💟-5
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அம்மா மகன் மட்டும் என்றதில் வித்யாதரனுக்கு சற்று அதிருப்தி உண்டானது. ஆனால் ப்ரியங்காவின் பேச்சில் அம்மாவுக்கு நிகராக மகளுக்கு அன்பு கிட்டும் என்பதை உணர்ந்தார்.
அது மட்டுமில்லை சில ஜாதகம் சரியானாலும் ஏற்கனவே பெண் பார்க்க வந்த ஒரு வரன் விபத்தில் இறந்ததை பெரிதுப்படுத்தி சில பேச்சு வாங்கியதும் இந்த வரன் அப்படி எதையும் பெரிதுப்படுத்தவில்லை என்ற நிம்மதி வரவுமே மேற்படி விஷயம் பேச ஆரம்பித்தார்.
சைதன்யன் பேசி கொடுத்தவையாக வசந்த் சொல்லியவையை மட்டுமே ப்ரியங்கா நல்லபடியாக பேசி முடித்தார்.
அம்மா மட்டுமே… அப்பா கடந்த இரண்டு வருடதிற்கு முன் இறந்து விட்டதாக கூறினார். பெங்களுரில் பணி. இது சொந்தவூர் என்றும் இங்க ஒட்டுதல் வேண்டுமென்பதாலும் இவ்வூரில் பெண்ணை கட்டிக்க தரகரிடம் பேசியதாக கூறவும். மண் மணம் ஏங்கும் வகையா என்று கல்பனா ஆச்சி கூட புகழ்ந்தார்.
பையனின் புகைப்படம் கண்டு வித்யாதரனுக்கும் கல்பனா ஆச்சிக்கும் மிகவும் பிடித்து விட்டது. சம்பிராயதத்திற்கு பெண்ணின் போட்டோவை கொடுத்து முடித்தனர்.
மற்ற விஷயம் திருமணம் என்று ஆரம்பிக்க, வித்யாதரன் “பெண்ணிடம் போட்டோ அனுப்பி ஒரு வார்த்தை கேட்டுட்டுக்கறேன் அப்பறம் மற்றதை பேசலாமே. மாப்பிள்ளை நடுவில் வர்றதா சொன்னீங்க. அப்போ நேர்ல ஒருக்க பார்த்துக்கறேன்.” என்று கூறவும் ப்ரியங்கா கையை பிசைய, பதில் கூற வார்த்தையை தேடினார்.
அதற்குள் கல்பனா பாட்டியோ, “ஏலேய் உனக்கென்ன கூறு கெட்டு கிடக்கா… பிள்ளை நல்லா ராஜாகனக்கா இருக்கான். உன் பெண் தான் அப்பா பார்க்கற மாப்பிள்ளை கட்டிடப்பேன்னு பேசுவாளே… பிறவு என்ன… தாராளமா பேசி முடி. இரண்டு பேர் சந்திக்க… திருமண நாள் மட்டும் யோசித்து முடிவு பண்ணுவோம்.” என்றதும் வித்யாதரனும் மகள் இங்கிருந்து செல்லும் போது,
‘உங்கஷ்டப்படி மாப்பிள்ளை பாருங்க அப்பா. உங்களுக்கு பிடிச்சா போதும். என் அப்பாவுக்கு எனக்கு என்ன பிடிக்குமென்று நல்லாவே தெரியும். அதனால தாராளமா நீங்களே என் எதிர்கால கணவனை பார்த்து முடிவு பண்ணுங்க. நாளைக்கு கல்யாணம் என்றால் இன்னிக்கு கூட சொல்லுங்க. நான் கேள்வி எழுப்பாம வருவேன்.’ என்றது நினைவில் வந்து போக இன்றே நிச்சயமாக பூ, பழம், இனிப்பு, வெற்றிலைபாக்கு மட்டும் மாற்றி கொண்டார்கள்.
வெளியூர் என்றதாலோ கல்பனா இன்றே சம்மந்தியை கை நனைத்தும் அனுப்பி விட்டார். ப்ரியங்கா விருப்பத்தோடு உண்டு வணக்கம் வைத்து, கிளம்பினார்கள்.
வித்யாதரனுக்கு எப்பொழுது இரவு எட்டாகும் என்று காத்திருந்தார். அவருக்கு மகளிடம் போட்டோ அனுப்பி பிடித்தம் பற்றி கேட்டிடவே நேரத்தை அடிக்கடி பார்த்து முடித்தார்.
சைதன்யனுக்கு வசந்த் மூலமாக ப்ரியங்கா அங்கு சென்று பேசியது எல்லாம் தெளிவாக வந்து சேர்ந்தது.
“சார் எல்லாம் ஓகே…. இப்ப அவர் உங்க போட்டோ உங்களோட பயடேட்டா எல்லாம் அகமேந்திக்கு அனுப்பினா… என்ன பண்ணுவீங்க…?” என்று கேட்டதும் சைதன்யன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் “அனுப்புவார் ஆனா… ரிசல்ட் நமக்கு சாதகமா அமையும் படி மாற்றிடுவேன்.” என்று அகமேந்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாலையில் மீட்டிங் முடிந்து வீட்டிற்கு கிளம்ப வேண்டியது தான். இந்த சைதன்யன் என்ன பிளான்ல இருக்கார் ஒன்னுமே தெரியலை என்று வசந்த் புலம்பினான்.
மீட்டிங் போவதற்கு முன் ஒரு ட்ரேயில் அனைவரது போனை வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தனர். சைதன்யன் தனது நியூ பிராஜக்டை கூறி வெளிநாட்டிற்கு சென்று டீலரோடு பணி செய்ய டீமில் சிலரை தேர்ந்தெடுத்தான்.
அதில் தருணேஷ் ஒருத்தனாக தேர்வானான். முதலில் வாழ்த்து கூறியது அருகே இருந்த, அகமேந்தி தான். அவள் வாழ்த்த மற்றவர்களும் வாழ்த்தினர். சைதன்யன் கண்களோ அகமேந்தியின் மகிழ்ச்சியை கண்டு, வாழ்த்தா சொல்லற இந்த இடைபட்ட மாதத்தில் என்னவெல்லாம் மாறுதுனு பாரு.
வசந்த் மீட்டிற்கு சென்ற தருணேஷ் போனில் இருந்த அகமேந்தியின் எண்ணை அழித்து அதே பெயரில் வேறொரு எண்ணை பதிவு செய்து முடித்தான். அதே போல அகமேந்தியின் போனை எடுத்து தருணேஷ் எண்ணை மட்டும் எடிட் செய்து வேறொரு எண்ணை மாற்றி முடித்தான்.
அதற்குள் வசந்திற்கு வேர்த்து விட்டது.
மீட்டிங் முடிந்து வந்தவர்களிடம் மீண்டும் போன்கள் அவர் அவர் கைக்கு சென்றது.
சைதன்யன் தருணேஷை அடுத்த வாரம் செவ்வாய் கிளம்ப சொல்லியிருக்க, அவனிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் அனைத்தும் இருக்க கிளம்ப ஆயுத்தமாக இருந்தான்.
அமெரிக்காவிற்கு செல்ல தருணேஷ் ஏற்கனவே விரும்பம் இருக்க, இது அவனின் சந்தோஷத்தை இரட்டிப்பாய் தந்தது.
வசந்த் தான் சைதன்யனிடம் வந்து, “சார் அது யார் நம்பர் சார்… யார் இப்போ ரிப்ளை பண்ண போறாங்க. பதில் ரிப்ளை வந்தா மாட்ட போறோம்.” என்றான்.
“இடியட்… தருணேஷ் போன்ல ஸ்டோர் செய்தது இந்த நம்பர். இந்தா இந்த போன்ல இருந்து நீ தான் மெஸேஜ் பண்ணப் போற. கால் வந்தா மட்டும் கட் பண்ணிடு. எக்காரணத்திலும் இந்த ஒரு வாரம் எடுக்காத. வெளியே இருக்கேன். அவ பெயர் என்ன தேஜூ இருக்கா… அப்பா பேசறார். பாட்டி பேசினாங்க. ஸ்கூல் பிரெண்ட்கிட்ட பேசணும். இப்படி எதையாவது சொல்லி கால்ஸை அவாய்ட் பண்ணிடு. மெஸேஜ்ல மட்டும் டச்லயே இரு. அவன் என்ன பேசினாலும் ரிப்ளை அனுப்பு. அதுவும் அவ பேசற மாதிரி ஒரு வரி ஆன்சர் மட்டும். லென்தியா பேசி தொலைக்காதே… மாட்டிப்ப.” என்றான்.
வசந்திற்கு தற்போது நிஜமாகவே தலை மேல் குருவி சுற்றியது. அங்கிருந்த நீரை எடுத்து பருகி முடித்து, “சார் அப்போ அகமேந்தி போன்ல மாற்றிய நம்பர்?” என்றதும் சைதன்யன் தனது டூயல் சிம்மை எடுத்து காட்டினான். “இதுல அவ தருணேஷ்க்கு அனுப்பினா நான் மெஸேஜ் பண்ணி ஹாண்டில் பண்ணிப்பேன். டோண்ட் ஒர்ரி.” என்றான் சைதன்யன்.
“சார்ர்ர்ர்…. பெரிய ஓட்டை இருக்கு சார்…. இன்னிக்கு நைட் அகமேந்தி அப்பா உங்க போட்டோ டிடெய்ல் கேட்டு அகமேந்திக்கு விருப்பம் இருக்கானு கேட்டா… மாட்டிப்பீங்க தானே.” என்றதும் சிரித்தவன் திரும்பி வசந்தை பார்த்து அதற்கும் வழி பண்ணிவிட்டேன் என்பதாய் நின்றான்.
“என்ன சார் பண்ணிட்டீங்க?” என்றான் ஆர்வத்தோடு.
“வசந்த் நாம இருக்கறது ஐடி பீல்ட் அதிகமா இருக்கற இடத்துல. இங்க கணினியில் புகுந்து விளையாடற புத்திசாலிகள் அதிகம். அப்படியிருக்க ஒரு ஹேக்கர் கண்டுபிடிக்க மாட்டேனா.
இரண்டு நாளுக்கு முன்னவே ஒரு ஹேக்கரிடம் எல்லாம் பேசி தெரிஞ்சுக்கிட்டேன். நான் என்ன ரெடி பண்ணி வைத்து இருக்கேனா… அகமேந்தி தங்கியிருக்கற பகுதியில் ஒரு இடத்துல இருக்கற டவரில் இருந்து தான் அலைவரிசை அவளோட போனுக்கு காட்டும். நாம என்ன பண்ண போறோம்னா… குறிப்பிட்ட நேரம் அந்த டவரில் அலைவரிசையை நிறுத்தி என் மாமனார் என்னோட போட்டோ அண்ட் டிடெயில் அனுப்பியதை அந்த டவரில் வந்தப்பிறகு அகமேந்திக்கு அது போவதற்கு முன்ன ஹக் செய்து அவரோட நம்பரில் இருந்து தருணேஷ் போட்டோ டிடெயில் அனுப்ப போறேன். அவ்ளோ தான்… அகமேந்தியை பொறுத்தவரை அவங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையா தருணேஷ் பிம்பத்தை காட்ட போறேன்.” என்றதும்
“சார் இப்படி ஒரு பிம்பத்தோட அவங்களோட பேசணுமா? அவங்க மனதில் உங்களை நினைத்து பேச மாட்டாங்க. அதோட நாளைக்கு தெரியாம போகுமா…?”
“ஊருக்கு போய் வந்ததும் திருமணம் என்ற கணக்கில் தான் அவளோட சாட் பண்ணுவேன். இங்க இருக்கற வரை அவர்களை நேரில் மீட் பண்ண முடியாம செய்தாலே போதும்.” என்று பெருமூச்சை வெளியிட்டான்.
நேரமாக அந்த கட்டிடத்தின் அறையில் இருந்த சைதன்யனுக்கு பதற்றம் வந்தது.
“அர்ஷித்… ஹக் பண்ணிடலாம் தானே… பிரச்சனை இல்லையே…” என்றான்.
“அதெல்லாம் மாஸ்ஸா பண்ணிடலாம். டோண்ட் ஒர்ரி…” என்றான் ஹக்கர் அர்ஷித். சைதன்யனின் கல்லூரி நண்பன்.
அர்ஷிதிடம் சைதன்யன் பலமுறை கேட்டு முடியுமா? என்றதும் தான் பின்னரே இம்முடிவு எடுத்தான்.
சில நேரம் மட்டும் அகமேந்தி இருக்கும் இடமருகே இருந்த டவரை வேலை செய்யயியலாத வகையில் நிறுத்தினான். அதனை தன் டிவைசில் அந்த மெஸேஜ் வரவும் அதனை போகாமல் தடுத்து போனின் ஒடிபி எடுத்து தன் லேப்டாபில் இருந்து அதே எண்ணிற்கு தருணேஷ் புகைப்படம் மற்றும் டிடெயில் அனுப்பினான்.
வித்யாதரன் அனுப்பியதை டெலிட் செய்து முடித்தான். கட்டை விரலை உயர்த்தி முடித்ததாக காட்டினான்.
பதினைந்து நிமிஷத்தில நார்மல் போன் கால்ஸ் போகும்.
“அர்ஷித் போன்ல என் போட்டோ போயிருக்காது தானே. தருணேஷ்…..” என்றான்.
“ப்யூ மினிட்ஸ்ல உனக்கு கால் வரும். எப்படி அப்பா உன் போட்டோ கொடுத்தாங்க தருணேஷ் கேட்பாங்க. ஆன்சர் என்ன பண்ண போற…?” என்றான்.
“குரல் மாற்று பதிவு.. app இன்ஸ்டால் பண்ணிட்டேன். என் வாய்ஸ் அவன் வாய்ஸா மாற்றி தான் ஆடியோ மெஸேஜ் பண்ண போறேன்.” என்றதும் அர்ஷித் சைதன்யனை விநோதமாக பார்த்தான்.
“இது என்ன வகை காதல் டா… நீ என்ற உண்மை மறைத்து அவன் பேர்ல காதலிச்சு… திருமணம் உன்னோட…? இதுக்கு நேர்ல பேச வேண்டியது தானே… உண்மை சொல்லி… இல்லை தருணேஷ் பற்றியாவது…” என்றதும் சைதன்யன் மறுப்பாக தலையசைத்தான்.
“ரிசல்ட் எப்படியும் இரண்டு மாதத்தில் தெரிய வரும் தானே… எனிவே இது ஆள்மாறாட்டம் கூட… கொஞ்சம் கவனமா இரு. தயவு செய்து இந்த மாதிரி உதவியெல்லாம் இனி கேட்காத… ஐ அம் டோட்டலி டிஸ்அப்பாயின்ட்” என்றான்.
“இனி கேட்க மாட்டேன். சாரி… நீ வந்ததால் இப்படி பிளான் போட்டேன். இல்லைனா… வேற மாதிரி டீல் பண்ண நினைத்தேன்.” என்று கை குலுக்க அர்ஷித் கிளம்பினான்.
அகமேந்தியின் போனிற்காக காத்திருந்தான் அந்த பெரிய வீட்டில் வானத்தின் நிலவொளியின் நிசப்த நேரத்தில்.
அங்கே தன் அப்பாவிற்கு எப்படி தன் காதல் தெரிந்தது. அதுவும் தருணேஷ் புகைப்படமும். அவனின் பயோடேட்டாவும் அனுப்பி பிடித்திருக்கிறதா என்று கேட்கின்றார்.
யோசனையின் ஓட்டத்தினை கலைத்து வித்யாதரன் போன் போட,
“அப்பா….” என்றதும்
“பையன் போட்டோ பார்த்தியா மா. பிடிச்சிருக்கா…? உனக்கு பிடிச்சிருந்தா திருமணம் பேசிடலாம். இங்க அவங்க அம்மா திருமணம் செய்ய ஆவலா எதிர்பார்க்கறாங்க. எனக்குமே போன முறை மாதிரி எதுவும் தடங்கல் வந்திடக் கூடாதுனு தோன்றுது. உனக்கு பிடிச்சிருந்தா இரண்டு மாசத்துல முடிக்கலாம். பையன் இப்ப வெளியூர்ல இருக்கான்.” என்றதும் அகமேந்தி குழப்பமாக இருந்தாள்.
மனதிலே ஒரு வேளை தருணேஷ் அவங்க அம்மாவிடம் லவ்வை சொல்லி திருமணம் செய்ய சர்பிரைஸ்ஸா மூவ் பண்ணிட்டானா. காதல் திருமணம் விட அரேஜ் மேரஜ்ல அப்பாவை இம்பிரஸ் பண்ணிட்டானோ… என்ற யோசனை வட்டத்தை கலைத்தார் வித்யாதரன்.
“அம்மா… பையனை பிடிச்சிருக்கா… அவங்க அம்மாவிடம் சம்மதம் சொல்லி திருமணத்தை மேற்கெண்டு பேசலாமா…?” என்று மகளின் பதிலுக்காக கேள்வி எழுப்பினார்.
“ஏலேய்… அவகிட்ட என்ன கேட்டுக்கிட்டு… உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. இரண்டு மாசத்தில கல்யாணம்… சொல்லுவியா” என்று கல்பனா பாட்டியின் குரல் கேட்க, சிரித்து விட்டாள்.
“அப்பா… உங்க இஷ்டப்படி செய்யுங்க… அந்த கிழவிகிட்ட சொல்லுங்க. எல்லாம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேனு… அப்பா… அவங்க யார் யார் வந்தாங்க?” என்று கேட்டாள்.
“அம்மா மட்டும் தான் மா வந்தாங்க. பையன் இப்ப வேலை விஷயமா வெளியூருக்கு போக அவர் வரமுடியலை. ஆனா போட்டோவிலே எங்க இரண்டு பேருக்கும் பிடிச்சிபோச்சு… கல்பனா பாட்டிக்கு அந்தம்மாவை ரொம்ப பிடிச்சிடுச்சு.”
“அப்பா… நான் ஒரு அரை மணி நேரம் கழித்து பேசவா…” என்று கேட்டு அணைத்து விட்டு தருணஷுக்கு அழைத்தாள். அதாவது சைதன்யனுக்கு…
நிசப்தத்தை கலைத்து ஒலித்த சப்தம் சைதன்யன் விதிர்த்து போனை எடுத்தான்.
“ஏய் தருணேஷ்… அப்பா போன் பண்ணார். உன் போட்டோ அனுப்பினார். எப்படி பா… நீ லவ் பண்றதை சொல்லி கல்யாணம் பண்ணறியா…. இல்லை எப்படி… அப்பா.. எதையும் கேட்காம அரேஜ் மேரேஜ் மாதிரி பேசறார். தருணேஷ் இதெல்லாம் உன் வேலையா….?” என்றதும்
“ம்ம்… ஆமா… அம்மாவை விட்டு பேச வைத்தேன். இரண்டு மாதத்தில் மேரேஜ் பண்ணிக்கலாம். அரேஜ் மேரஜ் தானே ஆசைப்பட்ட அதான் அப்படியே பண்ணிட்டேன். ம்ம்… நாம விரும்பறதை சொல்ல வேண்டாம். ம்ம்.. இப்ப இது போதும் நான் அப்பறம் பேசவா..?” என்று கேட்டான் சைதன்யன்.
“தருணேஷ் எப்பவும் வைக்காம என்னை பேச வைப்ப.. ஓகே ஓகே பேக் பண்ற ஓர்க் இருக்கும். டேக் கேர்.” என்று அணைத்து விட்டாள்.
சைதன்யனுக்கு உயிர் போய் உயிர் வந்த உணர்வில் இருந்தான். கண்கள் கலங்கி போனது.
‘சாரி அகமேந்தி… தருணேஷா இப்ப பேசறேன். ஆனா உன் கழுத்தில தாலி கட்டுறதுக்கு முன்ன சைதன்யா தான் சொல்லி என்னை புரிய வைப்பேன்.’ என்று சூளுரைத்தான்.
-சுவடு பதியும்
-பிரவீணா தங்கராஜ்.
சைதன்யன் செய்யும் தில்லுமுல்லு அதன் விளைவு எதில் சென்று முடியும்?
அவனதற்காக இப்படி தருணேஷ் பெயரில் காதலிக்க முடிவெடுத்துள்ளான். விடை வரும் அத்தியாயத்தில்…

Why this twist? Very intresting sis.
Intha unmai ellam therinja apram aki ena panuvalo ethukum care full ah iru chaithanya
Kalyanam mudincha anniku erjkudi unnaku