🍁 17
நீண்ட மவுனங்கள் கடக்க கீர்த்தனவுக்கு தான் பேசியது மனுவிற்கு வருத்தம் தருகின்றது என்பதை உணர்ந்தாள். அதே நேரம் அவனுக்கு இன்னோடியே காதலை உணர்ந்து அவனை ஏற்று கொள்ளவும் மனம் தயார் நிலையில் இல்லை.
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஒரு தனி மனிதனின் ஒழுக்கம் என்பது அவனோடு ஒரு பெண் கற்போடு கண்ணியதோடு காக்கும் நிகழ்விலே தெரிந்து விடும். இதோ இங்கு அபிநயா உறங்கி 2 மணிநேரம் இருக்கும் இன்னும் அவளை வருடி விட்டு அவளின் முகம் கண்டு புனகைத்து தலை கோதி தந்தையின் செய்கையில் நிற்கின்றான் அபிமன்யு.
ஒரு பெண்ணிடம் அதுவும் காதல் என்னும் பந்ததில் சேர துடிப்பவன் மனம் அலைபாய துவங்கும், அப்படி எந்த அலைபாயும் பார்வையும் இல்லை.
தன்னிடம் தனிமையில் முரண்பாடாக நடக்கும் ஆண்கள் மத்தியில் அபிமன்யு வித்தியாசமாகவே தெரிந்து தொலைத்தான் கீர்த்தனா கண்களுக்கு.
இன்னும் எத்தனை நேரம் தான் இப்படியே பார்ப்பாய் என்று அங்கிருந்த லைட் அணைய ஆரம்பிக்க டார்ச் தட்டி தட்டி பார்த்தனர்.
அதுவோ நான் இன்னும் சில நொடியில் வெளிச்சம் தர மாட்டேன் என்று சண்டிதனம் செய்தது.
பயத்தில் கீர்த்தனா தான் அபிமன்யு அருகே வந்து அமர்ந்தாள். கொஞ்ச நேரத்திலே அவளையும் அறியாமல் அபிமன்யு தோளில் சாய்ந்து உறங்கினாள்.
ஜன்னலில் வழியே காற்று வீச அபிமன்யுவிற்கு தனது மடியில் அபிநயாவும் தோளில் கீர்த்தனாவும் இருக்க, சொல்ல இயலாத சந்தோஷம் மனதில் நிறைந்தது. இத்தனைக்கும் கீர்த்தனா அவனின் காதலுக்கு செவிசாய்க்கவில்லை. அப்படி இருந்தும் இக்கணம் அவனுக்கு மனம் நிறைந்து இருந்தது. நிஜமாகவே இப்படியே காலங்கள் கடந்து இருந்தாலும் சம்மதம் தான் என்று எண்ணி மகிழந்தான்.
‘சே இப்ப போய் போன் லோ-பேட்டரி காட்டிடுச்சே இல்லை இந்த நிமிஷத்தை போட்டோ எடுத்து சேமித்து வைத்து இருப்பேன்.’ என அவளின் முகத்தில் விழுந்த கேசத்தை புறம் தள்ளி விட்டான். தோளில் இருக்கும் கீர்த்தி தலையோடு தலை வைத்து சந்தோஷம் கொண்டவன் தானாக உறங்கினான்.
காலம் இப்படியே இருந்திட செய்யாது அது மாற்றம் நிகழ்த்த காத்திருப்பதை தனது விடியலில் உணர்தியது.
கீர்த்தனா எழுந்து கண்கள் கசக்கி பார்த்து, இடத்தினை உணர்ந்ததும் அபிமன்யு அபிநயாவையும் காண மனு மீதே தான் அவன் தோளில் சாய்ந்து இருக்க பதறி எழுந்தாள்.
அபிமன்யு மடியில் இன்னும் அபிநயா அப்படியே உறங்க கண்டு அபிநயாவுக்கு மனுவை தந்தையாக பொருத்தி பார்க்க அதில் அவன் பாந்தமாக பொருந்தினான். கண்களில் கண்ணீர் கோடுகள் வழியா தான் எண்ணும் இந்த மடத்தனத்தை எண்ணினாள்.
தனது தலையில் தட்டி வெளிச்சம் இருக்க வழி ஏதேனும் திறந்து இருக்கா என்று பார்த்தாள். எப்படியும் அபிநயா எழுந்துகொள்ள நேரம் எடுக்கும் என எண்ண மனுவை தோளில் வைத்து தட்ட அவனோ மெல்ல விழித்து பார்த்தவன் தனது மடியில் அபி இருக்கின்றாளா என்று பார்க்க அவளோ இன்னும் உறங்க கண்டு
”எதுக்கு இப்படி எழுப்பற குழந்தை தூங்காறா கீப் குயிட்” என்றான்.
”மனு என்ன விளையாடறியா இது ஒனும் உன் ரூம் இல்லை… எழுந்து எப்படி வீட்டுக்கு போகணும்னு யோசி” என்றதும்
”நான் எல்லாம் காலையில் இந்த் நேரதுக்கு எழுந்துக்கவே மாட்டேன் எதுக்கு இப்போ 4.30 எழுப்பி டிஸ்டர்ப் பன்ற கீர்த்து மா” என்றான்.
கீர்த்தி அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். மனுவிடம் இந்த மனம் அதிகமாகவே நாடுகின்றது. முதலில் இதனை தவிர்க்க வேண்டும் என்றே எண்ணி வெறுப்போடு
”ஸார் கொஞ்சம் நேரத்துக்கு பாருங்க எழுந்து நாம கிளம்பனும்…” என்று கத்த அபியை அவள் புத்தக பையில் சாய்த்து படுக்க வைத்தவன் எழுந்தான்.
”அபியை எழுப்பாதே.. இரு.. முதலில் வழியிருக்கானு பார்க்கிறேன் குழந்தையை இப்பவே எழுப்பி அப்பறம் பசிக்குது என்று சொல்லிட்டா கஷ்டம்” என்உ முகம் அலம்பி நீரை கொப்புளித்து முடித்தவன் சுற்றி முற்றி பார்க்க அங்கே ஒரு இரும்பு ராட் இருக்க கண்டு பூட்டினை உடைத்தான்.
வெளிபக்கம் இருக்கும் பூட்டு தான் என்றாலும் லாக் இருக்கும் பக்கம் அதிகம் அழுத்த சுவரோடு உடைந்தது. அவன் சுவரை உடைததற்கு வருந்தவே இல்லை. கீர்த்தி தான் முறைக்க
”சிமெண்ட் வைத்து மறுபடியும் பூசிபோம்… நம்ம ஸ்கூல் தானே..” என்றான்.
வெளியே கிரவுண்ட் தெரிய அதில் ஏற முடியுமா என்று பார்த்தான். ஏற முடியும் என்றதும் நிம்மதி அடைந்து கீர்த்தனா அருகே வந்தான்.
”கீர்த்து….. இங்க டெஸ்க் வைத்து ஏறி நான் அந்த பக்கம் போயி வாட்ச்மேன் வீட்டுக்கு போயி சாவி வாங்கி வர்றேன். அதுவரை அபியும் நீயும் இங்கயே இருங்க..” என்றான்.
”எதுக்கு இந்த பக்கம் ஏறி போகணும் நாம மெயின் கேட் பக்கம் போயி யாரயாவது கூப்பிடலாமே மனு?” என்றதும்
”கூப்பிடலாம் ஆனா அதுக்கு பிறகு நாம இங்க தனியா இருந்தோம் என்று எல்லோருக்கும் தெரிய வரும்.
தேவையில்லாத கற்பனை செய்வாங்க…. இங்க கொசு கடியிலையும் பயத்திலும் வியர்வை வழிய பாதி பசியோட தூங்கியது யாருக்கும் தெரியாது.. ஏதோ நீயும் நானும் தனியா… தனியா…. இருந்ததை மட்டுமே பேசுவாங்க” என்றான் மனு.
அவன் சாதாரணமாக சொன்னாலும் அவளுள் என்னவோ போல ஒரு அடைப்பு தாக்கியது.
மனு தனது போனை எடுத்து கொண்டு டெஸ்க் நகர்த்தி ஏறினான். என்ன நினைத்தானோ உடனே கீழே இறங்கி கீர்த்தியிடம் வந்து ”நாம கல்யாணம் செய்து கொள்ளலாமா? எது வந்தாலும் நான் பார்த்து கொள்கின்றேன். எனக்கு அபி பொண்ணு. அவ அப்பாவா நான் இருக்கேன் டி… இந்த சொசைட்டி கூட வேணாம் மறுபடியும் நாம லண்டன் கூட போயிடலாம்… நியூ லைஃப் நியூ கண்ட்ரி.. நீ நான் அபிநயா இருப்போம் நமக்குள் வேற இந்த உறவையும் சமுகத்தினையும் கொண்டு வர வேணாம்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ கீர்த்து… நான் டிரிங்க்ஸ் பண்ண மாட்டேன் ஸ்மோக் பண்ண மாட்டேன்… நமக்கு இன்னொரு பேபி கூட வேணாம்.. அபி மட்டும் போதும். ஓகேனு ஒரு வார்த்தை சொல்லு கீர்த்து.. பழைய வாழ்க்கை ராஜேஷ் இதெல்லாம் நான் எந்த சூழ்நிலையும் கேட்டு பேசி உன் மனசை நோகடிக்க மாட்டேன். டிரஸ்ட் மீ… என்னை ஏற்றுக்கோ கீர்த்து” என்று கைகளை பிடித்து ஆண்மகன் என்பதை தாண்டி கெஞ்ச கீர்த்தி அசையாது மரமாக நின்றாள்.
அவளின் அமைதி தனக்கு சாதகம் என்று எண்ணி எழுந்தவன் அவள் கன்னம் பற்றி கீர்த்தி நான் போயி திரும்ப வந்து உங்களை வெளியே கூட்டிட்டு போயி அப்பாவுக்கு தான் நேரிடையா காட்டனும்… தயாரா இரு” என்றவன் நொடியில் கீர்த்தி உணராத நிலையில் இதழில் முத்தமிட்டு விடுவித்தான்.
அதன் தாக்கம் உணர்ந்து நடப்பவை எண்ணி பேச ஆரம்பிக்கும் முன் சுவரில் அந்த பக்கம் ஏறி குதித்து இருந்தான்.
உதட்டில் கையை வைத்து யோசித்தவளின் காலகள் தானாக அபிநயாவிடம் வந்து நின்றது. அபி அந்த நேரம் தான் எழுந்து நிற்க தானாக அவளின் முன் அன்னையாக மற்றவையை புறம் தள்ளினாள்.
”அம்மா.. அபி சார்.. அபி சார்..” என்று தேட.. மனு எழுந்த பின் அபி தன்னை தேடினால் தான் போனில் பேசினோம் மட்டும் சொல் நான் அவளை தூக்கி என் மடியில் படுக்க வைத்தது எல்லாம் கனவு என்று பதிய வை” என சொல்லி சென்றதை கீர்த்தி சொல்லி முடித்தாள்.
”அப்போ நானும் நீயும் தான் இருந்தோமா… எனக்கு அபி சார் நினைவே வருது.. நாம வீட்டுக்கு போலாமா? பசிக்குது” என்றதும் வெளியே வர அங்கே கீர்த்தியின் போன் உடைந்த பாகங்களை பொறுக்கி எடுத்தாள்.
கேட் வர அதற்குள் அங்கே வாட்ச்மேன் அபிமன்யுவும் நிற்க அபிநயா ஓடி சென்று மனுவை அணைக்க அவனோ அவளை தூக்கி நெஞ்சோடு அனைத்து கொண்டான்.
கீர்த்தி அபிநயாவுக்கு தேடும் மொத்த தந்தை குணமும் அபியிடம் இருக்க தன் மனம் செல்லும் பக்கம் போக முடியாது தவித்தாள். ஆனால் சராசரி பெண்ணின் குணம் தலை தூக்கியது.
தானும் குடும்பம் குழந்தை அன்பு பாசம் நேசம் கொண்ட உறவோடு இருக்க துடித்தது.
தனது வேறொரு காரில் கொண்டு வந்து கீர்த்தனா வீட்டின் முன் நிறுத்தினான்.
உள்ளே வந்தே அபியை விட்டுட்டு போவேன் ஆனா அப்பாவிடம் பேசணும்… எனக்கு கொஞ்சம் நேரமெடுக்கும்.. நாளை மறுநாள் எனக்கும் கீர்த்திகா நிச்சயம் பேசி இருக்காங்க.. அதனால பக்குவமா பேசி புரிய வைக்கணும்… எதுனாலும் நான் போன் பண்றேன்” என நகர்ந்தான்.
”ஒரு நிமிஷம் அவசரபடாதீங்க… நான் நாளைக்கு பதில் சொல்றேன்” என நகர்ந்தாள்.
வேண்டாம் என்றால் இன்னோடி சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கு அதனால எப்படியும் சம்மதம் சொல்வாள் என்றெண்ணி சரியென கிளம்பினான் அபி.
எல்லாம் சுமுகமாக போனது படிக்கட்டில் எறியவள் தனது பிளாட் வந்து பால்கனி எட்டி பார்க்க அபிமன்யு அதன் பின்னே கார் செல்ல கீர்த்தி தனக்காக நின்றானா? நான் பார்ப்பேன் என்று எண்ணி பார்த்தானா? என்உ யோசித்து அபிக்கு பால் தோசை சுட செய்திட குளித்து பரிமாறினாள்.
குளித்து முடித்து நீண்ட நாட்களுக்கு பின் சேலை அணிய கைகள் பரபரத்தது. இன்று அவள் பிறந்த நாள் வேறு என்றதும் சேலை அணிந்தவள் கைகளுக்கு வளையல் அணிவித்து பெரிய கம்பலை அணிவித்து அழகு பார்க்க
”மம்மி… டூ ப்யூடிஃபுல்” என்று அபிநயா அபிநயம் பிடிக்க கீர்த்தி அவளை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள்.
கொஞ்ச நாளிலே அபியின் முன்னேற்றம் கீர்த்தி மனதில் இததினை உணர வைத்தது.
தனது வாழ்வு எல்லாம் இனி வசந்தமாக மாறுமா? அல்லது கனல் நீராக மீண்டும் மாறிடுமா? என்றே எண்ணியவள் மனுவின் அழுத்தமான பார்வை திடம் கண்டு அப்படி இருக்காது. மனு இனி எனக்கும் அபிக்கும் நல்ல துணையாக மாறுவான். அவனுக்குள் இருக்கும் அன்பு என்னை இந்தளவு மாற்றியது போல முழுதாய் மாற்றிடும்… தானும் சராசரி பெண் போல சின்ன சின்ன ஆசைகளை வெளிபடுத்தும் நாட்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இனி கடினமாக யார் என்ன பேசுவார்கள் என்று எண்ணாமல் நான் நானாக மாறிடனும்.
எவ்ளோ நாள் ஆச்சு இப்படி நீ சிரித்து என்று கண்ணாடி கூட கேட்டது. இத்தனை அழகு இன்னும் எப்படி பொத்தி வைக்கின்றாய் என்றது கண்ணாடி.
மேலும்….. தன்னில் இருக்கும் ரசிக்கும் மனம் எட்டி பார்ப்பதை எண்ணி சிறகை விரிக்க அபியோடு தானும் கை கோர்த்து வீட்டில் சுற்றி சுழல அபிநயாவின் சிரிப்போடு கீர்த்தனா சிரிக்கும் சத்தமும் ஐந்து வருடம் கழித்து கேட்க சுவரில் எதிர் ஒலித்தது.
Super super. We too happy happy. Intresting sis.
Super Keerthi nee neeya iru epovum athan alagu unakum oru manasu Iruku thana mathavangalukga nee yen una oru control ah vachikanum chinna chinna aasaiya kuda veli paduthama