👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9

💟-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     காலையிலேயே அகமேந்தியிடம் போன் வரவும் எடுக்க யோசித்து தவிர்த்தான் சைதன்யன்.

     இரு முறை அழைத்து அவளுமே திரும்ப அழைக்கவில்லை. மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, தொடர்ச்சியாக அழைத்தாள். சைலண்ட்டில் போட்டு விட்டு குளிக்க சென்றான் சைதன்யன்.

     ஷவரில் நனைந்தபடி ‘அவளா இத்தனை முறை கால் பண்ணற… போச்சு… தருணேஷ் மேல தேவையேயில்லாத காதலை நானா வளர்த்து வைத்து இருக்கேன். டாமிட்…’ என்று தன் மீதே சினம் தீர நெடுநேரம் நின்றான்.

    நேரம் ஆகவும் அலுவலகம் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தால் வெளியே வந்தவன் இனி அலுவலக நேரம் என்பதால் அகமேந்தி கால் பண்ணமாட்டாளென நினைத்தான்.

   ஹேர்டிரையரில் தலையை உலர்த்தி தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்க்க, அங்கே கட்டிலில் அவனின் போன் ப்ளிங் ஆவதை கண்டான்.

     அதன் அருகே செல்ல அகமேந்தி தான் அழைத்துக் கொண்டுயிருநதாள். இத்தோடு 47 வது அழைப்பாக காட்ட எடுத்தான்.

     “என்ன ஸ்வீட்ஹார்ட்… எதுக்கு இத்தனை முறை கால் பண்ணற… எடுக்கலைனா அப்பறம் நானே பண்ணுவேனே… அப்படி என்ன அவசரம்.” என்றதும்

       “அவசரம் தான் க்ரஷ். ஏன் க்ரஷ் ஐந்து நாளா பேசலை இப்ப பேச ஆசைப்பட்டேன் தப்பா…” என்றதும் இவனுக்குமே அவள் குரலில் வலிதெரிய “சரி சொல்லு” என்று டையை கட்ட ஆரம்பிததான்.

    “எனக்கு பயங்கரமான கனவு வந்துச்சு… க்ரஷ்” 

      “பேய் கனவா….” என்றான்

      “இல்லை டா அது அழகான பூதம்” என்று டா போட்டு விளித்து அவள் சொன்ன விதத்தில் சிரித்துவிட்டான்.

     “பூதமா…. நல்ல கனவு தான்.” என்றான் சைதன்யன்.

    “என்ன கனவுயென்று கேட்ட ஷாக்காகிடுவ” என பீடிகை போட்டாள்.

    “முதல்ல கனவை சொல்லு ஸ்வீட்ஹார்ட்” என்று கெலாக்ஸ் எடுத்து பாலில் ஊறவைத்து பிரட்டில் ஜாம் தடவிக்கொண்டு கூறினான்.

     “அந்த தன்யன் இருக்கார்ல” என்று கதைக்கூற ஆரம்பித்தாள்.

    நானா… இவ என்ன சொல்ல வர்றா… என்று “ம்” கொட்டினான்.

     “அவர் நேரா அவரோட கேபின்ல இருந்து வந்து…. என் சேர்கிட்ட வந்து…” என்று கூறவும் தன்யன் பிரட்டை கடித்து கீழே வைத்து “வந்து…??” என்றான் ஆவலோடு.

     “வந்து…. அவர் அணிந்த கண்ணாடியை எடுத்து ஷர்ட்டில் வைத்து, ‘நான் உன்னை விரும்பறேன் ஸ்வீட் ஹார்ட். நீயும் இந்த க்ரஷை விரும்பினா நேரிடையா சொல்லு. அடுத்த வாரத்துல கல்யாணத்தை வைச்சிப்போம்’ என்று கன்னத்தை தட்டினார். தெரியுமா.” என்றதும் கனவென அவள் கூறியதை மறந்தவன், “அப்படி பண்ணலையே…?” என்று கூறினான்.

    “இடியட் க்ரஷ்… கனவுல பண்ணினான் டா.” என்றதும் சைதன்யன் கெலாக்ஸை ஸ்பூனால் கலக்கிக் கொண்டே… சிரித்தான்.

   அவன் சிரிப்பு அகமேந்திக்கு கேலியாக மாற, “லுக் இதை சொல்ல தான் காலையில் இருந்து போன் பண்ணறேன். நீ என்னடானா சிரிக்கற” என்றதும் சைதன்யன் சிரிப்பை நிறுத்தி யோசித்தான்.

    ”ஆமா… அவன் ஏன் உன் கனவுல வர்றான்?” என்று கேட்டு விடையை பெற துடித்தான்.

      “அவனையே பார்த்துட்டு இருக்கறதுல அப்படி தோன்றுது டா. எனக்கு க்ரஷ்னா அவன் நினைவு தான் வருது. பேசாம தருணேஷ் மாற்றிடவா. க்ரஷ்னா எனக்கு சைதன்யன் தான். உன் நினைவு வரலை” என்று பேசவும் சைதன்யன் நிதானமாக யோசித்து,

   “நீயென் அவனையே பார்க்கற… லவ் பண்ணறவங்களை தான் பார்த்துக்கிட்டே இருக்கணும்னு தோன்றும். நீ அவனை லவ் பண்ணறியா?” என்றான். மனதில் உடனடியாக பதில் வரக்கூடாதென வேண்டியே வினா தொடுத்தான்.

    அவன் எதிர்பார்த்தது போல அகமேந்தியிடமிருந்து பதில் உடனே வரவில்லை… “பேசாம என்ன சிலையாட்டம் இருக்க… ஆபிஸ் போற ஐடியா இருக்கா இல்லையா…?” என்று தேஜு கத்துவது கேட்க, அகமேந்தி நிசப்தமாக நிற்கின்றாளென அறிந்துக் கொண்டான்.

    “ஸ்வீட் ஹார்ட்… நான் ஆபிஸ் கிளம்பறேன். அப்பறம் மீட் பண்ணலாம்.” என்று வைத்துவிட்டு சைதன்யன் கண்ணாடி பிம்பத்திடம் ‘தம்ஸ்அப்’ செய்து ஒற்றை கண்மடித்து வெற்றியாக நிமிர்ந்தான்.

    சட்டென யோசனைகள் கலைந்து இதுயென்ன கோட், டை, என களைந்து ஜீன் டீஷர்ட் அணிந்து கிளம்பினான்.

      மனதில் ஆசைகள் அலைமோத காரில் அலுவலகம் வந்து நிற்க, அகமேந்தியோ, ‘இல்லை…. இனி தன்யன் வந்தா… நின்றா… பேசினா… அவன் பக்கமே கண்ணு போக கூடாதுதுது…’ நினைக்க அவனோ மாய புன்னகையை உதிர்த்து செல்ல, அகமேந்தி அதில் தொலைந்தாள்.

     ‘க்ரஷ்… க்ரஷ்… ஓகே ஆனா அவனுக்கும் எனக்கும் செட் ஆகாது.
    அதுவுமில்லாம நான் தருணேஷை விரும்பறேன்’ என்று தனக்குதானே கூறிக்கொண்டு வேலையை பார்க்க சென்றாள்.

      பணியில் கவனம் செல்லவில்லை. பக்கத்தில் சைதன்யன் அறையை காட்டி சில பெண்கள் பேசுவதை தான் கண்டாள்.

      கம்பியூட்டர் திரை அடிக்கடி ஸ்லிபிங் மூட் சென்று சென்று வரவும் தன்னையே திட்டிக் கொண்டாள்.

     இது சரிப்பட்டு வராது. இன்று அளவுக்கதிகமாகவே அவனை பார்க்க ஆசைப்படுகிறது கண்கள். அவனும் அதற்கேற்றது போல அழகாக வந்து தொலைக்கின்றான்’ பேசாமல் விடுமுறை சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியது தான்.

    முடிவாக எண்ணி சைதன்யன் அறையை தட்டினாள்.

     “மே ஐ கம் இன் சார்” என்று கேட்க கண்களில் இதமாக வந்து அமரு என்று கைகளும் கண்களும் பேச, வந்து அமர்ந்தாள்.

     “சொல்லுங்க…. என்ன டவுட்…?” என்று கேட்க,

     தனது பணியில் தான் கேட்க வந்திருக்கின்றோமென தவறாக எண்ணிவிட்டானே…

    “இல்லை சார். வேலையில் டவுட் இல்லை. இன்னிக்கு லீவ் எடுக்கலாம்னு இருக்கேன்.” என்று கேட்டதும்

    “வாட்…. அகமேந்தி இப்ப தான் லீவ் போடாம வந்திங்கயென்று ஆறுமாத ஒழுங்கா வந்ததுக்கு பெஸ்ட் ஒர்க்கர்னு கொடுத்தது. இப்ப என்ன லீவ். அதுக்குள்ள என்ன தலைக்கணம். நம்ம தான் ஒழுங்கா வேலை செய்யறோம்னு…. மமதையா.?” என்று அதட்டினான்.

      “சார் தலைக்கணம் எல்லாம் இல்லை. இன்னிக்கு வேலை செய்ய முடியும்னு தோனலை. ஒரே… ” என்று அவன் கண்கள் மூக்கு உடையென பார்த்து பயத்தில் குனிந்து கொண்டாள்.

    சைதன்யனுக்கு சந்தோஷத்தில் வானை தொடவேண்டுமென உவகை பெருக்கெடுத்தது.

   ஆனால் அதை மறைத்து, ”இங்க பாருங்க… இது என்னோட உழைப்பில் ரன் பண்ணற ஐடி கம்பெனி. நஷ்டமில்லாம கொண்டு போறேன். இப்படி சம்மந்தமேயில்லாம லீவ்னா….? உங்களுக்கு ஓவரா இடம் கொடுத்துட்டேன் அதான் வேலையை செய்ய முடியலைனு திமிரா வந்து பேசறிங்க.” என்று கூறவும் அகமேந்தி கண்கள் நீரை சுரந்தது.

     அவள் தலைக்கணம், திமிர், மமதை என்ற வார்த்தைகள் கேட்டறியாது வளர்ந்தவள். அதை தனது க்ரஷ் தன்யன் பேசுவதை தாங்கிக் கொள்ளாமல் அழுகை உடைப்பெடுத்தது.

   அவள் கண்கள் நீரை பொழியவும் அதனை கண்டு சைதன்யன் இடம் மறந்து அவளருகே வந்து கன்னம் ஏந்தி, “ஏய்… எதுக்கு அழுவற…? லீவ் தானே எடுத்துக்கோ… ஐ அம் சாரி என்னை அறியாம உன்னை கஷ்டப்படுத்தியிருந்தா…” என்று கண்களில் நேரிடையாக கூறி முடிக்க அகமேந்தி அவன் கைகள் சூட்டில்  இதம் உணர ஆரம்பிக்க, வசந்த் வேகமாக வந்து “சார்…” என்று   கூப்பிட்டதும் இடத்தை கண்டு கதவை பார்த்தான்.

கண்ணாடி கதவில் வெளியே இருந்தவர்களில் சிலர் சைதன்யனையும் அகமேந்தியையும் தான் பார்த்து வாயை பிளந்தனர்கள்.

     சைதன்யன் வசந்திடம், “அகமேந்திக்கு லீவ் கொடுத்திடுங்க வசந்த்.” என்று செல்லவும் வசந்த் அகமேந்தியிடம், “லீவ் எடுத்துக்கோங்க மா.” என்று கூறவும் “தேவைப்படலை சார்.” என்று அவள் கேபினில் சென்றமர்ந்தாள்.

     கணிணியோடு மல்லுக்கட்டி மனதிற்கு கடிவளம் போட்டாள்.

    சைதன்யன் அவன் இருக்கையில் அமர்ந்து அவளை காணாது அடுத்து செய்யப்படும் பணிகளை மெயிலில் கண்டு பதிலனுப்பினான்.

    மாலை செல்லும் நேரம் வரவே சைதன்யன் விரைவாக கிளம்பி கீழே சென்று இருந்தான்.

    ஆடி அசைந்து அகமேந்தி தேஜு நோக்கி வந்தாள்.

    பார்வை என்னவோ காரிலிருந்து வாட்ச் மேனிடம் என்னவோ பேசிக்கொண்டு இருந்ததை கண்டு கோபமாக பார்வை பார்த்து தேஜுவின் ஸ்கூட்டியில் அமர்ந்தாள்.

     “அகி… இது யாருப்பா… செமையா… இருக்கான்.” என்று தேஜு கேட்க,

     “எங்க எம்.டி சைதன்யன். க்ரஷிடம் தன்யன்னு சொல்வேனே.” என்று புறப்பட, தேஜுவோ “வாவ் சூப்பர் மா.  வேலைக்கு வர்றதிலேயே ஆர்வமா இருக்கும். பாரு ஈவினிங் டைம் சோர்ந்து போற பசங்களா தெரியறாங்க. அவன் எவ்ளோ அழகா வந்து நிற்குறான். கிஷோரிடம் சொல்லணும்பா.” என்று தேஜு இரசித்து சொல்ல, “வண்டியை எடுக்கறியா.. தலைவலியா இருக்கு.” என்று கடிந்தாள்.

     தூரத்தில் இருந்தாலும் தன்னை தவிர்க்க பார்க்கின்றாளென சைதன்யன் சரியாக கணித்திருந்தான்.

    நேராக வீட்டுக்கு வந்து போனை கண்ணாடி டீப்பா மீது வைத்து, சோபாவில் அமர்ந்து அதனையே பார்த்து கொண்டிருக்க அந்த போனில் அழைப்பு மணி அடித்தது.

    “ஹாய் ஸ்வீட் ஹார்ட். என்ன வீட்டுக்கு போனதும் வந்ததும் கால்.” என்றான்.

     “வீடியோ கால் பண்ணவா க்ரஷ்?” என்று எடுத்ததும் பொரிந்தாள்.

     “ஏ… என்னாச்சு… நான் தான் இந்தியா வர்றவரை பார்க்க வேண்டாம்னு சொன்னேனே… என்ன கோபம்… வாய்ஸ் சரியில்லை.” என கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

      “நான்… நான்… தன்யனை… இல்லை…. அவர்… என்னை…அவர் என்னை… திட்டிட்டார்” என்று பேசி வேறுபக்கம் அழ ஆரம்பித்தாள்.

     ‘இன்னிக்கு ஸ்வீட் ஹார்ட்க்கு என்னாச்சு…. அழுதுட்டே இருக்கு…’ என்று யோசித்தானே தவிர எதற்கு அழ நேரிட்டதென அவன் யோசிக்கவில்லை. 

      “ஸ்வீட் ஹார்ட்… அழுறியா… எதுக்குனு சொல்லுமா. புரியாம குழம்பறேன்ல” என்று கூறியதும் குழப்பத்தில் இருப்பவனை இன்னமும் குழப்ப வேண்டுமா? என எண்ணியவள் எதையும் பகிராது “நத்திங்…. மேரேஜ் டேட் அப்பா சொன்னாங்களா… இன்னும் இருபத்திஐந்து நாள் இருக்கு. நீ எப்ப வருவ.” என்று கேட்டதும்

    “வருவேன்… க்ரஷ் யாருனு காட்ட” என்றான் சைத்யன்.

      தேஜு தான் போனை பிடுங்கி “தருணேஷ் இன்னிக்கு உங்க ஆபிஸ் எம்டி பார்த்தேன் செமையா இருக்கார். ஆமா… உங்க பாஸ்க்கு மேரேஜ் ஆகலை தானே…? அகி சைட் அடிச்சேன்னு உங்களிடம் கதை அளந்தப்ப தெரியலை. இப்ப எனக்கே சைதன்யனை சைட் அடிக்கணும்னு இருக்கு.” என்றதும் சைதன்யன் அம்மாடியென பயந்து போக, வெடுக்கென இயல்பான மோடில் போனை பிடுங்கி,

  “அவன் என் க்ரஷ் மட்டும். நீ சைட் அடிக்கிற வேலை வைச்சிக்கிட்ட நாளையிலருந்து டிராப் பண்ண வேண்டாம்” என அகமேந்தி குரல் கேட்க சைதன்யன் முறுவல் விரிந்தது.

     “என்னவோ தருணேஷை சைட் அடிச்ச மாதிரி வெடுக்குனு பேசற” என்று தேஜு கேட்டதும், “அவனை வேண்டும்னா சைட் அடிச்சிக்கோ” என்று பதில் தந்து, “இங்கபாரு… க்ரஷ்… கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்ன நீயும் நானும் சந்திக்கணும். அதுக்கு ஏற்ற மாதிரி இங்க வா…. சரியா…” என்று மிரட்டினாள்.

    “தங்கள் உத்தரவு மகாராணி” என்று நாடகபாணியில் பதில் தந்து போனை வைத்தான்.

     ஒருபக்கம் என்னவோ சந்தோஷம் மடை திறந்த வெள்ளமாக தோன்றினாலும், அடுத்த கணம் கானல் நீராக மாறிடுமோயென அஞ்சி கொண்டிருந்தான்.

     இருபது நாளில் அவளுக்கு தான் யாரென தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு திருமணம் நடைபெறுமா என்பது விதியே அறியும். அதுவரை பொறு மனமே என்று நகைத்தது காலம்.

-சுவடு பதியும்.

-பிரவீணா தங்கராஜ்.
   

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!