அத்தியாயம் – 100
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஹர்ஷத் அமைதியாக விலகி செல்ல அருந்ததியும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் இருப்பது போல இருந்தாள்.
இந்த மேடையில் ஆராஷியை கொல்லப்போவதாக வந்த தகவலை வைத்து ப்ரோக்ராம் கேன்சல் ஆகும் என எல்லோரும் எதிர்பார்த்தனர் ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு இதோ இன்னும் சில மணி நேரத்தில் கான்செர்ட் துவங்க உள்ளது.
பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்தனர் ஹர்ஷத்தும் ஆராஷியின் ஜப்பான் மேனேஜரும்.
பொறுப்புகளை யாரையும் நம்பி விடாமல் அவர்களே களத்தில் இறங்கி வேலை செய்தனர்.
அதில் கொஞ்சம் மேதாவிற்கு திருப்தி ஆனாலும் அவனை பாதுகாக்க வேண்டுமே என்ற படபடப்பு அதிகமாகி கொண்டே சென்றது அவளுக்கு அதனாலேயே முதலில் ஃபங்ஷனுக்கு போககூடாது என எண்ணிய மேதா அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தன்னால் தாங்க ஆகாது உயிர் போவதாக இருந்தாலும் அது ஆராவை காப்பாற்றியபின் போகட்டும் என்று முடிவு செய்து கிளம்பினாள்.
முதலில் புடவையை எடுத்தவள் தான் மட்டும் தனியாக தெரிவோம் என எண்ணியவள் நார்மல் டாப் அண்ட் ஜீன்ஸ் அணிந்து மாஸ்க் போட்டபடி கிளம்பினாள்.
ஆராஷி டிசைன் செய்த உடைகளை அணிந்து நிதின் அவனது குடும்பம் சாஹித்யன், நிலவினி,அருந்ததி தேஜு ரியோட்டோ அவர்களது குட்டி பிரின்சஸ் ஏன் அவனது இரண்டாவது தேவதை ஜிம்மியை கூட ரெடி செய்து இருந்தான் ஆரா.
ரியோட்டோவும் ஆராஷியும் ஃபர்பார்ம் செய்ய போவதால் அவர்களது உடை வேறு மாதிரி இருந்தது ஆராஷியின் உடை மட்டும் பர்ப்பிள் கலரில் ஹெவியாக இருக்க ஏன் என்று ஹர்ஷத்திடம் வினவினான்.
“பிகாஸ் நீங்க ஹீரோ சர் உங்கள அழகா காட்டணும்ல அதான் இது உங்க ஆளோட டிசைன் உங்களுக்கு பாதுகாப்புக்கும் சேர்த்து” என்றான் ஹர்ஷத்.
புன்னகைத்தபடி அதை அணிந்து கொண்டான் ஆராஷி ஷிமிஜூ.
கான்செர்ட்க்கு வருபவர்களை முழுவதுமாக பரிசோதனை செய்து அனுப்பினர் செக்யூரிட்டி ஆட்கள் மற்றவர்களை செக் செய்தவர்கள் அவனது சித்தியையும் அவரது மகனையும் மட்டும் செக் செய்யாமல் அனுமதித்தனர்
அவருக்கு அதுவே நெருடலாக இருந்தது.
மேலும் தங்களது இந்திய பிஸினஸ் அறிமுக விழா என்பதால் அங்கு கான்செர்ட்க்கு வந்திருந்த தமிழர்களை செலெக்ட் செய்து அவர்களை மட்டும் தமிழர் முறைப்படி ரெடியாக முடியுமா என கேட்டனர் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் ஆட்கள் அதில் மேதாவும் செலெக்ட் செய்யப்பட்டு இருந்தாள் இது ஆராஷியின் இந்திய பாட்னர்ஷிப்பை டெவலப் செய்ய உதவும் என ஏற்பாடு செய்ததாக கூறினர்.
இது ஹர்ஷத்தும் ஆராஷியும் சேர்ந்து செய்த ஏற்பாடு
மொத்தமாக ஐந்து பெண்கள் இருந்தனர் அதில் இருவர் பெரியவர்கள் ஏற்கனவே புடவை அணிந்து இருந்தனர். அதனால் அவர்களுக்கு அணிகலன்கள் மட்டும் உடுத்திக்கொள்ளும் படி கேட்டனர்.
மீதம் உள்ள மூன்று பெண்களிடம் ரிக்குவஸ்ட் வைத்தனர் அவர்கள்.
ஆராஷியின் இந்திய பிஸினஸ் திட்டத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதற்கு பர்சனலாக அவர் தமிழ் ஆட்களை ரிக்குவஸ்ட் செய்து கேட்டுக்கொள்வதாகவும் கேட்க மற்ற இரு பெண்களும் ஒத்துக்கொண்டனர் ஆனால் மேதா மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை இதனால் தான் தனியாக தெரிவோம் என்பதால் ஆனால் மற்ற பெண்கள் தமிழ்காரங்க நாமளே அவருக்கு சப்போர்ட் பண்ணலனா எப்படி அப்புறம் நம்மளை இவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா உங்கள என்ன புடவைதானே கட்ட சொல்றாங்க அதும் இத்தனை பேர் இருக்கோம்ல வேற எதையும் கேட்கலைல அப்புறம் என்ன ஒத்துக்கோங்க என்று அவர்கள் பேச பேச அமைதியாக இருந்த மேதா ஈவண்ட் ஆட்கள் கையில் இருந்த புடவையை வாங்கியவள் ஆனால் ப்ளவுஸ் செட் ஆகாதே என பார்க்க
“வீ ஹாவ் ரெடிமேட் ப்ளவுஸ் அண்ட் ஸ்கர்ட் மேடம் உங்களுக்கு செட் ஆகுறதை நீங்களே செலெக்ட் செஞ்சுக்கலாம்” என்றுவிட்டு அந்த மூன்று பெண்களையும் வேறு வழியாக அழைத்து சென்றனர்.
“பட் ஒன் கண்டிஷன் நான் மாஸ்க் போட்டுதான் போவேன் சரிங்களா?” என்று அவள் கேட்க அது உங்கள் விருப்பம் என்றவர்களோடு சேர்ந்து நடந்தாள் மேதா.
அங்கே அவர்களுக்காக ஒரு ஹால் போன்ற அறை ஒதுக்கப்பட்டு அதில் எக்கசக்கமாக புடவைகளும் அதற்கு ஏற்ற ப்ளவுஸ் ஸ்கர்ட் நகைகள் அவர்களை அலங்காரம் செய்ய ஆட்கள் என இருந்தனர்.
அவர்களை வரவேற்றவர்கள் மற்றவர்களை ஒருவர் கவனிக்க மேதா கையில் கொடுத்த புடவைக்கு மேட்ச்சாக ஒரு ப்ளவுஸ் மற்றும் ஸ்கர்ட் அண்ட் நகைகளை தெரிவு செய்தார் ஒரு பெண்மணி
“இல்ல நகையெல்லாம் வேணாம் நான் புடவை மட்டும் கட்டிக்கிறேன்” என்று மேதா ஜாப்பனீஸில் பேச
“தமிழ் கல்ச்சர்படி ரெடியானீங்கனா ரொம்ப சந்தோஷம் படுவோம் உங்களுக்கு ரொம்ப நகைகள் வேணாம்னா பரவாயில்லை கொஞ்சமாவது நீங்களே தேர்ந்தெடுத்து போட்டுக்கலாம்.
இன்னும் கல்யாணம் ஆகலைதானே நகைபோட்டா கல்யாண பெண் போல இருப்பீங்க” என்று அவர் கூற
“இல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றவள் ஒரே ஒரு சிம்பிளான நகையை மட்டும் தேர்வு செய்து அதை நோட் செய்து கொள்ளும்படி கூற அவளது கூற்றில் அதிர்ந்த அவர் அவளது தேர்வான அந்த நகையை பார்த்த பெண்மணி
அவளது தேர்வை மெச்சி
“நீங்க தேர்ந்தெடுக்கும் நகையும் உடையும் உங்களுக்குத்தான் சொந்தம் நீங்க எங்களோட சர்ரை சப்போர்ட் பண்ண செய்யும் இந்த உதவிக்கு அவரோட காம்ப்ளிமெண்ட் கிஃப்ட்” என்று கூற அவரது பேச்சை கேட்ட மற்ற பெண்கள் ஷாக் ஆகி இன்னும் நிறைய நகைகளை அள்ளி அணிந்து கொண்டனர்.
“இல்ல அது வந்து” என்று மேதா இழுக்க
“ரிட்டர்ன் கிஃப்ட்ட வேணாம்னு மறுக்காதீங்க மேடம் சர் வருத்தப்படுவார்” என்று அவர் சொல்ல
‘அவருக்கு என்ன தெரியவா போகுது?’ என்று எண்ணியவளுக்கு தெரியவில்லை அவளை அந்த பெண்மணியின் கழுத்தில் இருந்த கேமிரா மூலம் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்று.
அவள் திருமணமாகிவிட்டது என்று கூற அனைவரும் அதிர்ந்து ஆராவை பார்க்க அவனது பார்வையோ அவளையே தான் பார்த்தபடி இருந்தது.
“என்ன இவ கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்றா? யாரை ஹர்ஷத்? உனக்கு ஏத வது தெரியுமா?” என்று நிதின் கேட்க
“என்னைத்தான்” என்று ஆராவிடமிருந்து பதில் வந்தது.
எல்லோரும் அவனை ஆவென பார்க்க
“அருந்ததி எடுத்த ஆட் ஷூட்ல நான் அவளுக்கு கட்டின தாலியையும் போட்ட மோதிரத்தையும் மேடம் பத்திரமா எடுத்து வெச்சுக்கிட்டாங்க ஆமாதானே நிலவினி மேடம்” என்று ஆரா நிலவினியை பார்த்து கேட்க “ஆமாம் உங்களபோலவே” என்று அவள்கூறியபடி தலையை ஆட்டினாள்.
“என்ன இவருமா?” என்று கேட்டான் ஹர்ஷத்.
“அது நான் அப்போ இவங்க சொன்னாங்க பாய்ஸ் கால்ல மோதிரம் போடணும்னு சொன்னாங்க அது வைஃப் போடுவாங்களாமே அப்போ அது ஃபேஷனா தெரிஞ்சதால அதுக்கு நான் பே பண்ணி எடுத்துக்கிட்டேன்” என்று ஆரா கூற
“ஆனா இன்னைக்கு வரைக்கும் அதை கழட்டலையே சர்?” என்று நிலவினி அதை கவனித்தபடி சொல்ல
“அது அப்போ நல்ல ஃபேஷனா தோணினதால கழட்டல அப்புறம் என் மேதா தான் நான் தேடின பொண்ணுனு தெரிஞ்சப்புறம் அவ போட்டு விட்டதுனு கழட்ட தோணலை” என்றவன் தொடர்ந்து
“Officialலா என் வைஃப் ஆகமுடியாதுனு அவளே முடிவு பண்ணிட்டு நான் ஆட்காக கட்டின தாலியை நிஜமானதாவே கட்டிட்டு கல்யாணம் ஆன பொண்ணுனு எல்லோரையும் ஏமாத்திட்டு இருக்கா” என்று ஆரா சொல்ல
“அடிப்பாவி கல்யாணமே பண்ணிட்டாளா?” என்று அருந்ததி கூற உடனே அவளை முறைத்தான் ஹர்ஷத்
‘ஆமா இவள பத்தி நான் எதையும் சொல்லிடகூடாதே துரைக்கு உடனே கோவம் வந்துடும்’ என்று மனதிற்குள் அவனுக்கு வசைபாடியவள்
‘இருடா உனக்கு பெருசா வைக்கிறேன்’ என்றபடி அமைதியாகி விட உடனே தனது கோபமுகத்தை மாற்றிக்கொண்டான் யாருக்கும் தெரியாமல்
“இந்த ஜென்மத்தில அவளுக்கு நான் மட்டும் தான் புருஷன்னு அவளே முடிவு பண்ணிட்டா எனக்கு அவதான் வைஃப்னு நானும் முடிவு பண்ணிட்டேன் அப்போ அதை நான் நிஜமா மாத்தணும்ல” என்றபடி கேமிராவை ஆஃப் செய்தவன் செக்யூரிட்டியிடம் திரும்பி ஆயிரம் பத்திரங்களை சொன்னவன் செக்யூரிட்டியோடு அவர்களை அனுப்பினான்.
அங்கு அவள் ரெடியாகி வெளியே வர மீண்டும் கேமிராவை ஆன் செய்து பார்த்தான் ஆராஷி. மேதாவிற்கு அந்த புடவையும் ப்ளவுஸும் அவ்வளவு அம்சமாக பொருந்தியது அவளுக்கே ஆச்சரியம் தான் அவளுக்காகவே அளவெடுத்து தைத்தது போல இருந்தது கூடவே அவள் செலெக்ட் செய்த நகையை அணிந்தவள் தாலியை நெஞ்சோடு மறைத்தாள்.
மேக்கப் ஆர்டிஸ்ட் அவள் அருகில் வர வேணாம் தானே ரெடியாகி கொள்வதாக கூறியவள் மிக அழகாக அதே சமயம் நேர்த்தியாக ரெடியானாள்.
அவளது அழகை கண்டு மெச்சிய மேக்கப் ஆர்டிஸ்ட் கடைசியாக கொஞ்சமாய் லிப்ஸ்டிக் மாத்திரம் போட்டுக்கொள்ளுமாறு கேட்க எல்லாவற்றையும் மறுத்தால் நல்லதல்ல அவர்களை அவமானபடுத்துவது போலாகும் என்று உணர்ந்தவள் அவர் சொன்னபடியே செய்தாள்.
தேவதையாக ரெடியானவளை தான் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆராஷி.அவளை பார்த்து மற்ற இரு பெண்களும் கூட பொறாமை பட்டனர் கூடவே அவர்கள் சொன்னது “உங்க ஹஸ்பண்ட் ரொம்ப லக்கி மேடம் எங்களுக்கே உங்கமேல லவ் வருதே” என்றுவிட்டு அவளுடன் தயாராகி வந்தனர்.
அவர்கள் சொன்னதை கேட்டு மேதா நன்றி கூறி லேசாக சிரிக்க அவனுக்கோ பெருமிதமே தன்னவளை எண்ணி. ஆனால் அவளுக்கு எந்தவித சந்தேகமும் வந்துவிடகூடாது என எண்ணியவன் செக்யூரிட்டி கார்ட் மூலம் அவர்களை அழைத்து வர சொல்லிவிட்டு தான் என்ட்ரி கொடுக்க வேண்டிய இடத்தில் சென்று நின்று கொண்டான்.
ஐந்து பேருக்குமே கார்ட்ஸ் வர அவர்களை மட்டும் ஸ்டேஜ்க்கு போக இன்னொரு வழி செல்ல அந்த வழியே உள்ளே சென்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அப்போது கேமிரா அவர்களை படம்பிடிக்க வர டக்கென்று தன் கையில் இருந்த மாஸ்க்கை எடுத்து அணியபோனவளை தடுத்த கூட வந்த பெண்
“அழகா இருக்கீங்க மாஸ்க் போட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடும் கேமிராமேனை வேணும்னா கவர் பண்ணவேணாம் சொல்லிக்கலாம் உங்க ஹஸ்பண்ட் ரொம்ப ஸ்ரிக்ட் போல” என்று கூற அவஸ்தையாய் போனது அவளுக்கு.
ஆனாலும் அப்போதும் வேறு ஒருவர் அவனை தவறாக நினைப்பதை மறுத்தவள்
“இல்ல அவர் ரொம்ப நல்லவர்தான் ஆனா எனக்குத்தான் இதெல்லாம் பிடிக்காது” என்றாள்
“ஓஓ..பார்ரா செம்ம லவ் தான் போங்க வெரி லக்கி பர்சன் சும்மாகூட விட்டு கொடுத்து பேசமாட்டேங்கறீங்களே” என்று அந்த பெண் கிண்டல் செய்ய
‘இப்போ மொத்தமா விட்டு கொடுத்துட்டு தான் நிக்குறேன்’ என்று மனதில் நினைத்தவள் தனது சீட்டில் சென்று அமர்ந்தாள்.
பின்னே சீட்டையும் மாற்றினாள் அவள் கண்டுபிடித்து விடுவாளே என்று சீட்டை மட்டும் குறித்துக்கொண்டு விட்டனர் ஆனாலும் அவளுக்கே தெரியாமல் பாதுகாவலர்கள் அவளை சுற்றி இருந்தனர்.
அவள் சென்று அமர்வதற்குள் அனைவரும் அவளையும் அவளை போலவே உடை அணிந்த பெண்களையும் ஆவென பார்த்தபடி இருந்தனர்
அவர்களுக்குள் பேசியபடி இருந்தனர்.
நிறைய பேருடைய கண்கள் மேதாமேல் தான் அதிக நேரம் படிந்தது.
அதில் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட தலையை குனிந்து கொண்டாள்.

Nice epi