🍁 19
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
கீர்த்தியின் மனம் மட்டற்ற மகிழ்வில் திளைத்தன. என்ன தான் தனது மனதில் அபிமன்யு மேலே வெளிப்படையான காதல் இல்லாமல் போனாலும், அவனை போல ஒரு மனதினை இழக்க தான் செய்கின்றாள்.
ராஜேஷ் சொன்னதற்காக மட்டுமில்லை ஏற்கனவே தெளிவாக தான் இருந்தாள். மனுவின் நடவடிக்கை அபிநயா மீது, அவன் காட்டும் பாசம் என்பதில், கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டான் அபிமன்யு.
அப்பா போல பாசம்காட்டும் எல்லோரும் தந்தையாக மாறிடலாம். அம்மா போல தாய்மை தரும் எல்லோரையும் கூட அம்மா என வாய் நிறைய அழைத்திடலாம். ஆனால் கணவன் என்ற பதவி மற்றொருவன் அன்பு செலுத்துகின்றான் என்று மாறிடுமா என்ன?
அதுவும் ராஜேஷை உண்மையாய் காதலித்தவள், பருவம் எட்டாத புரியாத வயதில், தூய்மையான மனதில், முதல் முதலாக தோன்றிய காதல். அப்படி இருக்க சூழ்நிலை காரணமாக ராஜேஷ் மாறுவதை போல அவளும் மாற தோன்றுமா என்ன?
ஆயிரம் மாற்றங்கள், பெண்கள் சாதிக்க தான் செய்கின்றார்கள். விதவைமணம் கூட எளிதாக நிகழ தான் செய்கின்றது. ஆனால் அதையும் ஏற்றுக்க மனம் வேண்டுமே.! இங்கு மாற செய்ய வேண்டியவளே தனக்கு கணவன் என்ற துணையே வேண்டாம் என தவிர்க்கின்றாள். எங்கே கணவன் என்ற பங்கில் அன்பு செலுத்த போய் அபிநயா மீது காட்டும் பரிவு முடங்கிடும் என அஞ்சி அபிநயாவுக்காக தனியாக வாழ முடிவுடன் கிளம்பினாள்.
அபிமன்யு-கீர்த்திகா திருமணம் முடிந்த இரண்டாம் நாள், யாருக்கும் சொல்லாமல் தான் எங்கு செல்ல போகின்றோம் என அறிவிக்காமல் கிளம்பினாள்.
ராஜேஷ்-கேத்ரீன் கூட இனி எப்படியும் அடித்தோ பிடித்தோ அவர்கள் குடும்பமாக வாழ செய்வார்கள் என முற்றிலும் இங்கிருந்து கிளம்பினாள்.
ராஜேஷ் தான் அதன்பின் அங்கிருந்த எல்லோரிடமும் பைத்தியகாரனை போல விசாரித்து கொண்டு இருந்தான்.
அதுவும் கேத்ரினுக்கு தெரியாமல்… அவளுக்கு தெரிந்த பொழுது கீர்த்தனா இருக்கும் சுவடு கூட தனக்கு தெரியாத நிலை தான் என்று ராஜேஷ் அழ, கேத்ரினுக்கு நிம்மதி தந்தது.
மல்லிகா மிஸ்ஸிடம் ஒரு நாள் வந்து ராஜேஷ் பள்ளியில் கேட்க, அவரோ எனக்கும் கீர்த்தனா பற்றி தெரியாது எங்களிடம் சொல்லலை.. ஆனா எங்க போனாலும் அபியை சிறப்பா வாழ வைக்கறது தான் அவள் வாழ்க்கை. கடவுளிடம் வேண்டிக்கோங்க… அவளும் நீங்க கேத்ரின் கூட குடும்பம் குழந்தை என்று இருக்க தான் ஆசை படுவா…” என சொல்ல ராஜேஷ் அங்கு இருந்த அபிமன்யுவை கடந்து தான் போனான். ராஜேஷ்க்கு அபிமன்யுவிடம் கேட்க யோசனையில் நிற்க அபிமன்யு கூட தயங்கி தான் நின்றான்.
”உங்களுக்கு கீர்த்தனா எங்க போனானு தெரியுமா?” என கேட்டான்.
”அவ உங்க வொய்ஃப் என்னிடம் கேட்கறீங்க? நான் ஜஸ்ட் அவளோட ஸ்கூல் நிர்வாகி மட்டும் தானே” என அபிமன்யு கடந்தான். எளிதாக வாய் சொல்லிட மனமோ கத்தியால் கீறிய வலியில் துடித்தான்.
கீர்த்தி வேண்டுமென்றால் தன்னை காதலிக்காமல் இருக்கலாம்.. ஆனால் தனது மனதில் பூத்த முதல் காதல் அவள் அவனுக்கு வலிக்க தானே செய்யும்.
வலியோடு வீட்டுக்கு வந்தான் அபிமன்யு. கீர்த்திகா தான் அவன் கட்டிலில் சட்டை கூட மாற்றாமல் காலினை நீட்டி மடியில் தலையணை வைத்து ஒரு கையால் ஸ்மைலி பந்தை அழுத்த, மறுகையில் தலையை பிடித்தபடி இருக்க, அங்கிருந்த ஏசி ஆன் செய்ய அவன் முகத்தில் சில்லென்ற காற்றினை பரப்பியது.
”என்னாச்சு மனு?” என கீர்த்திகா கூப்பிட,
”கீர்த்திகா மனு என்று கூப்பிடாதே…” என்றவன் தலையை பிடித்தபடி கூறினான்.
”அபிமன்யு எல்லோரும் உன்னை அபி தானே சொல்றாங்க ஜஸ்ட் டிஃப்பரெண்ட் நான் மனு தான் சொல்வேன்…. சரி என்ன தலைவலியா?” என அவன் தலையை தொட,
”ப்ளீஸ்… கீர்த்திகா தொடாதே.. நான்…” என்றவன் அவளை பார்க்க தவிர்த்தான்.
”புரியுது அபி.. நீ ஏதோ ஒரு பெண்ணை விரும்பியதா மாமா சொன்னார். அவளுக்கு கல்யாணம் ஆகிட்டதால நீ கல்யாணம் வேணாம் சொல்லியதையும் சொன்னார்.
மாமா உன்னை வற்புறுத்தி நமக்கு கல்யாணம் செய்தார்னு நீ சொல்லிடியே.
நீ கேட்ட நேரம் கூட நாம பேசிக்கிட்டது தானே… ஆனா ஒரு மனைவியா என் தொடுகை கூட வேண்டாம், ஒரு ஃப்ரெண்ட்டா தொடக்கூடாதா… எல்லா நேரமும் மனைவி மனைவியா இருக்க மாட்டாள் அபி.. என்னை இந்த நேரம் உன் அம்மாவா ஏற்றுக்கோ. உனக்கு ஆறுதல் வரும் வரை என் மடியில் படுத்திரு… அந்த தீண்டல் வேற மனு” என்றதும் கீர்த்திகா அவன் தலையணை எடுக்க, அவனோ கீர்த்தனா எங்கே போனால் அதுவும் தன்னால? என எண்ணி மனதில் வருந்தியவான், கீர்த்திகா மடியில் படுக்க அவளின் மெல்ல மெல்ல தீண்டல் தலைவருடலில் கண்கள் ஈரமாக அழத்துவங்கினான்.
அபிமன்யு அழுகின்றானா? என கீர்த்திகா எண்ணினாலும், அவனை தடை செய்யாமல் அழ விடுத்தாள் அவன் வலி போக… அவள் எண்ணியது போலவே கண்ணீரில் கரைந்தவன் ஒரு தெளிவோடு எழுந்தான்.
”சாரி கீர்த்திகா… ஒரு மனைவியிடம் என் காதலி நினைச்சு பீல் பண்றேன்னு சொன்னா, எவளா இருந்தாலும் தப்பா தான் புரிந்து கொள்வாங்க.. பட் நீ என்னை புரிந்து கொண்டு ஆறுதல் செய்யற… இப்ப இல்லை என்றாலும் நான் மாறுவேன்… அது வரை பொறுத்துகோ. பிளீஸ்” என கூற, கீர்த்திகா அவன் நெற்றியில் முத்தம் வைத்து சரி என்பதாய் பதில் சொன்னாள்.
”நீ லவ் பண்ண பொண்ணை எண்ணி பொறாமையா இருக்கு மனு… பார்றேன் ஓர் ஆண் மகனையே அழவைத்து, உனக்குள் எந்த அளவுக்கு அன்பை, அவள் அறியமா விதைத்து போயி இருக்கா? என்னைக்காவது அவளை மீட் பண்ணினா சொல்லு நான் பார்க்கணும்” என அவன் லண்டனில் தான், ஏதோ ஒரு பெண்ணால் காதலில் விழுந்து இருப்பான், என நினைத்து கொண்டு கூறினாள்.
மாதங்கள் செல்ல ராஜேஷ் காட்டும் அன்பில் கேத்ரினும், அவளுக்கு பிறந்த குழந்தை மூலமாக ராஜேஷும் சராசரி தம்பதியராக மாறிப்போனார்கள்.
சண்டை போட்டாலும் அதில் எப்படி கலைந்து சமாதானம் ஆகி செல்லும் பக்குவம் கண்டு கொண்டான். தொழிலும் அதே முதன்மை பெற பாடுபட்டான். நடுவில் கீர்த்தனாவை தேடாமல் இல்லை.. ஆனால் இம்முறை கீர்த்தனாவை சேர்த்து அபிநயாவையும் அவன் மனம் தேடியது. டீன்-ஏஜ் வயதை கடந்து இருப்பாள், எல்லா பெண்குழந்தை போல பெரியவள் ஆகியிருப்பாள். மனம் குழந்தை என்றாலும் வயதும் உடலும் அவளை இந்நேரம் பெரியவளாக காட்டி கொடுத்து இருக்கும்.
கயவர்கள் கண்கள் தனது மகள் மேலே பார்வை பதிக்குமே…. கீர்த்தனா தனியாக நின்று சமாளித்து இருப்பாளா? என மனம் சுழன்றது.
எங்கேனும் மனநலம் பாதித்த குழந்தையிடம் காமுகன் கை வரிசை’ என்றது போல செய்தி படித்துவிட்டால், அன்றைய நாள் முழுதும் உள்ளுக்குள் துடித்திடுவான். தந்தையாக அவன் மனம் அவனை அப்படி துடித்திட வைத்தது.
கீர்த்தி இருக்கும் நிலை இங்கு யாரும் அறியாதது தான். ஒருவரை தவிர… மல்லிகா மிஸ்…
பெற்ற தாய் தந்தையர்களிடம் கூட சொல்லாமல், மகள் கீர்த்தனா வாழ்வில் தங்களாவது ஒரு ஆதரவு தந்து இருக்கலாமோ என காலம் கடந்து, அவர்களின் தள்ளாட்டில் தவறை உணர்ந்தனர் சுதாகர் அம்பிகை.
எல்லோரும் ஒவ்வொரு பாதையில் பயணம் செய்ய, கீர்த்தி அபிநயா அவர்கள் தங்கள் உலகத்தில் தங்கள் மட்டுமே இதில் யாரையும் என்றும் விடாமல் வாழ்வை வாழ்ந்தார்கள்.
கீர்த்தி தனது மகளை அழைத்து கொண்டு, கொஞ்ச காலம் மல்லிகா மிஸ் உதவியோடு அவர்கள் ஒரு ஹாஸ்டலில் தங்கி, பின்னர் பதினைந்து நாளில், ஆஸ்திரேலியாவிற்கு தமிழ் கற்று கொடுக்க கிளம்பினர், அவர்களுக்கு தெரிந்த ஸ்பெஷல் பள்ளியில் அபிநயாவை சேர்த்து பயில வைத்தாள்.
அபியும் மற்ற பிள்ளைகளை போல எல்லாம் தெரிந்து கொள்ளாவிட்டாலும், ஓரளவு தனது பணியினை தானே பார்த்து பயின்றிட முனைந்தாள். கீர்த்திக்கு வீட்டுக்கு வந்த பிறகு, முழு நேர பயிர்ச்சியாக கீர்த்தியின் உலகத்தில் அவள் என்ன அறிந்து வைதிருக்கின்றாள் என்றறிந்து அறிவுறுத்தி அதிசயித்து ஆனந்தபடவே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்க, அவளுக்கு ராஜேஷ் அபிமன்யு என்றதை எல்லாம் மறந்தே போனாள்.
அவள் வாழ்வில் அபி….. மகள் அபிநயா மட்டுமே.
Abinaya growth is happy to hear. But keerthi life is very sorrow. Women cannot live happily as per their wish. Its all fate. Intresting sis.