Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-17

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-17

  
ஆலியே-17

    தருணேஷ் வேலைவிட்டு எடுக்கப் போவதாகக் கூற வசந்த் ஏளனமாகச் சிரித்தான்.

       “இங்க பாரு தம்பி நீயில்லை சைதன்யன் சார் நினைத்தாலும் என்னைய இரண்டு வருஷத்துக்கு வேலையிலிருந்து எடுக்க முடியாது. இங்க இரண்டு வருடம் கண்டிப்பா வேலையில் இருப்பேன். அதுமாதிரி அக்ரிமெண்ட் பிக்ஸ் பண்ணிட்டு போயிருக்கார்.
      ஆசையா ஆரம்பிச்ச அலுவலகத்தை உன்னை மாதிரி பப்ல பொழுது போக்கறவனிடம் அள்ளி தூக்கி கொடுக்கறதுனா சும்மாவா.
     சைதன்யன் சார் என்னை இங்க வைத்தது உன்னை வேவு பார்க்கயில்லை. உனக்குக் கொஞ்சமாவது மாரல் சப்போர்ட் பண்ண தான். நீ ஏடக்கூடமா நினைத்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.” என்று வெளியேறினான்.

      தருணேஷுக்குக் கோபம் அளவுக்கு அதிகமாகவே வந்தது.

   அகமேந்தி அடித்த அடியில் இன்னமும் கன்னம் எரிய அவளை உக்கிரமாகப் பார்த்தான்.

     அவளைத் தற்பொழுது ஒன்றும் செய்ய இயலாது. இந்த வசந்தை என்று அவனைப் பற்றித் தேட வசந்த் கூறியது போல அவனை உடனடியாக வேலைவிட்டு தூக்க இயலாதபடி செய்திருந்தான்.

    பணியும் முடித்துக் கொடுக்க வேண்டியது இருந்தது.
 
     எங்கே என்ன செய்கின்றனர் என்று பார்க்க வரும் மெயிலுக்குப் பதில் அளித்தான்.

    மதியம் அகமேந்தி சாப்பிட செல்ல தாமதமாக, சைதன்யனிடமிருந்து அழைப்பு வந்தது.

     “ஹாய் ஸ்வீட்ஹார்ட் சாப்பிட போகலையா…” என்றான்.

      “டேய்… ஏன்டா இப்படிப் பண்ணுன?”  என்றாள் பல்லை கடித்தபடி,

     “எது கார்ல கிஸ் பண்ணியதா?” என்று அப்பாவியாய் கேட்டான்.

     “இடியட்… இங்க ஆபிஸ்ல மேரஜ் போட்டோ டெலிகாஸ்ட் பண்ணின வீடியோவை கேட்டேன்.” என்று சத்தமில்லாமல் அவனிடம் போனில் கத்தினாள்.

     “ஸ்வீட்ஹார்ட்… நீ போகணும்னு வீம்புக்கு கிளம்பிட்ட, ஆனா அங்கே கேள்வி வரும்னு நீ எதிர்பார்த்து இருக்க மாட்ட, அதான் நானே யாரும் கேள்விக் கேட்க முடியாதபடி  பண்ணிட்டேன். உனக்கு ஓகே தானே.” என்றதும் அகமேந்தி “ம்ம்” என்று குரலெழுப்பினாள்.

     “குரலுக்கு என்னாச்சு… ஒரு மாதிரி டல்லா இருக்கு.”

      “ஒன்றுமில்லை”

      “சரி பேனாவை கடிக்காதே.” என்று கூறவும் அகமேந்தி வசந்த் மூலமாக வீடியோவில் பார்க்கின்றானா என்று அவனைப் பார்த்தாள்.
 
     “வசந்த் எல்லாம் உன்னை நோட் பண்ணலை. அவனுக்குக் கம்பெனி வேலை இருக்கு. நான் தனியா உன்னைச் சைட் அடிக்கச் சிசிடிவி வச்சிருக்கேன் ஸ்விட்ஹார்ட்.” என்றான்.

      “தேவையில்லாத வேலை பார்க்குற போனை வை.”
 
    “சாப்பிட போகச் சொன்னேன். நீ போயிட்டா நான் வைச்சிடுறேன்.” என்றதும் அகமேந்தி அவள் பாட்டிற்குப் போனை அணைத்து விட்டு வேலையை பார்த்தாள்.

      பத்து நிமிடத்தில் அவள் பெயருக்கு உணவு பார்சல் வந்தது. அவளுக்குச் சொல்லாமலே தெரியும் சைதன்யன் அனுப்பியதென்று.

      நன்றி கூறி பெற்றுக் கொண்டாள்.

   புலாவ் ரைஸ் வாசம் வீச, ஸ்பூனிஸ் எடுத்து சுவைத்தாள்.

      அகமேந்தி அவள் திரும்பப் பணிமுடித்துக் கிளம்ப மாலை ஆனது.

      தருணேஷ் காரில் கிளம்பும் நேரம் சைதன்யன் ஜாலியாகக் காரில் காத்திருக் செய்தான்.

    அகமேந்தி தருணேஷ் இருப்பதைக் கண்டுக்காமல் சைதன்யன் காரில் ஏறினாள்.

    சற்றுதூரம் கடக்கவும் அகமேந்தி சைதன்யனை கையைக் கிள்ளி எடுத்தாள்.

   “ஏய்ய்.. காரோட்டிட்டு இருக்கேன் ஸ்வீட்ஹார்ட்.” என்று கத்த அவளோ தொடையைக் கிள்ளவும் சிக்னலில் கடந்து விட்டு ஒர் பக்கம் நிறுத்தினான்.

      “வீட்ல வந்து கிள்ளு. ரோட்ல வேண்டாம் அகமேந்தி” என்றான்.

   அவன் தன் முழுப் பெயரை விளித்தாளே என்னவோ ஒட்டாத தன்மை அவளுள் வந்திட அமைதி காத்தாள்.

      வீட்டுக்கு வந்ததும் உள்ளே சென்றவள் சமையலறையில் பாதிக்க மேலே அலங்கோலமாக இருக்கக் கண்டாள்.

      “என்னயிது?” என்று நெற்றி சுருக்கி வந்ததும் வேலையா என்பதைப் போலப் பார்ததாள்.

     “சாரி சாரி மதியம் குக் பண்ணிட்டு அப்படியே கொஞ்சம் வேலையிருந்ததா, அதைப் பார்க்க போயிட்டேன். பைவ் மினிட்ஸ் நான் சுத்தம் பண்ணிடறேன். நீ ரெப்பிரஷ் ஆகிட்டு வா” என்றான்.

   வந்த அலுப்பில் அறைக்கு வந்து குளித்து உடைமாற்ற அதன் பின்னரே தான் மதியம் சாப்பிட்டது சைதன்யன் சமையல் என்றே வஞ்சியவள் உணர்ந்தாள்.

     அவள் வேகமாக வெளியே வந்து நிற்கவும், சைதன்யன் சுத்தம் செய்து கையை அலம்பியிருந்தான்.

      “காபி” என்றதும் வாங்கியவள் மெல்ல அருந்தி,”சிசிடிவி எங்க வைச்சிருக்க. என்னைக் கண்காணிக்கறது எனக்குப் பிடிக்காது.” என்றாள்.

      “நான் அவனை..” என்று நிறுத்திவிட்டான்.

     “காபி நல்லா இருக்கு. இதோட வாசம் நல்லா புத்துணர்வா இருக்கு.” என்றாள்.

     என் மேல கோபமா… கண்கானிக்கறேனு. நான் உனக்கு ஆபத்து வரக்கூடாதுனு தவிர்க்க பார்த்தேன்.” என்று கூறினான்.

     “அவன் எல்லாம் பெரிய ஆளே இல்லை. அவனால ஆபத்து வருவதற்கு. உன்னால தான் ஆபத்து எதையாவது செய்து இம்சை பண்ணற.” என்றவள் சைதன்யன் மேல் பார்வை பதித்தாள்.

     அவனின் மீசை சிரிப்பதில் உதடு சுழித்துத் திரும்ப, காலையில் அவளை இழுத்தது போலவே இழுத்து முத்தமிடவும், அப்பொழுது தான் சுவைத்த காபி மணம் அவனுள் சுகந்ததை வீசியது.

      “என்ன பண்ணற நீ..நீ.. இப்படிப் பண்ணின நான் தேஜு ரூம்கே மறுபடியும் ஷிப்ட் பண்ணிடுவேன்.” என்றாள்.

    “ஏய் காலையில் ஆபிஸ் வர்றப்ப என்னையே பார்த்துட்டு இருந்த, அதான் என்னை மிஸ் பண்ண போறியோனு ஹக் அண்ட் கிஸ் பண்ணினேன். இப்பவும் நீ தான் சைட் அடிச்ச, அதனால தான் கொடுத்தேன். ஓகே இனி செல்ப் கண்ட்ரோல். எங்கயாவது வெளியே போகலாமா?” என்றான்.

      “வேண்டாம்… எனக்குக் கொஞ்சம் தலைவலியா இருக்கு.” என்று சோபாவில் அமர்ந்து போனை நோண்டினாள். 

      “தலைவலியா…. லைட்டா வாய்ஸ் வேற மாதிரி இருக்கு என்னாச்சு” என்று அவள் கழுத்தில் வைக்கவும் அகமேந்தி கண்கள் வெளியே தெறித்து விடுவது போல விழித்தாள்.

    பிறகு தன்னைச் சமாளித்து, “எனக்கு ப்ரிட்ஜ் வைச்சிருந்த ஜூஸ் ரொம்பக் கூல்லா இருந்தா இப்படித் தான் ஒத்துக்காது” என்று ஷாலை கழட்டி தன்னருகே வைத்து மீண்டும் போனில் மூழ்கினாள்.

    “கொடுக்கும் பொழுதே சொல்லியிருக்கலாமே அகமேந்தி” என்றான்.

     “இப்ப எதுக்குப் பெயரை சொல்லற… வீட்டுக்கு வந்ததும் முதல் முறையே மறுக்கணுமா? எல்லாம் இரண்டு நாள் இருந்துட்டு போயிடும்” என்று சாதரணமாகக் கூறவும் சைதன்யன் அவளருகே அமர்ந்தான்.

     “பெயர் சொன்னா என்ன? உனக்கு  கஷ்டமாயிருக்கா?” என்றதும் அமைதியாக மாறி எழுந்து தனக்கான அறைக்குச் சென்றாள்.

     சைதன்யன் அவள் மனதில் என்னதான் ஓடுதெனக் குழம்பி போனான்.

     இரவு சாப்பிடும் பொழுதும் புலாவ் மீந்தவையைச் சூடுப்படுத்தினாள். இருவரும் உணவை உண்டு முடித்தனர்.

     பின்னர் உறங்க ஏற்பாடு செய்து படுத்தவள் காதில் ஹெட் செட் வைத்து உறங்க, இவளை காண வந்த சைதன்யன் காதிலே ஹெட் செட் போட்டு தூங்கறாயென்று கழற்ற போனான்.

    அவன் கழட்டிய அடுத்த வினாடி இமை திறந்தவள் வேகமாக ஷாலை தேட, இடுப்பில் கையை வைத்து நின்றானவன்.

     ‘காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்’ பாடல் இசைத்துக் கொண்டிருக்க, “தூங்கிட்டேனு ஹெட்செட்டை எடுத்தேன்.” என்று விளக்கினான்.

     “எனக்குப் பாட்டு கேட்டுட்டு தூங்கி தான் பழக்கம்.” என்றவள் குரல் கரகரப்பில் கேட்டது.

      “ரியலி… எனக்குமே. இளையாராஜா சாங் ஓடவிட்டுட்டு தூங்கிடுவேன். அரைமணிநேரம் அதுவா ஆப் ஆகிடும். பட் ஹெட் செட் நல்லதுக்கு இல்லை.” என்று எடுத்து வைக்க,

     “என்னால என் பழக்கத்தை உடனே மாற்றிட முடியாது கொடு.” என்று வெடித்தாள்.

      சைதன்யனுக்கு அவள் மனம் புரியத்துவங்க கொடுத்துவிட்டு அகன்றான்.

       பெரிய துரை ஆர்டர் போடறான். என்னால இவனோட சட்டுனு பழகவும் முடியலை. ஆனா சார் என்னை ஹக் கிஸ்னு போறான். என்னிடம் காதலை சொல்லி பேசியிருக்க வேண்டியது தானே. பூவா தலையா போட்டு என்னைப் பேரம் பேசி ஏலம் எடுத்து, இவர் அன்பை பொழிந்தா நான் மனமிறங்கணுமா? போடா…” என்று போர்த்தி உறங்கினாள்.

      சைதன்யன் மனமோ எல்லாம் சொல்லியாச்சு. இதுக்கு மேல என்ன செய்ய, அவளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனா பிடிச்சிருக்கு என்றவன் அவளின் உடல்நிலை கருதி மீண்டும் அறைக்குச் சென்றான்.

  அங்கே ஹெட்செட் ஒருபக்கம் போன் மறுபக்கம் கிடக்க, காலை குறுக்கி உறங்கிருந்தாள்.

        சைதன்யன் அங்கேயே படுத்து இரசிக்க ஆரம்பித்தேன்.

     காலையில் அகமேந்தி எழுந்ததும் தன் அருகே சைதன்யன் இருக்கக் கண்டவள் எழுந்து பேசவும் முடியாது தவித்துத் தலையணையை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.

    “என்ன ஸ்வீட்ஹார்ட்.” என்றவன் அவள் குரல் முற்றிலும் கேட்காமல் காற்று மட்டும் வீச கண்டான்.

     “ஏய் பேசு டி.” என்று உலுக்கவும் தலைமுடியை பிடித்து ஆட்டியவள் சட்டெனப் பேப்பர் பேனாவை எடுத்து த்ரோட் வலிக்குது டா. பேச முடியலை.” என்று கொடுத்தாள்.

      “வாவ் அப்போ இன்னிக்கு கத்தி திட்ட மாட்ட அப்படிதானே.” என்றதும் அடிக்க எதையாவது கிடைக்கிறதாயென்று தேடினாள்.

     அவள் எண்ணம் அறிந்தவன் ஓட்டமெடுத்தான்.

     பல் தேய்த்தபடி வந்தவள் உப்பை எடுத்துக் கொண்டு செல்ல சுடத்தண்ணீர் எடுத்து நீட்டினான்.

     அதையும் வாங்கிக் கொண்டு உப்பு கலந்து கொப்பளித்து முடித்தாள்.

      இருவரும் சாப்பாட்டைச் சாப்பிடும் நேரம் வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டது.

     “இரு நான் பார்க்கறேன்.” என்று சைதன்யன் கதவை திறக்க தேஜு நின்றிருந்தாள்.

      “இதான் வீடுனு தெரியுமா…?” என்று கிஷோர் கேட்க சைதன்யனை கண்டதும் “அகமேந்தி?”

      “உள்ள இருக்கா வாங்க” என்றான்

       “அவனுக்கு வேலைக்கு நேரமாச்சு. இன்னொருநாள் வருவான் சார். கிஷோர் போனதும் கால் பண்ணு”
   
      “ஓகே மா. வர்றேன் சார்.” என்று புறப்படவும் சைதன்யன் தலையசைத்து உள்ளே அழைத்தான்.

     “ஹே… தேஜு.” என்று கத்த அதுவோ வால்யூம் குறைந்தே காற்றாக வந்தது.

      “என்னாச்சு டி. த்ரோட் இன்பெக்ஷனா?” தேஜு கேட்டதும் ஆம் என்று அசைத்தாள்.

       “உட்காரு மா.” என்று ப்ரிட்ஜ் திறந்தவன் பழச்சாறு டின் எடுக்கக் கதவை மூடி காபி ஆர் டீ?” என்று கேட்டான்.

     “அவ ஜூஸ் பைத்தியம் ப்ரூட் டின் கொடு.” என்றாள் அகமேந்தி சைதன்யன் அவளிடம் கொடுக்க அகமேந்தி வாங்கி நீட்டினாள்.

      த்ரோட் கட்டிக்கொண்ட கதையைச் சொல்லவும் தேஜு சிரிக்க, சோபாவில் இருந்த தலையணையை வைத்து சாற்றினாள்.

     சைதன்யனுக்குத் தன்னை அவள் அடிப்பது கோபத்தில், எரிச்சலில் என்றறிந்தவனுக்கு அது அவளின் உரிமையான நபரிடம் காட்டும் செயலெனப் புரிய துவங்கியது.

     “நான் இன்னிக்கு தேஜுவோட போறேன். லன்ச் கூட அவளே சேர்த்து எடுத்துட்டு வர சொல்லிட்டேன்.” என்றதும் இவர்கள் பேச்சில் தயாராகிக் கொண்டிருந்த சைதன்யன் அவனுக்குத் தேஜுவோடு அகமேந்தி போவது பிடிக்கவில்லை என்பது அப்பட்டமாகக் காட்டினான்.

    தேஜு வீட்டை சுற்றி பார்த்தவள் பேசியபடி வரவும் சைதன்யன், ‘என்னை அவாய்ட் பண்ணறியா?” என்று மெஸேஜ் செய்து கேட்கவும், அதனைப் பார்த்தவள் இல்லையெனக் கூறுவதற்குள் சைதன்யன் அறைக்குச் சென்றிருந்தான்.

    “தேஜு நான் பர்ஸ் மறந்துட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணு.” என்றவள் அறைக்குப் போக, அங்கே சைதன்யன் இவளை கண்டதும் முகம் திரும்பி கொண்டான்.

     அவன் உணராத நேரம் கன்னத்தில் இதழ் ஒற்றி, “க்ரஷ் நீ அங்க டிரைவரா எனக்கு வருவது பிடிக்கலை. புரிஞ்சுக்கோ” என்று அவன் திரும்புவதற்குள் கதவருகே சென்றிருந்தாள்.

     வெறும் கையசைப்பை தந்து செல்லவும் சைதன்யன் அகமேந்தி பின்னாடியே வந்து நிற்க தேஜுவோ, ஸ்கூட்டியில் ஏறி முகமூடி அணிந்தாள்.

       “போயிட்டு வர்றேன் சார்” என்று புறப்பட, அகமேந்தி கள்ளசிரிப்பில் புள்ளியாய் மறையும் வரை கதவோரம் நின்று இரசித்தான்.

    ப்ரியங்காவோ நான்கு நாட்கள் தருணேஷ் போனில் பேசாதது கண்டு எரிச்சலடைந்து தருணேஷை காண செல்ல அவன் இருக்குமிடம் சென்றார். அவனோ காலையிலே மதுவின் மிதப்பில் கிடந்தான்.

     “தருண்… ஆபிஸ் போகலையா டா. என்னது கோலம். நீ இன்னமும் இந்தப் பழக்கத்திலிருந்து வெளிவரலையா.” என்று எழுப்ப,

     “நீயா… நீ எதுக்கு வந்த? மாதம் மாதம் அவன் பணத்தைக் கொடுத்துடுவான். பிறகு கவலையென்ன?

     அவன் கூப்பிட்டானு அம்மானு நடிக்கப் போனவள் தானே நீ. பெத்த பையன் விரும்பியவளை எப்படி அவனுக்குக் கட்டி கொடுக்கச் சம்மதம் பேச போன. சரி போனதும் போன ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தா. அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லிருப்பேன்.” என்று ப்ரியங்காவை தள்ளி விட்டான்.

    நீ அம்மா இல்லை. போ… அப்பா சொத்தை அவன் பேர்ல எழுதி வாரிசு அவன்னு தெரிவிச்சார். நீ அப்பா கொடுத்த உயிலை மறைச்சிட்ட, எனக்காக நீ பேசலை. அப்பா  இறந்தப்பவே நீயும் செத்துட்ட.” என்று அவளை வீட்டிலிருந்து வெளியே தள்ளி கதவை சாற்றினான்.

     ப்ரியங்காவுக்கு அடிக்கடி பழக்கம் என்பது போல நடையைக் கட்டினார்.

-சுவடுபதியும்
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!