தமிழில் நாவல் வலைப்பதிவை (Novel Blog & etc.,) உருவாக்குவது, உங்கள் கதைகளை உலகுடன் பகிர ஒரு அழகான வழியாகும். இது படிப்படியாக எப்படி செய்வது என்பதை இங்கே விளக்குகிறேன்.
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
Step 1: வலைப்பதிவுக்கான தளத்தை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் mail மூலமாக blogger பகுதியில் register and account sign செய்யவும்.
step 2: Domain Name வாங்குங்கள்
- உங்கள் வலைப்பதிவுக்கான பெயரை தேர்வு செய்யுங்கள் (உதாரணம்:
********blogspot.com
)
step 3: வடிவமைப்பை அமையுங்கள்
- ஒரு அழகான Theme தேர்வு செய்யுங்கள். பொதுவான தீம் நிறைய உண்டு.(பொதுவான தீம் வைப்பது மூலமாக ஒன்று போல இருக்கும். நீங்கள் மற்றவரை பார்த்து செய்வதாக சிலர் நினைக்கலாம். ஆனால் common theme என்று பிரிதறியாத ஆட்கள் உண்டு).
- உங்களுக்கான தனி தீம் நீங்களவே உருவாக்கலாம். better.
- முக்கியமான பக்கங்களை சேர்க்கவும்: About, Contact, Privacy Policy. அடிதளத்தில்.. அமைக்க வேண்டும்.
- உங்கள் வலைப்பதிவு மொபைல்-அனுகூலமாகவும் இருக்க வேண்டும்.
Step 4: உள்ளடக்கத்தை எழுதத் தொடங்குங்கள்
- Menu: “முகப்பு”, “என்னைப் பற்றி”, “தொடர்பு கொள்ள” போன்ற பக்கங்களை சேர்க்கவும்.
- ஒரு குறிப்பிட்ட தலைப்பை தேர்வு செய்யுங்கள் (உதா: novel poem, சமையல், பயணம், இப்படி நிறைய.,).
- உங்கள் முதல் பதிவை எழுதுங்கள் – உணர்வுபூர்வமாகவும், மற்றவருக்கு பயனுள்ளதாகவும் இருக்கட்டும்.
- படங்கள், தலைப்புகள், format ஆகியவற்றைப் பயன்படுத்தி வாசிக்க எளிதாக்குங்கள்.
- Comment Section: வாசகர்கள் கருத்து தெரிவிக்க வசதியாக comment பகுதியை சேர்க்கவும்.
Step 5: உங்கள் வலைப்பதிவை பிரபலப்படுத்துங்கள்
- சமூக ஊடகங்களில் பகிருங்கள் (Instagram, Facebook, X). etc.,
- தமிழ் வலைப்பதிவாளர் குழுக்களில் சேருங்கள்.
Step 6: வளர்ச்சி மற்றும் பகுப்பாய்வு
- Google Analytics போன்ற கருவிகளை பயன்படுத்தி:
- வாசகர் எண்ணிக்கை, அவர்களின் நடத்தை ஆகியவற்றைப் பாருங்கள்.
- சிறப்பாக செயல்படும் பதிவுகளை கண்டறியுங்கள்.
இனி உங்களுக்கென தனி blog மற்றும் ஒரு இடம். நீங்களே உருவாக்கி சுயமாய் நில்லுங்கள்.