அத்தியாயம்-1
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சென்னையின் பரபரப்பான காலை வேளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று சிக்னல் மாறிமாறி விழுவும், அவசரகதியில் அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் என்று மனிதர்கள் பலரும் தேனீக்கள் போல பறந்திருந்தனர்.
அப்படி பலரும் தங்கள் வாகனத்தை ரேஸில் செல்வது போல முறுக்கி செல்வதில் முனைப்பாய் இருக்க, முக்கு டீக்கடையில் எஃப் எஃம் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதென்னவோ கையடக்க உயர்ரக தொலைப்பேசி, டிவி, கணிப்பொறி என்று பாட்டு கேட்க எத்தனையோ விதமாக வந்தாலும், டீக்கடையில் இந்த காலையில் எஃப் எஃம் கேட்பதில் சிலருக்கு இன்னமும் அலாதி ப்ரியமுண்டு. சிலருக்கு என்ன சிலர்.. பலருமே விரும்புவார்கள்.
அப்படி எஃப் எஃம் செவிக்கு இதத்தை சேர்க்க, அந்த சத்தத்தை தாண்டி, ‘எனது குப்பை எனது பொறுப்பு, என உறுதி எடுப்போமே… நாளை இளைய தலைமுறையை இன்றே காப்போமே… எனது குப்பை எனது பொறுப்பு… என உறுதி எடுப்போமே நாளை இளைய தலைமுறையை இன்றே காப்போமே..’ என்ற ஒலிவடிவ பாடல் காதை இரைச்சலுக்குள் ஆளாக்கி, மட்கும் குப்பை, மட்காத குப்பை என பச்சை, சிவப்பு இரண்டு விதமான குப்பை தொட்டியோடு குப்பை வண்டியிலிருந்து அப்பாடல் ஒலித்தது.
அதனை இயக்கியவனோ “என்ன பாண்டி அண்ணா… டீக்கடையில் ரொம்ப தான் கூட்டம்? என்ன விசேஷம்?” என்று கேட்டான் சரவணன்.
“அட… இன்னிக்கு நம்ம தெருவில் இருக்கற மண்டபத்துல கல்யாணம்பா. சிலருக்கு மண்டபத்துக்குள்ளயே சுத்த முடியுமா? சும்மா வெளியே கொஞ்ச நேரம் உலாத்த வந்து டீக்குடிக்கறாங்க. என் கடை பிழைப்பு ஓடுது. திரும்பி வர்றப்ப வா.. டீ ஊத்தி வைக்கிறேன்” என்றார் டீக்கடைக்காரர்.
“வர்றேன்னா வர்றேன். எடுத்து வை அண்ணா. மலர் அப்பார்ட்மெண்ட்ஸ் போயிட்டு வர்றேன்” என்று துப்புரவு தொழிலாளிக்கு என்று கொடுக்கப்பட்ட ஆட்டோ வடிவம் கொண்ட வண்டியை இயக்கி சென்றான் நாயகன் சரவணன்.
சரவணன் அப்பா கணேஷ்-அம்மா விமலா. தங்கை அனிதா.
சரவணனுக்கு வயது 22 நெருங்குகிறது. ஐந்து புள்ளி ஆறு அடி உயரம், கருமைக்கும் மாநிறத்துக்கும் இடைப்பட்ட நிறம்.
தந்தை கணேஷ் இறந்துவிட, தாயின் வேலையில் கிடைக்கும் பணம் போதாமல், ஊதாரியாக இருந்தான்.
சரவணன் தந்தையின் பணி, தனக்கு கொடுக்கப்பட, சில பல மாதமாய் வேலையில் பொறுப்பாக மாறியுள்ளான்.
நாயகன் என்றாலே ஆறடி உயரம், அழகிய உயரம், சிக்ஸ் பேக்ஸ் தேகமென்று இருக்கலாம். ஆனால் இங்கே நிதர்சனம் என்பது உண்டல்லவா?
இரு தெரு கடந்ததும், இன்னமும் அந்த விழிப்புணர்வு பாடலை ஒலிக்க விட்டபடி, விசிலை சத்தமாய் ஊதினான். அதிகாலை வீட்டில் குடித்த தண்ணி கலந்த டீ-க்கு இத்தனை சக்தி எப்படியோ?
மலர் அப்பார்ட்மெண்ட்ஸ் ஓரளவு வசதி படைத்த ஆட்கள் தங்கிருக்கும் இடமென்பதால் மெதுமெதுவாக குப்பைகளை சிலர் கொண்டு வந்து கொட்டினார்கள்.
சிலர் எல்லாம் வேலைக்கார பெண்மணி மூலமாக வாசலில் வைத்திட, சரவணனே அதை எடுத்து கொட்டிவிட்டு குப்பை கூடையை தட்டி அங்கேயே வைப்பான்.
மூன்று அடுக்கு கொண்ட வீட்டிற்கு வெளியே, ஆடி கார் ஒன்று நின்றியிருக்க, கையில் பளபளக்கும் வாட்ச்சும், ஆறடியில் ஐயர்ன் செய்த உடையில், ஷர்ட்டை இன் செய்த வாலிபன் வந்தான்.
காலையிலேயே குப்பை வண்டியா? என்று முகத்தை சுணங்கிட, சரியாக அவனது காரில் முன்பக்க கண்ணாடியில், காகம் எச்சம் போட்டுவிட்டு பறந்தது.
ஆடிக்காரின் சொந்தக்காரனோ டிரைவரை பார்த்து, “அண்ணா.. இதை கவனிங்க.. ஷிட்.” என்று முகத்தை சுளித்தான்.
டிரைவரோ காகத்தின் எச்சத்தை துடைக்க வந்தவர், எதிரேயிருந்த குப்பை வண்டி ஓட்டும், சரவணனிடம் “தம்பி… இதை க்ளீன் பண்ணு” என்று கட்டளையிட்டார். ஏதோ சரவணனுக்கு இவர் தான் பணம் தரும் முதலாளி என்ற ரீதியில் கட்டளையிட்டாலும், சரவணன் வாதிடாமல், “அச்சோ… காகா அசிங்கம் பண்ணிடுச்சா அண்ணா?” என்று அவனது தோளில் இருந்த துண்டால் துடைத்தான்.
ஓரளவு சரியானதும், நன்றாக சுத்தம் செய்துவிட்டு, “இப்ப பாரு அண்ணா.. சும்மா.. கண்ணாடி டால் அடிக்கு.” என்று கூறினான்.
“ஆங்.. தள்ளு தள்ளு” என்று குப்பை வாடை என்று தள்ளி நிறுத்த, காரின் சொந்தக்காரனோ, நூறு ரூபாய் தாளை எடுத்து சரவணனிடம் நீட்ட சென்றவர், அவனிடம் கொடுக்க தயங்கி “முத்து… இதை அவனிடம் தந்துடு” என்று கூற, டிரைவரோ ‘நூறு ரூபா அசால்டா போகுதே..’ என்று மனதில் நினைத்தாலும், முதலாளியிடமிருந்து வாங்கி “டேய்.. இந்தா” என்று ஏதோ டிரைவரே காசை தருவது போல நீட்டினார். இதே வீட்டில் இருந்து அந்த பணக்காரன் தந்திருந்தால், இந்த நூறு ரூபாயை முத்து மறைத்து வைத்து, இருபது ரூபாயை தரும் வள்ளல் குணம் டிரைவருக்கு இருந்திருக்கும். கார் ஓனர் கண்ணெதிரில் நூறு ரூபாயை விழுங்க இயலாதே!
சரவணனனோ காரில் ஏறியமர்ந்த இளைஞனை கண்டு, ”தேங்க்ஸ் அண்ணா” என்று கூறிவிட்டு டிரைவரிடம் பெற்றுக் கொண்டான்.
ஆடிக்காரோ அவ்விடம் இருந்து அகல, சரவணனோ, நூறு ரூபாய் தாளை பார்த்து, கண்கள் பளபளப்பக்க, ‘அனிதா கேட்ட பேனாவை இன்னிக்கு வாங்கிடணும்’ என்று உச்சரித்தவாறு, தன் கால் சட்டை பையில் திணித்தான்.
அனிதா... நம் நாயகன் சரவணனின் செல்ல தங்கை. பனிரெண்டாவது படிக்கின்றாள். சரவணனுக்கும் அனிதாவுக்கு ஐந்து வயது இடைவெளி வித்தியாசத்தில் பிறந்தவர்கள்.
சரவணன் தற்போது பொறுப்பாக செயல்பட முக்கிய பங்கு அனிதா மட்டுமே. இதற்கு முன் பிளஸ் டூவில் பெயிலாகி, தன் வாழ்வில் திக்கற்ற பயணத்தில் ஊதாரியாக இருந்த சரவணனின் வாழ்வில், சிறு மாற்றம் ஏற்பட்டது அனிதாவாள்.
முன்பு தந்தை கணேஷ் இருந்தார். அவரே அனைத்தையும் பார்த்துக் கொண்டு வீட்டை கவனித்தார். அப்பொழுது எல்லாம் சரவணன் கூட்டாளிகளோடு ஊர் சுற்றி திரிந்தான்.
ஒரு வருடம் முன், கணேஷ் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியாளராக சென்றவர், இறந்த சடலமாக வீடு வந்தடைந்தார். ரோட்டில் உள்ள சாக்கடை தூர்வாறும் நேரம் இறந்து போனார்.
பெரும்பாலும் சாக்கடை தூர்வாறும் போது, ஒன்று பிராணவாயு இல்லாமல் மூச்சு திணறல் உண்டாகி இறக்க நேரிடும். இரண்டாவது விஷவாயு தாக்கி உடனடியாக இறப்பு சம்பவிக்கும்.
என்ன தான் சாக்கடையை சுத்தமிட மனிதர்களை பயன்படுத்துவது தவறு என்று சட்டம் வந்தாலும், சில நேரம் இயந்திரத்தை விட மனிதன் தேவைப்படும் நேரம், இச்சம்பவம் நிகழ்ந்துவிடுகின்றது.
பொதுவான சாக்கடை தூர்வாற ஆளை அனுப்பும் முன், சில முன்னெச்சரிக்கைகளைக் கடை பிடிக்க வேண்டும்.
அருகில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்திய சுவாச உபகரணம், உள்ளே சென்றவர் மயங்கி விட்டால் அவரை வெளியே துரிதமாகக் கொண்டுவர பாதுகாப்பு கயிறு, பாதுகாப்பு கவசம், பாதுகாப்பு கண்ணாடி, ஸ்டெக்சர, போன் போன்றவை தயராக இருக்க வேண்டும்.
ஒருவர் தூர்வாற உள்ளே சென்றால் அவருடன் எல்லாம் சரியா என்று அடிக்கடி பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலே குறைந்தது இரண்டுபேர் தயாராக இருக்க வேண்டும்.
அங்குள்ள ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம், காவல்நிலையம், மருத்துவமனை போன்ற அவசிய போன் நம்பர்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் கணேஷ் அவ்வாறு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், ‘போகுமுன் ஒரு குவார்ட்டர், வெளியே வந்ததும் ஒரு குவார்ட்டர். வேலை முடிச்சிடுவேன்’ என்று அலட்சியமாக சொல்லிவிட்டு சென்றார்.
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பிடமுடியாதது. உயிரோடு விளையாடலாமா? ஆனால் கணேஷ் தன்னையும் தன்னை நம்பியவரையும் கைவிட்டு ஒரேடியாய் உலகத்தை விட்டு சென்றார்.
இதில் எந்த அரசையும், யாரையும் குற்றம் சுமத்த சொல்வதற்கு ஒன்றுமில்லை சரவணனுக்கு.
கணேஷ் இறந்தப்பொழுது இழப்பீடாக பணத்தொகை வரும் என்று சொல்லியிருக்க, அதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கவே சரவணனுக்கு நேரம் சரியாக உள்ளது. அதிலும் பல அதிகாரிகளின் கையெழுத்திற்கு சென்று வந்த பிறகே இழப்பீடு தொகையாக பணம் கிடைக்குமாம்.
அதுவரை அன்னையின் கத்தலாலும், தங்கையின் படிப்புக்கும், பொறுப்பாக மாறினான்.
சரவணன் மலர் அப்பார்ட்மெண்ட்ஸில் குப்பைகளை சேகரித்து டீ கடைக்கு வந்த போது பத்து மணி ஆனது.
“இன்னா பாண்டி அண்ணா. வடை போண்டா எல்லாம் இவ்ளோ எண்ணெய் ஊறிப்போய் கிடக்கு?” என்று வந்தான். அங்கே வடை சாப்பிட்டு கை அலம்ப தண்ணீர் இருக்க அதில் கை கழுவினான் சரவணன்.
“எங்க… கூட்டம் அதிகமானா தீயை கூட்டினேன். அது மடமடனு எண்ணெய்யை குடிச்சிடுச்சு.” என்று டீயும் வடையும் தட்டில் வைத்து நீட்டினார்.
சாவகாசமாக கடை ஒரமாக அமர்ந்து டீயை பருகினான்.
“தங்கச்சி டென்தா பிளஸ்டூவா சரவணா? படிப்பெல்லாம் எப்படி போகுது” என்று கேட்க, “பிளஸ்டூ அண்ணா. படிப்புல அனிதா புலிண்ணா… நான் தான் ஃபெயில் ஆகிட்டேன். அவயெல்லாம் நல்ல மார்க் எடுப்பா அண்ணா.” என்றவன் தன் பேண்ட் பேக்கெட்டில், தொட்டு தடவினான்.
மலர் அப்பார்ட்மெண்ட்டில் அந்த கார்காரன் தந்த நூறு ரூபாயை எடுத்தான்.
கணேஷ் இறந்த பொழுது ஊதாரியாக திரிந்த சரவணனை விமலா தீட்டிதீர்த்தார். குடும்ப வறுமையை புரிந்து நடக்கும் மகனாக இல்லாமல், ஐந்து பத்தென்று திருடி சென்று ஊர்சுற்றியவன், ஒரு நாள் ”ஆம்பள பையன்னு தான்டா பேரு உன்னால ஒரு விஷயத்துக்காகவது புரோஜனம் இருக்கா? அவர் செத்ததிலருந்து நானா ஒண்டிகட்டையா சம்பாதிக்கறேன்
வாயுக்கும் வயிற்றுக்கும் கூட பத்தலை. இருபது வயசு தாண்டி நீ ஒத்த பைசா சம்பாதிச்சு கொடுக்கறியா? பீடி சுருட்டுனு இருக்குற பணத்தை திருடிட்டு போற. இந்தா.. உன் தங்கச்சி அனிதா. பத்தாவதுல நல்ல மார்க்கு நல்லா படிக்க வையுங்கன்னு அந்த டீச்சரம்மா சொல்லுச்சு. ஆனா என்ன புரோஜனம். அதுக்கு ஒரு நோட்டு புக்கு கூட வாங்க முடியாம அல்லாடுறேன்.
நீ மட்டும் நல்ல பையனா, வீட்டுக்கு பத்து பைசா சம்பாரிச்சு காட்டு. வீட்டுக்கு கூட வேண்டாம்டா. உன் தங்கைக்கு ஒரு பேனா வாங்கி கொடு பார்க்கலாம்” என்று கூறினார்.
அன்று சரவணனுக்கு என்ன கோபமோ, வீரமோ, அனிதாவுக்கு பேனா மட்டுமில்லை… அடுத்து பிளஸ்டூ படிக்க எல்லா செலவையும் நானே கூட பார்த்துப்பேன்” என்று ஜம்பம் பேசினான்.
பிளஸ் டூ சேர்ந்ததும் சொன்னது போல நண்பர்களிடம் கடன் வாங்கி செய்தான். ஆனால் கடன் அடைக்க, பணத்தேவைக்கு, தந்தை வேலையை பார்த்துவிடலாமென்ற மிதப்பில் சேர்ந்தான்.
அனிதாவிடம் ‘உனக்கென்ன வேண்டும்’னு கேட்டப்ப, அவள் கேட்டது ‘பார்க்கர் பென்’.
”பேனா தானே வாங்கிடறேன்” என்று அசட்டையாக கூறினான்.
ஆனால் அவளோ “அண்ணா.. அது ஐந்து ரூபா இல்லை. 150 ரூபா. மஞ்சளா தங்கம் மாதிரி மினுக்கும். டென்த்ல நான் 420 மார்க் வாங்கியதுக்கு எங்க கிளாஸ் மேம் தந்தாங்களே அது மாதிரி வேண்டும்” என்றவள் ரீபிள் காலியான பேனாவை சுட்டிகாட்டி விளக்கினாள்.
“பிளஸ் டூ பப்ளிக் எக்ஸாம் நீ வாங்கி தர்ற பேனாவுல தான் எழுதுவேன். வாங்கி தர்றியா?” என்று கேட்க, சரவணனோ சரியென்று கூறிவிட்டான்.
இதோ அதோவென்று பிளஸ் டூ படிப்பும் அரையாண்டு தேர்வு வரை வந்துவிட்டது. இன்னமும் வாங்கி தரவில்லை. ஏதாவது செலவு வந்தவண்ணம் இக்கட்டை கூட்டுகின்றது.
இன்று நூறு ரூபாய் கிடைத்துவிட்டது. கூடுதலாக தன்னிடம் இரு நூறு உள்ளதால் பணம் கரைவதற்குள் பேனாவை வாங்கிட வேண்டுமென்று மீண்டும் பணத்தை உள்ளே வைத்து வீட்டுக்கு சென்றதும் அனிதாவிடம் காட்டிவிட்டு, அவளை அழைத்து சென்று கடையில் வாங்க வேண்டும்’ என்ற முடிவோடு பணியை கவனித்தான்.
டீ கப்பை தன் குப்பை வண்டியில் போட்டவன் பாண்டி அண்ணாவிடம் ‘வர்றேன் அண்ணோவ்’ என்றபடி விடைப்பெற்றான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தினபதிவு வரும்னு சொல்ல மாட்டேன். எழுத எழுத பதிவிடுவேன்.
கதை உடனுக்குடன் வாசிக்கவும். கூடுமானளவு தளத்தில் ரெஜிஸ்டர் லாகின் செய்து இலவசமாக வாசிக்கவும்.
அப்பறம் கெஸ்டா கூட வந்து படிக்கலாம். ஆன்லைன் கதையை தேடி வர்றவங்களுக்காக இந்த ஆப்ஷன். அதோட… என் அன்புக்குரிய சில முதிய வாசகர்களுக்கு, கொஞ்சம் சிரமமா இருக்குன்னு சொன்னாங்க.
பிரவீணாவை பொறுத்தவரை அன்பா எது சொன்னாலும் கேட்பா. அதுவும் என் கதையை விரும்பி படிக்கும் முதிய பெண்மணிகளான வாசகர்களை மதிக்கறேன். லைக் கமெண்ட்ஸ் பண்ண தெரியலைடா வீணா ஆனா உன் கதை படிக்கணும்னு சொன்னாலும், வாட்சப்லயோ அல்லது கால் பண்ணி கதை எழுதிய விதத்தை மனதார ஒருவார்த்தை கூறுபவர்களுக்கான சலுகை.
சிலர் பார்ஷியாலிட்டி பார்த்து, இருப்பவர்களை எப்பவும் மதிக்க மாட்டேன். அது யாராயிருந்தாலும் தான். அவங்க முகநூல் ரிவ்யூவோ கமெண்ட்ஸ் தவிர்த்தா கூட எனக்கு அது அபெக்ட் ஆகாது. தட்ஸ் மீ.
அப்பறம்….
இந்த கதையில் வரும் நாயகன் சரவணன் ரொம்ப சாதாரண துப்புரவு தொழிலாளி.
காதல், கீதல், பணம் வைத்து பில்டப், கண்ணால காரியம் சாதிக்கறது, இப்படி ஜென்ரலா ஹீரோக்கான எந்த ஸ்பெஷலும் சரவணிடம் இருக்காது.
ஆனா கதை இருக்கும்
நிதர்சனம் இருக்கும். எனக்கு இந்த ஹீரோ வித்தியாசமானவன்.
எனக்கான வாசகர்களுக்கு எந்த விளக்கமும் தேவைப்படாது.
எனக்காக என் தளத்தில் என் கதைகளை தேடி வாசித்து, கருத்திடும் வாசகர்களே. உங்க கருத்து ஒவ்வொன்னும் பூஸ்ட் தான். என்னால ரிப்ளை பண்ண முடியாட்டியும் என் நிலையை சொல்லிடுவேன். உங்க கருத்தை கவனிக்கறேன். அதை மீறி பொதுவான நன்றியையும் நெரிவித்து தான் எந்த பதிவானாலும் தளத்தில் வெளியாகும்.
முகநூலில் டேக் செய்ய முடியாது. But everyone tag போடுவேன்.
குழுவில் இணைந்துக் கொள்ளுங்கள். இல்லையா வாட்சப் சேனல்ல சேர்ந்துக்கோங்க. தவறாம அத்தியாயம் பதிவிடறப்ப நோட்டிபிகேஷன் வரும்.
உங்க அன்பும் ஆதரவையும் நாடியபடி, புதுக்கதை.
இது எனது 95நாவல்.
சிலர் முகநூல் 6வது நாவல்னு போட்டா கூட வாழ்த்து மழையா வரும். நாம எது போட்டாலும் அவாய்ட் பண்ணணும்னு முகநூலில் இருப்பாங்க. அதுயேன்னு தெரியலை(எல்லாம் அவங்க அவங்க பார்ஷியாலிட்டி கேரக்டர் தெரிந்து நான் ஒதுங்கறதால்) அதனால் முகநூலில் 95த் நாவல் மென்ஷன் பண்ண விரும்பலை. எப்பவும் எனக்காக தளத்துல வர்ற ரீடர்ஸிடம் இங்கயே பகிர்ந்துக்கறேன். உங்க ஆசியும் அன்பும்.
நன்றி.
பிரவீணா தங்கராஜ்.
Kathai epovum pola starting super sisy . Adutha kathai vera mari different ah elautha start pani irukinga ninaikiren . Congratulations sisy. Ithe mari unga kathai vanthuten irukanum site la nan padichite irupen vidama . Sikram 100th story eluthunga athuku melaum eluthite iruka my best wishes for u ❤️🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி மென் மேலும் வளர்க 🎉👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Wowwww🥳🥳🥳🥳 95th ahhh…. Super siss… Congrts…. Menmelum valarga….
nice
Super start. Intresting sis. Your hardwork never fails sis. Eagerly waiting for your century story sis.
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 1)
பாவம் தான் சரவணன்னு சொல்ல மாட்டேன், ஏன்னா, அப்பா இருந்த வரைக்கும் ஜாலியாத்தானே சுத்திட்டிருந்தான், அப்பா போனப்பிறகு தானே பொறுப்புகளை தோள்ல சுமக்க வந்திருக்கான், இதை அந்த அப்பா உயிரோட இருந்தச்சவே செய்திருந்தா, அவரும் தோள் கொடுக்க தன் மகனே தோழனா வந்துட்டான்னு சந்தோஷப்பட்டிருப்பார் தானே ம்.. அவருக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான் போல. போகட்டும் இப்பவாவது பொறுப்பு வந்ததேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice starting 👌👌👌👌👌👌 waiting for upcoming updates,😍
👏👏👏👏🤝🤝
Eppo vum indha story um arumai o arumai aarbamam yae super than
Good.. different start. 👌
Saravanan character name superb 👍💯💥, interesting 🤩🤩 waiting for next ud
95th wowww kaa😍😍😍😍!!… 100, அதுக்கும் மேலன்னு நிறைய நிறைய எழுத வாழ்த்துகள் கா❤️!!…
சரவணன், அவன் இயல்போடு அவன் இருக்குறது நல்லா இருக்கு!.. கார் வச்சுருக்குறவனை விட இந்த டிரைவர் செய்யுறது, ரொம்ப இல்லை ரொம்ப ரொம்ப ஓவர்🤷🏻♀️🤷🏻♀️
Congratulations ma.
Congratulations sis for you 95 novel… without your stories the day will not go… Keep rocking for the amazing stories….
Congratulations 🎉🎉🎉
Super sis nice starting romba yedharthama eruku sis story 👍👌😍 congratulations for ur 95th story menmelum valara vazthukkal sis🎉😊
Normal life story 😀… Superb 👍💯