Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-105

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-105

அத்தியாயம் – 105

அவனது பேச்சில் அரங்கம் மொத்தமும் அமைதியாக இருக்க ஆராஷி பாடலை துவங்கினான்.

‘என்னை விட்டு செல்லாதே என் அன்பே..
வேண்டும் உன் காதல் ஒன்றே.
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை.
இன்னும் ஏன் இந்த ஊடல்.

என் உயிர்காதலை உந்தன் காதோரம்
ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்.
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ?
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ?
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி?
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி.
என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே என் கண்மணி.
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி’

என்று அவன் பாட பாட அவளுக்காக தமிழை கற்று பாடலின் அர்த்தம் உணர்ந்து அவனது பிரிவின் விலியின் உணர்வை காதலின் வலியை ஒட்டுமொத்தமாக இந்த பாடலில் தன் உயிர் உருகும் குரலில் அவன் பாட அவளுக்கு அவளது உயிரே கையில் இல்லை அங்கிருந்த ஒரு காவலர் அவளது கழுத்தில் இரத்தம் கசிவதை கண்டு மேடம் என அழைப்பதற்குள் அவளோ மேடையை நோக்கி ஓட ஆரம்பித்தாள் அழுதபடி.
அந்த காவலர் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸ்ஸை உடனே வரச்சொல்லிவிட்டு அவளை நோக்கி ஓடினார்.

அழுதபடியே அரங்கினுள் அவள் ஓட ஃபோக்கஸ் லைட் அவளையும் ஆராஷியையும் மட்டும் ஃபோக்கஸ் செய்ய வழியும் கண்ணீரை துடைக்ககூட முடியாது நின்றாள் மேதா
மேடையிலிருந்து அவள் கண்டிப்பாக வருவாள் என்று காத்திருந்த ஆராஷியும் கலங்கிய தன் கண்களையும் அதிலிருந்து வழியும் கண்ணீரையும் துடைக்க கூட தோன்றாமல் அவளையே பார்த்தபடி நின்றான்.

அவனுக்கு பின் நின்றிருந்த ரியோட்டோ ஆரவாரம் செய்ய போகின்றனர் என ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டி சைகை செய்ய அது பெரிய திரையில் தோன்றி காட்ட அனைவரும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.
நிதின் மற்றும் குடும்பத்தாரும் அமைதியாக
பார்த்தபடி தான் நின்றிருந்தனர்.

அவனது குரலை கேட்டு அழுதபடி அங்கு ஓடி வந்த மேதா அவன் பாடலை நிறுத்தி கலங்கிய விழிகளோடு தன்னை பார்க்க அப்போது தான் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வே வந்தது அவளுக்கு உடனே அங்கிருந்து ஓட திரும்பியவளின் அருகில் வந்தார் அந்த காவலாளி.
அவள் திரும்பும்நேரம்
மீண்டும் அவனது உயிர் உருகும்
“அஷ்ஷூ” என்ற அழைப்பில் திரும்பியவள் அப்படியே ஆணி அடித்தார்போல் நின்றாள்.
“எனக்கு மன்னிப்பே கிடைக்காத அஷ்ஷூ? மன்னிக்கவே மாட்டியா என்னை? நான் உனக்கு செஞ்ச பாவத்தை போக்க வழியே இல்லையா? என் காதல் எனக்கு கிடைக்கவே கிடைக்காதா?” என்று உயிர் போகும் வேதனைக்குரலில் அவன் கேட்க அழுதபடி நின்றவள் திரும்ப

“இன்னும் எங்கேயும் ஓடி ஒளியாதே அஷ்ஷூ சொல்லு அஷ்ஷூ இந்த பாவப்பட்டவன் முகத்துல கூட முழிக்கக்கூடாதுனு தான் என்னை விட்டு ஓடி ஒளிஞ்சு இருக்கியா மேதா? என் காதல் அவ்ளோ வலியா இருக்கா?” என்று அவன் கேட்க அழுதபடி இல்லை என்பது போல அவள் தலையை இடம்வலம் ஆட்ட மேலும் கொஞ்சம் இரத்தம் கசிந்தது அவளது கழுத்திலிருந்து.
அந்த வலியை கூட உணராத படி தன் உயிரானவனின் வலி நிறைந்த குரல் அவளை ஆட்டி படைத்துக்கொண்டு இருந்தது.
‘அவளால் அவனுக்கு இந்த வலி வந்துவிடக்கூடாதுனு தானே அவனை பிரிந்து சென்றாள் ஆனால் இப்போது அந்த வலியோடு அவன் அவள்முன் நிற்கிறானே இந்த வலியை எப்படி நீக்குவாள்.
அவனை நிழலாய் தாங்கி அவனது காலால் அவனது நிழலை மிதித்தாலும் வலிக்காதது அதேபோல் அவன் அவளை எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் அதையெல்லாம் தாங்கி அவனை நிழல்போல பாதுகாத்தவள் இப்போது அவனின் உயிர் உருகும் வலியை உணர்ந்தும் அதனை நீக்கும் வழி தெரியாமல் தவித்து நின்றாள்.
தான் அவனோடு இருந்தால் அவனுக்கு காலம் முழுவதும் வலிதானே அதற்கு இப்போது கொஞ்சம் வலியை அனுபவித்தால் அவன் காலப்போக்கில் அவளை மறந்து போவானே’
என்று எண்ணி திரும்பி போக பார்த்தவளை மீண்டும் அவன் குரல் நிறுத்தியது.

மேடையை விட்டு கீழே இறங்கியவன் அவளை நோக்கி நடந்தபடி பேசினான்.

“அன்னைல இருந்து இன்னைக்கு வரை அம்மாக்கு அடுத்தபடியா என் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்பட்ட ஆள் நீதான் மேதா.
அம்மா போனதுக்கு அப்புறம் நான் ஏன் உயிர் வாழணும்னு நினைக்கிற அளவுக்கு என்னை மன உலைச்சலுக்கு ஆளாக்கினாங்க மியோ ஆனா அவங்ககிட்ட இருந்து என்னை மீட்டு சாகப்போனவனுக்கு உயிரை கொடுத்து தன்னம்பிக்கையும் கொடுத்தவ நீதான் மேதா.
அன்னைல இருந்து உனக்காக மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கேன்.
என் நிழலா என் கூடவே இருந்து என்னால உணரமுடியாத இடத்தில இருந்து என்னை பாதுகாத்தவ நீ.
நீ இல்லனா நான் உன்னை மறந்துட்டு வேற வாழ்க்கையை தேடிப்பேன்னு தப்பு கணக்கு போட்டுட்டியா அஷ்ஷூ?
எனக்கு எப்பவும் நீதான் நீ மட்டும் தான் என் உயிராவும் என் நிழலாவும் வேணும் அஷ்ஷூ.
இல்ல நான் உன்ன விட்டு போயே தீருவேன்னா
இது நீ காப்பாத்தின உயிர் நீ கொடுத்த பேர் புகழ்.
மேதா உன்னை விட்டு பிரியனும்னா என் உயிரும் பிரியனும் அப்போதான் உன்னைவிட்டு நான் பிரிவேன்
இது நீ கொடுத்த உயிர் அஷ்ஷூ நீயே எடுத்திடு உன்னை விட்டு பிரியனும்னா” என்று கூறியபடி அவளது முன் வந்து நின்றான்.
அவனது பேச்சில் அதிர்ந்தபடி அவனது வாயை பொத்தியவள்
அழுதபடி பேசினாள்

“என் உயிரும் நீங்கதான் உங்களவிட்டு நான் மட்டும் உயிர் இல்லாத ஜடம்தான் ஆனா என்னால” என்று சொல்லி அவள் பேசத்தயங்க
அவளது உதட்டின்மேல் ஒரு விரலை வைத்தவன்

“எனக்கு உன்னை உன் காதலை தவிர வேற எதுவுமே வேணாம் அஷ்ஷூ” என்றபடி அவனுக்கு எல்லாம் தெரியும் என்பது போல அவன் கண் சிமிட்ட
அதிர்ந்து அவனை பார்த்தாள் மேதஷ்வினி.
அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தான் ஹர்ஷத்.
அவன் ஓடிவந்து அங்கு நிற்கவும் இந்த வார்த்தைகளை ஆராஷி சொல்லவும் சரியாக இருக்க ஹர்ஷத்தை பார்த்த மேதா கோவமாய் பார்க்க

“அவர் உன்மேல ப்ராமிஸ் வாங்கி கேட்டுட்டாரு பேபி” என்று தலையை குனிந்து கொண்டு அவன் சொல்ல எல்லாம் தன் கையை மீறி சென்றதை உணர்ந்தவள் இனி எதையும் பேசி பயனில்லை என்று மீண்டும் ஆராஷி பக்கம் திரும்ப தன் கையில் ப்ளவர் பொக்ஃகேவுடன் மண்டியிட்டு அமர்ந்தவன்

“ஆயுசுக்கும் என் நிழலாய் நீ வேண்டும் வருவியா?” என்று கேட்க அவளுக்கு கண்கள் மேலும் கலங்கி சிவந்து கண்ணீர் திரையை மறைக்க முகத்தை மூடி அழுதவள் லேசாக மயக்கம் வர தடுமாறினாள்
அப்போது தான் மண்டியிட்ட படி அவளை கவனித்தான் ஆராஷி.
அவளது கழுத்தில் இரத்தம் கசிவதை பார்த்த ஆராஷி

“அஷ்ஷூ இரத்தம். ஹர்ஷத் கால் தி ஆம்பலன்ஸ்” என்றபடி அவளை தாங்கினான். கூடவே ஹர்ஷத்தும் அவளை தாங்கினான்.
அவன் இரத்தம் என்றதும் பயத்தில் உறைந்தவன் ஆராஷி தன்னிடம் கால் ஆம்பலன்ஸ் என்று கூற யாருக்கு என்று பார்க்கும் போதே மேதஷ்வினி மயங்கி விழப்போக அவனும் தன் தோழியை தாங்கினான்.
அதற்குள் அவளது குடும்பத்தினரும் ரியோட்டோவும் ஓடிவர அங்கு அவர்கள் அனைவரையும் அரணாய் காத்தனர் பாடிகார்ட்ஸ்
நிதினோ “மோளே மேதா மோளே என்ன ஆச்சு உனக்கு?” என்று பதறி கேட்க.

தூரிதமாக செயல்பட்ட ஹர்ஷத் உடனே ஹர்ஷத் வெளியே திரும்ப அந்த காவலாளி
“சர் அவங்களுக்கு ப்ளீடிங்னு சொல்லத்தான் வந்தேன் அதுக்குள்ள அவங்க” என்று கூற

“நான் பார்த்துக்கிறேன் சர் நீங்க ஃபாம் கண்டுபிடிச்சு ரிலீஸ் பண்ணி இவங்களலாம் ஃசேப் பண்ணுங்க இல்லனா க்ரவுட் சமாளிக்கறது கஷ்டம்” என்று இரகசியமாக சொல்லிவிட்டு வெளியே ஓடினான்.

“அஷ்ஷூ அஷ்ஷூ என்னை பாரு அஷ்ஷூ என்னைவிட்டு போய்டாதேடி” என்று புலம்பியபடி அவளை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்த ஆம்புலன்ஸ்ஸில் இருந்து இறங்கி வந்த மருத்துவர்
அவளை சோதனை செய்துவிட்டு
“நல்ல வேலை சர் காயம் பெருசு இல்ல ஆனா இரத்தம் அதிகம் போய் இருக்கு போல அதான் மயங்கிட்டாங்க கவலைபடாதீங்க இவங்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல” என்றபின்தான் அவனுக்கும் அனைவருக்கும் உயிரே வந்தது அவளை ஆம்புலன்ஸ்லேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்து இரத்தம் ஏற்றப்பட்டது.
அனைவரும் வெளியே இருக்க அவன் மட்டும் அவளை விட்டு நகரவே இல்லை.
எங்கே கையை விட்டால் மீண்டும் காணாமல் போய் விடுவாளோ என்று பயத்தில் உன்னை நீங்க மாட்டேன் என அவளது கையை பிடித்தபடி அவளது அருகிலேயே நின்றான்.

“அவங்களுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்துட்டோம் சர் அவங்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்ல லேசான காயம் தான் கழுத்தை கொஞ்ச நாளைக்து அசைக்காமல் இருந்தால் போதும் சரியாகிடும் சரியா இரத்தம் கசியுற இடம்ல கட் ஆகி இருக்கு அதனாலதான் அவங்களுக்கு ப்ளட் லாஸ் ஆகி இருக்கு வேற ஒன்னும் இல்ல இன்னைக்கு ஒருநாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் அவங்களால சாப்பிட முடியாதானு செக் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பன்றேன் கவலைபடாதீங்க நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சர்”
என்று டாக்டர் கூற
தன்னுயிர் தன்னைவிட்டு செல்லவில்லை அதனை செல்ல தான் அனுமதிக்கவும் இல்லை என்பதை உணர்ந்தவன் மருத்துவருக்கு நன்றியை கூறிவிட்டு அவளை இனி தன் கண்ணைவிட்டு மறைய விடமாட்டேன் என்றவன் அப்போதும் அவளது கையை பற்றியே அமர்ந்திருந்தான்.

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-105”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!