Skip to content
Home » அபியும் நானும்-9

அபியும் நானும்-9

🍁 9

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


           அதிகாலை தலைவலி மண்டையை பிளக்க ராஜேஷ் எழுந்து அமர்ந்து, அபி அருகே உறங்க கண்டான். ராஜேஷ் அவளை கொஞ்ச அருகே சென்றான்.
    ”நீ ட்ரிங் பண்ணியிருக்க ராஜேஷ் குழந்தை அருகே போகாத” என்ற கீர்த்தனா குரல் கேட்க,
    ”நான்… ஐ அம் சாரி கீர்த்து… நான் அங்க இருந்து வந்திருக்க கூடாது. ஆனா அபி பற்றி சொல்றதை கேட்க அளவுக்கு எனக்கு பொறுமையோ, நிதானமோ, பக்குவமோ இல்லை கீர்த்தனா. அதான் ட்ரிங் எடுத்துக்கிட்டேன்”


     ”எனக்கும் சேம் கவலை இருக்கும் தானே? அப்போ நானும் ட்ரிங் எடுத்துக்கவா? சொல்லு ராஜேஷ்?”


    ”கீர்த்தி ப்ளீஸ்… மன்னிச்சுடு.. இனி நடக்காம பார்த்துக்கறேன்” என வெளியேறினான்.
          அபியின் வளர்ச்சி அவள் இருக்கும் நிலை என்று அம்பிகை அறிந்த பிறகு, சுதாகர்-அம்பிகை கவலை கொள்ள செய்தார்கள். எங்கே ராஜேஷ் மகளை வெறுப்பானோ என்று கூட அஞ்சினார்கள்.
         ஆனால் மகாலிங்கம் முன்பு இருந்த முறையை விட கூடுதலாக அன்பை பொழிந்தார். அபி அவரிடம் ஒட்டுதலாக மாறினாள்.


           அவருக்கு அடிக்கடி உடல்நிலை சுகவீனம் அடைய.. ஒரு நாள் மொத்த சொத்தும் அபியின் பெயரில் மாற்றி விட்டு இறந்தும் போனார்.


       வந்தவர் வராதவர் என்று பார்க்கும் நபர்கள் போனில் கேட்கும் நபர்கள் முதல் எல்லாரும் ராஜேஷிடம் தந்தை இறந்த செய்தியை விட, மகளை பற்றி தூண்டி துருவி விசாரித்ததை தான், அவனால் தாங்கி கொள்ள இயலவில்லை. அதீத உளைச்சல் அடைய மதுவை அதிகம் நாடினான்.
        முதலில் சொல்லி பார்த்த கீர்த்தனா அவன் காது கொடுத்து கேளாமல் புறம் காட்ட, அபியின் வளர்க்க எடுக்கும் பொறுப்பில் ராஜேஷ் என்பவனை கவனிக்க மறந்தாள்.
          ஆனால் ராஜேஷை மட்டுமே குறிவைத்து காத்திருந்த கேத்ரின் ராஜேஷுக்கு நன்கு பழக்கம் ஆனாள்.


      அபியை பெரிய பள்ளியில் சேர்க்க மறுத்ததில் இருந்து அவளுக்கு எப்படி உண்ண, எப்படி பேச, என்ற சின்ன சின்ன விஷயம் கூட சொல்லி கொடுக்க முனைந்தாள். அதிலே நாட்களும் மாதங்களும் சென்றன.


     அதோடு கேத்ரின் ராஜேஷ் வாழ்வின் பகுதியிலும் சென்று இருந்தாள். நட்பில் துளித்த நேசம் கொஞ்சம் கொஞ்சமாக உறவாக செல்ல நேரும் பொழுது ராஜேஷ் சுதாரித்து கிர்த்தனாவிடம் நின்றான்.
      ”கீர்த்து நீ நான் வாழும் வாழ்க்கை குறைவா இருக்கு” என்று எங்கோ பார்த்தபடி.

அதற்கு கீர்த்தியோ ”நீ பப்ல இருக்கும் பொழுது நானும் அங்க வர முடியாது ராஜேஷ். இது தான் நம்ம வீடு… நான் இங்க தான் இருக்கேன்.. உனக்கு தான்…?” என நிறுத்தினாள்.


         ராஜேஷ் எதுவும் பேசவில்லை அடுத்த நாளே அம்பிகை சுதாகரிடம் நின்றான். அபியை ஹோம்ல விட்டுட்டு என்னோட கீர்த்தனாவை வாழ சொல்லுங்க” என்று அவனின் உண்மையான ஆசை, அந்த பெற்றோரால் புரிந்து கொள்ள முடிந்தது. மகளும் எத்தனை நாள் அபிக்கு சேவகம் செய்ய முடியும் என்று யோசித்து ராஜேஷ் சொல்லுக்கு இணங்க, ஹோமில் சேர்க்க கீர்த்தனாவிடம் பேசினார்கள்.


     ராஜேஷை புரிந்து கொண்டு பேசிய பெற்றோர்கள், கீர்த்தனா நிலையை எண்ணாமல் போனது தான் கொடுமை. தாயின் அன்பு என்றும் எதனாலும் மாறாது என்று அவர்களுக்கு புரியாமல் போனது.


      கீர்த்தனவுக்கு சொல்லி பார்க்க, அவளோ அதே பிடிவாதத்தில் இருக்க, ராஜேஷ் கீர்த்தனா மீது காரணமில்லாது கோவம் துளிர்த்தது.


           ராஜேஷ் தங்கள் கம்பெனி சரிவர பார்க்க இயலாமல் போக அதுவோ நஷ்ட கணக்கில் போக ஷேர் காரர்கள் அவனை விலக்கினார்கள்.


      இவனின் ஒரே கம்பெனி மட்டுமே கடைசியில் நிலை பெற்றது. இதில் நடுவில் கேத்ரினுக்கு ஒரு கம்பெனி எதனால் போனது என்றில்லாமல் ராஜேஷ் இருந்தான்.


       அன்று ராஜேஷ் பார்வையில் அபியை விடுத்து அவளுக்கு பாலை சூடு படுத்த சென்ற கீர்த்தனா வந்து பார்க்கும் நேரம் அபி மாடியின் விளிம்பில் ஏறி கீழே விழும் நிலையில் தான்… உள்ளம் பதற அருகில் போய் கீழே இறக்கி கட்டி கொண்டாள் அபிநயவை.


      ”ராஜேஷ் குழந்தை கீழே இறங்க முயற்சி பண்ணுது பார்த்துகிட்டு சும்மா இருக்க” என்று கேட்டதும்
      ”அது அப்படியாவது செத்து போன, நீ என் பழைய கீர்த்தனவா மாறுவனு இருந்தேன் ஆனா தப்பிச்சுடுச்சு” என்று ராஜேஷ் சிகரெட் வீசி சென்றான்.


           கீர்த்தனா மனதில் பெரிய புயல் தாக்கி சென்ற நிலையில் உறைந்து நின்றாள்.


        அங்கே தோளில் அபி உறங்கும் வரை அப்படியே இருந்தவள் காகம் கரைய சுற்றி பார்த்தாள்.


        தற்பொழுது இந்த பெரிய வீடு அவளுக்குள் அச்சத்தை பரப்பியது. நீண்ட ஹால் நாலைந்து அறைகள் எல்லாம் அச்சுறுதியது.


       அதே யோசனையில் இருந்தவள் ராஜேஷ் பேச ”இங்க இருக்கறதா இருந்தா அபி ஹோம்ல விடு இல்லையா வெளியே போடி” என ராஜேஷ் மிரட்ட, கீர்த்தனாவின் அம்மா அப்பாவும் மகள் எங்கே இதே வாழ்வை மேற்கொள்வாள் என்று அஞ்சி, அவர்களும் அதே கருத்தை சொல்லி வீட்டில் நுழைய மறுக்க, துணி மணிகள் எடுத்து கீர்த்தனா யோசனையோடு எங்கே செல்ல என்று தவிக்க கையில் கிட்டியது அவளின் 20வயதில் மகாலிங்கம் கொடுத்த ப்ரெசெண்ட் வீடு. அவர் சொன்ன வார்த்தை அபி இந்த குடும்பத்தின் வாரிசு’ என ஒலிக்க அந்த வீட்டின் பத்திரம் எடுத்து கொண்டு வந்தவள் தான்.


         நாட்கள் நகர கீர்த்தனா வருவதாக இல்லை என்றதும் ராஜேஷ் வந்து சேர்ந்தான். நடுவில் நடுவில் கேத்ரின் வருகை இருக்க கீர்த்தனா தான் “டிவோர்ஸ்‌ கொடு ராஜேஷ் நீ கேத்ரின் மேரேஜ் பண்ணிக்கோங்க” என்று சொல்ல ராஜேஷ் சரி என்று ஒப்பு கொண்டான். இதோ இப்பொழுது வரை இதே போராட்டம் ஒலிக்க, இன்று வரை கீர்த்தனா அதனை அபியின் சிரிப்பில் தான் மறந்து கொண்டு இருக்கின்றாள்.


          ராஜேஷ் அன்பு மாறியது அபியால் மட்டுமே என்றால், ராஜேஷ் இருக்கும் நேரம் கொஞ்சம் அபியை பார்த்து கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பாள் கீர்த்தனா. ஆனால் கேத்ரின் வருகையில் தான் கீர்த்தனா அடியோடு ராஜேஷை மறக்க எளிதானது. தான் மறுக்க அடுத்தவளை உடனே நாடிவிட்டான் என்ற ஒன்றே ராஜேஷ் காதலை தூர போட வைத்து விட்டது.


       தாயின் மனம் மட்டுமே கீர்த்தனா எண்ணி முடிக்க, தாரம் உணர்வு அப்படியே மழுங்கி விட்டது.
     கீர்த்தனவுக்கு நேரம் கொடுத்தோ அல்லது தான் கொஞ்சம் மதுவை நாடாமல் கம்பெனி என்று பணியில் தீவிரமாக இருந்தாலோ, கொஞ்சம் கேத்ரின் சவகாசம் போகாமல் நல்ல நிலையில் இருந்து இருப்பான். அதற்கு எல்லாம் நேரம் கொடுக்காமல் போனது விதியின் சதி.


     மதுவை நாடியவான் அவன் நிலை அறியாது ஒரு முறை செய்த பிழை கேத்ரின் விடாது வேதாளமாக தொற்றி கொண்டாள்.
         ராஜேஷ் திருமணம் என்றதும் அதற்கும் ஒப்பு கொண்டாள்.


                 வெளியே ஓயாது ராஜேஷ் போதயில் புலம்ப, இங்கே கண்ணீர் கோடுகள் காய்ந்து கீர்த்தனா கதவில் சாய்ந்து இருந்தாள்.
           விடியாத இவர்கள் வாழ்வில் சூரியன் மட்டும் விடியந்தது.


          அன்று அபியை கிளப்பி கொண்டு, அவளும் கிளம்பினாள். எளிமையான காட்டன் சேலையில் கிளம்ப, ராஜேஷ் புதிராக தான் பார்த்தான். அவன் சில வருடமாக பார்ப்பது கீர்த்தனா பாலோசா குர்தா அது கூட பத்தே பத்தினை மாற்றி மாற்றி போடும் நோக்கில் தான் சுற்றினாள் கீர்த்தனா.


           ராஜேஷ் அதற்கு மேல ஆராய்ச்சி செய்யவில்லை.
       அபியை அழைத்து கிளம்பி இருந்தாள்.


             இங்கு நாயகன் அபிமன்யு கண்கள் வாடியிருந்தது. மனதில் காதல் தோன்றி மறைந்த சுவடுகள் அழிய, குளித்தவன் கிளம்பினான். பள்ளி திறக்கும் நேரமும் மூடும் நேரமும் அங்கே இல்லாமல் அவளை காணாமல் தவிர்த்து தனது மனதை மாற்றிட எண்ணி கிளம்பினான்.


     பள்ளியில் காரில் இருந்து இறங்கி தனது இடம் நோக்கி வந்து அமர்ந்தான்.
       ”சார்.” என்ற மல்லிகா மிஸ் குரலில் திரும்பியவன்
     ”சொல்லுங்க மேம்?” என உட்கார சொன்னான் அவர்களை.


      ”சார்.. இந்த செவென்த் கிளாஸ் எடுக்க ஒரு மிஸ் வேணும் என்று அப்பா சொல்லிட்டு இருந்தார்… இப்போ ஒருத்தங்க ரேஸ்யூம் கொடுத்து இருக்காங்க… ரொம்ப நல்ல பொண்ணு ஸார்… ஒரு கிரிட்டிகள் சிட்டுவேஷன் ரொம்ப வாழ்ந்த குடும்பத்து பெண்…” என்று சொல்லி கொண்டே போன மல்லிகாவை
    ”மேடம் நீங்க அப்பாவுக்கு தெரிந்தவர்.. இத்தனை வருஷம் ஒரு கைட் பண்ணி நடத்துறவங்க எதுக்கு சுற்றி வளைக்கறிங்க.. உங்களுக்கு ஓகே என்றால் ஜாப் வர சொல்லிடுங்க” என்றே புன்னகை சிந்தினான்.


     ”நீங்க இப்படி சொல்வீங்க என்றெண்ணி தான் அவர்களை வர சொல்லிட்டேன் சார்” என்று ”ஒரு நிமிஷம்” என போனை எடுத்தார்.


    ”கீர்த்தனா… ஆஃபிஸ் ரூமுக்கு வாங்க” என சொல்லி வைக்க அபிமன்யு நிமிர்ந்து மல்லிகா மிஸ்ஸை பார்த்தான். வாசலில் கீர்த்தனா என்று அவள் வரக்கூடாது என்று பார்க்க அவன் வேண்டுதலை செவி மடுக்காமல் இறைவன் அவன் வேண்டுதலை ரிஜெக்ட் செய்திட, வந்தது அவன் விரும்பிய, விரும்புகின்ற கீர்த்தனா தான்.


      இமைக்காமல் பார்த்தவன் அவள் அருகே வர அவள் கழுத்தில் இருக்கும் சங்கிலி மட்டுமே அவன் பார்வை பதிந்தது.


      இந்த சங்கிலி பதில் மஞ்சள் சுமந்த கழுத்தாக முதல் முறையிலே கண்டு இருந்தாள் என மனதில் ஆசை துளிர் விட்டு இருக்காதே என்று மனம் வெதும்பினான். மல்லிகா மிஸ்
     ”வா கீர்த்தனா இது அபிமன்யு.. புதுசா” என்று தொடர
     ”தெரியும் மேம்.. நேற்றே தெரிந்து கொண்டேன்” என்று வணக்கம் வைக்க அவனும் வணக்கம் வைத்தான்.


    ”இது என் சர்டிபிகேட் ஸார்” என்று கொடுக்க வாங்கினான். வயது 30 என்று அவன் கண்ணில் பட்டது. முப்பது வயது, ஆனால் சுடிதார் அணிந்து கல்லூரி போனாலும் இவளுக்கு 21 என சொல்லும் தோற்றம்.
      மனம் போன போக்கில் இருந்த அபியை, அவன் மனமே கடிவாளம் கட்டியது. அவள் உன்னவள் அல்ல ஒதுங்கி இரு என்று.

2 thoughts on “அபியும் நானும்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *