Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-12

58 / 100 SEO Score

அத்தியாயம்-12

 

சார்லஸ் க்ளினிக் முடிந்து வீடு வந்ததே தாமதமாய் தான். அதில் போட்டில் ஏறி சாராவின் வீட்டிற்கு வரவும் நள்ளிரவு தாண்டியது.

சாரா வீட்டில் முன் விளக்கொளி மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.

 

வீட்டுக்குள் யாரும் உறங்கவில்லை. சார்லஸ் வேர்த்து விறுவிறுத்து வந்து நின்ற நேரம், சாரா ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

 

கண்கள் வீங்கி… குரல் காய்ந்த நிலையில். அவளது கோலமே அவனை கொன்றது.

 

மரியம் மறுபுறம் கதவு அருகே அமர்ந்து, அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

என்ன பேசுவது… எப்படி ஆறுதல் சொல்லுவது… தெரியாமல் தவித்தார்.

 

வாசல் வெளியே சார்லஸின் செருமல் கேட்டது. மூவரின் பார்வையும் ஒரே நேரத்தில் கதவை நோக்கி திரும்பியது.

 

சார்லஸை கண்டு சாராவின் இதயம் துடித்து நின்றது.

 

சார்லஸ் வந்திருக்கானா…? அவளுக்காகவா? அல்லது தன்னை திட்டி நிர்மலாவை போல ஏதாவது மனம் நோக பேசி செல்லவா? சார்லஸ் கோலத்தை கண்டால் அப்படி தெரியவில்லையே

 

சார்லஸ் முகம் கடினமாய் இருந்தது.

கண்களில் சோர்வும்… அதைவிட ஆழமான ஏதோ ஒன்றும் அவளை அவன் உருவத்தை இமை தட்டாமல் பார்த்திட வைத்தது.

 

“வாங்க.. வாங்க மாப்பிள்ளை‌” என்று அந்தோனி தயக்கத்துடன் அழைத்தார்.

 

சார்லஸ் உள்ளே நுழைந்தான்.

அவன் பார்வை… நேராக சாராவை தொட்டு மீளவில்லை.  சாரா எழுந்து நின்றாள். அவள் கண்கள் அவனை பார்த்தவுடன்… மீண்டும் நீர்த்தது.

சார்லஸ் சாராவிடம் ஓடி போகவில்லை. அவளிடம் கேள்வி கேட்கவும் இல்லை. அவன் நின்ற இடத்திலேயே நின்றான்.

 

அந்த மௌனம்… அவனுக்கும் அவளுக்கும் மூச்சை அடைக்கும் அளவுக்கு கனமாக இருந்தது.

 

“மாப்பிள்ளை” என்று மரியம் குரல் உடைந்து பேச ஆரம்பித்தார்.

 

“நாங்கள்…  தவறு பண்ணிட்டோம் மாப்பிள்ளை…” என்று கைகள் ஒன்றாக இணைந்து வந்தார்.

 

சார்லஸ் பார்வை அவரை கண்டு சாராவை நோக்கி திரும்பியது.

 

“அவளுக்கு இருந்த பிரச்சனை… சொல்லணும்… சொல்லணும் நினைச்சோம்… ஆனா… சொல்ல முடியலை.” என்றவர் வார்த்தையும். சிதறியது.

 

“பயம்” அந்த ஒரு வார்த்தை… அந்த வீட்டில் விழுந்தது.

 

அந்தோனி மெதுவாக கூறத்துவங்கினார்.‌ “எங்க பொண்ணு சாரா நல்ல பொண்ணு தம்பி… அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. அவள் தவறு இல்ல” என்றார்.

மரியம் உடனே “கிரேஸ் விஷயம் நடந்தப்ப… அவ ரொம்ப உடைந்துட்டா… அதனால டாக்டரிடம் கூட்டிட்டு போனோம்… அதுவும் சரியாகிடுச்சு… இப்ப அவ நல்லா தான் இருக்கா. சம்பந்தியிடம் யார் என்ன சொன்னாங்களோ..” என்றவர் குரல் மொத்தமாய் உடைந்து யாசித்தது.

 

சார்லஸ் எந்தவிதமான பிரச்சனை என்றாலும் சாரா வாய் திறக்க மாட்டாளா என்று மீண்டும் சாராவை நோக்கி சென்றது.

 

சாரா ஏதோ பெரும் தவறு செய்தவளாக தலையை குனிந்திருந்தாள். அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

 

சார்லஸ் மெதுவாக அவளருகே வந்து நின்றான்.‌ சாரா தலை தூக்கவில்லை.

 

“கர்த்தர் முன்ன உன்னை கைவிடமாட்டேன்னு கைப்பிடிச்சிருக்கேன். நீ பாட்டுக்கு வந்துட்ட.. கிளம்பு” என்றான்.

 

அந்த ஒரு வார்த்தையை கேட்ட சாராவுக்கு அவன் வாய் மொழி கட்டளையா? அல்லது அன்பான அழைப்பா? உரிமையா? என்று சாராவுக்கு மட்டும் புரிந்தும் புரியாமலும் நின்றாள்.

 

சார்லஸ் கண்களில் கோபம் இல்லை. அவளை அழைத்து செல்லும் முடிவு இருந்தது.

 

சாரா மிகவும் தயங்கினாள். நிர்மலா பேசியதன் தாக்கத்தில்

அவளது வீட்டை, அம்மாவை அப்பாவை பார்த்தாள்.

பிறகு… மீண்டும் சார்லஸை ஏறிட்டாள்.

 

“நான் ஒரு பேஷண்ட். அத்தை பறைஞ்சது போல நான் பிராந்து.” என்று கூற, “நான் கிளம்புனு சொன்னேன் சாரா. நீ பிராந்தா இருந்தாலும், பேஷண்டா இருந்தாலும் அதை நான் சொல்லணும். நான் என் மனைவினு சொன்னேன்.” என்றதும் உதட்டில் சிறு புன்னகை மொட்டுவிட்டு  மெதுவாக எழுந்தாள்.

 

அவன் கையை நீட்டவில்லை.

அவள் பிடிக்கவும் இல்லை. சார்லஸ் அருகே செல்வதற்கு தயாராகி வந்து நின்றாள்.

“நான் கூட்டிட்டு போறேன் மாமா. அத்தை… பயப்படாதிங்க.” என்று

சார்லஸ் மெதுவாக சொன்னான்.

 

மரியம் கண்ணீர் வடித்தார்.

“அவளை கவனிச்சுக்கோங்க மாப்பிள்ளை நாங்க மேத்யூவுக்கு கூட எதுவும் சொல்ல வேண்டாம்னா சாரா தடுத்துட்டா”

சார்லஸ் உடனடியாக “நல்லவேளை நீங்க மேத்யூவுக்கு எதுவும் தெரிவிக்காம இருந்தது நல்லது. அவங்களை வேற டிஸ்அபாயிண்ட் பண்ணிட்டு மூட் ஸ்பாயில் ஆகும். தவிர்த்தது பெட்டர்.” என்றான்.

 

இரவு நேரம் கூடயிருக்க கூறியும் வீட்டுக்கு செல்வதாக கூறி சாராவை அழைத்து செல்ல நகர்ந்தான்.

 

ஒரு நொடி கூட பின்னால் பார்க்காமல்… அவனை பின்தொடர்ந்தாள்.

இரவு காற்று குளிர்ந்தது.

வண்டியில் இருவரும் அமைதியாக இருந்தனர்.

சாரா பேசவில்லை.

சார்லஸ் கேட்கவில்லை.

அந்த மௌனம்…

இருவருக்கும் இடையில் ஒரு புதிய தூரத்தை உருவாக்கியது. அது மிகவும் கவிதைத்துவமாக இருந்தது.

 

போட்காரன் பீடியை பிடித்து புகைக்க, “ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர் சொன்னா கேட்கமாட்டாங்க.” என்று முனங்கினான்.

சாரா சிரிப்பாளேன எதிர்பார்த்தான். ஆனால் ஏமாந்தவனாக மாறினான்.

 

நிர்மலா வாசலிலேயே நின்றிருந்தார். சார்லஸை பார்த்ததும் அதுவும் சாரா கைப்பிடித்து அழைத்து வரவும் முகம் மாறியது.

 

“வந்துட்டீங்களா…” என்றார் மோஸஸ் சாதாரணமாக.

 

சார்லஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. அவன் நேராக சாராவை அறைக்கு உள்ளே அழைத்துச் சென்றான். சாராவும் அவனை பின்தொடர்ந்தாள்.

அந்த இரவும் தனிமையில் ஏன் சென்றாய்? என்ன பிரச்சனை ஆளாளுக்கு ஒன்றை சொல்வதில் எனக்கு புரியவில்லை. என்று எதையும் சாராவிடம் வினாத் துளைக்கவில்லை‌.

 

“சாப்பிட்டியா இல்லையா?” என்று கேட்க, மௌனமானாள்.

“பால் பிரட் எடுத்துட்டு வர்றேன்.” என்று சார்லஸ் வெளியே ஹாலில் வந்தான்.

நிர்மலா அங்கேயே இருந்தார்.

அவன் வந்ததும்…

அவர் முகத்தில் இருந்த அடக்கி வைத்த கோபம் மேலேறியது.

“என்னடா… அவளை மீண்டும் கூட்டிட்டு வந்த?” குரல் இப்போது கடினம்.

“நம்மளை ஏமாத்திட்டாங்கன்னு சொன்னேன்ல…” சார்லஸ் அமைதியாக நின்றான்.

“பைத்தியமா இருந்தவளை… இந்த வீட்டுல வைக்கணுமா?” அந்த வார்த்தை மீண்டும் வந்தது.

இந்த முறை… சார்லஸ் அதை கவனித்தான்.

அவன் கண்கள் மெதுவாக சுருங்கின.

சாரா அறைக்குள் இருந்ததால்,

மீண்டும் நிர்மலாவை பார்த்தான்.

 

“அம்மா… அவ என்‌ மனைவி.. கரத்தர் சபையில அவளை கைப்பிடிச்சிருக்கேன். தயவு செய்து ஏன் வந்தா எதுக்கு வந்தானு கேட்காதிங்க. அவ என் ஓய்பை. என் கூட தான் இருப்பா. நாங்க ஹனிமூன் போகாததால அன்னியோன்யம் இல்லாத புரிதல் இல்லாத ஜோடி இல்லைனு நீங்களா முடிவுப் பண்ணாதிங்க. நான் அவளை நேசிக்கறேன். என்னால அவளை விட்டு இருக்க முடியாது‌” என்று எடுத்துரைத்தான்.

 

நிர்மலா பேச ஆரம்பித்ததும், சாரா நெஞ்சில் கை வைத்து கதவு திறந்து நிற்க, சார்லஸ் பேசவும் மெய்மறந்து போனாள்.

 

சார்லஸ் மனதில் ஒரு எண்ணம் மட்டும் தெளிவாக எழுந்தது.

 

பால் பிரட் இரண்டுடன் அவளிடம் கொடுக்க அவனை அதிசயமாக பார்த்து வாங்கி பருகினாள்.

“நிங்களுக்கு?” என்றாள்.

 

“இரண்டு டம்ளரில் பால் எடுத்துட்டு வந்திருக்கேன். நானும் குடிப்பேன். முதல்ல கசகசனு இருக்கு. குளிச்சிட்டு வந்துடறேன்” என்றவன் குளியலறைக்கு சென்றான்.‌

 

சாரா பிரட் பால் என்றா முடித்து, கையை பிசைந்திட, சாரா சற்று நேரம் ஏதாவது கேட்பாரோ என்று‌ படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்…

அவள் தலை தூக்கினாள்.

 

சார்லஸ் உடைமாற்றி வந்தான்.

அவளை பார்த்தான்.

ஆனால் எதுவும் கேட்கவில்லை. “இன்னிக்கு எது பேசினாலும் நல்லாயிருக்காது சாரா. நீ தூங்கு. நாம நாளைக்கு இல்லை இன்னொரு நாள் பேசுவோம்.

ஒன்னு மட்டும் நினைவு வச்சிக்கோ. இந்த ஜென்மத்தில அந்த ஆண்டவர் எனக்கான தேவதையா படைச்சது உன்னை தான். காட் இட்” என்றான்.

 

சாரா மனதிற்குள் அதையே “எஸ் சார்லஸ்… அந்த ஆண்டவர் எனக்கான தேவதூதனா அனுப்பியது உன்னை தான். நான் பிராந்துனு உன் அம்மா சொல்லியும் என்னை தேடி வந்திருக்க பாரு. என் பிரியமானவரே என் தேவதூதனே.. அது நீ தான்டா.’ என்று மெய்சிலிரிக்க பார்த்து வைத்தாள்.

 

“ஏய்… தூங்கு.” என்று கூற சாரா தலையாட்டி அமைதியாக படுத்துக் கொண்டாள்.

 

ஏனோ இத்தனை நாள் பாரம் அழுத்த தயக்கமாய் இருந்தாள்.

இன்று தயக்கம் தாண்டி நிம்மதியாக படுத்திருந்தாள்.

மெர்ஸி அன்னை சொன்னது போல, தன்னை பற்றி சார்லஸ் அறிந்தாலும், அவரது அன்பு கிடைத்தப்பின், மாற்றம் தெரியும் என்று கூறினாள். அது உண்மை தானே என்று கூட தோன்றியது.

 

சாரா சார்லஸ் நள்ளிரவு தாண்டியும் இருவரும் உறங்கினார்கள்.

ஆனால் நிர்மலா என்ன சொல்லியும் உறங்க மறுத்து நின்றார்.

 

ஹாலில் கொதிப்புடன்‌ உறங்காமல் கொள்ளாமல் இருக்க, தண்ணீர் குடிக்க சாரா எழுந்து வந்தாள். கதவை திறந்தப்பின்னரே நிர்மலா இருக்கவும் தண்ணீர் தாகத்தை கூட அடக்கியிருக்கலாமென தோன்றியது. அந்தளவு நிர்மலா கோப பார்வை வீசினார்.

தண்ணீரை குடித்து அறைக்கு செல்ல, “என்‌பையனை வந்த கொஞ்ச நாளில் கைக்குள்ள போட்டாச்சுனு மிதப்பா இருக்க. நல்லா கேட்டுக்கோ… ஒரு பைத்தியத்தை வைத்தியம் பார்க்க தெரிந்த வித்தைக்காரனா இருக்கலாம்.

ஆனா என் பையன் சார்லஸ் உன்னை ஒரு பேஷண்டா பாவம் பார்ப்பானே தவிர மனைவியா நேசிக்கறது ரொம்ப கஷ்டம். ஏன்னா அவன் மனசுல வேறொருத்தி தான் இருந்தா. யாருக்கு தெரியும்… இப்பவும் பழைய காதலை சுமந்துட்டு, உன்னை தொடாம இருக்கானோ என்னவோ.?

புத்திசாலியா இருந்தா உனக்கு புரியும். இப்பவரை அவன் உன்னை சீண்டலை.

நீ தான் பிராந்தாச்சே. புரியது கஷ்டம் தான்.” என்றார்.

 

சாரா மனதில் வலியுடன் பல்லை கடித்து நிற்க, “என் மகனோட திருமண வாழ்க்கை எப்படி எப்படியோ இருக்க விரும்பினேன். கடைசில என் எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டுட்ட. அந்த கர்த்தர் உன்னை மன்னிக்க மாட்டார் டி” என்று பேச, நிர்மலா குரல் கேட்டு மோஸஸ் வந்து மனைவியை அழைத்து சென்றார்.

 

“சாரா நீயும் போம்மா” என்றதும், சாரா நிர்மலா பேசியதை கேட்டும் அதிர்ந்தவளாக அறைக்குள் வந்து சார்லஸை பார்த்தாள்.

 

லேசாக கொஞ்சம் நஞ்சம் இருந்த நேசமும் நிர்மலா சொன்னது போல பாவப்பட்டு நேசிக்கின்றாரா என்ற வருத்தத்தில் தவித்தாள்.

 

சாரா உறங்க முடியாது தவிக்க, சார்லஸ் இன்றைய நாளில் அதிகப்படியாக சோர்ந்திருந்தான். அவன் பார்த்த பேஷண்ட் ஜோசப் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சோர்ந்திருக்க, இங்கே வந்தால் அன்னை நிர்மலா மனைவியை வீட்டை விட்டு துரத்தி, ஏதேதோ சொல்லி கிரேஸ் மரணத்தில் சாரா ஏன் துவள்கின்றாளென யோசித்து தவித்துவிட்டான். இத்தனைக்கும் காலையில் தான் ஹனிமூனுக்கு டிக்

கெட் வாங்கினான். அதை கூட தெரிவிக்க முடியாத அளவிற்கு சார்லஸ் நிலை இருந்தது.

 

சாரா இதெல்லாம் தெரியாமல் மொட்டு மொட்டு விழித்தாள்.

 

-தொடரும்.

 

 

 

2 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-12”

  1. பிரியமானவரே என் தேதூதனே…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 12)

    அட ராமா ! அப்ப ஹனிமூன் ப்ளான் ஹோ கயாவா..?
    அச்சோ..! இந்த சார்லஸ் அம்மா நிர்மலா சும்மாவே இருக்க மாட்டாங்க போல.
    சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டிங்கிற
    கதையா பழைய லவ்வைப் பத்தி சொல்லி கெடுத்து விட்டாங்களா..? இனி கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான்.

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!