அத்தியாயம் – 102
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அவனது பார்வை அனைவரையும் பார்த்தவாறு இருந்தாலும் அடிக்கடி அவனது கண்கள் போய் வந்தது மேதாவிடம்தான்.
இடமும் வலமுமாக தலையை அசைத்து அசைத்து அவன் பேசுவது என்னமோ கூட்டத்தை பார்த்து பேசுவது போல இருந்தாலும் அவனது கண்கள் தன்னவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தது.
அவளுக்கு கொடுத்து இருந்த பர்ப்பிள் நிற புடவையை போலவே அவனது உடையும் இருக்க.
நிதினுக்கோ ஈவனது செய்கைகள் சிரிப்பாகவும் வந்தது இந்த நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்ற பதட்டமும் இருந்தது.
ஹர்ஷத்தின் பார்வையோ மியோவை விட்டு இம்மி அளவும் நகரவில்லை.
அவரால் ஏதோ நடக்கபோகிறது என்று மட்டும் அவனுக்கு உள்மனம் கூற அவனது பார்வை வட்டத்திலேயே மியோவை உலவ விட்டான்.
ஆனால் அவரோ அவன் தேடுற பொண்ணு அவனது ஸ்பான்சர் பொண்ணுதான் என்று தெரிந்து அந்த பொண்ணை கொல்ல சொன்னது யாருமே அறியாதது.
மேதாவிற்கோ ஏதோ பதட்டம் இருந்தபடியே இருந்தது.
அவளது கண்கள் ஆராஷியையும் தன் குடும்பத்தின் மேலேயும் மியோவின் மேலேயும் தான் இருந்தது.
“இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டே என்னோட புது பிஸினஸ்ஸ உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டது முதல் சந்தோஷம்.
இரண்டாவது என்னோட புது டைப் ஆட் உங்க முன்ன ரிலீஸ் செஞ்சது.
அண்ட் இன்னும் இருக்கு.
அதுலாம் ஒவ்வொன்னா உங்ககிட்ட பகிர்ந்துக்கதான்
வந்து இருக்கேன்.
என் லைஃப்ல ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க ஒருசிலர் அதுல நீங்களும்தான் இருக்கீங்க. கூடவே அதுல ஒருத்தரா இருக்கிறவர் என் அண்ணா ரியோட்டோ.
அவர் அண்ணனா கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் செஞ்சு இருக்கேன் போல அதான் அவர் எனக்கு கிடைச்சு இருக்காரு என்னோட கஷ்டமான சமயத்தில பொறுமையா என்கூட இருந்து என்னை நல்வழி படுத்தினவங்கள்ள அவரும் ஒருத்தர்.
அவரோட ஃபேமிலியை உங்க எல்லார்கிட்டயும் அறிமுகம் செய்து வைக்குறதுல நான் ரொம்ப பெருமை படுறேன்.
என் அண்ணா அண்ணி அவங்க என்னோட ஆரம்பகாலம் முதல் இப்போவரை என் வளர்ச்சிக்கு துணையா இருக்குற சரத்ஶ்ரீ சர்ரோட பொண்ணு அவங்களை அறிமுகம் செய்யுறதுல ரொம்ப பெருமை படுறேன்” என்று கூற கேமிராவின் ஃபோக்கஸ் ரியோட்டோவையும் அவனது குடும்பத்தையும் ஜூம் செய்ய அவளும் அவளது மகளும் எழுந்து அனைவருக்கும் வணக்கம் செய்தனர்.
கூட்டமோ என்னது ரியோக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்றுதான் ஷாக்காக இருந்தது.
மியோவிற்கோ அதிர்ச்சி ஆராஷி காதலிக்கும் பெண் சரத்ஶ்ரீ அவர்களின் பெண் என்ற தகவல்தானே கிடைத்தது இவன் என்ன அவன் பொண்டாட்டினு சொல்றான்.
என்ற அதிர்ச்சியில் இருந்தார் மியோ.
ஆனாலும் இன்று இவனை கொல்லப்போவது உறுதி என்று இருந்தவருக்கு வேறு வேறு கலவையான உணர்வுகள் வந்து வந்து போனது.
அவரது உணர்வுகளை பார்த்தபடி இருந்த ஹர்ஷத்துக்கு இவருக்கு எதுக்கு இவ்ளோ ஷாக்கு என்றுதான் எண்ணத்தோன்றியது.
ஆனால் அவனால் எதையும் கணிக்கமுடியவில்லை.
மியோவிற்கோ பேரதிர்ச்சி ஆராஷி காதலிக்கும் பெண் சரத்ஶ்ரீ அவர்களின் மகள் அதனால் அவளை கொன்றால் அவனுக்கு ஸ்பான்சர் கிடைக்காது வேறு எந்த சப்போர்ட்டும் கிடைக்காது அவனை பையித்தியமாக்கி அவனையும் கொன்று அவனது சொத்துக்களை பறிமுதல் செய்து தன் மகனை அவனது இடத்தில் அமரவைக்கலாம் என்று எண்ணி இருந்தவருக்கு ரியோட்டோவின் மனைவி என்பதில் மிகவும் அதிர்ச்சியானது.
அதிலும் அவனுக்கு குழந்தை இருப்பது இன்னும் அதிர்ச்சி ரியோட்டோவையும் செல்லாக்காசாக்க தானே அவர் திட்டமிட்டு இருந்தார்.
அவனது சப்போர்ட் மற்றும் முயற்சியால் தானே அவன் தான் அவனை சாகும்வரை நினைக்கும் சம்பவங்களை செய்து அவனை சாவின் விளிம்புவரை அழைத்து சென்றால் இவனும் அந்த பொண்ணும் சரத்ஶ்ரீயும் அவனை மாற்றி அவனை இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்து விட்டு உள்ளனரே ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் கொல்ல நினைத்தவருக்கு ஆராஷியை சுற்றி பெரிய பாதுகாப்பு வளையம் இருப்பது நன்கு தெரிந்து இருந்தது அதற்கு காரணம் சரத்ஶ்ரீ இறந்தாலும் அவனுக்கு என்னால் எதுவும் நேராத வகையில் பாதுகாப்பு செய்து வைத்துள்ளார் அதனால்தான் இந்தியாவில் கூட அவனை தன்னால் அழிக்கு முடியவில்லை என்று எண்ணியவர் முதலில் அவனுக்கு பக்கபலமாக இருப்பவர்களை அழிக்க வேண்டும் என எண்ணியவர் காதுக்கு வந்த செய்திதான் ஆராஷி தேடிவந்த அந்த காதலி சரத்ஶ்ரீயின் மகள் என தெரியவர இந்த நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளை கொன்றால் இவனும் உடைந்து போவான் அவனால் அவள் இறந்ததால் அவனது பாதுகாப்பு வளையம் குறையும் அதன்பின் அவனை அழிப்பது மிகவும் சுலபம் என்று இருந்தவருக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுக்க அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானார்.
ஆனால் அவருக்கு ஆராஷியே துருப்பு சீட்டை அடுத்தடுத்த அறிவிப்புகளில் கையில் கொடுத்தான்.
“என் அண்ணன் அண்ணி மூலமா இப்போ நான் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட நானும் ஒரு சொந்தம் ஆனேன் கூடிய சீக்கிரமே உரிமையான சொந்தமாவும் மாறுவேன்”
என்று கூற மியோவிற்கு சட்டென்று யோசனை வர தன் ஆளிடம் அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்தார்.
இதை ஒரு கண்ணால் கவனித்தபடி இருந்தான் ஹர்ஷத்.
ஆராஷி அப்படி சொல்லவும் கூட்டமே என்ன என்று கேட்க சிரித்த ஆராஷி
“அது உங்களுக்கு நான் சீக்கரமா சொல்றேன் இப்போ நான் பாடின தமில் சாங்க்கு நானும் என் அண்ணனும் பாடி டான்ஸ் பர்ஃபாமன்ஸ் பண்ண போறோம் எனக்கு இந்த சாங்க்ஸ் ஒரு ஸ்பெஷல் ஃபீல் கொடுத்த சாங்கஸ் அதே ஃபீல் உங்களுக்கும் தரும்னு நம்புறேன் மத்த சாங்க்ஸ்க்கு கொடுத்த சப்போர்ட் இந்த சாங்க்ஸ்க்கும் கிடைக்கும்னு நம்புறேன். சோ லெட்ஸ் ஸ்டார்ட்” என்றுவிட்டு தனது மேல் கோட்டை கழட்டினான்.
அழகான பர்ப்பிள் நிறத்தில் அவனது உடை ஜொலிக்கும் வகையிலும் மற்றவர் கண்களை கவரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அனைவரும் ஆர்பரித்தது கைதட்ட ரியோட்டோவும் அவனுடன் வந்து சேர்ந்தான்.
முதலில் துவங்கியது அவனது தமிழ் கவர் சாங்.
எனக்கென யாரும் இல்லையே.
உனக்கென உருகினேன்
என்னிடம் வா அன்பே.
உயிரென கரைகிறேன்
என்னிடம் வா அன்பே.
என்ற பாடலை பாடியபடி இருவரும் காற்றில் அசைவது போல நடனமாட அந்த அமைதியான பாடலில் அனைவரும் மெய்மறந்து அவனது பார்த்தபடி இருந்தனர்.
மேதாவிற்கு கண்கள் கலங்கியது அவனது பாடலின் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து.
வார்த்தையின் வலிகளை அவனது குரலிலும் உணர்ந்தாள் மேதா.
அந்த சமயத்தில் மியோவிற்கு
அவர் தேடிய துருப்பு கிடைத்தது.
ஆம் சரத்ஶ்ரீ சர்க்கு இரண்டு பெண்கள் மூத்தவளை ரியோட்டோ திருமணம் செய்துள்ளார் இரண்டாவது பெண்ணைத்தான் ஆராஷி காதலிப்பதாகவும் இருவருக்குள்ளும் ஏதோ மனஸ்தாபம் என்றும் அந்த பெண்ணின் புகைப்படம் கிடைக்கவில்லை அவளது ஜப்பான் மொபைல் நம்பர் மட்டுமே கிடைத்ததாக தகவல் கிடைத்தது.
இதுபோதுமே அவனை ஆட்டிப்படைக்க என்று நினைத்த மியோ உடனே மேதாவின் நம்பருக்கு ட்ரை செய்ய அது ரீச் ஆகவில்லை அவளது சோஸியல் மீடியா அக்கெளண்ட் பார்க்கலாம் என நினைத்தால் அதில் எந்த சோஸியல் மீடியாவிலும் அவள் இல்லை என்றே காட்டியது. அதனால் கடுப்பான மியோ உடனே அவளுக்கு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பினார்.
கண்கள் கலங்க தலையை குனிந்து அமர்ந்து இருந்தவளுக்கு தன் மொபைல் வைப்ரேட் ஆவதை உணர்ந்து எடுத்து பார்க்க அதில் வந்த தகவலை பார்த்து அதிர்ந்து நிமிர்ந்தாள்.
