அத்தியாயம் – 106
மேதாவிற்கு ஏதுமில்லை என்று அனைவருக்கும் டாக்டர் தெரிவிக்க அவர் பேசுவது புரியாமல் நிதினும் மற்றவர்களும் தேஜூவை பார்க்க அவள் சொன்னதை கேட்டு அப்போது தான் உயிரே வந்தது நிதினுக்கு.
உள்ளே சென்று ஆராஷியை பார்த்து ஆறுதலாய் அவனது தோளை தட்டியவன்
“அதான் அவளுக்கு ஒன்னும் இல்லையே கவலைபடாதேடா” என்று அவனது தோளை தொட்டு ஆறுதல் படுத்திவிட்டு வெளியே வந்தான் ரியோட்டோ.
அதுவரை யாருக்குமே அருந்ததியின் நினைவு வரவில்லை.
தகப்பன் ஸ்தானத்தில் இருந்த அண்ணனும் மறந்தே போனான் அவளை.
ஆனால் மறக்காமல் அவளை தேடியவன் ரியோட்டோ மட்டுமே.
வெளியே வந்தவன் முதலில் கேட்ட கேள்வி
“ஆமா ஏஞ்சல் பேபி அரூ எங்க? நான் அவளை பார்க்கவே இல்லையே?” என்று அவன் கேள்வி கேட்க அப்போது தான் அனைவருக்கும் அவளது நியாபகமே வந்தது.
நிதினும் “ஆமா நானும் அவளை பார்க்கவே இல்லையே எங்க அவ?” என்று கேட்டபடி ஹர்ஷத்தை பார்க்க
“அவளுக்கு கொஞ்சம் அடி பட்டுடுச்சு சர் அதான்” என்று அவன் தயங்கி கூற அதிர்ந்து போனான் நிதின்
“என்ன ஆச்சு ஹர்ஷத் அவளுக்கு? அடிப்பட்டுடுச்சா எப்படி? எங்கே? அவளுக்கு என்ன ஆச்சு? சின்ன வலி கூட தாங்கமாட்டாளே என்ட மோளே எங்க அவ?” என்று மாற்றி மாற்றி நிதின் கேள்வி கேட்க
“இருங்க சர் அவளுக்கும் ஒன்னும் இல்ல லேசா கையில தான் அடி அவ நல்லா இருக்கா இங்கேயே தான் அட்மிட் செய்து இருக்கேன் வாங்க” என்று அவர்களை அழைத்து செல்ல
பதறிபோய் அவன் பின் ஓடினர் அனைவரும்.
ஒரு அறையில் அவளது பெயர்பலகை இருக்க இன் என்று இருந்தது. அதனை பார்த்துவிட்டு அவன் கதவை திறக்க வேகமாக உள்ளே நுழைந்தனர் நிதினும் ரியோட்டோவும் சாஹித்யனும்.
“அரூ என்ட மோளே” என்று நிதினும்,
“ஏஞ்சல்” என்று ரியோட்டோவும்,
“அரூமா” என்று சாஹித்யனும் ஒருசேர அழைத்தபடி உள்ளே நுழைய அவர்களை பின்தொடர்ந்து நிலவினி தேஜூ என நுழைய அங்கு அவர்கள் பார்த்ததோ
ஹர்ஷத்தின் அம்மாவும் சமையல்காரம்மா கண்மணியும் இருக்க வாய் முழுவதும் ஒற்றை பீட்சாவை உள்ளே தள்ளி சீஸை உள்ளே இழுத்துக்கொண்டு இருந்தாள் அருந்ததி.
அதிர்ந்து போய் வந்த அனைவரும் அவளது நிலையை பார்த்து அப்படியே சிறிது நேரம் நின்று விட்டனர்.
நிதினோ “மோளே எந்தா இது? உனக்கு அடிபட்டுச்சுனு சொன்னாங்க? எப்படிடா?” என்று கேட்க.
வாயை திறக்கமுடியாததால் “ஆ..ஆ..ஆ..” என்று அவள் ஏதோ பேசவர அவளது அருகில் சென்ற சாஹித்யன்
“ஏன்டி தீனிபண்டாரம் உனக்கு அடிப்பட்டுச்சுனு என்னவோ ஏதோனு நாங்க அடிச்சு புடிச்சு வந்தா நீ என்னடானா சோத்துக்கு செத்தவன்போல திண்ணுட்டு இருக்க?” என்று அவளது முதுகில் பட்டென்று ஒன்று வைத்தான்.
அவன் அடித்தது வலிக்காவிட்டாலும்
“ஆஆஆஆஆ” என்று கத்தியவள் வாயிலிருந்த பீட்சாவை டக்கென்று முழுங்கிவிட்டு
“ஏன்டா எரும சாப்பிடுற பிள்ளைய இப்படியா அடிப்ப?
உனக்குலாம் காலத்துக்கும் கல்யாணமே ஆகாதுடா அண்ணா பாருங்க எனக்கு ரொம்ப வலிக்குது” என்று அவள் அவனுடன் சண்டை பிடித்து நிதினிடம் கம்ப்ளைண்ட் செய்ய
“சரி சரி நீ சாப்பிடு பாரு பீட்சா ஆறிப்போகுது” என்றான் ஹர்ஷத்.
“எல்லாம் உங்களால இவனை ஏன் கூட்டிட்டு வந்தீங்க? எனக்கு இன்னொன்னு ஆர்டர் போடுங்க பசியே அடங்கல” என்று அவள் அவனை முறைத்தபடி பேச
“சரிம்மா நான் வாங்கி தர்றேன் நீ சாப்பிடு” என்றான் அவன்.
“மாம்ஸ் உங்களுக்கு?” என்று அவள் ரியோட்டோவிற்கு ஒரு துண்டை நீட்ட
“இல்லடா நீ சாப்பிடு உனக்கு எப்படிடா அடிப்பட்டுச்சு? வலிக்குதா?” என்று அவன் கேட்க
“இதோ இருக்காரே இவரை காப்பாத்த போய்தான் எனக்கு இப்படி ஆச்சு” என்று கூறியபடி ஹர்ஷத்தை கைகாட்ட
எல்லோரும் அவனை பார்க்க
“அதை நான் சொல்றேன்” என்றபடி நடந்ததை அவன் கூற எல்லோருக்கும் நெஞ்சை பதற செய்தது ஆனாலும் விடாமல்
“அடிப்பாவி அவருதான் போலீஸ்ஸோட அங்க இருந்தாரே நீ கத்தி இருந்தாலே அவங்க உஷாராகி இருப்பாங்களேடி அவரை காப்பாத்த நீ கையில அடிப்பட்ட” என்று சாஹித்யன் கேட்க.
“ஆமால்ல இதை நான் யோசிக்கலையேடா அண்ணா
அந்த டைம்ல இவரை காப்பாத்தனும்னு யோசிச்சேனே தவிர வேற யோசிக்கலையே” என்று அவள் வருத்தமாய் கூற
“அதானே அந்த அளவுக்கு அறிவு இருந்தா நீ இந்நேரம் பெரிய ஆளா வந்து இருப்பியே” என்று அவளை வாரினான்.
அதில் அவள் கோபமாய் அவனை முறைக்க
“சரி விடுடா உனக்கு ஒன்னும் ஆகலைல அதுவே போதும் டாக்டர் என்ன சொன்னாங்க ஹர்ஷத்?” என்று அவனை நிதின் கேட்க.
அவன் பேச வாயெடுப்பதற்குள்
“நல்லா சாப்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க அதான் ஃபுல்கட்டு கட்டுறா எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்” என்று சாஹித்யன் திட்ட
“ஆமா உனக்கு மட்டும் என்னவாம் அவளுக்கு அடிப்பட்டுச்சுனு சொன்ன உடனே நீயும்தானே பதறிபோய்தானே அரூமானு ஓடி வந்த?” என்று நிலவினி எடுத்து கொடுக்க.
“அதானே அவமேல அவ்ளோ பாசம் வெச்சுட்டு ஓடி வந்துட்டு இப்போ அவளை திட்டுறமாதிரி சீன் போடுறான் பாருங்க” என்று தேஜூவும் கூற
“ஆமா நீங்க எல்லாரும் அவளை கொஞ்சிகிட்டே இருந்தா அவளை யாருதான் திட்டுறது அப்போ அவளுக்கு அடிப்பட்டுச்சேனு பதட்டம் அதுல ஓடிவந்தேன் இப்போ ஃபீல் பண்ண வெச்சுட்டால்ல ஏன்டா இவளுக்காக பதட்டப்பட்டோம்னு தீனிபண்டாரம்” என்று அவன் மீண்டும் திட்ட
“என்னப்பா இது நானும் பார்க்கிறேன் வந்ததுல இருந்து பிள்ளைய திட்டிகிட்டே இருக்க அவளுக்கு கேட்க ஆள் இல்லனு நினைச்சீங்களா? நான் இருக்கேன் புள்ள சாப்பிடுறத கண்ணு வைக்காதீங்க” என்று ஹர்ஷத்தின் தாயார் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர்
பேச
இவர் யார்? என்பது போல அனைவரும் பார்க்க
ஹர்ஷத் “சாரி நான் சொல்ல மறந்துட்டேன் இவங்க என்னோட அம்மா.
ம்மா இவங்க தான் நிதின் மேதாவோட அண்ணாங்க இவங்க சிஸ்டர்ஸ்” என்று கூற அவர்களும் அவருக்கு வணக்கம் வைக்க
“அம்மாவை ஏன் சிரமம் படுத்திட்டு இருக்க ஹர்ஷத்?” என்று நிதின் கேட்க
அவன் பேச வாயெடுக்கும் முன்
“இவனை நம்பி இவளை விட நான் தயாரா இல்லப்பா அதான் என் மருமகளை நானே பார்த்துக்கிறேன்னு வந்தேன் நீங்க என்னடானா அடிப்பட்ட பிள்ளைனு கூட பார்க்காமா திட்டுறீங்க?” என்று அவரே பதில் கூற
எல்லோரும் ஒருசேர ஹர்ஷத்தையும் அருந்ததியையும் மாற்றி மாற்றி பார்க்க
“அது..அண்ணா நானே உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன் அதுக்குள்ள” என்று ஹர்ஷத் இழுக்க
“தப்பு பண்ணிட்டீங்க ப்ரோ சாப்பாடு வாங்கி கொடுத்தே ஆண்டி ஆகிடுவீங்களே?” என்றான் சாஹித்யன்.
“ஏன்டா” என்று ரியோட்டோ கேட்க அதற்குள்
“டேய் உன்ன கொல்லாம விடமாட்டேன்டா” என்று அருந்ததி வரிஞ்சுகட்டிக்கொண்டு வர
“அரூ சும்மா இரு அண்ணால அவரு அவரை போய் இப்படிலாம் பேசலாமா?
அவர் சும்மாதானே சொல்றாரு இத்தனை நாள் ஒன்னும் தெரியாத மாதிரி அமைதியா இருந்த இப்போ இப்படி பன்ற” என்று அவளை தடுத்தான் ஹர்ஷத்.
அதற்கு தலையை குனிந்தவள்
“அதுக்கு நீங்கதான் காரணம் லவ் தேவ்தாஸ் போல என்னை சுத்தல்ல விட்டது நீங்க.
என் லவ்வ தப்பா பேசி திட்டிவிட்டது நீங்க அப்போ எப்படி இருப்பாங்களாம் இப்போதான் லவ் ஓகே ஆகிடுச்சே” என்றாள் அவள்.
நம்ம வாயாடியா இது என்பது போல அனைவரும் அவளை ஆவென பார்க்க நிதின் அமைதியாக இருக்க சந்தேகப்பட்ட தேஜூ
“அப்போ இந்த லவ்வும் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அண்ணா?” என்றாள் நிதினை பார்த்து.
“மேதா சொன்னா” என்று கூற
“அவளுக்கு என்னதான் தெரியாது?” என்று ரியோட்டோ கேட்க.
“உங்க தம்பியோட லவ்வ தவிர மேடம்க்கு எல்லாம் தெரியும்” என்று அருந்ததி கூற
“கரெக்ட் ஏஞ்சல்” என்று அவளுக்கு ஹைஃபை கொடுக்க போனவன் தன் மனையாளின் முறைப்பை கண்டு ஈஈஈஈ என்று சிரித்தபடி தூரமாக நின்று கொண்டான்.
“அப்போ எல்லாம் நீங்களும் அவளும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணி எல்லாம் செஞ்சு இருக்கீங்க இல்ல? அவ ப்ளான் போட்டு கொடுத்து நீங்க சேர்ந்து அதை எக்ஸிகியூட் செஞ்சு இருக்கீங்க அப்படித்தானே? அவரு ஆராஷி எவ்ளோ கஷ்டப்பட்டாரு அவளுக்குலாம் மனசாட்சியே இல்லையா?” என்று ஷ்ரத்தா கேட்க
“இல்லடாமா இது எதுக்குமே நான் உடந்தை இல்லடா ஷ்ரத்தா எல்லாம் அவளா தான் செஞ்சா ஃபவுண்டரா எனக்கு ஆர்டர் போட்டு இதையெல்லாம் செய்ய வெச்சா” என்று நிதின் தன் தரப்பு நியாத்தை கூற
அந்நேரம்
அங்கு அருந்ததியை காண வந்த ஆராஷி அவர்களின் பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டான்.
“இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீங்க ஏன் அவளோட முடிவுக்கு ஒரு சிஇஓ வா எந்த எதிர்ப்புமே கொடுக்கல? அவ செஞ்ச முட்டாள்தனமான வேலையால அதிகமா பாதிக்கப்பட்டது யாரு ஆராஷி தான் அவ மட்டும் தான் லவ் பண்ண போலவும் அவரோட லவ்வ தூசிபோலவும் நடத்தி இருக்கா அவ இதுக்கு அவளுக்கு நீங்கலாம் சப்போர்ட் பண்ணி அவரை என்னவோ எதிரி மாதிரி முறைச்சுக்கிட்டு அவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி வெச்சுட்டு இருந்து இருக்கீங்க? இதெல்லாம் உங்களுக்கு ஏன் அண்ணா தெரியல?” என்று ஷ்ரத்தா கேட்க
அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க அந்நேரம் குறுக்கிட்ட ஹர்ஷத்
“அக்கா அப்படி இல்லக்கா மேதாவும் அவரோட லவ்வ மதிச்சு தான்” என்று முடிக்க கூட இல்லை அவனை கைநீட்டி தடுத்த ஷ்ரத்தா
“எதுடா காதலை மதிக்கிறது? உன் ப்ரண்ட்ட பத்தி பேசினதும் வரிஞ்சுகட்டிட்டு உடனே வர்ற சப்போர்ட்க்கு அவகிட்ட கேட்க வேண்டியதுதானே நான் கேட்கறதெல்லாம்?
அவளுக்காக உன் வேலையெல்லாம் விட்டுட்டு இண்டியா வந்து இதோ இவருக்கு பி ஏ வா இவரோட ஷேடோவா இருந்தியே ஒரு வார்த்தை அவகிட்ட கேட்டியா? இவ்ளோ எதுக்கு கஷ்டப்பட்டு உன்னை மறைச்சு உன் காதலை மறைச்சு அதை அவரு உணரணும் அவரு அவளை தேடி வரணும்னு செஞ்சா?
இது எப்படி சாத்தியம் அவருக்குனு கேட்டியா நீ?
எங்கேயாவது அவளை பத்தின ஒரு சின்ன ஹிண்ட்டாவது அவருக்கு அவ விட்டு வெச்சாளா? இங்க இருந்து அவரை பார்க்குறேன்னு பேரை மாத்தி சொல்லி அவரோட ஸ்பான்சரா இருந்து இருக்கா
அதுவரைக்கும் அவளோட பேரை தவிர வேற எதுவும் சொல்லல மலையாள பொண்ணுனு நம்ப வெச்சுட்டு அங்க இருந்து சொல்லாம கொல்லாம ஓடிட்டா.
அவ தப்பான பேரையும் மலையாள பொண்ணுனும் தானே அவரு அவளை தேடி இருப்பாரு அந்த அறிவு இல்ல அவளுக்கு?

Super