ரி-ஷி-வா-34
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
எட்டு மணிக்கு கோயம்பேடு வந்து சேர, ரிஷி ஷிவாலி ஓலோ புக் செய்து காரில் பயணித்தனர்.
நேற்றே கூறியதால் வீட்டுக்கு வந்ததும் இட்லி சாம்பார் சட்னி வச்சிடுமா என்ற கோரிக்கையால் சரண்யா தங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.
சரிகாவோடு எப்பவும் கூடவே இருக்க இயலாது அல்லவா. அதனால் மீண்டும் வருவதாக கூறி இங்கு வந்துவிட்டார்கள்.
ஷிவாலி ரிஷியின் தோளில் சாய்ந்து மீண்டும் ஒரு குட்டி தூக்கம் போட்டிருந்தவளின் போன் ஓசையிட்டது.
விழிதிறக்காமல் கண் மூடி “சொல்லு மனோ… இன்னிக்கு தான் சென்னை ரிட்…டன்” என்று கொட்டாவி விடுத்தாள்.
“ஓ…ரியலி எனக்கு அந்த லெட்டரை வாட்ஸப் அனுப்பு மனோ.” என்று விழியை உருட்டி, “ரிஷி பிசியோயெரபிஸ்ட் வேண்டுமின்னா கான்டெக் பண்ண சொல்லி ப்யூ ஹால்பிடல்ல சொல்லி ரெஸ்யூம் அனுப்பினேன் டா. ஜாபுக்கு வரச்சொல்லி அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு” என்று குதுகலித்தாள்.
“வர்ற இரண்டாவது லெப்ட் அண்ணா.” என்று கூறிவிட்டு “இப்ப நீ எதுக்கு வேலைக்கு போகணும். நானே நல்ல சம்பளத்தில தானே இருக்கேன்” என்றான்.
“அது நீ சம்பாதிக்கறது. நானும் சம்பாதிக்கணும் சேவ் பண்ணி வைக்க வேண்டாமா.” என்றாள்.
அவளிடமிருந்து கையை உருவி போனை பேக்கெட்டில் வைத்தான்.
அடுத்து இறங்கினால் ல்ககேஜ் தூக்க வேண்டுமே என்ற எண்ணத்தில்.
பேசிக் கொண்டிருக்கும் போது ரிஷி கையை உருவ ஷிவாலிக்கு அது அவனுக்கு தான் வேலைக்கு போவது பிடிக்கவில்லையோ என்று தோன்றியது.
ஷிவாலி மூளை கண்டதையும் எண்ணி இரண்டு நொடியில் சிந்தித்தது.
வீடு வந்ததும் இறங்க கூற, முகம் தூக்கி வைத்து இருந்தாள்.
ரிஷி பணம் கொடுத்து லக்கேஜை எடுக்க, “என் லக்கேஜ் நானே எடுத்துப்பேன்” என்று பிடுங்கி சென்றாள்.
ரிஷி வந்ததும் காபி பருகினான். ஷிவாலிக்கு மால்டோ கலக்க சென்ற சரண்யாவை, “ஆண்ட்டி காபியே கொடுங்க பழகிட்டேன்” என்று காபியை கேட்டு வாங்கி குடித்தாள்.
இவளுக்கு வனஜா அத்தையை ‘பெரிம்மா’னு கூப்பிட வாய் வருது. எங்கம்மா ஆன்ட்டியா?’ என்று கோபம் வந்தது. ஆனாலும் ‘அடேய் ரிஷி ஏதாவது கேட்டு இப்பவே சண்டையை இழுக்காதே. அப்பறம் அங்க இருந்த வரை எனக்கு காரியம் ஆகுற வரை நெயிர்ச்சியாய் பேசின, இப்ப சண்டை போடறனு புனிதமான தாம்பத்தியத்தை கொச்சைப் படுத்திடுவா. ஆபிஸ் வேற போகணும் வூடு ஜூட்’ என்று பருகிவிட்டு மாடிக்கு விரைந்தான்.
மற்றவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை அங்கு எடுத்து வைத்து விட்டு ஷிவாலியும் மாடிக்கு விரைந்தாள்.
ஆனால் அதற்குள் குளிக்க சென்றவனை கண்டு கையை பிசைந்து காத்திருந்தாள்.
இடுப்பில் டவலும் தலையை துவட்ட ஒரு டவலும் என்று தலைதேய்த்து கொண்டு வந்தவன் மடமடவென அலுவலகம் செல்ல உடையை உடுத்த, ஷிவாலி திகைத்தாள்.
“ஆ..ஆபிஸ் போக போறியா?” என்று கேட்டாள்.
“ஆமா ஷிவ். லீவு இருக்கு இருக்குனு எக்ஸ்ட்ரா தான் எடுத்துருக்கேன். இனியும் போகலை அப்பறம் வேலையை விட்டு எடுத்துடுவானுங்க.” என்றவன் தலை வாறி முடிக்க, அவனின் வாசம் அவளையே இழக்க வைக்க மதிமயங்கி நின்றாள்.
“கண்டிப்பா போகணுமா?” என்று கேட்டாள்.
“பொடிடப்பி… எனக்கும் ஆசை தான் உன்னை விட்டு ஒரு நொடிக்கூட பிரியாம இருக்கணும்னு. ஆனா பேக்ட் என்னனா போகணும். ஒன்பதரை பத்துக்குள்ள போயிட்டேன் வை பெட்டர் டி” என்று முத்தமிட்டான்.
“ரிஷி…. என் ஜாப் பத்தி சொன்னேனே.” என்று சண்டை போடாது அதற்கு ஒரு வழியின்றி விழித்தாள்.
“வேண்டாமே டா. உனக்கு எதுக்கு ஸ்ட்ரெயின்” என்றதும் கோபமாக “நான் யாரோட பணத்தையும் நம்பி வாழமாட்டேன் ரிஷி. நாளைக்கு நீயே என்னை திட்டினா. நமக்குள் ஒத்துவரலைனா. நான் எனக்குனு மணியை சேவ் பண்ணி வச்சிக்கறதுல என்ன தப்பு” என்றாள்.
ரிஷிக்கு அளவுக்கதிகமான கோபம் எழுந்தது. அலுவலகம் வேறு செல்ல வேண்டும் என்று நேரத்தை பார்த்தான்.
அவளிடம் வந்து “ஆல்தி பெஸ்ட். போ… உனக்கு பிடிச்சதை செய். பட் நான் கட்டாயமா போன்னு சொல்லமாட்டேன். உன்னிஷ்டம்” என்று வேகமாக கீழேயிறங்கி மூன்று இட்லியை விழுங்கிவிட்டு பைக்கை எடுத்து புறப்பட்டான்.
பைக்கில் பயணம் செய்யும் நேரமெல்லாம், ‘இவ எதுக்கு தான் மேரேஜ் லைப்ல பாண்டிங் இல்லாம பேசறான்னு தெரியலை. கோபத்துல அறைந்துடுவேனோனு ஒரு பக்கம் பக்குனு இருக்கு. அப்படி செய்தேன் அம்மா என்னிடம் பேச மாட்டாங்க.’ என்றவன் சாலை விதிகளை கவனித்து நிறுத்தினான்.
அதன் பின் அலுவலகம் சென்றதும் அனைத்தும் மறந்துப் போனான்.
மாலை ஷிவாலியை தேடி ஆசையாய் ஓடிவந்தான்.
அம்மா கிச்சனில் மாவாட்டி கொண்டியிருக்க, டிவியில் காதல் பாடலை கேட்டுக் கொண்டிருந்தாள்.
ரிஷி வந்ததும் அவள் மீது வழிந்த ஆசை வற்றியது.
கிச்சனில் தண்ணீர் குடித்திட, “என்னடா சீக்கிரம் வந்துட்ட” என்று சரண்யா கேட்டதும் தான் ஷிவாலி அவன் வந்ததையே அறிந்தாள்.
“ஒன்னுமில்லை மா ஒர்க் குயிக்கா முடிச்சிட்டேன்.” என்றவன் மாடிக்கு வேகமெடுத்தான்.
ரிஷி கூடவே ஷிவாலியும் செல்ல, “ஷிவா… இந்த முறுக்கையை எடுத்துட்டு போய் கொடு.” என்று கொடுக்கவும் வாங்கினாள்.
“தண்ணியும் எடுத்துட்டு போயிடுமா.” என்றதும் சரிங்க ஆன்ட்டி” என்றவள் மனமோ ‘இவங்களும் ரிஷி மாதிரியே இருக்காங்க. சோ ஸ்வீட்’ என்று ஸ்லோகித்தாள்.
மேல வந்து தட்டை ஓரம் வைத்தவள் “பணியாரம்” என்று கன்னத்தை கடிக்கவும், “என்ன பண்ற… தள்ளு” என்று விலகி சென்று முகம் அலம்பினான்.
ஷிவாலி முகம் வாடியது, “சாருக்கு இன்னும் கோபமா. ஏன்டா?” என்று வாட்டமாய் கேட்டதும், ரிஷி முகம் துடைத்து வந்தவன் “எனக்கு எந்த கோபமும் இல்லை. அங்கங்க தூசி அதுயிதுனு இருக்கும். நீ பாட்டுக்கு கன்னம் கடிச்சா” என்றவன் முறுக்கை எடுத்து கடித்து சாப்பிட்டான்.
“ரிஷி… நாளையிலருந்து நானும் வேலைக்கு கிளம்பிடுவேன். ஆனா பத்து டூ ஒன்னு ‘வரதன் ஹாஸ்பிடல்’ தெரியுமா அங்க, அப்பறம் மூன்று டூ ஐந்து நர்மதா க்ளிக் பக்கத்துல ஒரு ஸ்பேஸ் கொடுத்து இருக்காங்க.” என்றதும் தலையாட்டினான்.
“என்ன நீ விஷ் பண்ண மாட்டியா.” என்று கேட்டாள்.
“ட்ரீட் தர்றியா தண்ணி பார்ட்டி. கம்பெனி கொடுத்தா டபுள் ஓகே.” என்று நக்கலாய் கேட்டான்.
“உனக்கென்ன நான் வீட்லயே உங்க அம்மா அக்கா தங்கை மாதிரி கிச்சன் சமையல் புள்ளக்குட்டி கிடக்கனும் அதானே.
லுக் ரிஷி… நான் ரொம்ப மாறியிருக்கேன். என்ன மாத்திட்டு வர்ற. ஐ ஹேட் திஸ்.” என்றதும் “வாழ்த்துகள் என்னோட அம்மா அக்கா தங்கை மாதிரி ஒரு வட்டத்துல இருக்கணும்னு நானும் ஆசைப்படலை. ஏன் எங்கம்மாவையே நான் வட்டத்துக்குள் வச்சிக்கலை.
எங்கம்மாவை பத்தி தெரிந்த உனக்கு எங்கப்பாவை பத்தி தெரியாது. எங்கம்மா எங்கப்பாவை திருமணம் செய்தப்ப அவங்க பிளஸ் டூ தான் படிச்சவங்க. எங்கப்பா அம்மாவுக்கு புக்ஸ் படிக்க வாங்கி தருவாங்க. ஒரே நாள்ல ஒரு புக்கை படிச்சி முடிச்சிடுவாங்க. அவங்க படிக்கிற வேகத்துல ஆர்வத்தை அப்பா தெரிந்துக்கிட்டு அம்மாவை கரஸ்லயே பி.ஏ அண்ட் எம்.ஏ முடிக்க வச்சவர்.
எங்கக்கா தங்கை எல்லாம் அவங்களா தான் அவங்க கணவருக்கா மாத்திக்கிட்டாங்களே தவிர அவங்களும் மாறுனு சொல்லலை. சரிகா குழந்தையை எதிர்பார்த்தா. ஹரிஷ் ஓவரா எதிர்பார்த்தார். அவ்ளோ தான். இங்க பிரசண்டேஜ் கம்மி. மற்றபடி அவளுக்கு விருப்பமேயில்லாம குழந்தையை சுமக்கலை.
நீயா அவங்களை மனசுல வச்சியிருக்கிற இடங்கள் தான் உன்னை குழப்புது.
அவங்களைனு இல்லை. நீ என்னையும் உன் மனசுல வச்சியிருக்கிற இடமும் ரொம்ப பள்ளத்துல இருக்கு” என்று பேசவும் சோர்வுற்றவனாய் நீரை பருகினான்.
“ரிஷி… ரிஷி… என்னால நீ சின்னதா முகம் தூக்கினாலே கஷ்டமா இருக்கு. எங்க என்னோட கேரக்டரை அழிச்சிட்டு உனக்காக உனக்காகனு என்னை மாற்றிக்கிட்டு என்னை தொலைச்சிடுவேனோனு பயமா இருக்கு.” என்று அணைத்து அழுதவளின் சிகை கோதினான்.
“யாராலையும் யாரோட குணநலத்தை மாற்ற முடியாது ஷிவ். கொஞ்ச காலம் வேண்டுமின்னா நீ சொன்ன மாதிரி உனக்காக உனக்காகனு மாற முயற்சிக்கலாம். ஆனா நம்மளோட குணம் நம்மிடம் தான் இருக்கும். நீ பயப்படறது வேஸ்ட்மா… .” என்று கூறினான்.
“சரி… ஏதோ சொல்லற.” என்று சாய்ந்ததும் அணைப்புகள் இறுக, கொஞ்சிக் கொண்டனர்.
இரவு உணவு உண்ணும் நேரம் கண்ணபிரான் வந்ததும் முதல் முறையாக மாமா என்ற அச்சத்தோடு பார்த்தாள். தந்தை ராமமூர்த்தி போல கடுமையாக இருப்பாரோ? என்ற அச்சம்.
அவரோ ரிஷியின் கண்டிப்பு முகத்தை ஒத்தது போல வலம் வந்தார்.
ரிஷி ஷிவாலி வாழ்க்கை இனிக்க இனிக்க தாம்பத்தியம், வேலை, கொஞ்சம் கொஞ்சம் செல்ல சண்டை என்று கடக்க மாதங்கள் கடந்தது.
ஷிவாலி ‘அபிநயா’யென்ற குழந்தைக்கு பிசியோதெரபி உடற்பயிற்சி கொடுத்து கால்களை நீவிவிட்டு கொண்டிருந்தாள்.
அவர்கள் சென்றதும் கை அலம்பி காபி குடிக்க அமர்ந்தாள்.
‘இந்த ரிஷி பையனால காபி குடிக்க ஆரம்பிச்சது. இப்ப என்னடானா காபிக்கு அடிக்ட் ஆகிட்டேன்.’ என்றவள் இரண்டு மிடறை பருக, குமட்டி கொண்டு வந்தது.
அதன் பின் காபியை குடிக்கவும் மனமின்றி சிங்கில் ஊற்றி விட்டாள்.
குடலை புரட்டி எடுத்த வாந்தியுணர்வால் கண்கள் சொருக வதங்கினாள்.
வீட்டுக்கு போக வேண்டுமென்று ஆட்டோ பிடித்து வந்தாள்.
இரவும் அதிகப்படியான சோர்வும், காய்ச்சலும் வாட்டியது.
ரிஷியோ ஹாஸ்பிடல் வேண்டுமின்னா வர்றியா ஷிவ்” என்றதற்கு, “இரண்ட் நாள் முடியட்டும் டா. பேரசிட்டமல் வேலைக்கு ஆகலைனா வர்றேன். மோஸ்டா எனக்கு இந்த மெடிசன் ஸ்மெல்லே பிடிக்காது. அதுவும் ஊசிலாம் செட்டாவே ஆகாது.” என்று அணைத்து கொண்டாள்.
“ரிஷி இப்படியே ஹக் பண்ணிட்டே இரு எனக்கு போதும்” என்றாள்.
ரிஷியும் அவள் ஆசைக்கு குறுக்கே நிற்காது ஆதரவாய் இருந்தான்.
இரவு உணவு உண்ணும் போது, சரண்யா சரிகாவிடம் போன் பேசினார்.
“மசக்கைனா வாந்தி வராம இருக்குமா. வாந்தி எடுத்துட்டு பழத்தை சாப்பிடு இல்லை ஜூஸ் போட்டு குடி. சாப்பிடாம இருந்தா திரும்ப வந்து ஊட்டணுமா” என்று பேசியபடி பரிமாறிக் கொண்டே சாப்பிட, ஷிவாலியோ ரிஷியை பார்த்து திகைத்தவளாய் இருந்தாள்.
அவனோ சப்புக்கொட்டி தட்டை வழித்து மொத்தமாய் ருசித்து முடித்தான்.
-தொடரும்.
-பீரவீணா தங்கராஜ்.

Wow shiv really surprise? Very intresting sis. Wonderful narration sis.
Evalukku eppo than melmaadi vela seiyuthu pola