Skip to content

கரை தந்த கடலே-12

52 / 100 SEO Score

அத்தியாயம்-12

 

பிரதீப் நொடிக்கொரு முறை பிரசன்னா-சுஹாசினி இருவரையும் பார்வையிட்டு, முகம் தூக்கி வைத்திருந்தார்.

 

பிரசன்னா தந்தையின் வாட்டமான முகத்தை அசட்டை செய்யாமல் சுஹாசினியிடம் கதை அளந்தான்.

 

சுஹாசினி தான் “அங்கிளிடம் பேசுங்க. நம்மளை பார்த்து பார்த்து ஏதோ கேட்க வந்து சங்கடப்படறார்.” என்று கூறினாள்.

 

பிரசன்னாவிடம் சுஹாசினி இதை மூன்றாவது முறையாக கூறவும் தான் பிரதீப் பக்கமே திரும்பினான்.

 

“ஏன்பா… இப்படி உங்களை பார்க்க வர்றப்ப மூஞ்சியை இப்படி வச்சிட்டு இருந்தா, அந்த பொண்ணு ஓடிட மாட்டாங்க” என்று கண்டித்தான்.

 

பிரதீப்போ “ஏன்டா டேய்… நீயும் உங்க மாமனாரும் சேர்ந்து ஏதாவது திட்டம் போட்டு என்னை மாட்டிவிட பார்க்கறிங்களா?” என்று கேட்டார். ‘இதுவே இப்ப தான் தெரியுதா’ என்பது போல பார்த்தவன், “அப்பா சுஹாசினி அப்பாவுக்கு வேற வேலையில்லையா? இவங்களும் அதே மேரேஜ் ஆப் மூலமா வந்தவங்கப்பா‌. பொண்ணு பார்க்கறது எல்லாம் ஒல்ட் பேஷன்னு கொஞ்சம் வித்தியாசமா ஹோட்டலில் பார்க்கலாம்னு சொன்னாங்க. நானும் பெட்டர்னு நினைச்சேன். வர்ற நேரம் தான் வெயிட் பண்ணுப்பா.” என்று சமாளித்தான்.

 

பிரதீப்பிற்கு கல்பனாவை தாண்டி வேறொரு பெண்ணை பார்க்க வந்ததே மனம் பிராண்டியது. அரைமனதாய் தான் இங்கே வந்தார். இப்படி மகனிடம் சம்மதம் சொன்ன சில நாளிலேயே ஒரு பெண் மணக்க கேட்டு நின்றதில் பிரதீப்பிற்கு மூச்சைடைத்தது.

 

நாற்பதை தொட்டவன், கல்யாண வயதுக்குரிய பையனுக்கு அப்பா, இக்காலத்தில் தன்னை மணக்க யாருண்டு என்று அசட்டையாக இருந்தவருக்கு, வயதும், சொந்தமும் கருத்தில் பதியாமல் போக, கௌசல்யா என்ற பெண்ணை மகன் பார்த்து வைத்து, அழைத்து வருவதில், கொஞ்சம் அதிருப்தி.

 

கௌசல்யா வரவும், சுஹாசினி, “அவங்க தான்” என்று போட்டோவை காட்டி பிரசன்னாவிடம் கூறினாள்.

 

“அப்பா… அப்பா.. அவங்க தானாம்” என்று தந்தையை உலுக்க, “இவன் வேற” என்று முணங்கியபடி திரும்பினார்.

 

லைட் ரெட் கலர் சுடிதார் அணிந்து, ஒரு பக்கம் கைப்பையும், மறுபுறம் போனை வைத்து கண்களை நாலாப்புறம் உருட்டி சுஹாசினி இருந்த பக்கம் புன்முறுவலை உகுத்தினாள்.

 

பிரதீப்பிற்கு கோபம் தான் பெருகியது. இந்த பிரசன்னா அடங்க மாட்டாமல் பெண் பார்த்து வைத்துள்ளானே என்று.

 

அதற்குள் சுஹாசினி பக்கம் வந்த கௌசல்யா, “ஏய்.. அப்பா அம்மா வரலை.” என்று கேட்க, “இல்லை ஆன்ட்டி.” என்று மறுத்தாள். ஆன்ட்டி என்பதா? அக்கா போல இருக்கின்றார். அதிலேயே தடுமாற்றம் உண்டானது.

 

“பிரசன்னா தான் அவர் அப்பாவோட நீங்க முதல்ல தனியா பேசட்டும்னு என்னை மட்டும் அழைச்சிட்டு வந்தார். சப்போஸ்… ஆப்டர் மேரேஜ் நாம மட்டும் தானே இருப்போம். முதல்ல நாம நமக்குள்ள பேசலாம்னு சொல்லியிருந்தார்.

 

ஆன்ட்டி… இவர் தான் பிரசன்னா. அங்கிள் தான் பிரதீப்.” என்று சுட்டிக்காட்ட, “நான் போட்டோவுலயே பார்த்தேன் சுஹாசினி” என்றவள் தயக்கமாய் பிரதீப் பக்கம் திரும்பி, நான் அவரோட பெர்சனலா பேசணும்” என்று கூறியதும், “அப்பாவும் உங்களோட பேச தான் வெயிட்டிங். நாங்க இங்க இருக்கோம். நீங்க அப்பா கூட அந்த டேபிளில் போய் பேசுங்க” என்று பிரசன்னா தந்தை பக்கம் கையை நீட்டினான்.

 

கௌசல்யா பிரதீப்பை கண்டு சுஹாசினியிடம், “வந்துடறேன் சுஹா” என்று சென்றார்.

 

பிரதீப்பிற்கு கௌசல்யா நெருங்க நெருங்க கைகள் சில்லிட்டது.

கைக்குட்டையால் நெற்றி வேர்வையை துடைத்தார்.

 

கௌசல்யாவுமே இயல்பாக இருக்க மெனக்கெட்டவாறு, நீரை ஊற்றி குடித்து முடித்தார்.

 

பிரதீப் சுவர் பக்கம் பார்வை பார்த்தபடி, திரும்பால் இருக்கவும், “நீங்க தானே மாப்பிள்ளை? இல்லை வேற யாராவதா… இல்லை…. நான் டேபிள் மாத்தி உட்கார்ந்துட்டேனானு க்ளியர் பண்ணிக்க கேட்டேன்” என்றதும் பிரதீப் அனலாய் பார்வையிட்டு திரும்ப கேட்டாள் கௌசல்யா.

 

“என்ன பார்த்தா மாப்பிள்ளையா தெரியுதா?” என்று கோபமாய் கேட்டார்.

 

கௌசல்யாவோ “அப்படி தான் பிரசன்னா சொன்னார்.” என்றதும் பிரதீப் இன்னும் என்னயென்ன சொன்னானோ?’ என்று பொறுமினார்.

 

“பிரசன்னா… என்னை பத்தி ஏதாவது சொன்னாரா?” என்று கேட்க, “நான் எதுவும் கவனிக்கலை. எனக்கு யாரோட பயடேட்டாவும் தேவைப்படலை.” என்று முறுக்கினார்.

 

“பிரதீப்… வேண்டாவெறுப்பா இங்க உட்கார்ந்திருக்கிங்கன்னு எனக்கு தெரியும். பிரசன்னா சுஹாசினியை மேரேஜ் பண்ணணும்னா, நீங்க யாரையாவது கல்யாணம் செய்யணும்னு சொன்னதால வேற வழியில்லாம இங்க இருக்கிங்க. அது கூட யாரும் கல்யாணம் செய்ய முன்வர மாட்டாங்கன்ற தைரியத்துல தான் ஓகே சொன்னதாக கேள்விப்பட்டேன்.

 

நானும் உங்களை மாதிரி தான்.” என்றதும் பிரதீப் நிமிர, “இங்க என்னை பத்தி உங்களிடம் என்ன சொன்னாங்கன்னு தெரியாது. இருந்தாலும் என் தரப்புல சில விஷயத்தை உங்களிடம் ஷேர் பண்ணிட்டு, உங்களுக்கு ஓகேன்னா அடுத்து, நம்ம மேரேஜ் பத்தி பேசலாம்.” என்று வரவும் அங்கே வெயிட்டர் சூடான தேநீரை கொண்டு வந்து வைக்க பிரதீப் ஆர்டர் பண்ணலையே என்று பார்வையிட, “உங்க பிரெண்ட் ஆர்டர் பண்ணினார் சார்” என்று பிரசன்னாவை சுட்டிகாட்டினார் வெயிட்டர்.

 

“அவன் பிரெண்ட் இல்லை. என் பையன்” என்று கோபமாய் திருத்த, வெயிட்டர் விழித்தபடி தலைசொறிய, “அவரிடம் ஏன் விளக்கறிங்க. ஏன் பிரசன்னா உங்க பையன்னு அழுத்தி அழுத்தி சொல்லணும்.

நீங்க சொல்லலைன்னாலும், அவர் உங்க பையன் தான்” என்றதும் தான் கௌசல்யாவின் கருவிழிகளை நோக்கினான்.

 

“வெற்றிக்கரமா என் கண்ணை பார்த்திட்டுங்க” என்றதும் மீண்டும் பிரதீப் பார்வை மறுபுறம் திரும்பியது.

 

“ஆக்சுவலி நான் உங்களிடம் என் பெர்சனலை ஷேர் பண்ண விரும்பறேன். உங்களுக்கு என்னோட பாஸ்ட் ஓகேன்னா நான் உங்களை கல்யாணம் செய்ய எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.” என்றாள் கௌசல்யா.

 

என்ன பாஸ்ட் இருக்குமென்று பிரதீப் பார்வை கௌசல்யா பக்கம் திரும்பியது.

 

“என்னை பத்தி மத்தவங்க சொல்லியிருக்க மாட்டாங்க. பட் ஷார்ட்டாவாது சொல்லிடறேன்.

என் பெயர் கௌசல்யா. வயசு 34. நான் முதல்ல வேலை பார்த்த ஆபிஸ்ல கூட வொர்க் பண்ணின ‘ஷாகர்’னு ஒருத்தரை விரும்பினேன்.

எங்கப்பாவுக்கு ஷாகரை கட்டி வைக்க விருப்பமில்லை.

அதோட கல்யாணத்துக்கு வீடு தேடி வந்த வரன் எல்லாம் நான் ஏற்கவும் இல்லை.

ஒரு கட்டத்தில அப்பாவுக்கு என் பிடிவாதம் பெருசா, அவர் பிடிவாதம் பெருசா என்று பனிப்போர் நிகழ்ந்தது.

அப்ப வீடு தேடி வந்த வரனை எல்லாம் தட்டிக்கழிக்க, வசதி எதிர்பார்த்து, படிப்பை எதிர்பார்த்து, கலர் அதிகமா வேணும், இப்படி நார்மலா பணக்கார பொண்ணுக்கு ஈகுவளா தேடறேன்னு மறுத்தார்.

 

பட் ஒரு கட்டத்துல ஷாகர் வீட்ல கட்டாயப்படுத்தியிருக்காங்க. என்னை மாதிரி அவரொன்னும் தனியாள் இல்லை. இரண்டு தங்கச்சி அவனுக்கு அடுத்து இருக்கவும், என் காத்திருப்புக்கு அர்த்தமில்லாம அவர் அவங்க வீட்ல சொல்லற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டார். இங்க எனக்கு அதுக்குள்ள வயசு இருபத்தியெட்டு தொட்டுடுச்சு. அப்பாவும் என் முப்பது வயசு தொடறப்ப இறந்துட்டார்.

 

காதலிச்சவன் இன்னொருத்திக்கு சொந்தமானதும், அதை அக்சப்ட் பண்ண எனக்கு டைம் தேவைப்பட்டுச்சு. அம்மாவிடம் கல்யாணமே வேண்டாம்னு கூட சொன்னேன். நாங்க வேண்டாம்னு ஒதுங்கின வரனுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தை குட்டினு ஆனப்பிறகும், ‘இந்த பொண்ணா.. இவங்க வீட்ல உப்பு சப்பில்லாத காரணத்துக்கு ரிஜெக்ட் பண்ணுவாங்க. அதோட வயசு முப்பது தாண்டிடுச்சுனு வரன் வருவது குறைஞ்சிடுச்சு.

 

இன்பிட்வின்ல நான் மனசால மேரேஜிக்கு ப்ரிப்பர் ஆகிட்டேன். ஆனாலும் பெருசா வரன் வரலை. ரீசண்டா அம்மா வேற இறந்துட்டாங்க. அம்மா டெத்துக்கு, அந்த நேரம் தான் முரளி அண்ணா வந்தார்.

 

கொஞ்சம் தூரத்து ரிலேட்டிவ். முரளி அண்ணா தான் உங்களையும் பிரசன்னாவை பத்தியும்‌ சொன்னார்.

மேரேஜ் ஆகாமலே பிரசன்னாவை வளர்த்திருக்கிங்க. ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனா கைக்குழந்தையை தனி ஆளா வளர்க்கறது பெரிய விஷயம். அதுக்கு பொறுப்பும், பொறுமையும் இருக்கணும்.

உங்களுக்கு அந்த இரண்டு குணமும் இருக்கு. மேபீ… என்னோட கடந்த கால காதலை சொன்னா புரிஞ்சுப்பிங்கன்னு நினைக்கறேன். மத்தபடி எனக்கு உங்களோட மேரேஜ் நடக்கறதுல பெரிய மலைப்பு இல்லை. பிரசன்னா நம்ம பையனா இருக்கலாம். ஒரே வீட்ல சேர்ந்து இருக்கலாம்.

 

உங்களுக்கு சம்மதம்னா…

 

பட் ஆப்டர் மேரேஜ் ஆனாலும் வேலைக்கு போகணும்.

இதை தவிர என் தரப்புல ஒன்னுமில்லை. உங்களுக்கு ஏதாவது என்னிடம் சொல்லணும்னா சொல்லலாம். பிடிக்கலைன்னா கூட இப்பவே சொல்லலாம்.” என்றாள் கௌசல்யா.

 

பிரதீப்போ மௌனமாய் இருந்தார்.

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அடுத்த வாரத்துக்குள்ள சொல்லிடறேன்” என்று கூறிவிட்டு எழுந்தார்.

 

அதற்குள் பிரசன்னா ஃபில்பே செய்து பார்த்திருந்தவன், “அவங்க அவ்ளோ பேசின மாதிரி இருக்கு. அப்பா இரண்டு வார்த்தை பேசிட்டு எழுந்துட்டார். ஹாசினி‌ என்ன பேசியிருப்பாங்க? ஒரு வேளை அப்பா ‘சாரிங்க… என் பையன் தான் உங்களை வரவழைச்சது. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை’னு வந்துட்டாரா” என்று தந்தை பற்றி காதலியிடம் விவாதிக்க, “எனக்கும் என்ன தெரியும் பிரசன்னா. அங்கிள் வர்றார்.” என்று அமைதியானாள்.

 

பிரதீப் பின்னால் கௌசல்யா வந்து, “சுஹாசினி பைம்மா, பிரசன்னா போயிட்டு வர்றேன். கிளம்பறேங்க” என்று பிரதீப்பை பார்த்தும் கூறி வந்த வேகத்திலேயே புறப்பட்டார் கௌசல்யா.

 

“அப்பா…. அவங்க என்ன பேசினாங்க? நீங்க பதில் சொல்லிட்டு வந்திங்க?” என்று கேட்க, “அதை உன்னிடம் ஷேர் பண்ண அவசியமில்லை பிரசன்னா.” என்று நடந்தார்.

பிரதீப் தனியாக ஆட்டோ பிடித்து செல்ல பிரசன்னா சுஹாசினியை அழைத்துக்கொண்டு அவளை அவள் வீட்டில் விட சென்றான்.

 

வழியெல்லாம் ”அவங்க என்னத்த பக்கம் பக்கமா பேசினாங்க தெரியலை. இவர் என்ன ஷார்டா பேசிட்டு வந்தார்னு புரியலை. ஆனா ஒன்னு ஹாசினி, அப்பா மேரேஜிக்கு சம்மதிக்கலைன்னா, நம்ம மேரேஜும் டிராப் தான். அதுல எந்த மாற்றமும் இல்லை” என்று முடிவாக கூறினான்.

 

சுஹாசினிக்கு கலக்கமாய் இருந்தது. அதே சமயம் பிரதீப் அங்கிள் பிரசன்னா வாழ்க்கையை ஊஞ்சலாட வைக்க மாட்டாரென்று நம்பினாள்.

 

-தொடரும

 

 

 

 

 

 

 

4 thoughts on “கரை தந்த கடலே-12”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 kowsalya evlo pesiyirukanga pradeep enna mudivu yedupaaru parpom 🧐🤔

  2. சூப்பர். .. பிரதீப் கௌசல்யா இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும்

  3. Wow super super. Kowsalya very good pair for Pradeep. Prasanna and suga need to wait for Pradeep words..very intresting sis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!