அத்தியாயம்-1
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
தன் இஷ்ட தெய்வம் விநாயகரை, மனதார வணங்கி நெற்றியில் திருநீறு அணிந்தான் நாயகன் ரித்தீஷ்வரன்.
”இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர் எழுத போறா, எல்லா கேள்வியும் அவ படிச்சதா வரணும். ஐசு கோல்ட் மெடல் வாங்கலனா கூட பரவாயில்லை பாஸ் ஆகணும் ” என்று அக்கா மகள் ஐஸ்வர்யாவுக்காக வேண்டி, தனது ஆட்டோ சாவியை எடுத்து, வீட்டை பூட்ட முற்பட, அவன் எப்பொழுதும் போல அறையை ஒரு நோட்டம் விட்டான்.

எல்லாம் பெருக்கி முடித்து சாமி போட்டோவிற்கு பூபோட்டு, தீபம் சிறு தீயாய் ஏற்றி மடித்து வைத்த துணிகள் என சரியாக இருந்தன. அந்த சிறிய அறையில் எல்லாம் கண கச்சிதமாக வைத்திருந்தான். காலையில் காபி குடித்த கப் மட்டும் அவன் வளர்த்த செடி அருகே இருக்கவும், எடுத்து கழுவி வைத்து, வீட்டை பூட்டினான்.
ரித்தீஷ்வரன் 29 வயது இளைஜன். அக்கா மாமாவின் தயவில் அவுட் ஹவுஸ் வீட்டில், தனியாக தங்கி ஆட்டோ ஓட்டுபவன்.
அக்கா வைதேகி, மாமா தணிகாசலம், அவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன். மகள் ஐசு 19 வயது பி.எஸ்.சி மேத்ஸ், மகன் பரத் பன்னிரெண்டாம் வகுப்பும் படிக்கின்றார்கள்.
தணிகாசலம் வைதேகி இருவரும் பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம். வைதேகி தம்பி ரித்தீஷ் தவிர வேறு உறவு எல்லாம் தாய் தந்தை மறைவிற்கு பின் போய்விட்டது.
தம்பி மட்டும் சிறு வயதிலே பெற்றோர் இழந்த காரணத்தால் கூடவே வளர்த்து வருகின்றார் தணிகாசலம்.
கடைசியாக ரித்தீஷ்வரன் பிளஸ் 2 படிக்கும் வரை நன்றாக படிக்க வைத்தர்கள். அவனும் படித்தான். அதன் பின் கல்லூரியில் ஒரு ஆறு மாதம் சென்றவன் திடீரென போக மறுத்து விட்டு, ஆட்டோவோட்ட துவங்கினான். தணிகாசலம் கொஞ்சம் சொல்லி பார்த்து, விட்டுவிட்டார். வைதேகி தான் சதா புலம்பி கொண்டே இருப்பார்.
ரித்தீஷ் வைதேகி வீட்டில் நுழையவும் தம்பியை பார்த்து, “உள்ள வா ரித்தீஷ் உட்காரு சாப்பாடு எடுத்து வைக்கறேன்” என்றதும் அமைதியாக அமர்ந்தான். வழக்கமாக இங்குதான் உணவு உண்பது.

அக்கா மகள் ஐசு இருக்கும் அறையினை பார்த்தான். அது இன்னும் திறக்காமல் இருக்க, இரண்டு இட்லி சாம்பார் ஊற்றி உண்ண ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் படக்கென்று கதவு திறந்து நாயகி ஐஸ்வர்யா முடியினை உலர்த்தியவாறு வந்து நின்றாள்.
ரித்தீஷ்வரன் அவளிருக்கும் திசை கூட இப்பொழுது பார்க்காமல் சாப்பிடுவதில் குறியாக இருந்தான்.
“அம்மா… அம்மா…” என்று அவள் அலற, அவனோ செவிடனாக அங்கே இருந்தான்.
”எதுக்கு டி இப்படி பேய் மாதிரி வந்து நாய் மாதிரி கத்தற?” என்றார். தலைவிரி கோலத்தில் வந்து கத்துவதை தான் வைதேகி அவ்வாறு உரைத்தார்.
”வாவ் நல்ல ரைமிங்கா இருக்கு மம்மி பேய் நாய்..” என்று பரத் கேலி செய்தபடி வந்து தட்டில் சாப்பிட அமர, அவன் தலையில் கொட்டு வைத்தாள் ஐசு.

“தலையை துவட்டி விடும்மா…” என்று கேட்டு நின்றாள்.
”ஏன் டி இது கூட செய்ய முடியாதா? எதுக்கெடுத்தாலும் அம்மா அம்மா” என்று குறைப்பட்டார்.
ஐசுவோ ”உனக்கு இப்படி துவட்ட கஷ்டமா இருக்கா சொல்லு ஹேர் கட் பண்ணிக்கறேன்… ஷோல்டர் வரை கியூட்டா இருக்கும்…. இந்த லாங் ஹேர் எனக்கு கஷ்டமா இருக்கும்மா.” என்றாள்.
”அவ அவ முடி வளர மாட்டேங்குது கஷ்டமா பீல் பண்றாங்க. நீ என்னடா என்றால் இப்படி பேசற…” என்று கழுத்தில் சுற்றிய ஷால் இடைஞ்சலக இருக்க எடுத்து சோபாவில் வைத்து, மகளுக்கு வைதேகி துவட்டி விட, ஈரம் சற்று உலர்ந்தது.
வைதேகி போதும் காலேஜ் கிளம்பு” என்று கூற மீண்டும் அறைக்குள் சென்ற ஐசு, கல்லூரிக்கு கிளம்ப தயாரானாள். அதற்குள் ரித்தீஷ் உணவு உண்டு முடித்து சோபாவில் அமர்ந்தான்.
அவனுக்கு நேரமாகி கொண்டே இருப்பதாக தோன்றியது. அவன் ஐசுவை கல்லூரிக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு, அடுத்த சவாரிக்கு செல்வான். இது இங்கே வாடிக்கை. ஐசுவை அழைத்து செல்லும் பொறுப்பு அவனுக்கு தந்திருந்தனர். ஆட்டோ ஓட்டுவதால் அவனுக்கு இந்த வேலை.
மாமா தணிகாசலம் வந்து சாப்பிட்டு மகள் ஐசு அறையை பார்த்தபடி
”இன்னிக்கு எக்ஸாம் என்று சொன்னாலே இன்னுமா கிளம்பலை…” என வைதேகியிடம் கேட்க ரித்தீஷ் மாமா வந்தமையால் எழுந்தவன், அவர் சாப்பிட அமர்ந்ததும் தனது இருக்கையில் அமர்ந்தான்.
”உங்க பொண்ணு தானே… உலகமே அழிஞ்சாலும் நேரத்துக்கு வந்துடுவாளா?’ என கேட்க அவரும் அதன் பின் சாப்பிட்டு கிளம்பினார்.
போகும் பொழுது ரித்தீஷ் மீண்டும் எழுந்து கொள்ள அதனை கண்டும் காணாதவாறு புறப்பட்டார்.
கையில் சில நோட்டு புத்தகத்தினை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவள், ஆப்பிள் ஒன்றை எடுத்துக் கடித்தபடி ரித்தீஷ் முன் நின்றாள். அவள் எதுவும் பேசாமல் தன் முன் வந்து நிற்க ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான்.

அவளோ ”கொஞ்சம் எழுந்துக்கோங்க என் துப்பட்டா” என்றதும் அவன் அவளின் துப்பட்டா மேல சாய்ந்திருக்க அவனின் முதுகில் ஒட்டிக் கொண்டது.
”சாரி ஐசு” என நீட்டினான்.
அவன் ஐசு என்றதிலே கோவமானவள் அன்னை எதிரில் ஒன்றும் சொல்ல முடியாது அமைதியாக வெளியேறிட, அவள் சாப்பிடாமல் செல்வதை கண்டு ரித்தீஷ் முழிக்க வைதேகி கேட்டு விட்டாள்.
”ஏன் டி சாப்பிடமா போற..?” என்றார்.
”உங்க அப்பா கட்டின காலேஜ் பாருங்க, நான் லேட்டா போன கூட விடறதுக்கு…” என செருப்பை மாற்றினாள். வீட்டில் இருக்கும் அம்மா என்றாலே இந்த படிக்கும் பெண்களுக்கு வரும் உதாசீனத்துடன் ஐசு கூறினாள்,
”அப்ப அதுக்கு ஏற்ற நேரத்துக்கு கிளம்பனும்” என டிஃபன் பாக்ஸ் எடுத்து நீட்ட, அதனை வாங்கி கொண்டு கிளம்பினாள்.
ரித்தீஷ் எதுவும் பேசாமல் அக்காவிடம் மட்டும் “வர்றேன் அக்கா” என ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். அதுவோ உடனே ஸ்டார்ட் ஆகாமல் போக,
”எனக்கு டைம் ஆகுது ஸ்டார்ட் ஆகுமா ஆகாதா?” என்றே கேட்க அவனோ திரும்பி அவளை பார்த்து பேசாமல் ஸ்டார்ட் செய்தான்.
இம்முறை ஸ்டார்டடாகி புறப்பட்டது.
ஆப்பிள் கடித்தபடி புத்தகம் புரட்டி கொண்டே வந்தாள்.
ஆப்பிள் தீர்ந்ததும் ரோட்டில் கவனம் செலுத்தும் பொழுது ”என் ப்ரெண்ட் லேகா…நிறுத்துங்க” என்றதும் நிறுத்தினான்.
”ஹாய் காலேஜ் தானே வர்ற ஏறு” என்றதும் லேகா ஏறிவிட்டாள்.
”ஆமா நீயும் லேட்டா… ”என லேகா கேட்கவும்,
”நல்லா தூங்கிட்டேன் பா” என ஐஸ்வரியா உரைத்தாள்.
”நானும் தான்..” என கிலுக்கி சிரித்து கொள்ள, ரித்தீஷ் எங்கயாவது முட்டிக்கொள்ளலாம் போல தோன்றியது.
அடுத்த சிறிது நேரத்திலே மீண்டும் ஒருவள் ரோட் க்ராஸ் செய்ய, “லேகா பூர்வீ வர்றா…” என்றாள்.

லேகா சுட்டி காட்டி சொல்லியதும் “அவளையும் கூப்பிடு இதுலயே போயிடலாம்” என ஐசு சொல்ல ரித்தீஷ் அவர்கள் சொல்லாமல் நிறுத்தினான்.
”ஹேய் நீங்களா… சே ஆட்டோ பக்கத்தில் வந்ததும் பயந்துட்டேன்” என்றாள் பூர்வீகா.
”முதல்ல ஏறு டி” என ரித்தீஷ் பார்வை பார்த்து ஐசு சொல்ல ஏறினாள்.
கொஞ்சம் தூரம் போனதும் கல்லூரி வர நிறுத்தினான். இறங்கி லேகா, பூர்வீ நடக்க, ஐசுவும் இறங்கி நடந்தாள். அவளின் டிப்பன் பாக்ஸ் விட்டு சென்றதை கண்ட ரித்தீஷ்,
”ஐசு… டிப்பன் பாக்ஸ் விட்டுட்டு போற..” என்று எடுத்து கொடுக்க, கோவமாக பார்த்த வண்ணம் அவன் அருகில் வந்தவள், அவன் ஐசு என்றதும் அவளின் தோழி பூர்வீ சிரிக்க லேகா ”யாரு இவர்… ஐசுவுக்கு தெரிந்தவனா? பேர் சொல்லி கூப்பிடறான்…” என்றாள். அவளுக்கு ஐசு ரித்தீஷ் உறவுமுறை தெரியாது.
”நீங்க போங்க வாங்கிட்டு வர்றேன்” என்றாள் ஐசு.

பூர்வீ லேகாவிடம் ”அது அவளோட மாமா… அம்மாவோட தம்பி…. ஆட்டோ ஒட்டுறார்…. அதனால அவளை தினமும் பிக்-அப் டிராப் அவர் தான் செய்வார்” என்றாள்.
”ஆட்டோ ஒட்டுறாரா…? ஐசு பணக்காரி தானே டி” என லேகா குழம்பி கேட்டாள்.
”ஐசு பணக்காரி டி. ஆனா அவர் அப்படியில்லை, ஐசுவோட அப்பா உதவியால், அவங்க அவுட் ஹவுஸ்ல தங்கி இருக்கார்…” இதை எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தவள்
”இங்க பாருங்க…நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் என் ப்ரெண்ட்ஸ் எதிர்ல என்னை பேர் சொல்லாதீங்கனு, இங்க காலேஜை பொறுத்தவரை நீங்க என் அப்பா நியமிச்ச ஆட்டோ டிரைவர் மட்டும் தான். நம்ம ரிலேஷன்-ஷிப் தேவையே இல்லை புரியுதா…? இதான் கடைசி முறை சொல்லிட்டேன்” என வெடுக்கென்று டிப்பன் பாக்ஸை பிடிங்கி போனாள்.
அவன் எதுவும் மறுத்து பேசவில்லை ‘சரி’ என்பது போல தலையை அசைத்தான்
ஆட்டோ எடுத்தவன் திருப்பி கொண்டான். கண்ணாடியில் அவளை பார்த்தவன் ஒரு மென்னகை புரிந்தபடி ஓட்டினான். எப்பொழுதும் செல்லும் சாலை என்பதால் தானாக ஏற்றயிறக்க இடத்தில் வண்டியை செலுத்தியபடி நினைவை பின் நோக்கி சென்றான்.
அவனின் கழுத்தில் ஐசு பத்து வயது சிறுமியாக வந்து முதுகில் தொங்கியப்படி ‘ரித்தீஷ் மாமா… என்னை தூக்கி சுற்று’ என்று ஆசையாக கேட்டு அடம் பிடிக்கும் சிறுமி நினைவு வர உதட்டில் புன்னகை சேர்ந்தது.
‘இன்னும் அதே ஐசு தான், என்ன கொஞ்சம் என்னை பார்த்தா மட்டும் சிடுசிடுனு இருக்கா அவளுக்கு மிட்டாய் வாங்கி கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் பொழுது இதே போல தான் இருப்பா… இப்பவும் அதே மாதிரி தான் என்ன அவள் மிட்டாய்காக என்னை இப்ப சிடுசிடுனு காட்டிக்கலை…. அவளுக்கு என்னை எதுக்கோ பிடிக்கலை…’ என மனதில் சொல்லிக்கொண்டான்.
”என்ன ஈஸ்வரன்… இன்னிக்கும் உங்க அக்கா பொண்ணு தான் முதல் சவாரியா?” என முத்து கேட்க ஒரு சிறுமுறுவல் மட்டுமே கொடுத்து விட்டு ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தினான்.
”என்ன ஈஸ்வர்…. இன்னிக்கு முகம் பிரகாசமா இருக்கு?” என தோழன் மஸ்தான் கேட்டான்.
”அதெல்லாம் ஒண்ணுமில்லை பாய்… என் தினசரி வேலையை ஒழுங்கா பார்க்குறேன் உங்களுக்கு எப்படி தோணுதோ, அதுக்கு நான் பொறுப்பில்லை” என பேச, ஆட்டோ சவாரிக்கு ஒருவர் வரவும், ரித்தீஷ் கிளம்பினான்.
”அக்கா பொண்ணை விரும்பறியானு கேட்டா இல்லை என்று சொல்லுவான்… ஆனா அவன் பேசிய பாதி நேரம் அக்காவையும், அக்கா பொண்ணையும் தவிர வேற பேச மாட்டான்… ஹ்ம்…” என மஸ்தான் அடுத்த சவாரி வர கிளம்பினான்.
‘ரித்தீஷ் மனதில் ஐசு இருக்கின்றாளா?’ என்று கேட்டால் நிச்சயம் அவன் அடுத்த நொடி பதில் சொல்வான் என்ன பதில் என்று பொறுத்திருந்து தான் பார்போம்.. என்று சொல்ல தேவையில்லை, ‘நிச்சயம் அது காதல் அல்ல… திருமணம் செய்யும் ஆசையும் அல்ல.’ என்ற தெளிவான பதில்.

அதே போல ஐசுவிடம் இதே கேள்வியை கேட்டால் அவள் பார்க்கும் பார்வை வீச்சை நீங்கள் தாங்கிக்க அண்டார்டிகாவில் கூட உட்கார்ந்து கொள்ளலாம்… அப்படி இருக்கும் அவளின் அக்னி பார்வை.
இப்படி அவனை பொருட்டாக கூட மதிக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா ஒரு பக்கமிருக்க, அவளை அவள் நலனுக்காக, என்றும் வேண்டி கொள்வான் ரித்தீஷ்.