அத்தியாயம்-25
ஹோட்டல் அறைக்குள் வந்ததும் அமுல்யா தான் மெத்தையில் ஏறி துள்ளி குதித்தாள். இஷான் துகிரா இருவருமே ரிஸப்ஷன் பெண் கூறியதை கேட்டு மௌனமானார்கள்.
துகிராவோ ‘இங்க பஸ்ட் நைட்டே நடக்கலை. இதுல செகண்ட் ஹனிமூன். ஸப்பா… இந்த ரிஸப்ஷன் பொண்ணுக்கு யார் தான் பேச ஸ்கிரிப்ட் எழுதி தருவாங்களோ?’ என்று நிதானிக்க, இஷானோ, ‘எனக்கு இங்க எதுவும் சரியாப்படலை.’ என்பதாக துகிராவை காண, அவளோ மகளை முத்தமிட்டு மேகத்தை காட்டி பேச, இஷான் காணவும் துகிரா பார்வையை இவன் புறம் திரும்ப, “அப்பா… அங்க பாருங்க க்ளவுட் அழகாயிருக்கு” என்று ஆர்ப்பரிக்கவும், இஷான் “நீ பாரு அப்பா நீங்களாம் ரெடியாகறதுக்குள் குட்டி தூக்கம் போடறேன்” என்று மெத்தையில் தன் பாரத்தை களைய முற்பட்டான்.
ஹீட்டர் போட்டுவிட்டு அலுப்பு தீர துகிரா குளித்து முடித்தாள். அதற்குள் அமுல்யாவோ அந்த அறையில் ஒவ்வொரு இடத்திலும் சென்று இடத்தை பார்வையிட்டாள். மெத்தையில் குழந்தைக்கென்று தனி மெத்தை வேறு இருக்க, “அப்பா இந்த பெட் குட்டியா ரொம்ப அழகாயிருக்கு. நம்ம வீட்டுக்கு போனதும் எனக்கு இதுபோல குட்டி பெட் வேண்டும்.” சுட்டிக் காட்டினாள். அது ஒருத்தர் மட்டும் உறங்க தோதுவான சிங்கிள் பெட்.
மகள் கொஞ்சி கேட்க “வாங்கலாம்” என்றவன் வெளியே பார்வையிட்டு முடிக்க, ஊட்டியின் செழுமையில் மனதை தொலைத்தான். அவனுக்கு துர்காவோடு வந்த நாட்கள் எல்லாம் காட்சியாய் வந்து சென்றது.
துகிராவோ “அம்மு போ குளிச்சிட்டா சாப்பிட போகலாம்.” என்று கூற, அமுல்யாவோ குளிக்க ஓடினாள்.
துகிரா இஷான் மட்டும் இருக்க, இஷான் பால்கனி இடத்திலேயே வேடிக்கை பார்க்க, துகிராவோ தலைவாறி அலங்காரம் செய்வதில் நேரம் சென்றது.
“மம்மி டவல்” என்றதும், துகிரா தரவும் அமுல்யாவோ “ம்மமி குளிருது.” என்று நடுங்க, வேகமாய் உடைமாற்றி விட்டாள். ஸ்வெட்டர் எல்லாம் அணிவித்து முடிக்க, இஷான் குளிக்க சென்றான்.
அமுல்யாவுக்கு தலைவாறும் போது, இஷான் டவலை இடையில் அணிந்து, தலையை துவட்டியபடி வர, துகிரா சங்கோஜமாய் அமுல்யாவுக்கு தலைவாறி லிப்ஸ்டிக் போட்டு விட, இஷானோ எப்பவும் போல சற்று நேரம் கழித்தே துகிரா என்றது நினைவு வர உடனடியாக வேறு அறைக்கு ஓடவும் முடியாமல் விழிக்க, “நம்ம பால்கனிக்கு போகலாம்” என்று துகிரா மகளை அழைத்து வந்தாள்.
இஷான் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுப்கோப்பாக வைக்க வேண்டிய அவசியமின்றி, சாதாரணமாகவே உடல் கச்சிதமாக இருக்கும். அதிலும் தண்ணீர் துளிகள் உடலில் ஆங்காங்கே முத்து போல இருக்க, சற்று கவர்ச்சியாக இருந்து தொலைத்தான்.
அம்மாவும் பொண்ணும் சாப்பிட வெளியே செல்ல தயாராகி இருந்தனர்.
இஷான் டீஷர்ட் ஜீன் சகிதம் வந்தவன், அருகேயிருந்த ஹோட்டலில் உணவு உண்ண குடும்பமாய் சென்றார்கள்.
இஷான் மகளை தன்னோடு அமர வைக்க, இஷானுக்கு எதிரே துகிரா அமர்ந்தாள்.
பூரி-கிழங்கு, மசாலா தோசை என்று ஆர்டர் தந்துவிட்டதால் மகளிடம் பேசினான்.
நிறைய பேசினாலும் எதிரே இருப்பவளை பார்த்து தொலைக்கும் கட்டாயம் வந்து சேர, துகிரா பாராத பொழுது கவனித்தான்.
துர்காவுக்கும் இவளுக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லாமல், பிரம்மன் தன் உயிரை பறிக்க அனுப்பியதில் இஷான் பார்வை சென்றாலும் சில நேரத்திலேயே, கண், காது, மூக்கு, வாய் என்று அங்கங்களை ஆராய துவங்கியது.
அமுல்யாவுக்கு பூரி வரவும், இஷான் மகளுக்கு ஊட்டிவிட, நேரம் கழிந்தது.
துகிரா பார்வையும் அம்முவை அழகாக பார்த்துக் கொள்ளும் இஷான் மீது பதிந்தது. ‘குழந்தையை எல்லாம் நல்லா பார்த்துக்கறார். வீட்ல எல்லாரிடமும் நல்லா பழகறார். என்னிடம் தான் முகத்தை தூக்கி வச்சிக்கறார்.’ என்று அவனையே பார்க்க, தோசை வந்து ஆறவும், “தட்டை பார்த்து சாப்பிடறியா?” என்று கடிந்தான். இவ்வளவு நேரம் கள்ளத்தனமாய் அவனது பார்வையை மறந்து தொலைத்தான்.
துகிராவுக்கு அசிங்கமாகி போனதால் எவ்விதமான பதிலையும், வழங்காமல் சாப்பிடுவதில் கண்பதித்தாள்.
இஷான் இங்கு வந்து விட்டதையும், ஊர்சுற்றி பார்க்க செல்ல போவதையும், பைரவியிடம் தெரிவிக்க போன் பேசிமுடித்தான்.
முதல் சுற்றாக ஊட்டியின் தாவரவியல் பூங்காவிற்கு, மகளை அழைத்து சென்றான். ஊட்டியின் மிகப்பிரபலமான இடம். இங்கு வராமல் யாரும் இருக்க இயலாது. பலதரப்பட்ட மலர்களை கண்காட்சியில் காணலாம்.
அந்த மலர்களை எல்லாம் தோற்கும் விதமாக அமுல்யா அங்குமிங்கும் ஓடி பூக்களை ரசித்து, தந்தையிடமும் தாயிடமும உற்சாகமாய் விவரிக்க, அதல்லாம் புகைப்படமாக கேமிராவில் பதிவு செய்தாள் துகிரா.
‘நான் அப்பா கூட எடுக்கறேன்’ என்று துகிரா போனில் இஷானும் அமுல்யாவின் புகைப்படமாக பதிய, அதே போல இஷான் போன் கேமிராவில் துகிரா அமுல்யா புகைப்படமாக சேர்ந்தது.
”டேடி மம்மி சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம்” என்று அமுல்யா பிடிவாதத்தில் சில புகைப்படங்கள் மூவருமாக எடுத்தனர்.
அங்கே ஒன்றரை மணி நேரம் செலவாக, ஊட்டி பொம்மை ரயில், மியூசியம், ரோஜா தோட்டம் என்று இஷான் மகளை தூக்கி நடக்க சில நேரம் மகள் கையை பற்றி செல்ல, துகிரா இவர்களை பின் தொடர்ந்தாள்.
இருவரின் சந்தோஷத்தில் அமுல்யா அழைத்தால் கலந்துக்கொள்வாள். இஷான் முகம் காட்டினால் தள்ளி செல்வாள். நேரத்திற்கு தகுந்தது போல இஷான் முகமாற்றத்தை கொண்டு நடந்துக்கொள்வதில் துகிரா தேர்ந்தெடுத்த மனைவியாக திகழ்ந்தாள்.
மதியமானதும் ஹோட்டலில வந்து சாப்பிட எண்ணினார்கள். மூவரும் கை அலம்பி அமர துகிராவோ ஸ்வெட்டரை போட்டபடி, அமுல்யாவிடம், அமர, ‘நான் என் பொண்ணு பக்கத்துல” என்ற குரலில் துகிரா எழுந்து விட்டாள்.
இஷானுக்கே அந்த நேரம் கஷ்டமானது. துகிராவை தாலி கட்டி அவமரியாதையாக நடத்துவதாக தேன்றியது. ஆனால் நெருங்க விட்டால், தானே பாவப்பட்ட ஜீவனாக மாறலாமென்றதும் அவன் அறிவான்.
சூப் ஆர்டர் செய்து அமுல்யாவுக்கு ஊதி தந்தான் இஷான். துகிராவோ மகள் உதட்டிற்கு வெளியே சிந்துவதை டிசு பேப்பரால் துடைத்தாள்.
அந்த நேரம் ஒரு பெண் வெயிட்டர் வந்து, “ஹலோ மேம் எப்படியிருக்கிங்க. என்னை நினைவிருக்கா?” என்று கேட்க துகிராவோ இல்லையன்று மறுத்தாள்.
“மேம் நீங்க லாஸ்ட் டைம் ‘ஆரோபவன்’ சாப்பிட்ட பொழுது புட் மாறி கொண்டு வந்ததுக்கு பிரச்சனை ஆச்சே. அப்ப எனக்கு நீங்க தானே சப்போர்ட் செய்து ஓனரிடம் பேசினிங்க” என்று நினைவுகூர்ந்து கூற துகிராவோ விழித்தபடி இருந்தாள்.
“சிஸ்டர்.. எனக்கு நினைவியிருக்கு. சிக்கன் பிரியாணி கேட்ட எங்களுக்கு கார்ன் ப்ரைட் ரைஸ் கொடுத்துட்டு. கார்ன் ப்ரைட் ரைஸ் கேட்ட ஐயர் பொண்ணுக்கு சிக்கன் ப்ரியாணி நீட்டவும், அந்த பொண்ணு அய்யோ அம்மானு கூப்பாடு போட்டு இதுக்கு தான் சைவம் அசைவம் கலந்திருக்கற ஹோட்டலுக்கு வரமாட்டேன்னு அவங்க கணவரிடம் சண்டைப்போட, என் ஓய்ஃப் பிறகு உங்களுக்காக காம்பர்மைஸ் பண்ணினாங்க” என்று விவரித்தான்.
“எஸ் சார்… அந்த ஹோட்டல் விட இப்ப இங்க சம்பளம் அதிகம். அதோட அந்த ஹோட்டல் சார் தான் இங்க ரெகமண்ட் பண்ணியது. உங்க குழந்தையா மேடம் சோ கியூட். செகண்ட் ஹனிமூனா மேம். கங்கிராட்ஸ்” என்று இஷானை துகிராவை மாறிமாறி பார்த்து பேசி வாழ்த்து சொல்லி செல்ல, துகிராவோ, “ஏன் பார்க்கறவங்க எல்லாம் ஹனிமூனானு கேட்டு தொலைக்கறாங்க? சே” என்று முனங்கினாள்.
இஷானோ எவ்விதமான வினையாற்றாது சாப்பிட்டு அப்பெண்ணுக்கு டிப்ஸ் வைத்து சிறுபுன்னகையை உதிர்த்து சென்றான்.
வெளியே வந்ததும் “துர்கானு நினைச்சு அந்த பொண்ணு..” என்று இஷான் விளக்க முனைய, “தெரியுது… நான் எங்க ஊட்டிக்கு வந்தேன். எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் விட்டுடுங்க.” என்றவள், ”என் லைப்பைல என் கேரக்டர் எல்லாமே இல்லாம துர்காவாவே மாத்திடுங்க. என் சுயத்தை தொலைச்சிட்டு வாழறேன்” என்று சலிப்பாக பேசினாள்.
இஷான் டிக்கெட்டில் துர்கா என்ற பெயரை வைத்த கோபத்தையும், இங்கே இப்பொழுது இந்த பெண் துர்கா என்றே பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் இஷானை சாடினாள்.
பொம்மை ரயிலில் பயணம் முடித்து மாலை நேரம் ஹோட்டல் திரும்பினார்கள்.
இரவு உணவை ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து அறைக்கே வரவழைத்து சாப்பிடும் முடிவில் இருந்தனர்.
அமுல்யா அவளது அப்பா போனில் எடுத்த புகைப்படத்தை பிரதன்யா அத்தைக்கு அனுப்பி, பாட்டிக்கும் சித்தாவுக்கும் காட்ட கூறினாள். அதோடு வீடியோ காலில் பேசி பால்கனி வியூவை காட்டி, குளிராக உள்ளதென கூறினாள். இஷான் மெத்தையில் நன்றாக சாய்ந்துக்கொண்டு மகளின் ஆட்டத்தை பார்த்து ரசித்தான்.
அறைக்குள் பால்கனிக்குள், தனி மெத்தையை காட்டி, இங்க குட்டி பெட் இருக்கு அத்தை. அப்பாவிடம் இதே போல கேட்டியிருக்கேன். அப்பா வாங்கித்தர்றேன்னு சொன்னாரே” என்று மெத்தையில் குதித்தபடி பேசினாள்.
உணவு வந்ததும் பாட்டி இங்க பாருங்க மண்பானை பரோட்டா. ரூமுக்கே கொண்டு வந்துட்டாங்க” என்று வீடியோவை அப்படியே காட்டினாள்.
துகிராவோ “நான் சர்வ் பண்ணிக்கறேன்”னு என்று அமுல்யாவுக்கு ஊட்டிவிடும் வேலையில் இருந்தாள்.
“எங்க போனாலும் உங்க அம்மாவுக்கு உன்னை பார்த்துக்கறதே வேலை.” என்று பைரவி இஷானுக்கு கொட்டு வைக்கவும் தவறவில்லை.
“அம்மு பெட்ல சிந்தாம சாப்பிடணும் ஒரு இடமா உட்காரு” என்று அதட்டவும் செய்தாள்.
“ஓகே அத்தை பைபை. பாட்டி உம்மா. சித்தா அரியருக்கு படிங்க” என்று அமுல்யாவும் சித்தாவுக்கு கொட்டு வைத்து போனை அணைத்தாள்.
எட்டு முப்பதிற்கே அமுல்யாவுக்கு ஊட்டிவிட்டு அதே தட்டில் துகிரா சாப்பிட்டாள். இஷானும் சாப்பிட்டுவிட்டு, போன் கோமிராவில் எடுத்த புகைப்படத்தில் துகிரா அமுலு மட்டும் இருக்க, “நானும் அமுலுவும் இருக்கற போட்டோஸ் எல்லாம் இருந்தா, எனக்கு செண்ட் பண்ணிவிடு” என்று மொட்டையாக கூற துகிரா அனுப்பிக் கொண்டிருந்தாள்.
ஒன்பது ஒன்பதே காலிற்கு அமுல்யா அலைச்சலில் உறங்கியிருக்க, துகிராவும் படுத்துக் கொண்டாள்.
இஷான் ஒன்பது நாற்பதிற்கு உறங்க வந்தான்.
அவன் நேரமோ என்னவோ, அவன் வந்து சேரும் பொழுது அமுல்யா மெத்தையின் ஒரத்திற்கு சென்றிருக்க துகிரா நடுவில் படுத்துறங்கியிருக்க, இஷான் துகிரா அருகில் படுத்தான்.
பத்து ஐந்து வரை போனில், அமுல்யாவோடு துகிரா இருந்த புகைப்படத்தை கண்டவனுக்குள், துர்கா அமுல்யா போலவே மனதில் நினைத்தான். துர்கா இருந்தா இப்படி தான் இங்க வந்திருப்போம். செகண்ட் ஹனிமூனா இருந்திருக்கும். துர்கா என்னிடம் ‘கைகாலை வச்சிட்டு சும்மாயிரு இஷான்னு சிணுங்கியிருப்பா.’ என்று இறந்தவளோடு வாழும் விதமாக கனவு கண்டான்.
பத்து இருபதிற்கு, கண்கள் சுழல போர்த்தி படுத்திருந்தான்.
“அமுலு” என்று கைகள் மகளை தேட, துகிராவின் இடையில் கை வைத்தான்.
இமை மூடியவனுக்குள், “அம்மு… அந்தபக்கம் படுத்திருக்காளா?” என்று விழிதிறந்து பார்வையிட, துகிராவும், அரை உறக்கத்தில், “என்ன அம்மு” என்று திரும்ப, இஷான் கண்கள் நெருக்கத்தில் காட்சியளித்தது.
சுற்றிலும் இருட்டு, அறையை பிரகாசிக்க சின்ன வெளிச்சம் அதில் துகிராவின் பால் முகம் தெரிய, இஷானின் கைகள் மெதுமெதுவாக துகிரா பின்னந்தலைக்கு சென்று அவளை தன் முகத்தருகே நெருக்கியது.
துகிரா இடையிலிருந்து ஊர்ந்த இஷான் கையால் பேச்சிழந்து விழியை உருட்ட, அடுத்து இஷான் அவன் முகத்தருகே தன் உதடு செல்லவும், இஷான் செய்ய போகும் விபரீதம் உணர, இஷான் துகிராவின் இதழை கொய்திருந்தான். தன் கையால் இஷான் நெஞ்சில் கை வைத்து தள்ள நினைக்க, இஷானின் முத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மூளையை மழுங்கடிக்க வைத்து, மனமானது அவன் வசம், அவளை இழந்துக் கொண்டிருந்தது.
இஷான் முத்தங்கள் விடுபடாமல் தன் கையால் பெண்ணவள் மேனியில் அணைப்பை இறுக்கி, தன்னோடு ஒன்ற வைத்தான். எந்த நொடி, தன் கட்டுப்பாட்டை இழந்தானோ துகிராவை பூப்போல தூக்கி, தனியாக இருந்த மெத்தையில் பெண்ணவளை கிடத்தினான்.
துகிராவுக்கு இஷானின் உருவம், அவன் ஆசை, வேட்கை, இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், தன்னை ஆள்வதில் முனைகின்றான் என்று அறிய, அவன் விருப்பத்தை தடையிடாமல், அவளுமே மதிமயங்கினாள். இஷான் தொட்டு தூக்கி தானே தன்னை ஏந்தியது.
முகமெங்கும் முத்தங்களை விதைத்து துகிராவை மதிமயக்கத்தில் தள்ளிவிட்டவன், அவனுமே மன்மதனின் அம்பால் மதியிழந்து கிடக்க, அங்கே கரையை கடந்தது அலைகள்.
“துர்கா” என்று மோகத்தில் முதல் மனைலி பெயரை உச்சரித்து முன்னேறி, துகிரா கழுத்தில் கூச்சத்தை தர, துகிரா ‘துர்கா’ என்ற பெயரில் மூளையும் விழிகளும் விழித்துவிட்டது.
அக்கா துர்கா என்ற எண்ணி தன்னை நாடியதாக புரிய, “வேண்டாம் ப்ளிஸ்” என்று துகிரா உச்சரிக்குமுன், அவள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலை துக்கி பேசவிடாமல் முத்தத்தால் வாயை மூடினான்.
துர்காவோ துகிராவோ இஷான் அதை உணராது வேட்கையில் இருப்பதை அறிந்த துகிராவுக்கு, கண்ணில் கரை புரண்ட கண்ணீரோடு வலியை பொறுத்து இஷானை ஏற்க முடிவெடுத்தாள்.
இஷான் அவனது வேகத்தில், துகிரா கண்ணில் வழியும் கண்ணீரை தாமதமாகவே கண்டான். அதன்பின் அவன் மூளையும் விழித்துக் கொள்ளும் நேரம் சரியாக தான் ஆள்வது துகிரா என புத்திக்கு புரிந்தது. “துகிரா” என்று உணர்ந்திட, வலியை பொறுத்து உதடு கடித்தவளின் நிலை புத்திக்கு செல்லும் முன் அனைத்தும் நிகழ்ந்தது.
இஷான் துர்கா என்று ஆரம்பித்த பொழுது, திரும்பிய துகிரா பார்வை, இஷான் இப்பொழுது உதிர்த்த “துகிரா” என்ற வார்த்தையில் அவனை கண்டாள். கடைசியாக என் பெயரை உச்சரித்து விட்டாயே!? என்ற நிம்மதியில் அவளுக்கு மூச்சு வாங்கியது.
இஷானோ தவறு செய்தவனாக எழுந்தவன் நேராக குளியலறை சென்றுவிட்டான்.
ஏதேனும் பேசி அமுல்யாவின் தூக்கம் தடைப்படுமென்ற காரணமா, அல்லது இப்பொழுது நடந்த நிகழ்வுக்கு தான் மட்டுமே காரணமென்று புரிந்ததாலோ, அமைதியாக வந்து படுத்துவிட்டான். இஷானின் இயல்பே அவன் தவறுக்கு அமைதி காப்பவன் தானே. இதே இந்த தவறுக்கு துகிரா மட்டும் காரணமென்றால் தாம்தூமென்று வானுக்கும் பூமிக்கும் குதித்திருப்பான்.
துகிராவுக்கு முதல் கூடல் நிகழ்ந்த காரணத்தாலும், தற்போது எழுந்து இஷானோடு பேசவோ எவ்வித நிலையும், தன்னால் இயலாதென்று அசையவில்லை.
அவள் மனம், எப்படியோ முடிக்கும் பொழுதாவது தன் பெயரான ‘துகிரா’ என்று விளித்து விட்டானே என்று போலியாக சமாதானம் செய்துக் கொண்டது.
துகிரா உடல் அசதியில் உறங்கிட, இஷானுக்கு தான் உறக்கம் சுத்தமாக பறிப்போனது.
ஒன்று அல்லது ஒன்றரை ஆனப்பொழுது கண் அசந்தான். அதுவரை பால்கனியில் பனியில் ஈரத்தலையுடன் வீற்றிருந்தான்.
அதென்னவோ ஊட்டி குளிரோ, அல்லது எழுந்துக்க வேண்டிய அவசியமில்லாத காரணமோ, போர்வை போர்த்திருக்க, மணி எட்டாகியும் மூவரும் எழுந்துக்கவில்லை. ஊட்டி குளிரால் அமுல்யா மட்டும் பாத்ரூம் சென்று வந்தாள்.
அப்பொழுது தான் அன்னை தனி பெட்டில் படுத்துறங்குவதையும், தந்தை பால்கனியில் அமர்ந்தபடி உறங்குவதையும் கவனித்தாள்.
“அப்பா.. அம்மா ஏன் தனியா தூங்கறாங்க நீங்க ஏன் இங்க இருக்கிங்க” என்று இஷானை எழுப்ப, மகளிடம் கூறுவதற்கு தயங்கி, “அம்மாவுக்கு குட்டி பெட்ல படுத்து பார்க்க நினைச்சிருக்கலாம். உனக்கு எது வாங்கினாலும் உங்கம்மா தான் செக் பண்ணி நல்லதா கெட்டதா பார்ப்பாளே. அப்பா நேச்சர் வியூ ரசிக்க இங்க உட்கார்ந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்று காரணம் உரைக்க, “ஓ… ஓகே” என்று மீண்டும் படுத்துக்கொண்டாள்.
இஷான் எழுந்து துகிராவை காண, அவளோ இன்னமும் அசதியில் விழித்திறக்காமல் படுத்திருப்பதை யூகித்தான்.
‘ஆறு வருடம் பெண் வாசம் மறந்தவனுக்கு நேற்று அதிகப்படியாக தான் துகிராவிடம் முரட்டுதனமாய் நடந்துக் கொண்டோமோ?!’ என்ற எண்ணம்.
பாவம் துகிரா.. அவளை அணுகிய பொழுது துர்கா என்று விழித்தது இஷான் நினைவில் வந்து செல்ல, தலையிலடித்தான்.
அவள் எழுந்துக்கொள்ள நேரத்தை கவனிக்க, நேரம் கழித்து விழித்திறந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்க ராஜ்
(அத்தியாயம் – 25)
அடப்பாவி..! இவன் பண்றதெல்லாமே ஏடாகூடமான வேலை. அவள் துகிரான்னு சொல்லிட்டாவது டச் பண்ணியிருக்கலாம். எல்லா தப்பையும் ரொம்ப தெளிவாகவும், அழகாவும் பண்றான். ஆனா, பண்ணி முடிச்சப் பிறகு அப்பாவி புள்ளை மாதிரியே முகத்தை வைச்சுக்கிறான். நல்லாவே பர்ஃபார்மன்ஸ் பண்றான்.
இவனெல்லாம் பிக் பாஸ்ல கொண்டு போய் விடணும்.
அதுல வர்ற கம்ரூதின் மாதிரியே நடந்துக்கிறான்.
ஒருவேளை, அந்த கம்ரூதின் தான் இவன்..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice!!!
INGA VANTHALUM KONJAM CONTROL AH IRUPANU PATHA IPPADI UNCOMTROLLABLE AH POITIYE IHAN ITHA KONJAM KUDA ETHIRPAKALA UN KITTA ATUVUM DHURGANU SOLLI AVA AVOID PANA VARA THERINJUM NEE AVALA MUNNERITA ELLA THAPPAIUM CRT AH PANITU AMAITHIYA IRUNTHA SARI AEIDUMA ITHULA THUNGAMA YOSIKIRA ITHULA ORU NALLATU LAST MINUTE LAYATHU DHUGIRA NU SOLLI IRUKA PAPOM AVA MIND SET EPPADI IRUKUNU ELUNTHATHUM
Waiting for nxt epi 😍
Paavamda ava.. innum oru poi serathukulla yennalam nadakumo
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 paavam thukira avaluku evlo kashtama erundhirukum🥺🙄
Super super super super super super super super super super super super
Nice epi 👍
Nice going