ரி-ஷி-வா-8
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
எட்டடுக்கு கட்டிடத்தை கண்டு, ‘ஓ மை காட் இதுல எந்த ப்ளோர் எதுல வேலை பார்க்கறான் என்று பார்க்க, அவனின் அலுவலக பெயரை தாங்கியது நான்காவது ப்ளோராக காட்டியது. வாட்ச்மேன் கார்டை எடுத்து காட்ட சொல்ல, நான் இங்க ஒர்க் பண்ணற ரிஷிவேந்தனை பார்க்க வந்திருக்கேன். அவரை கூப்பிட முடியுமா?” என்று கேட்டு நின்றாள்.
செக்கியூரிட்டி ஷிவாலியை மேலும் கீழுமாக பார்த்தான்.
“போன் பண்ணி அவரை வரசொல்லுங்க மா. இங்கிருந்து போனா சிசிடிவில நான் இல்லைனு பிளாக் மார்க் விழுந்துடும்” என்று கூறிடவும் ஷிவாலியோ ரிஷி வீடு என்று தந்தை போனிலிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். அது அவன் எண் என்று எண்ணி அழைக்க, கண்ணபிரானோ “வணக்கம் கண்ணபிரான் பேசறேன் நீங்க யாரு?” என்றதும் சட்டென கத்தரித்தாள்.
“போச்சு இது அவன் நம்பர் இல்லையா” என்று புலம்பியவள், “இங்க தான் ஒர்க் பண்ணறார். நம்பர் மிஸ் பண்ணிட்டேன். கொஞ்சம் கூப்பிடுங்களேன். ரிஷப்ஷன்ல ஆபிஸ் நம்பர் இருக்குமே” என்று கூறினாள்.
“உங்க நேரமோ என்னவோ லேண்ட்லைன் ஓயர்ல தான் அங்க வேலை நடக்குது. அதனால ஆபிஸ் முழுக்க லேண்ட்லைன் நாட் ஒர்க்கிங் மா” என்று எடுத்துரைத்தார்.
“அப்ப எப்படி கான்டெக் பண்ண? என்ன உள்ளயாவது விடுங்க” என்று கூறினாள்.
“யாராவது யார் பேரையாவது சொல்லிட்டு போயிடறாங்கனு யாரையும் உள்ள விடக்கூடாதுனு ரூல்ஸ் மா. இப்ப எல்லாம் டீக்கா டிரஸ் போட்டு வர்றவங்க தான் திருடுதுங்க.” என்றதும் ஷிவாலிக்கு கடுப்பானது.
இங்கிருந்து சென்றிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் வந்தது வந்து விட்டோம் என்று விழித்தாள். செக்கியூரிட்டியிடம் மீண்டும் மீண்டும் அதையே கூற, புதிதாக வந்தவரோ என்ன ஏதென கேட்டு முடிக்க, “இதோ இந்த பொண்ணு கூட அதே ஆபிஸ் தான் முடிஞ்சா சொல்லி விடுங்க. அந்த பையன் வந்தா பாருங்க” என்று தீர்வு கூறவும் அந்த பெண்ணிடம் ரிஷிவேந்தன் என்று கூற, “ஓகே ஓகே இன்பார்ம் பண்ணறேன்.” என்று ஷிவாலியை அளவிட்டபடி சென்றாள்.
நாற்காலியை ஆட்டிக்கொண்டே வேலை பார்த்து இருந்தவனின் அருகே வந்தாள் சுசி.
“ரிஷி… உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்துயிருக்கா. கீழே வெயிட் பண்ணறா” என்றதும் ரிஷியோ “யாரா இருக்கும்? ஏய் சுசி பார்க்க எப்படியிருக்கா?” என்று கத்தினான்.
“நல்லா அழகா” என்றதும் அருகேயிருந்த தோழர்கள் ஒரு மார்க்கமாக பார்வையிட, “பார்த்துட்டு வர்றேன் டா” என்று ஓடினான்.
அவன் லிப்டில் வந்து இறங்கி நடந்து செக்யூரிட்டி அருகே வர, “வாங்க தம்பி.. நீங்க தான் ரிஷிவேந்தனா… இந்த பொண்ணு ‘RV’ சொல்லியிருந்தா கண்டுபிடிச்சிருப்பேனே.” என்று ஷிவாலியை சுட்டி காட்டினார்.
இவ எதுக்கு வந்தா என்று ரிஷியும், ‘பரவாயில்லையே அன்னைக்கு விட பெட்டரா இருக்கான். டேக் போட்டு பழமாட்டும் இருப்பான்னு பார்த்தேன். சேம் அதே ஹன்ட்சம் லுக்ல இருக்கான்’ என்று ஷிவாலி எண்ணினாள்.
“கேன்டீன் பக்கம் போய் பேசுங்கப்பா RV தம்பி” என்று செக்கியூரிட்டி கூற தலையாட்டி அழைத்து சென்றான். கீழே கேன்டீனில் சில காலியிடங்கள் ஆங்காங்கே இருந்தன.
“யார் கூட வந்த? எதுக்கு வந்த? போன் பண்ணி கூப்பிட்டு இருக்கலாமே?” என்று கூட யாராவது வந்தார்களா என்று அலசினான் ரிஷி வேந்தன்.
“ஆக்சுவலி எனக்கு உன்னிடம் பேசணும். அப்பா போன்ல இருந்து நம்பர் எடுத்தேன். ஆனா அந்த நம்பருக்கு கால் பண்ணினா அது உங்கப்பா நம்பரா போச்சு.” என்று கூற ரிஷி மனமோ அச்சசோ இவளும் லவ் பண்ணறாளா. டேய் ரிஷி என்னடா இது. இந்த முறை விடாதே. லவ்வை கலைத்து விட்டாவது நீ இதே இடத்துல இரு’ என்று கூறியது.
“நீயும் லவ் பண்ணறியா.?” என்று கேட்டான்.
“சீ சீ. நான் யாரையும் லவ் பண்ணலை. பட் கல்யாணம் வேண்டாம் தயவு செய்து நீயே என்னை பிடிக்கலைனு வீட்ல சொல்லிடு” என்றாள் ஷிவாலி.
“என்ன விளையாடறிங்களா… அக்காவும் தங்கைக்கும் என் மூஞ்சிய பார்த்தா என்ன தோணுது ஆஹ்.
அவ ஏதோ லவ் பிராப்ளம்னு அழுதா, உதவினேன், முடிஞ்சுது. நீ என்ன காரணமேயில்லாம நிறுத்த சொல்லற? அப்படியே நிறுத்தணும்னா உங்க அப்பா தாத்தாவிடம் பேசு. அவங்க தானே எங்க வீட்டுக்கு வந்தாங்க” என்றான்.
“லுக் எங்கப்பாவிடம் பேச முடியாது. அவர் பழமைவாதி. தாத்தாவுக்கு என்னால தான் மைல்ட் அட்டாக் ஆனதோனு கஷ்டமாயிருக்கு. அப்படியிருக்க என்னால தாத்தாவிடம் பேச முடியாது.
வீட்ல உன்னை வேற எல்லாருக்கும் பிடிக்குது.” என்று நொந்தாள்.
“அதுக்கு.?” என்று நெற்றி சுருங்க கேட்டு விட்டான்.
“நீயா அவாய்ட் பண்ணினா தான் இதுக்கு சரிபட்டு வரும்.” என்று கூறவும், ரிஷிவேந்தன் அங்கும் இங்கும் கட்டையை தேடினான்.
அவன் என்ன தேடுகின்றானென அவள் அறியாது போக, அவன் பேசினான்.
“என் முகறையில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கா. ஒருத்தி மாத்தி ஒருத்தி வந்து ஏமாத்தலாம்னு.
இங்க பாரு… என்னால இந்த கல்யாணத்தை அவாய்ட் பண்ண முடியாது. உனக்கு பிடிக்கலைனா தாலி கட்டறதுக்கு முன்ன கூட பின் வாசல் வழியா ஓடிடு. அதை விட்டு என்னிடம் உதவி கேட்காதே.” என்றான் கோபமாக.
இம்முறை ஷிவாலியோ, “என்ன திமிரு… ஏய்.. நான் உன்னவிட ஒன்பது வயசு சின்ன பொண்ணு. ஏஜ் டிபரண்ட் பார்த்தா உனக்கே மனசாட்சி இல்லை.” என்றாள்.
ரிஷிக்கு இது இன்னொரு அதிர்ச்சி தான். சந்தியாவுக்கு 27 வயது அதனால் இவளுக்கு 26 இருக்கும் என்று அவனாகவே எண்ணினான். தற்போது முகம் பார்க்க இளமையாக இருக்கின்றாளென எண்ணி விட்டான்.
“ஒ..ஒன்பது வயசா… வித்தியாசம்?” என்று அவள் பேசியதை திரும்ப கேட்டான். அவனுக்கே சங்கடமாக போனது.
“பின்ன உனக்கு 31 எனக்கு 22 தெரியுமா?” என்றாள்.
ரிஷிவேந்தன் இடது கையை நெற்றியில் தேய்த்து யோசனைவயப்பட்டான். கேட்பதற்கு சற்று ஜீரணிக்க இயலவில்லை. தற்போது எல்லாம் ஆண் பெண் இருவருக்கும் சம வயது மாத இடைவெளி போன்று தானே மணக்கின்றனர்.
சொல்லப் போனால் ஆணை விட பெண் அதிக வயது இருந்தாலும் டிரெண்ட் தான். ஆனால் ஆண் அதிக வயதும் பெண் குறைந்த வயதும் அதுவும் இப்படி ஐந்து வயதிற்கு மேலாக ஒன்பது வருட இடைவெளி மிக மிக குறைவு.
“உங்கப்பா தாத்தாவுக்கு இது தெரியாதா?” என்று கேட்டிட, ஷிவாலி வாயில் சனி குடிப்புகுந்திட, “அவங்களுக்கு எல்லா மண்ணாங்கட்டியும் தெரியும். எங்க தாத்தா பாட்டி பதினாறு வயசு வித்தியாசம். எங்க அம்மா அப்பா பதினொன்று அதனால ஒன்பது வயசு வித்தியாசம் கண்டுக்க மாட்டறாங்க” என்று பக்கவாட்டில் திரும்பி கடுகடுத்தாள்.
அவளின் கண் காது மூக்கு வாயென வரிசையாய் பார்த்தவன், அவளருகே கண்ணாடி சுவர் இருக்க தன்னை கண்டான்.
அப்படியொன்றும் ஜோடிப் பொருத்தம் அச்சுருத்தவில்லை.
ரிஷியோ சீட்டில் நன்றாக சாய்ந்தமர்ந்து “சோ வாட் அவங்களே ஓகேனா பிறகென்ன. எனக்கும் ஓகே தான்” என்றான் மனசாட்சியை அடகு வைத்து.
“வாட்… யோவ்… எனக்கு ஓகே இல்லை.” என்று கத்தவும் அருகேயிருந்த ஆட்கள் திரும்பி பார்க்க, தலைகுனிந்தவாறு “எனக்கு கல்யாணம் பிடிக்கலை.” என்றாள்.
“நான் அழகாயிருக்கேனா?” என்று கேட்டான்.
“வாட்..?” என்று விழித்தாள்.
“சும்மா சொல்லு” என்று ஊக்குவித்தான்.
“நாட் பேட் சுமாரா இருக்க” என்று கூறவும், “தட்ஸ் இட். பொண்ணுங்க தான் அழகா இருப்பாங்க. பசங்க சுமாரா இருக்கறதே அபூர்வம். அப்படியிருக்க நான் சுமாரா இருக்கேனே சந்தோஷப்படு.
என்னால உனக்கு எந்த ஹெல்பும் பண்ண முடியாது. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கே நம்ம ஏஜ் டிபரெண்ட் பெரிய விஷயமில்லைனா எனக்கு என்ன கஷ்டம். உனக்கு அதை மீறி டிராப் பண்ணணும்னா நீ தான் எதாவது யோசிச்சு செய்யு.
அதுவும் இல்லாம தனியா வீட்ல யாருக்கும் தெரியாம பொண்ணு பார்த்தவனோட ஆபிஸ் தேடி வந்து மெச்சூர்டா பிடிக்கலைனு சொல்லுனு என்னிடமே மிரட்டுற. நீ சின்ன பொண்ணு லிஸ்டுல இல்லை. உங்க அக்கா வேண்டுமின்னா அழுது சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணினாங்க. ஆனா நீ ஆயா.. உன்னை கல்யாணம் பண்ணலாம்.” என்று கூறினான்.
அங்கிருந்த சாஸ் எடுத்து ரிஷி சட்டையில் அடித்து, “இடியட்… கல்யாணத்தை தடுக்க மாட்ட, இது நேத்து நீ என் மேல சாஸை அடிச்சதுக்கு பழிக்கு பழி” என்றாள்.
பின்னே இருக்காதா? திருமணத்தையும் நிறுத்த மாட்டேங்கின்றான். ஆயா அதுயிது என்று கோபமூட்டினால் அவள் எதிர் வினை இது தானே.
ரிஷிவேந்தன் கோபமானவன் டிசு பேப்பர் கொண்டு துடைத்து விட்டு, “ஆக.. என்னோட சாஸ் ஊற்றி விளையாட வந்திருக்க. பேஸ்.. பேஸ்…” என்று நக்கலாய் மொழிந்தவன் சட்டென, “அறிவில்லை டி உனக்கு. நான் ஆபிஸ்ல இருக்கேன். இப்படியே பார்த்தா என்ன நினைப்பாங்க? நீ தான் முதல்ல சட்னியை ஊத்தின” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் அளவிற்கு கத்தினான்.
பிரேக் டைம் என்பதால் பலரும் வந்து கூட்டம் பெருகியது.
“என்ன நினைப்பாங்க எனக்கென்ன… இங்க பாரு கடைசியா கேட்கறேன் கல்யாணத்தை ஸ்டாப் பண்ணு” என்று கெஞ்சுவதை கூட மிரட்டி நின்றாள்.
“இந்தளவு பண்ணிட்டியே இனி பாவம் பார்க்க மாட்டேன். ப்ரீ அட்வைஸ் தர்றேன். கல்யாணம் நிற்கணும்னா பேசாம நீ சூசைட் பண்ணிடு பெஸ்ட்.” என்று அவள் மேல் சாஸை ஊற்ற போனவன் அவளின் வெள்ளை உடை என்பதால் செய்யாமல் கையில் எடுத்தவையை சமோசாவை தொட்டு சாப்பிட்டு கீழே நிறுத்தி விட்டான்.
“பழிக்கு பழினு நானும் சாஸை ஊற்றிடுவேன். வேண்டாம் வெள்ளை டிரஸ் போட்டு பளிச்சினு இருக்க, பிரீயட்ஸ் பிராப்ளம்னு பார்க்கறவங்க தப்பா எடுத்துப்பாங்க.
போடி இங்கிருந்து.” என்று சமோசாவை திண்று முடித்தான்.
“உன்னை கட்டிக்கிறதுக்கு பதிலா சூசைட் கூட பெட்டர் தான் டா பனியாரம்” என்று திட்டி சென்றாள்.
“போடி பீட்சா மூஞ்சி. பார்க்க தான் அழகாயிருக்க, ஆனா பீட்சா எப்படி உடம்புக்கு கெடுதலோ அதே மாதிரி நீயும் என் லைப்புக்கு கெடுதல் தான்” என்று பில் பே செய்து விட்டு எழுந்தான்.
-சட்னி சாஸ் அலம்பல்கள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Ada paavigala
Super Rishi. Chutney and chass sema combination. Excellent. Very intresting sis.
chatni shaz rendu ipo adichikir mari oru naal over ah sernthu vazha poranga theriuthu
Super