Skip to content
Home » அபியும் நானும்-5

அபியும் நானும்-5

🍁 5
                                        கீர்த்தனா தந்தை சுதாகருக்கு அலுவலகத்தில் ஆண்டு விழா.அன்று வரமாட்டேன் என்று சொல்லிய மகளை, கெஞ்சி கூட்டிட்டு கொண்டு, குடும்ப சகிதம் அம்பிகை கூட கிளம்பினார் சுதாகர்.
           அன்று அலுவலகதின் எம்‌டி எல்லோருக்கும் தங்கள் கம்பெனியின் அடுத்த கிளை திறக்க முடிவு எடுக்க, அதில் மகன் ராஜேஷ் பதவியில் முழு பொறுப்பை ஏற்று நடத்த, அவனை அறிமுகப்படுத்தி முடிக்க, கீர்த்தனா அவனை அவனின் இந்த இளவயது பொறுப்பை எண்ணி வியந்தாள்.
        ஆனாலும் கீர்த்தனா பார்வை சில நொடி அவனை கண்டு திரும்பியது. உணவு உண்ண பஃபே செல்ல, அம்பிகை சுதாகர் குடிக்க செய்தாலும் செய்வார் என்று, அவரை வீட்டு அகலாமல் அருகே வந்து காரை நீங்க தான் ட்ரைவ் செய்யனும் அதனால மதுவை நாடாதீர்கள் என சொல்ல சென்றார்.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கீர்த்தனா உணவு தட்டினை எடுத்து திரும்ப நடையில் இடறினாள். ராஜேஷ் பிடிக்க சரியாய் இருந்தது.
      ”ஸாரி அம்மா அப்பா சேலை கட்டிட்டு வர சொல்லிட்டாங்க எனக்கு ஸ்லிப் ஆகிடுகச்சு.. ஸாரி” என முகம் பாராமல் சொல்லி முடிக்க, ராஜேஷ் இமைக்க மறந்து பார்த்து இருந்தான்.        
         ஒழுங்காக நின்று தட்டினை வாங்கிய பிறகு தான் எதிரில் நிற்கும் ராஜேஷ் கவனித்தாள்.

கண்கள் தானாக மேடையில் பார்க்க, அங்கே கம்பெனி பொறுப்பேற்றி இருக்கும் ராஜேஷ் இருந்த இடம் காலியாக இருக்க அவன் தான் இவன் என அறிந்தாள்.


             அங்கிருந்து அகன்று தனியாக சென்றால் அம்பிகை எங்கே என தேடி பார்க்க அவர் இல்லாமல் போக, கொஞ்சம் பயதோடு தேடுதலில் இருந்தாள் கீர்த்தனா. 

 
            ராஜேஷ் கண்கள் தன்னை தொடர்வதை அறியாது அம்பிகையை தேடி கொண்டு இருந்தவள் சட்டென்று திரும்பி நடக்க ராஜேஷ் முன் வந்து
      ‘இங்க எல்லாரும் பிசி… நீ யாரை தேடுற?” என புன்னகைத்து கேட்டான்.


     ”அம்மா.. அம்மா கூட இருந்தாங்க…” என்று சொன்னவள் அவனின் முகம் பார்க்க தய்ங்கி கண்களை அங்கும் இங்கும் உருட்டினாள்.

அவளின் சேலை கட்டிய அழகும்… தன்னை யார் என்று அறிந்தும் அவளாக பேசி அருகே வாராமல நகரந்து செல்லும் விதமும் ராஜேஷிற்கு பிடித்து போனது.


      ”யாரோட பொண்ணு நீ?” என்றான்.
      ”சுதாகர்… அவரோட பொண்ணு அம்மா அம்பிகை” என சொல்லி முடிக்க, சற்று நேரம் முன் அவர் மதுவை நாடிய கணம் பார்த்தவன் தான்
      ”அம்மாவுக்கு ட்ரைவ் பண்ண தெரியுமா?” என்று கேட்டான்.


      ”இல்லை…. எதுக்கு கேட்கறீங்க? ” என்று புரியாமல் கேட்டவளிடம்
      ”நத்திங்… உனக்கு ட்ரைவ் தெரியுமா?” என்றான்.


     ”எனக்கு இன்னும் 18 ஆகலை… லைசென்ஸ் இல்லை…. கார் ஓட்ட தெரியாது. ஸ்கூட்டி ஓட்டுவேன்” என்று சொன்னவள் கண்களை பார்க்க அச்சப்பட்டு குணிந்தாள்.


    ”ஏதாவது தொலைச்சிட்டியா?” என்று ராஜேஷ் கேட்க புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்.
      ”இல்லை ரொம்ப நேரமா கேட்கற கேள்விகளுக்கு கீழே பார்த்து ஆன்சர் பண்றியே…. அதனால கேட்கறேன்” என குறும்பு புன்னகையோடு பேசினான்.

கொஞ்சம் நிமிர்ந்து அவனை நேரிடையாக பார்க்க அவனின் சிரிப்பு, தன்னை ரசித்து பார்க்கும் கண்கள், கூர்நாசி, சிவந்த உதடு என்று பார்க்க பார்க்க அவளின் மனம் அக்கணம் கொஞ்சம் மதி மயங்கியே பார்த்தாள்.
       பதினெட்டு நிரம்பாத அவளின் மனம் அவனை அழகன், ஆளுமை கொண்டவன் என்றெண்ணி ரசித்தது.


       ராஜேஷ் மும்பை படித்து வளர்ந்தாலும் அவன் இது போல பயந்த சுபாவம் கொண்ட பெண்ணை பார்ப்பது முதல் முறை. அவனும் இவளையே ரசிக்க கொஞ்ச நேரம் முன் தேடிய தந்தை தாயின் முகம் கண்டதும் அவனிடம் இருந்து விலகி ஓடினாள்.


        அம்பிகை தான் ‘இப்படி பண்ணாதிங்கனு சொல்லி தானே கூடவே வந்தேன் எதுக்கு தான் இப்படி பண்றிங்களோ?’ என அம்பிகை தலையில் அடித்து கொண்டு வந்து நிற்க  ”என்னம்மா ஆச்சி?” என்றாள் கீர்த்தனா.


    ”முதலில் வீட்டுக்கு போவோம் உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு” என சொல்ல அவரை அழைத்து காரில் சென்று அமர வண்டியை ஒட்டும் அளவுக்கு சுதாகர் நிலை இல்லை என்று புரிந்தது.

அம்பிகை தலையில் அடித்து இறங்கும் சமயம்
    ”நான் உதவலாமா ஆண்ட்டி?” என்றே கேட்க கீர்த்தனா நிமிர்ந்து பார்க்க ராஜேஷ் கண் சிமிட்டி சிரித்தான்.


      ”தம்பி நீங்களா? அது யாராவது கூட வேலை செய்யறவங்களை கூட அனுப்பி விடுங்க போதும் நீங்க எதுக்கு தம்பி” என்றார் அம்பிகை.
      ”அட விடுங்க ஆண்ட்டி கொஞ்சம் எனக்கும் போர் அடிச்சது அதான் உங்களோட டிராவல் என்று காரினை எடுத்தான்.


     ”நைஸ் கார்… ஐ லைக் ரெட்…” என்றே கீர்த்தனா பக்கம் பார்க்க கீர்த்தனா அம்மா அருகே இருக்க பேசாமல் இருந்தாள்.


           கார் ஒட்டியவன் கொஞ்ச நேரத்திலே போகும் இடம் எங்கே என்று கேட்டு செல்ல நிம்மதியோடு அம்பிகை அடுத்து பேச ஆரம்பித்தார்.


      ”ஏன் தம்பி இந்த விழாவுல எல்லாம் நிறைவா இருந்தது…. ஆனா இந்த தண்ணீர் பார்ட்டி எதுக்கு தம்பி அப்பா சேர்த்தார்… பாருங்க எப்படி நாங்க போறோம்னு… இப்ப நீங்க இருக்கிங்க சரியா போச்சு இல்லைனா எங்க நிலமை என்னவாகி இருக்கும்” என்று கேட்க ராஜேஷோ அப்பா வேண்டாம் டா என்னோட விழாவுல இது போல இந்நாள் வரை செய்தது இல்லை என்று சொல்லியும் ராஜேஷ் கட்டாயத்தில் தான் அவர் ஏற்பாடு செய்தது. தற்பொழுது அப்படி சொன்னால் ராஜேஷ் பெயர் கொஞ்சம் சரியுமே என்று ராஜேஷ் சிரிப்புடன் “இனி அப்பாவிடம் இப்படி நடக்கமா பார்த்துக்கறேன் ஆன்ட்டி” என சொல்லி கொண்டான்.


        அவனுக்கு இந்த பழக்கம் கல்லூரியில் மாணவர்கள் பாழக்கியது மேல்தட்டு வர்க்கம் இது பெரிதாக எடுத்ததில்லை தான்.
      கீர்த்தனா பார்த்தபின் என்னவோ அவளிடம் பேசிட துடிக்கும் ராஜேஷ் மனம் அவனுக்கே புரியாமல் தவித்தது.


       வீட்டில் விட்டுவிடு அவரை இறக்கியவன் கிளம்ப போக ”தம்பி நீங்க எப்படி போவீங்க” என்றார்.
    ”போன் செய்து கார் இங்க கொண்டு வந்து பிறகு போறேன் ஆன்ட்டி” என சொல்ல
     ”இந்தாங்க தம்பி கீ, நீங்க காரை கொண்டுட்டு வீட்டுக்கு போங்க. நாளைக்கு அவரை வந்து எடுதுக்க சொல்றேன்” என்று சொல்ல ராஜேஷிற்கும் அதே சரியாக பட கிளம்பினான்.


    ”கீர்த்தி… போய் தம்பி கிளம்ப கார் எடுத்ததும் கேட் பூட்டிட்டு வழி அனுப்பிவிட்டு வா அதுக்குள்ள உங்க அப்பாவை நான் பார்த்துக்கறேன்” என சொல்லிட கீர்த்தி ராஜேஷ் கூடவே வந்து சேர்ந்தாள்.


     ”என்ன படிக்கின்ற?” என்றான்.
     ”BSc ஃபர்ஸ்ட் இயர்” என்றாள்.


     ”ஃபர்ஸ்ட் இயர் தானா?” என்று கேட்க  அவனை புரியாமல் பார்த்தவள்
    ”18 சொன்னேன் கேட்கலையா பின்ன என்ன படிப்பாங்க?” என்று எதிர்கேள்வி கேட்க ராஜேஷ் அவளை பார்த்தவன்


      ”கொஞ்சம் முன்னாடி பிறந்து இருக்கலாம்…”
      ”எதுக்கு?” என கீர்த்தனா கேட்க


      ”அப்படி முன்னாடி பிறந்து இருந்தா இந்நேரம் உங்க அம்மாவிடம் உங்கள் மகளை பிடிச்சிருக்கு கட்டி கொடுப்பிங்களானு கேட்டு இருப்பேன்..” என்றான் ராஜேஷ்.


      ”என்னது?” என விழி விரித்து கேட்டவளை பார்த்து
      ”அப்படி இல்லை என்றால் ஐ லவ் யூ கீர்த்தி சொல்லிருப்பேன்… இப்போ பாரு எதுவும் மனசில் இருக்கறதை சொல்ல முடியலை” என்று சொல்ல கீர்த்தி இமைகள் படபடவென அடிக்க வீட்டினையும் அவனையும் மாறிமாறி பார்த்தவள் என்ன நினைத்தாளோ வேகமாக வீட்டுக்குள் ஓடி விட்டாள்.


     ராஜேஷ் தான் விசில் அடித்தபடி காரில் மீண்டும் அவனின் வீட்டுக்கு புறப்பட்டான்.


         அவனின் வீட்டுக்கு வந்ததும் சாவியை சுழற்றியபடி வர அங்கே மாகலிங்கம் ”நில்லு டா” என்றதும் நின்றான்.


      ”யாரை விட போன?” என்று கேட்க


      ”அது… அதுப்பா.. கீர்..சே சுதாகர் அங்கிள் பா… அவரை விட போனேன்” என்றான்.
      ”சுதாகர் யாரு டா…?”‘
       ”உங்க ஃப்ரெண்ட்ல ஒருத்தர் தானே?” என கேட்க
       ”எனக்கு ஃப்ரெண்ட் டா… உனக்கு என்ன அவனை கூட்டிட்டு போற?” என்று கேட்டதும்
      ”அது அவர் ட்ரிங் பண்ணி இருந்தார் அதான் அவங்க பேமிலி போக கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன்” என்றான்.


       ”அடேய் நீ.. அரேஞ்ச் பண்ணிய பார்ட்டி நீ அங்க இருக்கறவங்களை பார்த்து பேசுவ என்று பார்த்தேன் நீ என்னடா என்றால் கீர்த்தி கூட பேசிட்டு அவளோட போன?”


     ”அப்பா அவளை பார்த்ததும் பிடிச்சது பேசினேன்… அவள் மட்டும் ஜஸ்ட் 18 இல்லாமல் இருந்தா கல்யாணமே பண்ணி இருப்பேன் டாட்..  என்னை போய் அவளுக்கு தானா கார் ஓட்ட வைத்து விட்டா பாருங்க… இத்தனைக்கும் அவள் என்னிடம்  சரியா பேச கூட செய்யலை ” என்று பேசினான்.


      ”உனக்கு அவளை பிடிச்சிருக்கா? அதை மட்டும் சொல்லு?” என்றார்.
      ”ரொம்ப பிடிச்சிருக்கு ப்பா… அவ்ளோ அழகு அமைதி…” என பேசி அவளை கல்யாணம் செய்ய கேட்டா அவங்க வீட்டில் சம்மதிப்பாங்களா? அப்படியே ஆனாலும் அவளுக்கு கல்யாண ஏஜ் இல்லையே?” என்று வருத்ததுடன் ஸ். சொன்னான்.


       ”அடபோடா… அதெல்லாம் நாம பேசற விதத்தில் தான் இருக்கு”
       ”அப்போ அவளை கல்யான்ம் செய்து வைப்பிங்களா?” என்றான் ஆர்வமாக.


      ”மகாலிங்கம் முடியாததா? கொஞ்சம் அவளோட பேசி பழகு. நான் அதுக்குள்ள சுதாகரோட பேசறேன்” என்று சொல்ல ராஜேஷ் கல்யாண கனவோடு இருக்க, கீர்த்தனா பதினெட்டில் அடியெடுத்து வைத்து, காதல் சொன்ன எத்தனையோ பேர் இருந்தாலும் இன்று பார்த்த முதலிலே தன்னிடம் பேசி காதலை சொல்லி தன்னையும் ஏதோ ஈர்த்திருந்தான் ராஜேஷ்.

-தொடரும்.

2 thoughts on “அபியும் நானும்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *