Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

அத்தியாயம்-20

  அமுல்யா இன்று காலையிலிருந்தே மெத்தையில் குதித்து கொண்டிருந்தாள். அவள் இன்று பள்ளிக்கூடம் செல்வதற்கு பதிலாக அவள் சித்தாவின் திருமணத்திற்கு தோதாக முடிவெடுக்க அஞ்சனா வீட்டுக்கு செல்ல போகின்றாள். அங்கே அவள் பள்ளி தோழன் கிஷோர் வருவான்.

    “குதிச்சிட்டே இருக்காத அம்மு. கீழே விழுந்துடப்போற” என்று துகிரா கூற, “அம்மா… கிஷோரும் இங்க இருக்கற ஸ்கூல்ல படிக்க போறானா?” என்று கேட்டாள்.
 
  “அதெல்லாம் இல்லையே. அவன் அவங்க அத்தை வீட்டுக்கு வர்றான்.” என்றாள்.

“அவங்க அத்தை வீட்டுக்கு நாம ஏன் போறோம்” என்று குழந்தை கேட்க, இஷானோ துகிரா என்ன சொல்ல போகின்றாளென்று பார்க்க அவளோ இவனை பார்க்க, “போயிட்டு வந்து சொல்லறேன். நீ பிரதன்யா அத்தை கிளம்பிட்டாங்களா போய் பாரு” என்று கீழே அனுப்பினாள்.
 
  இஷான் பார்வைக்கு அர்த்தம் கூறும் விதமாக, “அங்க திருமணத்தை பத்தி பேசி என்ன‌ ரெஸ்பான்ஸ்னு தெரியாம இப்பவே ரிஷி கல்யாணம் பண்ணிக்கற பொண்ணுனு சொல்லி குழந்தை மனசுல பதியக்கூடாது. இதான் முடிவானப்பிறகு தான் எதையும் அம்முவிடம் சொல்லி பழக்கம்.” என்றாள்.‌

  இஷானோ அவள் சொல்லும் வரை அசையாது நின்றவன் பிறகு வெளியேற, துகிராவுக்கு எவளோ ஒருத்தியை போல தன்னை நடத்துவதில் பெரிதாக நினைக்கவில்லை. இந்த பந்தமே வினோதமாய் இணைத்து விட்டப்பின் நடப்பதில் எதை தான் பெரிதுப்படுத்த?

       ரிஷி மாப்பிள்ளை முறுக்கோடு தயாராகி வந்தான்.
    பிரதன்யாவோ “சின்ன அண்ணா உன்னை அவங்க வீட்ல ரிஜெக்ட் செய்தா  என்ன செய்யவ? பெரிய அண்ணா மாதிரி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்பியா?” என்று கிசுகிசுக்க, ரிஷியோ “அண்ணாகிட்ட பொறுப்பு போய் இருக்கு. அவங்க வீட்ல சம்மதிக்கலைன்னா கூட நம்ம வீட்ல நம்ம அண்ணா தலைமையில் கல்யாணத்தை கிராண்டா பண்ணுவார். ஆனா அஞ்சனா வீட்ல என்னை ஏற்பாங்கன்னு சொன்னா.” என்று தலைவாறினாள்.

  “பாட்டி… பூவை நீங்க வச்சிக்கலை” என்று பைரவி அமுல்யா தலையில் சூடுவதை வைத்து கேட்டார்.

  “இல்லைடா பாட்டிக்கு தலைவலிக்கும்’ என்று மறுத்துவிட்டார். குழந்தையிடம் விதவை ஆனப்பின் பூவை தவிர்ப்பதை கூற முடியுமா? 

  காரில் இஷான் ரிஷி முன்னிருக்கையில் அமர, பெண்கள் மூவரும் பின்னிருக்கையில் அமர்ந்தனர்.
  துகிரா மடியில் அமுல்யா அமர்ந்திருக்க, இஷான் பார்வை மகளை தழுவும் பொழுதெல்லாம் துகிராவையும் கண்டான்.
  
  சேலையில் தலை நிறைய பூவோடு பார்க்கவே அழகோவியமாக காட்சி தந்தாள். துர்கா என்ற முகத்தால் இஷான் பார்வை தழுவினாலும் துர்கா இஷானை பார்வையை கண்டு கூடுதலாக மலர்வாள். இந்த அமைதியில் தான் துகிரா என்று எண்ணி தடுமாறி விழித்திசையை மாற்றுவான்.

  துகிராவுக்கு அடிக்கடி தன்னை காணும் இஷானை கண்டு, நடுக்கம் இருந்தது. துர்கா அக்கா என்ற எண்ணத்தில் பார்த்துவிட்டு, பிறகு துகிரா என்று தவிர்ப்பதை அவளுமே இந்த இடைப்பட்ட காலத்தில் அறிவாள்.

கஷ்டமாக தான் இருந்தது. இஷான் படும் அவஸ்தையை காண, இந்த முகமட்டுமாவது அக்காவை போல் இல்லாமல் இருந்திருக்கலாம்.
  இதனால் முத்தம் வரை சென்றுவிட்டதே என்று இஷானை மெதுவாக ஏறிட்டாள்.
 
   மெர்ஸி சொன்ன வார்த்தை எல்லாம் வரிசைக்கட்டி வந்தது. ‘உனக்கென்னம்மா… கண்ணுக்கு அழகா புருஷன் கிடைச்சிட்டான்.‌ முன்னயாவது முனிவர் மாதிரி தாடியெல்லாம் இருந்தது. இப்ப.. ஹீரோ மாதிரி லட்சணமா இருக்கான்.
   அமுல்யாவை வேற உரிமையா வளர்ப்ப. எங்க வீட்ல மருமகளா வந்திருந்தா யாரோ ஒருத்தியோட பொண்ணுனு அமுல்யா மீது பார்வை இருக்கும். இப்ப அப்படியிருக்காது. சொந்த பேத்தி, சொந்த அப்பா, சொந்த அத்தை, குடும்பமா உறுத்தல் இல்லாம வாழு” என்று வாழ்த்தி புலம்பியதை எங்கணும் மறப்பாள்.

  உண்மையில் அமுல்யா அப்பாவுக்கு முன்பை விட லட்சணமான முகம். அன்று முத்தமிட்ட போது தாடியால் குத்தி  கூசியதே. இன்று அப்படி இருக்காது‌ என்ற போதே இஷானையே பார்வையிட்டு மூழ்கியதும் இல்லாமால் வெட்கம் கெட்டத்தனமாக எண்ணங்களை உதறினாள்.‌

  அதே நேரம் அஞ்சனா வீடும் வந்ததால் கார் நின்றது. ஒவ்வொருத்தராய் இறங்கினார்கள்.
  நடுவில் துகிராவோடு அமுல்யாவோடு அமர்ந்திருந்ததால் இருபுறமும் பிரதன்யா பைரவி இறங்கிவிட, “அம்மா என்‌ செப்பல்” என்று மெதுவாக குழந்தை இறங்க அதற்குள் இஷான் வந்து, அமுல்யாவை தூக்க, செருப்பை மாட்டி விட்டாள்.
   அமுல்யாவை தூக்கிக்கொண்டு இஷான் திரும்ப, செருப்பின் பக்கில் சேலையின் நுனியில் இருந்த நூலில் இழுப்பட்டு, முந்தானை நழுவாமல் உதவிய பின்னை வாய்பிளக்க வைத்தது.
 
“அச்சோ” என்று இடது பக்கம் முந்தானையை பிடித்து இஷானை பார்க்க, அவனோ மகளது காலில் இழுப்பட்ட நூலை துண்டித்து, கார் கதவை சாற்றினான். கூடுதலாக காருக்கு வெளியே மகளை தூக்கியபடி நிற்கவும் செய்ய, துகிரா அவசரமாய் பின்னை சரிசெய்து காரை தட்டினாள்.

உடை சரிப்படுத்தியதும் இஷான் கார்கதவை திறந்து, வந்தவளை பார்த்து நடந்தான்‌.
  துகிரா இஷான் பின்னால் நடக்க, பார்க்கவே கணவன் மனைவி குழந்தை என்ற நிறைவோடு இஷானை கண்டதில் மகிழ்ந்தார் பைரவி.

  அந்த மகிழ்ச்சியில் தான் ரிஷியின் காதலுக்கு பச்சை கொடி காட்டி வந்து சேர்ந்தார்.

   அஞ்சனா குடும்பத்தில் அவளது அப்பா அம்மா, அண்ணன் அண்ணி கூடவே குழந்தை கிஷோர் என்றிருக்க பெரியவர்கள் வரவேற்றனர். கிஷோரோ அமுல்யாவை கண்டதும் ஆர்ப்பரித்து குதித்து விளையாட அழைத்து சென்றான்.

  “அமுலு” என்று இஷான் தெரியாத இடமென்று பதற, “கிஷோர் அமுல்யாவோட டியரஸ்ட் பிரெண்ட் விளையாடிட்டு இருப்பாங்க பயப்படாதிங்க” என்று பொதுவாக உரைத்தாள். இஷான் செவியில் ஏற்றதற்கான அறிகுறியாக, மகளை எண்ணி பதறாது நின்றான்.‌

  துகிராவோ ஏற்கனவே கிஷோரின் அம்மா தெரிந்தவர் என்பதால் முதலாவதாக நன்றாக நலம் விசாரித்து கொண்டார்கள்.

   அஞ்சனா அறைக்குள் அலங்காரம் செய்தவளாக அறைக்குள் இருந்தாள். 
  அஞ்சனா அப்பா அம்மா ரிஷியின் குடும்பத்தை கண்டு ஓரளவு திடமாய் தான் இருந்தனர்.

பையன் எப்படிப்பட்டவனோ? குடும்பம் எப்படிப்பட்டதோ? லட்சணமானவனா? உத்தியோகம் எப்படியோ? என்று பல்வேறு குழப்பத்தில் அஞ்சனாவை வசைப்பாடியவர்கள், குடும்பத்தை கண்டதும் சற்று நிம்மதியானார்கள். இதில் மருமகளுக்கு தெரிந்த பெண் என்றதில் கூடுதல் நிம்மதி.

   அஞ்சனா அண்ணன் ரவி இஷானோடு பேச தயாரானார்.
“நீங்க தானே சார்.. அமுல்யாவை பற்றி கேட்டவர். லீலா இவர் தான்” என்றார்.

  “அவங்க தான்.” என்று “இவர் எங்க மாமா சுதாகர், அத்தை சரிதா.” என்று கூறினாள். அஞ்சனா ஏற்கனவே ரிஷி பேமிலியை அறிமுகப்படுத்தியிருக்க புதிதாக துகிராவை மட்டும் இஷானோடு மணந்த கதையை கூறினார்.‌

   அஞ்சனாவை காணவும் பைரவிக்கும் ஓரளவு நிறைவு உண்டானது. குடும்பமும் பிடித்திருந்தது.
 
   ரிஷி கல்லூரி முடித்து, அடுத்து பிசினஸ் செய்ய தயாராக இருப்பதை தெரிவித்து, தனிக்குடும்பம் விருப்பம் இருந்தாலும் ரிஷியும் அஞ்சனாவும் தனியாக செல்வது அவரவர் இஷ்டம் என்றது வரை இஷான் தான் பேசினான்.
ரிஷி ஆமோதிப்பாய் இருந்தான்‌. பைரவி தான் ரிஷியிடம் உனக்கு இஷ்டமிருந்தா ஒரே குடும்பமா இருப்போம்‌. இல்லைன்னா தனிகுடும்பமா போ. ஆனா நெருக்கம் விட்டு போகக்கூடாது.’ என்பது மட்டுமே தெளிவாக உரைத்தார்.

   அதை தான் இஷான் பேசவும், அஞ்சனா பெற்றோர் படிப்பு முடிவடையும் வரை காத்திருக்க கூறினார். மேலும் வேறு வரனும் பார்க்க மாட்டோமென்று வாக்கு தந்தார்கள்.

    அஞ்சனாவும் ரிஷியும் பார்வையால் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்கள்.

நிச்சயதட்டு மாற்ற நினைக்கும் தருணம் பைரவி இஷான் துகிராவை மாற்ற உந்தினார். துகிரா கவனிக்காமல் அமுல்யாவை பார்த்திட, “துகிரா” என்று இஷான் அழைத்து தட்டு மாற்ற கையை நீட்டினான்.‌
  துகிராவோ இஷானா அழைத்தது என்று ஆச்சரியமாய் பார்வையிட, தட்டை சேர்ந்து கொடுக்க உந்தவும், அஞ்சனா அப்பா அம்மாவிடம் தரவும் இனிதாக நிச்சய விழா நிகழ்ந்தது.

லேசாக கை நனைக்கும் விதமாக சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்கள்.

துகிராவுக்கு மனமெல்லாம் இஷான் தன்னை பெயரிட்டு அழைத்ததையே எண்ணி உவகை கொண்டாடினாள். ஆனால் பாவம் அவள் அறியவில்லை ரிஷி மாமனார் மாமியார் பார்வைக்கு அவன் அவளை தான் அழைக்க வேண்டும். வீட்டிலேயே பைரவி ‘நான் அமங்கலி. அங்க தட்டு மாத்தணும்னா நீயும் உன் பொண்டாட்டியும் தான் செய்யணும். அப்பறம் அங்க வந்து சபைக்கு புருஷன் பொண்டாட்டியா நிற்க மாட்டேன்னு அலம்பல் பண்ணாத. தேவையில்லாம நம்ம மேல இருக்கற மரியாதை போயிடும். உன் தம்பி வாழ்க்கைக்கு நீ இந்த உதவி செய்.’ என்று கூறியிருந்தார்.‌
 
   அதன் காரணமாக முதலிலேயே யோசித்து விட்டான். துகிராவை பொறுத்தவரை தான் பேசினால் பதில் சொல்லும் பதுமை. அதனால் எப்படியும் சபையில் அவன் கூப்பிட்டால் சூழ்நிலை உணர்ந்து நடந்துக்கொள்வாளென கணித்தான். அதுப்படியே நடந்தேறியது.

   சுமூகமாக ரிஷியின் காதல் முதலடியில் எடுத்து வைக்கும் விதமாக வீட்டிலேயே நிச்சயம் போல பேசியதால் அடுத்துபடிப்பு முடிய திருமணம் வரை இந்த ஜோடி இணைவதில் தடையின்றி காதலித்தனர்.
 
   திரும்பும் போது ‘அப்பா கிஷோர் ஸ்கூல்லயே என்னால படிக்க முடியாதா?” என்று கேட்க, “இல்லைம்மா… அப்பா அம்மா எங்க இருக்கோமோ அங்க தான் குழந்தை படிப்பு தொடர முடியும். பிரெண்ட்ஸ்காக எல்லாம் மாற முடியாது. இங்கயிருக்கற பிரெண்ட்ஸ் இன்னும் கொஞ்ச நாள்ல கிஷோர் மாதிரி திக்கஸ்ட் பிரெண்டா மாறுவாங்க” என்று கூறவும் அமுல்யாவோ அன்னை மடியில் அதை கேட்டு ஒருவிதமாக தலையாட்டினாள்.

  “பிரதன்யாவுக்கு அடுத்து மாப்பிள்ளை பார்க்கணும் இஷான். நான் இருக்கும் போதே அவளுக்கும் நல்ல இடமா முடிவானா என் கடமை முடிந்தது.
  ரிஷி அஞ்சனா ஒருத்தருக்கு ஒருத்தர் இருப்பாங்க.
  அமுல்யா நீ துகிரானு ஒரு குடும்பமா இருப்பிங்க.” என்று பைரவி கூற, “இப்ப என்ன அவசரம் எனக்கு படிப்பே முடியலை. ரிஷி அண்ணாவாவது அடுத்த சில மாசத்துல படிப்பு முடியும். அவங்க லவ்வர்ஸ்.  அண்ணா அம்மா சொல்லறாங்கன்னு ஏதாவது பார்க்காதிங்க. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று பிரதன்யா மறுத்தாள்.

    “நான் இருக்கறப்ப ஏதாவது நல்லது நடக்க தானே பேசறேன்” என்று பைரவி லேசாக கடிய, “ஆஹ்.. அதெல்லாம் என் கல்யாணம் வரை இருப்பிங்க. சும்மா இப்படி எமோஷனலா பேசாதிங்க. அண்ணாவுக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு அப்பா பெயர் வச்சி தொட்டில்ல போட வேண்டாமா?” என்றதும் இஷான் காரை நிறுத்த, துகிராவோ பிரதன்யாவை கண்டு விழிக்க, பிரதன்யாவோ “நான் ரிஷி அண்ணாவுக்கு சொன்னேன்.” என்று மழுப்பினாள்.

  இஷான் மீண்டும் காரை ஓட்டுவதில் முனைப்பாய் இருக்க, பிரதன்யாவோ அதிகப்படியாக பேசிவிட்டோமென அன்னையை காண, பைரவியோ அதெல்லாம் இல்லை நீ பேசியதில் தவறாக இல்லை என்ற விதமாக இமை மூடி நான் பார்த்துக்கறேன்‌ என்றார்.‌

   வீட்டிற்கு வந்ததும் தோட்டத்தில் மெர்ஸி சார்லஸ் அமர்ந்திருக்க, இவர்கள் கார் நுழையவும் சார்லஸ் சுட்டிக்காட்ட மெர்ஸி திரும்பினாள்.

  கார் நின்றதும் துகிரா இறங்கி வர மெர்ஸி தன் தோழியை ‘பளாரென’ அறைந்து நின்றாள். அமுல்யாவோ “அப்பா அம்மாவை அடிக்கறாங்க.” என்று அவனோடு ஒன்றினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 
 













9 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 ishan kooptadhukey endha ponnu evlo santhosha padudhe paavam🙄 mercy konjam thugira pakkanum purinjikanum pa parpom 🤔🧐

  2. Kalidevi

    Rishi eppadiyo avan love ok pana vachitan iishan oru alavuku etho pesuran kudiya sikram bairavi amma ninacha mari ssrrnthu vazhvanga prathanya sonna mari kolanthai pirakum .ishan kolanthaika e manasu maruvan . Mercy vera ippadi pesura thukira situation purinjikama panra

  3. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 20)

    அடேயப்பா…! இந்த இஷானையும் துகிராவையும் சேர்த்து வைக்குறதுக்குள்ள
    தாவு தீர்ந்திடும் போல. மழை விட்டும் தூவானம் விடலைங்கிற மாதிரி தான் இருக்குது.

    அய்யய்யோ..! திரும்பவுமா ?
    இப்ப எதுக்கு இந்த மெர்ஷி வந்திருக்கா ? திரும்ப அறைஞ்சு தள்ளவா..?
    ஊரான் வீட்டு நெய், இன்னும் ஒரு கையிங்கிற மாதிரி…
    ஆளாளுக்கு அறைஞ்சு தள்ளுறாங்களோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 20)

    அடேயப்பா…! இந்த இஷானையும் துகிராவையும் சேர்த்து வைக்குறதுக்குள்ள
    தாவு தீர்ந்திடும் போல. மழை விட்டும் தூவானம் விடலைங்கிற மாதிரி தான் இருக்குது.

    அய்யய்யோ..! திரும்பவுமா ?
    இப்ப எதுக்கு இந்த மெர்ஷி வந்திருக்கா ? திரும்ப அறைஞ்சு தள்ளவா..?
    ஊரான் வீட்டு நெய், இன்னும் ஒரு கையிங்கிற மாதிரி…
    ஆளாளுக்கு அறைஞ்சு தள்ளுறாங்களோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!