Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)

ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)

அத்தியாயம்-20

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

யாரோ வரும் அரவம் கேட்க சட்டென பாவனாவை விடுவித்து, அவளை மெத்தைக்கு அருகேயிருந்த சோபாவில் அமர வைத்து, நகர்ந்து நின்று கொண்டான்.

கதவு தட்டும் சப்தம் கேட்க, “உள்ள வாங்க” என்று உத்தரவு பிறப்பித்தான்.

“தம்பி லேகா பாப்பாகிட்ட டீ கேட்டிருந்திங்களாம். அம்மா என்னிடம் கொடுத்து விட சொன்னாங்க. லேகா பாப்பாவிடம் பேசணும்னா சொல்லி விட சொன்னாங்க.” என்று சமையல்காரர் டீயை இழுவை தாங்கியில் கொண்டு வந்ததற்கு கேளாமல் பதில் தந்தான்.
“தேங்க்ஸ் நான் அவளுக்கு சர்வ் பண்ணிக்கறேன். லேகா வரவேண்டாம். நானே கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்” என்று பணியாளை அனுப்பினான்.

குனிந்த தலை நிமிராமல், பணியாள் செல்லும் வரை அமைதியாக இருந்தவள், “ஏன் இப்படி பண்ணறிங்க. நான் போறேன்” என்று வெடுக்கென எழுந்தாள்.

அர்னவோ “உட்காரு” என்றான் அதிகாரகுரலில்.

அவன் கத்தலில் தானாக அமர, டீப்பாட்டில் இருந்து, கப்பில் ஊற்றி சர்க்கரை கட்டிகளை போட்டு கலக்கி, அவளிடம் நீட்டினான்.

“குடி” என்றான் அதிகார தோரணை குறையாமல்…

“எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்று முகம் திருப்ப, “ஒன்னு வேண்டாமா? அப்ப இன்னும் அதிகமா தரவா?” என்று மார்க்கமாய் கேட்க, “நீங்க இப்பவும் அசிங்கமா பேசறிங்க. நான் போறேன்” என்று எழுந்தவளை, “உட்காருனு சொன்னேன். இரண்டடி எடுத்து வச்ச, அப்படியே பிடிச்சு பெட்ல தள்ளிட்டு ஏடாகூடமா ஏதாவது நடந்துப்பேன். செம கோபம் வருது.” என்றான்.

பாவனா சிலை போல நின்றதும், கையில் டீயை திணித்தான்.

“என்ன பிரச்சனை உனக்கு? ஜீவன் மேட்டர் சால்வ் பண்ணியாச்சு. பணக்காரனா இருந்தா உன்னை மணப்பதில் தடை வருமா என்ன?
காவேரி ஆன்ட்டியிடம் நான் பேசிப்பேன். சும்மா மிரண்டுட்டு இருக்காத. ரிலாக்ஸா இரு.
எங்கம்மா என் தாத்தாவுக்கு ஒரே பொண்ணு. அவங்க இறந்ததும் சொத்து அப்பா பெயருக்கு சொத்து வந்துடுச்சு. நான் ஆம்பளை பையன். பொண்ணா இருந்தாலாவது நடுவுல ஏஜ் அட்டன் அதுயிதுனு செலவு செய்து, நடுவுல சரியான வயசுல கல்யாணம்னு பணத்தை செலவு செய்திருக்கலாம்.
நான் பையன் என்பதால் எந்த செலவும் அதிகமா இல்லை. அதோட எங்க அப்பாவும் வீட்டுக்கு ஒரே வாரிசு.

பிசினஸ்ல போட்ட முதலீடு லாபமா வரவும் பணம் சம்பாரிச்சார். இப்ப இந்த நிலை.
இதுல நானும் லட்சத்துல தான் சம்பாதிக்கறேன். என் ஒரு ஆளுக்கு செலவு செய்து மீதி எல்லாமே சேவிங்ஸ். நடுவுல நடுவுல வெளிநாட்டுக்கு போகலாம் செலவு செய்யலாம். ஆனா என் தொழிலே வெளிநாட்ல பறக்கறது என்பதால் எனக்கு தனிபட்டு செலவுகள் அதிகமா தாண்டலை.

இதுலாம் சேவிங்க்ஸ் ஆனதால் உன்‌ பார்வைக்கு பணக்காரனா தெரியலாம். உன்னை கல்யாணம் செய்ய மிடில்கிளாஸ் ஆளா தான் இருக்கணும்னு நீயா உன்னை நினைச்சிக்கறது தப்பு. சொல்லப்போனா அவரவர் மதிப்பு பணத்தை வைத்து வர்றாது. குணத்தை வைத்து வரும்.

இங்க பாரு… இது பணத்தால் இணையற பந்தமில்லை. மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனை. உனக்கும் என்னை பிடிக்கும். தேவையில்லாம இல்லனு ஆரம்பிச்சு ஏடாகூடமா என்கிட்ட வாங்கி கட்டிக்காத. கீழே சந்தோஷை கூட்டிட்டு வந்தேன். டீ குடிச்சிட்டு வா போகலாம். இங்க லேகா வரணும்னு கரோலினிடம் பிடிவாதம் பிடிப்பா. அவ இங்கவருவதை அவாய்ட் பண்ணறது பெட்டர்.” என்றான்.‌

பாவனா மறுத்து பேசவே வாய்ப்பு தரவில்லை அந்த ராஜாளி. டீயை பருகி முடித்து, உதட்டை மடித்து துடைக்க, அர்னவ் பார்வை ஏக்கமாய் பாவனாவை பார்க்கவும், “இங்க. பாருங்க. நாம கீழே போகலாம். எதுனாலும் வீட்ல அம்மா சம்மதிச்சா மத்ததை பேசுவோம்.” என்று கூற, அர்னவிற்கு உதட்டோரம் புன்னகை உதிர்த்தது.

பாவனாவை கூடவே வழிநடத்தி மெதுவாக வந்தான்.

சந்தோஷோ நண்பனை பார்த்து, பாவனாவிடம், ”என்னம்மா இப்ப லவ்வை சொல்லிட்டியா? அன்னிக்கு ஜீவன் மிரட்டியதா அர்னவ் சொன்னான். அவனெல்லாம் ஒரு ஆளாம்மா.” என்று கூற, “இல்லைங்க அண்ணா.. அன்னிக்கு பூக்கூடை வாங்கறப்ப சீட்டு அதுல இருந்தது. இவரை குறிப்பார்த்துட்டு இருக்காங்க என்றபோது என்னால என்ன பேசறதுன்னு முடிவெடுக்க முடியலைங்க அண்ணா. மூளை சுத்தமா வேலை செய்யலை. ஏற்கனவே தோட்டா உரசி ரத்தக்கையோட இவரை பார்த்தது போதும்‌னு மட்டும் தான் நினைச்சேன். என்னால இவருக்கு எந்த ஆபத்தும் வந்துடக்கூடாது.” என்றாள்.

“ஏதோ இப்பவாது நல்லதா முடிந்ததே.” என்றான் சந்தோஷ்.

“நாங்க கிளம்பறோம்.” என்று அர்னவ் பாவனா சந்தோஷை எழுப்ப முயல, கரோலினோ “லஞ்ச் ரெடி பண்ணிருக்கு நீங்களாம் சாப்பிட்டு போகலாமே” என்று காசிநாத்தை கவனித்தார். ‘நீங்க சொல்லுங்க’ என்ற அர்த்தத்தில்….

“ஏன்டா.. காலையில் தானே உன் கோபத்துக்கு விளக்கம் தந்தேன். இப்ப காரியம் ஆனதும் கிளம்பினா என்ன அர்த்தம்?” என்று பாய்ந்தார்.

“இப்பவே சொல்லிடறேன். சும்மா செண்டிமெண்ட் பேசி பாவனா மூலமா என்னை இங்கயே நிரந்தரமா தங்க பிளான் போடாதிங்க. ஐ நீட் பிரைவேசி. எனக்கு இங்க செட்டாகாது. லேகா மதரை நீங்க பிராப்பரா மேரேஜ் பண்ணியதுக்கு தேங்க்ஸ்.
பட் இதுக்காக என் பழைய லவ்வர் என்னை தேடி வரமுடியாது.
என் காயம் குறையாது. நீங்க இங்க இருங்க. நான் எப்பவும் போல எட்டி பார்த்துக்கறேன். தட்ஸ் இட். இதுல எந்த மாற்றமும் இல்லைன்னா லஞ்ச்ல கைவைப்பேன்.” என்றான் கறாராக. அவனால் இந்த குடும்பத்தில் இயல்பாக ஒன்ற முடியாது. அது அப்படி தான். அதனால் அவன் பக்கத்தை பகிரங்கமாக எடுத்துரைத்தாலும் தவறில்லை என்பது அவன் எண்ணம்.

‘என்னது பழைய லவ்வரா?’ என்று பாவனா பார்க்க, ‘என்ன என்றான் புருவம் தூக்கி. ஒன்றுமில்லை என்று மறுத்துவிடுவது போல தலையசைக்க,

“அதான் பழைய லவ்வர்னு முடிச்சிட்டேனே.” என்றவன் அவள் செவிமடலருகே, “பஸ்ட் கிஸ்ஸே உனக்கு தான் தந்தது. யூ டோண்ட் வொர்ரி. ஐ நோ மை லிமிட்ஸ். அவ ஏர்ஹோஸ்டர். என் பைலட் வேலைக்கு அவ செட்டாவானு நினைச்சேன். பட் அவ லேகாவோட மதரையும் என் அப்பாவையுப் தப்பா பேசினா. ஐ ஹேட். சோ அப்பவே துண்டிச்சிட்டேன். உருகி உருகி லவ் எல்லாம் இல்லை. அவ பேசினது காயப்படுத்துச்சு. தட்ஸ் ஆல்” என்றான்.

காசிநாத் கரோலினை பார்க்க, “அர்னவ் லஞ்ச் முடிச்சி நீங்களே பாவனா வீட்ல விட்டுட்டு வரப்போறிங்களா? இல்லை அஸ் எ பேரண்டா நாங்க வந்து பொண்ணு கேட்கணுமா? அதையும் தெளிவா சொல்லிடுங்க. அதுக்கேற்ற மாதிரி ப்ரிப்பேர் ஆகிடுவோம்” என்று கரோலின் அர்னவ் பாவனா பேச்சில் நுழைந்து கேட்டார்.

தோராயமாக இருபது வருடத்திற்கு மேலாக, இத்தனை காலம் அர்னவை புரிந்துகொண்ட பெண்மணியாக கரோலின் எந்த வாதமும் செய்யவில்லை.
அர்னவ் முடிவுக்கே விட்டுவிட்டார். ‘அம்மா’ ‘சித்தி’ என்ற அடைமொழியை கூட எதிர்பார்க்காமல் தான் அர்னவ் நலனில் தலையிடுவார். அது இப்பொழுதும் தொடர்ந்தது.

“நீங்களும் வந்து இன்னிக்கே அவர்களிடம் பேசி எங்கேஜ்மெண்டா மாத்தி தந்தாலும் ஐ அம் ஹாப்பி. பிகாஸ் எனக்கு எப்ப லீவ் இருக்குனு சொல்ல முடியாது. லேகா ஸ்கூல் விட்டு வந்திருக்கா. உங்க இரண்டு பேருக்கும் டைம் இன்னிக்கு ஃப்ரினு தெரியும். மறுபடியும் எல்லாருக்கும் இதே போல ஒரே நேரம் லீவ் அண்ட் டைமிங் கிடைக்காதுயில்லையா?” என்று முடித்தான்.

கரோலினோ “லேகா… லஞ்ச் முடிச்சிட்டு இந்த ஷார்ட்ஸ் சேஞ்ச் பண்ணிட்டு, லேகாங்க மாதிரி டிரடிஸ்னல் டிரஸா போட்டுக்கோ. உங்க அண்ணி வீட்டுக்கு போறோம்” என்று மட்டும் கூறினார்.

காசிநாத்திற்கு மகன் சொல்வதும் சரியென்றுபட்டது. கரோலினுக்கு தனக்கு இன்று நேரம் அமைந்தது. லேகாவும் பள்ளி விடுமுறைக்கு வந்துயிருக்கின்றாள். அதோடு அர்னவ் அவசரம் புரிந்தவராய் இருந்தார்.

சந்தோஷோ லேகா அருகே அமர்ந்து, லஞ்சில் ஒரு பிடி பிடித்தான்.

பாவனாவோ, சங்கடமாய் சுவைத்திட, அர்னவோ அவளுக்கான தேவை பார்த்து பரிமாறினான்.

பாவனாவுக்கு இதே போல தான் ஆளில்லா தீவிலும், வயிற்றுக்கு தேவையான உணவை தனக்காக பார்த்து செய்து கவனித்தான் அர்னவ்.
அந்த இனிய நினைவோடு காதலனை கவனித்தவள் இனிதாக உணவருந்தினாள்.

அர்னவ் நேரத்தை அட்டவணையிட்டபடி, பாவனா வீட்டுக்கு தன் குடும்பத்தோடு அழைத்து வந்தான்.

சங்கடமாக காவேரி விழித்தாலும், மகளின் காதல் ஏற்கனவே மறைமுகமாக அறிந்ததால், தடையேதும் விதிக்காமல், சம்மதித்தார்.

தங்கள் நிலையை விட அதிக வசதி வாய்ப்பு என்ற நெருடல் இருந்தது. ஆனால் அர்னவ் ஆசைப்பட்டதும், மகள் விரும்புவதும் புரிந்தவருக்கு, மகளுக்கு நல்ல வாழ்வு அவள் மனதிற்கு ஏற்றவாறு அமைந்ததாக பூரித்து கொண்டார்.

வினோத் பம்பரமாய் அர்னவ் குடும்பத்தை கவனித்தான். அக்காவிற்கு பிறகு தன் அன்னையை, குடும்பத்தை வழிநடத்த அவனுக்குள் பொறுப்புகள் புரிந்துவிட்டது.

ஏற்கனவே மதிய உணவு அர்னவ் வீட்டில் முடிந்திருக்க இங்கே வந்ததும் டீயும் சிற்றுண்டியும் தர, வயிறு நிறைந்து நிச்சயதட்டை மாற்றிக் கொண்டார்கள்.

“அண்ணா உங்க பேமிலி பத்தி எதுவும் சொல்லலை” என்று சந்தோஷை கேட்டாள் பாவனா.

“அட உங்க கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வர்றேன்மா. பெரிய குடும்பம் எல்லாம் இல்லை. அப்பா அம்மா பூர்வீக வீட்ல இருக்காங்க. இங்க மனைவி குழந்தை மட்டும் தான்.” என்றான்‌ சந்தோஷ்.

இனிதாக பேச்சு திருமணத்தை பற்றியே சுற்றி சுற்றி வந்தது.

ஏற்கனவே அர்னவ் பிள்ளையார் கோவிலில் சிம்பிளா கல்யாணம், ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். ஈவினிங் கிராண்ட் ரிசப்ஷன் மட்டும் என் சார்பில் வைக்கணும்னு ஆசை. ஆபிஸ் கொலிக், பிரெண்ட்ஸ் இப்படி வரணும். அதர்வைஸ் நியர் பை பிரைவேட் லக்சரி அப்பார்ட்மெண்ட் மட்டும் வாங்கணும். அங்க தான் வாழப்போறோம்” என்றான் இலகுவாக.

சந்தோஷோ “பைனலி பைலட் அர்னவ் குடும்ஸ்தனா மாறப்போறான்” என்று கேலி செய்தான்.

“உன்னை மாதிரியே வருஷத்துக்கு இரண்டு முறைனு தலை காட்ட வைக்காத. அடிக்கடி நல்ல நாளுக்கு அவ மட்டுமாவது வரட்டும். முக்கியமா அவ அம்மா வீட்டுக்கும் அடிக்கடி அனுப்பு.” என்று கேலியாக காசிநாத் கூற, அர்னவ் ‘ஐ வில் ட்ரை’ என்பது போல புன்கைத்தான்.

“அதெல்லாம் நல்ல நாள் அதுவுமா வீட்ல பெரியவங்களை சந்திக்கணும் மாமா. அவர் வரலைன்னா கூட நான் உங்க எல்லாரையும் பார்க்க வருவேன்.” என்று அவனது அலட்சிய பதிலுக்கு ஏற்ப கொட்டு வைத்தவளாக பேச, அங்கே இனிதாக நேரங்கள் கழிந்தது.

ஒரு மாதத்திற்கு பிறகு, அர்னவ் அவன் வகுத்த அட்டவணைப்படி கோவிலில் திருமணம், செய்துக் கொண்டனர். அதை பதிவும் செய்து கொண்டு, வரவேற்பிலும் கலக்கினார்கள். சந்தோஷ் குடும்ப சகிதம் வந்து சேர்ந்தான். ரிஷப்ஸனுக்கு அர்னவின் முன்னால் காதலி கூட அவளது தற்போதைய காதலனோட வந்து விழாவை சிறப்பிக்க, பாவானாவுக்கு மலையை விழங்கி உணர்வு. திருமண அலைச்சல் முடியவும், புதுமண தம்பதியர், தனி விமானத்தில் பறந்தனர்.
இம்முறை சந்தோஷ கூட, கத்தரித்து, ஆட்டோ பைலட்டில் போட்டுவிட்டு, பாவனாவோடு பேசி கதைத்தான். நீங்க அந்த சீட்ல உட்காருங்க. நான் பக்கத்துல இஉக்கேன்” என்று ஆட்டோபைலட்டை டிஆக்டிவ் செய்து ஓட்ட வற்புறுத்தினாள்.

“ஏ… ராட்சசி… அதெல்லாம் பயப்பட ஒன்னுமேயில்லை. ஒரு தடவை ஆக்சிடெண்ட் ஆனா ஒவ்வொரு தடவையும் ஆகுமா.” என்று கேலி செய்தாலும் அவளது பயத்தில் அவன் பணியில் அமர வேண்டிய கட்டாயம் ஆனது. தேன்நிலவிற்கு மாலத்தீவு வந்தவர்களோ, கடலுக்கு மேல கரைக்கு அருகே இருக்கும் தனிமையான ரெஸார்ட் வீட்டில், புக் செய்தபடி, வந்து சேர்ந்தனர்.

அவ்வமைப்பை கண்டதும் வாய் பிளந்தபடி அர்னவை பார்வையிட, “நாம முன்ன போனதுலயும் இந்த மாதிரி வுட்டன் பேட்டர்ன் பாதை இருந்தது. ஆனா தங்கறது ஹோட்டல் மெத்தட்ல இருந்ததே. இது என்ன தனியா.” என்று கேட்டாள்.

“அது வணிக ரீதிக்கான இடம். இது பிரைவேட் ஸ்பேஸ். ஹனிமூன் கப்பீள்ஸுக்கு.” என்றான்.‌

“ரொம்ப அழகா இருக்கு. முன்ன ஜீவனோட தொழில் ரீதியா வந்தப்பவே இனிமேலும் இந்த மாதிரி பிளேஸுக்கு போகற வாய்ப்பு இல்லைனு தான் நினைச்சேன்.
நடுவுல ஜீவன் செயல் விமான விபத்துனு ஆனதும், இனியெல்லாம் விமானம் மேல பறந்த கூட தலை நிமிர கூடாதுனு நினைச்சேன்.‌
இப்ப…. திரும்ப அதே போல… இல்லையில்லை… அதை விட அழகான இடத்துல தனிமையா ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றவள் ஒவ்வொரு அறையாக பறவை போல வட்டமடித்தாள்.

அர்னவ் அவளது தாடை பிடித்து, ”இந்த ராஜாளி பறக்கறவன். இனி விமானத்தை பார்த்தா என் நினைப்பு தான் வரணும்.” என்று கன்னத்தை வலிக்காமல் கடித்து வைத்தான்.

“ஸப்பா.” என்று கன்னத்தை தேய்த்தாள். இந்த இரண்டு நாளில் அர்னவிடம் கணக்கு வழக்கில்லாமல் கடிகளை பெற்றுவிட்டாள். அவளை இரண்டு வினாடிக்கு மேலாக பார்த்தாலே கடித்து வைத்து முத்தமிடுவதில் அர்னவ் செய்கை இருக்க, பழகிவிட்டாள்.

“அய்.. சறுக்குமரம். தண்ணில போகுது. இது மாதிரி நான் குவின்ஸ் லேண்ட்ல பார்த்திருக்கேனே.” என்றவள் அதில் ஏற செல்ல, “பேபி மாதிரி பிஹேவ் பண்ணாத.” என்றான்.

“ம்கூம் உங்களுக்கு என்ன சார்.. வானத்துல பறக்கறது சாகசமா இருக்கலாம். எனக்கு எல்லாம் இதுல சறுக்கிட்டு போய் தொபுக்கடீர்னு விழறதே பெரிய சாகசம்.
அதுவும் அசுர தாலாட்டுல வாந்தி எடுக்காம போயிட்டு வந்தாலே கெத்து தெரியும்ல.” என்றாள்.
அர்னவ் வாதம் செய்யாமல் அவள் நடந்து செல்லும் பாதையில் பின் தொடர்ந்தான்.

“நான் சறுக்கவா?” என்று கேட்டு அர்னவிடம் அனுமதி வாங்க, அவள் அமரவும் அவளை உரசியபடி பின்னால் அமர்ந்தான்.
“பேபி மாதிரி பிஹேவ் பண்ணாதனு சொன்னிங்க?” என்று அவன் நெருக்கத்தில் கேட்க, “ராட்சசி… பேசிட்டே இருக்காதடி” என்று அவளை கட்டி அணைத்தபடி சறுக்கினர்.

“ஆஹ்.” என்று சப்தமிட்டபடி வந்தவர்கள் கடற்கரை நீரில் தொப்பென்று விழவும் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர்.
“செமையா இருக்கு.” என்று கூச்சலிட்டு குதூகலிக்க, சிவப்பு வண்ண ரோஜா ஒன்று நீரில் மிதப்பது போல இருந்தவளை தன் பக்கமாக இழுத்து முத்தமெனும் கடலையும் இணைத்து கொண்டான்.
இரவு நெருங்க மாலத்தீவில் தேன்நிலவில் கொண்டாட்டம் துவங்க இனி விளக்க வேண்டுமா என்ன ராஜாளியின் ராட்சசிக்கு…?

💝சுபம்💝

-பிரவீணா தங்கராஜ்.

Rc Group ல பைலட் கதை கேட்டா மறக்காம நம்ம அர்னவை ரெகமெண்ட் பண்ணுங்க. அர்னவ் பாவனாவின் இந்த கதை பற்றி உங்க கருத்தை சொல்லுங்க.

நன்றி.

இன்று செப்டம்பர் -1 ராணிமுத்துவில் நித்யா கதை வெளிவந்துள்ளது.
பத்து ரூபாய் மட்டுமே. அனைத்து நியூஸ் பேப்பர் கடையில் கிடைக்கும். வாங்கி படிக்க நினைப்பவர் வாசித்து சொல்லுங்க.

செப்டம்பர்-16 என்னுடைய கதை நின் பார்வை தவமல்லவா! வெளியாகும். அப்ப மீண்டும் அறிவிப்பு தர்றேன். அப்பவும் வாங்கி படித்து சொல்லுங்க.

எப்பவும் உங்க அன்பும் ஆதரவும் கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கவும்.

11 thoughts on “ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)”

  1. Kalidevi

    Wow wow superb story ending enanda ivlo sikram midinchiduche nu Iruku. Rajali ellam fast fast ah tha poraru eppadi samathika pora ninacha kiss pani ok solla vachitan takntak nu pesi ponu ketu mrg pani ipo thaniya flight la island la honeymoon celebration super rajali . Rajali ku etha ratchasi tha avalum.

    Congratulations sisy aduthu unga kathaigal potute irunga padika ready ah iruken 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐💐💐💐💐💐

  2. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 20 Final)

    அவன் தான் நினைச்சதை சாதிக்கிறவன் ஆச்சே, தவிர இப்ப ஜீவனோட தொல்லையும் இல்லைன்னவுடனே பேசி பேசியே அவளை சம்மதிக்க வைச்சிட்டான்.

    அதே மாதிரி, குடும்ப விஷயத்துலேயும் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் இருக்கிறதோட,
    சும்மா நறுக்கு தெநிச்சாப் போல அழகா தெரிவிச்சிட்டான். அப்படி இருக்கிறது தான் நல்லது.
    எதையும் ப்ராக்டிக்கலா திங்க் பண்றான், ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் மெச்சூர்டா இருந்திட்டா லைஃப் ரொம்பவே ஸ்மூத்தா போகும் தானே.

    எனிஹவ், இனிமே இந்த ராஜாளியோட சேர்ந்து பாவனாவும் அடிக்கடி பறப்பா. ம்.. நமக்குத் தான்
    கொடுத்து வைக்கலை. கீழே இருந்தே, ராஜாளி மேல பறக்கறதைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான் போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!