ஆலி-22
அகமேந்திக்கு உறுத்திய ஒன்றை தருணேஷ் பேசவும் அவளுக்கு அழுகை பீறிட்டது.
“என்ன மேடம் எதுக்கு அழுகை. நான் சொத்து என்றதால் முதல்ல எனக்கு வாரிசுயென்ற அதிகாரம் தான் முக்கியமாப்பட்டது.
எனக்கொரு காரணம் இருந்தது. உனக்கு என்ன காரணம்மா? அவன் போஸ் பண்ணியிருக்க மாட்டான். எனக்கு நல்லவே தெரியும்.” என்று பேச பேச அகமேந்திக்கு என்ன சொல்லி புரியவைப்பது.
ஏற்கனவே தருணேஷ் என்று போனில் அறிந்து சைதன்யனை பற்றி அவனை க்ரஷாக மனதில் தோன்றிய ஆசையைக் கூறியிருந்தாளே. அதைத் தருணேஷுக்குத் தற்போது கூறயியலுமா? பெண்ணவள் தருணேஷ் மீது தோன்றிய உணர்வு காதல் அல்ல என்பதையும் கூறுவது எப்படியோ?
அகமேந்தி அழவும் ருத்ரேஷ் மனம் கேளாது “அண்ணா… அண்ணியை எதுவும் பேசாதே அவங்க அழறாங்க. அவங்களைப் போக விடு” என்று கூறினான்.
“எங்க போக என்னோட பேச்சுக்குப் பதில் சொல்லிட்டுப் போகச் சொல்லுடா.” என்று மேலும் கையில் தேய்த்த வஸ்தை நுகரவும் சிறிது நேரத்தில் மூக்கில் இருந்து இரத்தம் வழியவும் கண்கள் மங்கலாக மாறியது.
அகமேந்தியை பிடிக்க வர, அவள் நடுங்கி பின்னே நகரவும் கீழே விழுந்தான்.
கதவு தட்ட ருத்ரேஷ் கதவை திறக்க அங்கே சைதன்யன் மற்றும் ப்ரியங்கா நின்றிருந்தனர்.
சைதன்யன் கோபத்தைத் தத்தெடுத்தவனாக அகமேந்தியின் துப்பட்டாவை நீட்டினான்.
“உன்னை யார் இங்க தனியா வர்ற சொன்னா?” என்றவன் வார்த்தையைக் கடினமாகப் பேசினான்.
ப்ரியங்கா உடனடியாகத் தருணேஷை பார்க்க, “அய்யோ இவனுக்கு மூக்கில் இரத்தம் வருதே” என்று அலறவும் சைதன்யன் அருகே வந்து முகத்தைத் திருப்பிப் பார்த்தான்.
கண்கள் மங்கலாக உருவம் தெரிய அது சைதன்யன் என்பது வரை அறிந்திருந்தான்.
தருணேஷை கண்டு அதிர்ந்தாலும் உடனடியாகத் தூக்கி கொண்டான். காரில் ஏற்றி அமரவும் ப்ரியங்கா மற்றும் ருத்ரேஷ் அகமேந்தி ஏற வரவும், சைதன்யன் “நீங்க இரண்டு பேரும் வரவேண்டாம். நீ ருத்ரேஷை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போ” என்று கட்டளையிட்டான்.
கார் புறப்படவும் வீட்டை பூட்டி விட்டு ருத்ரேஷோடு அகமேந்தி தங்கள் வீட்டை அடைந்தார்கள்.
“அண்ணி… தருணேஷ் அண்ணாவுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன்.” என்று பேசியவனிடம் அமைதியாக வந்தவள் வெறித்த பார்வையில் உழன்றாள்.
சோபாவில் காலை குறுக்கி கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
எதற்குயிந்த அழுகை என்று புரியாத ருத்ரேஷ் தருணேஷ் அண்ணா பேசியவை எல்லாம் மனதில் மீண்டும் நினைவுப்படுத்தி ஓடவிட்டான்.
இரண்டு அண்ணனும் அகமேந்தியை விரும்பியது புரியத்துவங்கியது.
அகமேந்தி சைதன்யன் அண்ணாவிடம் காட்டிய உரிமையும் நெருக்கமும் கண்டவன். தருணேஷ் கண்டு அகமேந்தி பயந்து எட்டிநின்றதும் கருத்தில் பதிந்தது.
பதினாறில் அடியெடுத்து வைத்திருப்பவனுக்கு இந்த வித்தியாசம் எளிதாகப் புரியத்துவங்கியது. என்ன இதே வித்தியாசம் தருணேஷ் அண்ணாவின் பார்வைக்குப் புலப்படவில்லையென்றால் அவரின் காதல் அண்ணி மேல் இருந்திருக்காது. சைதன்யன் அண்ணாவை வீழ்த்தும் எண்ணம் மட்டும் தான்.
“அண்ணி… சாப்பிடலாமா.. டேப்லட் போடணும்” என்றதும் கண்ணீரை மறைத்து சாப்பிட எடுத்து வைத்தாள்.
“அண்ணி… நீங்க சாப்பிடலையா?” என்று கேட்டதும்
“பசிக்கலை நீ சாப்பிடு” என்று வைக்கவும்,
“நீங்க சாப்பிடலைனா எனக்கும் வேண்டாம் அண்ணி” என்று மறுத்து நகர்ந்தான்.
“தயவு செய்து சாப்பிடு. மருந்து எடுத்துக்கறவங்க ஒழுங்கா சாப்பிடணும்.” என்று தருணேஷ் மீது இருந்த கோபத்தை இவனிடம் காட்டி கத்தினாள்.
ருத்ரேஷ் அப்பொழுதும் சாப்பிடாமல் நின்றான்.
“எதுக்கு இப்படிச் சாகடிக்கிற. சாப்பிட்டா என்னவாம்.” என்று அழுதுக்கொண்டே கூறினாள்.
“சாரி அண்ணி..” என்றவன் முதலில் அவளுக்கு ஊட்ட முயல, பச் மறுக்கச் செய்தாள்.
“கொஞ்ச நாள் கழித்துத் தருணேஷ் அண்ணா தவறை உணர்ந்து சாரி கேட்கலாம். ஆனா அப்ப நான் இருப்பேனானு தெரியாது. எனக்கு உங்களோடவும் அண்ணகளோடவும் இருக்க ஆசை. அட்லிஸ்ட் என்னோட அண்ணிக்கு அம்மாவுக்கு ஊட்டி விட்ட மாதிரி ஊட்டி விட்டேனெனத் திருப்தி கிடைக்கும்ல வாங்கிக்குங்க.” என்று சாதம் பிசைந்து ஊட்டவும் அகமேந்தி சாப்பிட்டாள்.
இங்கு டாக்டர் சுந்தரின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் தருணேஷ்.
மது போதையில் உளருவதாகச் சொல்லி மருத்துவம் பார்க்கப்பட்டது.
தற்கால மயக்கம் தெளிய மட்டும் ஊசி போடப்பட்டுக் காத்திருந்தனர்.
அதே நேரம் வசந்த் மூலமாகச் சுந்தரை பார்க்க வந்த ஒரு பெண் மருத்துவரிடம் தருணேஷ் உடல்நிலையைக் கூறி எப்படி மருந்து கொடுப்பது என்றவரை பட்டியலிட்டார்.
அந்தச் செவிலி வருணிகா ஏற்கனவே நிறையக் கனிவானள் என சான்றிதழம், பணியில் நிறைவானவள் என இருக்கத் தருணேஷ் பற்றிக் கூறினார்கள். இரண்டு ஆண்டு இப்படி இருப்பதாகத் தகவலும் அவனுக்கு இப்படிச் சொந்த பிரச்சனையும் கூறி அதற்கெற்றவாறு நடந்திட கூறினார்.
மருத்துவமனையிலே அவனைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள் வருணிகா.
ப்ரியங்கா இனி நான் பார்த்துக்கறேன்பா என்று கூறவும் பில் அமொண்ட் செலுத்தி கிளம்பினான்.
சைதன்யனுக்கு வீட்டுக்கு வந்த கணம் சோபாவிலே ருத்ரேஷ் உறங்க அவனருகே அகமேந்தி கண்ணீரோடு அமர்ந்திருந்ததைக் கண்டான்.
“அவனை இந்த ரூம்ல தூங்க சொல்லியிருக்கலாமே. சோபாவில் கம்பர்டபிளா இருக்காது.” என்றவன் சோபாவில் உறங்கிய தன் தம்பியை தூக்கி மற்றொரு அறையில் படுக்க வைத்து தலையை வருடினான். உதட்டில் சின்னச் சிரிப்பு வந்து தங்கவும் வெளியேறினான்.
அகமேந்தி அப்படியே உறைந்திருக்க, “ஸ்வீட்ஹார்ட் என்ன சிலை மாதிரி இருக்க?” என்றவன் தன் முழுக்கை சட்டை பட்டனை கழட்டியவாறு வினா தொடுத்தான்.
அகமேந்தியிடம் பதில் இல்லாமல் போக, மெல்ல நெருங்கி வந்தவன், “அவனுக்குப் பார்த்துக்க நர்ஸ் ரெடி பண்ணியாச்சு. இனி சரியாகிடுவான். டிரக்ஸ் எங்க கிடைக்குதுனு தெரியலை அதைத் தடைச்செய்யணும்.” என்று தோளைத் தொட, கையைத் தட்டி விட்டு “என்ன எதுக்குக் கல்யாணம் செய்த.?” என்று கத்தினாள்.
ருத்ரேஷ் படுக்க வைத்த அறையைப் பார்த்தவாறு “இப்ப எதுக்குக் கத்தற. தம்பி தூங்கிட்டு இருக்கான்.” என்று தங்கள் அறைக்குச் செல்ல,
“தம்பி… எப்பத்திலருந்து தம்பி… ஒரு தம்பியா இரண்டு தம்பியா?” என்று இடக்காகக் கேட்டாள்.
ஹாலில் இருந்து பிரச்சனை பெரிதாக்க விரும்பாமல், அறைக்கு வந்து குளிக்கச் சென்றான்.
அகமேந்திக்கு வந்ததும் ஆரம்பித்துவிட்டோமே என்ற பதட்டம் இருந்தாலும் அங்கே தருணேஷ் கேள்வியில் கூனிகுன்றி நின்றது தான் தானே என்ற கோபம் வர, தங்களறைக்கு வந்தாள்.
“என்ன பிரச்சனை உனக்கு?”
“பிரச்சனையே நீ தான். அவன் என்ன பேசினான் தெரியுமா. எனக்கு நெருப்புல தள்ளி விட்ட மாதிரி இருந்தது. உங்க நாடகத்துல நான் கேவலமா போயிட்டேன். உன் தம்பி என்ன கேட்டான் தெரியுமா? விரும்பியவன் நான் மறுத்ததும் கல்யாணத்தை நிறுத்தாம ஜோடியா கல்யாணம் பண்ணிட்ட, என்னைக் காரிதுப்பாத குறை. எதுக்கு நீங்க இரண்டு பேர் செய்த விளையாட்டுல என்னைப் பகடையா உபயோகப்படுத்தினீங்க.” என்று பேசினாள்.
குளித்து முடித்து டவலில் துடைத்தபடி வந்தவன், “எனக்கு ஒரு தம்பி தான். திடீரென இரண்டாவது தம்பி எல்லாம் இல்லை. மனிதாபிமானம் அடிப்படையில் தான் இப்ப நான் அவனைப் பார்த்துக்கறது. தேவையில்லாம பேசாதே. .”
“மனிதாபிமானமா? சாதரணமா சொல்லற?”
“ருத்ரேஷ் தூங்கறான் நம்ம சண்டையில் அவன் முழிச்சுக்கப் போறான். போய்த் தூங்கு. நம்ம சண்டை என்று சொன்னது தருணேஷை சேர்த்து தான். தருணேஷ் எழுந்து வந்த பிறகு சாரி கேட்பான். அவன் தெரிந்து பேசலை. தெரியாம நடந்துக்கிட்டான்.
நான் விரும்பறது தெரிந்து தான் விலகினானே தவிர அவன் உன்னை விரும்பலை. அவன் தெளிவா இருக்கறப்ப பேசு புரிஞ்சிடும்… நான் நேற்றைய ஸ்வீட் கிஸ் கிடைக்கும்னு கனவெல்லாம் கண்டேன். கனவா போச்சு…” என்று மெத்தையில் விழுந்தான்.
அகமேந்தி அவனை முறைத்து விட்டு ஹாலில் வந்து உறங்கினாள்.
பின்னாடியே போர்வை தலையணையை எடுத்துக் கொண்டு அவனும் ஹாலில் விரித்தான்.
அதிகாலை கதிரவனுக்கு முன் எழுந்து பார்க்க, அகமேந்தி தங்கள் அறையில் உறங்கி கொண்டிருந்தாள். தன்னைத் தூக்க சைதன்யன் அப்படி ஒன்றும் கடினப்படமாட்டான். அவனுக்கு எளிதானது பிடித்தமானதும் கூட, அவன் வேலையிது என்று எழுந்து வர, காலையிலே ஹோம் தியேட்டர் அதிர அண்ணன் தம்பி இருவரும் சண்டை படம் பார்த்து கொண்டிருந்தனர்.
அகமேந்தி வந்து பாலை எடுக்க ஏற்கனவே காபி போட்டு தயார் நிலையில் இருந்தது.
சைதன்யன் பழையபடி அலுவலகம் செல்ல நேரிட்டது.
தருணேஷ் மயக்கம் தெளிந்து ப்ரியங்கா தன்னருகே இருக்கக் கூடாதெனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவும் வேறு வழியின்றி வீட்டுக்குச் செல்லும் கட்டாயம் ஆனது.
வருணிகா அதிகம் பேசவில்லை. ஆனால் தருணேஷை கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அவன் முதல் நாள் திமிரிகத்தவும் ஒர் அறை விட்டவள் அதன் பின் அவள் அருகே கத்தவும் யோசித்தான்.
வருணிகா வேறு “நீ டிரக்ஸ் உபயோகப்படுத்தின என்று ஒர் கம்ப்ளெயின்ட் போச்சு. மீதி வாழ்க்கை ஜெயிலில் தான். அப்பறம் யாராவது வந்து உன்னை வெளியில் எடுக்கணும். அந்த அளவு போகக் கூடாதென்றால் நீ அமைதியா இருக்கற வழியைப் பாரு.” என்று டாக்டர் சும்மா இருந்தாலும் இவள் பறமுறுத்தியது பீதியை கிளப்ப, தான் கைதியானால் சைதன்யன் உதவியைத் தான் அம்மா நாடுவார்களென அமைதி காத்தான்.
ப்ரியங்கா தனது வீட்டில் தனித்து இருந்தார். சைதன்யன் வீட்டில் ருத்ரேஷ் இருக்க அழைக்கவும் அஞ்சினார்.
போனில் மட்டும் பேசி நலனை விசாரித்துக் கொண்டார்.
சைதன்யன் அண்ணாவோடு காலையில் அண்ணியைக் கலாய்த்து, அகமேந்தி சமையல் தினமும் சாப்பிட்டு அரட்டை அடித்து, என்று ருத்ரேஷ் மகிழ்ச்சியாய் இருந்தான்.
அவனுக்குத் தாய் தருணேஷ் தவிர்த்து புது உறவுகளை விரும்பினான். தன் பள்ளி கதையைப் பகிர்ந்தான். தற்போது படிக்க இயலாத நிலையை எண்ணி வருந்துவான்.
சைதன்யன் அகமேந்தி ருத்ரேஷ் இருக்கும் சமயம் தங்கள் சண்டையைக் காட்டிக்கவில்லை. அந்தச் சண்டை அவர்களுக்குக் கிளை சண்டையையும் ஏற்படுத்தவில்லை.
அன்று தருணேஷ் வீட்டிற்கு அனுப்பும் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
பிடிவாதமாக ப்ரியங்கா வீட்டுக்கு வர மறுத்து தன் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான்.
கூடவே வருணிகா செல்லவும் சுந்தர் ப்ரியங்காவிடம் அப்பெண் சைதன்யன் அனுப்பி மேற்பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டாள் என்றதும் நிம்மதியடைந்தார்.
சைதன்யன் மீண்டும் தன் அலுவலகத்தில் பணியை ஆரம்பிக்கவும், அகமேந்தி வராதது யாருமே கேட்கவில்லை.
தருணேஷ் வீட்டிற்கு வருணிகா வந்து மாத்திரையைக் காலை மாலை இரவென வேளைக்குத் தனித்து எடுத்து வைத்து இரவு சாப்பிடவும் வைத்து கிளம்பினாள்.
யாருமில்லை டிரக்ஸ் பண்ணலாம் மது அருந்தலாம்னு பார்த்த அடுத்தமுறை ட்ரீட்மெண்ட்க்கு டேபிளேட் தர மாட்டேன். விஷ ஊசி செலுத்தி போட்டு தள்ளிடுவேன்.” என்று மென்மையான குரலில் அறிவுறுத்திவிட்டு செல்லவும் “என்ன பொண்ணுயிது” என்ற அதிர்வில் இருந்தான்.
தருணேஷிற்கு இந்த ஒர் வாரம் முழுக்க இருந்த நினைவு அகமேந்தியிடம் தான் நெருங்க அவள் பயந்து பின்னடைந்ததும். சைதன்யனை கண்டு அவள் நிம்மதியடைந்ததும் இவ்விரண்டும் வந்து சென்றது.
பற்றாதக்குறைக்குச் சைதன்யன் தன்னைத் தூக்கி காரில் ஓட்டும் பொழுது அதில் தெரிந்த ஏதோவொன்று அவனுள் யோசிக்க வைத்தது.
சைதன்யனுக்கும் தருணேஷுக்கும் அப்படியென்றும் பெரிய வயது வித்தியாசம் அல்ல. இருவருக்கும் ஒர் வருடம் மட்டுமே இடைவெளி.
அதுக்கூட இவர்களின் போட்டிக்கு கூடுதலான காரணமாக இருக்ககூடும். தந்தைக்கு ஒரு குடும்பமா? அதுவும் தனக்கு முன் ஒருவன். அவனே தந்தையின் வாரிசெனப் பிரகடனம். இதில் சொத்து முதல் கொள்ளி வைக்கும் முறை வரை சைதன்யனுக்கு முன்னுரிமை என்பதில் வெகுவாக மனம் பாதிக்கப்பட்டு விட்டான். இதில் சைதன்யனுக்குக் கீழே தான் வேலை என்றதில் எரிச்சல்.
எதிலாவது சைதன்யனை விடத் தான் முன்னுரிமை பெற்று அவனைத் தோற்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் தோன்ற, சைதன்யன் இரசித்தவளை நெருங்கி அவனைத் தன்னோடு மோத வைக்க எண்ணினான்.
முடியவில்லை… அதே பெண் பணிப்புரியும் இடத்தில் காண சைதன்யனும் பார்த்து இரசித்தது அறிந்தான்.
தான் பார்ப்பது சாதரணமாக ஒரு பெண்ணைக் காண்பது போல ஆனால் சைதன்யன் பார்வையோ ஒர் கவிதையை இரசிக்கும் வித்தியாசம் தென்பட்டது.
இம்முறை இவளை சீண்டினால் சைதன்யன் வருவான், தன்னிடம் தோற்பான் என்பதற்காகவே காதல் என்று ஆரம்பித்தது.
ஆனால் தருணேஷே எதிர்பார்க்காதது சைதன்யன் அவளை மணந்து கொள்ளும் நோக்கம் வரை செல்வானென அறியவில்லை.
தன்னை இந்தக் காதலிலும் தோற்க அடிக்க எண்ணுவதாக எண்ணி அவசரமாக அமெரிக்காவிலிருந்து வந்தான்.
தருணேஷ் மெத்தையில் படுத்து மேலே சுழன்ற பேனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அகமேந்தி…. அவளிடம் தான் பேசியவை நடந்தவை எண்ணி தலையணையில் குத்தி முடித்தான்.
-சுவடுபதியும்
-பிரவீணா தங்கராஜ்.

Still so.w twist is there. Very intresting sis.
Hmm eppovathu puthiku yettuche