இதயத்திருடா-12
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“நித்திஷ்… அவ இப்ப என்ன சொல்லிட்டா… டென்ஷன் ஆகறிங்க. நன்விழி லவ்மேரேஜ் அக்சப்ட் பண்ணினிங்க. இப்ப அதே மாதிரி அக்சப்ட் பண்ணுவிங்கன்னு தான் இந்த நேரம் இதை சொன்னேன். அந்த பையன் விடோ என்று தெரியாது.
அப்படியே விடோவா இருந்தா என்ன? நற்பவிக்கு அவனை பிடிச்சிருக்கே.” என்றான் நிதானமாக.
அறைக்கு நகர்ந்தவள் திரும்பி வந்து, “அப்படி சொல்லுங்க அங்கிள்” என்று நற்பவி தனக்கொரு துணை, அதுவும் ஆலம் விழுதாக தர்ஷன் அங்கிள் என்றதும் பேச துணிந்தாள்.
“தர்ஷன்…. நீங்க இதுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க. என் மகளை ஸ்டேடஸ் குறைச்சலா இருக்கறவனுக்கு கூட கொடுப்பேன். ஆனா விடோவுக்கு தர மாட்டேன்.” என்று பிடிவாதம் பிடித்தார்.
“முதல்ல அந்த பையனை பாருங்க நித்திஷ் நிச்சயம் பிடிக்கும்.” என்று கூறவும், கையை நிறுத்துமாறு கூறினார்.
“இங்க பாருங்க தர்ஷன். நீங்க நன்விழிக்கு தான் கார்டியன். என் மக நற்பவிக்கு இல்லை. அவ திருமணத்தை பெத்த தகப்பனா நான் முடிவெடுத்துப்பேன். நீங்க போகலாம்.” என்றதும் தர்ஷனுக்கு சினம் கூடியது.
“இங்க பாரு நற்பவி… அப்பா உன்னை வளர்த்து ஆளாக்கியவர். அவரிடம் பொறுமையா எடுத்து சொல்லு. அதை மீறி பிரச்சனை பண்ணினார்னா இருக்கவே இருக்கு கமிஷனர் ஆபிஸ் ரிஜிஸ்டர் ஆபிஸ் பார்த்துக்கலாம்.” என்று தர்ஷன் கிளம்பினான்.
வாசல் வரை வந்து, அதெப்படி நித்திஷ்… அப்படிவொரு வார்த்தையை விட்டிங்க…
நீங்க நன்விழியை பேசியதை பற்றி கேட்கறேன். நீங்க நன்விழிக்கு தான் கார்டியன். என் மக நற்பவிக்கு இல்லை. அவ திருமணத்தை பெத்த தகப்பனா நான் முடிவெடுத்துப்பேன்னு அப்ப நன்விழிக்கு அப்பா இல்லையா… நீங்களும் அவளுக்கு ஒரு கார்டியன் அவுளோ தானே.” என்றவன் சிலைப்போல ஸ்தம்பித்த நன்விழியை உணர்வுக்கு கொண்டு வந்து சென்றான்.
நன்விழி சத்தமில்லாது இரண்டு குழந்தை உறங்கும் அறைக்குள் சென்றாள். அவள் நித்திஷின் வளர்ப்பு மகள் தானே.
நற்பவியோ “செல்பிஷ் பா நீங்க. நான் தர்ஷன் அங்கிளை எத்தனையோ முறை மனசுல திட்டியிருக்கேன். ஆனா அவர் எப்பவும் அடுத்தவங்களை காயப்படுத்தற மாதிரி பேச மாட்டார். ஆனா நீங்க இன்னிக்கு என்னை தர்ஷன் அங்கிளை அக்காவை காயப்படுத்திட்டிங்க.
மாறன் விடோ தான். எனக்கு அவனோட தான் கல்யாணம் நடக்கும். முடிஞ்சா தடை பண்ணுங்க.” என்றவள் ஹாலில் இருந்த ‘அஜூதியா’ என்ற புத்தகத்தை எடுத்து, இந்த விருதை திருப்பி கொடுத்துடுங்க பா. எந்த வலியை மக்களுக்கு ஆழமா சொல்லி கதை எழுதி பரிசு பெற்றிங்களோ. அந்த கதையை நடைமுறையில ஏற்க முடியாத நீங்க இதை வாங்க அருகதை இல்லாதவர்.” என்று பொரிந்து நள்ளினாள்.
நற்பவியும் அறைக்கு சென்றப்பின் கதவை திறக்கவேயில்லை. இரவு உணவு உண்ண மட்டும் வந்தாள்.
மடமடவென சாப்பிட்டு மருந்தை உட்கொண்டு செல்ல, நன்விழியும் தன்னை போலவே சோகத்தில் இருக்க கண்டதும் தான் தந்தை பேசியதை உணர்ந்து “அக்கா அவர் கடக்கிறார். நீ என் சொந்த அக்கா தான். நீ காட்டின திலீபனை கல்யாணம் பண்ண நான் ரெடி. ஆனா இந்த வேகாதவனை பார்த்து தொலைச்சிட்டேன். சும்மாயிருந்தவனை நான் தான் துரத்தி துரத்தி காதலிச்சேன்.
செத்துப் போனவங்களோட நினைவுல நிம்மதியா இருந்தவனை என் பக்கம் திருப்பிட்டு இப்ப அப்பாவுக்காக அக்காவுக்காகனு விடமுடியாது அக்கா.
ப்ரனித் மாமா அளவுக்கு வசதியிலயோ புகழ்லயோ மாறன் நிற்க முடியாது. ஆனா கை தூக்கிவிட்டா ஒரு நாள் முன்னேறி நிற்பான் அக்கா” என்று பேசினாள்.
“முதல்ல யாரோடவும் கம்பேர் பண்ணாதே. அது ப்ரனித்தாவே இருந்தாலும். அப்பறம் நான் இனி உன் வருங்கால கணவர் விஷயத்துல தலையிடமாட்டேன். திலீபனை திணிக்க மாட்டேன். பட் மேரேஜ் விஷயத்துல அக்காவா முன்னாடி நிற்பேன்.” என்று உரைத்தாள்.
தந்தையிடம் பேசவும் தர்மசங்கடமாக இருந்தாள். நித்திஷூம் தற்போது எவ்வித விளக்கமும் கொடுக்க மனமில்லாது நின்றார். நன்விழி மட்டும் நற்பவிக்கு அக்கா என்ற உரிமையை விட்டு தராது பேசி சென்றாள்.
விழியன் மற்றும் ப்ரணிதா உறங்கிக் கொண்டிருக்க அவள் கணவன் ப்ரனித் வீடியோ கால் வந்ததும் தான் நிகழ்வுலகத்திற்கு வந்தாள்.
“ப்ரனித்… சாப்பிட்டியா… சூட்டிங் எல்லாம் முடிஞ்சதா… இன்னிக்கு எப்படி போச்சு” என்று வினாக்களை வீசினாள்.
“எல்லாம் நல்லா தான் போச்சு. நீ இல்லாம தூக்கம் தான் வரமாட்டேங்குது. குழந்தைங்க தூங்கிட்டாங்களா” என்று நன்விழியை எட்டி போனிலேயே பிள்ளைகளை பார்த்தான்.
“என்ன இன்னிக்கு குயிக்கா தூங்கிட்டாங்க. மாமா எங்க காணோம். தூங்கினப் பிறகும் ப்ரணிதாவை வேடிக்கை பார்த்துட்டே இருப்பார்.
உன்னை மாதிரே இருக்கானு.” என்றதும் நன்விழி அமைதி காக்க, “ஏய்… என்னடி பேசிட்டு இருக்கேன். எப்பவும் இல்லாத திருநாளா தலைகுனிந்து மரியாதை எல்லாம் தர்ற” என்று சீண்டினான்.
அவனை உறுத்தியபடி முறைக்க, “ஏய்… விழி… என்னாச்சு.. டல்லாயிருக்க. உடம்பு சரியில்லையா.. உன் தங்கச்சி என்ன பண்ணறா. எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி என்னை மட்டும் திட்டுவா. நீ வாடிபோயிருக்க ஆளைகாணோம்.” என்று தன் மனையாளின் முகம் சிறுத்திருக்க துடித்தான் ப்ரனித்.
“நற்பவி அவ ரூம்ல இருக்கா. கையில அருவா வெட்டு. அரசியல் கட்சி ஆளுங்க மாணவர்களோட போராட்டத்துல அப்படியாகிடுச்சு. மாத்திரை போட்டுட்டு தூங்க போயிட்டா.
நிச்சயம் தூங்கியிருக்க மாட்டா.” என்றவள் ப்ரனித்திடம் கூறவும் “சம்திங் ராங் என்ன பிரச்சனை. வரன் தட்டி போகுதுனு பீல் பண்ணறாளா.” என்று கேட்டான்.
“ப்ரனித்… நற்பவி மதிமாறன் என்பவரை விரும்பறா.” என்று அவனின் தொழில் உறவு என்று ஆரம்பித்து அவனை சந்தித்து மையப்புள்ளியை கூறினாள். கடைசியில் விடோ என்றதை உரைத்தாள்.
“விடோவா இருந்தா என்ன? உன் தங்கைக்கும், அந்த பையனுக்கும் பிடிச்சிருக்கானு மட்டும் பாரு டி. திலீபன் எல்லாம் பிரெண்ட் தானே. தங்கை காதலிக்கறதை சொன்னா போகுது. அதுக்கா உம்முனு இருக்க. ஏய் விழி சிரிடி. நீ டல்லாயிருக்க கஷ்டமாயிருக்கு.” என்றான்.
“தர்ஷன் அங்கிள் கூட அதுதான் சொன்னார். அப்பா தான்…” என்று நிறுத்தினாள்.
“என்ன?” என்று கேட்டும் ஒன்னுமில்லை என்று மறைக்கவும் ப்ரனித் மாமாவிடம் கேட்டுப்போமென விட்டுவிட்டான்.
“சரி நீ தூங்கு. நான் சாப்பிட போறேன்” என்று கத்தரித்தான். அடுத்த நிமிடம் நித்திஷ் வாசுதேவ் போனில் வந்தான்.
“மாமா… நன்விழி டல்லாயிருக்கா. நற்பவி திட்டிட்டாளா?” என்று மச்சினிச்சி வாய் துடுக்கை அறிந்து கேட்டான்.
“இல்லை ப்ரனித்… நான் தான் வார்த்தையை விட்டுட்டேன். தர்ஷனிடம் பேசறப்ப நீங்க நன்விழிக்கு தான் கார்டியன். என் மக நற்பவிக்கு இல்லை. அவ திருமணத்தை பெத்த தகப்பனா நான் முடிவெடுத்துப்பேன் சொன்னேன். நன்விழி அதுல இருந்து டல்லாயிட்டா… தப்பு தான். அவரை விலகி இருக்க சொன்னேன். ஆனா…” என்று அழுதார்.
“என் முதல் மக நன்விழி தான் ப்ரனித். இப்படி என் வாயால எப்படி பேசினேன்னு தெரியலை.” என்று குலுங்கி அழுவது மறுபக்கம் ப்ரனித் கேட்டதும் மௌனமானான்.
சில பல வினாடிகளுக்கு பின் “மாமா அழாதிங்க. நன்விழி எப்பவும் உங்களை தப்பா நினைக்க மாட்டா. நீங்க சொல்லிட்டு பிறகு இப்ப புரிந்து அழுவறிங்க. அவ அழுதுட்டு புரிந்துப்பா. நீங்க தவறா பேசலை. ஒரு ப்லோவ்ல பேசிட்டதை அவளே எடுத்துப்பா.” என்றான்.
“ம்ம்… எடுத்துக்கணும் ப்ரனித். என் மகளாச்சே புரிந்துப்பா” என்றார்.
“நற்பவி லவ் பண்ணியதா சொன்னா. என்னாச்சு மாமா விடோவா இருந்தா என்ன? பவிக்கு பிடிச்சிருந்தா போதாதா?” என்று கேட்டான்.
“எப்படி ப்ரனித் முடியும். நீங்க எந்த உயரம். ஒருத்திக்கு உயரத்திலும் இன்னொருத்திக்கு குறைவான இடத்திலும் கட்டிக் கொடுத்து பிற்காலத்துல ஒரு பேச்சு வந்துடக்கூடாதுல. என்னால விடோவுக்கு கட்டிக் கொடுக்க மனசு வரலை.” என்றார்.
ப்ரனித்தோ இன்றே சம்மதிக்க மாட்டாரென யோசனையோடு “சரி மாமா இரண்டு வாரம் பொறுமையா இருங்க. அவளை போர்ஸ் பண்ணாதிங்க. நான் ஊருக்கு திரும்ப வந்ததும் பேசறேன்.” என்று கூறவும் நித்திஷ் ஏதோ அமைதியானார்.
தன்னவளுக்கு மீண்டும் போனை போடவும், “அதுக்குள்ள சாப்பிட்டியா ப்ரனித்.” என்று கேட்டாள்.
“இல்லை மா. நீ சாப்பிட்டியா இல்லையா…” என்றான். அவனுக்கு தன்னவள் மனக்கவலையிலிருக்க அவனின் பேச்சும் வாடியிருந்தது.
“சாப்பிட்டேன்… நம்ம குழந்தைகளை பார்க்கறதுக்கு நான் தெம்பா இருக்கணுமே. விழியன் ரொம்ப சேட்டை.
ப்ரணிதா பரவாயில்லை. இன்னிக்கு என்ன அதிசயமோ சட்டுனு தூங்கிட்டா.” என்று உறங்கும் குழந்தையின் தலையை வருடினாள்.
“எனக்கு மட்டும் இந்த பார்வை மங்கலா தெரியாம இருந்தா நானும் தர்ஷன் சார் மாதிரி ஆகியிருப்பேன். எல்லாம் உன்னால தான்.
இப்ப பாரு என் கனவை நற்பவி சுமந்துட்டு இருக்கா.” என்று கோபமானாள்.
‘ஆரம்பிச்சிட்டாடா இவ’ என்று மனதில் எண்ணி “ஏய் உன் தங்கைக்கும் போலீஸ் ஆகறது பிடிக்கும் ரொம்ப பண்ணாதே… அவ ஒன்னும் உனக்காக சேரலை.” என்று பதில் தந்தான்.
“போடா பட்டர்பிஸ்கேட்… என்னை மாதிரி வாழ வேண்டியது அவ. அவ தான் பெரிய குடும்பத்துல மருமகளா போக வேண்டியது. பாரு இன்னிக்கு அருவா வெட்டு வாங்கிட்டு வந்திருக்கா.” என்று சிறுப்பிள்ளையாய் சண்டையிட்டாள்.
“ஆமா டி… எல்லாத்துக்கும் நான் தான் காரணம். சரியா… என்னை திட்டிக்கிட்டே படுத்துக்கோ. அப்ப தான் உனக்கு தூக்கம் வரும்.
உங்கப்பா பேசியதுக்கு என் தலை உருளணும் அப்படி தானே.” என்றதும் நன்விழியோ கப்சிபென்றானாள்.
‘இந்த பொண்ணுங்க பொறந்த வீட்டு தப்பை பேசினா சட்டுனு வாயை மூடுதுங்க’ என்றவன் அங்க ஸ்லீப்பிங் டேப்ளட் இருக்கு தானே சாப்பிட்டு தூங்கு. காலையில பேசறேன்.” என்று அணைத்தான்.
நன்விழியும் சரியென்று அணைத்து விட்டு மாத்திரை விழுங்கி படுத்தாள்.
விழியன் அவளை உரசவும், ‘என் செல்லக்குட்டி அம்மா வாசம் பிடிச்சி வந்துடும்’ என்று முத்தமிட்டாள்.
அடுத்த நாள் நற்பவி அக்கா குழந்தையோடு விளையாடிவிட்டு கொஞ்சமாய் சாப்பிட்டு கிளம்பினாள்.
நற்பவியை அவசரமாய் தர்ஷன் அழைத்திருக்க, கையில் பேண்டெயிட் போட்டு அதன் சிறு வலியோடு பைக்கை எடுக்க இயலாது, வீட்டின் காரை டிரைவர் மூலம் பயணத்தை தொடர்ந்தாள்.
அங்கு வந்தபோது, “சார் சத்தியமா இவங்க எங்க கட்சி தொண்டர்கள் இல்லை சார். கண்டிப்பா தெரியும் சார்.” என்று கரை வேட்டி கொண்ட கட்சியின் தொண்டரில் முக்கிய ஆட்களை பிடித்து கேள்வியை துவங்கியதன் பலன் வார்த்தைகள் விழுந்தது.
“சார் எனி பிராப்ளம்” என்று நற்பவி வரவும், “எஸ் மா. ஆக்சுவலி நேத்து கலவரம் நடந்தது இல்லையா… அதுல உன்னை வெட்டியது இவங்க கட்சி ஆளேயில்லை.” என்றவர் சோமுண்ணா.. வீடியோவை ரிபீட் பண்ணுங்க” என்றதும் போட்டார்கள்.
“இது நிருபர் ‘சந்தனா’ என்ற ரிப்போர்டர் பொண்ணு கொடுத்துட்டு போச்சு. அவங்க கூட ஒர்க் பண்ணற அஷோக் என்பவர் எடுத்ததாம்.
பர்டிகுலரா அருவா வெட்டு ஆட்கள் உன்னை மட்டும் தான் மா தாக்கியிருக்காங்க. அந்த பொண்ணை வெட்ட வர்றாங்கனு நீ தப்பா நினைச்சியிருக்க. உன்னை தாக்க வந்து தான் அந்த பொண்ணு வெட்டு வாங்கியிருக்கு.” என்று தர்ஷன் உரைக்க காட்சிகளை பார்த்துவிட்டு “ஆமா சார்… ஏன் இப்படி? எனக்கு யாரு எதிரி?” என்று விழித்தாள்.
“கரைவேட்டிக்கிட்ட கேட்டாச்சு. இது அவங்க தொண்டர்களே இல்லையாம்.” என்று கூறவும் எனக்கு யாரு சார் எதிரி?” என்று கடைசியாய் நின்ற காட்சியை கண்டு விழித்தவளாய் யோசனைவயப்பட்டாள்.
-இதயம் திருடுவோம்..
-பிரவீணா தங்கராஜ்.
Super super intresting
Super nanvizhi eppadiyo ellathaium samalichi vanthuduva antha sarath matanum ithula avan nallavana nadivhi eppadi pana pathu irukan ithu mattum mathi ku therinjithu avlotha avane ethana paniduvan
Super super super super super super interesting