ரி-ஷி-வா-6
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சரண்யாவோ மாடியிலிருந்து வேகமாக வந்து மகனுக்கு நெட்டி முறித்து போனை எடுத்து முந்தாநாள் சென்ற கவிதாவுக்கும் குமாருக்கும் கூற போனை எடுத்தாள்.
“கவிதா… நம்ம ரிஷிக்கு, பொண்ணு பார்க்க போனோமே, அவங்க அப்பா தாத்தா கூட நேர்ல வந்து நம்ம ரிஷியை பிடிச்சிருக்குனு சொன்னாங்களே. அவங்க சின்ன பொண்ணுக்கு பிடிச்சியிருக்காம். அடுத்தடுத்து கல்யாண வேலை பார்க்க ஆரம்பிக்கணும். தம்பிக்கு கல்யாண யோகம் வந்துடுச்சு டி. மாப்பிள்ளையிடம் சொல்லிடு” என்று கத்த, ரிஷியோ கனவு கலைந்து திரும்பி பார்த்தான்
அந்த பக்கம் கவிதாவோ, “இதை சொல்ல எதுக்கு இத்தனை நாளுமா? பெரிய பொண்ணு மாதிரி உருட்டி மிரட்டி சம்மதம் சொல்லியிருக்க போறாங்க. நல்லா விசாரி.” என்று கூற அது ரிஷியின் காதிற்கும் எட்டியது.
“அதெல்லாம் என் பையனை பிடிக்காம போகாது. பெரியவ லவ் பண்ணிட்டா. அதனால தான் தடங்கலாச்சு. சரி சரி வை. நான் சரிகாவிடம் சொல்லணும்” என்று கத்தரித்தார்.
“பேசறா பாரு பேச்சை அவளை பிடிச்சி ஒருத்தன் கட்டிக்கிட்டான். என் மகனுக்கு என்ன குறை” என்று சரிகாவுக்கு போன் செய்தார் சரண்யா.
அச்சு பிசகாமல் அப்படியே கூறி முடிக்க, சரிகாவோ “ம்மா… சூப்பர் மா. அண்ணாவை அந்த பொண்ணுக்கு பிடிக்கும் மா. என்ன அந்த பொண்ணு ரொம்ப மாடர்ன் நீ கொஞ்சம் ஜாக்கிரதை மா.” என்று பேசவும் “சரிடி அக்காவிடம் சரியாவே பேசலை வை” என்று கத்தரித்தார்.
“ஏன்க.. ஓரெட்டு போய் அந்த பெரியவரை பார்த்துட்டு வருவோம். அதே போல அந்த பிள்ளையும் பார்த்துடுவோம்.” என்று சரண்யா கூற கண்ணபிரான் மண்டையை மண்டையை ஆட்டினார்.
“ம்மா… நான் கூட வரணுமா? இல்லை.. உங்களுக்கு துணையா? அதுவும் இல்லாம அந்த தாத்தா என்னை ரொம்ப நல்லவன்னு சொன்னார்.” என்று ஷிவாலியை பார்க்க துடித்து கேட்டான்.
“கண்டிப்பா போகலாம் டா. ஆனா நாளைக்கு போகலாம். இன்னிக்கு தூங்கு” என்று சரண்யா கூற தலையாட்டி ஓகே என்று முடித்து கொண்டான்.
‘இப்பவே இப்படி பார்க்க ஆசைப்படறான். சரிகா சொன்ன மாதிரி நம்ம மேல இவனுக்கு அன்பு அக்கறை குறைந்திடுமா?’ என்று சோகமாக முனங்கினார்.
அடுத்த நாள் பத்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி ஆட்டோ பிடித்து ஷிவாலி வீடு வந்தனர்.
ராஜலட்சுமி வரவேற்க மனோகரி அமர கூறினார். மனோகரி வாசலில் தேடி உங்க பொண்ணுங்க வரலையா?” என்று கேட்டதும் கண்ணபிரானோ, “பெரியவளுக்கு தேனீல கட்டி கொடுத்திருக்கோமே, மூத்த மாப்பிள்ளை கிளம்பனதும் என்றதும் குழந்தையோட கிளம்பிட்டாங்க. சின்ன பொண்ணு அவ வீட்டுக்கு போயிட்டா.” என்றார்.
அதற்குள் சந்தியா தாத்தாவை அழைத்து வர, ரிஷி வேந்தன் எழுந்து நின்று வணக்கம் வைத்தான்.
“எப்படியிருக்கிங்க தாத்தா.” என்ற வினா, அவரின் இதயத்தை வருடியது.
“எனக்கென்னப்பா ஒரே நேரத்துல சந்தியா, ஷிவாலி இவங்க இரண்டு பேரோட கல்யாணத்தையும் பார்த்து கண்ணை மூடற வரை கட்ட சாயாது” என்று பேசியவர் ரிஷியின் கையை விடவில்லை.
சரண்யா கிச்சன் அறை என்று தலையசைத்து தேட, “அப்பா கூட ஷிவாலி வெளியே போயிருக்கா ஆன்ட்டி. வர்ற நேரம் தான்” என்று சந்தியா கூற தலையாட்டி ராஜலட்சுமியோடும் மனோகரி பாட்டியிடமும் பேசிட நேரம் போனது.
குடிக்க ஜூஸ் வரவும் மெதுவாய் ரிஷி குடித்திருக்க ஷிவாலியோ “எத்தனை முறை கண்ணாடில என்ன சைட் அடிச்ச, எங்கப்பா இருக்கற வரை கண்ணியமா லுக் விட்டு அவர் இந்த பக்கம் போனதும் என்னடா திருட்டு பார்வை. கண்ணை நோண்டிடுவேன். இந்தா சில்லரை. உன் சில்லரை மூஞ்சிக்கு” என்று முப்பது ரூபாயை பத்து ரூபாய் காயினாக கொடுத்து பையை எடுத்து இறங்கினாள்.
அவளின் வெண்கல குரல் ஹால் வரை வந்து சேர, வீட்டுக்குள் இருந்தவர்களை கண்டு ‘அச்சச்சோ.. இவங்களா’ என்று பையால் முகத்தை மறைக்க, “வணக்கம் எல்லாம் எதுக்குடா மா. இங்க வா உட்கார்” என்று சரண்யா ஷிவாலியை கூற, மனோகரியும் அதையே சாதகமாக்கி பேசினார்.
“அப்பா எங்க டி” என்று கேட்டதும், “அம்மா சர்க்கரை வாங்க சொன்னாங்களாம் மறந்துட்டேன்னு இறங்கி ஓடிட்டார்” என்று கூற, கண்ணபிரானோ பையன் காதில் “எப்படி டா இருக்கா. பட்டு புடவை நகை எதுவும் இல்லாம இயல்பா இருக்கா பொண்ணு. நல்லா பார்த்துக்கோ. இல்லை தனியா கூட்டிட்டு பேசறதாயிருந்தாலும் பேசிட்டு வா.” என்று பேசவும் “ப்பா.. சும்மா இருக்கிங்களா… நான் இனி தனியா பேச போக மாட்டேன்.” என்று அவனுமே மென்குரலில் முடித்து கொண்டான்.
சரண்யாவோ அருகே அமர்த்தி கொண்டரே தவிர பேச்சு தொடுக்கவில்லை. பெரியவள் போல ஏதேனும் வாய் விட்டு விடுவாளோ என்ற அச்சம் இருக்கலாம்.
ஷிவாலியோ தயங்கி எழ போராட, புட் கோர்ட்டிலிருந்து டோர் டெலிவெரி வர, “நான் தான் ஆர்டர் பண்ணினேன்.” என்று சாக்கு கிடைத்தவளாக எழுந்து சென்றாள்.
ஷவர்மா உணவு வீடு தேடி வர, ‘இது பேன்(ban) பண்ணினாங்களே கெட்டு போன உணவுனு இதையா இவ வாங்கி திங்கறா. ரிஷி என்னடா இது. நமக்கு சூட் ஆவாளா? இல்லை வேற வழியில்லை கல்யாணம்னு பேசியாச்சி, இதோ வீட்டுக்கு வந்து நலம் விசாரிக்க வந்தாச்சு. இதுக்கு மேல நிறுத்தினா நல்லாயிருக்காது’ என்று அமைதி காத்தான்.
“அது ஏதோ ஆபர் போல. அடிக்கடி ஆபர் வந்தா பாப்பா வாங்கும்.” என்று மனோகரி முறைக்க ஷிவாலியோ அந்த நேரம் வேறு வழியின்றி சாப்பிடாமல் ஹாட்பாக்ஸில் போட்டு மூடினாள்.
இந்தா இந்த பஜ்ஜியை எடுத்துட்டு போய் கொடு.” என்று ராஜலட்சுமி கூறவும், “ஏன் இந்த ஷவர்மாவும் தட்டுல அலங்கரிச்சி கொடேன்.” என்று கடுப்பில் மொழிந்தாள்.
“அந்த ரொட்டியை உன்ன மாதிரி நாய் தான் திண்ணும். பாவம் வந்தவங்களுக்கு கொடுத்துடாதே. நீயே தனியா மொக்கிக்கோ. இந்த பஜ்ஜி தேங்காய் சட்னியை கொடு” என்று கொடுக்க, மரியாதை நிமித்தமாக முதல் இரண்டு தட்டை கண்ணபிரானிடமும் சரண்யாவிடமும் முதலில் நீட்டினாள்.
மீண்டும் கிச்சன் வந்தவள் இரண்டு தட்டை எடுத்து வந்தாள்.
ரிஷியையும் தட்டையும் கண்டு,வேண்டா வெறுப்பாக கொடுக்க அவனோ சற்று தயங்கியே முகம் பார்க்காமல் வாங்க பேண்டில் சட்னி சிதறியது.
ஆனாலும் தட்டை வாங்கியவன் முறைக்க அவளோ உதாசினமாக பார்த்து வைத்தாள்.
ஷிவாலி மற்றும் ரிஷியினை பார்க்க தவிர்த்த பெற்றோரின் கண்ணில் படாமல் போக கர்ச்சீப் கொண்டு துடைத்து விட்டான்.
ஷிவாலிக்கு ஏமாற்றம் மிஞ்சியது. ‘சே இதுவொரு இஸ்ஸுவா சீரியஸா மாற்றிடுவான்னு பார்த்தா இடிச்சபுளி மாதிரி இருக்கான்.’ என்று வைதாள்.
“நைஸ் ஆன்ட்டி, பஜ்ஜி தேங்காய் சட்னி செம” என்று புகழ்ந்தவனை கண்டு ராஜலட்சுமி நாணினாள்.
நாண வேண்டியவளோ தலையில் அடிக்காத குறையாக சிடுசிடுவென நின்றாள்.
ராமமூர்த்தி வரவும் மீண்டும் பேச்சு ஹாஸ்பிடல் நோக்கி பயணித்தது.
“அப்பாவுக்கு இரண்டு கல்யாணம் ஒரே மேடையில நடந்துட்டா சந்தோஷமா இருக்கும்னு சொல்லறார்.” என்றதும் கண்ணபிரான் சரண்யா பார்வை பரிமாற்றம் செய்து “அதெப்படிங்க? வந்தவங்களை கவனிக்க முடியாதே. உபசரிப்புல ஏதாவது குறை வந்துட்டா கஷ்டமாயிடுமே.” என்று முன் வைத்தார் கண்ணபிரான்.
“ஹரிகரனிடம் கேட்டோம் லவ் மேரேஜ் என்றதால சொந்த பந்தம் பாதிப்பேர் தான் வருவாங்களாம். அதனால அவருக்கு பிரச்சனையில்லை.
உங்க வீட்டு சொந்தமும் எங்க பக்க சொந்தமும் தான் அதிகம். அதனால பெரிய மண்டபத்துல இரண்டு மேடை போட்டு அந்த பக்கம் ஒன்று இந்த பக்கம் ஒன்றுனு போட்டுடலாம்னு அப்பா சொல்லறார்.
நடுவுல ஏதோ மியூசிக் பிளே பண்ணி ஸ்மூத்தா இருக்கும்னு சொல்லறார்.
கல்யாணமும் ஒரே மேடையில முகூர்த்தம் மட்டும் மாறி மாறி வச்சி முடிக்கலாம்னு திட்டமிட்டு இருக்கோம். உங்களுக்கு சவுகரியமென்றால் பாருங்க. இல்லைனா வேற முறையை பண்ணிப்போம்.
என்ன ஹரிகரன் வீட்ல சொந்தம் குறைவா வரவும் மண்டப ஹால் சின்னதா பிடிக்கணும். பெரியவளுக்கு சின்னதாவும் சின்னவளுக்கு விமர்சனமா பண்ணற மாதிரி வெளித்தோற்றம் காட்டிடும்.” என்று கூறவும், கண்ணபிரான் யோசித்து நின்றார்.
“வீட்ல பேசிட்டு சொல்லறோம் அண்ணா. எதுக்கும் உடனே முடிவெடுக்க வேண்டாம் தானே.” என்றவர் ஷிவாலி சந்தியாவை காண, சந்தியாவோ கையை பிசைந்து நிற்க, ஷிவாலியோ பாதி கடித்த பஜ்ஜியை கையில் கீழே வைத்து நின்றிருந்தாள்.
“சரிங்க கிளம்பறோம். உடம்பை பார்த்துக்கோங்க.” என்று எழுந்து கிளம்ப, ரிஷியும் எழுந்தான்.
பாட்டி தாத்தா என்று மலர்ந்த முகமாய் விடைப்பெற, ஷிவாலியின் தந்தை தாயிடம் மரியாதையுமாகவும் கையெடுத்து கும்பிட, அடுத்து சந்தியாவோட சிநேக பார்வை விடுத்தவன் கடைசியில் ஷிவாலியிடம் நிலைப்பெற, அப்பொழுது தான் சரண்யாவுக்கு சிரித்து தலையாட்டியவளின் பார்வை ரிஷியின் பார்வையோடு உரசியது.
முகத்தால் நெற்றியில் துள்ளிய முடியை எடுத்து விட்டவளின் பார்வை அலட்சியத்தை காண்பித்தது.
அவனோ செல்லும் நேரம், உணவு மேஜையில் ஷவர்மாவுக்கு சாஸை ஊற்ற எடுத்து வைத்த பாட்டிலை தட்டி அதில் அழுத்த, சரியாய் ஷிவாலியின் உடையில் தெரித்தது.
முன்னே மற்றவர்கள் சென்றதால் ரிஷியின் செய்கை அறியாது போக, பதிலுக்கு பதில் கொடுத்த திருப்தியோடு திரும்பியும் பாராமல் ரிஷி திருப்தியாய் சென்றான்.
‘யூ டாமிட்.. இவனை போய் நல்லவன்னு கொண்டாடுறார் தாத்தா. இப்பவே சொல்லறேன்’ என்று முன் நகர, பிறகு சட்னி கொட்டியதை சொல்ல நேருமோ அப்பா திட்டுவாரே என்று புத்தி உரைக்க, பல்லை கடித்து பொறுத்தாள்.
ஷிவாலியை தவிர வாசலில் மொத்தமாய் வழியனுப்ப, கையசைத்து விடைப்பெற்றனர் ரிஷி குடும்பத்தினர். ரிஷி விடைப் பெறவில்லை ஷிவாலியிடம் நன்றாக மாட்டிக்கொண்டது அவன் அறியாததா?!.
-சட்னி சாஸ் அலம்பல்கள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Rishi sema. Tit for tat. Super very intresting sis.
Rishi nalla revenge koduthuta romba nallavan da nee
Super 👏