👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-8

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-8

💟-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    தான் எங்கோ சரக்கிடுவோமோ என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்தாலும், அவளுக்காக முயற்சிக்கலாம் என்றது மனம்.

      நெடுநேரம் அமர்ந்து தன்னிலையை எண்ணி நொந்தவன் போனை எடுக்க, அதில் அகமேந்தி குறுஞ்செய்தி வந்து இருந்தது.

      “ஏய் க்ரஷ்…. இன்னிக்கு எனக்கு ஷாக்கிங் சர்பிரைஸ் பண்ணினான் இந்த சைதன்யன். பெஸ்ட் ஒர்க்கர் கொடுத்தாங்க. உன்கிட்ட நேற்று சொன்னேன். இன்னிக்கு பார்றேன்….

     க்ரஷ்…. என்ன எப்பவும் நான் மெஸேஜ் பண்ண மாட்டேன். இப்ப நீ அனுப்ப தயங்குற…” என்று கேட்டதும் அது வந்து இருபது நிமிடம் இருக்க, பதிலை அனுப்பினான்.

      “கங்கிராட்ஸ் ஸ்வீட் ஹார்ட்.” என்றான். சைதன்யன்.

      “க்ரஷ்…”

      “சொல்லு மா.” என்று அனுப்ப,

      “நான் லஞ்ச்சில் என்ன சாப்பிட்டேன்னு தெரியுமா…. தெரிஞ்சா ஆடிப்போயிடுவ” என்று திகிலை கூட்டுவதாக எண்ணி பேசினாள்.

     சைதன்யனோ…. அதான் தெரியுமே… ரெட் ஓயின் எடுத்துக்கிட்டதை பார்த்தேனே… என்று மனதில் பிதற்றினான்.

    “க்ரஷ்…” என்றாள் அகமேந்தி மீண்டும் அனுப்பி…

      “நான் ரெட் ஓயினை டேஸ்ட் பண்ணினேன்.” என்று அனுப்பினாள்.

     “எப்படி… ஊரிலே பழக்கமா ஸ்வீட் ஹார்ட்.” என்றதும்

     “சீ சீ… இல்லை… எனக்கு ரொம்ப நாளா அது என்ன டேஸ்ட் என்று பார்க்க எண்ணினேன். சைதன்யன் லன்ச் அதனால இதை டேஸ்ட் பண்ணிட்டேன். ரெட் ஓயின் சாப்பிட்டா ஷைன் ஆவங்களா க்ரஷ்?” என்று கேட்டாள் அகமேந்தி.

      “நீ ஆல்ரெடி ஷைன்னா இருக்க மா.”

     “ம்ம்… தேங்க் யூ” என்றாள் அகமேந்தி.

      இன்றும் தன்னை பற்றி பேச்சு ஏதேனும் சொல்வாளாளென்று காத்திருக்க நேரமே செல்லும். தனக்கு நேரம் அமைவதே கடினம் என்பதால் அவனாகவே தொடர்ந்தான்.

        “நீ ட்ரிங் பண்ணியதை வேறயாரும் எதுவும் கேட்கலையா?”

      “கேட்கலை…. சைதன்யன் மட்டும் முட்டக்கண்ணு மாதிரி திகைத்து போயிட்டார்.

    நான் டேஸ்ட் பண்ணணும் என்றதும் குழப்பமா ஒரு லுக் விட்டராரு… பட் கொஞ்ச நேரத்தில் நான் பண்ற சேட்டைனு கண்டுபிடிச்சிட்டார்.” என்று சிரிக்க சைதன்யனுக்கு ஆச்சரியமாக போனது.

    இவள் விளையாட்டுக்கு செய்வது அக்கணம் அறிந்து தான் இயல்பானான்.

      “அப்பறம்….” என்றான் க்ரஷ்ஷான சைதன்யன்.

      “அப்பறம் என்ன நல்லா சாப்பிட்டேன். இந்த தன்யன் என்னையே லுக் விட்டுட்டு இருந்தான். மயோனஸ் நான் அதிகமா காலி பண்ணறதை பார்த்து அவனோடதை என்னிடம் கொடுத்தான்.” என்று சிரிக்க, சைதன்யன் போனின் வியந்து பார்த்து அடிப்பாவி நான் பார்க்கறேனு தெரிஞ்சு தான் சேட்டையா…. பச்சையாவா சைட் அடிச்சோம்…?’ என்று யோசிக்க, அவன் மனதில் எண்ணியதுக்கு மாறாக, அவள் பேச ஆரம்பித்தாள்.

     “க்ரஷ்… நான் இன்னிக்கு தன்யனை பச்சையா சைட் அடிச்சேன் தெரியுமா. கார்ல இருந்து வந்தவன் கீய பணிவா அங்க இருந்த ஆளிடம் கொடுத்து பார்க் பண்ண சொல்லிட்டு வந்தான். கண்ணாடி கதவை அங்க ஒர்க் பண்ணிட்டு இருந்த ஆள் திறந்துவிட, ஒரு க்யூட் ஸ்மைல் பண்ணி நடந்து வந்தான் பாரு… சே… சான்ஸே இல்லை…. அவ்ளோ அழகா இருந்தான். இதுல ஒரு புருவத்தை ஏற்றி என்னனு கேட்டான் பாரு நான் பிளாட்…” என்று பேசவும் இங்கே சைதன்யன் கண்ணாடியில் தன் சிகை கோதி அதை மீண்டும் செய்து பார்த்தான்.

     முறுவலித்து கொண்டிருக்கும் கணம் அப்பக்கம் தேஜுவோ, “அகி… லிமிட்டை கிராஸ் பண்ணாதே அப்பறம் தருணேஷ் கோபப்பட போறார்.” என்று பேசுவது கேட்கவும் அதற்கு அகமேந்தியோ,

     “தருணேஷ் வேண்டுமென்றால் அப்படி நினைப்பான். என் க்ரஷ் அப்படி நினைக்க மாட்டான் சரி தானே க்ரஷ்” என்று அகமேந்தி  கேட்டதும் “சரி தான்.” என்றான்.

     “இன்னோன்னு தெரியுமா. அவன் மடியில கிளாத் போட்டு கையை நீட்டி  மடக்கவும் சாப்பிடும் பொழுது அடிக்கடி என்னை பார்த்ததும் சும்மா ஹாப்பியா இருந்தது.” என்றதும் இம்முறை தேஜு தலையில் தட்டி,

     “என்ன லவ்வோ… கிஷோரிடம் அதர் பாய்ஸ் பற்றி பேசினா அவ்ளோ தான். தருணேஷ் அமைதியா சகிச்சுட்டு இருப்பார். பார்த்து நட….” என்று தேஜு அட்வைஸ் செய்து கிளம்பினாள்.

    அகமேந்தி க்ரஷிடம், “ஏன் க்ரஷ் நான் பேசறது தப்பா…? தேஜு முகம் சீரியஸா அட்வைஸ் பண்ணிட்டு போறா… நீ தப்பா எடுத்துக்கிட்டியா…. உனக்கு பிடிக்கலைனா தன்யனை பற்றி பேச மாட்டேன். பட்… சிலருக்கு சிலரை பிடிக்கும். சிலரை பிடிக்காது. அதுக்கு காரணம் பெரிதா இருக்காது.” என்று பேசும் பொழுது குரல் மாறி இருந்தது.

      “ஹேய்… ஸ்வீட்ஹார்ட்… பசங்க மட்டும் கல்யாணத்துக்கு பிறகும் சைட் அடிப்பாங்க. அதுவும் மனைவி முன்னாடியே. சில புரிதலான கப்பிளா இருந்தா அந்த ஆண் அவன் மனைவியிடம் அந்த சைட் அடிக்கிற பெண்ணை கமெண்ட்ஸ் பாஸ் பண்ணுவான். இது நடைமுறையில் இருக்கு.

     நீயும் நானும் அப்படிபட்டவங்களா இருப்போம்.” என்று பேசினான்.

      “தருணேஷ்… இது நீ தானா…? எனக்கு சந்தேகமா இருக்கு… நான் வாட்ஸப்ல வீடியோ கால் வர்றேன். எனக்கு இது மாதிரி பேசற உன்னை இப்பவே பார்க்கணும்.” என்று கூறி கட் செய்ய போனாள்.

     “அகமேந்தி…. வேண்டாம்… நான்.. நான் இப்போ… வெளியே இருக்கேன்.” என்று சைதன்யன் பயந்து பேசினான்.
 
     “வெளியே இருந்தா என்ன க்ரஷ். உன்னோட சேர்ந்து அமெரிக்க பிளேஸ்லாம் பார்ப்பேன்.” என்று கூறவும்,

     “வேண்டாம் மா…” என்றான்.

     “ஏன் தருணேஷ்.” என்றாள் சோகத்துடன்.

       “அது…அது… இந்தியா வரும் வரை உன்னை பார்க்காம காதலிக்கலாம்னு…” என்று திணறிப்போனான்.

      “என்னயிது க்ரஷ். எனக்கு நீ முன்ன பேசியப்ப யெல்லாம் எனக்கு உன்னோட பேச ஆர்வமே இருந்ததில்லை க்ரஷ். ஆனா நீ அமெரிக்கா போனப்பிறகு போனில் பேசறது எல்லாம் என்னவோ என்னை என்னமோ செய்யுது க்ரஷ்.” என்று கூறவும் சைதன்யன் மனம் தன்னை தருணேஷாக பாவித்து அவன் மேல் காதல் கொள்வாளோ என்ற எண்ணம் உதிக்க நெருஞ்சிமுள்ளாக இதயம் தைத்தது.

     இதை தவிர்க்க என்ன செய்வது என்று கவலைக் கொண்டு யோசிக்க,
க்ரஷ்… க்ரஷ்… என்று ஏலமிட்டு கொண்டிருந்தாள் அகமேந்தி.

     “சொல்லு மா.” என்றான்.

     “என்னபா… என்னவோ சைலண்டா ஆகிட்ட. ரொம்ப ஒர்க்கா…?” என்று கேட்டாள்.

   இதை பிடித்து கொண்டு, “ஆமா ஸ்வீட் ஹார்ட். ஒரு போர் டேஸ் ஆர் பைவ் டேஸ் கழித்து கால் பண்ணவா.  ஒர்க் முடிந்ததும்.” என்றான்.

அவனுக்கு இப்படி ஆள் மாறி காதலித்தாலும் அவள் தன் பேச்சை தருணேஷோடு ஓப்பிட்டு விடுவாளோ என்று பயந்தான். தருணேஷ் மீது காதல் வாராமல் இருந்தாலும் கூட பரவாயில்லை மாற்றிடலாம். ஆனால்  தன் போன் செய்கை அவளுக்கு அவனோடு ஒப்பிட்டு ஏதேனும் பிடித்தம் வந்தால் அது பேராபத்து. அதுவும் ஒரு பெண்ணின் உள்ளூனர்வோடு விளையாடுவது அழகல்ல.
  
    இன்னமும் 45 நாள் அதில் நான்கு நாள் தவிர்ப்போமே என்றது மனம். 15 நாள் வாழ்வில் கடந்துவிட்டோமே என்று மலைப்பாக இருந்தது.

   “க்ரஷ்…. ஓகே… நீ ஒர்க்கை பாரு.” என்றதும் இருவரும் வைத்து விட்டனர்.

     சைதன்யன் தன் இதயத்தில் கையை வைத்து சற்று பயந்து போனான்.

     பயம் இதுவரை அவன் அறிந்திடவில்லை. முதல் முறை அகமேந்தி தன்னை விட்டு அவனிடம் அடைக்கலாம் ஆகிடுவாளோ…. தான் செய்பவை எல்லாம் அவளிடம் தன்னை தவறாக காட்டிவிடுமோ? இருக்கும் நற்பெயரை இழந்து விடுவோமோ என்று ரொம்பவே பயந்தான்.

    நற்பெயர் அது அவளிடம் எனக்கு வேண்டாம். எனக்கு அகமேந்தி வேண்டும் என்று மனம் சண்டிதனம் செய்தது.

      அதுவும் அவள் தருணேஷிடம் செல்வது சைதன்யனுக்கு பிடிக்கவில்லை.

      இதயத்தை கொன்று மனம் வாடியபடி இளையராஜாவின் இசையில் மனதை செலுத்த முயன்றான்.

      அடுத்த நாள் அதிகாலை தனது அலுவலகம் சென்றவன் அகமேந்தியை பார்க்காமல் தவிர்த்தான்.

     அகமேந்தி க்ரஷிடம் பேசவே சைதன்யனை கவனிக்க ஆரம்பித்தாள்.

      இடது கையால் எழுதியபடி அவனை ஒரக்கண்ணால் காண, தீவிரமாக கணிணியில் தலையை புகுத்தியவன் அவள் பார்க்கின்றாளென அறிந்தும் அவளை புறம் தள்ளினான்.

      வசந்த் அருகே வந்தவன் “என்ன சார் அவங்க உங்களை விரும்பற மாதிரி பார்க்கறாங்க. நீங்க கண்டுக்க மாட்டேன்றிங்க.” என்று சந்தேகத்தை கேட்க,

     ” போன்ல ஆள்மாறி பேச முடியலை வசந்த். குற்றவுணர்வு வருது. இத்தனைக்கும் அவளுக்கு என் மேல க்ரஷ் இருக்கு…” என்றபொழுது அவன் உதடு புன்னகை தழுவியது.

    “அப்போ நேரில் சொல்லிடுங்க சார். எதுக்கு தருணேஷ் நடுவுல?” என்று தலைசொரிந்து கேட்கவும் சைதன்யன் அன்னிக்கு நடந்தது தெரியாதா…? அவனிடம் தோற்க எனக்கு விருப்பமில்லை. அதுவுமில்லாம உண்மையில் நான் அகமேந்தியை அளவுக்கு அதிகமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.” என்றவன் அலுவலகம் இருந்து விரைவாக கிளம்பி விட்டான்.

    வசந்த் போகும் சைதன்யனை வியப்பாக கண்டு அதிசயித்தான்.

     நான்கு நாட்கள் இதே போல பாராமுகமாக நடந்தான் சைதன்யன். போனில் வித்யாதரனுடன் பேசி திருமண பத்திரிக்கையை ரெடி செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

     பத்திரிக்கையில் உங்க பெயர் தான் போடணும். அதனால திருமணத்துக்கு ஒரு வாரத்துல கொடுத்துடுறேன். நீங்க ஒரு வாரத்துல அகமேந்தியிடம் உண்மை சொல்லிடுவீங்க தானே மாப்பிள்ளை. அவ உங்களை ஏற்றுப்பா தானே?” என்று கேட்க

    “ஏற்றுப்பா மாமா. அவளுக்கு என் காதல் புரியும்.” என்றவன் போனை அனைத்து விட்டத்தை பார்த்து கிடந்தான்.

    அழகான இரவு பொழுது ஐந்து நாளாக அவளோடு பேசவில்லை என்று ஆர்பரித்தது.

     சைதன்யன் தன் அலுவலகம் வந்து, சிறிது நேரத்தில் அகமேந்தியை அழைக்க, அவளும் அவனின் அலுவலக அறைக்கு வந்தாள்.

     “உட்காரு…” என்றதும் அகமேந்தி அமர அவன் எழுந்து டேபிளை சுற்றி வந்து அவள் அமர்ந்த இருக்கைக்கு அருகேயிருந்த மேஜையில் அமர்ந்து ஒரு காலை கீழே பதித்து, கண்களில் அணிந்த கண்ணாடியை எடுத்து ஷர்ட்டில் வைத்து, நான் உன்னை விரும்பறேன் ஸ்வீட் ஹார்ட். நீயும் இந்த க்ரஷை விரும்பினா நேரிடையா சொல்லு. அடுத்த வாரத்துல கல்யாணத்தை வைச்சிப்போம்” என்று கன்னத்தை தட்ட திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் அகமேந்தி. தன் ஹியர் போனை கையில் சிக்க, அதில் போன் பிரிந்து கீழே விழுந்தது.

      அதன் சத்தத்தில் இருக்குமிடம் அறிந்து தனக்கு வந்த கனவை எண்ணி அதிர்ந்தாள்.

    எதற்கு இப்படி ஒரு கனவு? சைதன்யன் மேல் க்ரஷ் தோன்றியது சகஜம் தான். எந்த பெண்ணாக இருந்தாலும் அவனை கண்டால் ஈர்ப்பு வரும். காதல் வரும். ஆனால் அது நடக்காதவொன்று அல்லவா. அதிலும் தருணேஷை விரும்பி விட்டு தன்யன் மேலே இப்படி ஒரு கனவு காண்பதென்றால் எதனால்?

     முதலில் இந்த க்ரஷிடம் தன்யனை பற்றி பேசக்கூடாதென யோசித்தவள் க்ரஷிடம் பேசி ஐந்து நாட்கள் ஆகப்போவதை எண்ணி வருந்தினாள்.

   தானாக போன் செய்யவும் நேரம் காலம் வேண்டுமல்லவா.  தற்போது நேரம் நள்ளிரவு என்பதால் இயலாது அடுத்தநாள் காலையில் பேசிடலாமென முடிவெடுத்து உறங்கினாள்.

-சுவடு பதியும்.

  • பிரவீணா தங்கராஜ்.

   அகமேந்தியிடம் சைதன்யன் தன்னிலையை விவரித்து மணப்பானா?

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!