Skip to content
Home » அபியும் நானும்-18

அபியும் நானும்-18

🍁 18
                      அபிநயாவை தூக்கி சுற்றி இறக்க மங்கலாக உருவம் தெரிந்தது.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அது அபிமன்யு என “அதுகுள்ள வந்துட்ட மனு” என்றபடி தலைப்பிடித்து நின்றாள்.
      “இவ்ளோ விரைவாக நீயும் வேற ஒருத்தவனை தேடி பிடித்து இருப்ப என்று நான் கனவுலயும் நினைக்கலை கீர்த்து. ஆனா என் எண்ணத்தை எல்லாம் பொய் ஆகிட்ட எப்படி உன்னால முடிஞ்சது” என்ற குரலிலே ராஜேஷ் என்று உணர்ந்து சோபாவில் அமர்ந்து அபிநாயவிடம் போனை எடுத்து விளையாட அனுப்ப அவளும் அவளுக்கான அறையில் சென்றாள்.     


   “என்ன ராஜேஷ் வேணும் உனக்கு.? நீ கேட்ட டிவேர்ஸ் கொடுத்தாச்சு… கேத்ரீன் கூட சந்தோஷமா வாழ செய்… எதுக்கு இன்னும் என்னை கண்காணிச்சுட்டு இருக்க…” என்றாள்.


     ” வரே வா அவன் கொடுக்கற தைரியம் என்ன எதிர்த்து பேச வைக்குது… நேற்று எங்க போன ? காலையில் அவன் கூட இறங்கியதா கேள்விபட்டேன்” என்றான்.


     “ஸ்கூல்ல நானும் அபியும் இருக்கிறது தெரியாம வாட்ச்மேன் கதவை சாற்றிட்டார். நான் அங்கிருந்த தண்ணீரில் வழக்கி மயங்கிட்டேன். போன் உடைஞ்சிடுச்சு என் போன் காலையில் வெளிச்சம் வந்ததும் தேடி வேற ரூம்ல இருந்த போன் மூலமா மனு போன் பண்ணி வர வைத்து கேட் திறந்து அவரே இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனார்…. நீ எதுக்கு குதர்க்கமாகவே பேசற…”
     “அபி சார் இப்ப மனு ஆகிட்டானா?” என சிகரேட் பற்ற வைத்தவனை
      ” ஏன் ஆனா என்ன? உனக்கு ஒரு லைப் நீ பார்த்து கொண்ட பொழுது நான் எனக்காக வாழ கூடாதா?” கீர்த்தி கடினபட்டு சொன்னாள்.


    “கூடாதுடி… நான் லவ் பணிணின பொண்ணு நீ. என்னை தவிர எவனும் உன்னை நெருங்க விட மாட்டேன். அப்படி உனக்குனு ஒரு வாழ்க்கை தேர்ந்தெடுத்து நீ என்ன விட்டு விலகி போன, அன்னிக்கு எடுத்த பிக்சர்ஸ் நினைவு இருக்கா போனை உடைச்சாலும் மெயில்ல தான் இருக்கு… அவனை திருமணம் செய்ய நினைச்சாளே, அப்பவே நெட்ல போட மாட்டேன் ஆனா கல்யாணம் ஆன அடுத்த நாளே போட்டு அவனுக்கு தலை குனிய வைப்பேன்…”
     “ராஜேஷ்….” என்று கத்த
    “கத்தாதே நீ அவனை கல்யாணம் அது இது நினைச்சா தான்… நினைக்க மாட்டேனு நம்பறேன். அவனுக்கு தான் வேற ஒருத்தி கூட பேசி நாளை மறுநாள் நிச்சயம் ஆச்சே… எதுக்கோ உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கறேன். இந்த கீர்த்தனா எப்பவும் ராஜேஷ் மனைவியா மட்டும் இருக்கனும்”என்றான் கட்டளையாக.


     “நீ மட்டும் ஒரு வாழ்க்கை வாழலாம் நான் அப்படி வாழ கூடாதா.” என்றாள் கீர்த்தனா.
      “உன்னால தான் சந்தேக பிசாசு கூடலாம் வாழறேன்.. நிம்மதி போச்சு டி… நீ மட்டும் அபிநயாவை ஹோம்ல விட்டு இருந்தா, இந்நேரம் இன்னொரு குழந்தை குடும்பம் என்று நாம சந்தோஷமா இருந்து இருப்போம். இப்ப தினம் தினம் அபி மாதிரி குழந்தை பிறக்குமானு, அவ கேள்வி கேட்டு என்னை சாகடிக்க மாட்டா… பைத்தியம் பிடிக்காத குறை எல்லாம் உன்னால தான். டிவேர்ஸ் கொடுத்தாலும் நீ தான் என் மனைவி.. அபிநயாவுக்கு நான் தான் அப்பா இது மாறாது. மனு அவன் பின்ன போன…” என்று மிரட்ட சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.


      “ஆமா எதுக்கு சேலை கட்டின… உன் அழகு எனக்கு மட்டும் தெரியனும், மரியாதையா கழட்டிட்டு சாதாரணமாக இரு.. உனக்கு அரவணைப்பு தேவைனா அது நான் மட்டும். உனக்கு அதை மீறி ஆண் துணை வேண்டும்னா என்னை தான் கூப்பிடனும் ” என்று இன்னும் என்ன என்னவோ பேசி சொல்லிவிட்டு செல்ல அப்படியே நொடிகள் கடக்க அமர்ந்து இருந்தாள்.


மனு மீது தனக்கு காதல் எல்லாம் இல்லை… மனு நல்லவன் தன் மகளுக்கு நல்ல தந்தையாக அவன் நிச்சயம் இருப்பான் என்பது தான் கீர்த்தி எண்ணி இருந்தது. மனுவின் அன்பில் காதலில் தான் பிற்காலத்தில் மாற வாய்ப்பு இருக்கும், அதற்கு மனு காத்திருப்பான் என்று தான், மனு சொல்ல அமைதியாக இருந்தது. அது கூட இப்பொழுது யோசிக்க, தானும் ராஜேஷ் போல தன்னலமாக யோசிப்பதாகவே பட்டது.


         அபி நல்லவன் மனதில் தன்னை விட, ராஜேஷஷை விட,  அவருக்கு அழகான குழந்தை பிறந்து எல்லோரும் போல ஒரு வாழ்க்கை வாழனும். என்னை ஏற்று கொண்டு அபிக்கு அப்பாவா வாழ்ந்தா மட்டும் போதுமா.? அவர் தான் ஏதோ என் மேல இருக்கின்ற காதலில் யோசிக்கலை. நான் யோசித்து தானே முடிவு எடுப்பேன். எது என்னை பேச விடாம செய்தது’ என கண்ணீர் வற்ற சிந்திக்க சராசரி பெண்ணின் இதயம், இப்படி ஒரு அன்பானவனை கண்டால், தனக்கு இப்படி ஒரு கணவன் அமைந்தால்… என்று ஏங்குமே.

மனு மீது இருக்கும் உணர்வு அதுதானா?. ஹோட்டலில் கூட மனு இடத்தில் ராஜேஷை பொருத்தி பார்த்தேனே தவிர மனுவை என் கணவனாக எண்ணவில்லை…
               ராஜேஷ் விவாகரத்து கொடுத்த பின்னரும் அவன் என்னை தீண்ட அனுமதித்து அமைதி காத்தது அவன் என் கணவன் என்ற உரிமை என் மனதில் நீங்கவில்லை. ராஜேஷ் செய்த தவறு பல இருந்தும் அவன் அடிக்கடி தன்னிடம் கேட்டது. அபி ஹோமில் விட்டுட்டு வா நமக்கான வாழ்வு வாழலாம் என்பது மட்டுமே.

என் மீது அவன் உரிமை, அன்பை மறுக்கவே இல்லை. இதோ இந்த சில நாட்களாக அபியை கூட தன் மகள் என்று அவனே சொல்வதுண்டு.
ஆனால் ராஜேஷ் இனி தன் வாழ்வில் இணைக்க முடியாது. கேத்ரீன் வாழ்வில் ராஜேஷ் இடம் பெற்று விட்டான்.
                    அப்படி இருக்க மனு என் வாழ்க்கையில்… இல்லை அதுவும் தவறு. அவன் மீது நட்பை தாண்டி என்னால் யோசிக்க முடியாமல் தவிக்க வைக்குது. கீர்த்திகா எத்தனை கணவோடு அபிமன்யு கணவனாக பேசினால் மனு வாழ்வில் கீர்த்திகா தான் இடம் பெறனும் நான் இல்லை…


காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. அப்படியே கண்ணீரை துடைத்து திறக்க       
       அங்கே ரகுவரன் நின்று இருந்தார். அவருக்கு பின்னால் அபிமன்யு எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தான்.


           “வாங்க சார் வாங்க…” என்று அழைக்க ரகுவரன் முதல் பார்வையில் சந்திக்கும் கீர்த்தனாவை கண்டு அபிமன்யுவை பார்க்க கீர்த்தனா தன்னை என்னவாக எண்ணுவாரோ என்று நடுங்கி தான் போனாள்.

சந்தோஷம் இல்லாமல் கீர்த்தனா முகம் வாடி இருக்க கண்டு அபிமன்யு குழம்பினாலும் கீர்த்தனா சேலை அணிந்து இருப்பதே அவனுள் சந்தோஷம் கொடுக்க கொஞ்சம் பயந்து இருக்கின்றாள் என எண்ணி கொண்டான்.
            அவரை அமர வைத்து காபி நீட்ட “அபிக்கு நாளை மறுநாள் நிச்சயம் வைத்து இருக்கேன் மா… ஆனா இன்னிக்கு காலையில் வந்து சொல்றான் உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றான்… முதலில் யோசித்து மறுத்தேன் ஆனா அபி யோசிக்காம முடிவு பண்ண மாட்டான். உன்னை பற்றியும் சொன்னான்…. அடம் பிடித்தான் கன்வைஸ் பண்ணினான். கிட்டத்தட்ட மிரட்டினான். முதலில் இதுல விருப்பம் இல்லை என்றாலும் அரைமனதா தான் சம்மதிச்சேன்… உன்னை பார்த்ததும் முழுமனதா ஏற்றுக்கறேன் மா… நிச்சயம் வைக்கும் நாளில் கல்யாணம் வைங்கனு ஒற்றை காலில் நிற்கறான்.


              எனக்கும் இங்க மதிப்பு இருக்கு போயிடும்டா சொன்னா கேட்காமல் அவன் மகளை உன்னை கூடவே வைத்து கொள்ளும் ஆசைப்படறான்… என்னமா அன்றைக்கே கல்யாணம் வைக்கலாமா? அறிவிப்பு அறிவிச்சு மேளம் கொட்டலாமா?” விரிவாகவே பேசி தன் எண்ணமும் பகிர்ந்தவரிடம் கொஞ்ச நேரம் முன் ‘திருமணம் செய்ய யோசிச்ச, அபிமன்யுவுக்கு தலைகுனிவு ஏற்படும் விதமா அடுத்த நாள் உன் புகைப்படம் வரும்.’ என்ற மிரட்டலும் ராஜேஷ் வாழ்வு தான் சீரழித்து விட்டோம் அபிமன்யு வாழ்வும் அப்படி ஆக வேண்டுமா? தான் ஒரு இரண்டாம் பொருளாக போக வேண்டுமா? என்று பல போராட்ட மனதில் இத்தனை நேரம் தாக்கியதில், கீர்த்திகாவின் காதல் பின்னும் கண்களும், கீர்த்தனா மனதில் வந்து போக அபிமன்யு வாழ்க்கைக்கு கீர்த்திகா தான் சரி என முடிவெடுத்தாள்.


        “சார் மனுவுக்கு தான் அறிவில்லை பத்து வயது பெண்ணுக்கு தாயான என்னிடம் காதலை சொல்லி திருமணம் பேசினார் உங்களுக்குமா.? நாளை மறுநாள் நிச்சயம் வைத்து, இப்ப வந்து என்னிடம் இப்படி பேசறீங்க பெரிய மனிதர் தானா நீங்க?” என்றதும் ரகுவரன் அபிமன்யுவை பார்க்க அவனோ
      “என்ன கீர்த்தி இப்படி பேசற உன்னிடம் எல்லாம் பேசி பிறகு அப்பா கூட்டிட்டு வர்றேன் தானே போனேன் அதுகுள்ள என்ன ஆச்சு..” என்றான்.


      “நான் சம்மதம் என்று சொன்னேனா? நீங்களா முடிவு எடுத்து இப்படி அப்பா கூட்டிட்டு வந்தா என்ன அர்த்தம்? சின்ன பிள்ளை தனமா இருக்கு” என்று கீர்த்தி சொல்ல தந்தை முன் இப்படி பேசுபவளை என்ன செய்ய எதுக்கு இப்படி பேசுகிறாள் என குழம்பி போனான்.


      அதற்குள் அங்கிருந்த சிகரேட் தூள் பார்த்த ரகுவரன் கீர்த்தனாவை காண அவளின் கண்ணீர் என்னவோ உணர்த்த கடினபட்டு
     ” சார் நேற்று ஒரே இடத்தில் இரண்டு பேரும் மாட்டிக்கிட்டோம். அப்போ காதல் கல்யாணம் பற்றி பிதற்றி பேசினார் முடியாது சொல்லலை. அதே சமயம், சம்மதம் என்றும் சொல்லலை. இவர் நான் அமைதியா இருக்கவும் சம்மதம் நினைத்து உங்களிடம் பேசி குழப்புறார். அவருக்கு சொல்லி புரிய வைச்சி கீர்த்திகா கூட சேர்த்து வைங்க… எனக்கும் என் கணவருக்கும் டிவேர்ஸ் ஆனாலும் அவர் இங்க தான் வருவார் அது உங்க பையனுக்கு நல்லாவே தெரியும்…” கீர்த்தனா தெளிவாக பொட்டில் அடித்தார் போல பேசினாள். இலைமறையாக சிகரெட் கணவனுடையது என்றாள்.


       ” என்ன அபி இந்த பொண்ணு இப்படி பேசுது… நீ சொன்னது வைத்து கீர்த்திகா வீட்ல நிச்சயம் நிறுத்த பார்த்தேனே… லுக் அபி 33வயது வரை உன் வாழ்வில் நான் எதற்குமே கட்டாயப்படுத்தலை ஏன் நீ சொன்ன என்று இங்க வந்தது கூட அப்படி தான். ஆனா இனி அப்படி இல்லை நாளை மறுநாள் நிச்சயம் வைத்த தேதில அந்த கீர்த்திகா பெண்ணுக்கும் உனக்கும் கல்யாணம். நீ ஆசைப்பட்ட படி சிம்பிள்ளா நடத்தி திருமணத்தை ரிஜிஸ்டர் பண்ணி அடுத்த வாரம் வரவேற்பு அவ்ளோ தான்” என்றவர் விறுவிறுவென கிளம்பினார்.


    ” என்ன தான்டி நினைச்சிட்டு இருக்க? உன்கிட்ட கேட்டுட்டு தானே போனேன். சரி… நீ வாயை திறந்து சொல்லலை தான் ஆனா மறுக்கலையே… உனக்கு ஏதேனும் குழப்பம் என்றாலும் சொல்லு தெளிவா பேசலாம். அப்பாவை நான் மாத்தறேன்… என்ன பிரச்சனை. ப்ளீஸ் டி… என்னை கெஞ்ச வைக்காதே” என்றான் அபிமன்யு.


     “புரியாம உலறுறதை நிறுத்து மனு. என் கணவர் இருக்கார் நீயே பார்க்கற அப்புறம் என்ன.? ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை லைப் மனு” என்றவள் பேச்சில் போன் அடிக்க போனில் ரகுவரன் என்றதும் கீர்த்தி கண்களை கண்டவன் அப்படியே வெளியேறினான்.


        இரு தினம் எங்கும் செல்லாமல் அப்படியே வீட்டில் அடைந்தாள்.


இன்று காட்டன் சேலை உடுத்தி அபிமன்யு திருமணத்திற்கு மல்லிகா மிஸ் கூடவே கிளம்பினாள்.
         அபிமன்யு அந்த ஹாலில் குறிப்பிட்ட சிலரை தவிர எல்லோரும் பள்ளியில் இருந்தவர்களே இருக்க, உறவுகள் கீர்த்திகா வழியில் வந்து இருந்தார்கள். மல்லிகா மிஸ் அதிக பழக்கம் என்பதால் மேடையில் கூப்பிட கூடவே இருந்த கீர்த்தனாவை கையோடு அழைத்து போனார்.
          அபிமன்யு பார்வை ஏதோ ஒரு வைராக்கியத்துடன் இருந்தது.


மேளங்கள் முழுங்க நாதஸ்வர இசையில் அபிமன்யு கைகள் தாலி எடுத்து அவளின் கழுத்தில் கட்டி, மூன்று முடிச்சுகள் அவளின் துணைவனாக மாறினான் அபிமன்யு.

1 thought on “அபியும் நானும்-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *