Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-32

90’s பையன் 2k பொண்ணு-32

ரிஷிவா-32

      ரிஷி வர தாமதமாகவும் பயத்தில் ஜிப்திறந்து ஷிவாலி தலையை விட அதே நேரம் ரிஷியும் தலையை நீட்டி ஜிப்பை திறக்க போராட, இடித்து கொண்டனர்.
    
     “அம்மா தாயே… என்னை காயப்படுத்தறதுனே முடிவு கட்டிட்டு பிறந்தியா” என்று தேய்த்து கொண்டிருந்தான்.

     “எனக்கு கூட தான் இடிச்சிது.” என்று குறைப்பட்டாள்.

    “உன் அளவுக்கு நான் போர்ஸா வந்து மோதினேனா உண்மையை சொல்லு.” என்று கேட்க, “மூடிட்டு உள்ளவாடா.” என்று அவனை இழுத்தாள்.

     “புருஷன்ற மரியாதை இருக்கா.” என்று அமர்ந்தான்.

      “பசிக்குது என்ன வாங்கிட்டு வந்திருக்க?” என்று கவரை பிரித்து பார்க்க, லாலிபாப் மற்றும் சிப்ஸ் முறுக்கு என்றிருந்தது.
  
        லாலிபாப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தவள் அவனிடம் தொனதொனவென பேசினாள்.

    அடுத்து ஒரு எட்டி மணியளவில் சப்பாத்தி தக்காளி தொக்கு சாப்பிட்டு முடித்தார்கள்.

      எட்டு முப்பதுக்கு நீரை குடித்து தலையை வெளியிட பஸ்ஸிற்குள் பெரும்பாலும் தாழிடப்பட்டு இருட்டியிருந்தது.

       இருவருமே போனில் ப்ரைம் மூவி ஓடவிட்டு பார்த்தனர்.

     ஒன்பது மணி அளவில் ஒளிவிளக்கு சின்னதாய் இருந்தது. பாதி படம் போகவும் ரிஷி தூக்கம் வருகின்றதென படுக்க, ஷிவாலியோ நான் படம் பார்த்துட்டு தான் தூங்குவேன் என்று ஹெட்செட்டில் படம் பார்க்க ஆரம்பித்தாள்.

    ரிஷி அவளின் மடியில் படுக்க தலை கோதிவிட்டாள்.

  அதன் சுகத்தில் தன்னை மறந்து உறங்கினான்.

    ஷிவாலியோ அப்படியே உறங்கிட, போன் அது பாட்டிற்கு படம் ஓடி முடிந்து அணைந்தது.

     அதிகாலை ரிஷி எழுந்த நேரம் அவள் மடியிலே உறங்க கண்டு ‘அச்சோ மடிலயே படுத்திருக்கேன் அவளுக்கு கால் வலிச்சிருக்குமே’ என்று எழுப்பினான்.

    அவன் எண்ணியது போல காலை பிடித்து “ரிஷி கால் வலிக்குது.” என்று படுத்தாள்.

  “சாரி டி. நீ என்னை ஷிப்ட் பண்ணிட்டு படுக்க வேண்டியது தானே.” என்று கடிந்தான்.

      “உனக்கு தான் தெரியுமே எனக்கு தூங்கிட்டா இடையில எழுந்துக்க மாட்டேன். அதனால தானே கல்யாணத்தப்ப ஓடிப்போக முடியலை.” என்றாள்.

      “இந்த நேரத்தில கூட காமெடியா டி. காலை கொண்டா அமுக்கி விடறேன்” என்று பிடித்து விட்டான்.

     “ஆ..  வலிக்குது டா. மெதுவா” என்று கூற மெதுவாய் பிடித்து விட்டான்.

    சற்று சரியாகவும், “ம்ம்… அப்படி தான் சுகமா இருக்கு மனோகரி இப்படி தான் நான் லீவுக்கு வர்றப்ப பிடிச்சி விடுவாங்க. உனக்கு தலை கோதி விட்டேனே அப்படி தான் தாத்தா கோதி விடுவார். நல்லா தூங்குவேன். அதுவும் தலைக்கு குளிச்சேன். பகல்லயே கன்பார்ம் எட்டு மணி நேரம் தூங்குவேன்.” என்றாள் ஷிவாலி.

  ரிஷியோ மெதுவாய் பிடித்து விட்டு அவளுக்கு சரியானது என்றதும் கைகள் வேறொரு உணர்வில் மெல்ல முன்னேறியது.

   பதமாய் அழுத்தவும் அதன் தீண்டல் வித்தியாசம் உணர்ந்து தடுக்கவில்லை. தொடையில் கை வைக்க, ரிஷி போதும் எந்த ஊர் எப்ப இறங்குவோம்” என்று கேட்டதும் லொகேஷன் எடுத்து பார்த்தான்.

     “இன்னும் அரைமணி நேரம் இருக்கு ஷிவ். மாமா வந்து பிக்கப் பண்ணறதா சொன்னார். நான் நாமளா வந்துடறோம்னு சொல்லிட்டேன்” என்று கூறினான்.

     “ப்ரஷ் பண்ணாம ஒரு மாதிரி இருக்கு கிஸ் கூட அடிக்க முடியலை” என்று கவலைப்பட்டான்.

     “எனக்கு பசிக்குது ரிஷி.” என்றாள்.

    “உனக்கு பாதம் மில்க் குட்டியா ஒரு ஜூஸ் இருக்கு பாரு ஆனா பல் விளக்கலையே.” என்றதும் தேடினாள்.

     “அதெல்லாம் பரவாயில்லை.” என்று தேடி ஸ்ட்ராவை அதன் இடத்தில் குத்தி உறிய துவங்கினாள்.

     “குமட்டலை” என்று ரிஷி கேட்க, “இல்லை டா” என்று உறிந்து குடித்து முடித்தாள்.

    “என்னப் பிறவியோ நீ” என்றவன் தலைவாறி அடிக்கடி நேரத்தை பார்க்க, இன்னும் பத்து நிமிடம் என்று காட்டியது.

       மணி ஏழரை ஆக சரியாய் தேனி வந்து சேர்ந்தனர். வாய் கொப்பளித்து ஒரு டீ மட்டும் அருந்தினான்.

     பின்னர் அங்கே ஆட்டோ பிடித்து அக்காவின் இல்லத்திற்கு பயணித்தான். அங்கிருந்து இருபது நிமிடம் பயணம் வருண்-வாசு ஸ்கூல் போயிருக்கானுங்களா லீவானு  என்னனு தெரியலை.” என்று வருந்தினான் ரிஷிவேந்தன்.

     “உனக்கு அவங்களை எவ்ளோ பிடிக்கும்.” என்று கேட்டாள்.

      “ரொம்ப… மாமா மாமானு ஒட்டிட்டே இருப்பாங்க. அதுவேண்டும் இது வேண்டும் அலப்பறை பண்ணினாலும் அவங்க தோள் பிடிச்சி கைப்பிடிச்சி கெஞ்சி கைகாட்டி கேட்கறப்ப எதையும் வாங்கி தாடானு மனசாட்சி சொல்லும்.

   அதுவுமில்லாம வாசுவை விட வருண் குட்டி பையனா செம சேட்டை.  சரிகாவுக்கு பையனா பொண்ணானு தெரியலை.

    ஏய்… உனக்கு பாய் பேபி பிடிக்குமா கேர்ள் பேபி பிடிக்குமா.?” என்று கேட்டான்.

    “நான் இதுவரை அதுபற்றி யோசிக்கலையே. இமேஜின் பண்ணலை. அதனால என்ன சொல்ல தெரியலை. பட் பேபிஸ் எப்பவும் கியூட் தான்.
   
    ஏன் உனக்கு எந்த பேபி பிடிக்கும். பார்ஷியாலிட்டி பார்ப்பியா?” என்று கேட்டாள்.

     “கண்டிப்பா…” என்றவன் அஸ்கி வாய்ஸில் ஆட்டோக்காரனுக்கு கேட்டுவிடாது “எனக்கு பையனை விட பெண் குழந்தை ரொம்ப பிடிக்கும். அவங்க தான் அப்பாவோட மிங்கிள் ஆகிடுவாங்க. பசங்க எப்பவும் அம்மா தான் பிடிச்சிப்பாங்க. என்ன தான் அன்பை பொழிந்தாலும் பசங்க அம்மாவை தான் பிடிச்சிக்கும்.

    எனக்கு என்னை நேசிக்கிற குட்டி தேவதை தான் பிடிக்கும். பாட்டு கூட கேள்விப்பட்டதில்லை. ‘ஏ அப்பனுக்கு பெண் பிடிக்கும்.’னு… ஏ குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்.” என்று ஷிவாலி மூக்கை நிமிட்டு கூறினான்.

     “எனக்கு இப்ப எதுவும் வேண்டாம்.” என்றவள் முகம் தூக்கி வைத்தாள்.

      “ஓகே ஓகே… நாம லேட்டா எதிர்பார்க்கலாம். இன்னும் இரண்டு தெரு தான் அக்கா வீடு வந்துடும். கொஞ்சம் சிரிச்சி வை” என்றதும் ‘ஈ..’  என்று இளிக்க, ”நீ என்ன பண்ணினாலும் கியூட் தான் டி” என்றான்.

    அவளுக்கோ ஒவ்வொரு முறையும் குழந்தையா அதற்குள்ளா என்ற யோசனையே ஓடியது.

       ஆட்டோவிட்டு இறங்கியதும் கவிதா ஓடி வந்தாள்.

    பணத்தை ரிஷி கொடுக்கும் முன் கவிதா எடுத்து நீட்டி, “வாடா தம்பி வம்மா… என்று கூறி “காசை பையில வைடா” என்று அதட்டினாள்.

    ” மாமா இப்ப தான் மீன் இறா வாங்க போயிருக்கு. நீ வா… குளிச்சிட்டு நல்லி எலும்பு இட்லி  வச்சியிருக்கேன் சாப்பிடு. ஷிவாலி நீயும் குளிச்சிட்டு வா. முதல்ல இந்த மில்க்ஷேக்கை குடிங்க.” என்று நீட்டினார்.

     “என்னக்கா மில்க்ஷேக் பசங்களுக்கு வாங்கினியா?” என்று குடிக்க, “இல்லைடா… அம்மா தான் உன் பொண்டாட்டி டீ காபி குடிக்க மாட்டானு சொன்னாங்க. நம்ம வாசு தான் அத்தை ரோஸ் மில்க் குடிக்கும்னா இதை வாங்கி வைமானு சொன்னான்.

   எனக்கென்ன தெரியும். விளம்பரம் பார்த்து சொன்னான். அவரிடம் சொன்னேன் வாங்கிட்டாரு.

   பசங்களுக்கு பள்ளிக்கூடம் பரீட்சைனு இருக்கா மதியம் வந்துடுவாங்க” என்றவள் “உனக்கு புடவை ரொம்ப நல்லாயிருக்கு.” என்றதும் சரிகா கொடுத்தாங்க என்றதும், “பாருடா எனக்கு முன்ன முந்திக்கிட்டா. அதுவும் ஜாக்கெட்டெல்லாம் தைச்சி கொடுத்து போட வச்சிட்டா. நானும் சேலை எடுத்துயிருக்கேன். ஆனா இது மாதிரி இல்லை பட்டு புடவை” என்று பேசினார்.

      “சரி சரி போய் குளிங்க நல்லிஎலும்பு ஆறிடப்போகுது” என்று கூறினாள்.

     குளித்து முடித்து இட்லி நல்லிகுழம்பு என்று சாப்பிட, ஷிவாலியோ “ரிஷி எனக்கு இன்னொரு பீஸ் வேண்டும்” என்றாள்.

     “அதை ஏன் என் தம்பி காதுல கேட்கற. எடுத்து போட்டு சாப்பிடு. உங்களுக்கு தானே வாங்கினேன்” என்று எடுத்து போட்டு சாப்பிட கூச்சப்படுகின்றாளென அள்ளி வைத்தாள் கவிதா.

    “மீன் குழம்புக்கு மசாலா அரைக்கலாம்னு பார்த்தேன். நீ நீயா உரிமையா அள்ளி போட்டு சாப்பிட மாட்ட போலயே.” என்று கூறினாள்.

   ஷிவாலிக்கு கவிதா பேச்சு எட்டுக்கட்டி பேசி அதட்டுவதாக தோன்றினாலும் ஏதோ பழக முன்பு போல தோன்றவில்லை.

  ஆனாலும் எட்டியே பழகினாள்.

      “கவிதா கவிதா ஏறா மீன் அறுத்தே வாங்கிட்டேன்.” என்று குமார் கொடுக்க, “வா மாப்பிள்ளை வாம்மா ஊரெல்லாம் எப்படியிருக்கு. பிடிச்சிருக்கா. உங்க அண்ணி குழம்பு எப்படி?” என்றதும் “நல்லாயிருக்கு. ஊரும் அருமையாயிருக்கு” என்றவள் ரிஷியை பார்த்தாள்.

    “மாமா தியேட்டர் வேலைக்கு போகாம அக்கா கடைக்கு அனுப்பிட்டாளா?” என்று கேட்டான்.

    “அட வேலை செய்யறவங்க பார்த்துப்பாங்கயா” என்றவர் மீன் இறாலை தொட்டியருகே வைக்க, அங்கேயே அமர்ந்து மீனை கழுவ ஆரம்பித்தாள் கவிதா.

     நான்கு பக்கம் தூண் போன்று அமைந்து இருக்க நடுவில் வெட்டவெளியாக இருக்க, யாரும் உள்ளே வராது பாதுகாக்கா இரும்பை போட்டு வேலியாக இருந்தது.

    அங்கே பெரிய பித்தளை அண்டாவில், தொட்டியில் நீர் நிரம்பி இருக்க மீனை கழுவினாள்.

    “என்ன தம்பி பொண்டாட்டி சமைக்க தெரியுமா” என்று கேட்க, “தெரியாது” என்றாள்.

    “அக்கா அவ காலேஜ் முடிச்சி அப்படியே வந்த அன்னிக்கு தானே பொண்ணு பார்க்க போணோம்.” என்றான் ரிஷி.

     “என்னடா சொன்னேன் தெரியுமானு தான் கேட்டேன். நீ ஒதுங்கு. நான் அவளிடம் பழக வேண்டாமா, உன் பொண்டாட்டியை எசகுபிசகா கேள்வி கேட்டு திட்டிட மாட்டேன்.

    பாரு வந்ததிலருந்து நாத்தனாராச்சே அண்ணினு கூட கூப்பிடலை  திட்டினேனா.” என்று கூறவும் ரிஷி ஷிவாலியை கண்டான்.

     ஷிவாலி அமைதியானாள்.
கவிதாவோ, “இதுக்கு கொஞ்சம் தண்ணி ஊத்து கழுவிடறேன்” என்றதும் ஷிவாலி இறால் அலச நீரை ஜக்கிலிருந்து ஊற்றினாள்.

   இரண்டிற்கும் மிளகாய் தூள், உப்பு போட்டு வைத்ததும் கையை கழுவி அமர வைத்தாள்.

    குமார் சாப்பிடவும் ரிஷியும் அவனும் பேச ஆரம்பித்தனர்.

     ஷிவாலியை கவிதா அழைத்து கொண்டு கிச்சன் பக்கம் பேச சென்றனர்.

  கிச்சன் ஓட்டி கிணறு செடியிருக்க, அம்மியில் மசாலை அரைத்து கொண்டே கவிதா பேசினாள்.

    “புது இடம் பழகிட்டியா இல்லையா?” என்று கேட்க, “இப்ப பரவாயில்லை.” என்று கூறினாள்.

   வாயிலிருந்து அண்ணினு வருதா பாரு, என்று கவிதா மிளகாயை அரைக்க ஆரம்பித்தாள்.

    “மிக்ஸி இல்லையா… இதுல அரைக்கிறிங்க” என்று கேட்டு விட்டாள்.

    “மிக்ஸி கிரைண்டர் எல்லாம் இருக்கு. ஆனா கவுச்சிக்கு எல்லாம் இதுல அரைச்சி வச்சா தான் எங்கத்தைக்கு பிடிக்கும். இல்லைனா ஒரு வாய் சாப்பிடாம முகத்துல தட்டை எறிவாங்க.

    அதுவுமில்லாம இதுல கொஞ்சம் ருசி கூடும் பழகிடுச்சு.” என்றாள்.

     “ஓ மைகாட் அப்ப உங்களுக்கு கை வலிக்குமே.” என்று ஷிவாலி கேட்டாள்.

    “எங்க வீட்டுக்காரர் கூட பரவாயில்லை மிக்ஸில அரைனு சொல்லிட்டாறு.

   ஆனா கையில அரைச்சி வச்சா சாப்பிடறவங்க ருசித்து நாலு கரண்டி கூட சாப்பிடுவாங்களே. கஷ்டம்னாலும் அதை தானே யோசிக்கணும்.” என்றதும் ஷிவாலி கவிதாவின் பேச்சில் ‘பொண்ணுங்க மைண்ட் செட் இப்படி தானா.’ என்று அலுத்து கொண்டது.

     “ரிஷியை பிடிச்சிருக்கா.” என்று கேட்டாள் கவிதா.

     “ம்ம்.” என்றவள் அதிகம் வார்த்தை விடவில்லை.

     “ம்ம்… இந்நேரம் உங்கக்கா எங்க வீட்டுக்கு வரவேண்டியது. பாவம் நீ வந்துட்ட. அதனால கேட்டேன்” என்றதும் ஷிவாலிக்கு ஏதோவொன்று பிடிக்காத உணர்வு வாட்டியது.

     “உங்கக்கா நல்லாயிருக்காங்களா?” என்றதும் தலையாட்டினாள்.

    இங்கிருந்து அகன்றுவிடு என்று ஷிவாலி மனம் ஒலமிட்டது. மனதின் எண்ணம் முகத்தில் பிரதிபலிக்க நின்றிருந்தாள்.

      மனமோ இது முதல் சுற்று இரண்டு சுற்று பொறு அதன் பின் எதையும் அடக்கி வைக்காதே’ என்று சாந்தப்படுத்தியது.

    கூடுதலாய் தன்னருகே இல்லாத ரிஷியை மனதில் திட்டிக்கொண்டு தேடினாள்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!