ஆலியே-14
அவனிடம் தோற்கப் பிடிக்காமல் தான் என்னைக் கல்யாணம் செய்ய இத்தனை மெனக்கெடலா? உடைந்திடும் குரலில் கேட்டாள் அகமேந்தி.
அவள் கன்னமேந்தி “ஸ்வீட்ஹார்ட் என் காதல் உன் கண்ணுக்குத் தெரியலையா… சுற்றி சுற்றி பார்த்த… யாரோ உன்னைப் பார்க்கறாங்கனு சொன்னியே…” என்றதும் அகமேந்தி அவளை அறியாது அவன் கையைப் பற்ற, “ஸ்..ஆ…” என்று வலியில் கத்தினான்.
அகமேந்தி, “என்னாச்சு?” என்று பதறவும், “ஒன்றுமில்லை மா” என்றான்.
“சட்டையைக் கழட்டு”
“ஒன்றுமில்லை”
“கழட்டுன்னு சொன்னேன்.” என்றதும் சட்டையைக் கழட்டினான். இடது முழங்கையில் சில இடத்தில் தோல் கொப்பளமாக மாறியிருந்தது.
“அய்யோ… என்ன இப்படி இருக்கு. இதோட சட்டை போட்டா இன்னமும் உரசி எரியும்.” என்றவளின் கண்களில் கண்ணீர் துளிகள் வழிய துவங்கியது.
“ஸ்வீட்ஹார்ட்… எனக்கு ஒன்றும் ஆகலை.” என்றவன் பேச்சில் சமாதனம் ஆகாது “முதல்ல வா இங்க” என்று மருந்தை தேடினாள்.
அவள் அழுகையோடு மருந்தை தேடி எடுக்கவும், சைதன்யன் அமைதியாக அவளைக் கவனித்தான்.
மருந்திட்டு முடித்தவள் “சாரி சத்தியமா இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை” என்றதும், “ஏய் எனக்கு வலிக்கவேயில்லை மா.” என்றவன் முகம் திடமாக இருந்தாலும் அவனின் சிவந்த தோல் அவனின் வலியை உணர்த்தியது.
“ஏலே செல்வராசு… இந்த வாழைத்தாரை அங்க வைல” என்று வித்யாதரன் குரல் கேட்டு சைதன்யன் சட்டை அணிந்து கொண்டான். முழுக்கை என்றதால் மறைக்க முயன்றான்.
“அய்யோ அப்படியே போட்டா எரியும்.” என்றாள்.
“ஆல்ரெடி நான் உண்மையைச் சொல்லி தான் திருமணம் செய்தேன். உங்கப்பா உன்னையும் என்னையும் வாட்ச் பண்ணிட்டு இருப்பார். நாம சந்தோஷமா காட்டிக்கலைனாலும் சங்கடப்பட வைக்க வேண்டாம். நான் சீக்கிரமா சாப்பிட்டு நம்ம ஓட்டு வீட்டுக்கு போயிடறேன்.” என்றதும் அகமேந்தி செல்லும் அவனையே விசித்திரமாக எண்ணினாள்.
அவன் சொன்னது போலத் தந்தை தன்னை அடிக்கடி கவனிக்கச் சாப்பிட எடுத்து வைத்தாள்.
கல்பனா பாட்டியிடம் அவனுக்கு என்று கேளாமல் சுடத் தண்ணீர் கொப்பளத்திற்கு என்ன வைத்தியம் கேட்கலாமா தோன்ற, ‘முட்டாளே… பாட்டிக்கு எதுவும் தெரியாது. நீயா மற்றதை சொல்லப்போறியா.’ என்றது அவளுள்ளம்.
இருக்கவே இருக்கிறது நெட். அதில் தேடி பிடித்து மருந்தை அறிந்துக் கொண்டாள்.
மாலை வரை உறக்கமென்று அறையில் இருந்துக்கொண்டான். இரவும் சாப்பிட்டு முடித்து, அவன் சென்றதும், அகமேந்தி அவனுக்காகக் கற்றாழை செடியின் ஜெல்லை எடுத்து தேன் கலந்து குழைவாக எண்ணெய் பதமாகத் தயாரித்துக் கொண்டாள்.
அதனை எடுத்துக்கொண்டு அவன் இருக்குமிடம் வரவும் மேல் சட்டையின்றிக் கட்டிலில் கண் மூடியிருந்தான். அகமேந்தி வரவும் அவளைக் கண்டு சின்னதாய் முறுவலிட்டான்.
அங்கே அலங்காரத்திற்கு ஷெல்பில், அழகிற்கு வைத்திருந்த மயிலிறகால் வருடிபோட்டு விட்டாள்.
“இங்க பாரு எனக்கு அழுவறது பிடிக்காது. இதுல நீ என்னால அழுவறது எனக்குக் கஷ்டமா இருக்கு.” என்றான்.
“சிரிக்கச் சொல்லறியா… உனக்கு இப்படி இருக்கும் பொழுது. ஆனா நிஜமா நான் சிரிக்கணும். நீ பண்ணின வேலைக்கு. நான் என்னடானா உனக்காகக் கவலைப்படறேன்.” என்றதும் சைதன்யன் மென்னகையை வீசினான்.
அகமேந்தி அவனுக்குப் பூசியபடி என் போன்ல எப்படி உன் நம்பர்?” என்று கேட்டாள்.
அவளின் கனிவான பேச்சில், கூறத் துவங்கினான்.
“மீட்டிங்ல போன் வாங்கி லாக்அப்ல வைப்போமே அப்போ வசந்த் தருணேஷ் நம்பரை எரேஷ் பண்ணிட்டு என் நம்பரை சேவ் பண்ணிட்டான். சேம் தருணேஷ் நம்பரில் வசந்த் நம்பர். பாவம் வசந்த்…” என்று பற்கள் மிளிர சிரித்தான்.
வசந்த் எப்படிப் பேசுவான் என்பது அறிந்த காரணத்தால் அகமேந்தியும் வசந்தை எண்ணி சிரிக்கத் தான் முயன்றது.
“பிராடு.. ஹேக் பண்ணி காதலிக்கறதுக்குப் பதிலா நேரிடையா லவ் சொல்லியிருக்கலாம்.” என்று குறுகுறுவென விழித்தபடி கூறினாள்.
அவன் இப்பேச்சில் களிப்படைவான்னே எண்ணியிருக்க மாறாக, “நான் தயங்கினேன்… ஒரு பெண்ணிடம் வேலைக்கு வந்த கொஞ்ச நாளில் எப்படினு தயங்கி தூரத்திலிருந்து இரசிக்க, அவன் முந்திப்பானு நினைக்கலை. அவன் லவ் ட்ரு இல்லைனு புரியறப்ப, எனக்கு அவன் பிராடுதனத்தை உன்னிடம் சொல்ல விருப்பமில்லை.
அவன் செய்கின்றதை சொல்லி நான் நல்லவனு பெயரெடுத்து வருகின்ற காதல் எனக்குப் பிடிக்கலை. நான் கெட்டவனா உனக்கு அறிமுகமானாலும் எனக்காக உன் காதல் கிடைக்கணும் மட்டும் தான் தோன்றியது.
இதுல நீ என்னை க்ரஷ்னு கூப்பிட்டது என்னைப் பற்றிப் பேசியது எல்லாம், அந்தக் காட் எழுதியது. அதில் என் தலையிடல் இல்லை. அதே நேரம் உன் அப்பா புரிஞ்சிக்கிட்டதும் என் லக்.” என்றவன் கையை ஊதிக் கொண்டிருந்தான்.
“அந்த லேப்டாப் கரண்ட் ஷாக் அப்போ…” என்றவள் கேட்க தயங்கி நின்றாள்.
தருணேஷ் அன்று மருத்துவமனையில் இவள் பெயரையே அல்லவா உச்சரித்தான்.
அவள் கேட்க தயங்கியதிற்கு அவன் போனை எடுத்துக் காட்டினான். அதில் அலுவலகச் சிசிடிவியில் இருந்து தருணேஷ் லேப்டாப் கணிணியின் பிற்பாதி வேண்டுமென்றே கையை விட்டு இருந்தான்.
அவனுக்கு நேர சிசிடிவி வைச்சா கண்டுபிடிச்சிடுவான் அதான் அவனுக்குத் தெரியாம வைச்சது. இங்க சிசிடிவி இருக்காதுனு நினைச்சி மாட்டிக்கிட்டான்.
எனக்கு ஷாக் என்னனா நீ அப்போ அவனைத் திகைச்சு பார்த்த, உன் கண்ணுல இப்ப கொட்டுதே அருவி மாதிரி கண்ணீர். இந்தளவு இல்லைனாலும் சின்னதா கலங்கி இருந்தது.
அதோட பயம் தான் உடனடியா மாமாவிடம் பேசியது. அவருக்கு மாப்பிள்ளை நானாகவும், உன்னிடம் அதே போட்டோனா மாட்டிப்பேன். அதனால தான் ஆள்மாறட்டம் செய்தது.
ஒரு கட்டத்தில் அப்படியும் பொய்யை தொடர முடியலை… செத்துட்டேன். நீ க்ரஷ்னு என்னைக் கூப்பிட்டு பேசியதும் தான் மறுபடியும் எனக்குள்ள உயிரோட்டமே வந்தது.
“ஏய்… ஸ்வீட்ஹார்ட்… என்மேல நம்பிக்கையில்லையாடி தூக்கமாத்திரையைக் கலந்திருக்க..?” என்றதும்
“அய்யோ… நான் எதுவும் கலக்கலை… என்னாச்சு…?” என்று குழம்பி அவனை உலுக்க, அவனோ அவள் மேலேயே விழுந்தான்.
“தன்யன்… தன்யன்…” என்று அவன் கன்னத்தில் தட்ட விழிதிறக்க போராடி இமை மூடினான்.
“மாப்பிள்ளைக்கு நான் தான் மா பாலில் கலந்தேன். காலையிலிருந்து எரிச்சலில் அவஸ்தைப்பட்டார்.” என்றதும் “அப்பா நீங்களா…?” என்று அவனைத் தலையணையில் கிடத்தி எழுந்தாள்.
“உன்னிடம் எந்தளவு உண்மை சொல்லி பழகினார்னு எனக்குத் தெரியாது. ஆனா என்னிடம் உண்மையைச் சொல்லிட்டார். அதன் பிறகு தான் பத்திரிக்கை அடிக்க ஆரமபித்தததே. பாவம் தம்பி தூங்கட்டும்… இந்தா மருந்து இதை அரைமணிக்கு ஒரு தடவை அப்ளை பண்ணு மா. விரைவா டெத் செல் கொண்ட தோளை ரிமூவ் பண்ணிடும்.
நீ ஏன் மா தருணேஷை விரும்பியதை என்னிடம் சொல்லலை.” என்றதும் அகமேந்தி குற்றவுணர்வில் நின்றாள்.
“அப்பா… கல்யாணம்னா உங்களிடம் சொல்ல…” என்றவளை தடுத்தார்.
“பரவாயில்லை மா. அவரைக் கவனி” என்று கிளம்பிட, அப்பா… அப்பா… என்று கதவு வரை வந்தவள் அந்தக் கதவிலே சாய்ந்து கொண்டாள்.
தந்தை சென்று தங்கள் வீட்டின் மின்சார ஒளிவிளக்கை அணைத்தப்பின் சுற்றிலும் இருட்டாக இருக்கப் பயந்து கதவை தாழிட்டாள்.
அந்த ஓட்டு வீட்டில் ஜன்னல் மட்டும் திறந்திருக்க, மாமரத்தின் காற்று ஜில்லென்று வீச, தன்யனின் சிகை அலைபாய்ந்தது.
அகமேந்தி மனமும் அவனிடம் அலைப் பாயத் துவங்கியது.
மெல்ல அவள் கைகள் அவளையும் மீறி அவன் சிகையில் கோதிட, ஆழ்ந்து உறங்கியவன் நெற்றியில் முதல் முத்தம் பதித்தாள்.
அவனின் கைக்குக் கற்றாழை காய்ந்து விட மீண்டும் மருந்து பூசினாள். இப்படியாக இரவு மூன்று நான்கு முறை பூசியவள் அந்த ஜெல் கைகளில் காய்ந்தபடி உறங்கியும் போனாள்.
அதிகாலை வெய்யோனின் கதிர்கள் மாமரத்தின் கிளைக்கு உள்ளே வந்து, வீட்டின் உள்கண்ணாடியில் படும் விதமாக அமைப்பிருக்க, அவ்வறை ஒளியை பெற்றுப் பிரகாசித்தது.
சைதன்யன் எழுந்தவன் அகமேந்தியை கண்டதும் மென்னகை புரிந்து எழுந்தான்.
கண்ணாடியை திருப்பி வைத்து ஒளியை தற்சமயம் வேண்டாமென மறுத்து அவளுக்குப் போர்வை போர்த்தினான்.
கதவை திறந்த நேரம் வித்யாதரன் ரோஜாசெடியினைத் தொட்டியோடு வரிசையாக வைக்கச் செல்வரசுவை ஏவிக்கொண்டிருந்தார்.
அவரைக் கண்டு வேகமாகச் சட்டை அணிய திரும்ப, “மாப்பிள்ளை அப்படியே வாங்க. சட்டையைப் போட்டா ஆறாது.” என்றதும் அசடு வழிய நின்றான்.
“நான் தான் நேத்து வலிநிவாரணியோட தூக்க மாத்திரையைக் கலந்தேன் மாப்பிள்ளை. நீங்க காலையில் இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு இருந்தீங்க. சொன்னா அகமேந்தி புரிந்துக்கறது சந்தேகம் தான். உங்களிடம் சொன்னாலும் ரெஸ்ட் எடுக்க மாட்டீங்க. அவளிடம் பேசறதில வலியை மறைக்கப் பார்க்கறீங்க. அதனால தான்… நேற்று அவ கலந்தப்பவே நீங்க கைகட்டி வேடிக்கை பார்த்ததீங்க. இதைத் தவறா எடுத்துக்கலையே…” என்று முடித்தார்.
“இல்லை மாமா… எனக்காகத் தானே யோசித்து இருந்தீங்க பரவாயில்லை. ஆனா மாமா நான் அகமேந்தி கலந்தானு தான் குடிச்சேன். நீங்கன்னா கண்டிப்பா குடிச்சிருக்க மாட்டேன். இனி கசப்பு சுவை லேசா வரும் போதே உஷாராகிடுவேன்.” என்றான் விளையாட்டாய்.
மாமனாருக்கு தன் விழுப்புண் அறிந்தப்பின் தாராளமாக மேல் சட்டை அணியாது தவிர்த்தான்.
அகமேந்தி தூக்கம் களைந்து எழுந்து வரும் பொழுது தன்யன் அவன் விருப்பம் போல ரோஜாச்செடியை அணிவகுத்து அழகு பார்த்திருந்தான்.
தந்தையிருக்க அமைதியாகத் தன் வீட்டினை நோக்கி சென்றாள். காபியை எடுத்துக் கொண்டு இங்கே வர, வித்யாதரன் வயலுக்குச் சென்றிருந்தார்.
“குட் மார்னிங் க்ரஷ்.” என்றவள் காபியை பருகினாள்.
“வெரி குட் மார்னிங்.” என்றவன் அவளின் க்ரஷ் என்ற சொல்லை கவனிக்கவில்லை.
அறிவில் எட்டி மனதில் சாரலாக நிறைய அகமேந்தி கல்பனா பாட்டி இருக்கும் திசைக்குச் சென்றிருந்தாள்.
மதியம் உணவருந்த வந்தவன் டீஷர்ட் அணிந்து இருக்கக் கைகள் எதிலும் உராயாமல் பார்த்துக் கொண்டான்.
கல்பனா பாட்டி சமைத்தது. இது நான் சமைத்தது என்று அவள் ரகவாரியாகப் பிரித்து வைக்க, “தேங்க்ஸ் அதெல்லாம் அப்ப நான் அவாய்ட் பண்ணிடணும்” என்று ஆச்சி வைத்த குழம்பை ஊற்ற போக, கரண்டியாலே அவன் கையில் ஒர் அடிப்போட்டாள்.
அவன் சுற்றிமுற்றி பார்க்க, “இங்க யாரும் இல்லை. நான் செய்ததைச் சாப்பிடு. இல்லை குழம்பை எடுத்து மேல ஊற்றிடுவேன்.” என்று மிரட்டினாள்.
பாத்திரத்தை தொட அது சூடாக இருக்கவும், அடிப்பாவி எனக்குச் சோறும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நான் இப்பவே பெங்களூர் போறேன்” என்று எழுந்துக்கொள்ள, அவன் தோளை பிடித்து அமர வைத்து சாப்பிட சொல்லி கண்களாளே மிரட்டினாள்.
“இங்க பாரு தூக்க மாத்திரை கலந்த ஓகே. பாய்சன் எதுவும் கலக்கலையே… நம்பி சாப்பிடலாமா.” என்று கேட்டான்.
அவள் தலையில் கொட்டியவள் பரிமாறத் துவங்கினாள்.
ஆனந்தமாக நடப்பவைகளை எல்லாம் நம்ப இயலாமல் அதன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி இருந்தாலும் அவளிடம் உரிமை எடுக்கவில்லை.
நேரத்துக்கு மருந்து மட்டும் பூசிவிட்டாள்.
இரவு பாலையெடுத்து வந்தவள் பாதி அருந்தியபடி, மேஜைமீது வைத்தாள். அவனின் பர்ஸ் எடுத்து அதைத் திறக்க அவனின் தாய் புகைப்படத்த எடுக்கவும் பின்னாலிருந்து ஒரு புகைப்படமும் விழுந்தது.
அதில் அகமேந்தி பார்மில் அப்ளை செய்த புகைப்படம் இவனிடம் இருப்பதைக் கண்டு பார்வையாலே “என்ன இது?” என்றாள்.
“ஆபிஸ்லருந்து சுட்டுட்டேன்.” என்றான்.
“நான் ஒன்னு கேட்கவா…? அம்மா வேண்டும்னு அப்பா சொன்னதும் நீங்க ப்ரியங்கா அத்தைய..”
“ப்ரியங்கா அத்தை இல்லை. ஜஸ்ட் ப்ரியங்கா” என்றான் நொடியில் முகம் பாறையாக.
“ஓகே ஓகே… அவங்களை எதுக்கு நடிக்கக் கூப்பிட்டீங்க. உங்களுக்கு அவங்களை அம்மானு கூப்பிடவே பிடிக்கலை. பிறகு வேற யாரையாவது அம்மானு நிறுத்தியிருக்கலாமே. போட்டி ஆட்களிடமே போய் உதவி கேட்டது எதுக்கு?”
“எங்க அப்பா திருமணம் ஆனவர் என்று தெரிந்தப் பிறகும் அப்பா திருமணத்துக்குக் கேட்டப்ப, சம்மதிச்ச அவங்களை என்னால சித்தியா கூட ஏற்றுக்க மாட்டேன்.
எங்கம்மா உயிரோட இருந்தும் எங்கப்பா காதல் இன்னொருத்தி கொடுத்து எங்கம்மா மனதை வதைச்சாங்க. நான் அதையே இப்ப அவங்க பையனுக்கு ரிட்டர்ன் பண்ணறேன்.
தருணேஷ் விரும்பறதா அவர்களிடம் சொல்லலை. பாதியில் தான் சொன்னேன். அவங்களுக்கு அதோட பெயின் கொஞ்சமாவது புரியும்ல.” என்றான்.
“அப்போ தருணேஷ் என்னை விரும்பி இருக்கானா?” என்றதும் சைதன்யன் கோபமாக
“லுக் எத்தனை முறை சொல்றது அவன் பெயரை உச்சரிக்காதேனு. என்னைப் பெரிசா விரும்பிட்டான். ஒரு பக்கம் சொத்து வேண்டுமா நீ வேண்டுமானு கேட்டா சொத்துனு முடிவு பண்ணிட்டான்.
அவன் லேசில் உன்னைக் கொடுக்கலை.
சேகர் மூலமா பெங்களூர்ல எப்படியோ நீயும் இல்லை நானும் இல்லை தெரிஞ்சதும் என் டிரைவரிடம் கேட்டு, நான் அடிக்கடி இங்க வந்ததைத் தெரிஞ்சுக்கிட்டு அடுத்த நாளே வந்துட்டான்.
வந்ததும் வாக்குவாதம்… உன்னிடம் வந்து உண்மை சொல்லி அவன் தாலி கட்டப்போறேனு நின்றான்.
சொத்து மதிப்பு சொல்லி பேரம் பேசவும் அப்படியே நின்றான்.
நீ அகமேந்தியை கட்டிக்கிட்டாலும் எனக்குக் கவலையில்லை ஜஸ்ட் தோல்வியை மறக்க எவளோடவாது பாரின்ல டேட்டிங் போயிப்பேன். நீ சொத்தை வாங்கிட்டு விட்டுக் கொடுத்தா அகமேந்தி கூட ஹனிமூன் அவ்ளோ தான். அசல்டா பேசியதும் பெனிபிட் என்னவோ எனக்குத் தான் என்றதும் சொத்து மதிப்பை வாரிசா அறிவிச்சு அவனுக்குக் கொடுத்துடுவேன் சொன்னதுக்கு ஆர்கியூமெண்ட் இல்லாம நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டான்.
சும்மா இல்லை… கோடி” என்றவனின் பேச்சில் கை வைத்து நிறுத்த சொன்னாள்.
“நான் என்ன பொருளா… பேரம் பேசி வாங்க. இரண்டு பேருக்கும் நான் உணர்வு கொண்ட பெண்ணா தெரியலை அப்படித் தானே… உன்ன போய்க் காதலிக்க ஆரம்பிச்சேன் பாரு என்னைச் சொல்லணும்” என்று அகமேந்தி தீப்பிழம்பாக மாறி நின்றாள்.
- சுவடுபதியும்
-பிரவீணா தங்கராஜ்.

Wow super sema twist. Vèy intresting. Awesome narration sis.
Wrong timing la unmai Delilah vanthurichi
avan ena solranu unaku than puriyala aki