Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-15

90’s பையன் 2k பொண்ணு-15

ரி-ஷி-வா-15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     ஹரிகரன் சந்தியா இருவரும் சந்தியா வீட்டிலேயே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்ய, ஹரிகரன் வீட்டில் அம்மா-அப்பா, தங்கை-தங்கை கணவர் குழந்தை மேலும் உறவினர்கள் என்று தங்க முடிவெடுத்தனர்.

    ஹரிகரன் சந்தியா பெண் வீட்டிலேயே இருப்பதால் ராமமூர்த்தியும் ராஜலட்சுமியும் அவர்களை உபசரிக்க, ஷிவாலியை ரிஷிவேந்தனின் வீட்டில் விட மனோகரி பாட்டியும் வேதாச்சலமும் கூட வந்தனர்.

    ரிஷி வீட்டிலேயே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு நடத்த முடிவெடுத்து இருக்க,  ஷிவாலியை விட்டு விட்டு செல்ல வந்த மூத்த தம்பதிகள் ரிஷி-ஷிவாலியை ஆசிர்வதித்து கிளம்பினார்கள்.

    மாலை வரை ‘ஜெ ஜெ’ என்ற உறவுகள் நட்புகள் கூட்டம் எல்லாம் அருகேயே வீடு இருந்தமையால் சொல்லிக் கொண்டு கிளம்பியிருந்தார்கள்.

     ரிஷியோ தன் அறைக்கு பல தடவை “டயர்டா இருந்தா என் ரூம்ல ரெஸ்ட் எடு. இங்க எதுக்கு உட்கார்ந்திருக்க?” என்று இதோடு ஐந்தாறு முறை கேட்டுவிட்டான்.

   கீழே ரிஷியின் அம்மா அப்பா அறையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு “எனக்கு அங்க வர பிடிக்கலை.” என்று தலையணையை மடியில் வைத்து பதில் தந்தாள்.

     “என்ன எங்க வீட்டுக்கு வந்து என்னிடமே திமிரா பேசறியா?” என்று கேட்டு முறைத்து நிற்க, சரண்யா வரவும் தலை கோதி நின்றான்.

      சரண்யா ஆங்காங்கே இருந்த பட்டு புடவையை மடித்து வைக்க, அங்கேயே இருக்க முடியாது தவித்து வெளியேறினான்.

    “தூக்கம் வந்தா மேல போய் படுத்துக்கோ மா. நான் அவனிடம் பக்குவமா சொல்லிக்கறேன்.” என்று சரண்யா கூறவும் சரிகா ஷிவாலியை மேலே மாடியில் அழைத்து செல்ல, பலவித கனவுக்கோட்டையை கட்டத் துவங்கினான்.

    எப்படியும் சண்டை உண்டு அதே நேரம் நிறைய பேசி புரிய வைக்க வேண்டும் என்று தன்னை தயார்ப்படுத்தி கொண்டான்.

      கவிதா குமார் மற்றும் வருண் வாசு, கண்ணபிரான் சரண்யா என்று கீழே அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர்.

    மேலே ஷிவாலியை விட்டு விட்டு சரிகா இரண்டு நொடியில் வந்து விட, என்ன சரிகா அலங்காரம் பண்ணலையா. ஒரு வேளை அவளே மேக்கப் பண்ணறேன்னு அனுப்பிட்டாளோ, இந்த ஷிவாலி செய்தாலும் செய்வா. போதாதுக்கு வேண்டுமின்னே என்னை கடுப்படிக்க உட்கார்ந்திருப்ப,’ என்றவன் நாம எப்ப மாடிக்கு போக, என்று தவிப்பாய் கடிகாரத்தை பார்த்தான்.

       ஹரிஷும் இன்று ரிஷிக்கு திருமணம் நடந்தமையால் அங்கு தங்கினான். இல்லையென்றால் சரிகாவை அழைத்து சென்றிருப்பான்.

       மணி எட்டாகவும் ரிஷியை அழைத்த சரண்யா, “டேய் குழந்தைங்க எல்லாம் இன்னிக்கு இங்க தூங்குவாங்க. மாடில நீ ஷிவாலி மட்டும் தான். அந்தப் பிள்ளைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. பீரியட்ஸ் பிராப்ளம். ஒரு மூனு நாளைக்கு அவ ரெஸ்ட் எடுத்தா எடுக்கட்டும். நீ..நீ.. தொந்தரவு பண்ணாதே.” என்று தயக்கமாய் கூறினார்.

     இங்கு வந்ததும் தன் வீட்டு ஆட்கள் இல்லை என்றதால் சரண்யாவிடம் கூறிவிட்டு சங்கடமாய் நின்றாள் ஷிவாலி.
  
    “கல்யாணம் பத்தி என்னிடம் கேட்கலை. அதனால இந்த நாள் இப்படி ஆகும்னு தெரியாது. இப்ப நான் என்ன பண்ண? பூஜை ரூமுக்கு போக கூடாது தான் ஆனா வந்ததும் விளக்கேற்ற கூப்பிட்டதும் யாரிடமும் சொல்ல முடியலை அதனால விளக்கு ஏற்றிட்டேன்?” என்று கையை பிசைந்து நின்றாள்.

     “அதனால என்ன டா. சரி விடு யாரிடமும் சொல்ல வேண்டாம். நீ ரெஸ்ட் எடு” என்று சரண்யா அவரின் அறையில் படுக்க கூறியதாக கூறினார்.
  
   சங்கடமாய் நின்றவனை, “நீ போய் தூங்கு. இங்கயே இருந்து உங்கக்கா மாமா டெகரேட் பண்ணறேன்னு மாடிக்கு வந்துட போறாங்க. போ” என்று விரட்டவும் ரிஷிக்கோ “சரிம்மா” என்று பொறுமையாய் ஏறினான்.

     ‘பாதகி வேண்டுமின்னே அம்மாவிடம் பீரியட்ஸ்னு சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கறா.’ என்று வேகமாய் படிகளில் கோபமாய் வந்தான்.

   அவனின் அறையில் கவிதா செய்து வைத்த அலங்காரம் அழகாய் காட்சியளிக்க, அங்கே ஷிவாலி இல்லை. எழுந்து நாலாப்பக்கம் பார்க்க பக்கத்து அறைக்கதவு திறந்தான்.

    அங்கே போனை நோண்டிக் கொண்டு காலாட்டி படுத்திருந்தவளை கண்டு, “பொடிடப்பி அம்மாவிடம் பீரியட்ஸ்னு பொய் சொல்லிட்டு இங்க வந்து ஹாயா மொபைல்ல கேம் விளையாடறியா? என்று போனை பிடுங்கி தூக்கியெறிந்தான்.

     “ஏய்… போனை தூங்கி போடுற வேலை வச்சிக்காதே. என் போனை நான் மட்டும் தான் அப்படி தூக்கியெறிவேன். மற்றவங்க தொட்டாலே பிடிக்காது.” என்று போனை எடுத்து பாதுகாப்பாய் கையில் எடுத்து கொண்டாள்.

     “அம்மாவிடம் ஏன் டி பொய் சொன்ன? நான் என்ன மிருகமா. அப்படியே பாய்ந்திட, டைம் கொடுக்க மாட்டேன். காஞ்ச மாடு மாதிரி விழுவேன்னு நினைப்போ” என்று கத்தினான்.

    “ஏய்… நான் எதுக்கு பொய் சொல்லணும். உன்னை எட்டி நிறுத்த பொய் எல்லாம் தேவையில்லை.

    ஆமா என்ன டைம் கொடுப்ப.. டேய் நீ யாரு டைம் கொடுக்கனு கேட்கறேன்?” என்று பேசவும், “நீ டிவோர்ஸ் கேட்டா நான் டைம் கொடுக்கணுமே. உனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலைனு நல்லாவே புரியுது.

    எங்கம்மா அப்பாவுக்கு அத்தை மாமா என்ற அடை மொழி இல்லை அக்கா நாத்தனாரே என்ற மரியாதை இல்லை தங்கச்சியிடம் தலையாட்டி பேசற, என்னிடம் பார்த்த நாள் முதல் பிடிக்காம தான் பேசற, இப்படியே போனா… என்னோட வீட்ல நிம்மதி போயிடும்.

    என் வீட்ல நிம்மதி இழந்து போக விடமாட்டேன். அதுவும் இந்த வீட்டு மருமகளால் என் வீடு சிதைய கூடாது. அதை விட முக்கியமா அவங்க வாயால உன்னை குறை சொல்லிடக்கூடாது.” என்று வருத்தமாய் கூறினான்.

    “ஸப்பா.. பக்கம் பக்கமா டயலாக் விடறியே. இப்ப என்னால பேச முடியாது. குட் நைட்” என்று படுத்து கொண்டாள்.

    சற்று நேரம் அங்கேயே இருந்திட, ஷிவாலி அங்கொருவன் இருப்பதை மறந்து படுத்திருக்க, கீழே அக்கா தங்கை என்று இருக்க அமைதியாக அடுத்த அறைக்கு சென்று படுத்தான்.

   அலங்கரித்த மெத்தையை கண்டு கோபமும் ஆற்றாமையும் கலந்து பார்த்தான்.

    அடுத்த நாள் விடியும் நேரம் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. மெதுவாய் எழுந்து கண்ணை கசக்கி எழுந்து பாத்ரூம் பக்கம் கை வைக்க போக, கதவை திறந்து “ஏய் என்ன?” என்று ஷிவாலி சினிஸ்டார் போன்று டவலை தலையில் கட்டியிருந்தாள்.

   “நீயா.. சட்டுனு தண்ணி சத்தம் என்றதும் எழுந்தேன்” என்று நுழைய நைட்டி அணிந்தவள் பின்னாலே நகர்ந்து வெளியேறியிருந்தாள்.

   ஹால்ல ஒரு பாத்ரும் இருந்ததே அதை யூஸ் பண்ணலை?” என்று கேட்டு விட்டான்.

    “எனக்கு வெஸ்டர்ன் டாய்லேட் தான் பெட்டர்.” என்றதும் வேறெதும் கேட்கவில்லை.

       பல் விளக்கி வாய் கொப்பளித்து கண்ணாடியில் முகம் காண அதிலோ ஸ்டிக்கர் பிந்தி இருந்தது. அதை தொட்டு பார்த்தவன் மென் முறுவல் உதிர்த்து

     ஷாம்புவாசமும் கூடவே அவன் சோப்பை விடுத்து வேறொரு சோப்பு மனமும் வர, பேக்கேட் பிரித்து பார்க்க ஹிமாலையா என்றிருக்க, சோப்பு கவரை எடுத்து வெளியே வந்தான்.

    “இங்க டஸ்பின் இல்லையா?” என்று கேட்டு அவனின் அறையில் கத்தவும், கிச்சன் என்று ஒரு அறை இருக்கே அங்க போகணும். போனா அங்க இருக்கும்” என்று சோப்பு கவரை எடுத்து வந்து சிங்க் இருக்கும் இடத்தில் சுட்டிகாட்டி சோப் கவரை போட்டான்.

      “ஓ..ஓகே.” என்றவள் சென்றுவிட, ரிஷியோ டவலெடுத்து குளிக்க செல்ல கிச்சன் பக்கம் மீண்டும் செல்பவளை கண்டு பின்னாலே வந்தான்.
  
      “இங்க சமைக்க எந்த திங்க்ஸும் இருக்காது. காபி வேண்டுமின்னா கீழே தான் போகணும்” என்று பேச குப்பையில் ஒரு பேப்பரை ரோல் செய்து மடித்து போடவும் ஷிவாலி திடுக்கென அதிர்ந்தாள்.

       “பிசாசே எதுக்கு இப்படி பயமுறுத்தற” என்று அடி வயிற்றை தொடவும், ரிஷியோ ‘அப்ப பொய் சொல்லலையா இவ?’ என்று தயக்கத்தோடு அறைக்குள் புகுந்திருந்தான்.

     ரிஷி குளித்து ஷார்ட்ஸ் பணியன் என்று உடையணிந்து வர, அதற்குமுன் சேலையை கட்டி நின்றிருந்தாள். உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு விட்டு அதை சரி செய்திட, “உங்க அக்கா தங்கை எப்ப போவாங்க?” என்று கேட்டாள்.

    “ஏன்?” என்று கேட்டு முறைத்தான். வந்த அடுத்த நாளே எப்ப போவாங்கனு கேட்டால் கோபம் வராதா?

      “எனக்கு இந்த சேலை எல்லாம் பிடிக்காது. உங்க பெரியக்கா சேலை கட்ட மாட்டாளா என்ன போடுவா அதுயிதுனு கேட்டு இம்சை பண்ணறாங்க. அவங்க கிளம்புற வரை சேலை கட்டுவேன். ரொம்ப நாள் இருப்பாங்கனா என்னால முடியாது. நான் எப்பவும் போல டிரஸ் கோட் போட ஆரம்பிச்சிடுவேன்” என்றதும் ரிஷிக்கோ ‘அக்கா.. உன் மரியாதை நீயா கெடுத்துக்காதே. ஆனா ஆல்ரெடி கெடுத்துக்கிட்ட போலயே’ என்று மூளைக்குள் வண்டு ஓடியது.

       எனக்கு காபி டீ பிடிக்காது அங்க வந்து காபி வாங்கலை டீ குடிக்கலைனு திங்க் பண்ணாதே. நான் சீன் போடலை. எனக்கு பிடிக்காது குடிக்க மாட்டேன் பிறகு திமிரு அதுயிதுனு பேசாதே” என்று தலையில் க்ளிப் போட்டு கீழே இறங்கினாள்.

    ரிஷியோ கனவா நனவா என்று வியந்தபடி கீழே வர, வருண் வாசு ஓடிவந்து ரிஷியின் வலது கை இடது கை என்று பிடிக்க அவர்களை தூக்கி சுற்ற ஆரம்பித்தான்.

      “டேய்.. கீழே இறக்கு. இந்தா காபி” என்று சரண்யா கொடுத்து விட்டு, “நீ காபி டீ குடிக்க மாட்டனு மனோகரி பாட்டி சொன்னாங்க. இந்த மாதிரி நேரத்துல வயிறு காலியா இருக்க கூடாது. இது மால்டோவா குடி கொஞ்சம் ஸ்டென்த் கிடைக்கும்” என்று ஷிவாலி கையில் சரண்யா திணித்து கிச்சனில் பொங்கல் தாலிக்க முந்திரி எடுத்து வறுத்தாள்.

     “முந்திரி சாப்பிடறியா?” என்று நீட்டவும், “என்னை நம்பி கேட்காதிங்க. முந்திரி பாதம் திராட்சை, வேர்கடலைனு திண்ணுட்டே இருப்பேன்” என்று பருக ரிஷியோ காபி குடிக்க தான் அம்மா வற்புறுத்த ஷிவாலி ஏதேனும் முகத்திலடித்தார் போன்று பேசிடுவாளோ என்று கிச்சன் பக்கமாகவே வந்தான்.

     “டேய்… என்ன பூனையாட்டம் கிச்சனை  சுத்துற, அதெல்லாம் உன் பொண்டாட்டியை வேலை வாங்கலை” என்று கவிதா ரிஷியை இழுக்க, ஹாலில் வந்து அமர்நதான்.

    கண்ணபிரான் டேபிள் மேட்டில் உணவை வைத்து சாப்பிட கீழே அமராது வாசு வருணும் சோபாவில் அமர்ந்த மடியில் தட்டை வைத்து சாப்பிட்டனர்.

     “இந்நேரம் மறுவீட்டுக்கு போய் விருந்து சாப்பிட வேண்டியது. நீ என்னனா இங்க இருக்கற. முதல் மாப்பிள்ளை அங்க தடபுடலா சாப்பிட்டுட்டு இருப்பார்.” என்று கவிதா பேசவும் ஷிவாலி காது வரை விழுந்தது.

    காது கேளாதவள் போல ரிஷி அருகே வந்து “உன் அக்கா அதிகம் பேசறா… பிறகு வாங்கிக் கட்டிடுவா.” என்று கிசுகிசுக்க, குமாரும் ஹரிஷூம் கண்ணபிரானிடம் பேசிக் கொண்டிருக்க மனோகரி வேதாச்சலம் வந்து சேர்ந்தனர்.

     “வயசுக்கு மரியாதை கொடு ஷிவாலி” என்று ரிஷி அவளை போலவே சிரித்து பதில் தந்தான்.

    காலை உணவு அருகருகே கீழே அமர்ந்து வாழையிலை போட்டு சாப்பிட்டு முடிக்க, பேச ஆரம்பித்தனர். வேதாச்சலமோ ஒரு டேபிள் மேட்டில் தட்டை வைத்து சாப்பிட வைத்தார்கள் வயதின் ஏற்றத்தில் தற்போது உடல்நிலை மோசமான காரணத்தாலும் இவ்வாறு சாப்பிட செய்தனர்

    “மறுவீட்டுக்கு போக முடியலை. அதனால வர்ற புதன் கறிவிருந்து வைக்கறோம். எதுக்கோ மாப்பிள்ளையிடம் சொல்லிடலாம்னு” என்று பாத்திர பண்டம் என்று ரகவாரியாக வந்திறங்கியது.

    சரிகாவும் கவிதாவும் எட்டி நின்று பார்த்து கொண்டிருக்க, சரண்யாவோ எதுனாலும் மேல தான் வாழப்போறாங்க. அங்கேயே வச்சிடுங்க. எடுத்து வைக்கவும் வசதியா போயிடும்” என்றதும் “மா.. என்ன பொருள் ஏதுனு பார்க்க வேண்டாமா” என்று காதில் முனங்க சரண்யா முறைத்த பார்வையில் கப்சிப்பென்று உள்ளே சென்றார்கள்.

      கட்டில், சோபா, பிரஸிங் டேபிள் பீரோ வாஷிங் மிஷின் என்று வந்திறங்க மாடிக்கு சென்றது. கிச்சன் பொருளில் சிலதும் மாடியிலேயே வைத்திட்டனர்.

   டைனிங் டேபிளை மேலே ஏற்றப் போக, “அது மேலே வேண்டாம். இங்க ஹால்ல ஸ்பேஸ் இருக்கே இங்க இருக்கட்டும். காலையில மாமா குட்டிஸ் தாத்தா எல்லாருமே சோபாவுல சாப்பிட்டாங்க. இது இங்க இருந்தா ஐ ஹோப் எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.” என்று ஷிவாலி கூறவும் வேதாச்சலம் பேத்தியை மெச்சுதலாக பார்த்து வைத்தார்.

    மனோகரியும் “ஷிவாலி சொல்லறது சரியா இருக்கே. இங்கயே இருக்கட்டுமே. உங்களுக்கு இடைஞ்சல் இல்லையே” என்றதும் சரி இருக்கட்டும் இந்த வீட்டுக்கு வர்றப்ப ரிஷி தான் பழைய டேபிள் மேட் கால் கொஞ்சம் சாயுது. அதனால வேண்டாம்னு பேக்கேஜ் பண்ணினவங்களையே எடுத்துக்க சொல்லிட்டான். இங்க வந்தப் பிறகு புதுசு வாங்கலாம்னு இருந்தான்.” என்று கூறி சரண்யா அந்த இடத்தை காலி செய்ய உணவு மேஜை அங்கே வீற்றிருந்தது.

   ரிஷிவேந்தனோ கையை கட்டி ஷிவாலியையே பார்த்திருந்தான். ஒரு நேரம் மரியாதையை மருந்துக்கும் தரமாட்டேன் என்கின்றாள். பிறகெப்படி இதெல்லாம்? என்ற வியப்பு அவனுள் தோன்றாமல் இல்லை.

-சட்னி சாஸ் அலைப்பறைகள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!