அத்தியாயம்-22
இஷானின் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமெனும் விபத்து நிகழ்ந்தாலும், கண்விழித்தால் ராட்சஸன் அவதாரம் எடுப்பானென்று துகிரா அஞ்சிவிட்டாள். அதுவும் சார்லஸ் மெர்ஸி வந்து தங்கி உறங்க சென்ற இந்த நேரத்திலா சண்டை வெடிக்குமோயென பயந்துவிட்டாள்.
ஆனால் இஷான் அரையுறக்கத்தில் ‘குட்நைட்’ என்று உலறிவிட்டு இமை மூடி உறங்கியப்பின் தான் துகிராவுக்கு மூச்சே சீரானது. இஷானுக்கு மகள் அமுல்யா சில நேரம் தந்தை கன்னத்தில் இப்படி முத்தமிடுவதை எண்ணி, அவளாக இருக்குமென விட்டிருக்கலாம். இல்லையேல் தூக்கத்தில் கவனிக்க தவறியிருக்கலாம்.
இஷான் உறக்கத்திலிருப்பதால் தப்பித்தோமென அவசரமாய் அவளது இடத்தில் வந்து சுருண்டு படுத்துக் கொண்டாள்.
கண்கள் இறுக, ‘கடவுளே… இன்னும் என்னலாம் நான் அனுபவிக்கணும்னு தெரியலை. ஒரு நிமிஷத்துல உயிர் போய் உயிர் வந்துடுச்சு. இனி அம்மு அவர் கூட இருக்கறப்ப அம்முவை கொஞ்சவே கூடாது. இது எனக்கு பெரிய பாடம், அனுபவம்’ என்று எடுத்துக் கொண்டாள்.
இன்றைய நாளில் ரிஷிக்கு பெண் பார்க்க சென்றது ஒருவிதமான பாஸிடிவ் பீல் தந்தது. அதுபோலவே வீட்டுக்கு வந்ததும் தோழி மெர்ஸியோடு கதையளந்ததில் பழைய உற்சாகத்தை உணர்ந்தாள் துகிரா. அக்காவோடு இருந்த பொழுது எல்லாம் எப்படி உணர்ந்தாலோ அப்படி தான் இன்றும் ஆனந்தமாய் உணர, அடுத்த வினாடி அக்கா அப்பா அம்மாவை இழந்த வலியும் நினைக்க, கண்ணீர் எட்டிப் பார்த்தது.
இஷானோ துகிரா வரும் போதே முழித்திருந்தவன் அவள் அருகே வந்து அமுலுக்கு முத்தமிடவும் உறங்குவதாக நடிக்க ஆரம்பித்தான்.
ஆனால் அந்த நடிப்பில் துகிரா முத்தம் வந்து விழவும், தடுமாறி போனான். துகிராவின் கண்கள் மருண்டு விழிக்க, அவளாக ஆசையாக தரவில்லை என்றறிந்து, உறக்கத்தில் உலருபவனாக காட்டி கொண்டான். அதனால் துகிராவுக்கும் தனக்கும் இந்த முத்ததிலாவது சங்கடங்கள் தவிர்க்கட்டுமென்ற எண்ணம்.
அதுபோலவே துகிரா முதலில் பயந்தவள் இஷான் உறங்குவதாக தெரிய சங்கடம் களைந்து நிம்மதியாக உறங்க, மெதுவாக இமை திறந்தான்.
துகிரா அழவும் ‘சே இந்த பொண்ணு பாவம். என்னிடம் வந்து மாட்டிக்கிட்டா’ என்றவன் பட்டும் படாமலும் பட்டாம்பூச்சி மோதிய விதமாக கன்னத்தில் விழுந்த முத்தத்தை நினைத்தான். அவன் எண்ணத்தில் முதல் தடவை முரட்டு யுத்தமாக நிகழ்ந்த முத்தத்திற்கும் இதற்கும் வித்தியாசங்களை கண்டறிந்தவன், முத்தத்திலும் பலவிதமான வித்தியாசத்தை துகிராவோடு நிகழ்த்தலாமென்ற எண்ணத்தில் பதறினான்.
ஒரே உருவத்துல இருந்தா இதான் பிரச்சனை. துர்கா துகிரா என்றதில் குழம்பி சூடாகுகிறேன்’ என்று மறுபக்கம் திரும்பி படுத்தான். அவனுக்கு மனைவி உருவத்தில் மச்சினி இருக்க, மச்சினிச்சியை விரட்டினான்.
ஆனால் மச்சினிச்சியையே தாலி கட்டி மனைவியாக மாறியப்பின் இருதலை கொள்ளி நிலையில் துவள்கின்றான்.
மூவரின் உறக்கத்தை அதிகாலை கதிரவன் விரட்ட வந்தான்.
அமுல்யாவை சீருடை அணிவித்து பள்ளிக்கு தயார்படுத்த, மெர்ஸி அதையெல்லாம் வேடிக்கை பார்த்தாள்.
பைரவி தான் மெர்ஸி சார்லஸை கவனித்தார்கள். பிரதன்யா ரிஷி கூட கல்லூரி கிளம்ப, இஷானுக்கு தேவையானதும் துகிரா தான் கொண்டு வந்து பக்கத்தில் வைத்தாள்.
ஆளாளுக்கு கிளம்பி வெளியேறியதும் பைரவி நட்பு ரீதியாக சிரித்து அறைக்கு சென்றுவிட்டார். சிநேகிதிகள் பேசட்டும். நான் இடைஞ்சலாக இருக்க போகின்றேன் என்று அறையில் கிடந்தார். சார்லஸ் மட்டும் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான்.
மெர்ஸியோ “என்ன மேடம் குழந்தையும் புருஷனையும் வழியனுப்பியாச்சா?” என்று கேலி செய்ய, “என் குழந்தையை ரெடி பண்ணி அனுப்பினேன். அவர் அவரா தானே கிளம்பினார்.” என்று யோசனையாய் கேட்டாள் துகிரா.
“அடிப்பாவி அவருக்காக நீ என்னயென்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியாதா? உன் அம்முவும் புருஷனும் மாடில இருந்து நடந்து வர்றப்பவே காபி பால் இரண்டும் ஆத்தி மேஜையில் வச்சிட்ட, அம்மு பால் எடுத்தா, நீ காபி பக்கத்துல நியூஸ் பேப்பர் வச்ச, பேப்பர் எதுக்கு? அவருக்கு தானே.
அடுத்து குளிச்சிட்டு வந்தார். பிரெக்பஸ்ட் தட்டுல வச்சிட்ட, அம்முக்கு தான் ஊட்டிட்டு இருந்தனு பார்த்தா, உன் கணவருக்கு குழம்பு தேவைப்படற நேரத்துல தானா மேடம் தள்ளி வச்சிங்க. அவரும் ஊத்தி சாப்பிடறார்.
ரொம்ப நேரமா அல்வா திறக்கலை என்றதும் அதை திறந்து அவர் முன்ன நகர்த்திட்ட, இது போதாதுனு தண்ணி காலி என்றதும் அதையும் ஊத்தி பக்கத்துல வச்ச, நான் கவனிக்கலைன்னு நினைக்காத.
அதுமட்டுமா? உன் பொண்ணு ஷூ துடைச்சி நீட்ட வைக்கும் போது இஷானோட டிரஸ் கலரை பார்த்து நீயா அந்த கலர் ஸூவை சுத்தம் பண்ணி பாலீஷ் பண்ணி வச்ச, அவரும் ஷூ போடறப்ப, இரண்டு செகண்டுக்கும் குறைவா, உன்னை பார்த்துட்டு, ஷூவை போட்டார். எல்லாம் பார்த்தேன்.
இந்த பார்வை பரிபாஷையா? இல்லை சொல்லாமலே பார்த்து பார்த்து செய்யறியா? சம்திங் நல்லா இருக்கு பார்க்க. ஆனா பேசி பழகு. பேசினா தான் கெமிஸ்ட்ரி வரும்.” என்று கூற, “போ மெர்ஸி. எனக்கு இந்த வாழ்க்கையே போதும் சும்மா இரு.
சார்லஸை எழுப்ப பாரு. ரொம்ப நேரமா வெறும் வயிற்றோட இருக்கப் போறார்.” என்று பேச்சை மாற்றினாள் துகிரா. இல்லையென்றால் மெர்ஸி கூடுதலாக பேச பேச துகிராவுக்கே ஆசை உள்ளுக்குள் துளிர்விடுமே. ஏற்கனவே இஷான் போன்றவனை பார்த்து மனம் தடுமாறுகின்றது.
அடுத்தடுத்த பரபரப்பான நேரத்தில் சார்லஸ் எழுந்ததும் கிளம்ப ஆயத்தமானான்.
“இரண்டு நாள் இருக்கலாமே மெர்ஸி” என்று கூற, “வேலைக்கு லீவு சொல்லிட்டு வந்தேன் டி. கல்யாணத்துக்கு லீவு எடுக்கணும். இப்ப தேவையில்லாம எடுத்தா அப்பறம் லீவு தரமாட்டாங்க. ஆமா… நீ வேலையை விட்டுட்ட, நெக்ஸ்ட் என்ன ஐடியா?” என்று கேட்டாள்.
உணவு மேஜையில் பைரவி இருக்கும் பொழுது மெர்ஸி கேட்டாள்.
“ஏதாவது வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையா பார்க்கணும் மெர்ஸி.” என்று கூற பைரவியோ, “அதுக்கு தேவையிருக்காதே துகிரா” என்றார். தோழிகள் பேச்சில் இடைப்புகுந்தார்.
“இல்லை அத்தை… ஏதாவது கொஞ்சமாவது பணம் ஈட்டணும். இல்லைன்னா என்னைக்காவது வேலைக்கு போகணும்னா சோம்பேறித்தனமாகிடும்.” என்று கூறவும் பைரவியோ, “என்னக்காவது உன் புருஷன் வெளியே போன்னு சொல்லிடுவான்னு நினைக்கறியா?” என்று கேட்டதும் துகிரா நிதானமாய் இல்லையென்று மறுத்தாள்.
“பினான்சியல் சப்போர்டுக்கு லைஃப் பார்ட்னரை ஏடிஎம் கார்ட் போல சார்ந்திருப்பது சிலரா இருக்கலாம் அத்தை. அதுக்கு பயந்து வேலை தேடறேன்னு நினைக்க வேண்டாம்.
வேலைக்கு போறது என்னோட செல்ஃப் கான்பிடன்ஸுக்கு. நான் இன்னமும் என்ன செய்யலாம்னு யோசிக்கக்கூடயில்லை. உங்களுக்கு நான் வேலை பார்த்தா இந்த வீட்டை விட்டு எப்ப வேண்டுமென்றாலும் போயிடுவேன்னு பயம் இருந்தா, அந்த பயம் வேண்டாம். நான் உங்க பிள்ளையை விட்டு, என் குழந்தையை விட்டு எங்கயும் போகமாட்டேன்.” என்று முடித்தாள்.
“தேங்க்ஸ்… முதல் முறையா, அமுல்யாவுக்காக மட்டும் இருப்பேன் என்ற வார்த்தையை தவிர்த்து என் பிள்ளைக்காகவும் இருப்பேன்னு சொல்லிட்ட. என் பிள்ளையை என்னைக்காவது உன் புருஷன் என்ற வார்த்தையா மாத்தி சொல்லி என் நெஞ்சை குளிர்விப்ப” என்று அவரும் உரைத்திட, மெர்ஸியோ, “கவலையேபட வேண்டாம் அம்மா. அவ சொல்வா.” என்று நம்பிக்கை தந்தாள்.
துகிராவோ இஷான் என்னை அமுல்யா அம்மாவா அக்சப்ட் பண்ணினாலே போதும்’ என்று பேராசை படாமல் புன்னகை பூத்தாள். ஆனால் உள்ளுக்குள் லேசான ஆசை இருந்தது என்னவோ உண்மை.
மதியம் உணவருந்தி மாலையில் இஷான் அமுல்யா வந்தப்பின் சார்லஸ்-மெர்ஸி கிளம்பினார்கள்.
துகிரா மாலையில் அமுல்யாவோடு பாடம் சொல்லிக் கொண்டிருக்க, இஷான் மகளை கொஞ்சியபடி, உடைமாற்றினான்.
அதென்னவோ இஷானுக்கு துகிரா இருக்கும் பொழுது உடைமாற்றுவதில் கூட அசௌகரியம் அடைந்ததில்லை.
ஆனால் துர்கா என்று மறந்து ஷர்ட் பட்டனை கழட்டுவான். துகிரா என்றது நினைவு வர, அணிய வேண்டிய ஷர்ட் எடுத்து குளியலறை புகுந்திடுவான். அவனுக்கு துர்கா துகிரா என்ற வேறுபாட்டில் சிக்கி தவிக்கின்றான்.
அமுல்யா நான்காம் வாய்ப்பாடு தெரியாமல் முழிக்க “என்னடா… போர் டேபிள்ஸ் தெரியலையா. அதை படிங்க முதல்ல” என்று குழந்தையை டேபிள் படிக்க சொல்லிவிட்டு இஷானின் உடையை துவைக்க போட எடுத்தாள்.
“உன் பிரெண்ட் பஸ் ஏறிட்டாங்களா” என்று இஷான் வினவ, ஆமென்று தலையாட்டினாள் துகிரா.
இஷான் தனக்கு கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு நகர்ந்திட, துகிராவோ அவன் சென்ற திசையையே வெறித்தாள்.
“மம்மி… டேடியை பார்த்தது போதும். 6*4 என்ன?” என்று கேட்டாள் அமுல்யா.
“ஆஹ்.. 6+4=10 அம்மு.” என்றதும், “அய்யோ மம்மி அடிக்ஸன் கேட்கலை, மல்டிபிளிக்கேஷன் கேட்டேன்.” என்றதும் துகிராவோ தலையில் கைவைத்து, “6*4=24” என்று கூற, அமுல்யா நோட்டில் எழுதினாள்.
இஷானை கண்டால் துகிராவின் மனதிற்குள் பூக்கள் பூக்கின்றன, பட்டாம்பூச்சி பறக்கின்றன, இதயப்பகுதியில் சில்லென்ற பனிக்கூழ் பரவசத்தை தருகின்றது.
முதன் முதலில் அக்கா கணவர் ‘மாமா’ என்ற அர்த்தத்தில் எட்டி நிறுத்தி அவன் செய்த காரியத்தின் வீரியம் கண்டு, இஷான் அருகே நிற்பதற்கே நடுங்கினாள்.
இப்பொழுது எல்லாம் இஷானை காணும் நேரம் அவன் கட்டிய தாலி அவள் நெஞ்சில் உரசி உரசி, ‘உனக்கானவன்’ என்ற ஏக்கத்தை விதைத்தது.
இஷான் சாதாரணமாகவே பெண்களை வசியம் செய்யும் முக அழகை கொண்ட ஜித்தன். அதிலும் முரட்டு முத்தத்தை விதைத்து சென்றதில், காதலென்ற எழுத்தை கூட மூளைக்குள் ஏற்றாத துகிராவுக்கு, அவன் முத்தமிட்ட காட்சி மூளையிலும் மனதிலும் ஒன்றாக ஆழமாக பதிவாகி தொலைத்திருக்க, சார்லஸை இவள் மணக்க முடிவான போது, அந்த முத்த யுத்தம் அசிங்கமாக தோன்றியது.
அக்கா கணவரிடம் பெற்ற முத்தமாக… இன்றோ தாலி கட்டியவனிடம் முதல் தடவை பெறப்பட்ட, முரட்டு முத்தத்தில் இதழ் கொய்யப்பட்ட நாட்களாக, அவளது மனம் நினைத்தது. தாலி கட்டியப்பின் உண்டான ஒருவிதமான உரிமை, காதல் உண்டா இல்லையா என்ற விஷயத்தில் ஆராயாமல், இஷானை கணவனாகவே மனம் பூஜித்தது.
தாம்பத்தியம் இல்லாமல் கூட தன்னால் இஷானின் குழந்தையை முன்பு போலவே தன் குழந்தையாகவே பாவித்து வாழ்ந்து முடிக்க முடியும்’ என்று தெளிவுப் பிறக்க, இதுபோல சில நேரம் இஷானை தன்னை மறந்து சில நாட்களாக ரசிக்கின்றாள். ஒரே அறையில், அதிகப்டச நேரம் உறங்கும் தருணத்திலும், கணவன் மனைவி என்ற பந்தத்திலும் காணும் போது வந்த உரிமை நிகழ்வாக இருக்கும்.
இதற்கு எந்த நேரத்தில் இஷான் கொதிக்கலனாக மாறப் போகின்றானென்ற பயம் உள்ளுக்குள் தகித்தாலும், அவளொன்றும் உரிமையற்ற ஒருவன் மீது நேசம் வைக்கவில்லை என்ற நிம்மதியில் தேற்றிக்கொண்டாள்.
நேசம் பிறந்ததிலிருந்து துர்கா அக்காவின் கணவர் என்ற முறையை மறந்தாள். இஷான் துகிராவின் கணவன்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 thukira oru alavuku manasa maathitu nidharsanatha yethukuta endha ishan dhan seekirama maaranum parpom 🤔🧐
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்க ராஜ்
(அத்தியாயம் – 22)
ஆக மொத்தம், துகிரா மனசும் கூட இப்ப தள்ளாட ஆரம்பிச்சிடுச்சு. இஷான் முதல் சந்திப்புல கொடுத்த முரட்டு முத்தத்துலயே கவுந்தடிச்சிட்டான்னு ஏற்கனவே தெரியும். என்னவொன்னு, அக்கா தங்கச்சிங்கிற உறவு முறை தான் கொஞ்சம் சங்கடப்படுத்துது போல. போக, போக அது கூட சரியாகிடும்ன்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice 🥰
துகிரா இஷானை கணவனா பார்க்க ஆரம்பிச்சுட்டா 😊 இஷான் தான் இன்னும் துர்கா துகிரா னு சிக்கி தவிக்கிறான் 😣
Super super super super super super super super super super super super super super
Spr going 👌👌👌👌👌 waiting for nxt epi 😍😍😍
ETHO NORMAL AH PESURAN AANA THUKIRA THA PESA THAYANGURA PURUSHANA PAKA START PANITA ENI ATHU KANDIPA ANTHA LIF KULLA KUTITU POGUM THUKI , VIRUMPURAVANGA PAKATHULA ILLANA SAMALIKALA AANA PURUSHANA KUDA VACHITU ENTHA AASAIUM VARA IRUKUMA VARAMA IRUKA NEE ENA SANNIYASI SIKRAM RENDU PERU SERUVINGA
Nice!!!
Super 👏
Nice going