Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-19

58 / 100 SEO Score

அத்தியாயம்-19

 

அந்த காலடி சத்தம் கேட்டு, சாரா கண்ணீரை துடைக்க கூட முடியாமல் நின்றாள்.

“சாரா…”

அந்த குரல் சாராவுக்கு பரிச்சயமானது. மெதுவாக திரும்பினாள்.

வாசலில்மெர்ஸி மேத்யூ  நின்றிருந்தார்கள்.

 

அவள் பின்னால் மேத்யூவும்.

“சாரா… என்ன இது…?” என்று அவள் விரைந்து வந்து அவளது கையை பிடித்தாள்.

அந்த ஒரு தொடுதலே… சாரா உடைந்துவிட்டாள்.

“சேச்சி.” என்று அழுதவள், நேராக மெர்ஸியின் தோளில் சாய்ந்து கதறினாள்.

 

சார்லஸ் அங்கேயே நின்றான்.

மேத்யூவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்னாச்சு சாரா?” என்று அவளருகே வந்தான்.

சாரா பேச முடியவில்லை.

மெர்ஸி மெதுவாக அவளது தலையை தடவினாள்.

 

“சரி… சரி… நான் இருக்கேன்… நீ அழாத…” என்று சமாதானப்படுத்தினாள்.

அந்த நேரம் நிர்மலா வெளியில் வந்தார்.

“அடா… என் மக ஹனகமூன் போயிட்டு நேரா இங்க வர்றா. இவ்ளோ அழுது தேம்பி எதுக்கு சீன் போடற” என்றார் சலிப்புடன்.

 

அந்த ஒரு வரி போதும். மெர்ஸியின் முகம் மாறியது.

“அம்மா.” அவள் குரல் காட்டாமாக வந்தது.

“என்னடி?” என்று கேட்டார் நிர்மலா அசட்டையாக.

 

“நீங்க அவளிடம் என்ன பேசினீங்க.” என்றாள். மெர்ஸி.

“நான் பேசினாலும் உண்மை தான் சொன்னேன்.”  என்றார் நிர்மலா.

“என்ன உண்மை?” என்று மெர்ஸி குரல் உயர்ந்தது.

 

“அவளுக்கு அவளோட நிலை தெரிஞ்சுக்கணும். என் பையன் அவளை காதலிச்சு கட்டல.

பாவம் பார்த்து, அதுவும் நாம கட்டாயப்படுத்தி விவாகம் செய்து வச்சது. இப்ப இவளை பத்தி தெரியவும் டிவோர்ஸ் பண்ணிட்டு என் பையன் வேறொருத்தியை மணக்கறது தான் சரி. அவன் மனசுல இவ இல்லையே.” என்றார்.

 

அந்த வார்த்தை முடியும் முன்னே

மெர்ஸியின் குரல் அறையை வெட்டியது. “அம்மா அண்ணா மனசுல சாரா இல்லைனு உனக்கு தெரியுமா? அவன் சாராவை விரும்ப ஆரம்பிச்சிட்டான்.” என்றதற்கு நிர்மலா அதிர்ந்து நின்றனர்.

 

“நீங்க இப்படியா பேசுவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல அம்மா.. நான் உங்க பொண்ணு,

நான் இப்படியொரு நிலையில இருந்தா… என்னை நீங்க என்ன சொல்லுவீங்க? இதே போல பைத்தியம் என்று சொல்லுவீங்களா?” என்று கத்தவும் சாரா நடுங்கினாள்.

அந்த வார்த்தைகள் கூர்மையானது சாராவால் லேசில் அவ்வார்த்தையை கடக்க முடியவில்லை. அவளது நடுக்கம் கண்டு, நிர்மலா மௌனமானார்.

 

மெர்ஸியோ “நீங்க கர்த்தரை நேசிக்கறவங்கன்னு சொல்றீங்கலே… அப்படின்னா…

ஒருத்தி மனசை இப்படி காயப்படுத்தினா…

அந்த கர்த்தர் உங்களை ஏற்றுக்கொள்வாரா?” என்று கேட்க,

அந்த கேள்வி… நேராக நிர்மலாவின் உள்ளத்தைக் குத்தியது.

 

“அவ பத்து வயசுல அவளோட ட்வின் சிஸ்டரை இழந்திருக்கா அம்மா. ஒருத்தி பத்து வருஷமா கூடவே இருந்து பேசி சிரிச்சு விளையாடி, அவங்களுக்குள் எத்தனையோ விஷயத்தை ஷேர் பண்ணி, மனதால் எவ்ளோ நெருங்கி இருப்பாங்க. அப்படிப்பட்ட ஒருத்தியை தன்னோட ஆசைக்காக ராட்டினம் ஏற புஷ் பண்ணி ஏற்றி விளையாட்டு பயம் காட்ட நினைச்ச சாராவை, அந்த விதி நிரந்தரமா பயத்தை காட்டற விதமா, கிரேஸை சாகடிச்சிடுச்சு. அதனால பாதிக்கப்பட்டது கிரேஸை விட சாரா தான் அம்மா.

 

கல்யாணமே வேண்டாம்னு மெத்யூவிடம் சொன்னவ. என்னிடம் பேசினப்பிறகு தான் சார்லஸ் அண்ணாவை பத்தி சொல்லி, எங்கண்ணா உன்னை பைத்தியமா அப்படி பார்க்க மாட்டார். நீ தாராளமா என் அண்ணாவோட பாஸ்ட் லவ் உறுத்தலைன்னா மேரேஜிக்கு ஓகே சொல்லுனு புரிய வச்சேன். இங்க நீ அப்பா அண்ணா மூவரும் அவளை தாங்கி பார்த்து, அன்பை செலுத்துவிங்கனு நினைச்சேன்.

 

இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கே எப்படி பயந்து நடுங்கினவ சாரா.

இப்ப தைரியமா நிக்க ஆரம்பிச்சா…

அதையே நீங்க உடைக்கிறீங்க.

உங்களுக்கு பிடிக்கலைன்னா கூட விடுங்க. அண்ணாவுக்கு சாராவை பிடிச்சிருக்குல்ல… அந்த நாகரிகத்துக்காகவாது சாராவை அன்பா ட்ரீட் பண்ணலாமே. ஏதோ டிவோர்ஸ் வரை பேசறிங்க.

நீங்க சாராவை இந்த வீட்ல இருந்து நிரந்தரமா அனுப்ப ஏதாவது செய்தா, நான் மேத்யூவிடமிருந்து நிரந்தரமா விலகி வந்துடுவேன்.

ஏன்னா.. கர்மா எப்பவும் பதில் தரும்.

சாரா மனசை காயப்படுத்தினா, நான் என்னை காயப்படுத்திப்பேன். அவளை பைத்தியம்னு சொல்லி சந்தோஷப்பட்டா. நானும் வாழ தெரியாத பைத்தியமா இருந்துக்கறேன். ஏன்னா… சாராவுக்கு நம்பிக்கையும் நிம்மதியும் தர்றேன்னு மேத்யூவுக்கு வாக்கு தந்திருக்கேன். அப்படி இல்லாம அவ அம்மா வீட்டுக்கு போனா, நானும் இருப்பது தானே நியாயம்.” என்றதும் சார்லஸ், மேத்யூ அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

சார்லஸ் கண்களில் நன்றி எட்டி பார்த்திருந்தது. அன்னையிடம் ஒரு கட்டத்திற்கு மேல் எவ்விதமாக முட்டு போட்டு அதட்டுவதென அவனுக்கும் வழி தெரியவில்லை‌.  இதோ மெர்ஸி கார்னர் செய்வது போல அவன் செய்தால் நிர்மலா இன்னமும் குதித்திருப்பார்.

 

நிர்மலா லேசில் தன் தவறை உணர்வாரா? ”இங்க பாரு… சாரா அழறதுக்கு நான் மட்டும் காரணமில்லை. உங்க அண்ணாவும் தான். சாரா கூப்பிட்டு பேசி பதில் சொல்லாதவன், துகிரா வந்திருக்கா என்றதும் பறந்து வந்து சாரா மனஞை காயப்படுத்தியது உங்க அண்ணன் சார்லஸ் தான். அவனுக்கு சாராவை ஒரு பேஷண்டா பார்த்துக்கறான். கடவுள் முன்ன கைப்பிடிச்ச கடமைக்கு கட்டுப்படறான். மத்தபடி சாரா மேல இருப்பது இரக்கம்” என்றார்.

 

“அண்ணா” என்று அழைத்து மெர்ஸி திரும்பினாள். சார்லஸ் அப்படி இல்லை என்று தலையாட்டி மறுத்தான்

“அண்ணா… நீ அமைதியா நிக்காத.

இது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல. இன்னமும் துகிராவுக்கு தான் முக்கியம்னு காட்டிக்கிட்டியா? சாராவுக்கு நீ என்ன எல்லாம் யோசிக்கறனு சொல்வியா?” என்று கேட்க சார்லஸ் ஆழ்ந்த மூச்சை விட்டான்.

“மெர்ஸி… நான் வேற க்ளினிக் பார்த்துட்டு இருப்பது அம்மாவுக்கு தெரியாது. அதோட க்ளினிக் பக்கத்துலயே வீடும் ரெண்டுக்கு பார்க்கற விஷயமும் சொல்லலை. எல்லாம் முடியவும் சொல்லிட்டு போக தான் நினைச்சேன். அமுல்யாவை என்னலாம் திட்டினாங்க. அது போல என் சாராவை திட்டிட கூடாது. அதே சமயம் அம்மா கூடவே இருந்து சாரா கஷ்டப்பட கூடாது.

நான் க்ளினிக் வீடுனு பார்க்கற டென்ஷன்ல பிஸியா இருந்தேன். இதுக்கு நடுவுல காம்பிளிக்கேட் கேஸ் ஒன்னு. சாராவுக்கு கூட தெரியும். சாராவிடம் அதை பத்தி சொன்னேனே தவிர தீவிரமா பார்ப்பதை அவ நினைச்சிருக்க மாட்டா. துகிரா வந்ததும் அம்மா ஏதாவது காயப்படுத்தி பேசிட்டா, நாளைப்பின்ன இஷான் இங்க நட்புக்குனு நல்லது பொல்லது கூட இந்த வீட்ல அடியெடுத்து வைக்க விடமாட்டார். அதனால தான் ஓடிவந்தேன்.” என்றான்.

 

மெர்ஸியோ அண்ணனின் விளக்கம் கேட்டு சாராவிடம், “பார்த்தியா… அண்ணா உனக்காக தான் எல்லாம் பார்த்து பார்த்தா செய்யறார். சாரா… மனசுல குழப்பி பிரச்சனையை தீவிரமாக்கிக்காத. அம்மா அப்படித்தான்.

அவங்க பேசுறது, ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்கு தெரியும்.

ஆனா… அது எல்லாம் தாண்டி சார்லஸ் அண்ணா உன்னை பார்த்துப்பார்னு நம்பு” என்றாள்.

சாரா மெதுவாக தலைத்தூக்கினாள்.

கண்கள் இன்னும் சிவந்திருந்தது.

 

“அண்ணா என்ன சொன்னார்னு கேட்டல்ல..?” என்று மெர்ஸி மெதுவாக கேட்டாள். சாரா சார்லஸை கண்டு மௌனம் காக்கா, “தனி வீடு பார்க்கணும்னு நினைக்கறான். க்ளினிக் பக்கத்துல. ஏன் தெரியுமா? இந்த அழகான ஏஞ்சலை அண்ணா கண்கலங்க வைக்க கூடாதுனு. தனியா அள்ளிட்டு போய் டேடிபியர் போல கொஞ்சணுமாம்.” என்று கிண்டலும் உண்மையுமாக கூற சார்லஸ் மெதுவாக சிரித்தான்.

 

சாரா சார்லஸ் சிரிப்பை கண்டும் அவன் பார்வை ரசனை கூடியதும் கண்டு சாராவின் மூச்சு நின்றது.

 

ஹனிமூன் போகாவிட்டாலும் சார்லஸின் அன்பும் நேசமும் ஈருடல் ஓருயிராக மாறிய நிமிடத்திலிருந்து உணர்ந்து தான் இருக்கின்றாள். நடுவே நிர்மலா தான் குழப்பி மனதை வாட்டுகின்றார்.

 

நிர்மலாவோ மோஸஸிடம் தனக வீடு வீட்டுக்கு பக்கத்துல க்ளினிக்கா? என்னங்க இவன் நம்மளை விட்டு தனியா போக நினைக்கறானா? கேளுங்க’ என்று இடிக்க, அவரோ நீயா இழுத்துவிட்டது. நீயா பேசிக்கோ இதுல முதல்லயிருந்தே நான் தலையிட விரும்பலை” என்றார்.

 

“நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. தனி வீடு எதுக்கு?” என்றார் நிர்மலா.

 

“அம்மா… நீங்க துகிராவை காயப்படுத்தினப்பவே நான் தடுத்திருக்கணும். ஆனா அப்ப எந்த உரிமையும் இல்லாதப்ப அவளுக்காக பேசினா அப்பவும் அசிங்கமா பேசுவிங்கனு பயந்து அமைதியா இருந்தேன். ஆனா இன்னிக்கு சாரா இந்த வீட்ல என் மனைவி என்ற உரிமை இருந்தும், முடிந்துப்போன காதலை வச்சி சாராவை காயப்படுத்தறிங்க. துகிரா இப்ப இஷானோட மனைவி.

அவளோட வாழ்க்கை வேற. அமுல்யாவுக்காக வாழ்ந்தவ, இப்ப அவளுமே பிரகனெண்டா இருக்கா. அவளோட வாழ்வை முன்னிருத்தி, நான் இன்னமும் காதலிக்கறேன்னு சாராவிடம் தப்பா விதைக்காதிங்க. நான் சாராவை தான் விரும்பறேன். கர்த்நர் முன்ன விவாகம் நடந்ததற்காக இரக்கம் காட்டி கூட வச்சிக்கலை. என்னோட சாரா, எனக்கான சாரா, என்ற அன்பும் காதலுமா இருக்க தான் அவளை உங்க ஏச்சும் பேச்சும் தாக்கிடாம பாதுகாக்க தனியா போறேன்.

நீங்க மாறமாட்டிங்க அம்மா. என் சாரா மனதால் குழப்பத்துல ஓய்ந்து போனவ. அவ மனசுல என் தெளிவான அன்பு இருந்தா மட்டும் போதும்.” என்றான். நிர்மலா ஏதோ பேச வர, “நீங்க ஏதாவது பேசுவிங்களோன்னு பயந்து பயந்து என்னால க்ளினிக் இருக்க முடியாது. சாராவை தனியா விட்டுட்டோமே அம்மா ஏதாவது ஹர்ட் பண்ணுவாங்களானு ஓவர் திங்க் பண்ண முடியாது.

 

இதே மத்த மாமியார் மருமக பிரச்சனை என்றால் இதுக்கு தீர்வா நல்லபடியா இருங்கனு சொல்லலாம். ஆனா மனசளவில் சாரா இனியும் காயப்படகூடாதுன்னா இந்த தனிக்குடித்தனம், பிரிவு தான் முடிவு.” என்றுரைத்தான்.

 

நிர்மலாவால் அதை தாங்க இயலவில்லை. அழுதுக்கொண்டே அறைக்கு செல்ல, மெர்ஸி சமாதானம் செய்யும் விதமாக பின்னால் சென்றாள்.

 

மோஸஸ் மாப்பிள்ளை மேத்யூவை வரவேற்பு பானம் தந்து, அவரிடம் பேசி பயணத்தை பற்றி, குலுமனாலி பற்றி பொதுவாக கேட்டார். பின்னர் தனித்து சென்றதும் சாராவை மகன் சார்லஸ் அன்பாக பார்த்துக் கொள்வானென பகிர்ந்தார்.

 

ஹாலில், சாரா சார்லஸ் நின்றியிருந்தனர். சார்லஸ் சாரா அருகே வந்தான்.

“அம்மாவை விட்டு தள்ளு. முதல்ல நீ என்னை நம்பணும். ஒரு டாக்டர்… அவன் பேஷண்ட்டை கவனிக்குறான். அது அவனோட வேலை. அவன் மனசு மனைவியை நேசிக்குறது அது வேற விஷயம். நான் உன்னை தான் நேசிக்கறேன்னு இன்னும் எத்தனை முறை சொல்லணும். ஆஹ்.. சொல்லு” என்றதும், சாரா கண்களில் சந்தேகம் களைந்திருந்தது. ஞார்லஸ் மீதான நம்பிக்கை முழுக்க உடைந்து போகாததால் அவனை கட்டி தழுவினாள்.

 

சாராவின் கண்ணீரை துடைத்த, சார்லஸ் அவளருகே அமர்ந்தான்.

“நான் லேட்டா வீட்டுக்கு வர்றேன்,

கால் பண்ணல, மெஸேஜ் பார்க்கலை இதெல்லாம் எல்வா கணவரும் செய்யற காமன் மிஸ்டேக். அதை வச்சியெல்லாம் இனிமே, உன்னை நேசிக்கலைனு முடிவு பண்ணிடக்கூடாது.

நீ என் லைஃப்ல எந்த இடம்னு ஒவ்வொரு முறையும் நான் நிரூபிக்கணும்னு அவசியமில்லை. நீ முதலிடம். புரிதா” என்று தாடையை நிமிர்த்தினான்.

 

முன்ன கிரேஸ் இல்லாமல் போனது உன்னாலனு நீயா குழப்பிக்கிட்ட. ஒரு மரணத்துக்கு நாம காரணம் என்று தோன்றினா வர்ற குற்றவுணர்வு இயற்கை. அதை கடந்து வந்து வாழறது தான் புத்திசாலித்தனம்.

நீ கிரேஸ் நினைவா ஏதாவது அடிக்கடி நல்லது செய். ஏன் நம்ம சர்ச்ல பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகளில், கிரேஸ் என்ற பெயருள்ள குழந்தையோட படிப்பு செலவை கூட நீ பார்த்துக்கோ. அது உனக்கான குற்றவுணர்வை குறைக்கும்.

 

துகிராவை பத்தி இனி நோ கமெண்ட்ஸ். அவ என்னோட க்ரஷ் பாஸ்ட் லவ். பிரசண்ட் சாரா தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. புரிதா? உனக்கு எங்கம்மா சொல்லற மாதிரி எந்த பைத்தியமும் இல்லை. நீ அடிக்கடி நம்மளை நேசிப்பது இரக்கத்தாலையா? இல்லை எதனால என்று ஆராயற பாரு… உன் குற்றவுணர்வை தாண்டி தாழ்வுமனப்பான்மை அடில தங்குது. அதை இக்னோர் பண்ணிட்டு, என்னை லவ் பண்ணு.” என்று தோளில் கைப்போட்டான்.

 

சாரா உடனடியாக அக்கம் பக்கம் பார்த்தாள். நிர்மலா மெர்ஸி அறையிலிருந்து பார்வையிட, மெர்ஸி புன்னகைக்க, நிர்மலா லேசான அதிருப்தியுடன் கண்டார்.

 

“டாக்டர் சாரே.. அத்தை மெர்ஸி சேச்சி பார்க்க.. நிங்கள் கையை எடுத்தால் நான்‌ நிம்மதியா நிற்பேன்.” என்றாள்.

 

“நானும் நீயும் அன்னியோன்யமா இல்லை, அதுயிதுனு தானே உருட்டறாங்க. பார்க்கட்டும் சார்லஸ் மனசுல சாரா வந்துட்டானு தெரியட்டும்” என்றான்.

 

சாரா வெட்கப்பட்டு, “போது

ம்… நிங்கள் இருதயத்தில் நான் வாசம் செய்து காதல் வந்தல்லோனு புரிய வச்சி.” என்று வெட்கம் கொண்டாள்.

 

-தொடரும்.

 

5 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-19”

  1. Wow mercy super. Nirmala need this punishment. Charles great husband. Sara go to honeymoon. Very intresting sis.

  2. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 mercy oru nalla character pa romba super ah pesinaanga🙂 endha nirmala amma thirundhadhu polaye🙄

  3. Crt time la mercy vanthu nalla keta avanga amma va ipo yha sara ku oru thembu vanthu Iruku amma thappu panna ponnu ku tha kekura thairiyam varuthu apo kuda pesinathu thappu nu inum yosikama irukanga paru charles intha edathulaum pesama Iruka thappu aana unn porumai ok than porumaiya e sollita , sara kum un love ah puriya vachita oru oru vatium love panrenu nirupika mudiyathe but love ah kamichitan , good charles

  4. பிரியமானவரே என் தேதூதனே…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 19)

    அப்பாடா…! மெர்ஸி வந்து சொன்னப்பிறகு தான் இந்த சாரா மண்டையில உறைச்சது போலயிருக்கு.
    இல்லைன்னா நிதைக்கும்
    ஐ லவ் யூ, நான் உன்னை பிரேமிக்குன்னு, நேனு நின்னி பிரேமிஸ்தான்னு சொல்லிட்டே இருக்கணும் போல. அட போங்கம்மா.

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!