இங்க இருக்கேனு சொல்றியா?” என்றான் ராஜேஷ்.
”நாயி குறைச்சது அதனால் கேட்கலை” என்றாள் கீர்த்தனா.
”என்ன சொன்ன டி?” என்று முடியை கொத்தாக பிடித்தவன்
”மாடியில் பக்கத்து வீட்டு நாயை சொன்னேன் கையை எடு” என்றவள் மனதில் உனக்கு எல்லாம் நாயோட கம்பேர் செய்வேனா? என முனங்க ராஜேஷ் அதை கேட்கவில்லை.
”சே இன்னிக்கும் அந்த சனியன் பெட்ல அசிங்கம் பண்ணிடுச்சா.” என்று கேட்க அதற்கு கீர்த்தனா அவனை கூர்ந்து கொதிநிலையில் பார்த்தாள்.
”உனக்கு பலதடவை சொல்லிட்டேன் ராஜேஷ். என் மகளை அப்படி சொல்லாத” என கடிபட்ட பற்களில் இருந்து வார்த்தையை வெளியேற்றினாள்.
”அந்த அபி கழுதையை சொன்னா உனக்கு என்ன? ஏன் கீர்த்தனா இப்படி இருக்க? உனக்கு வயசு என்ன? அவளை ஹோம்ல விட்டுட்டு நாம இன்னொரு பேபி பெற்றுக் கொள்ளலாம் எதுக்கு இப்படி அந்த அபியை சுமந்துட்டு திரியற?” என அவளை இச்சையோடு அணைத்தான்.
”தள்ளு… எனக்கு ஆஃபிஸ் இருக்கு போகணும். அதுவும் இல்லாமல் நாம இரெண்டு பேருமே மியூச்சுவல்லா விவாகரத்து அப்ளை பண்ணி இருக்கோம்… இன்னும் ஆறு மாசம் தான். அதுக்கு பிறகு நீ உன் கூட சுத்துமே கேத்ரின் அவளோட போயி கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கோ.. என்னை தொடாத… ” என்று விலகினாள்.
”அவளை கல்யாணம் செய்யும் வரை நீ வேணும் சொல்லி தானே விவாகரத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கேன் நினைவு இருக்கா வா…” என அறைக்குள் இழுத்து சென்றான்.
நேரம் செல்ல செல்ல எழுந்தவள் அலுவலகம் செல்ல கிளம்பினாள். உதட்டில் இருக்கும் ரத்த கசிவுக்கு இன்று விடுமுறையே எடுத்து கொள்ளலாம் ஆனா திரும்ப இந்த அரக்கனுடன் யார் இருப்பது என்று கிளம்பினாள்.
அலுவலகம் சென்றதுமே சிலரின் பார்வை அவளின் உதட்டில் தான் மொய்த்தது. அதுவும் ஆண்களின் பார்வை. அடிக்கடி நிகழம் சம்பவம் போல அவள் கடந்து சென்று விட்டாள்.
மணி மூன்று அடிக்க கடிகாரம் பார்த்தவள் வேகமாக கிளம்பினாள்.
காலையில் திருப்பிய கார் வளையில் கொஞ்சம் தள்ளி இருந்த அந்த சின்ன சிறிய பள்ளிக்கு நடைப்போட்டாள்.
அங்கே பால்நிற மேனியில் பேபி ஷாலினி ஹேர் ஸ்டைல் கொண்டு ஒரு பத்து வயது சிறுமி ஒரு ஆசிரியரிடம் உட்கார்ந்து இருந்தாள்.
கீர்த்தனா வந்து விட்டதை அந்த சிறுமியிடம் அந்த ஆசிரியர் சொல்ல, அடுத்த நிமிடம் அவள் திரும்பி வேகமாக ஓடினாள். அன்னையினை காண போக, இடையிலே கீழே விழுந்தாள்.
”அபி… அங்கயே நில்லு அம்மா வர்றேன்” என்று ஓடி வந்தவள் கீழே விழுந்த அபி உதட்டை பிதுக்கி ”மம்மி விழுந்துட்டேன்” என்று ஐந்து வயது குழந்தை போல அழ துவங்கினாள். இத்தனைக்கும் விழுந்தது அப்படி ஒன்றும் அடிபடவில்லை தான்.
”அபி அம்மா தான் வர்றேனு தெரியுதுல எதுக்கு ஓடி வர்றிங்க.” என எழுப்ப அவளோ எழுந்து அன்னையின் இடையினை கட்டிக் கொண்டாள்.
அதன்பின் அவளை அழைத்து அருகே இருக்கும் கடையில் பழச்சாறு வாங்கி பருக கொடுத்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
”அங்கே ராஜேஷ் மது கோப்பையோடு மாலையிலே ஆரம்பித்து இருக்க அபி தான் ”டாடி ஜூஸ்ஸா எனக்கு…” என ஓடி வந்த மகளை அசிங்கமாக பார்த்தவன்
”சீ போ அங்குட்டு.. இது எனக்கு மட்டும்” என்று சொல்லி, அவளை எட்டி உதைக்க கீர்த்தனா ஓடி வந்து
”ராஜேஷ் அறிவில்லை.. குழந்தையை போயி இப்படி உதைக்கின்ற?” என்று கீர்த்தனா அழும் அபியை அழைத்து கொண்டு
”அம்மா உனக்கு ஜூஸ் தர்றேன் வா” என்று அறைக்குள் இழுத்து தாழிட்டவள் போவண்டோ குளிர் பானத்தை கொடுத்தாள்.
ராஜேஷ் இப்படி ஹாலில் செய்யும் இந்த செயலுக்காக தான் போவண்டோ வாங்கி இருந்தாள் கீர்த்தனா.
“டாடி குடிக்கறது வேணும்” என பல முறை கத்தி அழுது, அடம் பிடித்த அபியை சமாதானம் செய்ய முடியாமல் வாங்கி வைத்து கொடுப்பது, ராஜேஷ செயலில் மாற்றம் இல்லை. பல தடவை சொல்லி பார்த்து விட்டாள். ஒரு முறை பாட்டில் கொண்டு அடித்து விட்டான். அதில் இருந்து எதுக்கு வம்பு அவன் இருக்கும் பொழுது, அபியை அறையில் இருந்து வெளியே விடுவதில்லை என முடிவெடுத்து கொண்டாள்.
இன்று என்ன வீட்டு பாடம் கொடுத்து இருப்பார்கள் என்று டைரி எடுத்து பார்க்க, அதில் முதல் ஐந்து குரல் எழுதி இருந்தார்கள். பள்ளி ஆண்டு விழாவில் இதனை அபியை மனனம் பண்ணி சொல்ல வைக்க எழுதி கொடுத்திருக்க போன் எடுத்து அபியின் ஆசிரியருக்கு அழைத்தாள் கீர்த்தனா.
”ஹலோ மிஸ்… அபி டைரில குறள் எல்லாம் இருக்கு அவளுக்கு சொல்ல தெரியாது நீங்க ஆண்டு விழாவுக்கு தாயார் செய்யவும் mention செய்து இருக்கிங்க” என்று கேட்டாள்.
”கீர்த்தனா அவளுக்கு நாங்க இங்க பிராக்டிஸ் கொடுக்கறோம் அதனால பயப்படாம சொல்லி கொடுங்க.. எங்க பள்ளி சின்னது தான் ஆனா தரமா இருக்கும்.. அபி போல இருக்கற குழந்தை தான் நாங்க முன்னுக்கு கொண்டு வர முயலுவோம் படிக்கிற குழந்தையை விட இவங்க தான் எங்களுக்கு முக்கியம் உங்களுக்கு தெரியாததா…” என்றார்.
”இல்லை மிஸ் அவள் எல்லார் முன்னாடி..” என்று தயங்கினாள்.
”அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.. உங்களுக்கு அபி மேடை ஏறுவது பிடிக்கும் தானே?” என்று கேட்டார்.
”ஐயோ மிஸ் எந்தம்மாவாது இதனை விரும்பாம இருப்பங்களா? எனக்கு ரொம்ப சந்தோஷம்… நான் சொல்லி கொடுக்கறேன் நன்றி மிஸ்” என்று வைத்து விட்டு அபியிடம்
”அபி செல்லம் நீங்க மேடையில் போய் குறள் சொல்ல போறிங்களா.. சோ ஸ்வீட்” என்று முத்தமிட அவளுக்கு புரிந்ததோ என்னவோ ”சோ ஸ்வீட் மம்மி” என அவளும் முத்தமிட்டாள்.
அபிநயா குரல் மனப்பாடம் செய்ய முடியாமல் கஷ்டப்படும் ukg வயது கொண்டவள் அல்ல. 10 வயது சிறுமி தான். என்ன கொஞ்சம் ‘ஸ்பெஷல் சைல்ட்’ என்று சொல்லலாம்.
ஐந்து வயது குழந்தைக்கு இருக்கும் செய்கைகள் இருக்கும்… அவளிடம் அதற்காக தான் கீர்த்தனா பயப்படுவது.. மேடையில் ஏற்றிவிட்டு அங்கே காட்சி பொருளாக அபி இருப்பதை அவள் விரும்பவில்லை… ஆனால் மற்ற குழந்தைகளை போல அவளும் எதிலாவது கலந்து கொள்ள கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தாமல் போகவும் மனமில்லை.. விளையாட்டு போக்கில் அதனை அவளுக்கு கற்றுதர ஆர்வமாக அமர, கீர்த்தனா அகர முதல் என்ற குறள் கொஞ்சம் பதியும் முன்னே வெளியே கேத்ரின் சிரிக்கும் ஓசையும், ராஜேஷ் சத்தமான பேச்சும், கேட்க கீர்த்தனாவிற்கு தான் என்ன செய்ய என்றாகி விட்டது.
மற்றவை புரியாவிட்டாலும் தாயின் மனநிலை தானாக மாறிட செய்தது அபியின் ”மம்மி தூக்கம் வர்து” என்ற சொல்ல இந்நேரம் வெளியே போகவும் மனமில்லாது பிளாஷ் பாலை எடுத்து அங்கே தின்பண்டம் இருக்கும் பாக்ஸ்ஸில் பிரட் எடுத்து நனைத்து ஊட்டி விட அபி உண்டுவிட்டு உறங்கினாள்.
ராஜேஷ் விரச பேச்சும், கேத்ரினின் தேவயற்ற சிரிப்பும், காதில் எரிச்சலை கொடுக்க காட்டான் பஞ்சை எடுத்து, காதில் அடைத்து மீதி இருந்த, ஒரு பிரட் கொஞ்சம் பால் இருக்க உண்டு அபியை அணைத்து உறங்கினாள்.
மறுபுறம், அபிமன்யு அங்கே தினமும் காலையில் இருந்து இரவு வரை அவனுக்குள் நடக்கும் சுவாரசியமா சம்பவத்தினை டைரியில் குறிப்பிடுவது வழக்கம். அன்றும் அப்படியே எழுத உட்கார்ந்தவன் காலையில் பார்த்த கீர்த்தனாவை பற்றி எழுதினான்.
‘அவள்…. அவள் மட்டுமே திமிராய் தோன்றினாள்… எந்தன் விழிக்குள் இன்று. ஆனாலும் அவளின் திமிர் எனக்குள் இன்று புதுமையாய் தோன்றியது. எத்தனை கண்கள் அவளை கொத்தி தின்றது அத்தனை கண்களுக்கும் அந்த திமிரிலே என்னை எட்டி நில்’ என்று சொல்லியது.
பெண்கள் விழி மொழியில் பேசுவார்கள் என்ற திருக்குறளில் படித்து இருக்கின்றேன் இவளோ பேசாமல் பேசி செல்கின்றாள்… என்னிடம் தான்.’ என முடித்து இமைமூடி உறங்கினான்.
அவளால் தனது தூக்கம் கொஞ்ச நாளில் பறிபோகும் என்று அறியாமல்…
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Wow super super. Intresting
Nice start 👍
wow superb starting. aana Keerthana ku erkanave mrg agiduchi polave eppadi pata purushan paru avaluku .Abimanuyu than keerthna jodi ah ? papom