💟-10
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ப்ரியங்கா சைதன்யன் வீட்டுக்கு வந்து நின்றாள்.
தனக்குப் பணம் தேவைப்படுகின்றதேன கூற இவனும் கணக்கு பார்க்காது எடுத்து நீட்டினான்.
வசந்த் அருகே வந்து, “சார் இந்தம்மாவுக்குப் பணம் எதுக்கு. அதான் வித்யாதரன் சாரிடம் உண்மை சொல்லிட்டீங்களே. இனி அகமேந்தி மேடத்துக்கு மட்டும் பதமா சொன்னா போதாது.” என்றான்.
“பதமா…. அவளிடம்… விளையாடறியா வசந்த்.” என்று சைதன்யன் ஏளனமாகவே கேட்டான்.
“சார்… உங்களுக்கு விஷயம் தெரியலையா….? நீங்க அகமேந்தியை டச் பண்ணி பேசியது நம்ம ஆபிஸ்ல எல்லாரும் ஒரு மாதிரி பேசிக்கறாங்க. அது பார்க்க…” எனத் தயங்கி நிறுத்தினான்.
“பார்க்க….?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான். அதில் சினமா அதிகாரமா பிரித்தறியா முடிவில் வசந்த் குழம்பிப் போனான்.
“காதலர்கள் மாதிரி நடந்துக்கறதா பேசிக்கறாங்க சார்” என்று கூறியதும் “கூல் மேன் நல்லது தான் போ” என்று அனுப்பினான்.
இரண்டு தினம் சென்றிருக்க, வசந்திற்குத் தருணேஷிடம் மெஸேஜ் வந்தது.
“ஹாய்… ஆபிஸ்ல என்னாச்சு. சைதன்யன் அழவைச்சானாமே.. ஏதாவது மிரட்டினாரா அகி” என்று கேட்டு வந்திருந்தது.
“இல்லையே… ஆமா நான் அழுதது உனக்கு எப்படித் தெரியும்.” என்று வசந்த் பதிலுக்குக் கேட்டு வைத்தான்.
“சேகர் சொன்னான்… நீ அழுததா.
என்னிடம் ஒரு போன் பண்ணி பேசினா என்ன? எப்பபாரு மெஸேஜ். ஐ ஹேட் மெஸேஜ்.
டேக்கேர்… அவனிடம் தள்ளியிரு.” என்று மூன்று மெஸேஜை அனுப்பினான்.
வசந்திற்குக் கோபமாக வந்தது. அடக்கிக்கொண்டு வேறு பணி இருப்பதாகச் சொல்லிவிட்டு நெட்டை கட் செய்து விட்டான்.
மறுபக்கம் அகமேந்தியிடமிருந்து தன்யனுக்கு “க்ரஷ் ஆபிஸ்ல பத்திரிக்கை வைக்கலை. நான் வேண்டுமென்றால் தனியா அடித்து இங்க கொடுக்கவா?” என்று அனுப்பினாள்.
“பத்திரிக்கை யாருக்கும் வேண்டாம். திருமணமென்றும் சொல்லாதே. மேரேஜ் முடிச்ச பிறகு இங்க பிராப்பரா சொல்லிக்கலாம்.” என்று அனுப்பவும் அகமேந்தியும் யாரிடமும் அறிவிக்கவில்லை. ஆனால் லீவ் எடுக்க வேண்டுமே… அதற்கு மெயிலில் அனுப்பிக் கேட்க தன்யனும் ஓகே என்று அனுப்பி இருந்தான்.
“க்ரஷ்… எனக்கொரு சந்தேகம். கல்யாண டேட் குள்ள நீ இந்தியா வந்திடுவியா… ? உனக்கு இன்னமுமே அங்க தங்க நாள் இருக்குமே?” என்று சந்தேகம் எழ கேட்டு விட்டாள்.
சைதன்யன் “நான் வந்திடுவேன் மா.” என்று அனுப்ப, அதன் பிறகு நாட்கள் டயட் ஆனது போலக் கேலண்டர் தாள்கள் பறந்தன.
தருணேஷ் வந்திடுவான். திருமணம் நேரம் சரியாகப் போக விடுமுறையும் இருக்கு.
ஊருக்கு போகணும், இந்தத் தேஜுவை கூடவே வர சொன்னால் இரண்டு நாள் முன்ன வர்றேன் டி என்று கூறிவிட்டாள்.
தன்யனிடம் விடைப்பெற வந்தவளை அமர வைத்துப் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் சைதன்யன்.
போன் பேசியவனின் கவனம் பாதிப் போன் பேச்சிலும் மீதி அகமேந்தியிடமும் இருக்கின்றதென்றால், அகமேந்தியின் மொத்த கவனமும் தன்யன் மீதே இருந்தது.
உதட்டின் ஒரத்தில் புன்னகை உதிர்த்து கொண்டவன்.
“என்ன விஷயம்?” என்றான்.
“நான் இன்னிக்கு கிளம்பறேன் சார். இதோட மேரேஜ் முடிந்து வருவேன். அதான் சொல்லிட்டு…” என்று இழுக்க, “ம் ஓகே போ” என்றான்.
“சார் ஆப்டர் இங்க ஒரு ரிசப்ஷன் வைப்பேன். திருமணம் பண்ண போறவனைப் பார்த்தா நீங்க ஆச்சரியப்படுவீங்க. உங்களுக்குத் தெரிந்தவர் தான்” என்று கூற இவள் பக்கம் திரும்பாமலே,” ஓ… ஐ …சீ..” என்று எதையோ தேடுவதாகப் பாவித்தான்.
“சார்… மேரேஜ்க்கு விஷ் பண்ணலையே…” என்று கேட்டு முடிக்க இவள் புறம் திரும்பி, “இதயத்தைப் பத்திரமா வைச்சிக்கோ… மேரேஜ்ல ஷாக்கிங் சர்பிரைஷ் நிறையக் காத்திருக்கலாம். நியூ லைவ்… நியூ டர்னிங் இருக்கும். சந்திப்போம்.” என்று தன்யன் கையை நீட்ட அகமேந்தி இவன் என்ன இப்படி வாழ்த்தறான். ஒரு வார்த்தை எனக்குப் பத்திரிக்கை கொடுக்கலையே என்று கேட்கறானா. மாப்பிள்ளை யாருனும் கேட்கலை என்று கருவி கொண்டு சென்றாள்.
இப்படியாக ஐந்து நாட்கள் நகரவும், விடுமுறையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
கல்பனா பாட்டி வெயிலில் நின்றாலும் கறுத்திடுவாயெனச் சொல்லி வீட்டுக்குள் இருக்க வைத்தார்.
ப்ரியங்கா மட்டும் நலங்கு வைக்க மற்றும் ஊரிலே திருமணம் என்பதாலும் தங்கி கொள்ள வந்தார்.
தருணேஷ் அம்மா என்ற ரீதியில் நன்றாகவே பழகவும் செய்தாளர்
தூரத்தில் இருந்து வித்யாதரன் மகளின் மகிழ்ச்சியை இரசித்தார் உள்ளுக்குள் பெரிய கவலை புரட்டி கொண்டு இருந்தது.
மகளிடம் எப்படி மனதை மாற்ற போகின்றார் சைதன்யன் இதே ஓடிக் கொண்டிருந்தது.
தினமும் சைதன்யன் பேசுவான் இவளுமே வீட்டுக்கு வந்தது முதல் பாட்டி பேசுவதில் துவங்கி குயில் கூவும் கதை முதல் இரவு தவளை கத்தும் கதை வரை சொல்லி முடிப்பாள்.
க்ரஷ் க்ரஷ்… பாதிக்கு மேல் இருக்கும்.
அன்று சைதன்யன் வீட்டில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.
வசந்த் “எப்ப சார் ஊருக்கு போறிங்க? மேடத்திடம் சொல்லணுமே எப்படிச் சொல்ல போறீங்க?” என்று கேட்க
“அதைத் தான் யோசிக்கறேன் வசந்த். அவனை விரும்பினேன். நீ நிழல் தானேனு சொல்லிடுவாளோனு சொன்னா அவ ரியாக்ஷன் என்னயென்று நினைக்கவே பயமா இருக்கு. வசந்த் நாளைக்கு நான் ஊருக்கு போறேன். சப்போஸ் நெகட்டிவா நடந்து, அவயென்னை ஒரு மனுஷனா மதிக்காம நடந்துக்கிட்டால்.. பதில் என்னனு கேட்டு அடிக்கடி போன் போடாதே. நானா ரெக்குவர் ஆகிட்டு வருவேன்.
அப்படியில்லாம அதிசயம் நடந்து அவ க்ரஷ் பச்சையா சைட் அடிச்ச தன்யன் தான் தெரிஞ்சு என்னை ஏற்றுக்கிட்டா… ஏற்றுக்கிட்டா… டவுட் தான்ல…” என்று வருந்தினான் சைதன்யன்.
வசந்திற்கு இன்றே இப்படி உடைந்து போகின்றாரே சைதன்யன் என்று கவலையாக இருந்தது. எதற்கும் வித்யாதரன் எண்ணிற்கு அழைத்து விடையை விசாரித்துக் கொண்டு முடிவு பாதகமாக அமைந்தால் உடனே தான் சென்று அவரைக் காணவேண்டுமென எண்ணினான்.
தன்யன் எதிர்பார்த்த நாளாக அவன் ஊருக்கு வந்து சேர்ந்தான். கண்கள் படபடக்க அகமேந்தியின் வீட்டில் அவளைத் தேடினான். வித்யாதரன் தோளில் கை வைக்க, திரும்பினான்.
“அகி… ப்யூட்டி பார்லர் போயிருக்கா மாப்பிள்ளை. வந்திடுவா… உட்காருங்க.” என்றார்.
அவருக்குமே கையைப் பிசையும் நிலை தான்.
கல்பனா ஆச்சி தான் நிலைமை அறியாத காரணத்தால் இயல்பாய் இருந்தார்.
வீட்டை சுத்தி மருதாணியா கடக்கு. இவ என்னடானா அகமேந்தி மெஹந்தி வைக்கப் போறேன்னு சொல்லிட்டு ஸ்கூட்டி எடுத்துட்டு கிளம்பிட்டா. எங்க காலத்துல கல்யாண பொண்ணு வீட்டு படி தாண்ட மாட்டாங்க. ஏன் வயசுக்கு வந்தாலே வெளியே விட மாட்டாங்க. இந்தக் கழுதை வேலைக்குப் போறேனு நம்மூரை தாண்டி போகுது.” என்று பேசிக்கொண்டே போக, வித்யாதரனோ, “அம்மா சும்மா இருக்க மாட்ட” என்று அதட்டினார்.
“அம்… ப்ரியங்கா?” என்று கேட்க, அவங்க இந்த ஊர் ஹோட்டலில் தங்கிக்கறேனு போயிட்டாங்க. நானும் தடுக்கலை. என்ன இருந்தாலும் அவங்களும் இயல்பா இங்க பொருந்த சங்கடப்பட்டாங்க.” என்றார்.
“அப்பறம் மாப்பிள்ளை இங்க வைச்சி அகமேந்தியிடம் எதுவும் பேச வேண்டாம். நம்ம மல்லி செடி வரப்பு பக்கத்துல மாமரம் ஒன்னு தனியா கிடக்கு. அங்க ஓட்டு வீடு இருக்கு. அங்க போய்ப் பேசுங்க. இங்கனா… அக்கம் பக்கத்துல ஏதாவது கேட்டுவிடும். அகமேந்தி வேற கோபக்கார கழுதை. குரலு எட்டுவூருக்கு கேட்கும்.” என்று கூறினார்.
“வாஸ்தவம் மாமா. நான் அங்க போறேன்… வந்தா… அவளோட க்ரஷ் வந்துயிருக்கேனு சொல்லுங்க.” என்று மாமரம் இடம் நோக்கி நடையிட்டான்.
மாமரத்தின் இடம் வந்தமர்ந்தான். மல்லிகை செண்டு ஒன்றை கொய்து வந்திருந்தான். பூங்கொத்தாக அதனை இலையோடு பறித்து மாமரத்தின் இலையும் சேர்த்து வைத்து நுகர்ந்தான்.
அவள் பேசிய பழைய குறுஞ்செய்திகளை எல்லாம் பார்வையிட்டு மெல்ல உதடு விரிந்து இதம் உணர, அதில் நேரம் பறந்தோடி இனிமையை உணர்ந்தான்.
மெல்ல மெல்ல கொலுசொலி கேட்க திரும்பாமலே நெஞ்சில் கை வைத்து எழுந்து நின்றான்.
“க்ரஷ்…” என்றவள் அவள் கைகைளை பின்னாலிருந்து அவன் பார்க்க நீட்டினாள். அவள் மேனி பாதிச் சைதன்யன் உடலில் படர்ந்திருக்க, கையைப் பார்த்து வருடி விட்டான்.
“சாரி க்ரஷ்… க்ரஷ் எப்ப வந்த… இங்க என்ன பண்ணற… தூரத்துல இருந்து இங்க பார்த்தப்ப நீ பார்க்க தன்யன் மாதிரி இருந்த. தன்யன் ஹைட், தன்யன் மாதிரி நிற்கற ஸ்டைல், தன்யன் மாதிரி…” என்றவள் தொடர விடாமல் திக்கியது.
சைதன்யன் திரும்பி அவளைப் புருவம் உயர்த்தி என்ன என்பதாக…
“க்ரஷ்… நீ தானா… எனக்குச் சைதன்யன் பத்தி பேசிப்பேசியே நிஜமாவே தன்யன்.. சைதன்யன் மாதிரி தெரியற…” என்று இரண்டடி பின்னால் சென்றாள்.
“இ…இந்த.. புருவம் உயர்த்தி…. பார்க்கறது கூட… ஓஎம்ஜி… ஐ அம் சாரி தருணேஷ். எனக்கு ஏன் இப்படித் தோன்றுதுனு தெரியலை.” என்று கையை நெற்றியில் வைக்கப் போகவும்,
“நான் தருணேஷ் இல்லை. நான் உன்னோட க்ரஷ். க்ரஷ் சைதன்யன் மட்டும் தான். உன்முன்னாடி நிற்பது உன் தன்யன் தான்.” என்றதும் அகமேந்திக்கு தலையே சுற்றி விடுவது போன்ற மாயை உண்டாகியது. அவள் மனம் கலங்கி போயிருந்தது.
பின்னாடியே சென்றவளின் செடி மீது சரிய நேரும் பொழுது,
“அங்கயே நில்லு… செடிமேல விழப்போற.” என்றதும் அசையாது நின்றாள்.
“நீ…நீங்க… இங்க… எங்க… த..தருணேஷ்..?” என்று புரியாது வார்த்தையைத் தேடி பேசி திக்கினாள்.
“உனக்கு உங்கப்பா பார்த்த வரன் நான் தான்.
தருணேஷ் இல்லை….” என்று கூறினான். அதிர்ச்சியாக ஒன்றும் புரியாமல் விழித்தவள் வேகமாகத் தருணேஷ் நம்பருக்கு அழைக்க, அந்த எண்ணின் அழைப்பாகச் சைதன்யன் ஷர்ட் பாக்கேட்டில் ஒலியெழுப்பியது.
“நான்… நான்… பேசியது…?” என்றாள் பேதை.
“என்னோட தான்… தருணேஷ் அமெரிக்கப் போனதிலருந்து மட்டும். அதுக்கு முன்ன எல்லாம் அவனிடம் தான் பேசின.” என்று கூறவும்.
“ஏன்…. ஏன் இப்படி?” என்று குழம்பி அதிர்ச்சியாக கேட்க அவளின் இந்தப் பொறுமை பயன்படுத்திக் கூற ஆரம்பித்தான்.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. விரும்ப ஆரம்பிக்கும் பொழுது அவன் உனக்குப் பிரப்போஸ் பண்ணிட்டான். எனக்கு என்ன பண்ணறதுனு தெரியலை. அதான் உங்கப்பா மூலமா அரேஜ் மேரேஜ்ல உன்னை மனைவியா ஏற்றுக்க வந்தேன்.” என்று பார்த்து பார்த்துப் பேசினான்.
“அப்போ… எப்படி என் போனுக்கு அப்பா தருணேஷ் பிக் அனுப்பினார்.?” என்று கேட்கவும்
“நான் தான் தெரிந்த நூதன ஹேக்கர் மூலமா மாமா அனுப்பிய என் பிக் உனக்குச் சென்ட் ஆகாம தடுத்துத் தருணேஷ் பிக்சரை மாற்றி அனுப்பினேன். நீ விரும்பியவனே மேரேஜ் பண்ற எண்ணத்துல மேரேஜ்க்கு ஓகே சொல்வேனு…” என்று குனிந்தான்.
“ஏன் இப்டி பண்ணிணீங்க?” என்று காட்டு கத்தலிட்டு கத்தினாள்.
“அதான் சொன்னேனே. நீ அவனை விரும்பறேனு சொல்லிட்ட. உன்னிடம் திருமணத்துக்கு ஓகே வாங்க அப்போ அப்படிப் பண்ணினேன். அதுக்குப் பிறகு உங்க அப்பாவிடம் நான் செய்ததுக்குக் காரணம் எல்லாமே சொல்லிட்டேன். மாமா புரிஞ்சிக்கிட்டார்.” என்று பேச,
“என்ன புரிஞ்சிக்கிட்டார். என்ன பண்ணியிருக்கிங்க தெரியுமா? ஒரு பெண்ணோட உணர்வில் விளையாடியிருக்கீங்க…. அவரிடம் சொல்லி… சொல்ல வேண்டியது என்கிட்ட…
என் போனை ஹாக் பண்ணி… என்னோட உணர்வில் விளையாடிது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?” என்று கத்தல் அதிகமானது.
“தருணேஷ் என்னை விரும்பினான். நானும் விரும்பறேன். இதுல… இதுல எப்படி நீங்க நடுவுல புகுந்து விளையாடி வைச்சிருக்கீங்க.
போன்ல அவனோட பெயரில் பேசினப்ப கொஞ்சம் கூட மனசு குத்தலை…? சே… என்ன ஜென்மம் நீ… நான் காதலிச்சது அவனை ஆனா திருமணம் உன்னோட நடக்கும்னு எப்படி நினைச்ச?” என்று மரியாதை ஒருமையில் தாவியிருந்தது. தன்யனுக்குச் சுர்ரெனச் சினம் வந்தாலும் தவறு செய்தது அவன் என்பதால் அமைதியாகப் பதிலளித்தான்.
“இங்க பாரு… தருணேஷ் உன்னை விரும்புவதா சொன்னதும் பொய். நீ அவனை விரும்புவதா நினைத்து நீயா முட்டாளா யோசிக்கிறயே அதுவும் பொய்.
என் லைப்ல தான் அவன் குறுக்கே வந்தான்.
நீ மட்டும் பப்ல பார்த்து என் மேல க்ரஷ் ஆகலை. நானும் தான் உன்னைப் பார்த்து மனதை தொலைத்தது.
என்ன சொன்ன… மனசு குத்தலையா…? நான் ஒன்றும் தருணேஷா பேசலை. எனக்கு நீ என்னை க்ரஷ்னு பேர் வைச்சி பேசினியே அதைத் தான் கூப்பிட சொன்னேன்.
நீ தன்யன் என்னைப் பற்றித் தான் நிறையப் பேசின. நீ அவனைக் காதலிச்சா… என்னைப் பற்றிப் பேசியிருக்க உனக்கு ஆவலே இருந்திருக்காது. அதனால நீ அவனை விரும்பலை.” என்று முடித்தான்.
“சீ… எங்க காதலை பிரிக்கத் தான்., நீ அவனை அமெரிக்கா அனுப்பியிருக்க, என்னோட வேலை பெஸ்ட் ஓர்க்கர் தந்துருக்க. உன்னைப் பற்றியே பேச வைத்திருக்க. நான் உன்னிடம் உன்னைப் பற்றிப் பேசவும் உன் பக்கம் இழுக்க நடித்து இருக்க.” என்றதும் கை ஒங்கியவன் அடிக்கவில்லை.
“அவன் உன்னை உண்மையா விரும்பலை ஸ்வீட்ஹார்ட் புரிஞ்சிக்கோ.” என்றான் மட்டுப்படுத்திய கோபத்தோடு.
“அதை அவன் சொல்லட்டும். நீ சொல்லாதே…” என்றாள் அதே சினத்தை அடக்காமல் வெளிப்படுத்தி.
” அவன் சொன்னா… இந்தத் திருமணத்துக்குத் தடை செய்யாம என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா?” என்றான்.
அகமேந்தி சற்று நேரம் அமைதியாக இருந்தை யோசித்துக் கொண்டிருந்தாள்.
“கேட்கறேன்ல…. அவன் உன்னை விரும்பலைனு சொல்லிட்டா… உங்கப்பா ஊர் முழுக்கப் பத்திரிக்கை வச்சது என் பெயர்ல… அதுக்காவது கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வியா?”
“பண்ணிக்கறேன்… ஆனா தருணேஷ் நேர்ல என்னிடம் சொல்லணும்” என்றாள் மிடுக்காக
சைதன்யன் போனை எடுத்துச் சுழற்றினான். “வசந்த் அவனை அனுப்பு.” என்று கூறி அணைத்தான்.
அகமேந்தி யாரை வரச்சொல்லறான் என்று விழித்து நின்றாள்.
-சுவடு பதியும்.
-பிரவீணா தங்கராஜ்.

Yenna daa nadakathu…. Iyyaioooo sis… Next ud innaikey potrunga plss……
Omg sema twist. What happened? Very very intresting sis. Awesome narration sis.
Hi super sema twist
Avana yengenthu da kootu vantha.. avan yepdi ellenu solvan