ஆலி-26
அதிகாலை அந்த விடியலை ப்ரியங்காவுக்கு மனதை பிசைவதாகவே விடிந்தது.
காலையில் ருத்ரேஷ் பருக கொடுத்தவை காபியை மறுத்துவிட்டான்.
சாப்பிடவும் வராமல் அறைக்குள்ளே அடைப்பட்டான்.
ப்ரியங்கா கூப்பிட்டு பார்த்து சைதன்யனுக்குக் கால் செய்யக் கைகள் போனது. ஆனால் அவனிடம் சொல்லி பெரிதுப்படுத்துவானேன் எனக் கொஞ்ச நேரம் கழித்துச் சாப்பிடுவான் என்று விட்டு பிடிக்க எண்ணினார்.
அகமேந்தியோ பேசவில்லை முகம் திரும்பி தன் வேலையைப் பார்க்க துவங்கினாள். சைதன்யனின் அலுவலகம் செல்லும் நேரமும் நெருங்க தன்னவளிடம் பிறகு பேசி மனதை மாற்றலாம் என்று விட்டுவிட்டான்.
இங்குத் தருணேஷ் வாசலுக்கும் சோபாவுக்கும் பலமுறை நடந்து திரும்பி விட்டான். அவன் எதிர்பார்த்த நாயகி வரவில்லை. நேரத்தை பார்த்தான் இன்னமும் வரும் நேரம் நெருங்கவில்லை. சோபாவில் நகத்தைக் கடித்தபடி துப்பிக் கொண்டிருந்தான்.
நேரம் மட்டும் நகர, உணவு சாப்பிட்டுக் கை அலம்பியவன், இனியும் பொறுக்க இயலாது என்று சைதன்யனுக்கு அழைத்தான்.
சைதன்யன் அலுவலகம் எண்ணிற்கு அழைத்தான்.
“ஹலோ” என்ற அவனின் கம்பீரமான குரலில் தான் கேட்க வந்த கேள்வியைக் கண்டு பேச தயங்கினான்.
“என்னைப் பார்த்துக்க ஏற்பாடு செய்த வருணிகா வரலை. நீ என்னைப் பார்த்துக்க வரக்கூடாதுனு ஆர்டர் பண்ணியிருக்கியா?” என்றான்.
சைதன்யனோ பதில் கூறாமல், நம்பரை அழுத்தி, “வசந்த் கொஞ்சம் வந்துட்டு போங்க.” என்று தருணேஷ் போனில் இருக்க வைத்தே பேசினான்.
“சார்… கூப்பிட்டிங்க” என்று வந்து நிற்கவும்,
“வசந்த் வருணிகா அவனைப் பார்த்துக்கப் போகலையா.?” என்று கேட்டதும்
“என்ன சார் அப்போ அவள் உங்களிடம் சொல்லாமலே நின்றுட்டாளா. காலையில் அவள் கிளம்பலை சார். வீட்டில் அமைதியா உட்கார்ந்து என் பொண்ணுக்கூட விளையாடிட்டு இருந்தா. என்ன மா வேலைக்குப் போகலையானு கேட்டேன். அவ இனி போக மாட்டேன். அவருக்கு இனி நான் தேவைப்படமாட்டேன். ஹீ இஸ் கம்பிளிட்டர்டு சொல்லிட்டா. டாக்டரிடம் மட்டும் சொல்லணும் நாளைக்குப் போய்ப் பேசிக்கறேனு சொன்னா சார்…. ஏன் சார் என்னாச்சு. தருணேஷ் ஓகே தானே?” என்று வசந்த் கேட்கவும்
“ஒன்றுமில்லை வசந்த் நீங்க போங்க.” என்று அனுப்பி வைத்தப்பின் “என்ன கேட்டியா… எனக்கும் அவ வராததற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.” என்று பட்டெனக் கத்தரித்தான்.
இவன் என்ன புதுசா பேசறான். இவனுக்குக் கண்கானிச்சாலே பிடிக்காது. இதுல எப்படி டிரக்அடிட்கு எதிரா அவனைப் பார்துக்க வந்தவள் வரலைனா ஜாலியா இருக்க வேண்டியது தானே. அந்தப் பொண்ணு வரலைனு தேடறான். என்ன காரணம்? என்றவன் பணி அதிகமிருக்க மெயில் வந்தவையைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
தருணேஷிற்கு அவள் வராதது கடுப்பாக இருக்கவும் அவளின் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து யோசித்தான்.
வருணிகாவின் அட்ரஸ் எப்படிப் பெறுவது என்று யோசனையில் சென்றான். சில மணித்துளிகள் கடக்கவும் சைதன்யன் ‘அகமேந்தி பீல் பண்றா அவளிடம் நீ என்ன பேசின அதைச் சரிபண்ணு” என்ற சைதன்யன் பேச்சு நினைவு வரவும் அகமேந்தியின் எண்ணிற்குக் கால் செய்து காத்திருந்தான்.
ஏதோ எண் என்றதும் அகமேந்தி எடுத்து பேச ஆரம்பித்தாள்.
“ஹலோ” என்றதும்
“ஐ அம் சாரி… அண்ணிக்கு ருத்ரேஷ் எதிரே தவறா பேசிக்டேன். நீ சொன்ன…. உங்கப்பா மானம்… தென் கிராமம்… கல்யாணம் நின்றால் ரொம்பப் பேசுவாங்கனு. பச் நான் தான் உன் நிலை தெரிந்தும் அப்படிப் பேசிட்டேன். ஹோப் அவனை மன்னிச்சிட்ட என்னையும் மன்னிச்சிடு. ஜஸ்ட் அவனோட போட்டி போட்டதில் முட்டாள் தனமா விளையாடிட்டேன்.” என்று தொடர்ந்து பேசவும் அது தருணேஷ் என்று புரிந்துக் கொண்டாள்.
“நான் அவரை விரும்ப ஆரம்பிச்சிட்டேன். உனக்குச் சொன்னது பரிதாபத்தில். பட் சைதன்யனுக்குச் சொன்னது ஆத்மார்த்தமா. அவர் புரிஞ்சிக்கிட்டதுலயே எனக்குப் போதும். உன்னிடம் என் நிலைமையை விவரிக்கணும்னு அவசியமில்லை. எனிவே தேங்க்ஸ்.” என்றாள் அகமேந்தி.
போனை பார்த்து ரெண்டும் மீசையில மண்ணு ஒட்டலை என்ற மொமெண்ட்லயே சுத்துதுங்க. இது பீல் பண்ணுதா… இதுல சார் ப்ளிஸ் போட்டு கேட்டுட்டுப் போறான் என்று மனசாட்சியிடம் பேசினான்.
‘பிகில் கப்பு முக்கியம் வருணிகா நம்பர் வாங்கு பட்டுனு வைக்கப் போகுது’ என்று மற்றொரு மனம் எடுத்துரைக்கவும்,
“அப்பறம் எனக்கு வருணிகா நம்பர் ஆர் அட்ரஸ் வேண்டும். எதுக்குன்னா… என்னோட டேப்லட் பாக்ஸ் கீழ விழுந்து டேப்லட் எல்லாம் கலந்துடுச்சு. எது எப்போனு தெரியலை.” என்று கேட்டான்.
“ஒர் நிமிஷம்.” என்றவள் சைதன்யன் எப்பொழுதும் எழுதும் குறிப்பேடில் சென்று பார்த்தாள். பெயரை படித்துக் கையால் உலாவி கொண்டே தேட , அதில் வசந்த் 34, சாந்தி காலனி சென்னை என்று பின்கோடுடன் படித்தவள் “ஆங் நம்பர் இருக்கு” என்று நம்பரை கூறவும், முகவரியோடு வருணிகா எண் பதிவு செய்து இருந்தான்.
“தேங்க் யூ” என்று அணைத்து விட்டான். அகமேந்தியும் “அப்பாடா” என்று டிவி பார்க்க ஆரம்பித்தாள். கொஞ்சநேரம் கழித்துச் சட்டென இவன் எதுக்கு நம்பர் கேட்கறான். டேப்லட் நேம் காலை மாலை இரவு என்று மாத்திரை பெயர்லயே போட்டு தானே டாக்டர் கொடுத்தார் எனச் சந்தேகப் பொறிதட்ட புறப்பட்டாள்.
காலிங் பெல் அழுத்தி காத்திருக்க, “இதோ வர்றேன் அண்ணி” என்ற வருணிகா குரல் கேட்க தலையைக் கையால் கோதி தயார் நிலையில் ஆவலாக இருந்தான்.
கதவை திறந்தவள் முன் தருணேஷ் கண்டதும், “நீ… நீங்களா..” என்று திணறினாள்.
“ஏன் வரலை நீ. நான் ரெக்யுவர் ஆனேனா… நீ வரலை என்றதும் அந்தக் கவலைக்கு மதுவை தேடினேன். பிறகு எப்படிச் சரியானேனு சொல்லியிருக்க?” என்று கேட்டான்.
“சாரி இனி என்னால வரமுடியாது. நீங்க வேறயாரையாவது அட்டனர் பார்த்துக்கோங்க. நான் வேலை விட்டுட்டேன்.” என்று மறுத்தாள்.
“ஓ…. வேலையே விட்டுட்ட…. குட்… வெரி குட்… ஓகே அப்போ இந்த பேஷண்ட் நர்ஸ் டயலாக் முடிஞ்சது.
லவ்வர்ல் டாக் பேலன்ஸ் இருக்கு அதைப் பேசுவோமா?” என்றான் வீட்டுக்குள் நுழைந்தவாறு.
“தருணேஷ்… என்ன பேசறிங்க… ஜஸ்ட் கெட்அவுட். நீங்க வரம்பு மீறி பேசறிங்க. வெளியே போங்க.” என்றாள் பயத்தில்.
“இது யார் குழந்தை.?” என்றான் சம்மந்தமேயில்லாமல்.
“எ..எங்க அண்ணா.. வசந்த் குழந்தை.” என்றாள்.
“அப்போ அத்தை… ஓகே” என்று விளையாடிய குழந்தையின் தலையில், அவளின் கைவைத்து “நீ என்னை விரும்பலை. லைட்டா என் மேல லவ் மாதிரி எட்டி பார்க்கலை சத்தியம் பண்ணி சொல்லு போயிடறேன். இப்ப மட்டுமில்லை ஒரேடியா போறேன்.” என்று கையை விடாது கேட்டான்.
“என்ன விளையாடறிங்களா… குழந்தை மேல எதுவும் சொல்ல மாட்டேன் கையை விடுங்க.” என்று கத்தினாள்.
“அப்போ என்னை விரும்பற.. அதனால பயந்து வரலை அப்படித் தானே?” என்று கேட்கவும் அழ ஆரம்பித்தாள்.
இவள் அழவும் குழந்தையும் அழ ஆரம்பித்தது.
அதே நேரம் சக்தி காய்கறி கூடையோடு உள்ளே வர, “வருணிகா குழந்தை எதுக்கு அழுவுது. ஏய்… யாருப்பா நீ… இங்க என்ன பண்ணற? வருணிகா யாரிவன்?” என்று கேட்டதும் “தருணேஷ் அண்ணி இவரைத் தான் பார்த்துக்கப் போனேன்” என்று பதிலுரைத்தாள்.
“தம்பி எதுக்கு வீட்டுக்கு எல்லாம் வந்திங்க ஆம்பள இல்லாத நேரத்தில் வந்து என்ன தொந்தரவு செய்யறிங்க. வருணிகா எதுக்கு அழுவுற” என்று குழந்தையைத் தூக்கி கொண்டு வருணிகாவை இழுத்து தன் பக்கம் நிறுத்தினாள் சக்தி.
தருணேஷ் விடாமல் பதில் வேண்டி அதேயிடத்தில் நிற்கவும் சக்தி பயத்தில் வசந்திற்கு அழைத்தாள்.
“என்னங்க அந்தத் தருணேஷ் வந்து வீட்ல வம்பு பண்ணறான் கொஞ்சம் வாங்க” என்று பயத்தில் உலறி முடிக்கவும் போன் லோ பேட்டரி என்று காட்டவும் சரியாக இருந்தது.
“என்னபண்ற தருணேஷ் வீட்டுக்கு போ. அண்ணா வந்தா பிரச்சனை ஆகும். நீ பேஷண்ட் மட்டும் தான். தாதியா பார்க்க போறயிடத்தில் எல்லாம் காதலிப்பாங்களா. அக்கறையா பார்த்துக்கறது என் கடமை.” என்று அவள் வெவ்வேறு சாயம் பூசினாள்.
“நீ என்ன பேர் வேண்டுமென்றாலும் வச்சிக்கோ. என்னைப் பொருத்தவரை இது காதல் தான். நீயும் இல்லையென்று சொல்லு தோல்வி எனக்குப் புதுசுயில்லை.” என்று அதே பிடிவாதத்தில் நின்றான்.
வசந்த் இங்குச் சைதன்யனிடம் வந்து தருணேஷ் தங்கள் வீட்டில் பிரச்சனை பண்ணுவதாகக் கூறி சைதன்யனை அழைத்துக் கொண்டு காரில் விரைந்தான்.
சைதன்யனுக்கு என்னடா இது ஒன்று மாற்றி ஒன்று பிரச்சனை. இவன் எதுக்கு அங்க போனான் என்ற ஒன்று வண்டாய்க் குடைந்தது.
குழந்தை அழவும் தருணேஷை அறைந்து கையை விடுவித்துக் கொண்டு சமாதனம் செய்தாள்.
கன்னத்தைத் தடவி புஜங்கள் ஏற கோபமாக நின்றான். இருந்தாலும் வருணிகாவை தொந்தரவு செய்யவில்லை.
இவர்கள் சண்டையில் இருபது நிமிடம் பறக்கவும் சைதன்யன் வசந்த் வந்து நின்றார்கள்.
போனமுறை போல வசந்த் பார்வையில் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க சைதன்யனுக்கு மனமில்லை.
“என்னடா பண்ற இடியட். இங்க யாரு வர்ற சொன்னா. வேலைக்கு வரலைனா விட்டுடு. வேற யாரையாவது டாக்டர் சுந்தர் அனுப்புவார். இப்படியா சில்லியா பிகேவ் பண்ணுவாங்க.” என்று அதட்டினான்.
“நான் வேலைக்கு வரச்சொல்லலை. என்னோட கேள்விக்கு ஆன்சர் பண்ண சொல்லு” என்று தருணேஷ் வருணிகாவை பார்த்தான்.
சைதன்யனுக்கு வருணிகாவை பார்த்ததும் இது காதலில் கொண்டு சேர்த்திருக்கோ என்று தோன்றினாலும் எதையும் அறியாமல் பேசிடக்கூடாது என்று “என்ன மா பிரச்சனை பண்ணறான்.” என்று கேட்டான்.
“ஒன்றுமில்லை சார். அவரை இங்கயிருந்து கூப்டிட்டு போங்க.” என்று வருணிகா கெஞ்சினாள். அவளின் கெஞ்சலில் சைதன்யனுக்கு முற்றிலும் புரிந்து விட்டது.
“தருணேஷ் இங்கிருந்து போ.” என்று சைதன்யன் கட்டளையிட்டான்.
“இங்க பாரு அகமேந்தி விஷயத்தில விளையாட்ட போட்டி போட்டேன். அதுக்காக என் லைப்ல விளையாட பார்க்காதே. அகமேந்தியிடம் சாரி கேட்டுட்டேன். இது என் லைப் எனக்கும் வருணிகாவுக்கும் சம்மந்தப்பட்டது.” என்று கத்தவும்,
“சார் இவன் என்ன பேசறான்.” என்று வசந்த் புரிந்தும் புரியாமலும் குழம்பி தவித்துக் கேட்டான்.
வருணிகா வேறு அழுவதைக் குறைக்காமல் இருக்கவும், நிலைமை கைமீறினால் வசந்த் எப்படி எடுத்துப்பானோ என்ற அச்சம் பரவியது. பெண்ணுக்கு அண்ணன் அல்லவா.
“வருணிகா… பேசு” என்று கத்தவும் “அவள் தான் அமைதியா இருக்கா பதில் தெரியணுமா உனக்குப் போடா.” என்று தள்ளிவிட,
“என்ன பண்ணற நான் எது செய்தாலும் உன்னிடம் கேட்கணுமா? இல்லை எதிலும் நீ தான் முன்ன நிற்கணுமா.
உன்னால தான் டா டிரக்ஸ் அடிக்ட் ஆனேன். தினம் தினம் மகனா என் அப்பாவுக்குச் செய்ய வேண்டிய சடங்கை கூடச் செய்ய முடியலையேனு துடிச்சிட்டு இருக்கேன்.
நீ என்னடானா இங்கயும் உன் பேச்சுக்கு தான் முதல் உரிமை. எங்க அம்மாவிடமும் உன் பேச்சு தான் எடுப்படுது. ருத்ரேஷ் அவன் என் தம்பி அவனும் இப்ப உன்னோட தான் சுத்தறான்.
என் தம்பியை பிரிச்சிட்ட… என்னை மகனா எந்தக் கடமையும் செய்ய விடாத சாடிஸ்ட் நீ. பட் பார்க்கறவங்க என்னை மதுவுக்கும் டிரக்ஸுக்கும் அடிமையானவனா பார்க்கறாங்க.
இதோ இந்த வசந்த் என்னை எப்படி ட்ரீட் பண்ணறான். ஏதோ நரகத்துல இருந்து வந்த அசுரன் போலப் பார்க்கறான்.
உன்னை ஏதோ அவன் உலகத்தைக் காக்க வந்த கடவுளா பார்க்கறான். நீ தானே சாடிஸ்ட். சொல்லு டா…” உலுக்க, அவனின் செயலும் கோபமும் சைதன்யனின் மனதை திறந்துவிட,
“எப்படிச் செய்ய விடுவேன். அவர் எங்கப்பா லட்சுமணன். உன்னோட அப்பா டேவிட் இல்லை. ப்ரியங்காவை எங்கப்பா திருமணம் செய்தார் ஆனா ப்ரியங்காவுக்கு அது திருமணம் இல்லை மறுமணம். உங்கப்பா நீ பிறந்த ஆறு மாதத்திலே இறந்துட்டார்.
நான் பிறந்து நாலு வருடம் கடந்தப் பிறகு தான் ப்ரியங்காவை திருமணம் செய்தார். எங்கப்பா மறுமணம் செய்து மூன்று வயதான உன்னை மகனா எண்ணினார். அதுக்குப் பிறகு பத்து வருடம் கழித்து ருத்ரேஷ் பிறந்தான். போதுமா…
இதெல்லாம் அவருக்குச் சென்னையில் ஒர் குடும்பம் என்றதும் நான் விசாரிச்சப்ப தெரிஞ்சது.
ப்ரியங்காவிடம் கேட்டது எப்ப திருமணம் ஆச்சுனு. அவங்க வருடத்தைச் சொன்னப்ப உன் டேட் ஆப் பர்த் இடிச்சிது. அதனால அவர்களிடம் கேட்டதுக்கு “உங்கப்பா என்னை மறுமணம் செய்தார். தருணேஷ் எனக்கும் இறந்த என் முதல் கணவருக்கும் பிறந்தவனு சொன்னாங்க.
டாக்டர் அங்கிளிடம் எனக்கு ஒர் தம்பி இருக்கான் என்று மட்டும் சொன்னார். நான் அது நீ தானு ருத்ரேஷை பற்றித் தெரியாம வந்துட்டேன். அவனும் கொடைக்கானல் ஸ்கூலில் படிச்சதால் தெரியலை.
அதனால தான் ஈமச்சடங்கு செய்யறப்ப உன்னைப் பண்ண விடலை. போதுமா டா… பண்ண விடலை சாடிஸ்ட் சொல்லற.
ருத்ரேஷ் பத்து வருடம் கழிச்சு எங்கப்பா லட்சுமணனுக்கும் ப்ரியங்காவுக்கும் பிறந்தவன். என் தம்பி.
அம்மா வேற இருந்தாலும் என்னோட தம்பி. சாடிஸ்டா இருந்தா தம்பியை ஏற்காம இருந்திருப்பேன். மொத்த சொத்தும் எனக்கு மட்டும் வைச்சி இருப்பேன். இப்படி மாதம் மாதம் பணம் கொடுத்து சமநிலைக்குக் கொண்டு வர நினைச்சிருக்க மாட்டேன்.
நீயா தான் போட்டி போட்ட. நான் போட்டினு நினைக்கலை. போட்டினு நிற்கறப்ப அங்க என் அகமேந்தி கண்ணுக்கு தெரிஞ்சா. விரும்பறவளை விட்டு வேடிக்கை பார்க்க என்னால முடியாது. ஆள்மாறட்டம் செய்தேன்.” என்று கத்தவும் தருணேஷ் மொத்தமாக இடிந்து போனான்.
வசந்திற்குச் சைதன்யன் மேல் மரியாதை கூடியது.
வருணிகாவுக்கோ அச்சோ இது மீண்டும் வலியை வேதனையை மனதில் கூட்டுமே. இதற்குத் தான் மறைத்தாரா? இப்ப தருணேஷ் மனதளவில் உடைந்திடுவானே என்று வருந்தினாள்.
தன்னவன் உண்மை மறைத்துத் தன்னிடம் கூடச் சொல்லாமல் காத்தது எண்ணி அகமேந்தி பூரித்தாள். தருணேஷ் வருணிகாவின் அட்ரஸ் நம்பர் வாங்கியதும் என்னவோ தவறாகப் பட அவளுமே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து பார்வையாளராக நின்றிருந்தாள்.
தருணேஷ் மனம் கண்ணாடி சில்லாக உடைந்தது. எல்லோரையும் பார்த்து நிலையாகப் பேசயியலாது அவ்விடம் விட்டு மனமுடைந்து சென்றான்.
-சுவடுபதியும்
-பிரவீணா தங்கராஜ்.

Wow i expect this. I guessed this one sis. Very intresting sis. Fantastic narration sis.
Eppo varuniyala mattum than avana thetha mudiyum