அத்தியாயம் – 110
அவளை அணைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளது முன் முடிகளை காதோரம் ஒதுக்கியபடி பேச அவளுக்குத்தான் கூச்சமாகி போனது.
“ஒரு அம்மாக்குதான் பசங்க என்ன தப்பு பண்ணாலும் அவங்கமேல இருக்கும் கோவத்தை நொடியில மறந்துட்டு பாசத்தை காட்டமுடியும் நீயும் என்கிட்ட அதைதான் செய்யற மேதா எப்பவுமே.
என்மேல எவ்ளோ தப்பு இருந்தாலும் நான் உன்கிட்ட எவ்ளோ கோவம் காட்டி இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு உடனே என்கூடவே இருக்கேன்னு முடிவு பண்ண பாரு இதுதான் நீ.
யாருக்குமே உன்னபோல மனசு வராதுடி” என்று அவன் பேச அவளது தாய் போன்ற அரவணைப்பு அவனுக்கு ஆறுதலாய் இருப்பது அப்போது தான் புரிந்தது அவளுக்கு.
மொபைலில் அவள் டைப் செய்து காட்ட அதை படித்தான் ஆரா.
“எனக்கு உங்கமேல கோவம்லாம் இல்ல என்மேல தான் எனக்கு கோவம் உங்கள கஷ்டப்படுத்தி அதுல எல்லாரையும் கஷ்டப்படுத்தி உங்க சைட் லவ்வ பத்தி நான் யோசிக்கவே இல்லல? என் லவ்வால நீங்க எந்த விதத்திலும் காயப்படக்கூடாதுனு நினைச்சு நினைச்சு அந்த லவ்வாலேயே தான் உங்கள திரும்ப திரும்ப காயப்படுத்தி வெச்சு இருக்கேன்.
என்னால உங்களுக்கு ஒரு குழந்தையை கூட பெத்து கொடுக்க முடியாதுனு தெரிஞ்சதும் தான் நான் யாருனு காட்டிக்கவே கூடாதுனு முடிவு செஞ்சேன் நீங்க என்மேல கோவமா இருந்தது அப்படியே இருக்கட்டும் அப்போதான் நீங்க ஈஸியா என்னை விட்டு வேற லைஃப்ப அமைச்சுப்பீங்கனு தான் நினைச்சு உங்கள விட்டு ஓடிக்கிட்டே இருந்தேன்.
ஆனா அதுவே உங்கள இவ்ளோ காயப்படுத்தும்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல என்னை மன்னிச்சிடுங்க” என்று எழுதி இருக்க அப்போது அவனை அவள் நிமிர்ந்து பார்க்க
“இன்னும் கொஞ்சநேரம் இப்படியே இரு மேதா ப்ளீஸ்” என்று அவன் கூற மீண்டும் அவனது மார்பில் புதைந்து கொண்டாள்.
உலகமே தன் கைக்குள் அடக்கமானது போல ஒருவித சந்தோஷம் அவனை ஆட்கொண்டது அவளது அணைப்பில் கனவாகவே போய்விடுமோ என்று எண்ணிய தருணம் கண்முன்னே நடக்க வேறு என்ன வேண்டும் அவனுக்கு.
அவனது மார்பில் அவனது மனதிற்கினியவள் ஆதுரமாய் சாய்ந்து இருக்க இதைவிடவா வேறு சந்தோஷம் கிடைத்துவிடப்போகிறது அவனுக்கு.
மீண்டும் மீண்டும் அவள் அவனை விட்டு ஓடவே பார்க்கிறாள் இப்போதும் அவனை விட்டு விலகிதான் செல்லப்போகிறாள் என்று எண்ணி நொந்தபடியே அவளை தேடியவன் அவளோ அவனைவிட்டு விலகமாட்டேன் என்று சொல்லாமல் சொன்ன தருணம் இதைவிட வேறு ரொமான்டிக் சீன் சினிமாவில் கூட வந்து இருக்காது என்று எண்ணியவனுக்கு
தோன்றியது ஒன்றுதான் அவளை எப்போதும் தன்னை விட்டு ஓடாதவாறு பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதே.
மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்தவன்.
திடீரென அவளது வலது கையை பிடித்து எடுத்து அவளது மோதிரவிரலை பார்த்தான் நடுவிரலில் அவள் அணிந்திருந்த மோதிரத்தை கண்டவன் அதை கழட்டி அவளது மோதிரவிரலில் போட அவளும் அவனது கையை பற்றி அவன் ஆட்காட்டி விரலில் அணிந்திருந்த மோதிரத்தை பார்க்க அவனே அதை கழட்டி அவளிடம் நீட்டினான்.
அவள் அதை அணிய
“எப்படிலாம் உன்கிட்ட லவ்வ சொல்லனும்னு நினைச்சுட்டு இருந்தேன் தெரியுமா? கடைசியில இப்படி சொல்ல வெச்சுட்டல்ல? சரி அதைவிடு நான் வேற விதமா சரி செஞ்சுக்குவேன்.
இங்க பாரு மேதா முதலும் கடைசியுமா சொல்றேன் நல்லா கேட்டுக்க. குறுக்க பேசாதே.
கஷ்டமோ நஷ்டமோ ரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்கனும்.
நான் சாகுற கடைசி தருணம்கூட நீ தான் நீ மட்டும் தான் என்கூட இருக்கனும்.
என் உயிராகூட இல்ல என் நிழலா நீ எப்பவுமே என்கூட இருந்தே ஆகணும்.
உயிர் இல்லாம கூட உடம்பு இருக்கும் ஆனா நிழல் இல்லாம இருக்கவே இருக்காது எனக்கு நீ என் நிழலா வேணும் மேதா.
வேற டாக்டர் கிட்ட செக் பண்ணலாம் அவங்க சொன்ன பாக்கலாம் நமக்கு குழந்தை பிறந்தாலும் சரி பிறக்கலைனாலும் சரி பிறக்கும்னா நிறைய பெத்துக்கலாம் நீ போதும் போதும்னு சொல்ற அளவு பிறக்காதுனா தத்து எடுத்துக்கலாம் போதும் போதும்னு சொல்ற அளவு ஒரு ஸ்கூலே நடத்துற அளவு கூட தத்து எடுத்துக்கலாம் ஓகே.
இதெல்லாம் எனக்கு இம்பார்டண்ட்டே இல்ல எனக்கு நீ மட்டும் தான் இம்பார்டண்ட் இதை ஒரு விஷயம்னு நீ வருத்தப்பட்டு உன்னையும் கஷ்டப்படுத்திட்டு என்னை விட்டு ஓடணும்னுலாம் கனவுல கூட நினைக்காதேடி.
நீ இல்லாம என் வாழ்க்கை நரகமாகிடும் மேதா.
புரிஞ்சுக்க.
மேதஷ்வினி இல்லாத ஆராஷி வெறும் பிணம்தான்” என்று அவன் பேச அவனது வாயை பொத்தியவளுக்து கண்கள் கலங்கி நீர் வடிய
அதை துடைத்தவன்
“அண்ட் இன்னொரு விஷயம் எதுவா இருந்தாலும் என்கிட்ட ஓபனா மனசு விட்டு பேசு எதுக்கெடுத்தாலும் அமைதியா அழுதுட்டு இருக்காதே எனக்கு இந்த அழுமூஞ்சி மேதா புடிக்கலைடி” என்று கூற லேசாக சிரித்தவள் அவனது கண்ணீரை துடைத்து காட்ட
“பாரு நீ அழுது என்னையும் அழ வெச்சு இருக்க எனக்கே தெரியாம எனக்கு அழுகை வந்து இருக்கு இதுக்கு நீதான் காரணம் இதுக்கு உன்ன பனிஷ் பண்ணியே ஆகணும் ஒழுங்கா இத்தனை வருஷம் என்னை தவிக்க வெச்சதுக்குலாம் சேர்த்து டெய்லி ஒரு தவுசன் உம்மா கொடுக்குற இல்ல நான் கடிச்சு வெச்சுடுவேன்” என்று அவன் பேச அவளுக்கு வெட்கம் சேர மீண்டும் அவனது மார்பினுள் புதைந்து கொண்டாள்.
அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளை அலேக்காக தூக்கி தன் மடிமேல் அமர்த்தி அவளது இடுப்பு வளைவை பிடுத்து உட்காரவைத்துக்கொள்ள அவளுக்கு அதிகமாக வெட்கமாகி போக அவனை விட்டு விலக பார்க்க.
“விலகாதே அஷ்ஷூ.
எனக்கு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா இதெல்லாம் என் மேதாவை மடியில உட்கார வெச்சுக்கனும், அவளோட கேப்பே விடாம காதல் கதைங்க பேசணும், அவ விரலோட விரல் கோர்த்து ஊஞ்சல்ல உட்கார்ந்து என்மேல அவளை சாய வெச்சு தூங்கணும், அவ கையை புடிச்சுட்டு ஊர் சுத்தனும், அவ மடியில படுத்துக்கனும் அப்படியே ரொமான்ஸ் பண்ணனும் அவளுக்கு அவளுக்காக மட்டுமே நான் இருக்கனும்னுலாம் ரொம்ப நாள் ஆசை மேதா.
ம்ம் உன்னை என் மடியில உட்கார வெச்சு இருந்தேன் அது நல்லா நியாபகம் இருக்கு ஆனா அப்போ நான் உன்னை என்னோட அஷ்ஷூவா பார்க்கலை சாதாரண பி ஏ வா பார்த்தேன் அதனால அதெல்லாம் ஒரு ஸ்பெஷலா எனக்கு தோணவே இல்ல
ஆனா ஒன்னு மட்டும் ரொம்ப ஸ்பெஷல்” என்று கூற அவளோ நெளிந்தபடி அவனை பார்க்க
“அது இப்போ சொல்லமாட்டேன் அதை சொல்ல ஸ்பெஷல் டைம் வெச்சு இருக்கேன்” என்று அவளது கன்னத்தில் உரசியபடி அவன் பேச அவளுக்கோ உள்ளே நெருப்பு பிழம்பாய் ஆனது.
அவனது அருகாமை எப்போதும் அவளுக்கு அனலை மூட்டும் ஆனால் அதே நேரம் தாய்மடி சேர்ந்த கன்று போல ஆறுதலாகவும் இருக்கும்.
இப்போதும் அதேதான் அவளுக்கு அவனது இவ்வளவு நெருக்கமான அருகாமை அவளுக்கு உடல் முழுதும் சிலிர்க்க வைத்தாலும் அதே அருகாமை அவளுக்கு அரவணைப்பாய் இருக்க அப்படியே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
தாய் பறவை தன் குழந்தையை அரவணைத்து குளிரிலிருந்து காக்கும் அதுபோல அவளை அவனுக்குள் அரவணைத்து கொண்டான்.
“அஷ்ஷூ” என்று அவன் மெதுவாக அழைக்க அவனது அழைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தவளுக்கு திக்கென்று ஆனது உடனே அவனை நிமிர்ந்து பார்க்க
“என்னை பார்த்தா பாவமா இல்லையாடி உனக்கு? லவ்தான் ஊரை சுத்திலாம் மூஞ்சிய பார்த்துகூட செய்யல ப்ளீஸ் பேபி ஒரே ஒரு கிஸ்க்கு அலோவ் பண்ணுடி” என்று அவன் கெஞ்சி நிற்க அதிர்ந்து பார்த்தாள் மேதா.
“இல்ல நீ என்ன நினைக்குறனு தெரியாம நான் பாட்டுக்கு கிஸ் பண்ணிட்டா உனக்கு எது பிடிக்கும்னு தெரியாதே அதான் நீ பர்மிஷன் கேட்கிறேன்” என்று அவன் அவளது அனுமதிக்கு அவளது உணர்வுக்கு மதிப்பு கொடுத்து கேட்டு நிற்க அவளுக்கு அவனது காதலை எண்ணி காதலனை எண்ணி அவ்வளவு பெருமையாய் பார்த்தாள்.
என்ன மாதிரியான காதல் இது.
அவன் அவன் காதல் கிடைத்ததும் அவளது பர்மிஷன் எதையும் கேட்காமல் தன் இணையை ஆட்கொள்ள துடிப்பான் ஆனால் இவனோ அவன் தேடி திரிந்த காதல் கையில் கிடைத்ததும் அதை உணர்வுபூர்வமாய் மாற்ற அவனது இணையாளின் உணர்வுக்கு மதிப்பளித்து அவளது அனுமதி பெற நிற்கிறானே இதைவிடவா ஒரு பெண்ணின் காதலுக்கு ஒரு ஆண்மகன் மதிப்பளித்துவிட முடியும்.
கலங்கிய கண்களை அவனிடம் இருந்து மறைக்க கண்களை படபடவென அடித்து கண்ணீரை உள்ளேயே நிறுத்தினாள்.
அதை பார்த்தவனுக்கு தன்னவள் தனக்காகவே அழுகையை அடக்குகிறாள் என்று புரிய அவளது முகத்தை கையில் ஏந்தியவன்
“என்னடா?” என்று கேட்க
அவனது அப்பா கேட்பது போல கேட்ட கேள்வியில் அவளது அடக்கி வைத்த கண்ணீர் பெருக்கெடுக்க உடனே அவனது தலையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு கண்களை மூட கண்ணீர் வழிந்தது அவளுக்கு.
அந்த கண்ணீரை துடைத்தவன் அவள் சொல்லாமல் சொன்ன சம்மதத்தில் சந்தோஷம் ஆனவன்
“ஷெல் ஐ?” என்று கேட்க மூடியிருந்த கண்கள் திறந்து அவனை பார்த்தவள் தலையை குனிய போக ஏந்திய கையை கீழே விடாமல் அவளை நோக்கி குனிந்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

Nice epi 👍